Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கர்நாடகாவில் தேர்தல் பேரணியில் பணத்தை அள்ளி வீசிய காங். தலைவர் - வைரலாகும் வீடியோ
கர்நாடகாவில் தேர்தல் பேரணியின்போது காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மக்களிடம் பணத்தை அள்ளி வீசியதாக வீடியா காட்சி வெளியாகி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. ஆளும் பா.ஜ.க. ஆட்சியை தக் வைக்க வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. காங்கிரஸோ, ஆட்சி அமைப்பதற்கான அஸ்திவாரங்களை எடுத்து வருகிறது. இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் தீவிரமாய்ச் செயலாற்றி வருகிறது. அக்கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் ஒருபகுதியாக, மாண்டியாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, திரண்டிருந்த மக்கள் மீது, டி.கே.சிவக்குமார் பணத்தை அள்ளி வீசியிருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினரின் கோட்டையாக மாண்டியா விளங்குகிறது. இங்கு, கர்நாடகாவில் பெரும்பான்மையான சமூகத்தைச் சேர்ந்த ஒக்கலிகா கவுடா வாக்கு வங்கி முதன்மையானதாக இருக்கிறது. கடந்த காலங்களில் ஜேடிஎஸ்-க்கு பக்கபலமாக இருந்த ஒக்கலிகா கவுடா வாக்கு வங்கி இம்முறை முழுமையாக காங்கிரஸ் பின்னால் இருக்கிறது.

அதே சமூகத்தைச் சேர்ந்த டி.கே.சிவகுமார், அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த வாக்கையும் அறுவடை செய்யும் நோக்கில் டி.கே.சிவக்குமார் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே தனது கையை வலுப்படுத்தும் விதமாக தேர்தல் பேரணிக்கு அச்சமூக மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், அப்போதுதான் பணத்தை வாரி வீசியதாகவும் கூறப்படுகிறது.

டி.கே.சிவக்குமார் பணத்தை அள்ளி வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து செய்தியையும் வீடியோவையும் நியூஸ் ஃபர்ஸ்ட் கன்னடா (NewsFirst Kannada) சேனல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

- ஜெ.பிரகாஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைவர்கள் வாழ்த்து
அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக-வில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொது செயலாளர் பதவி உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

ஈபிஎஸ்-க்கு பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் பதவி தேர்தலுக்கு எதிராக ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன் பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையையும் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது.

பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அவர் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களின் வாழ்த்து முழக்கங்களுக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி
பழனிசாமி தன்னைத் தேர்வு செய்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வெற்றிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ்,

“தேர்தலை நடத்தும் அலுவலர், கழக பொதுச்செயலாளராக என்னை அறிவித்துள்ளனர். ஒருமனதாக அதிமுக-விற்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். என்னை தேர்ந்தெடுத்ததற்கு தொண்டர்களுக்கும் தேர்தலை நடத்தியோருக்கும் நன்றி” என தெரிவித்தார்.

ஈபிஎஸ்-க்கு குவியும் வாழ்த்துகள்!

அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவன், விசிக தலைவர்:

ஈபிஎஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்த விசிக தலைவர், “எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார். தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும்” என்றார்.

பாரிவேந்தர், ஐஜேகே நிறுவனர்:

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் இபிஎஸ்-க்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார். அதில், ”அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள முன்னாள் முதல்வர் அன்புச் சகோதரர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாய்மை, நேர்மை, உண்மை,உழைப்பு, உறுதிப்பாடு அனைத்தும் உங்களின் தனித்தன்மை. இவைகள் அனைத்தும் சேர்ந்து பெற்ற குழந்தைதான் இன்றைய நீதிமன்ற தீர்ப்பு. நீங்கள் பெற்ற வெற்றிக்கு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர்கள், தொண்டர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவர்:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொலைபேசி மூலமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், ”இன்று அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைப்பேசி வழியாக தொடர்புகொண்டு எனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டேன்” என்று  ட்வீட் செய்துள்ளார்.

வாழ்த்திய பிற தலைவர்கள்..

