Dinakaran.com |03 Apr 2023

இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியா: இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவை இணையத்தால் இணைத்துள்ளோம், சமூக நீதி நம்மை இணைத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை: ஒட்டுமொத்த இந்தியாவை இணையத்தால் இணைத்துள்ளோம், சமூக நீதி நம்மை இணைத்துள்ளது என சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாட்டில் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை எஸ்.பி. காத்திருப்பு பட்டியலில் மாற்றம்
சென்னை: விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை எஸ்.பி. காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன், நெல்லை மாவட்ட எஸ்.பி.யாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல். போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே
சென்னை: ஐ.பி.எல். போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு சிறப்பு ரயில் இயக்கம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடற்கரை முதல் வேளச்சேரிக்கும், சேப்பாக்கத்தில் இருந்து கடற்கரைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அனைத்து சக்திகளையும் சமூக நீதி கோட்டில் இணைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: டி.ராஜா
சென்னை: அனைத்து சக்திகளையும் சமூக நீதி கோட்டில் இணைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திருவள்ளுவர் மண், அயோத்தி தாசர் மண், பெரியார் மண், சிங்கார வேலர் மண், அண்ணா மண், கலைஞர் மண் அனைவரும் சுயமரியாதைக்காக போராடியவர்கள். தற்போது அப்பணியை மு.க.ஸ்டாலின் தொடர்கிறார் எனவும் கூறியுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்: திருமாவளவன்
சென்னை: பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயமாகி வருகின்றன. தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை விரிவுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மோடி சமுதாயத்தினரை பற்றி ராகுல் எதோ கூறிவிட்டதாக பெரிதாக்குகிறார்கள்: மராட்டிய முன்னாள் துணை முதல்வர்
சென்னை: மோடி சமுதாயத்தினரை பற்றி ராகுல் எதோ கூறிவிட்டதாக பெரிதாக்குகிறார்கள் என மராட்டிய முன்னாள் துணை முதல்வர் கூறியுள்ளார். பின்தங்கியோருக்கு எதிராக அவர் பேசியதாக கூறுகிறார்கள், அவர் எங்கே அப்படி பேசினார் என்று மராட்டிய முன்னாள் துணை முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். நிரவ் மோடி - ஜெயின், லலித் மோடி - மார்வாடி, புர்னேஷ் மோடி வணிகர்; மோடி என்பது குடும்பப் பெயர், சாதி பெயரல்ல என்று கூறியுள்ளார்.

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 7-ம் தேதி தலைமை அலுவலகத்தில் கூடுகிறது
சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 7-ம் தேதி தலைமை அலுவலகத்தில் கூடுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் கூடுகிறது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியாரும் கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாதுகாக்கிறார்: பரூக் அப்துல்லா
காஷ்மீர்: பெரியாரும் கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாதுகாக்கிறார் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். தேசத்தின் நன்மைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னே நாம் ஒருங்கிணைய வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்!
சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல்
சென்னை: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தலைமைச் செயலாளரிடம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர்அறிக்கையை சமர்ப்பித்தார். கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேராசிரியர்கள் மீது புகார் எழுந்துள்ளது. பாலியல் புகார் தொடர்பாக நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்.13வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு
சென்னை: கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்.13வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மனை மாதவரத்தில் போலீசார் கைது செய்தனர்.

சிவகாசியில் சுமைதூக்கும் தொழிலாளி ஒருவர் 5 பேர் கும்பலால் வெட்டிக் கொலை!
விருதுநகர்: சிவகாசியில் சுமைதூக்கும் தொழிலாளி சுந்தர பாண்டியன் 5 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பணிபுரியும் இடத்திலேயே சுந்தர பாண்டியனை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிய 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுக்கரை போடிபாளையம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 6 மாத கைக்குழந்தை உயிரிழப்பு!
கோவை: மதுக்கரை போடிபாளையம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 6 மாத கைக்குழந்தை உயிரிழந்துள்ளது. கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளது.

சமயரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவை ஒட்டி ஏப்.18-ல் திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!
திருச்சி: சமயரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவை ஒட்டி ஏப்.18-ல் திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய காங்கிரசார், பாஜகவினர் இடையே மோதல்
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய காங்கிரசார் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியினர், பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2பேருக்கு மண்டை உடைக்கப்பட்டது. சாலைகளில் திரண்ட இரு கட்சியினரும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. காங்கிரஸ் பாஜகவினர் இடையேயான மோதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதையொட்டி தலைமை செயலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை
சென்னை: பிரதமர் மோடி ஏப்ரல் 8ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதையொட்டி டிஜிபி சைலேந்திரபாபு தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசித்து வருகிறார்.

ஏப்.30ல் தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல்..!!
சென்னை: தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் ஏப்.30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 1-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் தகவல் தெரிவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் உறுப்பினர்கள் கமல்குமார், சீனிவாசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்..!!
சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தின் நீதிபதி சுப்ரமணியன் முன்பு பேராசிரியர் ஹரிபத்மன் ஆஜர்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மனை, எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் விசாரணை நடத்தியது. விசாரணைக்குப் பின் உதவி பேராசிரியர் ஹரிபத்மனை நீதிமன்றத்தில்  காவல்துறை ஆஜர்படுத்தியது. பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி பேராசிரியர் ஹரிபத்மன், மாதவரத்தில் உள்ள அவரது தோழி வீட்டில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார்.

புகாருக்குள்ளானோர் மீதான நடவடிக்கைகள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும்: கலாஷேத்ரா நிர்வாகம் அறிவிப்பு
சென்னை: புகாருக்குள்ளானோர் மீதான நடவடிக்கைகள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் என்று கலாஷேத்ரா நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹரிபத்மன் மத்திய அரசு ஊழியர் என்பதால் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகாருக்குள்ளான பிற 3 பேரை டிஸ்மிஸ் செய்வதற்கான ஆணை 2 நாளில் எழுத்துப்பூர்வமாக தரப்படும் என்று கலாஷேத்ரா நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடவடிக்கைகளை எழுத்துப்பூர்வமாக வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் கூட்டமைப்பு திட்டவட்டமாக கூறியுள்ளது.