Karundhel.com

Muthu Engira Kaattaan (2026) – Tamil
இந்த சீரீஸ் எனக்கு மிகவும் பிடித்ததுபற்றி எழுதுவதாக இரண்டு வாரங்கள் முன்னால் ஃபேஸ்புக்கில் சொன்னேன். ஆனால் உடனேயே இடைவிடாத சில பயணங்கள் அமைந்ததால் எதுவுமே எழுத முடியவில்லை. இப்போதுதான் நேரம் கிடைத்தது.

இந்த சீரீஸ் வெளியானதும் ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்களைப் பார்த்தேன். ஆனாலும் சீரீசை எப்படியாவது பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். காரணம் அதன் இயக்குநர் காக்காமுட்டை மணிகண்டன்.  அவரது கடைசி விவசாயி எனக்கு மிகப்பிடித்த தமிழ்ப்படங்களில் ஒன்று. இதுவரை மணிகண்டன் என்னை ஏமாற்றியதில்லை.

சீரீசைப் பார்த்ததும்தான் எனது எண்ணம் சரி என்று புரிந்துகொண்டேன். ஏன் என்று விரிவாகச் சொல்கிறேன்.

கடந்த பல ஆண்டுகளாக, Slow doesn’t mean uninteresting என்பதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். ஒரு திரைப்படமோ சீரீசோ மெதுவாக நகர்ந்தாலேயே அது மோசம் என்று ஆகிவிடாது. வீடு, கடைசி விவசாயி, கூழாங்கல் ஆகியவை தமிழில் ஒரு சில உதாரணங்கள். ஆனால் வேகமான படங்கள், சீரீஸ்கள் பார்த்தே பழகிய நமக்கு மெதுவாக ஒரு narrative சென்றால் உடனே அது மொக்கை என்று தோன்றிவிடுகிறது. எல்லாமே வேகமாகவே இருக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கத் துவங்கிவிட்டோம். இந்தியாவையும் (அதன் அண்டை நாடுகளையும்) அமெரிக்காவையும் தவிர உலகின் பிற நாடுகளில் இந்த மெதுவாக நகரும் படங்களையுமே அவர்கள் பார்த்து ரசிக்கவே செய்கிறார்கள். குறிப்பாக ஐரோப்பா முழுதுமே அவர்களின் மிகச்சிறந்த திரைப்படம்/ சீரீஸ் என்று எடுத்துக்கொண்டால் அவை மெதுவாகவேதான் நகரும்.

எனவே கமர்ஷியல் என்ற வகையின்கீழ், வேகமாகவும் மெதுவாகவும் நகரும் படைப்புகள் ஏராளமாக உள்ளன என்று நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். இது புரியவில்லை என்றால் சற்றே மெதுவாக நகரும் எந்தப் படைப்பு வந்தாலும் அதை நக்கலடித்துக்கொண்டே, அதேசமயம் ரசனையில் கொஞ்சம் கூட வளராமல் குண்டுசட்டிக்குள்ளேயே அமர்ந்து வேகமாக செல்லும் ரீல்கள் பார்த்துக்கொண்டே குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

நீங்கள் வேண்டுமானால் இதைப் பரிசோதித்துப் பார்க்கலாம். சிறந்த ஐரோப்பியப் படங்கள், சீரீஸ்கள் என்று தேடிப் பாருங்கள். இந்திய அளவில் உலகவிருது பெற்ற பல திரைப்படங்கள் மெதுவாகவே நகரும். காரணம் அவற்றில் ஒரு வாழ்வியல் சொல்லப்படும். ரஷோமான் மெதுவான படமே. சத்யஜித் ரேயின் திரைப்படங்கள், ரித்விக் கடக் படங்கள், ஷ்யாம் பெனகல் படங்கள், பாலு மகேந்திரா படங்கள் என்று எதனை எடுத்துக்கொண்டாலும் இப்படியே.

உடனே காட்டான் சீரீசை உலக சீரீஸ் என்று நான் சொல்கிறேன் என்று வரக்கூடாது. காட்டான் ஒரு நல்ல கமர்ஷியல் சீரீஸ். மணிகண்டனின் பாணியில் வெளிவந்திருக்கும் சீரீஸ். அதில் சில குறைகள் அவசியம் உண்டு. ஆனால் அது அறவே ஒதுக்கவேண்டிய சீரீஸ் இல்லை. மணிகண்டன், உலக அளவில் வெளியாகியிருக்கும் பல படைப்புகளை ஆழமாகப் பார்த்து வந்திருக்கிறார். அவரது திரைப்படங்கள் பாணியில் ஒரு கதையை சொல்லியிருக்கிறார். அதுதான் முத்து என்கிற காட்டான்.

இந்த சீரீசின் கதை, நான் லீனியராக, முன்னும் பின்னும் சொல்லப்படுகிறது. சீரீசின் துவக்கத்தில் ஒரு தலை ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படுகிறது. அந்தக் கிராமத்தின் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தக் கேசும் வராமல், அந்த ஸ்டேஷனையே கலைக்கும் நிலை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தலை கண்டெடுக்கப்பட்டதால் அதைப் பற்றிய விசாரணை துவங்குகிறது. விசாரணையில் அந்தத் தலை முத்து என்ற நபரின் தலை என்பது சிறுகச்சிறுகப் புரிகிறது. சிடிசன் கேன், ரஷோமான், Woman in Question (அந்தநாள்) போன்ற திரைப்படங்கள் எப்படி நான் லீனியராக ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் பல்வேறு குணாதிசயங்களைச் சொல்லிக்கொண்டு வந்தனவோ அந்தப் பாணியில் முத்து என்கிற காட்டானில் முத்து என்கிற கதாபாத்திரத்தின் பல்வேறு அம்சங்கள் சொல்லப்படுகின்றன.

இந்த சீரீசின் ப்ளஸ் பாயிண்ட் இப்படிச் சொல்லப்படும் கிராமம் சார்ந்த பின்னணியில் இடம்பெறும் கதையும் கதாபாத்திரங்களும்தான். இது ஒரு மர்டர் மிஸ்டரி இல்லவே இல்லை. ஒரு நீண்ட பயணத்தில் இடம்பெறும் பல்வேறு கதாபாத்திரங்கள் மூலமாகக் கோர்க்கப்படும் கதை என்ற பாணியில்தான் இந்த சீரீஸ் எடுக்கப்பட்டிருக்கிறது. கடைசி விவசாயி போல இதிலும் மிகவும் சுவையான கிராமத்துக் கதாபாத்திரங்கள், நகரத்து மாந்தர்கள் ஆகியோர் வருகிறார்கள். ஒரு நாவலில் இடம்பெறும் பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை எப்படிச் சொல்லப்படுகிறதோ அதுதான் முத்து என்கிற காட்டானிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

லோக்கல் போலீஸ் காளைப்பாண்டியன் ஒரு நல்ல உதாரணம். போலீஸ் கான்ஸ்டபிளாக மட்டும் இல்லாமல், அந்த கிராமத்தில் அவருக்கு என்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. ஏராளமான ஆடுகளை வைத்துக்கொண்டு அவற்றின் மூலமாக வரும் வருமானத்தையும் வைத்து, அந்த கிராமத்திலேயே வாழ்ந்துவிடவேண்டும் என்ற ஆசை உடையவர். அவருக்கு மனைவி மூலமாக ஒரு குடும்பப் பிரச்னை வருகிறது. முத்து யார் என்று தேடும் பயணத்தில் இந்தப் பிரச்னையையும் அவர் சேர்த்தே சமாளிக்கிறார். வடிவேல் முருகன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது மனைவியாக வரும் விஜே பாருவும் நல்ல நடிப்பையே கொடுத்திருக்கிறார்.

இந்த கிராமத்து போலீஸ் டீமில் நடித்திருக்கும் அனைவருமே இயல்பாகப் பொருந்தியிருக்கிறார்கள். தங்கமுடியாக வந்திருக்கும் சிங்கம்புலி பற்றிச் சொல்லவே வேண்டாம் – இன்ஸ்பெக்டராக வரும் வேட்டை முத்துக்குமாருடன் சேர்ந்து கேரளா முழுக்கச் சுற்றும் sidekick கதாபாத்திரம் இவருக்கு. இன்ஸ்பெக்டரை நன்றாகப் புரிந்துகொண்ட கதாபாத்திரம். இவருக்கு எப்படியாவது அந்தக் கிராமத்தில் இருந்து வெளியேறி நகரத்துக்குச் சென்றுவிடவேண்டும் என்ற ஆசை. இவர்களது கேரளா பயணத்தில் இன்ஸ்பெக்டரைப் புரிந்துகொண்டு அவருக்காகக் கூடவே இருந்து பார்த்துக்கொள்ளும் வேலை. கூடவே இந்தக் கேஸ் பற்றி அவ்வப்போது முக்கியமான தகவல்களை நினைவுபடுத்தும் வேலை.

எப்போது பார்த்தாலும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டு, கெத்தாகவே திரியும் இன்ஸ்பெக்டராக வேட்டை முத்துக்குமார். பயங்கரமான நடிப்பு. மிக வித்தியாசமான கதாபாத்திரம். அவருக்கு ஜாலியாக சரக்கடிக்கவும் பிடிக்கும் – அதேசமயம் கேஸ் என்று வந்துவிட்டால் அடியாழம் வரை சென்று துழாவி உண்மைகளைக் கண்டுபிடிக்கவும் முடியும். இன்ஸ்பெக்டருக்கே உரிய ஒரு உடல்மொழி, திமிர், தைரியம் ஆகியவற்றை அருமையாகக் கையாண்டிருக்கிறார். யோவ் கோல்டன் ஹேர் என்று தங்கமுடியை மப்பில் அழைப்பதில் இருந்து, விசாரிக்கும் ஒவ்வொரு நபருடன் பழகும் விதமான உடல்மொழியுடன் பிரமாதப்படுத்திவிட்டார் இவர்.

இந்தப் போலீஸ் அணியைப் பார்த்தால் பஞ்சாயத் சீரீசில் வரும் கதாபாத்திரங்களைப் பார்க்கையில் ஒரு ஃபீல் குட் உணர்வு வருமே? அப்படி இருக்கிறது.

தமிழ்நாடு, கேரளா என்று தொடர் பயணத்தைப் போலீஸ்காரர்கள் செய்கையில் காட்சிகள் இடம்பெறும் பின்னணி, அதில் வரும் கதாபாத்திரங்கள் ஆகியவை வித்தியாசமாகவே இருந்தன.  இவற்றிலும் ஃபீல் குட் உணர்வு நன்றாகவே சொல்லப்பட்டிருந்தது.

இதேபோல் அந்த நடனக்குழுவில் வரும் அனைவருமே சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேல் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம். சார்லி திரைப்படத்தின் துல்கர் சல்மான் போல unpredictableஆன ஒரு கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. எந்தக் காரணமும் இல்லாமல் மனம் போன போக்கில் கடைசி விவசாயியில் வரும் ராமையா கதாபாத்திரம் போல ஊர் ஊராக அலைகிறது. அதாவது, அப்படித்தான் அதைக் கொண்டுசெல்கிறார்கள். போகப்போக, சிறுகச்சிறுக முத்து பற்றி நாம் தெரிந்துகொள்ளும் ஒவ்வொரு தகவலும் பின்னால் அந்தக் கதாபாத்திரம் ஏன் அப்படி அலைந்து திரிந்தது என்று நமக்குப் பல கதைகளைச் சொல்கின்றன.

இப்போது கதையின் ஒருசில நெகட்டிவ் பாயிண்ட்களுக்கு வருவோம்.

கதை அருமையான ஒரு பயணமாகச் சென்றுகொண்டிருந்தபோது, முத்து கதாபாத்திரத்தின் பின்னணி நமக்குத் தெரியவரும் காட்சிகள் – மிலிந்த் சோமன் இடம்பெறும் காட்சிகள் – சுவாரஸ்யமாக இல்லை. அந்த இடம் வரும்வரை ஒரு நல்ல பயணமாகச் சென்றுகொண்டிருந்த கதை, இந்த இடத்தில் இருந்து ஒரு திட்டமிடப்பட்ட பயணமாக மாறுகிறது. அந்த இடத்தில் ஒரு கமர்ஷியல் கதையாக மாறும்போது, அந்தக் கமர்ஷியல் கதையை நிலைநிறுத்தத் தேவைப்படும் அழுத்தம் கொஞ்சம் குறைகிறது. அதனாலேயே கடைசி மூன்று எபிசோடுகள்  – முதல் ஐந்து எபிசோடுகளில் சொல்லப்படாத பின்னணி வருகையில் – லேசாகத் தடுமாறுகின்றன. அதனால் ஒரு அருமையான ஃபீல் குட் சீரீஸ் பார்க்கும் தன்மை கொஞ்சம் குறைகிறது.

இந்த இடத்தில் இன்னும் அழுத்தமான கதையைச் சொல்வதன்மூலம் இதைச் சரிசெய்திருக்கலாம். ஆனால் ஒருவேளை இதுவே கட்டாயம் போதும் என்று திரைக்கதை எழுதிய மணிகண்டன், அஜித்குமார் & ராஜ்குமார் ஆகியோர் நினைத்திருக்கலாம். இருந்தாலும் முதல் ஐந்து போல இறுதி மூன்று இல்லை. அதாவது, எப்போது ஃபீல் குட் உணர்வு முடிந்து கமர்ஷியல் கதைக்கான அம்சங்கள் இடம்பெற்றனவோ அப்போதில் இருந்து அந்தக் கமர்ஷியல் கதைக்கான அடித்தளம் அழுத்தமாகப் போடப்படவில்லை. இதுதான் இந்த சீரீசின் முக்கியமான பிரச்னை. அது வேகமாகச் செல்கிறதா அல்லது மெதுவாகச் செல்கிறதா என்பது இல்லை. ஆனால் மெதுவாகப் போகிறது மெதுவாகப் போகிறது என்ற புலம்பலையே நான் அதிகம் படிக்க நேர்ந்தது. இது அவசியம் கடும் கமர்ஷியல்களையும் ரீல்களையுமே பார்த்துப் பழகிய மனநிலைதான். அப்படிப்பட்ட மேலோட்டமான கருத்துகளைக் கட்டாயம் நாம் ஒதுக்கவே வேண்டும்.

சில கேள்விகளுக்குப் பதில் இந்த சீரீசின் முதல் சீசனில் இல்லை. அவை அவசியம் இரண்டாம் சீசனில் வெளியாகும் என்றே தெரிகிறது. ஒருசில விஷயங்களை ஆடியன்ஸ் புரிந்துகொள்வார்கள் என்று அசால்ட்டாகத் தாண்டிச் சென்றிருக்கிறார்கள். விஜய் சேதிபதி கதாபாத்திரத்துக்கு வண்டிக்குள் பணம் இருப்பது எப்படித் தெரியும் என்ற கேள்வி அதில் ஒன்று. இப்போதைய காலகட்டத்தில் இதையெல்லாம் விளக்கி நான்கு சீன்கள் எழுதவே தேவையில்லை. அப்படி எழுதினால் அதெல்லாம் பழைய சீன்களாக மாறிவிடும். எனவே சரியாகவே இதெல்லாம் சொல்லாமல் கொண்டுசென்றிருக்கின்றனர்.

