தினவாசல்

காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!
சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன. நீர் சுத்திகரிப்பு சார்ந்து பல முறைகள் உலகின் அத்தனை நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

நீரின் தரத்தை சரியான அளவில் தங்களின் நாட்டு மக்களுக்கு வழங்க அந்தந்த நாடுகள் தங்களால் முடிந்த அளவு முயற்ச்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றன. இருப்பினும் தரமான குடிநீர் 100 சதவீதம் அனைவருக்கும் கிடைக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான். புள்ளிவிவரங்களின் படி ஓவ்வொரு பத்து வினாடிகளுக்கும் ஒருவர் தரமற்ற குடிநீரால் உயிரிழக்கிறார்.

நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பல நாடுகளில் கடல் நீர் சுத்திகரிப்பு, மழை நீர் சேமிப்பு போன்ற பல முறைகள் பின்பற்றபடுகின்றன. இந்நிலையில் காற்றில் இருந்து தரமான குடிநீரை பிரித்தெடுக்கும் முறையை பல நாடுகள் கடந்த சில வருடங்களாக கையிலெடுத்து வருகின்றனர். அதை atmospheric water generator (AWG) என்ற கருவியின் மூலம் சாத்தியப்படுத்தி வருகின்றனர்.

இந்தக் கருவியானது சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க உதவும். உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் AWG எனும் கருவியை உற்பத்தி செய்து தேவைப்படும் மக்களுக்கு அளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பத தன்மையின் அளவை பொறுத்தே இக்கருவியை உபயோகிக்க முடியும் என்றும் இன்னும் சில பரிசோதனைகளுக்குப் பிறகு முழு அறிவிப்பை அவர்கள் வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஒரே கதை ஆனாலும் வெற்றிப்பெற்ற அவதார்; ஒரு கடந்த கால பயணம்!

The post காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை! appeared first on தினவாசல்.

சாதனை செய்யும் ஆதிபுருஷ்!
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியான 16 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இது பான் இந்தியா படமாக உருவாகியுள்ள காரணத்தால் இதன் ட்ரெய்லரை படக்குழு ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக வெளியிட்டது.

இந்த நிலையில் ‘ஆதிபுருஷ்’ ட்ரெய்லர் வெளியான 16 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அதிகபட்சமாக இந்தியில் 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளை இந்த ட்ரெய்லர் பெற்றுள்ளது. தெலுங்கில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் தமிழில் 30 லட்சம், கன்னடத்தில் 20 லட்சம், மலையாளத்தில் 30 லட்சம் பார்வைகளையும் இந்த ட்ரெய்லர் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இப்படத்தின் முதல் டீசர் வெளியானபோது அதில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் சமூக வலைதளங்களில் கடும் கேலிக்கு உள்ளான நிலையில், படத்தின் கிராபிக்ஸ் தரத்தை மேம்படுத்த படக்குழு முடிவு செய்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இதனால் கடந்த ஜனவரியில் வெளியாக வேண்டிய படம் தள்ளிப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது வெளியாகியுள்ள ட்ரெயலரில் கிராபிக்ஸ் தரம் முன்பை விட பலமடங்கு சிறப்பாக இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ள ‘ஆதிபுருஷ்’ படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

The post சாதனை செய்யும் ஆதிபுருஷ்! appeared first on தினவாசல்.

விதைப்பண்ணை அமைப்பது எப்படி?
விவசாயம் செய்வதோடு மட்டுமல்லாமல், விதைப்பண்ணையும் அமைத்து, விதைகளை விற்பனை செய்தால் நல்ல இலாபம் கிடைக்கும். நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்வது தான் விதைப்பண்ணையின் முக்கிய குறிக்கோள்.

