இந்நேரம்.காம்

அபராதத்தைச் செலுத்தாமல் பயணிக்க முடியாது – கத்தாரில் புதிய விதிமுறை
தோஹா, கத்தார் (23 மே 2024): கத்தார் நாட்டில் வசிப்போருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை, கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் போக்குவரத்து பொது இயக்குநரகம் இன்று புதிய விதிமுறை-யாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி 2024 முதல் சாலை, விமானம் மற்றும் கடல் மார்க்கமாக கத்தாரில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணிப்போர் மீதான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் ஏதும் பெற்றிருந்தால் அதனை முழுமையாகச் செலுத்தாமல் பயணிக்க இயலாது என்று  அறிவித்துள்ளது. (இந்நேரம்.காம்)

உள்துறை அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பிரிகேடியர் அப்துல்லா கலீபா அல் முஃப்தா  இந்தப் புதிய விதிமுறை பற்றி கூறியதாவது:

போக்குவரத்து விதிகளை மீறியோர் தாங்கள் இதுவரை பெற்ற அபராதம் மற்றும் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்தாமல் கத்தார் நாட்டின் எல்லைகளைக் கடந்து செல்ல செப்டம்பர் 1, 2024 முதல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதே சமயம்,  எதிர்வரும் ஜூன் 1, 2024 முதல் அனைத்து சாலை விதிமீறல் அபராதங்களுக்கும் 50% தள்ளுபடியும் அறிவிக்கப் பட்டுள்ளது. வெளியான இன்னொரு விதியின்படி, பேருந்துகள், டாக்ஸிகள் மற்றும் டெலிவரி மோட்டார் பைக்குகள் சாலைகளில் இடது பக்கமுள்ள அதிவேக சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அபராதங்களை Metrash2 செயலி அல்லது உள்துறை அமைச்சக இணையதளம் அல்லது ஒருங்கிணைந்த சேவை மையங்கள் மூலம் எளிதாகச் செலுத்தலாம் என்று அவர் கூறினார்.

நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

பிரமிக்க வைத்த ரியாத் தமிழ்ச் சங்க இரத்த தான முகாம்
ரியாத் (20 மே 2024): ரியாத் தமிழ்ச் சங்கம் கடந்த 17/05/2024 வெள்ளிக்கிழமை அன்று நடத்திய நிகழ்ச்சி,  மன்னர் பஹத் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் “உதிரம் கொடுப்போம்! உயிரைக் காப்போம்! ” என்ற திட்டத்தின் கீழ் இரத்த தான முகாம் (குருதிக் கொடை நிகழ்ச்சி) ஒன்றை மிகச் சிறப்பாக நடத்தி பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

“இரத்ததானம் உயிர்களைக் காக்கும்; இரத்ததான விழிப்புணர்வை அதிகரிப்போம்; தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பான, தரமுள்ள இரத்தம் காலத்தே கிடைப்பதை உறுதி செய்வோம். நாம் அனைவரும் ரத்த தானம் செய்வோம். யாரோ ஒருவருக்காக நாம் இருப்போம்” ஆகிய விழிப்புணர்வுகளை வெறும் பதிவுகளாக கடந்து செல்லாமல் செயலில் சிறப்பாக நடத்திக் காட்டியுள்ளது ரியாத் தமிழ்ச் சங்கம்.

கடந்த 20 வருடங்களாக சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் தமிழின் வளத்திற்காகவும், தமிழர் நலத்திற்காகவும்  சிறப்பாகச் செயல்பட்டு வரும் அமைப்பு ரியாத் தமிழ்ச் சங்கம். (இந்நேரம்.காம்)

ரியாத் தமிழ்ச் சங்கத்தில் (2024-2025) ஆண்டுக்கான புதிய உயர்நிலைக் குழு பொறுப்பேற்றுக் கொண்டது. இதனை அடுத்து தனது முதல் நிகழ்வாக, சமூக அக்கறையைக் கருத்தில் கொண்டு 17/05/2024 (வெள்ளிக்கிழமை) அன்று மன்னர் பஹத் மருத்துவமனை வளாகத்தில் – “உதிரம் கொடுப்போம்! உயிரைக் காப்போம்! ” என்ற திட்டத்தின் கீழ் இரத்த தான முகாம்

