Eelam Press

ஜெனீவா களத்தில் வெற்றி யாருக்கு?
ஜெனிவாவில் அடுத்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.  இம்மாதம் 27ஆம் திகதி தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 23 ஆம் திகதி வரை தொடரப்போகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் பல நாடுகளின் விவகாரங்கள் குறித்த முக்கியமான விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இடம்பெறப் போகிறது. சிரியா, லிபியா, மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளின் விவகாரங்கள் இதில் முக்கியமானதாக இருக்கும்.

குறிப்பாக, இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படவுள்ளது. இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்ற நாடு எது என்பது தெளிவாகத் தெரியாது போனாலும் தீர்மானம் வரப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் இதனை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

அண்மையில் கொழும்பு வந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இரண்டு மூத்த அதிகாரிகளும், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை தமது நாடு ஆதரிக்கும் என்று அறிவித்திருந்தனர்.

அமெரிக்காவின் பின்புலத்துடன் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது என்பது உறுதி. ஆனால் அதை யார் கொண்டு வரப்போவது என்று தெரியவில்லை.  இந்தக் கேள்வி இலங்கை அரசையும் குழப்புவதாகவே தெரிகிறது.

முன்னதாக அமெரிக்காவே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்று  அரசாங்கம் நம்பியது. ஆனால் அண்மையில் கொழும்பு வந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளான றொபேட் ஓ பிளேக்கும், மரியா ஒரேரோவும் அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாகவே கூறியுள்ளனர்.

எனவே அமெரிக்கா அல்லாத இன்னொரு நாடு தான் இதனைக் கொண்டுவரப் போகிறது என்று தெளிவாகியுள்ளது. அந்த நாடு எது என்பதைக் கண்டறியும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இன்னொரு கட்டத்தில் கனடா இந்த முயற்சிகளில் இறங்கலாம் என்ற கருத்தும் உள்ளது. காரணம், ஏற்கனவே கடந்த செப்ரெம்பர் மாதம் நடந்த கூட்டத்தொடரில் கனடா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர முயன்றது.

ஆனால் அதற்குப் போதியளவு ஆதரவு கிடைக்காமல் போக, தீர்மானத்தைக் கொண்டு வருவதில் இருந்து நழுவிக் கொண்டது. எனவே கனடா இம்முறை அந்த முயற்சியைத் தொடரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

ஆனால் அமெரிக்காவோ, கனடாவோ இந்த முயற்சியில் இறங்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் பலமாக உள்ளது. ஏனென்றல் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் இந்த முயற்சியில் இறங்கினால் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் குழம்பிப் போய் தீர்மானத்தை எதிர்த்து விடும் என்ற பயம் அமெரிக்காவுக்கு உள்ளது.

எனவே மற்றொரு நாட்டின் மூலம் தீர்மானத்தைக் கொண்டு வர அமெரிக்கா முனைவதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, இலங்கை அரசாங்கம் தனது பக்கம் உள்ளதாகக் கூறும் அணிசேரா அமைப்பிலுள்ள ஆபிரிக்க நாடு ஒன்றைப் பயன்படுத்தி இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்றும் கருதப்படுகிறது.

இதற்கிடையில் ஐரோப்பிய யூனியன் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் ஐரோப்பிய யூனியன் இந்தத் தீர்மானத்தை நேரடியாகக் கொண்டு வர முடியாது.

ஏனென்றால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அது ஒரு உறுப்பு நாடு அல்ல. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஏதாவது ஒரு நாட்டின் மூலம் வேண்டுமானால் அதைச் செய்யலாம்.

இரு வாரங்களுக்கு முன்னதாக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்தே இந்த முயற்சியில் ஐரோப்பிய யூனியன் ஈடுபடலாம் என்ற கருத்து வலுவடைந்தது.

ஏற்கனவே 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த கையோடு, ஜெனிவாவில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சுவீடன் கொண்டு வந்தது.

அப்போது போரின்போது எந்த மீறல்களும் நடக்கவில்லை என்று இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபா,போன்ற நாடுகள் அடித்துக் கூறின.  இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முறியடித்து ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின.

அதற்குப் பின்னர் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் எப்போது தொடங்கினாலும் இலங்கைக்கு நெருக்கடிகள் வருவது போல இருந்தன.  ஆனால் கடைசியில் அவை விலகிக் கொண்டன.

கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவைக் காரணம் காட்டி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நெருக்கடிகளில் இருந்து மீண்டு வந்தது.