விதைச்சட்டம் 1966 பிரிவு 8 இன் படி, கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்கும் நோக்கத்துடன், 1979 ஆம் ஆண்டு முதல் விதைப்பண்ணை முறையை, விதைசான்றுத் துறை செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் தரமான விதைகளுக்கு இங்கு சான்று அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விதைப்பண்ணைத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த விதைப்பண்ணைகளில், மத்திய அரசு அனுமதி பெற்ற விதைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

அரசு, அரசு சார்பு, தனியார் மற்றும் விவசாய குழுக்கள் என யார் வேண்டுமானாலும் விதைச்சான்று அலுவலகத்தில் விதை உற்பத்தியாளராக தங்களை பதிவு செய்து கொள்ளலாம். விதை உற்பத்தியாளராக பதிவு செய்ய எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அந்தந்த மாவட்டங்களில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் உதவி விதை அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக தொடர்பு கொண்டு, விதைப்பண்ணை உற்பத்தியாளராக தங்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பிறகு, விதை உற்பத்தியை தொடங்கலாம்.

விதைச் சான்று அலுவலர்களின் மேலான வழிக்காட்டுதலின் படி, நல்ல தரத்தில் விதைகளை உற்பத்தி செய்து, வேளாண் துறைக்கே நேரடியாக விற்பனை செய்யும் வாய்ப்பும் உள்ளது. விதை உற்பத்தியாளராக பதிவு செய்தவுடன் பூக்கும் பருவம் மற்றும் அறுவடை நேரங்களில், வேளாண் விதை சான்று அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்வார்கள். இந்த கள ஆய்வில் பயிர் விலகு தூரம் மற்றும் கலப்பு, விதை மூலம் பரவும் நோய் இருக்கிறதா? போன்றவை குறித்து ஆய்வு செய்யப்படும். உற்பத்தி செய்யப்படும் விதைகளை சுத்திகரித்து, தரமான விதைகளுக்கு மட்டுமே வேளாண் துறையின் சான்று அளிக்கப்படும்.

மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட விதைகளை உற்பத்தி செய்ய வல்லுநர் விதை, சான்று விதை மற்றும் ஆதார விதை என மூன்று விதமான வகைகளில் விதைகளை உற்பத்தி செய்யலாம். வல்லுநர் விதை என்பது ஆராய்ச்சி நிலையங்கள், அறிவியல் நிலையங்கள் மற்றும் அரசு விதைப்பண்ணைகளில் விதைச் சான்று அலுவலர்களின் நேரடி மேற்பார்வையில் உற்பத்தி செய்யப்படும் தரமான விதைகளாகும்.

வல்லுநர் விதைகளை விவசாயிகளின் தோட்டம் அல்லது அரசு பண்ணைகளில் நட்டு, விதையாக உற்பத்தி செய்த பிறகு, மறுபடியும் வேளாண் விரிவாக்க அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் போது, அந்த விதைகளை சான்றிதழ் விதை மற்றும் ஆதார விதை என்று அழைக்கிறார்கள்.

இவ்வாறு பெறப்படும் விதைகளை, யாரிடம் இருந்து வாங்குகிறோமோ, அவர்களின் ரசீது, விதைச்சான்று பதிவு மற்றும் வயலின் வரைபடம் ஆகியவற்றை இணைத்து படிவம் 1 இல் பதிவு செய்யப்படும். இப்படி செய்யப்படும் பதிவுகளுக்கு, பயிர் ஒன்றுக்கு 25 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் 25 ஏக்கர் வரை, ஒரே விதைப் பண்ணையாக பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல, வயல் ஆய்வு கட்டணம் 50 அல்லது 60 ரூபாய் தான் வரும்.

இப்படித் தான் விவசாயிகள் விதைப்பண்ணையை அமைக்க வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், வேளாண் துறையை அணுகலாம்.

The post விதைப்பண்ணை அமைப்பது எப்படி? appeared first on தினவாசல்.

களத்திற்கு திரும்பும் கே.எல்.ராகுல்!
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கு வலது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மீண்டும் களத்திற்கு திரும்புவதில் உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

31 வயதான அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வழிநடத்தி வந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் அவர் காயமடைந்தார். அதனால் ஐபிஎல் சீசனின் எஞ்சிய போட்டிகள் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் விலகினார்.