(குருதிக் கொடை நிகழ்ச்சி) ஒன்றை மிகச் சிறப்பாக நடத்தி பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை இந்தியத் துணை தூதர் மேதகு அபு மாதேன் ஜார்ஜ் (Hon’ble Abu Mathen George, DCM, Embassy of India, Riyadh) அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்பித்ததுடன் இரத்ததானமும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுநல அமைப்புகளைச் சார்ந்த சகோதரர்கள் திரு. மீமிசல் நூர் முஹம்மது – IWF, திரு. மீராசாஹிப், திரு. செய்யது ஷபியுல்லாஹ் – RKWA மேலும் கிட்டத்தட்ட 84 சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர். ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடையும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து ரியாத் தமிழ்ச் சங்கம் தனது மகிழ்வினை நன்றியோடு தெரிவித்து பின் வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது:

இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்த திருமதி. இந்திரா வெற்றிவேல், திருமதி. சுபத்ரா மாதவன், சிறுமிகள் ஷபானா, ருமானா உள்ளிட்ட மற்ற சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மன்னர் பஹத் மருத்துவமனை இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் Ms. Noura மற்றும் அவர்களின் குழுமத்தினர் அனைவரும் அனுசரணையோடும் அன்போடும் பணியாற்றினார்கள் என்பதைக் கூறுவதிலும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த பாலை வெயிலில் தனது அன்பளிப்பாக காலை உணவாலும், குளிர்பானத்தாலும் நம் உடலைப் புத்துணர்வு கொள்ளச் செய்த DOSA Corner நிறுவனத்தார்க்கும் எங்கள் இதய நன்றி.

வந்தோர் அனைவரையும் படம் எடுக்க அழைத்த போதெல்லாம் சோர்வடையாமல் படம் பிடித்து அதை அதிவிரைவு முறையில் குருதிக்கொடை சான்றிதழாய்ப் பதிவேற்றம் செய்த திரு. முஹம்மது ஸெயித் அவர்களுக்கும் இம்மன்றத்தின் தலைவர் திரு. ஹைதர் அலி மற்றும் செயலாளர் திரு. சரவணன் சோமசுந்தரம் மற்றும் உயர்மட்டக்குழுவின் மேற்பார்வையில், சமூக சேவைக்குழுவுடன் இணைந்து நிகழ்ச்சி சிறப்பாக அமைய திறம்பட ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்ட திரு. இர்ஷாத் இப்ராஹிம், திரு. மாதவன், திரு. அபூபக்கர் சித்திக் அவர்களுக்கும், மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு அளித்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி.

இவ்வாறு ரியாத் தமிழ்ச் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

பறக்கும் டாக்ஸி கத்தாரில் அறிமுகம்!
தோஹா, கத்தார் (19 மே, 2024): பேட்டரியில் இயங்கும் பறக்கும் டாக்ஸி-களின் சேவை, கத்தார் நாட்டில்  விரைவில் துவங்க உள்ளது. அதன் முன்னோட்டமாக, அடுத்த ஆறு மாதங்களுள், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டாக்ஸிகள் பறக்கத் துவங்கும் என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் நிகழும் சுற்றுச்சூழல் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு பல்வேறு உத்திகளை நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது கத்தார்.

கத்தாரில் ஏற்கனவே பெட்ரோல் டீஸலில் இயங்கும் கனரக வாகனங்கள் நீக்கப்பட்டுள்ளன. நாட்டில்  75 சதவீத பேருந்துகள், சுற்றுச்சூழலுக்கு மிகக் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் பேட்டரியில் இயங்கி வருகின்றன. எதிர்வரும் 2030 க்குள் கத்தாரில் பெட்ரோல் டீஸல் இன்றி முழுக்க முழுக்க பேட்டரி மூலம் மட்டுமே அனைத்து கனரக வாகனங்களும் இயங்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

பேட்டரிகளுக்குத் தேவையான மின்சாரத்தை சோலார் பேனல்கள் மூலம் உருவாக்கிட பெரும் ஆலைகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு செயல்வடிவத்திற்கு வந்துள்ளன.