இரண்டாவது சீசனுக்காகக் காத்திருக்கிறேன். மணிகண்டன், விஜய் சேதுபதி டீமுக்கு ஒரு நல்ல சீரீஸ் தந்ததற்காக வாழ்த்துக்கள்.

Harlan Coben Collection – Netflix – Must Watch
ஹார்லான் கோபென் ஒரு புகழ்பெற்ற த்ரில்லர் நாவல் எழுத்தாளர். அவரது 12 நாவல்களை நெட்ஃப்ளிக்ஸ் மொத்தமாக வாங்கி, பனிரண்டு சீரீஸ்களாக எடுத்திருக்கிறது. எல்லாமே ஒரே ஒரு சீசன் மட்டுமே. Limited Seriesகள்.

கொரோனா காலத்தில் மிகவும் பிரபலம் ஆன Innocent நினைவிருக்கிறதுதானே? அது இந்த ஹார்லான் கோபென் கலெக்‌ஷனில் ஒரு பகுதி. இவற்றில் ஒரு சில சீரீஸ்கள் இங்கிலாந்தில் நடக்கும். ஒரு சில, போலாந்து போன்ற பிற ஐரோப்பிய நாடுகளில் நடக்கும். சில, அமெரிக்காவில்..

நெட்ஃப்ளிக்ஸ் இந்த வரிசையான சீரீஸ்களை 2018இல் துவங்கியது. 2015இல் இருந்து அவரது No Secons Chance, The Five, Just One Look ஆகியவை பிற சேனல்களில் வெளிவந்திருந்தாலும், 2018இல் Safe என்ற சீரீஸ் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து உடனடியாக அவரது 11 நாவல்களை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கி, வரிசையாக சீரீஸ்களாக எடுத்து வெளியிடத் துவங்கியது.

The Stranger, The Woods, The Innocent, Gone for Good, Stay Close, Hold Tight, Fool Me Once, Missing You, Just One Look, Caught, Run Away, I will Find You ஆகிய பனிரண்டு நாவல்கள் நெட்ஃப்ளிக்ஸால் அதே பெயர்களில் சீரீஸ் வடிவத்தில் மாற்றப்பட்டிருக்கின்றன. இதில் முதல் 11 சீரீஸ்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. இடையில் Shelter, Lazarus ஆகிய இரண்டு நாவல்களும் ஆமெஸான் ப்ரைமிலும் வந்திருக்கின்றன.

ஹார்லான் கோபெனில் கதைகளில் பல அம்சங்கள் திரும்பத்திரும்ப இடம்பெறும். யாராவது ஒருவரோ சிலரோ காணாமல் போவார்கள். அதனால் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும். குடும்பத்தில் ஒருவர் துப்பறியத் துவங்குவார். பெரும்பாலும் பெண் போலீஸ் அதிகாரிகளே இதற்குத் துணையாக வருவார்கள். மிகப்பெரிய ட்விஸ்ட்கள் கதையின் இறுதியில் இடம்பெறும். Past மற்றும் Present மாறிமாறிக் காட்டப்படும்.

இந்த டெம்ப்ளேட்தான் ஹார்லான் கோபெனின் அத்தனை கதைகளிலும் வரும். காணாமல் போனவர்கள் ஸ்பெஷலிஸ்ட் அவர். எனக்குத் தெரிந்து ஒரே டெம்ப்ளேட்டில் விதவிதமாக வணிகக் கதைகள் எழுதியவர் அவர் ஒருவரே.

ஆனாலும் அவரது ஒவ்வொரு கதையும் மிகவும் வேகமாகவும் விறுவிறுப்பாகவுமே செல்லும். இந்த வரிசையில் பதினோரு சீரீஸ்கஎள் நான் பார்த்துவிட்டேன். எனக்கு எல்லாமே பிடித்திருக்கின்றன. பனிரண்டாவது சீரீஸ் இனிமேல்தான் வர இருக்கிறது.

இந்தப் பனிரண்டு சீரீஸ்களும் ஒரு பெரிய கலெக்‌ஷன் என்று தெரியாமல் சிலவற்றை நீங்கள் பார்த்திருக்கலாம். எனவே இப்போது வரிசையாக எல்லாவற்றையும் பார்க்கலாம்.

இந்த வருடம் (2026) வந்திருக்கும் Run Away ஒரு அட்டகாசமான த்ரில்லர். இதுவரை பார்த்திருக்கவில்லை என்றால் நீங்கள் அதிலிருந்து துவங்கலாம். இன்னும் இறுதியான, பனிரண்டாவது நாவல் – சீரீஸான I will Find you மட்டும் இனிமேல்தான் வர இருக்கிறது. அதற்காகக் காத்திருக்கிறேன்.

Harlan Coben Collection என்றே நெட்ஃப்ளிக்ஸில் ஒரு தனிப் பகுதியாக இவை மொத்தமாகக் கிடைக்கும். அந்தப் பெயரில் தேடிப்பாருங்கள்.

Parasakthi (2026) – Tamil: A Detailed Analysis
பராசக்தி திரைப்படம் சென்ற வாரம் வெளியானது. அந்தப் படம் பரவலாக எதிர்பார்க்கப்பட்டும் வந்தது. இப்போது திரைப்படம் வெளியான நிலையில் அந்தப் படம் பற்றிய மிக விரிவான ஒரு analysisஐ எழுதியிருக்கிறேன். எந்தவித சார்புநிலையும் இல்லாமல், திறந்த மனதோடு இந்தக் கட்டுரையைப் படித்துப் பார்க்கவும்.

முதலில், பராசக்தி என்ன சொல்கிறது?

இந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்த 1965 காலகட்டத்தில் தமிழகத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை இந்தப் படம் விவரிக்கிறது என்பதே டிரெய்லர் வெளியானபோது நமக்குக் கிடைத்த செய்தி. அதேபோல் பல காலமாகவே படத்தைப் பற்றிய தகவல்களும் இதை உறுதிப்படுத்தின. அதேபோல் திரைப்படம் வெளியானதுமே, இதுதான் படத்தின் முக்கியமான அம்சம் என்று புரிந்தது. திரைப்படத்தின் துவக்கத்தில், மொழி என்பதைப் பற்றிய அரசியலை அனைவருக்கும் உணர்த்தும் வகையிலான சில அனிமேஷன் காட்சிகள் வருகின்றன. அதில் மொழி என்பதன் சக்தி பற்றிய வாய்ஸ் ஓவர் சொல்லப்படுகிறது.  இதன்மூலம் படம் பார்க்க வந்திருக்கும் ஆடியன்சின் மனதில் ஒரு எதிர்பார்ப்பு உருவாகிறது. இந்த அனிமேஷன் காட்சிகளுக்குப் பின்னர் திரைப்படம் துவங்குகிறது. அந்த அனிமேஷன் காட்சிகள் முடியும்போது, பயம் என்றால் என்ன என்று தெரியாத ஒரு படை – புறநானூற்றுப் படை என்பது உருவானது என்று ஒரு வாய்ஸ் ஓவர் சொல்கிறது.

1959இல் கதை துவங்குகிறது. ரயிலில் திரு என்ற திருநாடன் (ரவி மோகன்) இண்டெலிஜன்ஸ் ஆஃபீசராக அறிமுகம் ஆகிறார். அவர் ரஷ்யாவில் கே.ஜி.பியின் கீழ் பயின்ற மிகப்பெரிய திறமைசாலி என்று அறிமுகப்படுத்தப்படுகிறார். அப்போதே ரயில் வரும் வழியில் நிற்கும் செழியன் (சிவகார்த்திகேயன்) கதாபாத்திரமும் அறிமுகம் ஆகிறது. கூடவே படத்தின் க்ளைமேக்ஸில் யாரெல்லாம் வருவார்களோ அவர்கள் அனைவரும் அவரவர் தாய்மொழிகளில் (மலையாளம், பெங்காலி etc..) பேசிக்கொண்டு, க்ளைமேக்ஸில் வரும் வசனங்களுக்கு lead கொடுத்துக்கொண்டே அறிமுகமாகின்றனர். அங்கே ஒரு புகைவண்டி கொளுத்தப்படுகிறது. நீதி பரவட்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பறக்கின்றன. அப்போதே செழியன் கதாபாத்திரம், ரயிலில் இருப்பவர்களிடம், நாங்கள் இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் – இந்திக்காரர்களை அல்ல என்று சொல்லி, அனைவரையும் பாதுகாப்பாக ரயிலில் இருந்து இறங்கவைக்கிறார்.

அப்போது செழியனுக்கும் திருநாடனுக்கும் சண்டை நடக்கிறது. சண்டையில் செழியன் தப்பித்துவிடுகிறான். இதுதான் பராசக்தியின் துவக்கக்காட்சி. இதில் புறநாநூற்றுப் படை என்ற படையின் அறிமுகம் நடப்பதால், இந்தப் படை பற்றிய ஒரு எதிர்பார்ப்பு இயல்பாகவே எழுகிறது. அதேபோல் இந்தப் படைக்கு எதிராக செயல்படும் இண்டெலிஜன்ஸ் ஆஃபீசர் திருநாடன் என்னவெல்லாம் செய்யப்போகிறார்? இந்தித் திணிப்பை எதிர்க்கும் புறநாநூற்றுப் படை என்ன செய்யப்போகிறது என்றெல்லாம் ஒரு ஆர்வம் எழுகிறது.

அத்தோடு சரி. ஆரம்பக் காட்சிகளில் எழுந்த எதிர்பார்ப்பு ஒட்டுமொத்தமாகக் குழிதோண்டி மூடப்பட்டதுதான் பராசக்தியின் மிகப்பெரிய பிரச்னை.

பராசக்தியின் கதை எங்கெங்கோ அலைபாய்கிறது. படத்தின் கதை கண்டபடி இழுபடுகிறது. சொல்லவந்த எதுவுமே தெளிவாக சொல்லப்படவில்லை. கதைக்குத் தொடர்பே இல்லாத பல காட்சிகள் பராசக்தியை அலுப்பான அனுபவமாகவே ஆக்குகின்றன.  எப்படி என்று விரிவாகச் சொல்கிறேன்.

முதலில் இது எதைப்பற்றிய படம்? இந்தித் திணிப்பின் எதிர்ப்பைப் பற்றியது. அப்படியென்றால் இந்தப் படத்தில் வில்லன் யார்? இந்தி மொழித் திணிப்பு. எந்த ஒரு தரமான கமர்ஷியல் படத்திலும் படத்தின் நாயகனுக்கு ஒரு குறிக்கோள் இருக்கும். அந்தக் குறிக்கோளை நோக்கியே அவன் போராடுவான். அந்தக் குறிக்கோள் நாயகனுக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்ள எதிர்நாயகன் (வில்லன்) வருவான். இதுதான் கமர்ஷியல் படங்களின் டெம்ப்ளேட். பராசக்தியில் நாயகர்கள் என்று சொன்னால் இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்களான செழியன், அவனது தம்பி சின்னதுரை, நாயகி ரத்னமாலா மற்றும் இவர்களுடன் இருப்பவர்கள் ஆகியோர்.  அப்படியென்றால் இவர்களுக்கு எதிரே மோதும் வில்லன் யார்? ஏற்கெனவே பார்த்தோம் அல்லவா? இந்தி மொழித் திணிப்பு. எனவே வில்லன் உயிரோடு இருக்கும் கதாபாத்திரம் இல்லை. அது ஒரு கொள்கை. ஒரு சட்டம். ஒரு தீர்மானம். இதனால் என்ன பிரச்னை? உயிருடன் இருக்கும் ஒரு வில்லனைப் படத்தில் உருவாக்கு. அதுதான் ரவி மோகனின் திருநாடன். அவன் புறநாநூற்றுப்படையுடனும், செழியனுடனும் மோதிக்கொண்டே இருக்க வேண்டும்.  அதேசமயம், இந்தித் திணிப்பை அமல்படுத்தும் அரசியல்வாதிகள் உயிருடன் இருந்த கதாபாத்திரங்கள். அவர்களை ஒரு அளவுக்கு மேல் வில்லனாக்க முடியாது. இதனால் ஒட்டுமொத்தப் படத்திலும் ரசி மோகனின் திருநாடனே ஒரு வில்லனுக்கான வேலைகளை செய்யப் பார்க்கிறது.

இதனால் என்ன ஆகிறது? திருநாடனே வில்லன். எனவே அவனுக்கு வில்லனுக்கான காரணங்களை உருவாக்கு. அந்தக் கதாபாத்திரத்தின் அம்மாவை ஒரு தமிழன் ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டான் என்று ஒரு வசனம் எழுது.  உனக்குள்ள ஓடுற உன் அப்பனோட தமிழ் ரத்தம் எப்படி அந்தப் புரட்சிக்காரங்களை சுடும்? என்று இன்னொரு வசனம் எழுது. இனிமே நான் தமிழ் பேசுற நொண்டிக்கை மதராசி துரோகி என்று திருநாடனையே புலம்ப வை. இதனாலெல்லாம் திருநாடன் தமிழால் பாதிக்கப்பட்டான் என்று காட்சி வை. அப்போதுதான் அவன் தமிழுக்காகப் போராடுபவர்களின் மீது வெறிகொண்டு பாய்வான். இப்படியெல்லாம் இருப்பதன் பிரச்னை, முதலில் திருநாடன் சொல்லும் காரணங்கள் ஏற்புடையதாகவே இல்லை. அப்பன் தமிழன் – அம்மாவை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டான் என்பதாலேயே அவனுக்கு தமிழ்மீது வெறுப்பா? இதை எப்படி நம்புவது?

துவக்கத்திலேயே இப்படிப்பட்ட ஏற்கவே முடியாத காரணங்களை அடுக்குவதால் முதலில் ரவி மோகனின் கதாபாத்திரமே உறுதியாக இல்லாமல் அங்கங்கே தடுமாறுகிறது.

அதேபோல்தான் செழியன். படத்தின் துவக்கத்தில் வெறிகொண்டு ஒரு புரட்சிப்படையை வழிநடத்தி ஒரு புகைவண்டியையே எரிக்கும் அளவு திறமை படைத்த செழியன் – தமிழ் தமிழ் என்று தமிழுக்காக எதைவேண்டுமானாலும் செய்வேன் என்ற மன உறுதி படைத்த நாயகன் செழியன் – எந்த வசனம் பேசினாலும் அதில் எப்படியாவது மொழி பற்றி ஒரு வாக்கியமாவது பேசிவிடும் செழியன், இதன்பின் படத்தில் என்னவெல்லாம் செய்கிறார்?