“அனைவருக்கும் வணக்கம். எனக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. மருத்துவர்களுக்கும், மருத்துவ குழுவினர்களுக்கும் நன்றி. விரைவில் தேசிய அணிக்கு திரும்பும் அந்த தருணத்தை எதிர்பார்த்துள்ளேன். மீண்டும் களத்திற்கு திரும்புவதில் உறுதியாக உள்ளேன்” என ராகுல் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட கே.எல்.ராகுல் உடற்தகுதியுடன் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி!

The post களத்திற்கு திரும்பும் கே.எல்.ராகுல்! appeared first on தினவாசல்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு தமிழக அரசின் ஒருங்கிணைந்த பயிற்சியில் சேர 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வரால் தொடங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “போட்டித் தேர்வு” பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டம் மற்றும் ஊரக கடன்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 07.03.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

“நான் முதல்வன்” போட்டித் தேர்வு பிரிவானது தமிழக இளைஞர்கள் ஒன்றிய அரசுப் போட்டிகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவான சிறந்த திறன் பயிற்சி வழங்குவதையே முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையங்களான (SSC), இரயில்வே பணியாளர் தேர்வுகள் (RRB) வங்கித் தேர்வுகள் (Banking) இந்திய குடிமைப் பணித் தேர்வுகள் (UPSC) போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக இரயில்வே, SSC, வங்கித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி, மாவட்டந்தோறும் அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு தலா 150 மாணவர்கள் வீதம் நேரடி வகுப்பறைப் பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வழங்கப்படும்.

மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான செலவினங்களை “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் அரசே ஏற்றுக்கொள்ளும். இப்பயிற்சியின் அங்கமாக 300 மணிநேர தனி வழிகாட்டல், 100-க்கும் மேற்பட்ட மாதிரித் தேர்வுகள் ஆகியவை 100 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இத்திட்டத்திற்கான வல்லுநர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் நியமிக்கப்படுவார்கள்.

மாவட்டந்தோறும் நடைபெறவிருக்கும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2023. மேலும் பயிற்சி வகுப்புகள் 25.05.2023 அன்று தொடங்கவிருக்கிறது. மேலும் விவரங்களுக்கு https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணைய தளத்தை அணுகவும். இப்பயிற்சியில் பயன்பெற ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் “http://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX” என்ற பதிவு தளத்தில் பதிவு செய்யலாம்.

சொகுசு காரின் சாவியை காணவில்லை – ரஜினி மகள் புகார்!

The post நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி! appeared first on தினவாசல்.

நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா? – சீமான்!
“சமூகத்தைத் துண்டாட நினைக்கும் பாசிசவாதிகளும், மதவாதிகளும் சட்டத்தின் பிடியிலிருந்து முற்றாய் தப்பித்துப் போகையில், சமூக அநீதிக்கு எதிராகப் பேசுவோர் மீது அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் பாய்ச்சப்படுமென்றால், நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வொன்றில், ‘மலக்குழி மரணங்கள்’ எனும் தலைப்பின் கீழ், கடவுளர்கள் மலக்குழியில் இறங்கித் துப்புரவு செய்தாலாவது அம்மரணங்கள் தடுக்கப்படுமா? என்ற பொருளில் கவிதை வாசித்த தம்பி விக்னேஸ்வரன் என்கிற விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்திருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

அறிவியல் வளர்ச்சியின் உச்சத்திலிருக்கும் 21ம் நூற்றாண்டிலும் மனிதக்கழிவை மனிதனே அள்ளும் பெருங்கொடுமையும், துப்புரவுப்பணிகளின்போது நச்சுவாயு தாக்குதலால் பணியாளர்கள் உயிரிழக்கும் கொடுந்துயரமும் இயல்பான ஒன்றாகிவிட்ட தற்காலச் சூழலில், அத்தகைய அநீதிக்கெதிராகத் தனது கற்பனைவளத்தையும், கவிதை புனையும் ஆற்றலையும் கொண்டு, கடவுளர்களைக் கதாபாத்திரங்களாக்கிக் கவிதை வடித்ததற்கு, இந்து மதத்தினை இழிவுப்படுத்திவிட்டதாகக் கூறி, வழக்கைப் பாய்ச்சிருக்கும் திமுக அரசின் நடவடிக்கை படைப்புரிமைக்கும், கருத்துச்சுதந்திரத்திற்கும் விடப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும்.