இந்நிலையில், பறக்கும் டாக்ஸி-களுக்கான சோதனை ஓட்டங்களைத் தொடர, தொடர்புடைய அரசின் அனைத்து கிளைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளது. AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த டாக்ஸிகள் பறக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இத்தகைய பல்வேறு கவர்ச்சியான திட்டங்களின் மூலம் சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்க்கவும், அதன் மூலம் கத்தார் நாட்டிற்கு வருமானத்தை ஈட்டவும் இயலும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

– நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

மழை வெள்ளத்தால் மூழ்கிய ஓமான் மற்றும் துபாய்!
மஸ்கட், ஓமான் (17 ஏப்ரல் 2024):  ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இல் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. ஓமானில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கியதால் இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். விமானங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் பருவ நிலை மாற்றம் காரணமாக அசாதாரண சூழல் நிலவுகிறது. சூறைக்காற்று, புயல், மழை என கடந்த இரு நாட்களாக வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஓமானில், நேற்று 16 ஏப்ரல் 2024 செவ்வாய் கிழமையன்று ஏற்பட்ட மழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக குறைந்தது ஒன்பது பள்ளிக் குழந்தைகள் மற்றும் அவர்களது ஓட்டுனர்கள் இறந்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், காணாமல் போன இருவரை மீட்புக் குழுக்கள் இன்னும் தேடி வருவதாக அவசரகால மேலாண்மைக்கான தேசியக் குழு தெரிவித்துள்ளது.

ஓமானில் பல மாகாணங்களில் மோசமான வானிலை காரணமாக பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள நிர்வாக ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுமுறை அளித்துள்ளது. (இந்நேரம்.காம்)

அதே நேரத்தில் சுல்தானகத்தின் பிற பகுதிகளில் ஆன்லைன் மூலம் வேலை செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மக்கள் வசிக்கும் இடங்களில் நீர் சூழ்ந்து ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தால், தாமதமின்றி உடனடியாக தங்குமிடங்களை விட்டு வெளியேறுமாறு அரசால் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெள்ளம்

இதற்கிடையில், அதே நாளன்று அண்டை நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பலத்த மழை பெய்தது. இதனால் துபாயின் முக்கிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.

பலத்த புயல் காற்று மற்றும் பெருமழை காரணமாக, துபாயின் சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையின்படி, புயலுக்கு முன்னதாகவே நாடு முழுவதும் அறிவிப்புகள் செய்யப்பட்டு பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், பெரும் விபத்துகளும் உயிர் சேதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.

அரசாங்க ஊழியர்கள் ஆன்லைன் மூலம் பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு நிறுவனங்கள் தத்தம் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளன.

வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து கடுமையாக  பாதிக்கப்பட்டதால், டேங்கர் லாரிகள் மூலம் நெடுஞ்சாலைகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில், துபாயில் மட்டும் 142 மிமீ (5.59 அங்குலம்) மழை கொட்டித் தீர்த்துள்ளது.

இது தவிர, பஹ்ரைன், மற்றும் சவுதி அரேபியாவிலும் இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

ஆன்லைன் மோசடியைத் தடுக்க கத்தாரில் “ஹிம்யான்” கார்டு அறிமுகம்!
தோஹா, கத்தார் (08 ஏப்ரல் 2024) : கத்தார் அரசின் மத்திய வங்கியான Qatar Central Bank  (Himyan) ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கத்தார் நாட்டில் ஆன்லைன் மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளில் மோசடி நடப்பதைத்  தடுக்கவும், Mastercard & Visa போன்ற ஜாம்பவான்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடவும் இந்த புதிய தொழில் நுட்பத்தை கத்தார் நாடு அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஹிம்யான் கார்டு முழுக்க கத்தார் நாட்டு தொழில் நுட்பத்தில் செயல்படும் டெபிட் கார்டாக இருக்கும். இதன்மூலம் எவரும் Scam மூலம் பணம் திருடப்படும் எனும் அச்சம் இன்றி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டு என்றால் என்ன?

ஹிமியான் கார்டு என்பது கத்தார் நாட்டின் முதல் தேசிய ப்ரீபெய்ட் கார்டு ஆகும்.  இந்த அட்டையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் கத்தாருக்குள் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களிலும், ஏடிஎம்களிலும், உள்ளூர் ஷாப்பிங் இணையதளங்களிலும் தயக்கமோ பயமோ இன்றி தாராளமாகப் பயன்படுத்தலாம்.

ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டில் ஒருவர் எப்படி பணத்தை ஏற்றுவது / மீண்டும் ஏற்றுவது?

வாடிக்கையாளர்கள் தங்களது தற்போதைய வங்கிக் கணக்கிலிருந்து கார்டில் பணத்தை ஏற்றலாம்.  அல்லது வங்கியின் இணைய தளம் மூலமோ வங்கியின் மொபைல் ஆப் மூலமோ, ஏடிஎம் மூலமோ பணத்தை ஏற்றலாம்.

ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டில் என்ன கரன்சியை ஏற்றலாம்?

வாடிக்கையாளர்கள், கத்தார் ரியாலை மட்டுமே ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டில் ஏற்ற முடியும். அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு கரன்ஸிக்கு அனுமதியில்லை.

ஹிமியான் கார்டில் அதிகபட்ச இருப்பு எவ்வளவு?

கத்தார் ரியால் 30,000 வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டு மூலம் ஒருவர் என்ன வகையான பரிவர்த்தனைகளை செய்யலாம்?

வாடிக்கையாளர்கள், கத்தாருக்குள் உள்ள அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள், விற்பனை நிலையங்கள், ஏடிஎம்கள் ஆகியவற்றில் பாதுகாப்பாகப் பண பரிவர்த்தனை செய்ய இயலும். (inneram.com)

கத்தாருக்கு வெளியே வேறு நாடுகளில் ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டைப் பயன்படுத்தலாமா?

இல்லை, தற்போதைக்கு இந்த வசதியை கத்தாருக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டுக்கு தினசரி பரிவர்த்தனை வரம்பு ஏதேனும் உள்ளதா?

ஆம், தினசரி கத்தார் ரியால் 10 ஆயிரம் வரை ஆன்லைனின் வர்த்தகம் செய்யலாம்.

ஹிமியான் ப்ரீபெய்ட் அட்டையை ஒருவர் எப்படிப் பெறுவது?

வாடிக்கையாளர்கள் தங்களது ஆன்லைன் பேங்க் மூலமோ, ஆப் மூலமோ விண்ணப்பித்து, அதற்கென அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மூலம் உடனடியாக அச்சிட்டு பெற்றுக் கொள்ளலாம்.

ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டை பயன்படுத்த ஏதேனும் கட்டணம் உள்ளதா?

ஆம், சிறிய சேவைக் கட்டணம் உள்ளது. கட்டணங்கள் பற்றிய விவரங்களுக்கு, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் இணையதளம் அல்லது ஆப்-ஐ அணுகவும்.

நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

பிச்சை எடுத்தால் சிறைத் தண்டனை – கத்தார்
தோஹா, கத்தார் (15 மார்ச் 2024): கத்தார் நாட்டில் எவராவது பிச்சை எடுப்பதைக் கண்டால் உடனடியாக பொதுமக்கள் புகார் அளிக்குமாறு கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் (MoI) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கத்தார் நாட்டில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும். கத்தாரில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் உட்பட அனைவருக்கும் அடிப்படை வாழ்க்கைக்கான தேவைகள் அனைத்தும் உரிய முறையில் கிடைத்திட கத்தார் அரசு வழி செய்துள்ளது.

இருப்பினும், கத்தாருக்கு வருகை தரும் வெளிநாட்டினர் சிலர் பிச்சைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ரமலான் மாதத்தில் இது பன்மடங்காக அதிகரித்துள்ளது.

“பிச்சை எடுப்பது இஸ்லாமிய மார்க்கத்திலும் முஸ்லிம் சமூகத்திலும் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட தீய பழக்கம்” என்றும்  “இது மனித நாகரீகமற்ற செயல்” என்றும் சமூக ஊடகங்களில் Ministry of Interior (MOI) அறிவித்துள்ளது. கத்தார் நாட்டில் எவராவது பிச்சை எடுப்பதைக் கண்டால் உடனடியாக புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் (MoI) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்நேரம்.காம்)

பொது மக்களின் இரக்க குணத்தைப் பயன்படுத்தி, சட்ட விரோதமாக முழு நேரமாக பிச்சைத் தொழிலில் ஈடுபட்டு பலர் பெரும் பணம் ஈட்டுவதை கத்தார் அரசு கண்காணித்து கைது செய்து வருகிறது.

மேலும், கத்தார் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் ஜகாத் அல்லது நன்கொடைகளை வசூலிப்பதற்காக செயல்பட்டு வருகின்றன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த  தொண்டு நிறுவனங்கள் மூலம் மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டும் என்பதை அமைச்சகம் மக்களுக்கு தொடர்ந்து நினைவூட்டி வருகிறது.  இவை அல்லாமல் வேறு நிறுவனங்களோ, தனி நபர்களோ வசூல் செய்தால், அது சட்டப்பட்டி குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிச்சை எடுப்போர் தொடர்பாக புகாரளிக்க தனித் துறை அமைக்கப்பட்டுள்ளது. மெட்ராஷ்2 (Metrash2) ஆப் மூலமாகவோ அல்லது பின்வரும் எண்களை அழைப்பதன் மூலம் இத்துறையைத் தொடர்பு கொள்ளவும்: 2347444 / 33618627.

– நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

கூகுள் தொழில் நுட்பத்தில் கலக்கும் ஓமன் 360 விர்ச்சுவல் டூர்!
மஸ்கட் (05 மார்ச் 2024): ஓமன் நாட்டின் அனைத்து சாலைகளையும், சுற்றுலா தளங்களையும் 360 டிகிரி விர்ச்சுவல் டூர் வியூவில் மேம்படுத்தி வருகிறது ஓமன் அமைச்சகம்.

ஓமன் நாட்டின் போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (எம்.டி.சி.ஐ.டி.) மேற்பார்வையுடனும், ஓமனின் தேசிய ஆய்வு ஆணையம் மற்றும் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடனும் ஓமன் நாட்டின் அனைத்து சாலைகளையும் விர்ச்சுவல் வியூவில் அமைக்கும் அதிநவீன தொழில் நுட்பத்திற்கான திட்டத்தை கூகுள் செயல்படுத்தி வருகிறது.

இதற்கான பணிகள் ஏற்கனவே கடந்த பிப்ரவரி 2024 இல் தொடங்கப்பட்டு விட்டது. இப்பணி அடுத்த ஆண்டு 2025 நிறைவடையும்.

இத்திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.

முதல் கட்டத்தில் ஓமன் நாட்டின் முக்கிய நகரங்களான மஸ்கட், சோஹார் மற்றும் சலாலா ஆகியவை 360 டிகிரி விர்ச்சுவல் வியூ ஆகிறது. இரண்டாவது கட்டத்தில், ஓமனில் உள்ள மற்ற மாநிலங்கள் மேம்படுத்தப்படும்.

இந்த நவீன தொழில் நுட்பத்தில் ஓமன் நாட்டில் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் நகரங்களை எவரும் 360 டிகிரி விர்ச்சுவல் டூர் இல் கண்டு மகிழ இயலும். (இந்நேரம்.காம்)

சர்வதேச சுற்றுலா பயணிகள் ஓமன் நாட்டுக்கு வருகை தருவதை இந்த திட்டம் பெருமளவில் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஓமன் நாட்டில் எந்த ஒரு பகுதியைப் பற்றியும் அறிய விரும்பும் ஒரு சுற்றுலா பயணி, அந்த இடத்திற்குச் செல்வதற்கு முன்னதாக விர்ச்சுவலாக பயணித்து கண்டு முடிவு செய்ய இயலும். அதன் மூலம் சுற்றுலா பயணிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிட முடியும்.

மேலும், ஆய்வு மாணவர்கள் மற்றும்  புள்ளி விபர ஆய்வாளர்கள்,  அறைக்குள் இருந்தபடியே ஓமன் நாட்டின் எந்த ஒரு சுற்றுலா தலத்தையும் விர்ச்சுவல் விசிட் செய்து கற்றல், பொழுதுபோக்கு மற்றும் தகவல்களுக்கான சுற்றுலா இடங்கள் மற்றும் முக்கியமான இடங்களை ஆராயவும் அனுபவிக்கவும் முடியும்.