புகைவண்டி எரிக்கப்பட்ட தீ விபத்தில் ஒரு மாணவன் உடல் கருகி இறந்துவிடுகிறான். அவனது வீட்டுக்குச் செல்லும் செழியன், இந்த மரணத்தால் பாதிக்கப்பட்டு, ஒட்டுமொத்தப் புறநாநூற்றுப் படையையும் கலைத்துவிடுகிறான்.

ஏம்ப்பா? உண்மையைச் சொல்லுங்கள். தமிழுக்கென்றே உருவான ஒரு புரட்சிப்படை, ஒரு புகைவண்டியையே எரித்து டெல்லி வரை அரசியல்வாதிகளைக் கலங்கவைத்த புரட்சிப்படையை இதனால் உடனடியாகக் கலைத்துவிட்டு லௌகீக வாழ்க்கையில் தடாலென்று செழியன் இறங்கிவிடுவாரா? சரி ஒருவேளை அப்படியே வைத்துக்கொள்ளலாம். இனிமேல் யார் உயிரையும் இழக்க விடமாட்டேன் என்று சொல்லி அந்தப் புறநானூற்றுப் படையைக் கலைக்கிறார் என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதன்பின் செழியன் என்ன செய்கிறார்?

நடந்த சம்பவங்களின் எந்த சுவடும் இல்லாமல், அவரது மனதைப் பாதித்த அந்த இறப்பைப் பற்றிய ஒரு தடயமும் இல்லாமல், ஜாலியாக ஹீரோயின் ரத்னமாலாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அது மட்டும் அல்ல. அந்த ரத்னமாலாவை ரூட்டு விடுவதற்காக, அவளிடம் இந்தி (!!??) கற்றுக்கொள்ளத் துவங்குகிறார். அடப்பாவி! உனது பூர்வாசிரமத்தில் ரயிலை எரித்தபோது, ‘இந்தி பேசுறவங்க மேல எங்களுக்குப் பிரச்னை இல்ல’ என்று சொன்னாயே அது இதற்குத்தானா?

அடுத்த கணமே செழியன் மீதான நம்பிக்கை பணால் என்று உடைகிறது.  இதனால் என்ன ஆகிறது என்றால், திரையில் எதுவோ சம்பவங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன – அவை துளிக்கூட நம்மை பாதிப்பதில்லை என்ற எண்ணமே எழுகிறது. யோசித்துப் பாருங்கள். இத்தனை புரட்சிகரமான வேலைகளைச் செய்திருக்கும் ஒரு தமிழ் ஆர்வலன், செழியன் செய்வதைப் போன்ற தொடர்பே இல்லாத வேலைகளை மனதில் எந்த emotional baggageஉம் இல்லாமல் இத்தனை ஜாலியாக செய்வானா?

ஹீரோ செழியன் திடீரென்று இந்தி கற்றுக்கொண்டு காதல் செய்யும் குறிக்கோளுடன் தனது நோக்கத்தில் இருந்து ஒதுங்கிவிட்டால் இதன்பின் படத்தில் புரட்சி கோஷத்தை யார் எழுப்புவது? அவர் இல்லாவிட்டால் என்ன? அவரது தம்பியை இறக்கு. இதோ வந்தார் சின்னதுரை. அவருடன் ஒரு சிலர் சேர்ந்து, இவர்கள் புறநானூற்றுப்படையின் இன்ஸ்பிரேஷனில் கிளைக்கழகம் ஒன்று உருவாவது போல ஒரு குட்டியூண்டு புரட்சிப் படையை உருவாக்குகின்றனர். இவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராக என்னவெல்லாம் செய்கின்றனர்?

பல்கலைக்கழகத்தில் ஓடும் ஷம்மி கபூரின் இந்திப் பட ரீலை மாற்றிவிட்டு, தமிழ்ப்பாடல் ஒன்றைப் போட்டுவிட்டு கம்பீரமாக (??!!) நிற்கின்றனர். ஆஹா. இந்தி ஒழிந்தது.

இந்தி கற்றுக்கொண்டு ஹீரோயினைக் காதலிக்கும் ஹீரோ இடையில் தம்பியுடன் செல்லமாக சண்டை போடுகிறார். தம்பியின் பாக்கெட்டில் இருந்து லைட்டரை களவாண்டு ஓடிவிடுகிறார். அதாவது, படத்தின் துவக்கத்தில் நமக்கு எழுந்த எதிர்பார்ப்பு படத்தின் இந்த இடத்தில் எல்லாம் சுக்குசுக்காக உடைந்து சிதறி, என்ன வேணாலும் நடக்கட்டும்யா.. உங்களால முடிஞ்சதைப் பண்ணுங்க என்பதாக மாறிவிடுகிறது. இதனால் எப்படிப்பட்ட காட்சி வந்தாலும் எந்த எமோஷனும் இல்லாமல் ஒரு zombie போல நம்மால் அமர்ந்து பார்க்க முடிகிறது.  நீங்கள் கட்டையே வைத்து அடி அடி என்று அடித்தாலும் ஏதோ கொசு கடிக்கிறது என்றே எண்ணிக்கொண்டு ஒரு அரைமயக்க நிலை நீடிக்கிறது.

ஆனால் இடைவேளை நெருங்குகிறதே? என்ன செய்வது?  செழியன் வேறு முக்கால் மணி நேரமாகத் தொடர்ந்து காதலித்துக்கொண்டே இந்தி கற்றுக்கொண்டிருக்கிறாரே?  இரண்டு மூன்று பாடல்கள் வேறு பாடிவிடுகிறார் (புரட்சிப் பாடல்கள் அல்ல. காதல் பாடல்கள்தான்).

இப்போது கொண்டுவா அண்ணாவை. கருணாநிதியை. அவர்களின் கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, வீறுகொண்ட வசனங்கள் எழுதி, அதுவரை தூங்கிக்கொண்டிருந்த திரைக்கதையை தட்டி எழுப்பு (உண்மையில் மிக முக்கியமான இந்தப் பெரும் கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்திருக்கும் இயக்குநரை எப்படி விமர்சிப்பது என்றே தெரியவில்லை).

இதன்பின் இடைவேளை. அதில் வானில் இருந்து இறங்கும் சூப்பர்ஹீரோ போல ஒரு வழியாக செழியன் காதல் மயக்கம், இந்தி கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவற்றில் இருந்து தற்காலிக லீவு வாங்கி, மறுபடியும் கொள்கை வீரராக மாறிவிடுகிறார். என்ன காரணம்? அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இண்டர்வ்யூ செயும் அதிகாரி இந்தி பற்றிப் பேசி இவரை ரிஜெக்ட் செய்துவிடுகிறார் (இதேபோல்தான் வலிந்து திணித்து சூரரைப் போற்று படத்தில் நாயகன் சூர்யாவின் தந்தையை இறக்க வைத்திருப்பார் சுதா. காரணம் ஹீரோவுக்கு லட்சிய வெறி வரவேண்டும் அல்லவா? இப்படியெல்லாம் தொடர்பே இல்லாமல் காட்சிகள் எழுதினால் அவை துருத்திக்கொண்டு தெரியாமல் வேறு எப்படி இருக்கும்?. மேலே இருக்கும் எனது சூரரைப் போற்று விமர்சனத்தையும் முழுதாகப் படித்துப் பாருங்கள்).

இதுபோதும் என்று நினைக்கிறேன். இதற்கு மேல் கதையை விரிவாகப் பார்க்கவேண்டாம். மாறாக, படத்தின் பிரச்னைகளை மறுபடியும் கவனிக்கலாம்.

இப்போது நான் சொல்லியவவற்றை வைத்தே படத்தின் மிகப்பெரிய ஸ்பீட் ப்ரேக்கர்கள் என்ன என்று தெரிந்திருக்கும். துவக்கத்தில் இருந்து ஒரே நேர்க்கோடாக, விறுவிறுப்பாகச் சொல்லவேண்டிய அட்டகாசமான கதைக்களம்தான் தமிழகத்தில் நடந்த இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த கிளர்ச்சி. ஆனால் அதை எடுத்துக்கொண்டு, எப்படியெல்லாம் அதை நீர்க்கவைத்து, படம் பார்ப்பவர்களைத் தூங்கவைக்கலாம் என்றே எழுதப்பட்டதுபோலத்தான் பராசக்தியின் திரைக்கதை உள்ளது.

இந்தப் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள் முன்னுக்குப் பின் முரணாகவே எழுதப்பட்டிருக்கின்றன. செழியன் மற்றும் திருநாடன் ஆகிய கதாபாத்திரங்கள் பற்றி விரிவாகவே மேலே பார்த்தோம். நாயகி ரத்னமாலாவின் அறிமுகத்திலேயே தெரிந்துவிடுகிறது – அவரை சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் ஜெனிலியா போலவே ஏதோ ஒரு மாதிரி சித்தரிக்க நினைத்திருக்கிறார்கள் போல. படத்தில் எனக்குப் பிடித்த ஒரே கதாபாத்திரம் – அதர்வா நடித்திருக்கும் சின்னதுரை. தன்னால் முடிந்தவரை கல்லூரி படிக்கையில் இந்தித் திணிப்பை எதிர்த்து எதாவது செய்யவேண்டும் என்று துறுதுறுப்பாகவே திரியும் கதாபாத்திரம் இது. மாணவர்கள் சிலரை ஒன்றுசேர்த்துக்கொண்டு அங்குமிங்கும் எதாவது செய்யவேண்டும் என்று ஓடும் கதாபாத்திரம். இது மட்டும் நன்றாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் இன்னொரு மிகப்பெரிய பிரச்னை, இந்தித் திணிப்பை எதிர்த்து எழுந்த மாபெரும் போராட்டத்தை, ஒரே ஒரு சின்ன கும்பலுக்கு எதிராக ஒரு இண்டெலிஜன்ஸ் ஆஃபீசர் மேற்கொள்ளும் சண்டை என்று சுருக்கியதுதான். படம் முழுக்கவே திருநாடன் துப்பறிந்துகொண்டே இருக்கிறார். யாருக்கு எதிராக? புகை வண்டியை எரித்தவர்களுக்கு எதிராக. இதைத்தவிர அவர் வேறு வேலை எதையும் பார்த்ததாகத் தெரியவில்லை. புறநாநூற்றுப் படை, சின்னதுரையின் சிறிய கும்பல் ஆகியவற்றைத் தவிரப் படத்தின் பெரும்பான்மையான நேரத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப்  போராட்டத்தின் வீச்சு சரியாகவே சொல்லப்படவில்லை.  எந்தக் காட்சியைப் பார்த்தாலும் ஒன்று செழியன் காதலிக்கும் காட்சி, அல்லது சின்னதுரை தொடர்பான காட்சிகள் என்றே பெரும்பாலும் படம் ஓடுகிறது. படத்தின் இரண்டாம் பாதியில்தான் ஓரளவு சீரியஸ் காட்சிகள் வருகின்றன. ஆனால் அவையுமே முதல் பாதியில் நாம் வாங்கிய அடியால் நம்மைக் கடந்து சென்றுவிடுகின்றன. கதாபாத்திரங்களை செயற்கையாக வடிவமைத்து முதல் பாதியில் இயக்குநர் சுதா வைத்திருந்ததால், இரண்டாம் பாதியில் அவை என்ன செய்தாலும் மனம் அவற்றை நம்ப மறுக்கிறது. இது அவசியம் படத்தின் திரைக்கதையின் தோல்வியே.

சரி. படத்தின் பாசிடிவ்கள் என்ன?

அண்ணாதுரைக்கு வைக்கப்பட்ட வசனங்கள், சென்சாரில் பல இடங்களில் வெட்டுப்பட்டது நமக்குத் தெரியும். ஆனால் அதை மீறி, அவரது கதாபாத்திரம் நன்றாகவே காட்டப்பட்டிருக்கிறது. சேத்தனின் நடிப்பு நம்மை வசீகரிக்கிறது. அண்ணாதுரை பற்றி எதுவுமே தெரியாத இக்கால சினிமா ரசிகர்கள் அவசியம் அவரது கதாபாத்திரத்தால் கவரப்பட்டிருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அதேபோல் நாயகன் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் கண்டபடி திரைக்கதையில் கொத்துக்கறி போடப்பட்டிருந்தாலும், அவரது சின்சியரான நடிப்பு படத்தில் தனித்துத் தெரிகிறது. அவரது உழைப்பு நன்றாகவே புரிகிறது. ஆனால் அது விழலுக்கு இறைத்த நீராகவும் மாறிவிடுகிறது. அதர்வா, ரவி மோகன் ஆகியோருமே நன்றாக நடித்துள்ளனர். ஆனால் ரவி மோகனின் கதாபாத்திர உருவாக்கத்தின் பிரச்னையினால் அவரது நடிப்பில் ஒன்ற முடியவில்லை.

அடுத்ததாக, படத்தின் இரண்டாம் பாதியில் வரும் பல காட்சிகள் ஓரளவு நன்றாக உள்ளன. ஆனாலும் நான் சொன்னதுபோல, படத்தின் முதல்பாதியில் படம் பார்க்கும் ஆடியன்ஸைப் பிரம்பால் அடித்த திரைக்கதையால், இத்தனை தீவிரமான காட்சிகள் இடம்பெற்றும் உளவியல் ரீதியாக நம்மால் படத்தில் ஒன்ற முடிவதில்லை.

படத்தின் இறுதியில் எதற்காக இத்தனை கேமியோக்கள்? கூடவே எதற்காக இத்தனை மொழிகள்? தென்னிந்திய மொழிகள் அனைத்துமே அந்தந்த மாநில நடிகர்களால் கேமியோக்களில் சரிசமமாகப் பங்கிடப்பட்டுக் காட்டப்படுகின்றன. இவைதவிர, பெங்காலி போன்ற மொழிகளும் வருகின்றன. இது மொழி பற்றிய படம்தான். அதற்காக இப்படியா? இத்தனை மொழிகளைப் பற்றியும் காட்டுவேன் என்றால் துவக்கம் முதல் மதராஸில் தமிழ் மொழி சார்ந்த போராட்டமாகவே சொல்லப்பட்டுவந்த கதை ஏன்? முதலில் இருந்தே எல்லா மொழிகள் பற்றியும் சொல்லி இருக்கலாமே? தனிப்பட்ட, தமிழ்நாடு சார்ந்த மொழிப்போராட்டமாகவே அறியப்பட்டு வந்த ஒரு போராட்டத்தை எதற்காக அனைத்து மொழி சார்ந்த போராட்டமாக முன்வைக்கவேண்டும்? இன்றுவரை கர்நாடகத்தில் மும்மொழிக் கொள்கைதான். எனக்குத் தெரிந்து தெலுங்கு பேசும் மாநிலங்களிலும் அப்படித்தான் என்று நினைக்கிறேன் (தவறு இருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்). கேரளத்தில் எப்படி என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்த அத்தனை மலையாளிகளுமே இந்தி நன்றாகப் பேசுவார்கள்.