ஒட்டுமொத்த இசுலாமிய சமூகத்தையும் இழிவுப்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ எனும் திரைப்படத்தைக் காவல்துறையின் பாதுகாப்போடு தமிழ்நாடு முழுமைக்கும் திரையிடச்செய்த திமுக அரசு, மலக்குழி மரணங்கள் தொடர்பான கவிதையைக்கூட இந்து மதத்திற்கெதிரானதாகக் கட்டமைத்து, தம்பி விடுதலை சிகப்பி மீது அடக்குமுறையைப் பாய்ச்சுவதென்பது வெட்கக்கேடானது. மனுநீதிக்கு எதிரானது திராவிடமெனக் கூறிவிட்டு, இந்துத்துவத்தின் ஊதுகுழலாய் ஒலிக்கும் திமுக அரசின் செயல்பாடு அவலத்தின் உச்சம். நம்பி வாக்குச் செலுத்தி, ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களுக்குச் செய்யும் ஜனநாயக துரோகம்.

சமூகத்தைத் துண்டாட நினைக்கும் பாசிசவாதிகளும், மதவாதிகளும் சட்டத்தின் பிடியிலிருந்து முற்றாய் தப்பித்துப் போகையில், சமூக அநீதிக்கு எதிராகப் பேசுவோர் மீது அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் பாய்ச்சப்படுமென்றால், நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா? பாஜகவின் அழுத்தத்திற்குப் பணிந்து, ஆரியத்திற்கு அடியாள் வேலைபார்ப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் வேலை திட்டமா? பதில் சொல்வாரா முதல்வர் ஸ்டாலின்?

ஆகவே, ‘மலக்குழி மரணங்கள்’ எனும் சமூக அவலத்திற்கு எதிராக கவிதை வடித்திருக்கும் தம்பி விடுதலை சிகப்பி மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

The post நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா? – சீமான்! appeared first on தினவாசல்.

இன்று மாலை புயல் உருவாகிறது – சென்னை வானிலை ஆய்வு மையம் !
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை புயல் உருவாகிறது என்றும், நாளை இரவு இது மிக தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நேற்று (9.5.2023) காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை (10.5.2023) 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் (போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் தென்மேற்கே) நிலைகொண்டுள்ளது.

இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அதே பகுதியில் புயலாக வலுபெறக்கூடும். இது மேலும் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுப்பெற்று நாளை (11.5.2023) காலை தீவிர புயலாகவும் நள்ளிரவு வாக்கில் மிகத்தீவிர புயலாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி, நகர்ந்து 13.5.2023 முதல் சற்றே வலுக்குறைந்து 14.5.2023 காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இன்று, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 – 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். 13 மற்றும் 14-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: அந்தமான் கடல் பகுதிகள்: 10.05.2023 முதல் 12.05.2023 காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி!

The post இன்று மாலை புயல் உருவாகிறது – சென்னை வானிலை ஆய்வு மையம் ! appeared first on தினவாசல்.

சொகுசு காரின் சாவியை காணவில்லை – ரஜினி மகள் புகார்!
இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சொகுசு காரின் சாவி தொலைந்து போய் விட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த தங்க, வைர நகைகளைக் காணவில்லை என்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தார். மேலும், தனதுவீட்டு பணிப்பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள், கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் இருவரும் ஐஸ்வரியாவின் வீட்டிலிருந்து திட்டமிட்டு நகைகளை திருடியது தெரியவந்தது.