இம்முறை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகி விட்டது. அதன் மீதான நடவடிக்கை அதாவது, பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை வைத்தே இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தக் கோரியும் பொறுப்புக் கூறுவதற்கு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்மானம் வலியுறுத்தும் என்று நம்பப்படுகிறது.

ஆனால், எத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும் அதனை முறியடித்து விடுவோம் என்கிறது அரசாங்கம். நட்பு நாடுகளின் பக்கபலம் இருப்பதாகவும் அரசாங்கம் சொல்லிக் கொள்கிறது.

இந்தமுறை அரசாங்கம் தென் அமெரிக்க நாடுகளையும் ஆபிரிக்க நாடுகளையும் மத்திய கிழக்கு நாடுகளையும் வளைத்துப் போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது.

இந்த முயற்சியில் அவ்வளவாக பலன் கிட்டவில்லை என்று தகவல்கள் வெளியான போதும் அது எந்தளவுக்கு உண்மை என்பதை ஜெனீவா கூட்டத்தொடரின் போது தான் உணர முடியும்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோவைக் கொண்டு தடுத்து விடும் என்ற வகையில் கூட செய்திகள் வெளியாகின்றன.

ஐ.நா பாதுகாப்பு சபையில் தான் வீட்டோ அதிகாரம் உள்ளது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் எந்த நாடுமே நிரந்தர உறுப்பு நாடு அல்ல.  மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் உறுப்பு நாடுகள் மாறிக் கொண்டிருக்கும். ஒரே நாடு  அடுத்தடுத்து இரண்டு முறை உறுப்புரிமை பெற முடியாது.

இதற்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற பாதுகாப்புச்சபையின் நிரந்தர உறுப்புநாடுகள் கூட விதிவிலக்கல்ல. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் குறைவு என்றே கூறலாம்.

இதனால் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உருவாக்கப்பட்ட பின்னர், இஸ்ரேல் மீது 32 தடவைகள் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வீட்டோ அதிகாரம் இருந்திருந்தால் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இஸ்ரேலை காப்பாற்றியிருக்கும்.

ரஷ்யா, சீனா, கியூபாவின் ஆதிக்கத்தில் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உள்ளது என்பதையும் கவனித்தாக வேண்டும். ஏற்கனவே மனிதஉரிமைகள் அமைப்புகள் இந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் தான் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளன.

இதனால் தான் வடகொரியா, கம்போடியா, சூடான் உள்ளிட்ட பல நாடுகளின் பிரச்சினைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.

47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை, சீனா, ரஷ்யாவின் கையில் சிக்கியிருப்பதற்குக் காரணம், ஆபிரிக்க, தென் அமெரிக்க, ஆசிய நாடுகளிடம் உள்ள அதிகளவு உறுப்புரிமைதான்.

ஆபிரிக்காவுக்கு 13 இடங்களும் ஆசியாவுக்கு 13 இடங்களும் லத்தீன் அமெரிக்காவுக்கு 8 இடங்களும் கிழக்கு ஐரோப்பாவுக்கு 6 இடங்களும் மேற்கு ஐரோப்பாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் 7 இடங்களும் மனிதஉரிமைகள் பேரவையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும்பாலானவை ரஷ்யாவை அல்லது சீனாவை சார்ந்திருப்பவை. இந்தப் பகுதி நாடுகள் பலவற்றுக்கு அமெரிக்காவையோ மேற்குலகையோ பிடிக்காது. எனவே தமது நலனுக்காக சீன, ரஷ்ய சார்பு நிலையை பேணிக் கொள்கின்றன.

இவற்றை வைத்துக் கொண்டு தான் இலங்கை அரசாங்கமும் இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்க முனைகிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டும் மேற்குலக நாடுகள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பலமான நிலையில் இருப்பதாக கூறமுடியாது. இதனால் தான் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை தோற்கடித்து விடலாம் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தப் போதிய காலஅவகாசம் இல்லை என்றும், பொறுப்புக்கூறுவதற்காக இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் மட்டக் குழுவொன்றை நியமித்துள்ளதாகவும்,ஜெனிவாவில் அரசாங்கம் வாதங்களை முன்வைக்கவுள்ளது.  இது எந்தளவுக்கு வெற்றி பெறும் என்று கூறமுடியாது.

ஆனால், ஒன்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் தோற்கடிக்கப்பட்டாலும் கூட  மேற்குலக அழுத்தங்கள் குறையப் போவதில்லை.