விருப்பமுள்ள பகுதிகள் எவை என ஒருவர் கண்டு உணர்ந்து ஆய்ந்து கொள்ள முடிவதால், இது பெருமளவு நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தலாம் என ஓமன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

சவூதியில் பன்மடங்கு உயர்கிறது ஊதியம் – பணியாளர்கள் மகிழ்ச்சி!
ரியாத் (21 பிப்ரவரி 2024): சவுதி அரேபியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பன்மடங்கு ஊதிய உயர்வு கிடைக்கும் என சவூதியில் என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி எண்ணெயை நம்பியிருக்கும் நாடு ஆகும். சமீப காலமாக எண்ணெய் உற்பத்தியை மட்டுமே நம்பி இராமல் சுற்றுலா, தொழில்துறை மேம்பாடு, உள்நாட்டு தயாரிப்புகள் போன்ற பல்வேறு காரணங்களால் பொருளாதாரத்தை பன்மடங்கு பெருக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதனால் திறமையான தொழிலாளர்களுக்கான தேவை சவூதியில் அதிகரித்துள்ளது.

சவுதியின் நியோம் சிட்டி (Neom City) கட்டுமானம் மற்றும் ஆட்சேர்ப்பு நிபுணரான கூப்பர் ஃபிட்சின் நுண்ணறிவுகளின்படி, $500 பில்லியன் நியோம் நகரம், செங்கடல் திட்டம் மற்றும் அல்உலா போன்ற முக்கிய திட்டங்களுக்குத் திறமையான நபர்கள் தேவைப்படுகின்றனர். (இந்நேரம்.காம்)

“இதனால் சவுதி அரேபியா கணிசமான சம்பள உயர்வுக்கு தயாராகி வருகிறது, 2024 ஆம் ஆண்டில் மட்டும் சராசரியாக 6% ஊதியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று நியோம் சிட்டி அப்டேட்ஸ் தெரிவித்துள்ளது.

ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், சவுதி அரேபியா ஐந்து புதிய விசா வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக திறமையான தொழில் வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டத்தினை சவூதி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வகைகளில் சிறப்புத் திறமை, திறமையானவர்கள், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் ஆகியோருக்கான விசாக்கள் அடங்கும்.

– நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இந்தியர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது கத்தார்!
கத்தார் (12 பிப்ரவரி 2024): இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் கூறி மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருந்த எட்டு இந்திய உளவாளிகளை கத்தார் அரசு விடுவித்தது. இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, இந்த விடுதலையை அளித்தமைக்கு இந்திய அரசு நன்றி தெரிவித்துள்ளது.

நடந்தது என்ன?

கத்தாரில் இயங்கி வரும் நிறுவனம் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் (Dahra Global Technologies & Consultancy Services W.L.L). இது, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கத்தார் நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான ஆலோசனை மற்றும் தரக்கட்டுப்பாடு செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் சமீபத்தில் இணைந்த எட்டு இந்தியர்கள் பணியாற்றி வந்தனர். (இந்நேரம்.காம்)

கத்தாரின் நீர்மூழ்கிக் கப்பல்களில், நவீன ரேடார் கண்டறிதலைத் தவிர்க்கக்கூடிய உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. இதன் மூலம், நீர் மூழ்கிக் கப்பல்கள் இருப்பது ரேடாரின் கண்களுக்குத் தெரியாது.

இஸ்ரேலுக்கு உளவு:

இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதாக காட்டிக் கொண்ட இந்திய உளவாளிகள் எட்டு பேர், இஸ்ரேல் நாட்டிற்கு இந்த ரகசியங்களைக் கசிய விட்டனர். இஸ்ரேல் நாட்டிற்கு உளவு பார்த்த, எட்டு உளவாளிகளையும் கத்தார் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இதையடுத்து மேற்கண்ட தனியார் நிறுவனம் மூடப்பட்டது.

இந்நிலையில்தான் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் கூறி மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை கத்தார் விடுதலை செய்துள்ளது. இதில் ஏழு பேர் ஏற்கனவே இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.