அப்படி இருக்க, தமிழகத்தில் மட்டுமே அப்போதைய முதல்வர் அண்ணாதுரை இருமொழிக் கொள்கையை அறிவித்து இன்றுவரை அது சிறப்பாகவே நடக்கிறது. இதற்கு முக்கியமான  காரணம் அப்போதைய தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்து எழுந்த போராட்டம். அப்படி இருக்க, எதனால் இது நீர்க்கப்பட்டு, அனைத்து மொழிகள் சார்ந்த போராட்டம் என்று படத்தில் அறிவிக்கப்பட்டது? (இந்த இடத்தில், சூரரைப் போற்று படத்தில் சுயமரியாதைத் திருமணத்தில் பெரியார் படத்தைத் தெலுங்கு டப்பிங்கில் அகற்றிய சம்பவம் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது).

ஒரு அரசியல் படத்தை இயக்கும் இயக்குநருக்கு ஆழமான அரசியல் ஞானம் இல்லாவிட்டாலுமே, ஓரளவு அரசியல் தெளிவு இருக்கவே வேண்டும். மாறாக, எந்த விதமான அரசியல் ஞானமும் இல்லாமல், வெறுமனே ஒரு vigilante படம் போலவே முக்கியமான ஒரு பிரச்னையைக் கையாளும் படத்தை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் சுதா. இதை சுட்டிக்காட்டாமல் எப்படித் தவிர்ப்பது? இதுவரை வந்திருக்கும் சுதாவின் படங்களைப் பார்த்தால், சமூகப் பிரச்னைகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை தன்னிஷ்டத்துக்கு வலிந்து வளைத்து, சம்பவங்களைக் கண்டபடி மாற்றியே எடுத்து வந்திருக்கிறார்.  இந்த டெம்ப்ளேட் அவசியம் ஒத்து வராது. பராசக்தி போல ஒரு கட்டத்தில் கைவிட்டுவிடும்.

இனியாவது எழுதும் கதை சார்ந்த அரசியலை நன்றாக ஊன்றிப் படித்துத் தெளிவாகி (சாவர்க்கரை திடீரென்று பாராட்டி மன்னிப்புக் கேட்டுக்கொண்டதைப் போல அல்லாமல்), அதன்பின்னரே திரைக்கதை எழுதுமாறு சுதாவைக் கேட்டுக்கொள்கிறேன். அது அவசியம் அவருக்கு நன்மையையே கொடுக்கும்.

பின்குறிப்புகள்

1. எனது சூரரைப் போற்று விமர்சனம் – இங்கே படிக்கலாம்.

2. திமுகவைச் சேர்ந்த இரண்டு மாபெரும் தலைவர்களைப் படத்தில் காட்டிவிட்டார்கள் என்பதற்காகவே திமுக அனுதாபிகளில் பலர் பராசக்தியை வலிந்து பாராட்டுவதைப் பார்க்கிறேன். நான் மேலே சொல்லியுள்ள கருத்துகளை மனதில் வைத்துக்கொண்டு, எந்த சார்புநிலையும் இல்லாமல் படம் பற்றி யோசித்துப் பாருங்கள். அதுதான் சினிமாவுக்கு நல்லது. இல்லையென்றால் இப்படி சில தலைவர்களைக் காட்டி, சில புரட்சி வசனங்களை வைத்தாலே தமிழகத்தில் ஓடிவிடும் என்ற போலியான நம்பிக்கையை அது கொடுக்கும்.

3. புறநாநூறு என்பதே இந்தத் திரைப்படத்துக்கு மிகச்சரியான தலைப்பு. பராசக்தி என்பதை விட.

Prashanth Neelலின் திரைக்கதைகள் – An Analysis – Part 3
இதற்கு முந்தைய இரண்டு அத்தியாயங்களை இங்கே படிக்கலாம்.

Prashanth Neelலின் திரைக்கதைகள் – An Analysis – Part 1

Prashanth Neelலின் திரைக்கதைகள் – An Analysis – Part 2

உக்ரம் முடித்ததுமே ப்ரஷாந்த் நீல் துவக்கிய படம்தான் KGF என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அந்தப் படத்தை எப்படித் தேர்வு செய்தார் நீல்? அந்தக் கதை எப்படி அவரது மனதில் உருவானது?

உக்ரம் படம் வெளியான சில காலம் கழித்து ப்ரஷாந்த் நீலின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது. வெறும் மூன்றே படங்கள் அதுவரை எடுத்திருந்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் (ஹொம்பாளே என்றால் தென்னம்பாளை என்று கன்னடத்தில் அர்த்தம். மங்கல நிகழ்வுகள் நடக்கும்போது தென்னம்பாளையைக் கட்டுவார்கள் அல்லவா? அதுதான் ஹொம்பாளே) என்ற கன்னடத் தயாரிப்பு நிறுவனம், ப்ரஷாந்த் நீலின் அடுத்த படத்தைத் தயாரிப்பதாகவும், அது ஒரு பெரிய பட்ஜெட் படம் என்பதாகவும் அறிவித்தது.

இந்த நிறுவனத்தின் முதல் படமான ‘நின்னிண்டலே’, புனீத் ராஜ்குமார் நடித்திருந்தும் ஓடவில்லை. தயாரிப்பாளர் விஜய் கிரகண்டூருக்கு நஷ்டத்தையே கொடுத்திருந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட விஜய் கிரகண்டூர், இரண்டாவது படத்தில் யஷ்ஷை நடிக்கவைக்க அணுகி, யஷ் தேர்வு செய்த திரைக்கதையான ‘மாஸ்டர்பீஸ்’ என்ற கதையை யஷ்ஷை வைத்து எடுக்க, அது நன்றாக ஓடியது. அவரது மூன்றாவது படம், மறுபடி புனீத் ராஜ்குமார் நடிக்க ‘ராஜகுமாரா’ என்ற பெயரில் வெளியாகி, அதுவரை கன்னடத் திரைப்பட சரித்திரத்திலேயே அதிகமாக வசூல் செய்த படமாக (75 கோடி) மாறியது. இத்தனைக்கும் புனீத் ராஜ்குமாரின் முந்தைய மூன்று படங்களான ரணவிக்ரமா, சக்ரவ்யூஹா, தொட்டமனே ஹுடுகா ஆகியவை எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. எனவே புனீத் ராஜ்குமாருக்குமே ப்ரஷர்தான். ஆனால் தெளிவாக இருந்த விஜய் கிரகண்டூர் தனது முதல் படத்தின் தோல்விக்குப் பிறகு விழித்துக்கொண்டதே அடுத்த இரண்டு படங்கள் வெற்றியடைந்ததற்குக் காரணம்.

இந்தப் பின்னணியில்தான், திரைக்கதையும் மேக்கிங்கும் நன்றாக இருந்த உக்ரம் படத்தின் இயக்குநர் ப்ரஷாந்த் நீல் தன்னை ஒரு வித்தியாசமான கதையுடன் அணுகியபோது, அதன் பட்ஜெட் மிகப்பெரிதாக இருந்தபோதும் ஓகே சொன்னதாக விஜய் கிரகண்டூர் சொல்லியிருக்கிறார். முதலில் ப்ரஷாந்த் நீல் KGF திரைக்கதையை விரிவாகச் சொன்னபோது அதில் வரும் காட்சிகள் எதையுமே என்னால் விஷுவலைஸ் செய்து பார்க்கவே முடியவில்லை. ஏனெனில் இதுவரை கன்னடத்தில் யாருமே இப்படிப்பட்ட காட்சிகளை எடுத்திருக்கவில்லை என்று விஜய் கிரகண்டூர் சொல்லியிருக்கிறார்.

இப்படித்தான் KGF முதல் பாகம் உருவாகத் துவங்கியது. அதன் Pre Production மட்டுமே ஒன்றரை வருடங்கள் நடந்தது. திரைக்கதையில் வரும் ஒவ்வொரு காட்சியில் இடம்பெறும் பின்னணிப் பொருட்கள், உடைகள், கார்கள், தெருக்கள் ஆகிய எல்லாமே அந்தக் கதை நடந்த காலகட்டத்தைச் சேர்ந்ததாகவே தோன்றவேண்டும் என்பதில் எங்களுக்கு இருந்த கடின உழைப்பே அதற்குக் காரணம் என்று ப்ரஷாந்த் நீல் சொல்லியிருக்கிறார்.

ஆனாலும், அந்தப் படம் உருவாகும்போது தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாளேவை யாருக்குமே தெரியாது. யஷ் வளர்ந்து வரும் ஒரு ரொமாண்டிக் நடிகர் மட்டுமே. ப்ரஷாந்த் நீல் சுத்தம். ஹொம்பாளேவைத் தெரிந்த அளவு கூட ப்ரஷாந்த் நீலை ஒருவருக்கும் தெரியாது. எனவே அமைதியாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுத் திரைக்குத் தயாரானது KGF .

ஆனால் எல்லாவற்றுக்கும் முன்னதாக, KGF திரைப்படத்தின் திரைக்கதையை ப்ரஷாந்த் நீல் எப்படி உருவாக்கினார்?

மறுபடியும் நாம் முதல் இரண்டு அத்தியாயங்களில் பார்த்த அதே சலீம் ஜாவேத் இணைதான் ப்ரஷாந்த் நீலுக்கு உதவியது. தனக்குப் பிடித்த, இந்த இருவர் எழுதிய இந்திப் படங்களை மீண்டும் பார்த்தார் ப்ரஷாந்த் நீல். அதில் வரும் மிகப் பிரம்மாண்டமான ஹீரோ என்ற இமேஜ் ப்ரஷாந்த் நீலுக்கு எப்போதும் பிடிக்கும். எனவே, ஒரு பிரம்மாண்டமான ஹீரோ உருவானால், அவனுக்கு எதிரான, அவனைவிடவும் பிரம்மாண்டமான வில்லன்கள் அவசியம் தேவை என்பதும் ப்ரஷாந்த் நீலுக்குத் தெரியும். அப்படி ஒரு மிகப்பெரிய ஹீரோவும் அவனைவிடப் பெரிய வில்லன்களும் இருந்தால்மட்டுமே போதாது; அவர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் அளவு மிகப்பெரிய கதைக்களமும் வேண்டும். குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் தேவை. இதற்கெல்லாம் பின்னணியாக ஒரு அழுத்தமான அம்சம் தேவை.

இத்தனை விஷயங்களையும் நன்றாக யோசித்து, அமிதாப் பச்சன் திரைப்படங்களுக்கு சலீம் ஜாவேத் இணை எழுதிய திரைக்கதைகளையெல்லாம் நன்றாக அலசிப் பார்த்து சிறுகச்சிறுக ப்ரஷாந்த் நீல் எழுதிய திரைக்கதைதான் KGF முதல் பாகம்.  The Good Bad and the Ugly, For a Few Dollars More ஆகிய செர்ஜியோ லியோனி இயக்கியிருந்த வெஸ்டர்ன் படங்களும் ப்ரஷாந்த் நீலுக்குப் பிடித்தவை. இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்து, அவற்றின் இன்ஸ்பிரேஷனில் திரைக்கதை எழுதி முடித்ததும் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டூரிடம் சென்றிருக்கிறார். அவரிடம் முதலில் ப்ரஷாந்த் நீல் சொன்னது ஒரு குடும்பக் கதையே. ஆனால் அதில் திருப்தி இல்லாமல் ஏதாவது வித்தியாசமான கதை இருக்கிறதா என்று விஜய் கிரகண்டூர் கேட்க, சமீபத்தில் எழுதி முடித்திருந்த KGF கதையை விஜய் கிரகண்டூரிடம் சொல்கிறார் ப்ரஷாந்த் நீல். அதன் கதை புரியாவிட்டாலும், அதில் எதுவோ இருக்கிறது என்பது விஜய் கிரகண்டூருக்குப் புரிந்துவிட்டது. இதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்று அவர் கேட்க, உக்ரம் படத்தின் திரையிடலுக்கு வந்து, படத்தைப் பார்த்துப் பாராட்டிவிட்டுச் சென்ற யஷ்ஷின் நினைவு ப்ரஷாந்த் நீலுக்கு வருகிறது. யஷ் தான் இதில் பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்பாளர் விஜய் கிரகண்டூரிடம் சொல்கிறார் ப்ரஷாந்த் நீல்.

இதன்பின் விஜய் கிரகண்டூர் ஏற்பாடு செய்த ஒரு சந்திப்பில் யஷ்ஷை சென்று சந்திக்கிறார்.

உக்ரம் படத்தின் இயக்குநர் என்னை சந்திக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அந்தப் படம் கர்நாடகத்தில் மிகவும் நன்றாகப் பேசப்பட்டது என்பதால் அவரை சந்திக்க ஒத்துக்கொண்டேன். அவரும் வந்தார். எனக்கு ஒரு கதை சொல்லப்போவதாகச் சொல்லிவிட்டு, திக்கித் தடுமாறி, பலவிதமாக உளறி, ஒரு கதை சொன்னார். அவருக்குக் கொஞ்சம் கூட கதை சொல்லவே வரவில்லை. அவர் சொல்லிய அந்தக் கதையும், அவர் கண்டபடி உளறியதால் எனக்குப் பிடிக்கவும் இல்லை. ஆனால் உக்ரம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியவர் என்ற ஒரே காரணத்தால்தான் அவர் தட்டுத்தடுமாறி முழுக்கதையும் சொல்லிமுடிக்கும்வரை அங்கே அமர்ந்திருந்தேன். இல்லாவிட்டால் பாதியிலேயே அவரை வெளியே செல்லும்படி சொல்லியிருப்பேன் என்று யஷ் சொல்லியிருக்கிறார்.

ஆனாலும், யஷ் இப்படியெல்லாம் நினைக்கிறார் என்பது ப்ரஷாந்த் நீலுக்குப் புரிந்துவிட்டது. உடனே, ‘யஷ். என்னை நம்புங்கள். இந்தப் படத்தில் இதுவரை உங்களைக் காட்டாத அளவு மிகவும் அட்டகாசமாகக் காட்டப்போகிறேன்’ என்று அழுத்தம் திருத்தமாக யஷ்ஷிடம் ப்ரஷாந்த் நீல் அடித்துச் சொல்லியிருக்கிறார். அந்தத் துணிவு யஷ்ஷுக்குப் பிடித்தது.  அதனால் மட்டுமே அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார்.

உடனேயே திரைப்படத்தின் பிற கதாபாத்திரங்கள் முடிவு செய்யப்படுகின்றன. எல்லா முக்கியமான கதாபாத்திரங்களுமே பெரும்பாலும் புதுமுகங்களாக இருக்கவேண்டும் என்பது ப்ரஷாந்த் நீலின் எண்ணம். இதனால் தேர்வு செய்யப்பட்ட நடிகர்களுக்குப் பனிரண்டில் இருந்து பதினைந்து மாதங்கள் நடிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து, மார்ச் 2016இல் கோலாரில் ஒரு மிகப்பெரிய செட் போடப்பட்டு, கேஜிஎஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

அந்தக் காட்சிகளில் எல்லாம் ஏராளமான துணைநடிகர்கள் தேவை. ஆனால் நடிக்க வந்த துணை நடிகர்கள், ஓரிரண்டு நாட்களிலேயே வெய்யில், புழுதி ஆகியவைகளைப் பார்த்துப் பயந்து படப்பிடிப்பில் இருந்தே யாருக்கும் சொல்லாமல் ஓடிவிட்டனர். இதனால் யாருமே இனிமேல் ஓடாமல் இருக்க ஏராளமான பவுன்சர்களை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்புத் தளத்தில் இறக்கிவிட்டிருக்கின்றனர் தயாரிப்புத் தரப்பினர். அதேபோல் கோலாரில் எடுக்கப்பட்ட சுரங்கம் சார்ந்த இந்தப் பெரும்பாலான காட்சிகள், சுமார் 40 கிலோ எடையுள்ள கேமராவைத் தோளிலேயே வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் நகர்ந்துகொண்டே எடுக்கப்பட்ட காட்சிகள்தான். இவைபோன்ற காட்சிகள்தான் படத்தின் நம்பகத் தன்மையை அதிகரித்தன என்று ஒளிப்பதிவாளர் புவன் கவுடா சொல்லியிருக்கிறார்.

இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில்தான் கேஜிஎஃப் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.

கேஜிஎஃப் படத்தின் திரைக்கதையின் விரிவான அலசல், படப்பிடிப்பு சார்ந்த இன்னும் பல தகவல்கள் ஆகியவைகளை அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாம்.

தொடரும்..

Prashanth Neelலின் திரைக்கதைகள் – An Analysis – Part 2
சென்ற பாகத்தில் ப்ரஷாந்த் நீலின் திரைக்கதைகளுக்கு அடிப்படையாக அமைந்த இந்திப் படங்கள் பற்றிப் பார்த்தோம். எல்லாமே சலீம்-ஜாவேத் எழுதியவை. அமிதாப் பச்சன் நடித்தவை. இனி, ப்ரஷாந்த் நீலின் திரைக்கதைகள் எப்படி எழுதப்பட்டிருக்கின்றன என்று கவனிக்கலாம்.

முதலில் அவரது கதைகளின் பின்னணி எப்படி எழுதப்பட்டிருக்கிறது? அதன்பின் அவரது கதாபாத்திர உருவாக்கம் எப்படி இருக்கிறது? அவரது படங்களில் நாயகர்கள், வில்லன்கள், பிற கதாபாத்திரங்கள் யாவையும் எப்படி உருவாக்கப்பட்டிருக்கின்றன? எங்கு நடக்கின்றன? இவைகள் எல்லாம் திரைக்கதையில் எப்படி இணைக்கப்பட்டிருக்கின்றன? விரிவாகவே பார்க்கலாம்.

ப்ரஷாந்த் நீலின் முதல் படமான உக்ரம் திரைப்படத்தை எடுத்துக்கொள்ளலாம். உக்ரம் படம் எந்தப் பின்னணியில் நடக்கிறது?

உக்ரத்தின் பின்னணி, தாதாக்கள் சூழ்ந்த உலகம். கொடிய, இரக்கமே இல்லாத தாதாக்களும் அரசியல்வாதிகளும் அவர்களின் அடியாட்களும் நிறைந்திருக்கும் உலகம். இவர்கள் மிகவும் கெட்டவர்கள். அப்படியென்றால் இவர்களை எதிர்ப்பவன் எப்படி இருக்கவேண்டும்? அவர்களை விடவும் கெட்டவனாக இருக்கவேண்டும். ஆனால் இதில் இந்த இரண்டுபக்கங்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கெட்டவர்களான வில்லன்களுக்கு எந்தக் கொள்கையும் இல்லை. ஆனால் கெட்டவனான ஹீரோவுக்கு ஒருசில கொள்கைகள் உண்டு. நட்பு, எடுத்துக்கொண்ட கொள்கையை மீறாதது என்பது அவனது முக்கியமான கொள்கைகள். இதுதான் இரண்டுபேரையும் வித்தியாசப் படுத்துகிறது.

சலீம் ஜாவேத் படங்களில் இது மிக முக்கியம். த்ரிஷூல் படத்தில் (தமிழில் கடல் மீன்கள் & மிஸ்டர் பாரத்), எந்தக் கொள்கையும் இல்லாமல் அம்மாவை ஏமாற்றி, அந்த அம்மா தன்னைப் பெற்றுப்போட்டுவிட்டு இறந்துவிட, அதற்குக் காரணமான வில்லனை அவனது பாணியிலேயே சென்று மடக்குவான் அவனது மகனான ஹீரோ என்பதை சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்த ஹீரோ & வில்லன் ஆகிய இரண்டு பேரும் ஒரே போன்றவர்கள்தான். ஆனால் வித்தியாசம், வில்லனை வெல்வதற்காக வில்லன் செய்யும் ஃப்ராடுகளை ஹீரோவும் செய்வான். அவன் முற்றிலும் கெட்டவன் அல்ல. ஒருசில நல்ல குணங்கள் அடங்கிய கெட்டவன்.  அவனால் எதுவும் செய்ய முடியும். இதேதான் ஷோலே படத்திலும். இதேதான் Zanjeer படத்திலும் (தமிழில் அலெக்ஸ் பாண்டியன், இந்தக் கதாபாத்திரத்தில் இருந்தே எடுக்கப்பட்டது). அலெக்ஸ் பாண்டியனை நல்லவன் என்று சொல்வீர்களா அல்லது வல்லவன் என்று சொல்வீர்களா?

எனவே ப்ரஷாந்த் நீலின் கதைகளில் வரும் ஹீரோக்கள் Anti Hero என்ற, கெட்ட, முரட்டுத்தனமான வல்லவர்கள். அவர்களிடம் நீங்கள் ஒரு வேலையைக் கொடுத்தால் அதை எப்படியும் முடித்துவிடுவார்கள். ஆனால் அவர்களை விடவும் கெட்ட வில்லன்கள் இருப்பதால் அவர்களை வெல்வதற்கே இந்தக் கதாபாத்திரங்கள் இப்படி எழுதப்படுகின்றன (சலீம்-ஜாவேத் கண்டுபிடித்துப் பட்டைதீட்டிய டெம்ப்ளேட்).

அடுத்து, உக்ரம் படத்தில் என்ன செண்ட்டிமெண்ட்கள் கையாளப்படுகின்றன என்று பார்க்கலாம்.

முதலில், படம் துவங்கியதுமே ஹீரோவின் தந்தை, சிறுவனாக இருக்கும் ஹீரோவுக்குச் சொல்லிக்கொடுக்கும் ஒரு சுலோகம் வருகிறது. அது பயத்தைப் பற்றியும், பயமில்லாமல் இருக்கவேண்டிய அவசியம் பற்றியும், எதிரிகளின் உள்ளங்களில் பயத்தைக் கிளப்பிய மகாவிஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரின் கோரமான உருவமும், அவரைப் பற்றிய வர்ணனையும், மகாவிஷ்ணு எப்படி அப்படிப்பட்ட ஒரு கோரமான, கோபம் நிரம்பிய அவதாரம் எடுத்தார் என்பது பற்றியும், சாவுக்கே சாவைக் கொடுக்கக்கூடிய இப்படிப்பட்ட, உலகம் முழுக்க நிரம்பியிருக்கும் மகாவிஷ்ணுவை வணங்குகிறேன் என்ற அந்த சுலோகம் வந்ததும், ஹீரோவின் அப்பா ஹீரோவுக்குச் சொன்ன ஒரு முக்கியமான தத்துவமும் படத்தில் சிறுவனான ஹீரோவால் சொல்லப்படுகிறது.

‘போர்க்களத்தில் பயம் என்பது தேவையில்லாத சுமை. அதுவே வீரம் என்பது நமக்குத் தேவையான ஆயுதம். இந்த உலகில் நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் கோரங்கள், கொடூரங்கள் ஆகியவற்றுக்கு இடையில் ஏன் பிறந்தோம் என்று யோசிக்காதே! மாறாக, உன் கையில் இருக்கும் வீரம் என்ற ஆயுதம் ஒருபோதும் தரையில் விழாமல் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இந்த உலகத்தில் நட’ என்பதுதான் ஹீரோவின் தந்தை அவனுக்குச் சொல்லிக்கொடுத்த மிக முக்கியமான தத்துவம் என்று ஹீரோவின் வாய்ஸ் ஓவர் சொல்கிறது. ஆனால் அன்றிரவே அவனது தந்தை கொல்லப்பட்டுவிடுகிறார்.

’உன் தந்தையின் உடல், நாய்களாலும் காகங்களாலும் உண்ணப்படப்போகிறது. அவனுக்கு இறுதிச்சடங்கே நடைபெறாது’ என்று தாதா போன்ற ஒருவன் கத்துகிறான். அதைக் கேட்டு, தந்தையின் சடலத்தைப் பார்த்து, சிறுவனாக இருக்கும் ஹீரோ கதறுகிறான். அப்போது அங்கே சில வண்டிகள் வருகின்றன. அதிலிருந்து ஒரு சிறுவனும் அவனது தந்தையும் இறங்குகிறார்கள். அந்தச் சிறுவனின் தந்தை, அந்த தாதாவை மிரட்டுகிறார். தன் மகன் கேட்ட எதுவும் அவனுக்குக் கிடைக்காமல் போனதில்லை என்று சொல்லி, இதை இப்படியே விட்டுவிட்டுச் செல்லச் சொல்கிறார். அவர் பேசும் விதத்தில், அந்தத் தாதாவை விடவும் அவர் சக்திவாய்ந்தவர் என்பது புரிகிறது. இதனால் அவன் அங்கே இருந்து கோபமாகச் செல்கிறான். இதன்பின் இறந்துபோன ஹீரோவின் தந்தையின் உடல் எரிக்கப்படுகிறது.

இந்தக் காட்சியில், ஹீரோவும், அங்கு வந்து இறங்கிய இன்னொரு சிறுவனும் நண்பர்கள் என்பது காட்டப்படுகிறது. இதிலேயே ஹீரோவின் அப்பா செண்ட்டிமெண்ட் வருகிறது. ஹீரோவுக்கும் அவனது நண்பனுக்கும் இருக்கும் நட்பு செண்ட்டிமெண்ட்டும் காட்டப்படுகிறது. இவையெல்லாமே உக்ரம் படத்துக்கு மிக முக்கியமானவை.

இப்போது ஒன்று செய்யலாம். மேலே நான் சொல்லியிருக்கும் காட்சிகளைக் கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள்.  அடுத்தது, சலீம்-ஜாவேத் எழுதிய ‘தீவார்’ (Deewaar – தமிழில் ‘தீ’ என்ற படம்) திரைப்படத்தின் முதல் காட்சியைப் பாருங்கள். அதில் இரண்டு சிறுவர்கள் வருவார்கள். இவர்கள் சகோதரர்கள். அவர்களின் தந்தையும் வருவார். சில பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் வருவார்கள்.  அந்தத் தந்தையை அவமானப்படுத்துவார்கள் (காரணம், நேர்மையான தொழிற்சங்கத் தலைவரான அவர், தனது குடும்பத்தைக் கடத்திக் கொல்லப்போவதாக மிரட்டும் அவரது முதலாளியைப் பார்த்துப் பயந்து, வேறுவழியில்லாமல் அவர்களின் தொழிற்சங்க உரிமைகளையெல்லாம் முதலாளிக்கே எழுதிவைத்துவிடுவார். இதனால், உண்மை தெரியாத தொழிலாளிகள் இவரை அவமானப்படுத்தி,  ஹீரோ மகனின் கையில், ‘என் தந்தை ஒரு திருடன்’ என்று பச்சைகுத்திவிடுவார்கள்). இதனால் பாதிக்கப்பட்ட தந்தை ஊரைவிட்டே குடும்பத்தை விட்டுவிட்டு ஓடிவிடுவார். இரண்டு மகன்களையும் அவர்களின் தாய் காப்பாற்றி, பாம்பே நகருக்குக் கூட்டி வந்து ப்ளாட்ஃபாரத்தில் வாழத் துவங்குவாள். இதுதான் தீவார் படத்தின் துவக்கம்.

இந்த இரண்டு காட்சிகளுக்கும் இருக்கும் ஒற்றுமை புரிகிறதா? இவை காப்பி அல்ல. இன்ஸ்பிரேஷன். எப்படி க்வெண்டின் டாரண்டினோ தனக்குப் பிடித்த படங்களில் இருந்து இன்ஸ்பையர் ஆனாரோ அப்படி.

ஒரு கதையை ஆடியன்சுக்குச் சொல்ல நினைக்கையில், படம் முழுக்க வரப்போகும் ஒரு பெரிய செண்ட்டிமெண்ட், ஒரு பலமான ஹீரோ உவுவாகவேண்டிய பின்னணி, அந்த ஹீரோ எப்படிப் பலமாக இருக்கப்போகிறான் என்பதற்கான ஆரம்ப விதை ஆகியவற்றைத் தூவிவிடுவது சலீம்-ஜாவேத்தின் அட்டகாசமான ஃபார்முலா. அதை அப்படியே பின்பற்றியதுதான் ப்ரஷாந்த் நீலின் புத்திசாலித்தனம். இப்படித் திரைப்படம் ஒன்றின் துவக்கத்தில் பின்னணியை விளக்கும் காட்சிகளை வைப்பது 70ஸ் மற்றும் 80க்களின் டெம்ப்ளேட்தான். அப்போது வந்த பல படங்களில் இப்படிக் காட்சிகள் வரும். ஆனால், அந்தப் படங்களில் பெருமளவு சுவாரஸ்யமாக இருக்காது.

மாறாக, சலீம்-ஜாவேத் படங்கள் மற்றும் அவற்றில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்கள் மட்டும் (நான் வாழவைப்பேன், சிரித்து வாழவேண்டும், தீ, பில்லா, மிஸ்டர் பாரத், கடல் மீன்கள், அமைதிப்படை, நல்ல நேரம், கூலிக்காரன் போன்றவை) 80களில் நன்றாகவே இருக்கும். எனக்குத் தெரிந்து இந்த வரிசையில் மிகப்பெரிய ஃப்ளாப் ஆன ஒரே சலீம்-ஜாவேத் ரீமேக், பாக்யராஜ் எடுத்த ‘என் ரத்தத்தின் ரத்தமே’ (இந்தியில் Mister India – இந்தியா முழுக்க பயங்கரமாக ஓடிய படம்) மட்டுமே. அதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் உண்டு (எம்.ஜி.ஆரின் குரலை ஹீரோ ஆக்கியது). கூடவே பாக்யராஜ் அந்தப் படத்துக்குப் பொருத்தமான ஹீரோ அல்ல. கார்த்திக், கமல்ஹாஸன் போன்ற ஒருவரே அந்தப் படத்துக்கு சரியான ஹீரோ.