ஜெனிவாவில் இந்த நாடுகள் தோல்வி காணுமாக இருந்தால் இலங்கை மீதான அழுத்தங்களைப் பிரயோகிக்க மேற்குநாடுகள் மாற்று உபாயங்களைக் கடைப்பிடிக்கும். அவை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கண்டனத் தீர்மானத்தை விடவும் கடுமையானதாகவும் இருக்கலாம்.

-கே.சஞ்சயன்

சிறிலங்காவிடம் உருப்படியான திட்டம் ஒன்றுமில்லை – அமெரிக்கா குற்றச்சாட்டு
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில பலமான பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் பின்பற்றவில்லை என்று அமெரிக்கா மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்த நேற்று வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனர்,

“நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பது குறித்த எந்தவொரு உறுதியான நடவடிக்கைத் திட்டத்தையும் சிறிலங்கா அரசிடம் இன்றுவரை காணமுடியவில்லை.

இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதியான அடியெடுத்து முன்னோக்கிச் செல்வதற்கு சிறிலங்கா அரசை நாம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்.

அதேவேளை, நல்லிணக்கத்துக்கான முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கக் கோரும் தீர்மானம் ஒன்றை ஜெனிவாவில் கொண்டு வருவதற்கும் நாம் எமது பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியமும் சிறிலங்காவுக்கு மற்றொரு எச்சரிக்கை அறிக்கை
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவதற்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை திறம்பட நடைமுறைப்படுத்தினால், தேசிய நல்லிணக்கத்தை ஏற்றுபடுத்துவதற்கான நடவடிக்கையில் முக்கியமான பங்களிப்பை செய்ய முடியும்.

சிறிலங்காவில் இனமுரண்பாட்டுக்கு மூலகாரணமான தமிழ்மக்களின் உண்மையான குறைகளை தீர்ப்பதில் கடந்தகால அரசாங்கங்கள் தவறியுள்ளன என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் கருத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொள்கிறது.

எல்லா குழுக்கள், மற்றும் சமூகங்களிடையேயும் உண்மையான நல்லிணக்கம் அவசியம். அதை அடைவதற்கு கடந்தகால சம்பவங்கள் குறித்த நீதி விசாரணையும், பொறுப்புக் கூறுவதும் முக்கியம்.

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் எழுப்பப்பட்ட பல கேள்விகளை நல்லிணக்க ஆணைக்குழு பெருமளவில் புறக்கணித்திருப்பது வருத்தத்துக்குரியது.

ஆனாலும், நல்லிணக்க ஆணைக்குழு சிறிலங்காப் படையினராலும் விடுதலைப் புலிகளாலும் இழைத்திருக்கக் கூடிய குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.நா நிபணர் குழு அறிக்கை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஆகியன தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர், மற்றும் பொருத்தமான ஐ.நா அமைப்புகளுடன் இணங்கிச் செயற்பட ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் சிறிலங்காவை ஊக்குவிக்கும்.

அனைத்துலக சமூகத்தில் சிறிலங்கா ஒரு செயல்நிலையான நாடு, உண்மையான நல்லிணக்கத்தை நோக்கி- உறுதியான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை நடைமுறைபடுத்துவதற்கான அதன் திட்டத்தை உலகிற்கு காட்டுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது“ என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

ஜெனீவா ஐ.நா முன்றலில் அணிதிரளுமாறு தமிழகத்தில் – சீமான்
பெப்ரவரி 27ஆம் நாள் தொடங்கவிருக்கின்ற ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்களை ஐ.நா முன்றிலில் அணிதிரளுமாறு தமிழகத்தில் இருந்து செந்தமிழன் சீமான் அறைகூவல் விடுத்துள்ளார்.

ஜெனீவாவை நோக்கிய நடை பயணங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள சீமான் அவர்கள், பெப்ரவரி 27ஆம் திகதி முதல் இடம்பெறவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைச் சபையை நோக்கி, சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி, எமது உரிமைக்கான குரலை ஓங்கி ஒலிக்க அனைவரும் அணிதிரள வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

எமக்கான சுவசாத்தை நாமே சுவாசிப்பது போல், எமது விடுதலையை நாமே போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள அவர், ஓடாத மானும் போராடாத இனமும் வென்றெடுத்ததாக சரித்திரம் இல்லை எனும் புதுவை இரத்தினதுரையின் வரிகளுக்கமைய அனைவரும் எழுந்து ஆர்ப்பரித்து ஐ.நா முன்றலில் அணிதிரளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிராக நோர்வேயும் கைகோர்க்கிறது
சிறிலங்காவில் இடம்பெற்ற போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரும் நாடுகளுடன் நோர்வேயும் இணைந்து கொண்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்புக் கூறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக நோர்வேயும் அறிவித்துள்ளது.

நோர்வேயில் இருந்து வெளியாகும் அப்ரென்போஸ்ரன் நாளேட்டுக்கு அந்த நாட்டின் அமைச்சரும், சிறிலங்கா சமாதான முயற்சிகளில் நடுநிலையாளராகப் பங்கேற்றவருமான எரிக் சொல்ஹெய்ம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“சிறிலங்கா அரசாங்கம் போரை வென்றுவிட்டறு , ஆனால் இப்போது அமைதியை வெல்ல வேண்டிய தேவை அதற்கு உள்ளது“ என்றும் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

19வது நாளை கடந்து நாளை 24.02.12 சுவிஸ் நாட்டிற்குள் சென்றடைகின்றது நீதிக்கான நடைப்பயணம்.
அநீதி இழைக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஐநாசபையிடம் நீதி கேட்டு பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் நாளை 24ம் திகதி சுவிஸ் நாட்டிற்குள் பிரவேசிக்கிறது.

பிரான்சில் இருந்து சுவிஸ் பாசல் மாநிலத்தில்  அமைந்துள்ள  St Louis   ( 11ம் இலக்க  Tram     கடைசித்தரிப்பிடம்) எனும் எல்லைப்பகுதியினூடாக பிற்பகல் 15:00 மணியளவில் வந்தடையவுள்ளது. இவர்களை வரவேற்பதற்கும் ஆதரவினை வழங்குவதற்கும் பாசல் மாநில தமிழர்களும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரும் மற்றும் சுவிஸ் நாட்டு தமிழ் மக்களும் அங்கு ஒன்றுகூடவுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் ஊடகம் ஒன்றில் இவர்களது நீதிக்கான நடைப்பயணம் குறித்த செய்தி  பிரசுரமானதை அறிந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்மணி ஒருவர் இவர்களை இன்று சந்தித்து உங்களது இந்த நீதிக்கான நடைப்பயணம் வெற்றி பெற வேண்டும் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

நீராகாரம் ஏதும் இன்றி ஈழத்தமிழர்களுக்கு இந்திய தேசத்திடம் நீதிகேட்டு உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்து காந்தி தேசத்திற்கே அகிம்சையை போதித்த தியாக தீபம் திலீபனின் சிந்தனைப்படி மக்கள் புரட்ச்சி வெடிக்கட்டும் எனவே அன்புக்குரிய தமிழ் உறவுகளே எழுச்சி கொண்ட எந்த ஒரு இனத்தையும் எவராலும் அழித்துவிட முடியாது ஒன்றுபட்ட பலத்துடன் சுதந்திரதாகத்துடன் வீறுகொண்ட மக்களை அடக்கிவிடவும் முடியாது என்பதை மார்ச் 5ம் திகதி ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் ஒருமித்த குரலில் முழக்கமிடுவோம் தாயக உணர்வுடன் திரண்டு வாருங்கள்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக  சுயாதீன விசாரணை ஒன்று தேவை என்பது குறித்த கருத்து லண்டன் பாராளுமன்றத்தில் முன்வைக்கபட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆகவே புலத்தில் வாழுகின்ற உறவுகளே சர்வதேசத்திற்கு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு ஒன்றுபட்டு வாருங்கள்.

ஈரான் போர் ஒத்திகை? இஸ்ரேல் ஜனாதிபதி , ஒபாமா விரைவில் சந்திப்பு.
ஈரானில் அணுசக்தித் திட்டங்களை ஆராய சர்வதேச அணுசக்தி ஏஜென்சி(ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள் குழு இரண்டாவது முறையாக ஈரானுக்குச் சென்ற நிலையில் தற்போது அணு சக்தி திட்டங்கள் குறித்த ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதான்யாகுவை அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசவுள்ளார்.

எனினும் ஈரான் விமான பாதுகாப்பு படை ஒத்திகை நடத்த தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல் அணு சக்தி நிலையங்களின் பாதுகாப்பை அதிகரிக்க பொதுமக்களுக்கு அணுசக்தி நிலையங்களுக்குமான அச்சுறுத்தல்களை முறியடிக்கும் முகமாக தென் ஈரானில் பெருமளவில் இராணுவ பயிற்சிகள் நடத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது ஈரான்.