மரண தண்டனை:

கத்தார் நாடு தயாரிக்கும் போர் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான முக்கியமான தகவல்களை இஸ்ரேலிய உளவுத்துறைக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் காரணமாக, ஆகஸ்ட் 2022 இல் இந்திய உளவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதன் அடிப்படையில் காவல்துறையின் விசாரணையும், நீதிமன்ற வழக்கும் நடந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு கத்தார் நாட்டின் நீதிமன்றம், இந்திய உளவாளிகள் எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்தது. இது, இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. (இந்நேரம்.காம்)

அதனைத் தொடர்ந்து இந்தியா, இவ்வழக்கில் உளவாளிகளின் மீதான மரண தண்டனையை ரத்து செய்யவும், அவர்களின் விடுதலைக்காகவும் கத்தார் நாட்டை வேண்டிக் கொண்டது.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் கோரிக்கையைப் பரிசீலித்த கத்தார் அரசு, கடந்த 2023 டிசம்பரில் இந்திய உளவாளிகளின் மரண தண்டனையை சிறைத் தண்டனையாக மாற்றி ஆணை பிறப்பித்தது.

உளவாளிகளுக்கு விடுதலை:

தொடர்ந்த இந்தியாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப, சில நிபந்தனைகளின் பேரில் உளவாளிகள் எட்டு பேரின் சிறைத் தண்டனையும் ரத்து செய்தது கத்தார் அரசு.

அவர்களில் ஏழு பேர் ஏற்கனவே இன்று (12-02-2024) இந்தியா திரும்பிவிட்டனர். எட்டாவது நபரின் விடுதலைக்கான நிபந்தனைகள் அல்லது வழக்கின் தற்போதைய நிலை பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

நன்றி தெரிவித்த இந்தியா:

இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் (MEA) 12-02-2024 திங்களன்று கத்தார் நாட்டின் அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

“வேண்டுகோளை ஏற்று இந்தியர்களை விடுவித்ததற்கும், அவர்களைப் பாதுகாப்பாக நாடு திருப்பி அனுப்பி வைத்தமைக்கும் கத்தார் அரசின் அமீர் எடுத்த முடிவை நாங்கள் பாராட்டுகிறோம்” என இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் புதுதில்லியில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்திய மற்றும் அரபு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இருந்தது. அரசியல் ரீதியாக இது பெரிதும் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வந்தது. ராணுவ ரகசியங்கள் தொடர்பான உளவு, துரோகம் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும், இந்தியாவின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து விடுதலை செய்ததன்மூலம் கத்தார் நாடு உலகமெங்கும் பாராட்டுக்களைப் பெற்று வருவது குறிப்பிடத் தக்கது.

நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

ஆலங்கட்டி மழை-யால் அண்டார்டிகா ஆக மாறிய துபாய்! (வீடியோ)
துபாய் (12 பிப்ரவரி 2024): ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய்க்கு அடுத்து உள்ளது அல் ஐன். இங்கே வசிக்கும் மக்கள் இன்று அதிகாலை திங்கள்கிழமை விழித்து எழுந்தபோது ஆலங்கட்டி மழை கண்டு, மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தனர்.

நேற்று இரவு முழுவதும் பலத்த மழை, இடி மின்னலோடு ஆலங்கட்டி மழை-யும் பெய்தது.  இந்த கனமழையால் அபுதாபி, ராசல் கைமா மற்றும் புஜைராவின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின.

அல் ஐனில் நேற்று இரவு பெய்த ஆலங்கட்டி மழையால், பாலைவனப் பிரதேசமான அல் ஐன் தெருக்கள் அண்டார்டிகா போன்று பனிப்பிரதேசம் ஆக மாறியது. (இந்நேரம்.காம்)

View this post on Instagram

A post shared by مركز العاصفة لمراقبة الطقس والتغير المناخي المؤسس omar alnauimi (@storm_ae)

தெரு முழுக்க வெள்ளை நிறத்தில் பனிப்படலம் சூழ்ந்துள்ளதை அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் வீடியோவாக பதிந்தது சமூக வலைத் தளத்தில் வைரலாக ஆகி வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை மையம், ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் பிப்ரவரி 12 ஆம் தேதி நாள் முழுவதும் மழை தொடரும் எனவும், எதிர் வரும் நாட்களில் வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியாக மாறும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வாகன ஓட்டிகளுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து,  அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வீட்டில் இருந்தவாறே பணியாற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சில கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)