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன், பாஜகவை சேர்ந்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை, மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், பாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், புதிய நீதி கட்சியினுடைய தலைவர் ஏ.சி. சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என். ஆர். தனபாலன் ஆகியோர் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு அதிமுக பொதுச்செயலாளராக ஏக மனதுடன் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே பழனிச்சாமி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த திரு பூவே ஜெகன் மூர்த்தி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மோடி படத்தைக் கிழித்த வழக்கில் குஜராத் காங். எம்.எல்.ஏவுக்கு ரூ.99 அபராதம்!
பிரதமர் நரேந்திர மோடி படத்தைக் கிழித்த காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு ரூ.99 அபராதம் விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வேளாண் கல்லூரி மாணவர் போராட்டத்தின்போது துணைவேந்தர் அறைக்குள் நுழைந்து, அவரது மேசையில் இருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை கிழித்தெறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அனந்த் படேல் என்பவருக்கு ரூ.99 அபராதம் விதித்துள்ளது குஜராத் நீதிமன்றம். இந்த வழக்கில் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வி.ஏ.தாதால் தீர்ப்பளித்துள்ளார். சட்டப்பிரிவு 447-ன்கீழ் குற்றவியல் அத்துமீறல் என்ற வகையில் எம்.எல்.ஏ அனந்த் படேலின் செயல் குற்றமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அனந்த் படேலுடன் சேர்த்து, இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் உட்பட மேலும் ஆறு பேர் பேர் மீது இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர்கள் மீது சட்டப்பிரிவு 143 (சட்டவிரோதமான கூட்டம்), 353 (தாக்குதல்), 427 (ரூ. 50க்கு மேல் இழப்பு ஏற்படுத்திய இழப்பு), 447 (குற்றம் சார்ந்த அத்துமீறல்) மற்றும் 504 (வேண்டுமென்றே அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜலால்பூர் காவல்துறையால் மே 2017இல் வழக்குப் பதியப்பட்டிருந்தது. இதில் 7 பேரில் 3 பேர் குற்றவாளிகளாக அறியப்பட்டு, அவர்களுக்கு ரூ.99 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தொகை கட்டவில்லையெனில், 7 நாள்கள் எளிமையான சிறைத்தண்டனையை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

டெல்லியில் தலைப்பாகை இல்லாமல் நடந்துசென்ற அமரித்பால் சிங்.. வெளியான புதிய சிசிடிவி காட்சி
போலீசாரால் தேடப்பட்டு வரும் பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், தற்போது தலைப்பாகை இல்லாமல் வெளியேறும் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் தே' தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்ட 'வாரிஸ் பஞ்சாப் தே' அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு முழக்கமும் அதிகரித்தது. நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த பஞ்சாப் காவல் துறை, தலைமறைவாகியுள்ள அம்ரித்பால் சிங்கை கைது செய்ய முயன்று வருகிறது.

அவர்மீது ஏற்கெனவே 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் அம்ரித்பால் சிங் எதிராக பிறப்பிக்கப்பட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடந்த மார்ச் 21ஆம் தேதி கிழக்கு டெல்லியின் மதுவிஹார் பகுதியில், அம்ரித்பால் சிங் தலைப்பாகை இல்லாமல் நடந்து செல்லும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அவற்றை ஆய்வு செய்து விசாரணை நடத்திவரும் காவல் துறை, அவரைப் பிடிக்கவும் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

அவர், அண்டை நாடான நேபாளத்துக்குத் தப்பிச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை, வேறு நாட்டுக்குத் தப்பிச் செல்லவிடாமல், தடுத்து நிறுத்தும்படி நேபாள அரசிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. அதோடு அம்ரித்பால் சிங் எப்படி இருப்பார் என்பது குறித்தும், அவரது பாஸ்போர்ட் விவரங்களையும் நேபாளத்துக்கு மத்திய அரசு அனுப்பியிருக்கிறது. இதற்கிடையே அம்ரித்பால் சிங் இந்தியா-நேபாள எல்லை வழியாக தப்பிச் செல்லக்கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே இருநாட்டு எல்லையோரத்தில் பணியில் இருக்கும் பாதுகாப்பு படையினர் உஷாராக இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

முன்னதாக, 100க்கும் மேற்பட்ட அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர்கள் 5 பேர் அசாமில் உள்ள திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பல்வேறு தோற்றத்துடன் காணப்படும் அம்ரித்பால் சிங்கின் புகைப்படத்தை வெளியிட்டு பஞ்சாப் போலீசார், அவரை கைது செய்வதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

இந்தச் சூழலில்தான் அம்ரித்பால் சிங் குருத்வாராவிற்குச் சென்று, அங்கு தனது ஆடைகளை மாற்றிக்கொண்டு 3 உதவியாளர்களுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றிருப்பதாகப் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது, அவர் தலைப்பாகை இல்லாமல் வெளியேறும் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- ஜெ.பிரகாஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பான் கார்டு - ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு!
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இந்த காலக்கெடுவை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM