Uthayan News

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு பார்வை ஆய்வு அட்டைகளை கையளித்த மாகாண ஆளுநர்!
பு.கஜிந்தன்

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வு அட்டைகள்(Vision charts) கௌரவ ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக பார்வை ஆய்வு அட்டைகளை (Vision charts) உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில், கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம் பார்வை ஆய்வு அட்டைகள் இன்று (17/04/2024) கையளிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் முத்துசாமி மலரவன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசேட செயல்திட்டத்திற்கான பார்வை ஆய்வு அட்டைகளை, Vision care நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட குழுவினர் கௌரவ ஆளுநரிடம் கையளித்தனர்.

வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களது கண் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமானது. அதற்கமைய, கண் சுகாதாரம் தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் செயற்பாடுகள், வலயக் கல்வி பணிமனைகளூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் ஊடாக பாடசாலைகளில் மாணவர்களின் பார்வைத் திறன் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், உரிய மாணவர்கள் பார்வை தொடர்பான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

பாடசாலைகளில் மாணவர்களுக்கான பார்வை தொடர்பில் ஆராய்வதற்கான பார்வை ஆய்வு அட்டைகளே (Vision charts) இன்று கையளிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆளுநரின் செயலகத்தின் ஊடாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளுக்கு வழங்கப்பட்டு, அங்கிருந்து பாடசாலைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் கார் மோதி விபத்து!
பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளிளை செலுத்திய இளைஞன் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, 16-04-2024 செவ்வாய்க்கிழமை மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் நின்ற கார் வீதியை கடக்க முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞன் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிசார் இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“மௌனத்தீவு” | நூல் வெளியீட்டு விழா
காலம்: 21 / 04 / 2024

நேரம்: மாலை 3:30 7:00

இடம்: Malvern Family Resource Centre

90 Littles Rd, Scarborough, ON

M1B 5E2

தலைவர்: பேராசிரியர். இ. பாலசுந்தரம்

வெளியீட்டுரை: சின்னையா சிவநேசன்

ஆய்வுரை: சிந்தனைப் பூக்கள் பத்மநாதன்

விரிவுரையாளர் சிறிகுமரகுரு நாகேஷ்வரி

சிறப்புரை: திரு. ஆர். என். லோகேந்திரலிங்கம்

ஆசியுரை: சாமி அப்பாத்துரை

வாழ்த்துரை: க. மங்களமூர்த்தி

அன்பர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள்,

ஆர்வலர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

மேலதிக விபரங்களுக்கு:

விழா ஒருங்கிணைப்பாளர்:

WhatsApp – +61416226915

velupari@gmail.com

ரணிலின் முதல் ”எதிரி” யார்?
இலங்கையின் பிரதமராக 6 தடவைகள் ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்து வரலாற்று சாதனை படைத்த போதும் ஒருதடவை கூட பிரதமர் பதவிக் காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய ”துரதிர்ஷ்டம்” அவரை அனுமதிக்கவில்லை. அத்துடன் கட்சித் தலைமைப் பதவியும் எதிர்க் கட்சித்தலைவர் பதவியும் அவரின் கட்சித்தலைவர்களின் படுகொலைகளின் வழியாகவும் தற்போதைய ஜனாதிபதி பதவி கூட மக்கள் போராட்டங்கள், வன்முறைகளின் விளைவாகவுமே ரணில் விக்கிரமசிங்கவை வந்தடைந்தன.

கே .பாலா

இலங்கையின் ஜனாதிபதியாக வேண்டுமென்ற நீண்டகால கனவில் இருந்த ரணில் விக்கிரமசிங்க ஒரு கட்டத்தில் அந்தக்கனவை தானே கலைத்து விட்டு பிரதமர் பதவியிலாவது ஒரு தடவையாவது அதற்குரிய காலம் வரை நிலைத்து இருக்க வேண்டுமெனப் போராடிய போதும் அவருக்கும் அந்தப் பிரதமர் பதவியை இடையிலேயே பறித்துவிடும் துரதிர்ஷ்டத்துக்குமிடையிலான போட்டியில் ஆறு தடவைகள் பிரதமர் பதவியை பறி கொடுத்து தோற்றுப்போன ரணில் விக்கிரமசிங்க எதிர்பாராத நிலையில் தற்போது நாட்டின் ஜனாதிபதியாகி விட்டார்.எனினும் பிரதமர் பதவிகளின்போது தன்னை அந்தப் பதவிகளில் நீடித்திருக்க விடாது ஆப்படித்த துரதிர்ஷ்டம் அவரை விடாது துரத்துவதால் இப்போது ஜனாதிபதி பதவியை காக்கவும் மீண்டும் ஜனாதிபதியாகவும் போராடத் தொடங்கியுள்ளார்.

1948 ஆம் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஆட்சி பீடமேறிய சேனநாயக்க குடும்பத்தின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி,இலங்கையில் 2020 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத்திற்கான தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூட பெறமுடியாது வரலாற்று தோல்வியடைந்த போதும் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் ஊடாக தனி ஒருவனாக பாராளுமன்றம் வந்து இன்று ஜனாதிபதியாக பதவி வகிக்கும் நிலையில் ரணில் விக்கிரமசிங்கவை மிகப்பெரும் அதிர்ஷ்டக்காரர்,95.100 ஆசனங்களைப்பெற்றும் ஜனாதிபதியாக முடியாத அவரை அதிர்ஷ்டம் ஜனாதிபதியாக்கியுள்ளது என்று கூறுவோருக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கும் துரதிர்ஷ்டத்துக்கும் இடையில் பல வருடங்களாக நடந்த போட்டியும் அதில் ரணில் விக்கிரமசிங்க தொடர் தோல்வியடைந்த வரலாறும் தெரியாதிருக்கலாம்

இலங்கையின் பிரதமராக ஒரு தடவையேனும் அதற்குரிய காலம் வரைக்கும் நீடித்திருக்க சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் போராடியபோதும் இறுதிவரை அதில் வெற்றிபெற முடியாமல் தோற்றுபோனவரும் தற்போது அதிர்ஷ்டத்தில் கிடைத்தது எனக் கூறப்படும் ஜனாதிபதி பதவியை பாதுகாக்கவும் மீண்டும் ஜனாதிபதியாகவும் போராடும் ரணில் விக்கிரமசிங்கவை விடாது துரத்திய.துரத்தும் துரதிர்ஷ்டம் தொடர்பில் பார்ப்போம்.

ரணில் விக்கிரமசிங்க தனது ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை கல்வியை கொழும்பு, ரோயல் கல்லூரியில் பயின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த இவர், 1972 ஆம் ஆண்டில் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராக இணைந்து ஐந்து வருடங்கள் ஒரு வழக்கறிஞராக கடமையாற்றினார்.1977 ஆம் ஆண்டு தனது 28ஆவது வயதில் பியகம தேர்தல் தொகுதி மூலம் பாராளுமன்றத்துக்குத் தெரிவான இளம் சட்டத்தரணியான இவர் தனது பல்கலைக்கழக நாட்களில் இருந்தே ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணியில் பணியாற்றி வந்தார். அத்துடன் 1975 ஆம் ஆண்டு பியகம தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டதுடன் அந்தக் காலகட்டத்தில் வயதில் மிகவும் குறைந்த அரசியல்வாதியாக முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்தனவின் தலைமையிலான அரசாங்கத்தில் வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சராகப் பதவி வகித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் அசாதாரணமான மதிநுட்பம் மற்றும் பணியாற்றுவதற்கான தனித்துவம் மிக்க மன ஆற்றல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு பின்னர், அவர் இளைஞர் விவகார மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் கல்வி அமைச்சராகவும் பணியாற்றிவந்த ரணில் விக்கிரமசிங்க, அரசியல் விவகாரங்களைப் பற்றிய ஆழ்ந்த அறிவு பெற்றவர் என்ற வகையில், 1989 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்தில் சபை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவை மட்டுமன்றி, அவர் கைத்தொழில் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சராகவும் இருந்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்,பிரதமர் ,ஜனாதிபதி என்று அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்து பழுத்த அனுபவத்தைப் பெற்றவர்.

1977ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக இலங்கைப் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே பாராளுமன்ற உறுப்பினர், இலங்கையில் 6 தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர், 4 தடவைகள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்தவர் என்ற பெருமைகள் ரணில் விக்கிரமசிங்கவும் மட்டுமே உண்டு. டட்லி சேனநாயக்க மற்றும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் மூன்று தடவைகள் மாத்திரமே பிரதமர்களாக இருந்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க 6 தடவைகள் பிரதமராக இருந்துள்ளார். அதே போன்றே பிரதமர் பதவியும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவியும் எதிர்க் கட்சித்தலைவர் பதவியும் அக்கட்சியின் தலைவர்கள் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்ட நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைத்த வரலாறும் உண்டு.

அதாவது 1993 மே மாதம் முதலாம் திகதி அப்போது ஜனாதிபதியாகவிருந்த ரணசிங்க பிரேமதாச கொழும்பு ஆமர் வீதி சந்தியில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனையடுத்து பிரதமராகவிருந்த டி.பி.விஜேதுங்க இடைக்கால ஜனாதிபதியாகப்பொறுப்பேற்றதையடுத்து ஏற்பட்ட பிரதமர் வெற்றிடத்துக்கு 1993 மே 17 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். இதுவே ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக பதவி வகித்த முதல் சந்தர்ப்பமாகவிருந்தபோதும் 1994 ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையே அப்பதவியில் அவரால் நீடிக்க முடிந்தது.இதன்மூலம் பிரதமர் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாமல் முதல் தடவையாக பதவி இழந்தார்.

1999 ஆம்ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் பொதுஜன முன்னணியில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஜனாதிபதியாகிய நிலையில் 2000 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அவரின் கட்சி வெற்றிபெற்றபோதும் அதன்பின்னர் ஏற்பட்ட குழப்பங்களையடுத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 2001 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றதையடுத்து ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது தடவையாக பிரதமரானார். இந்த அரசில் ஜனாதிபதியாக சந்திரிகா பண்டார நாயக்க குமாரணதுங்கவும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் இருந்தனர். ஆனால் இருவருக்குமிடையில் ஏற்பட்ட இழுபறிகளினால் ஆட்சிக்காலம் முடியுமுன்னரே ஜனாதிபதியான சந்திரிகா பண்டார நாயக்க குமாரணதுங்கவினால் 2004 ஆம் ஆண்டு அரசு கலைக்கப்பட்டது. இதனால் ரணில் விக்கிரமசிங்க 2001 டிசம்பர் 9 ஆம் திகதி முதல் 2004 ஏப்ரல்2 ஆம் திகதி வரையே பிரதமராக இருக்க முடிந்தது. இதன்மூலம் பிரதமர் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாமல் இரண்டாவது தடவையாக பதவி இழந்தார்.

இதன்பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஐக்கியதேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக்கட்சிகளின் ஆதரவுடன் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதையடுத்து ரணில் விக்கிரமசிங்க மீண்டும் 2015 ஜனவரி 9 ஆம் திகதி பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டபோதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய அரசொன்றை அமைப்பதற்காக 2015 ஜூன் 26 ஆம் திகதி நள்ளிரவு பாராளுமன்றத்தைக் கலைத்து, 2015 ஆகஸ்ட் 17 இல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டதனால் 8 மாதங்கள் மட்டுமே ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் காபந்து அரசொன்று செயற்படுமென்பதனால் 2015 ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இருந்தார். இதன்மூலம் பிரதமர் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாமல் மூன்றாவது தடவையாக பதவி இழந்தார்.

இந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றதையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராகவிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து நல்லாட்சி அரசொன்றை அமைத்தது.இந்த அரசில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க 2015 ஆகஸ்ட் 24 ஆம் திகதி பதவியேற்றுக்கொண்டார் எனினும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து . 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த மகிந்தராஜபக்சவை பிரதமராக நியமித்தார். இதனால் தனது பிரதமர் பதவிக்குரிய காலம் முடியுமுன்னரே ரணில் பதவியை இழந்தார். இதன்மூலம் பிரதமர் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாமல் நான்காவது தடவையாக பதவி இழந்தார்.

எனினும் பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி நீக்கியமை தொடர்பில் நீதிமன் றத்தில் தொடரப்பட்ட வழக்குகளையடுத்து வழக்கு தீர்ப்புக்கள் அடிப்படையில் மீண்டும் ஐந்தாவது தடவையாக 2018 டிசம்பர் 16 ஆம் திகதி பிரதமராகப்பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க 2019 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றதையடுத்து 2019 நவம்பர் 20 இல் பிரதமர் பதவியைத் துறந்தார். இதன்மூலம் பிரதமர் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாமல் ஐந்தாவது தடவையாக பதவி இழந்தார்.

இதனையடுத்து 2020 பாராளுமன்றத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி போட்டியிட்டாலும், கட்சியில் இருந்து எவரும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகாமல் வரலாற்றுத் தோல்வியை சந்தித்தது. ரணில் விக்கிரமசிங்க கூட தோல்வியடைந்தார். ஆனால் கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் அவர் மட்டும் 2021 ஜூன் 23 ஆம் திகதி பாராளுமன்றம் வந்தார். இவ்வாறான நிலையில்கோத்தபாய ராஜபக்ஸவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததன் விளைவாக மகிந்த ராஜபக்ஸ 2022 மே 9 இல் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.இதனையடுத்து மக்கள் போராட்டத்தை சமாளிக்க 2022 மே 12 அன்று ரணில் விக்கிரமசிங்கவை கோத்தபாய ராஜபக்ஸ பிரதமராக நியமித்தார்.

எனினும் 2022 ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. கோத்தபாய ராஜபக்ஸ தலைமறைவானார். இந்நிலையில் 2022 ஜூலை 13 இல் கோத்தபாய ராஜபக்ஸநாட்டை விட்டு வெளியேறி 14 ஆம் திகதி தனது ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதை அடுத்து, பிரதமராகப் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க ஜூலை 15 இல் பதில் ஜனாதிபதியானார். 2022 ஜூலை 20 ஆம் திகதி , பாராளுமன்றத்தில் 225 எம்.பி.க்களிடையில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் பெற்று 8ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் பிரதமர் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாமல் ஆறாவது தடவையாக பதவி இழந்தார்.

இதேவேளை ஐக்கியதேசியக்கட்சியின் தலைமைப்பதவியும் எதிர்க் கட்சித்தலைவர் பதவியும் அதன் தலைவரான காமினி திசாநாயக்கா 1994 அக்டோபர் 24இல் நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைத்தன. 1994 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை பல்வேறு சவால்கள், நெருக்கடிகள், சதிகள், கழுத்தறுப்புக்கள் கட்சி பிளவுகளுக்கு மத்தியிலும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க தொடர்கின்றார்.

1977 ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான தனது 47 வருடகால அரசியல் வாழ்க்கையில் 6 தடவைகள் இலங்கையின் பிரதமராக பதவி வகித்த பெருமையை பெற்ற போதும் அந்த 6தடவைகளும் பிரதமர் பதவிக்குரிய 5 வருட காலம் முழுவதும் ரணில் விக்கிரமசிங்கவினால் பிரதமர் பதவியில் இருக்க முடியவில்லை. இடை நடுவில் அவர் பிரதமர் பதவியை இழப்பதே துரதிஷ்ட வரலாறாகியுள்ளது.பிரதமர் பதவியைப் பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்கவை முழுகாலப் பகுதிக்கும் அமர விடாது துரத்தும் துரதிர்ஷ்டமே தொடர்ந்தும் வெற்றி பெற்று வந்துள்ளது .

இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவை துரத்தி துரத்தி அடித்த துரதிர்ஷ்டம் என்ன நினைத்ததோ தெரியவில்லை அவரே கலைத்துவிட்ட ஜனாதிபதி பதவிக் கனவை நனவாக்கி கொடுத்து தற்போது புது ஆட்டத்தை தொடக்கி வைத்துள்ளது. ஒரு முறையேனும் பிரதமர் பதவியை முழுமையாக பூர்த்தி செய்ய துரதிர்ஷ்டத்துடன் போராடித் தோற்றுப்போன ரணில் விக்கிரமசிங்க தற்போது கிடைத்த தனது ஜனாதிபதி பதவியை பாதுகாக்கவும் மீண்டும் ஜனாதிபதியாகவும் துரதிர்ஷ்டத்துடன் மீண்டும் போராடத் தொடங்கியுள்ளார்.

இந்த ஜனாதிபதி பதவியை இறுதிவரை தொடரக்கூடிய அரசியல் கள நிலையும் மீண்டும் ஜனாதிபதியாவதற்கான மக்கள் மன நிலையும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாக இல்லாத நிலையே உள்ளதால் மீண்டும் ரணில்-துரதிர்ஷ்டத்துக்கிடையிலான போட்டியில் துரதிர்ஷ்டமே வெற்றிபெறக்கூடிய சூழலே பிரகாசமாகவுள்ளது.

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக அமைச்சர் டக்ளஸ் விளங்குகிறார் என்கிறார் யாழ்ப்பண பல்கலை துணைவேந்தர் !
ஆயுதப் போராட்ட காலங்களிலும் சரி ஜனநாயக வழிமுறையினூடாகவும் சரி தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்துவருகின்றார் என தெரிவித்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிறீ பற்கணராஜா அமைச்சர் முன்னெடுக்கும் முயற்சிகள் தமிழ் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயர்ப்பனவாகவே இருந்து வந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் அமைச்சர் இளைஞராக இருந்த காலத்தில் அவரது செயற்பாடுகள் எவ்வாறானதாக இருந்ததென்பதை நினைவு கூர்ந்திருந்ததுடன் மேலும் கூறுகையில்,

இன்றுள்ள அரசியல்வாதிகளுள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேறுபட்டவராகவே இருக்கின்றார். அவர் மக்களுக்கான தேவைப்பாடை அறிந்து அவர்களது நலன்கள் அவர்களது எதிர்காலம் அவர்களது பொருளாதாரம் என்பன எவ்வாறானதாக இருக்க வேண்டும் அல்லது கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எவ்வாறு உருவாக்கி கொடுக்கப்பட வேண்டும் என்பதிலேயே அதிக கரிசனையானவராக இருக்கின்றார்.

அந்தவகையில் தமிழ் மக்கள் இவ்வாறான ஒருவரை மிகவும் நேசிப்பவர்களா இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது தமிழ் மக்களின் கல்வித்தரம் மேலும் உயர்வடைவதற்கான பல்வேறு முயற்சிகளை குறிப்பாக எவ்வாறான தடைகள் இருந்தபோதிலும் அதன் உச்சிவரை சென்ற அவற்றை உடைத்து வெற்றிபெற்றுக் கொடுத்திருக்கின்றார்.

இதற்கு சான்றாக கிளிநொச்சி அறிவியல் நகரும் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடமும் சான்று பகர்கின்றன. அதுமட்டுமல்லாது பின்தங்கிள் கிராமங்களின் விளையாட்டுத்துறை கல்வி அகியவற்றில் மட்டுமல்லாது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களிலும் அதிக அக்கறை செலுத்தி வருவதை பார்க்க முடிகின்றது.

அதேவேளை அமைச்சரின் அரசியல் சாணக்கியத்தினூடாக தொழி்வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளும் எமது மக்களுக்கு கிடைத்திருக்கின்றன. அதேபோன்று எதிர்காலத்திலும் எமது மக்களி எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு தகுதியானவராக காணப்படுகின்றார்.

இந்த யதார்த்தத்தினை புரிந்து யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தேசிய ஊழியர் சங்கத்தினர் மட்டுமல்லாது மக்களது முன்னெடுப்புக்களும் அமைந்தால் அனைத்து தேவைகளுக்குமான தீர்வுகளும் சிறப்பானதாக அமையும் என்பதுடன் அது வெற்றிபெற வாழ்த்துவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனிமொழி எம்.பி. வாகனத்தில் 6-வது முறையாக சோதனை
தூத்துக்குடியில் 6-வது முறையாக கனிமொழி எம்.பி. வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார். தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி, முள்ளக்காடு, சவேரியார் புரம், அத்திமரப்பட்டி விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பின்னர் தனது பிரசார வாகனத்தில் முத்தையாபுரம் பகுதிக்கு புறப்பட்டார். அப்போது, முத்தையாபுரம் காவல் நிலையம் அருகே வந்தபோது தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையில் கனிமொழி எம்.பி.யின் வாகனத்தை நிறுத்தினர். உடனடியாக கனிமொழி எம்.பி. வாகனத்தை விட்டு கீழே இறங்கி நின்றார்.

தொடர்ந்து பறக்கும் படையினர் வாகனத்தில் சோதனை செய்தனர். ஆனால் இதில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. பின்னர் வாகனத்தை அதிகாரிகள் விடுத்தனர். தொடர்ந்து அவர் மற்ற பகுதிகளுக்கு பிரசாரம் செய்ய சென்றார். ஏற்கனவே கனிமொழி எம்.பி. வாகனத்தில் 5 முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் 6-வது முறையாக சோதனை நடந்தது குறிப்பிடத் தக்கது.

“ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது” அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு
திருப்பூர் இந்திய கம் யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து கோபிச்செட்டிப்பாளையத்தில் பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து நேற்று காலை பிரச்சாரம் செய்தார், அப்போது அவர் பேசியதாவது:-

“உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார் ஸ்டாலின். ஆனால், பழனிசாமியை நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டார்.

நீட் தேர்வுக்கு போராட்டம் பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்து விட்டார். நீட் தேர்வினால், இதுவரை 21 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில், பி.எம்.கேர் என்ற பெயரில், வசூலிக்கப்பட்ட ரூ.32 ஆயிரம் கோடிக்கு பிரதமர் இதுவரை கணக்கு காட்டவில்லை.

முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை.

ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது. தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர். தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். கடந்த தேர்தலில் அடிமை அதிமுக வை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

நெல்லை தொகுதி தேர்தலை நிறுத்தி வைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி
திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் நயினார் நாகேந்திரன். அவர் மீது வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும், அதன் விவரங்களை தனது வேட்புமனுத் தாக்கலில் மறைத்து தாக்கல் செய்துள்ளார் என்றும், எனவே அவரது வேட்புமனுவை ஏற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “வேட்புமனுவில் சொத்துவிவரங்களையும் நயினார் நாகேந்திரன் மறைத்துள்ளார். நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவானது முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. பல குறைபாடுகள் இருப்பதால், வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று பரிசீலனையின்போது ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், எந்த விசாரணையும் இல்லாமல், அவரின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இது சட்டவிரோதமானது. எனவே, வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும். அதேபோல், தேர்தல் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தனது ஆட்சேபனைக்கு எதிராக விசாரணை நடத்தும்வரை திருநெல்வேலி தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, சத்திய நாராயணா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, “வாக்குப் பதிவை தவிர தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்துவிட்டன . எனவே, தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. மனுதாரர் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதினால், தேர்தலுக்கு பிறகு தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்.” என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மகனுக்கு வாக்கு கேட்கும் வசந்தகுமார் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில் நுட்பத்தில் பரவும் வீடியோ
மறைந்த முன்னாள் எம்.பி., வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் அவருடைய மகன் விஜய் வசந்துக்கு வாக்குகேட்டு பேசுவது போன்று, `ஏஐ` நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட 2 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வசந்தகுமாரின் 74-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த வீடியோ, “கன்னியாகுமரி சொந்தங்களே… நான் உங்கள் வசந்தகுமார் பேசுகிறேன்” என தொடங்குகிறது.

தொடர்ந்து, “உடலால் உங்களை விட்டு பிரிந்தாலும், மனதளவில் உங்களுடன் இருக்கிறேன். எனது எண்ணங்களையும், ஆசைகளையும் நிறைவேற்ற கிடைத்த வாய்ப்பு எனது மகன் விஜய் வசந்த். குமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், உங்களுக்கு பாதுகாவலனாகவும் என் மகன் விஜய் வசந்த் செயல்படுவான்” என்பன போன்ற வாசகங்களை வசந்தகுமார் பேசுவதுபோன்று அந்த வீ்டியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை, குமரி தேர்தல் பிரச்சாரத்திலும், சமூக வலைதளங்களிலும் காங்கிரஸார் ஒளிபரப்பி வருகின்றனர்.

இந்தியாவின் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக | ஏபிபி – சிவோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்
ஏபிபி – சிவோட்டர் நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பில் நாட்டிலேயே 3-வது பெரிய கட்சியாக திமுக வர வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக் கட்சிகளே வெற்றி பெறும் என்று ஏபிபி-சிவோட்டர் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் திமுக 21, காங்கிரஸ் 9, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலை சிறுத்தைக் கட்சி 2 தொகுதிகளிலும், மதிமுக, ஐயுஎம்எல், கொமதேக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வரும்போது திமுக தலைமையிலான கட்சிகள் 39 இடங்களிலும் வெல்வதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் 18-வது மக்களவையில் 3-வது பெரிய கட்சியாக திமுக வர வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுவதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.