இப்போது மறுபடியும் உக்ரம் படத்துக்கு வருவோம்.

இந்தத் துவக்கக்காட்சி முடிந்ததும், தனக்கு உதவியதற்காகத் தனது நண்பனான மற்றொரு சிறுவனை ஹீரோ சிறுவன் சந்திக்கச் செல்கிறான். ‘உனக்கு எதாவது வேண்டும் என்றால் என்னிடம் சொல்; அவசியம் நிறைவேற்றித் தருகிறேன்’ என்று அவனது நண்பன் ஹீரோவிடம் சொல்கிறான். அப்போது, ஹீரோவின் தந்தை சொல்லும் இன்னொரு தத்துவம் வாய்ஸ் ஓவரில் வருகிறது. ‘உன் வாழ்க்கைக்கு உதவும் யாருமே உனக்குக் கிடைக்க மாட்டார்கள். ஆனால் அப்படி ஒருவன் கிடைத்தால், உன் உயிரைக் கொடுத்தாவது அந்த செய்நன்றியை மறக்காமல் திருப்பிச் செய்துவிடு’ என்ற அந்தத் தத்துவத்தின் வாய்ஸ் ஓவர் வருகையில், மலை மீது ஏறிச்செல்லும் சிறுவன் காட்டப்படுகிறான். அப்போது, ‘விஷ்ணுவை நீ வணங்கு. ஆனால் நரசிம்மரின் கோபத்தை மறந்துவிடாதே!’ என்று தந்தை பேசப்பேச, படத்தின் டைட்டில் வருகிறது.

இது எல்லாமே மேலே சொன்னபடி 70-80க்களின் சலீம் ஜாவேத் ஃபார்முலாவே. இப்படி ஒரு பெரிய எமோஷனைக் காட்டி, அதன் பின்னணியில் ஹீரோவின் கதாபாத்திரத்துக்கு நடந்த கொடுமையையும் காட்டினால், ஹீரோ பின்னால் இரக்கமில்லாத முரடனாக வருவான் என்பதை ஆடியன்சின் மனதில் இயல்பாக உருவாக்கும் ஃபார்முலா இது. கூடவே, ஆடியன்ஸ் அனைவருமே ஹீரோவின் கதாபாத்திரத்தின் மீது இரக்கம் செலுத்தும் டெக்னிக். கூடவே ஹீரோ என்ன செய்தாலும் அவனை ஆடியன்ஸ் இதன்பின் ஆதரிக்கவே செய்வார்கள். கேள்விகள் கேட்கமாட்டார்கள்.

இதன்பின் உக்ரம் படத்தின் பின்னணிக் கதை காட்டப்படுகிறது. சிவருத்ர லிங்கைய்யா என்பவன் ஒரு கொடூரமான தாதா. அவன் தனது கடத்தல் பொருட்களைக் கொண்டுவர ஒரு கப்பல் முதலாளியை அணுக, அவர் மறுக்க, அவரது மனைவியைக் கொன்று, பின்னர் மகளையும் கொல்லப்போவதாக அவரை மிரட்டுகிறான் லிங்கய்யா.  பயந்துபோய் அவன் கேட்டதைச்  செய்கிறார் அந்த முதலாளி. ஆனால் தந்திரமாக லிங்கய்யாவைப் போலீசில் மாட்டிவிட்டுவிட்டு, தனது ஒரே மகளைக் கூட்டிக்கொண்டு வெளிநாட்டுக்குத் தப்பிவிடுகிறார். சிறைக்குள் இருக்கும் லிங்கய்யா இவர் மீது கொலைவெறியில் இருக்கிறான். சிறைக்கு உள்ளிருந்தே தனது மகன் மூலம் கடத்தல் செய்கிறான்.  பல வருடங்கள் கழித்து, அந்தக் கப்பல் முதலாளியின் மகள் இந்தியா வருகிறாள். கொல்லப்பட்ட தனது தாய்க்கு அஞ்சலி செலுத்துகிறாள். இதையறிந்த லிங்கய்யா அவளைக் கொல்லச் சொல்லி ஆணையிட, திடீரென்று எங்கிருந்தோ வரும் ஹீரோ அந்தப் பெண்ணைக் காப்பாற்றித் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுகிறான். இதன்பின் என்ன நடக்கிறது? ஹீரோ யார்? அவனது பின்னணி என்ன? அவனது சிறுவயது நண்பன் என்ன ஆனான்? இதெல்லாம்தான் உக்ரம் படத்தின் கதை (ஆம். உக்ரம் பார்க்காமல் சலார் பார்த்தவர்களுக்கு, இரண்டும் ஒன்றுதான் என்று தெரியும்).

உக்ரம் படத்திலேயே, யாருக்கும் தெரியாத, ஒரு சின்ன லெவல் நடிகரை இப்படிப் பிரம்மாண்டமான பின்னணி இருக்கும் கதையில் நடிகராகப் போடும் ஃபார்முலாவை ப்ரஷாந்த் நீல் துவக்கிவிட்டார். படத்தில் ஒலிக்கும் ஹீரோவின் தந்தையின் தத்துவங்களே தனியான பஞ்ச் டயலாக்குகள் போலப் பயங்கர இசையுடன் இடம்பெறும். ஹீரோவாக நடித்திருக்கும் ஸ்ரீமுரளி (படம் வந்தபோது பலருக்கும் தெரியாத நடிகர்), மகேஷ்பாபு அல்லது விஜய் போலப் பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளில் நடித்திருப்பார். என்னவென்றால், ஸஞ்சீர் படத்தில் யாருக்குமே தெரியாத அமிதாய் பச்சன் எப்படி அவ்வளவு பெரிய கதாபாத்திரத்தில் நடித்தாரோ அதே ஃபார்முலா அப்படியே ப்ரஷாந்த் நீலால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல், படத்தின் துவக்கத்திலேயே, தாதாக்கள், அரசியல்வாதிகள், அடியாட்கள் என்று காட்டி, படத்தின் கண்டெண்ட் என்ன என்று ப்ரஷாந்த் நீல் தெளிவாகப் புரியவைத்துவிட்டார். இவர்களுக்குள்ளான பிரச்னையில் ஹீரோவுக்கு ஒரு தனிப்பட்ட Sub plot கொடுத்திருப்பார். பழைய நண்பனுடன் ஒரு உணர்ச்சிபூர்வமான கதை ஹீரோவுக்கு உண்டு. இது படத்தின் சப் ப்லாட்டாக நன்றாகவே சொல்லப்பட்டிருக்கும் (இது என்ன என்று சொன்னால், சலார் இரண்டாம் பாகத்தின் மிகப்பெரிய சஸ்பென்ஸ் உடைந்துவிடும் என்பதால் நான் இங்கே சொல்லவில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளலாம்).

உக்ரம் வந்தபோது கன்னடத்தில் அந்தப் படம் ஹிட் ஆனது. அப்போது நான் சாஃப்ட்வேரில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். எனது கன்னட சாஃப்ட்வேர் நண்பர்கள் அனைவருமே உக்ரம் பார்த்திருந்தனர். படம் நன்றாக இருப்பதாகப் பேசவும் செய்தனர். கர்நாடகா முழுதும் இந்தப் படம் இப்படியே வாய்மொழியாகப் பேசப்பட்டே ஹிட் ஆனது.  அப்போதுதான் கன்னட மக்களிடையே ப்ரஷாந்த் நீல் பற்றிய விவாதங்கள் துவங்கின.

இப்போது உக்ரம் படத்தில் ப்ரஷாந்த் நீல் உபயோகித்த டெம்ப்ளேட்கள் என்னென்ன என்று மீண்டும் ஒருமுறை யோசித்துப் பாருங்கள். படத்தைப் பார்த்திருக்காவிட்டால் ஒருமுறை பாருங்கள். பார்த்தபின்னர் சலீம் – ஜாவேத் திரைக்கதை எழுதிய படங்களையும் பாருங்கள். அவைகளைப் பார்க்காவிட்டால் இந்தத் தொடரில் நான் சொல்லும் சில அம்சங்கள் புரியாமல் போகக்கூடும்.

மறுபடியும் ப்ரஷாந்த் நீலின் திரைக்கதைப் பாதையைத் தொடர்வோம்..

(தொடரும்)..

Prashanth Neelலின் திரைக்கதைகள் – An Analysis – Part 1
KGF இயக்குநர் ப்ரஷாந்த் நீல் இந்தியாவின் மிகப் பிரம்மாண்டமான இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார். அவரது எந்த அறிவிப்பு வெளியானாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேசமயம் கே.ஜி.எஃப் இரண்டு பாகங்களுமே (முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் பெரிய ஹிட்) மிக நன்றாக ஓடியதாலேயே அவருக்கு இந்த எதிர்பார்ப்பு இந்தியா முழுதும் இருக்கிறது. பல வருடங்களாகவே ப்ரஷாந்த் நீலின் திரைக்கதைகளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தது உண்டு. காரணம் அவர் எப்படி எழுதுகிறார் என்பதைப்பற்றி அவர் மிக விரிவாகவே பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு நண்பர் விடாப்பிடியாக ஃபேஸ்புக்கில் ‘இது பற்றி எழுதாமல் உங்களை விடமாட்டேன்’ என்று தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருந்ததால், இதோ இப்போது இதை விரிவாக எழுதுகிறேன். திரைக்கதை பற்றிப் படிப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை பயன்பட்டால் மகிழ்ச்சி.

இனி, விரிவாக ப்ரஷாந்த் நீலின் திரைக்கதை வடிவங்கள், அவர் எப்படியெல்லாம் அவரது கதாபாத்திரங்களை விளக்குகிறார் என்று கவனிக்கலாம்.

ப்ரஷாந்த் நீல் எங்கிருந்து அவரது கதாபாத்திரங்களையும் திரைக்கதைகளையும் எடுத்துக்கொள்கிறார் என்பது தெரியும் தானே? 70கள் மற்றும் 80களில் இந்தித் திரையுலகையே கலக்கிய திரைக்கதை மேதைகள் சலீம்-ஜாவேத் ஆகியோரின் திரைக்கதைகளில் இருந்துதான் இன்ஸ்பையர் ஆகிறார் ப்ரஷாந்த் நீல் (அவர்கள் பெயரில் க்ளிக் செய்து அவர்கள் இருவர் பற்றிய எனது கட்டுரையை விரிவாகப் படிக்கலாம்).

எப்படி?

இதற்கு, சலீம் ஜாவேத்தின் திரைக்கதைகளில் வரும் ஹீரோ கதாபாத்திரங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கவேண்டும்.  முதலில் அவர்கள் இருவரும் சேர்ந்து எழுதிய முதல் நான்கு திரைப்படங்களில் அவர்களின் ஹீரோ வழக்கப்படி எல்லாப் படங்களிலும் வரும் நல்லவன் தான் (Adhikaar, Andaz, Hathi mere Saathi, Seetha Aur Geetha). இவைகளில் அந்தாஸ், ஹாத்தி மேரே சாத்தி, சீதா ஔர் கீதா ஆகியவை பெருவெற்றியும் பெற்றன. ஆனால் இந்த மூன்றுக்குப் பின்னால் சலீம் ஜாவேத் எழுதிய திரைக்கதைகள்தான் படுபயங்கர ஹிட்கள் ஆகி, இந்தியாவெங்கும் ஓடின. அவைதான் ப்ரஷாந்த் நீலுக்கு இன்ஸ்பிரேஷன்களாக விளங்கின.

சலீம் ஜாவேத்தின் ஐந்தாவது படமான Zanjeer, அதுவரை சிலபல தோல்விப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த அமிதாப் பச்சன் என்ற இளவயது ஹீரோவை இந்தியா முழுக்கத் தெரியப்படுத்தியது. இதில் ஹீரோவின் பெயர் விஜய். இளவயதிலேயே தனது பெற்றோர் அடையாளம் தெரியாத ஒரு ஆசாமியால் கொல்லப்படுவதைப் பார்க்கிறான் (ஆம். Batman inspiration தான்). பின்னால் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் ஆகிறான்.  இதன்பின் ஒரு கொடூர வில்லனை அவன் துரத்திக்கொண்டுபோக, பின்னால் பல திருப்பங்களுக்குப் பிறகு அந்த வில்லன் தான் இவனது பெற்றோரைக் கொன்றது என்று தெரியவரும். அதன்பின் வில்லனை விஜய் கொல்வதுதான் கதை. தமிழில் எம்.ஜி.ஆர் நடிக்க ‘சிரித்து வாழ வேண்டும்’ என்று ரீமேக் செய்யப்பட்டது.

இந்தப் படத்தில்தான் முதன்முறையாக ஹீரோ மிகுந்த கோபமுடைய – கிட்டத்தட்ட வில்லன் போன்ற கதாபாத்திரம் என்பது இந்தியில் எழுதப்பட்டது. வில்லன் செய்யக்கூடிய அத்தனையும் ஹீரோவும் செய்வான். ஆனால் அடிப்படையில் ஹீரோ நல்லவன். காரணம் அவனுக்கும் மேலே பெரிய வில்லனை அடக்கவேண்டும். இந்த டெம்ப்ளேட் பக்காவாக வேலை செய்தது. அமிதாப் பச்சன் இந்தியாவின் சூப்பர்ஸ்டார் ஆனார். அவரைத் தொடர்ந்து ரஜினிகாந்த் பல படங்களில் இதே டெம்ப்ளேட்டில் நடித்தார்.

இதேதான் சலீம் ஜாவேத் அடுத்து எழுதிய Yaadon Ki Baaraat திரைப்படத்திலும் நடந்தது. இந்தப் படமும் இந்தியா முழுக்க ஓடியது. குறிப்பாக சென்னையிலும் கோவையிலும். இதிலும் மூன்று குழந்தைகளின் பெற்றோர் வில்லனால் கொல்லப்படுவார்கள். மூன்று குழந்தைகளும் சிறுவயதில் இதனால் பிரிந்துவிடும். பின்னால் மூவரும் மூன்று பின்னணிகளில் வளர்வார்கள். அதன்பின் மூவரும் ஒன்றுசேர்ந்து, வில்லனை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே கதை. (ஸஞ்சீர் (கையில் அணியும் ப்ரேஸ்லெட்) மற்றும் யாதோங்கி பாராத் (காலில் அணியும் ஷூ) ஆகிய இரண்டு படங்களிலுமே வில்லனுக்குத் தனிப்பட்ட அடையாளம் ஒன்று இருக்கும். அதை வைத்தே வில்லனைக் கண்டுபிடிப்பார்கள்). இந்தப் படத்திலும் ஹீரோ தர்மேந்திரா கிட்டத்தட்ட அடிதடி வில்லன் போன்றே நடித்திருப்பார். பலமான ஹீரோ – அவனை விடப் பலமான வில்லன் என்ற அதே டெம்ப்ளேட். இது தமிழில் நாளை நமதே என்று எம்.ஜி.ஆர் நடித்து பிய்த்துக்கொண்டு ஓடியது.