இந்த நிலையில், இன்று (மே 10) ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது சொகுசு காரின் சாவி தொலைந்து விட்டதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஏப்ரல் 23ஆம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது தனது காரின் மற்றொரு சாவி காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

50 அடி உயர ஆற்றுப் பாலத்திலிருந்து கவிழ்ந்த பேருந்து; உயரும் பலி எண்ணிக்கை!

The post சொகுசு காரின் சாவியை காணவில்லை – ரஜினி மகள் புகார்! appeared first on தினவாசல்.

50 அடி உயர ஆற்றுப் பாலத்திலிருந்து கவிழ்ந்த பேருந்து; உயரும் பலி எண்ணிக்கை!
மத்திய பிரதேசம் மாநிலத்தில், 50 அடி உயர ஆற்றுப் பாலத்திலிருந்து, பேருந்து ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் தங்கோர்கோன் ஆற்றுப்பாலத்தில் இந்த விபத்து, இன்று காலை நடந்திருக்கிறது. இந்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதிகாலை நேரம் என்பதால், பாலத்தை கடக்கையில் பேருந்து ஓட்டுநர் சற்று கண்ணயர்ந்ததன் காரணமாக விபத்து நேரிட்டதாக பயணிகளில் சிலர் தெரிவித்தனர்.

50 அடிக்கும் மேலான உயரத்தில் அமைந்திருந்த ஆற்றுப்பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து ஆற்றில் பாய்ந்தது. ஆற்றில் தண்ணீர் தடம் ஏதும் அப்போது இல்லை. அத்தனை உயரத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த 3 குழந்தைகள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலியானோர் எண்ணிக்கை அதிகமாகும் என்று அஞ்சப்பட்டது. அதன்படியே அடுத்த சில மணி நேரங்களில் உயிர்ப்பலி எண்ணிக்கை 22 ஆனது.

பேருந்து விபத்துக்கு காரணமான ஓட்டுநர், தலையில் அடிபட்ட காயத்துடன் தப்பியோடியதாக மீட்பு பணியில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர், பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தங்கள் அனுதாபத்தை தெரிவித்ததோடு, இறந்தோரின் வாரிசுகள் மற்றும் காயமடைந்தோருக்கு நிவாரண நிதிகளையும் அறிவித்துள்ளனர்.

சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை வென்றார், மெஸ்ஸி!

The post 50 அடி உயர ஆற்றுப் பாலத்திலிருந்து கவிழ்ந்த பேருந்து; உயரும் பலி எண்ணிக்கை! appeared first on தினவாசல்.

பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது வழக்குப் பதிவு!
தனது உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தமைக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கண்டன அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்து கடவுள்களான பகவான் ராமர், சீதை மற்றும் அனுமனை இழிவுபடுத்தும் விதமாக கவிதை வெளியிட்டதாக பாரத் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், விடுதலை சிகப்பி மீது புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் அவர் மீது தமிழ்நாடு காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

“இந்தியா முழுவதும் தொடரும் மலக்குழி மரணங்களை கண்டித்து, அதன் தீவிரத்தை உணர்த்தும் விதமாக இந்து புராண கதாபாத்திரங்களை, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வழியில் நின்று , கடவுள்களாக இருந்தாலும் மலக்குழியில் இறங்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைவின் வழியாக கவிதை வாசித்தார் விடுதலை சிகப்பி.

இதை புரிந்து கொள்ளாத பட்டியலின விரோத கொள்கை கொண்ட பாஜக, இந்து பாசிச அமைப்புகளுக்கும், அவர்களின் அச்சுறுத்தலுக்கு பணிந்து வழக்கு தொடுத்திருக்கும் தமிழக காவல் துறைக்கும் கடும் கண்டனங்கள்!” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காவல் துறை அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை டேக் செய்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை!

The post பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது வழக்குப் பதிவு! appeared first on தினவாசல்.