இங்கிலாந்து – பாகிஸ்தான் இருபது20 சுற்றுப்போட்டி இன்று ஆரம்பம்
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபது20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. முதலாவது போட்டி இந்திய – இலங்கை நேரப்படி இன்றிரவு 9.30 மணிக்கு டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 3-0 விகிதத்திலும் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 4-0 விகிதத்திலும் வென்ற நிலையில் இருபது20 சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் சவீந்திர சில்வாவுக்கு நேர்ந்த அவமானம்!
போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக புதிதாக அமைக்கப்பட்ட அமைதிகாக்கும் நடவடிக்கைகள் குறித்த சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு ஆசிய நாடுகள் குழுவின் சார்பில் தெரிவு செய்யப்பட்டிருந்தார் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா.

எனினும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசனுக்குத் தலைமையேற்ற அவர் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், மதிப்புவாய்ந்த இந்தக் குழுவில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று ஐ.நாவில் கடும் சர்ச்சை எழுந்தது.

இந்தநிலையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அமைதிகாப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் குழு நேற்று முதல் முறையாக கூடியது.

இந்தக் கூட்டத்தில் சிறிலங்காவின் ஐ.நாவுக்கான பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.

கூட்டம் நடைபெற்ற அறையில் அவர் அமர்ந்திருந்த போதும், ஏனைய உறுப்பினர்கள் எவரும் அவருடன் பேசவில்லை.

அத்துடன், ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் எதுவுமே அவருக்கு வழங்கப்படவில்லை என்று இராஜதந்திர வட்டாரங்கள் ஏஎவ்பியிடம் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த ஆலோசனைக் குழுவுக்குத் தலைமை தாங்கும் கனேடிய இராஜதந்திரி முன்னதாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சவீந்திர சில்வா இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது பொருத்தமற்றது என்று கூறியுள்ளார்.

“கவனமாக ஆராயப்பட் டு, ஏனைய ஆலோசனைக்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னர், இந்தக் குழுவின் கூட்டத்தில் பங்குபற்றுவது பொருத்தமானதல்ல என்று சவீந்திர சில்வாவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்“ ஆலோசனைக்குழுவின் தலைவர் லூயிஸ் பிரெச்ரி அம்மையார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் இந்தக் குழுவின் தலைவராக செயற்படும் பிரெச்ரி அம்மையார், ஐ.நாவின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நியுயோர்க்கில் நேற்று நடந்த ஆலோசனைக் குழுவின் இரண்டு மணிநேர கூட்டத்தில் ஓரமாக அமர்ந்திருந்த மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

முகத்தைத் தொங்கப் போட்டபடியே அமர்ந்திருந்து விட்டு வெளியேறிப் போனதாக இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.

சவீந்திர சில்வா இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டதற்கு மனிதஉரிமை அமைப்புகள் கண்டனம் வெளியிட்டிருந்ததுடன், இது தொடர்பாக கவலை வெளியிட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும், பான் கி மூனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த நியமனம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில் ஆசிய நாடுகள் குவில் உள்ள சில நாடுகளும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளும், சவீந்திர சில்வாவை விலக்கிக் கொள்ளுமாறு அதிகாரபூர்வமற்ற வகையில் கூறியிருந்தன.

சிறிலங்கா அந்த ஆலோசனையைப் புறக்கணித்த நிலையிலேயே சவீந்திர சில்வாவுக்கு இந்தக் கதி ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் சாட்சியான ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை
சிறிலங்கா படைகளின் போர்க்குற்றங்களுக்கு சாட்சியாக இருந்தவரும், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் இடையில் தொடர்பாளராக செயற்பட்டவருமான லண்டன் சண்டேரைம்ஸ் ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹோம்ஸ் நகரில் அவர் தங்கியிருந்த வீட்டின் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலேயே ஊடகவியலாளர் மேரி கொல்வினும், பிரெஞ்சு படப்பிடிப்பாளரும் கொல்லப்பட்டுள்ளனர்.

மூன்றாம்கட்ட ஈழப்போரின் இறுதிப்பகுதியில்- 2001 ஏப்ரல் மாதம் வன்னிப் பகுதி நிலவரங்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்த மேரி கொல்வின், வவுனியாவில் முன்னரங்க நிலையைக் கடக்க முயன்றபோது, சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து  ஒரு கண்ணை இழந்திருந்தார்.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்டோருடன் இவர் இறுதிவரை தொடர்பில் இருந்தவர் என்பதுடன் அதுபற்றிய உண்மைகளையும் வெளிப்படுத்தியிரந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.