அடுத்து வெளியானது Majboor. இது சிறிய அளவில் வெளியான படம். அமிதாப் ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனாலும் படம் ஓடியது. இதில் வழக்கமான கெட்ட ஹீரோ டெம்ப்ளேட்டை சலீம் ஜாவேத் வைக்கவில்லை. இந்தப் படம் தமிழில் நான் வாழவைப்பேன் என்று சிவாஜி நடித்து வெளியானது.

இதற்கு அடுத்து ஹீரோ பிக்பாக்கெட்டாக நடித்த Haath ki Safai. இதில் ஹீரோ பழையபடி இல்லாவிட்டாலும் பிக்பாக்கெட். வழக்கமான சிறிய வயதிலேயே தொலைந்துவிடும் சகோதரர்கள் டெம்ப்ளேட். ஓரளவே ஓடியது. தமிழில் சவால் என்று கமல்ஹாஸன் நடித்து வெளியானது.

அடுத்துதான் இன்று வரை பேசப்படும் Deewaar வெளியானது. இதில் ஹீரோ முழுக்கவே நெகட்டிவ் கதாபாத்திரம். வில்லன், அவனது போலீஸ் அண்ணன். நல்லவன். கெட்டவனைத் தேடும் நல்லவன். இதில் இறுதியாக, கெட்ட ஹீரோ இறக்கிறான். ஆனால் இறக்கையில் அவன் மீது பரிதாபம் வரும்படியான படம். இந்தப் படத்தில்தான் முதன்முறையாக, அம்மா செண்டிமெண்ட் என்ற ஆயுதம் சலீம் ஜாவேதால் கையில் எடுக்கப்பட்டது. இதிலும் சிறுவயதில் பிரியும் சகோதரர்கள் – அதில் நல்லவனுடன் இருக்கும் அம்மா-  அம்மா இல்லாமல் கெட்டவனாக மாறும் இன்னொரு சகோதரன் என்ற டெம்ப்ளேட் இடம்பெற்றது. கெட்ட சகோதரனாக அமிதாப் பச்சன் – நல்ல போலீஸாக சசி கபூர். இந்தப் படத்தில் சலீம் ஜாவேத் இன்னொன்றும் செய்தனர். ஆங்காங்கே ஹீரோவான அமிதாப் மற்றும் சசி கபூருக்குப் பஞ்ச் டயலாக் வைத்தனர். அவை இன்றுவரை பேசப்படுகின்றன. இந்தப் படம் தமிழில் தீ என்று ரஜினியை வைத்து எடுக்கப்பட்டது.

உடனேயே சலீம் ஜாவேத் எழுதிய படமே Sholay. இந்தியாவின் மிகப்பெரிய பம்பர் ஹிட் படம். இதைப்பற்றி எதுவுமே சொல்லத் தேவையில்லை என்ற அளவு ஹிட். இதிலும் நாயகர்கள் இரண்டு திருடர்கள். ஆனால் நல்ல மனம் கொண்டவர்கள். அகிரா குரோஸவாவின் செவன் சாமுராய் படத்தின் இன்ஸ்பிரேஷன். இதில் அம்மா செண்டிமெண்ட் இல்லை, ஆனால் விதவை மேல் காதல் கொள்ளும் ஹீரோ என்ற செண்டிமெண்ட் உண்டு. அதேபோல் நட்பு செண்டிமெண்ட் (சலார் இரண்டாம் பாகம் வரட்டும் – உங்களுக்குப் புரியும்).

இதன்பிறகு இரண்டு படங்கள் சரியாகப் போகாமல் (வழக்கமான எந்த டெம்ப்ளேட்டும் இல்லாமல் புதிதாக அவர்கள் எழுதிய படங்கள் – Aakri Dao & Imman Daram), மூன்றாவதாக தர்மேந்திராவை வைத்து, காமெடிப் படமான Chacha Bhatijaவை எழுதினர்.

அது எப்படி சலீம் ஜாவேதால் சகோதரர்கள் பிரிவது, அம்மா (அல்லது) அப்பா செண்டிமெண்ட் என்று எழுதாமல் நீண்டநாட்கள் தள்ளிப் போடமுடியும்? இதோ எழுதுறேண்டா என்று அவர்கள் இந்த நான்கு படங்களுக்குப் பிறகு எழுதிய Trishul இன்னொரு மெகா வெற்றிப் படமாக மாறியது. அமைதிப்படையில் அம்மாவாசை அல்வா கொடுத்துவிட்டு சுஜாதாவை மணந்து, அவருக்கு ஒரு வாரிசு பிறப்பது இந்தப் படத்தில் இருந்தே எடுக்கப்பட்டது. இளவயதில் ஒரு இளம்பெண்ணை ஏமாற்றிவிட்டுச் செல்லும் வில்லன், அவளுக்குப் பிறந்த மகன் வில்லனை எப்படிப் பழிவாங்குகிறான் என்பதே த்ரிஷூல். தமிழில் கமல்ஹாஸன் நடித்து கடல் மீன்கள் மற்றும் ரஜினி – சத்யராஜ் நடித்து மிஸ்டர் பாரத் ஆகிய இரண்டு படங்கள் த்ரிஷூலில் இருந்தே எடுக்கப்பட்டன. இந்தப் படத்திலும் ஹீரோ ஒரு முரட்டுக் கோபக்காரன். தாயை ஏமாற்றிய தந்தையை எண்ணி மிகுந்த கோபத்தில் இருப்பவன். படம் இந்தியில் பயங்கர ஹிட்.

இதன்பிறகு Don வெளியாகிறது. ஊதவே வேண்டாம் என்பதுபோல, படுபயங்கர ஹிட். தமிழில் பில்லா. ரஜினிகாந்த் ஹீரோ. டான் படத்திலும் ஹீரோ என்பவன் மிகப் பிரம்மாண்டமான ஒரு கதாபாத்திரம். மிகப்பெரிய தாதா. இண்டர்னேஷனல் லெவலில் தேடப்படுபவன். கிட்டத்தட்ட வில்லன். அவனுக்குப் பதில் நல்லவன் ஒருவனை அவனைப் போலவே நடிக்கவைத்து, வில்லன்களைப் பிடிக்க நினைக்கும் நல்லவரான போலீஸ் ஒருவரின் கதை. தமிழிலும் மிகப்பெரிய ஹிட்.

இதன்பின் அமிதாப் நடித்த Kaala Patthar. இந்தப் படத்தில் பெரும்பாலான கதை ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் நடைபெறுகிறது (இப்போதே கே.ஜி.எஃப் படத்துக்கும் காலா பத்தருக்கும் இருக்கும் தொடர்பு தெரிகிறதா?). இது நிஜமாகவே ஜார்க்கண்டில் நடந்த ஒரு நிலக்கரிச் சுரங்க விபத்து பற்றிய கதை. முன்னாள் கப்பல் கேப்டன் ஒருவர், அப்போது நடந்த ஒரு பெரிய விபத்தில் கப்பலைக் கைவிட்டுவிட்டதால் வருந்தி, ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்துவரும்போது, அவரைப் போன்ற இருவருடன் சேர்ந்துகொண்டு நிலக்கரிச் சுரங்கத்தின் கொடூர முதலாளி ஒருவனை எதிர்க்கிறார்கள். அப்போது எழும் மிகப்பெரிய விபத்தில் இருந்து சுரங்கத் தொழிலாளிகள் இவர்களால் எப்படி மீட்கப்பட்டார்கள் என்பதே கதை.

இந்தப் படத்துக்குப் பின்னரும் சலீம் ஜாவேத் சில வெற்றிப் படங்களில் பங்கேற்றுவிட்டுப் பிரிந்துவிட்டார்கள். ஆனால் நமக்குத் தேவை இங்கே விரிவாக எழுதியுள்ள படங்களே. இவற்றில் நான் எழுதியிருக்கும் வித்தியாசமான அம்சங்களையும், ப்ரஷாந்த் நீல் இதுவரை எடுத்துள்ள படங்களையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களுக்கே ப்ரஷாந்த் நீல் எப்படி சலீம் ஜாவேத்திடம் இருந்து இன்ஸ்பையர் ஆகியிருக்கிறார் என்பது புரிந்துவிடும்.

அதை விரிவாக இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தில் ஆராயலாம்..

(தொடரும்)..

சினிமா ரசனை 2.0 – புதிய புத்தகம்
இந்து தமிழ் திசை பத்திரிக்கையில் சென்ற வருடம் பல வாரங்கள் தொடராக வந்து, இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது இந்த ‘சினிமா ரசனை 2.0’.

இதற்குச் சில வருடங்கள் முன்னர் தமிழ் இந்து பத்திரிக்கையில் ‘சினிமா ரசனை’ என்ற தொடரை விரிவாக எழுதினேன். அதில் சினிமா ரசனை என்றால் என்ன, உலகின் பல சிறப்பான இயக்குநர்கள், திரை ஆளுமைகள், காமிக்ஸ் எழுத்தாளர்கள், சினிமாவின் வகைகள் என்று ஏராளமான தகவல்கள் இடம்பெற்றன. மிகச்சிறப்பான வரவேற்பும் அந்தத் தொடருக்கும், தொடர்ந்து அது புத்தகமாக வெளியானபின்னரும் சினிமா ரசனைக்கு வந்தன.

இப்போது அதே இந்து தமிழ் திசையில் சினிமா ரசனை 2.0.

சினிமா ரசனை 2.0வில், இப்போது OTT தளங்களில் வெளியாகியிருக்கும் மிகச்சிறந்த வெப் சீரீஸ்கள் பற்றி ஒவ்வொரு வாரமும் தொடராக எழுதினேன். எல்லோருக்கும் தெரிந்த வெப் சீரீஸ்கள் இதில் இடம்பெறவில்லை. மாறாக, உலகின் மிகச்சிறந்த – ஆனால் பலருக்கும் தெரியாத அட்டகாசமான வெப் சீரீஸ்கள், அவற்றின் இயக்குநர்கள், அந்த சீரீஸ்களின் பின்னணி,  அவற்றின் முக்கியத்துவம் ஆகியவை பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். அவசியம் படிப்பவர்களுக்குப் பிடிக்கும். இதுவும் தொடராக வந்தபோது நல்ல வரவேற்பு பெற்றது.

இது எனது ஆறாவது புத்தகம். இந்தப் புத்தகத்தை மிகச்சிறப்பாக வெளியிட்ட ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

புத்தகத்தை இந்த இணைப்பில் வாங்கலாம் –> சினிமா ரசனை 2.0 புத்தகம் .

திரை புத்தகம் – புதிய தொடர்
Zero Degree பதிப்பகத்தில் இருந்து புதிதாக வெளிவந்திருக்கும் சினிமா பற்றிய இணைய இதழ் – The Talkie – https://thetalkie.in/ . இந்த இணைய இதழின் பதிப்பாசியர்களாக Ramjee & Gayathri மற்றும் பொறுப்பாசிரியராக Deepa Janakiraman ஆகியவர்கள் இருக்க, பல கட்டுரைகள் இந்த முதல் இதழில் வெளிவந்திருக்கின்றன. இந்த முதல் இதழில் இருந்து இனி நமது புதிய தொடராக, ‘திரை புத்தகம்’ ஒவ்வொரு இதழிலும் வெளியாகும்.

அது என்ன திரை புத்தகம்? அது ஏன் திரைப்புத்தகம் என்று வரவில்லை என்று கேட்டால், திரையில் இருந்து புத்தகம் என்பதைக் குறிக்கும் வகையில் ஒரு தலைப்பு என்பதால் திரை – புத்தகம். இந்தத் தொடரில், மிக முக்கியமான, மிகச்சிறந்த, சினிமாவுக்குத் தேவையான புத்தகங்கள் பற்றிய விரிவான கட்டுரைகளை எழுதுகிறேன்.

முதல் கட்டுரையாக, Quentin Tarantino எழுதியிருக்கும் புத்தகமான ‘Cinema Speculation’ பற்றிய கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. படித்துப் பாருங்கள். இதழின் மற்ற கட்டுரைகளையும் மறக்காமல் படித்துப் பாருங்கள். அவசியம் சினிமா ஆர்வலர்களுக்குத் தேவையான எல்லாமே இதில் இடம்பெறும். Cheers.

கட்டுரையின் இணைப்பு – திரை புத்தகம்

பி.கு – இதழுக்கு வருட சந்தா, 499/-

The Day of the Jackal – TV Series
பள்ளி படிக்கும்போது முதல்முறையாக the day of the jackal நாவலைப் படித்தேன். அப்போதைய காலகட்டத்தில் மிக விறுவிறுப்பான pulp நாவலாக இது இருந்தது. சிறுவயதில் நாம் படித்து அசந்து போனவை இன்று வரை நினைவிருக்கும் அல்லவா? அப்படி அந்த நாவலும் நினைவுள்ளது. அதன்பின் அதே போல இருக்கும் சில நாவல்களைத் தேடிப் படித்தேன். அதில் ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய Shall we tell the President நாவலும் (அமெரிக்க அதிபரைக் கொல்லப் பார்க்கும் ஒரு கொலைகாரனின் கதை – இது ஜூனியர் விகடனில் மொழிபெயர்ப்பாக அப்போது வந்தது), Greg Iles எழுதிய Spandau Phoenix நாவலும் David Mason எழுதிய Shadow over Babylon (சதாம் ஹுசேனைக் கொல்லும் முயற்சி) நாவலும் முக்கியமானவை. அப்போது இந்த மூன்றையும் படித்து அடைந்த ஜாலி நன்றாக நினைவுள்ளது.

பின்னர் பல வருடங்களுக்குப் பின் day of the jackal நாவலை வைத்து எடுக்கப்பட்ட 70க்களில் வந்த படத்தையும், அதன்பின் வெளியான ப்ரூஸ் வில்லிஸ் நடித்த Jackal படத்தையும் பார்த்தேன். ப்ரூஸ் வில்லிஸ் படம் நாவலிலிருந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு, averageஆகவே எடுக்கப்பட்டதால் பிடிக்கவில்லை. ஆனால் பழைய படம் நன்றாக இருந்தது.

அந்த நாவலின் மிகப்பெரிய பலம், அதன் அரசியல் பின்னணி. ஃப்ரெஞ்ச் அதிபர் சார்ல்ஸ் டி கால் எடுத்திருந்த சில அரசியல் முடிவுகளால் அவரைக் கொல்ல முயற்சி செய்யும் ஒரு தீவிரவாத அமைப்பின் கதையே The Day of the Jackal. உண்மையிலேயே சார்ல்ஸ் டி காலைக் கொல்ல முயற்சிகள் நடந்திருக்கின்றன. அவைகளை அட்டகாசமான கற்பனையோடு கலந்து ஃப்ரெடெரிக் ஃபோர்ஸித் எழுதியிருப்பார். கதையில் ஏன் அவரைக் கொல்ல நினைக்கிறார்கள் என்ற அரசியல் பின்னணி நன்றாக இருக்கும்.

இப்போது இதே பெயரில் ஒரு புதிய சீரீஸ் வந்துள்ளது. நாவல் மீது இருக்கும் விருப்பத்தால் அந்த சீரீசைப் பார்த்தேன். நாவலின் மிக முக்கியமான அரசியல் காரணங்கள் எல்லாவற்றையும் ஒழித்துக் கட்டிவிட்டு, யாரைக் கொல்லவேண்டுமோ அந்த நபருக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லாமல், சில வியாபார எதிரிகள் சேர்ந்து ஒரு ஆளைக் கொல்வதுபோல தட்டையாகத் திரைக்கதை எழுதி, நாவலை மொத்தமாகத் தீர்த்துக் கட்டிவிட்டார்கள்.

நாவலுக்கும் சீரீசுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. அவை நன்றாக இருந்தால் கூட, பரவாயில்லை என்று விட்டுவிடலாம். ஆனால் அந்த வேறுபாடுகள் எல்லாமே எப்படி அந்த நாவலைச் சிதைக்கலாம்; எப்படி அதைத் தூக்கில் போட்டு விஷம் கொடுத்துத் துப்பாக்கியால் சுட்டுப் புதைக்கலாம் என்பது போலவே இருக்கின்றன. சீரீசின் ஹீரோ ஒரு பெண்ணாக மாற்றப்பட்டுவிட்டார். அதிலும் கறுப்பினப் பெண். வில்லனோ வானவில் அன்பராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார் (யாரைக் கொலை செய்யவேண்டுமோ அவருமே வானவில் அன்பர்தான்). வில்லனுக்கு ஒரு உணர்ச்சிகரமான பின்னணி மிக விரிவாக உள்ளது. குழந்தை குட்டியோடு ஜாலியாக செட்டில் ஆன நபராக இருக்கிறார் வில்லன். இதெல்லாம் நாவலில் வராது. வில்லன் யார் என்பதே நாவலில் இருக்காது. அதுதான் நாவலின் ப்ளஸ் பாயிண்ட். இப்படித் துவங்கி ஏராளமான மிக மிக ஆவரேஜான மாற்றங்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இதைவிட Jack Ryan சீரீஸ் எவ்வளவோ பரவாயில்லை.

ஒரு உதாரணமாக, மோகமுள் நாவலை எடுத்துக்கொள்வோம். அதில் பாபு, யமுனா, தங்கம்மா ஆகிய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அதை ஒரு சீரீசாக இப்போது எடுக்க நினைக்கும் நபர், சேனல் கொடுக்கும் அழுத்தத்தால் தங்கம்மாவை தங்கப்பன் என்று மாற்றி, தங்கப்பனை வயதான நபர் ஒருவர் திருமணம் செய்துகொண்டு ஒன்றுமே செய்யாமல் விரகதாபத்தால் தவிக்கவிட்டுவிட்டு, இதனால் பாபுவை ஒரு நாள் பார்க்கும் தங்கப்பன், சுவர் ஏறிக் குதித்து பாபுவை இரவில் சந்தித்து இருவரும் சல்லாபம் செய்வதுபோல எடுத்தால் எப்படி இருக்கும்? மோகமுள்ளின் ரசிகர்களுக்குக் கொலைவெறி வராது?

ஒரு க்ளாசிக்கை அப்படியே விட்டுருங்கடா! அதை ஏண்டா இப்படி எந்தவித முக்கியத்துவமும் இல்லாம சிதைச்சீங்க என்று அலறலாம் போலவே day of the jackal சீரீசைப் பார்க்கும்போது தோன்றியது. இதையெல்லாம் விட, டேவிட் ஃபிஞ்ச்சர் எடுத்த Killer படம் அட்டகாசமாக இருக்கும். அதுவுமே day of the jackal கதையால் இன்ஸ்பையர் ஆனதுதான். நாவலின் இறுதி நிமிடங்கள் அற்புதமாக இருக்கும். எல்லாமே இந்த சீரீசில் அவுட்டு.

நாவலையே படிக்காமல் சீரீசை நீங்கள் பார்த்தால் ஒருவேளை உங்களுக்குப் பிடிக்கலாம். ஆனால் அப்போதுமே, தங்கம்மா தங்கப்பன் ஆகிவிட்ட கதையை நீங்கள் நினைவுவைத்துக்கொள்ளவேண்டும்.

Bramayugam (2024) – Malayalam
ப்ரமயுகம் வெளியாகி மலையாள பாக்ஸ் ஆஃபீசை ஒரு கலக்கு கலக்கிக்கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் அட்டகாசமான விமர்சனங்கள் பெற்றுக்கொண்டு இருக்கிறது.  படத்தை அனைவரும் கட்டாயம் திரையரங்குகளில்தான் பார்க்கவேண்டும் – இது OTT படம் இல்லை என்று படம் வந்த மறுநாள் பார்த்துவிட்டு எழுதியிருந்தேன். ப்ரமயுகம் எப்படி இத்தனை பெரிய வெற்றி அடைந்தது? எப்படி இந்தப் படம் மலையாள ஆடியன்சுக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது? இது ஏன் மலையாளப் படங்களில் அவசியம் க்ளாசிக் என்ற இடத்தை அவசியம் அடையப்போகிறது?  எப்படி விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆஃபீசிலும் பிய்த்துக்கொண்டு ஓடுகிறது? இந்தக் கேள்விகளுக்கு மட்டும் இல்லாமல், ப்ரமயுகத்தில் சொல்லப்படும் கருத்துகள், அவைகளுக்கான பின்னணி என்ன? இன்னும் பல கேள்விகளுக்கு விடைகளை இந்தக் கட்டுரையில் கவனிக்கலாம்.

SPOILER ALERT – படத்தை நீங்கள் பார்க்கவில்லை என்றால் இந்தக் கட்டுரையில் விவாதிக்கப்படும் ஸ்பாய்லர்கள் உங்களை பாதிக்கலாம்.

முதலில், ப்ரமயுகத்தின் பின்னணி. தெற்கு மலபாரில் 17ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை இது. கேரளாவின் சரித்திரத்தில் இந்த நூற்றாண்டுக்கு ஒரு முக்கியமான பின்னணி உண்டு. இந்த நூற்றாண்டில்தான் ஐரோப்பியர்கள் கேரளாவுக்குப் படையெடுத்தது நடந்தது. வாஸ்கோ ட காமா இதற்கு முன்னரே பதினைந்தாம் நூற்றாண்டில் கேரளா வந்திருந்ததால் அதன்பின் சிறுகச்சிறுக ஐரோப்பியர்கள் வரத்துவங்கி, 1601 முதல் 1699 வரையிலான வருடங்களில் ஏராளமான ஐரோப்பியர்கள் சாரிசாரியாகக் கேரளா வந்தடைந்தனர். இவர்களில் பிரிட்டிஷ்காரர்களும் உண்டு. (வாஸ்கோ ட காமா காலத்திலேயே போர்ச்சுக்கீசியர்கள் கோட்டைகள் எல்லாம் கேரளாவில் கட்டிவிட்டனர்). கேரளாவை ஐரோப்பியர்களின் கீழ் அடிமைப்படுத்தும் வேலை இப்படியாக இந்தப் பதினேழாம் நூற்றாண்டில்தான் பெரிதும் துவங்கியது. இந்த வேலைகள் பின்னணியில் நடந்துகொண்டிருக்கும்போதுதான் ப்ரமயுகத்தின் கதை நடக்கிறது. ப்ரமயுகம் என்றால் என்ன என்று படத்தில் ஒரு இடத்தில் மம்மூட்டி சொல்வார். அதை இந்தச் சம்பவங்களுடன் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

பிரமயுகத்தில் சொல்லப்படும் கதை என்ன?

மிக எளிமையான கதை. போர் நடப்பதால் அந்தப் போரில் இருந்து தப்பித்து ஆற்றின் அக்கரைக்கு சென்றுவிட்டால் உயிர்பிழைத்துவிடலாம் என்று ஓடிவரும் ஒடுக்கப்பட்ட சாதிகளில் ஒருவனான பாணன் ஒருவன் (கோயிலில் கடவுள் முன்னர் பக்திப் பாடல் பாடுபவன்), வழிதவறி ஒரு பழைய கால மலையாள வீட்டுக்கு (மணா என்று மலையாளத்தில் சொல்லப்படும் தோட்டம் உள்ளடக்கிய பெரிய வீடு) வந்துவிடுகிறான். அந்த வீட்டின் எஜமானன் கொடுமோன் போட்டி என்ற உயர்சாதிக்காரன். அவனுடன் ஒரு சமையல்காரனும் வசித்துவருகிறான். பாணனைப் பாடச்சொல்லிக் கேட்கும் கொடுமோன் போட்டிக்கு பாணனைப் பிடித்துவிட, இனிமேல் தன்னுடன் தங்கலாம் என்று உத்தரவிடுகிறான். ஆனால் பாணன் அங்கிருந்து சொந்த ஊருக்குப் போய்த் தனது அம்மாவுடன் வாழவேண்டும் என்று நினைக்கிறான். இருந்தாலும் ஒரு பகடை விளையாட்டில் பாணனை ஏமாற்றி, அங்கேயே இருக்கவேண்டும் என்று மறுபடி உத்தரவு இட்டுவிடுகிறான் கொடுமோன் போட்டி. அதனைத் தாண்டி பாணனால் அங்கிருந்து செல்ல முடிவதில்லை. மெல்ல மெல்ல சமையல்காரன் மூலம் கொடுமோன் போட்டியைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பாணன் இறுதியில் தப்பித்து வெளியேறினானா இல்லையா என்பதே ப்ரமயுகத்தின் கதை.

இந்தக் கதையை நாம் கவனித்தால், ஏற்கெனவே மம்மூட்டியின் மிகப்பெரிய வெற்றிப்படமான விதேயன் திரைப்படத்தின் கதையும் கிட்டத்தட்ட இதேதான் என்று புரியும். விதேயன் மற்றும் அதே கதையின் இன்னொரு வடிவமான பொந்தன் மாடா ஆகிய இரண்டு படங்களுக்காக அந்த வருடத்தின் தேசிய விருது மம்மூட்டிக்குக் கிடைத்தது. விதேயனில் வரும் பாஸ்கர பட்டேளர் என்ற கதாபாத்திரம் உயர்சாதித் திமிரை பார்ப்பவர்கள் அதிர்ச்சியடையும் வண்ணம் வெளிப்படுத்தும். அந்தக் கதை நடந்த காலகட்டத்தில் கேரளாவில் உயர்சாதியினர் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களைத் துன்புறுத்தி மிருகங்கள் போல நடத்தினார்கள் என்பது விதேயனில் முகத்தில் அறையும்படி அடூர் கோபாலகிருஷ்ணனால் சொல்லப்பட்டிருக்கும்.

இந்த விதேயனின் பாஸ்கர பட்டேளர் தான் ப்ரமயுகத்தின் கொடுமோன் போட்டி. உண்மையில் அதில் வரும் பாஸ்கர பட்டேளர் போலத்தான் ஒரு நாற்காலியில் எப்போதும் அமர்ந்துகொண்டும் உலவிக்கொண்டும் பல முடிவுகளை எடுக்கிறான். அதேபோல, விதேயனில் பாஸ்கர பட்டேளரின் விசுவாசமான வேலையாளான தொம்மிக்கு பாஸ்கர பட்டேளர் மீது அளவுகடந்த விசுவாசம். இருந்தாலும் பாஸ்கர பட்டேளர் செய்யும் வேலைகள் தொம்மிக்குப் பிடிப்பதே இல்லை. இருந்தும் பட்டேளரை விட்டுப் போகமுயாத சூழல் (உயிர் போய்விடும்). இதனாலேயே இறுதியில் பாஸ்கர பட்டேளர் இறந்ததும் அங்கிருந்து தப்பித்துக் காடுகளின் இடையே மகிழ்ச்சியாக, சுதந்திரமாக ஓடிவருவான். தொம்மிக்கும் ப்ரமயுகத்தின் பாணனுக்கும் என்ன வித்தியாசம்? ஆனால் ப்ரமயுகத்தில் விதேயனின் அடிப்படைக் கதையை எடுத்துக்கொண்டு அதற்கு தொன்மம் என்று இன்னொரு வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராகுல் சதாசிவன். அது கட்டாயம் அவரது திறமைதான் என்பதில் சந்தேகம் இல்லை.  சுருக்கமாக, விதேயன் இல்லாமல் ப்ரமயுகம் இல்லை.

ராகுல் சதாசிவனின் இதற்கு முந்தைய ‘பூதகாலம்’ இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டிருக்கும் அற்புதமான சைக்கலாஜிகல் திரில்லர் படங்களில் ஒன்று. அதில் வரும் அமானுஷ்ய அனுபவங்கள் கதாபாத்திரங்களுக்கு நடக்கிறதா அல்லது பிரதான கதாபாத்திரத்தின் மனப்பிரமையா என்பது ஆடியன்சுக்கு இறுதிவரை சுவாரஸ்யமாகவே சொல்லப்பட்டிருக்கும். அதில் சைக்கலாஜிகல் திரில்லர் எடுத்த ராகுல் சதாசிவன் இந்தமுறை பிரமயுகத்தில் வெளிப்படையான ஹாரர் படம் எடுத்திருக்கிறார்.

கேரளாவில் பழைய புத்தகங்களை எடுத்துப் பார்த்தால் ஒரு பெரிய வீடு சார்ந்த பேய்க்கதைகள் மிக அதிகம். அதேபோல் ஏற்றுமானூர் சிவகுமார் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய தொன்மம் சார்ந்த பேய்க்கதைகளும் அதிகம்.  ‘சுருளி’ படத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி எடுத்துக்கொண்ட களம் போன்றதுதான் ப்ரமயுகம். சுருளியில் வரும் இருவர் யார்? போலீஸ்காரர்கள் என்று சொல்லப்பட்டாலும் அதில் இறுதிவரை இருவரைச் சார்ந்த மர்மங்கள் பல காட்சிகளில் மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கும். அந்த கிராமத்தில் இருக்கும் மனிதர்களுக்கு ஏன் நினைவுசக்தி இல்லாமல் இருக்கிறது? அதேபோல் ப்ரமயுகத்தில் ஒரு கட்டத்துக்குப் பின்னர் பாணனுக்குத் தான் யார், தனது அம்மா பெயர் என்ன என்பதெல்லாமே எப்படி மறக்கிறது? இளைஞனாக வரும் பாணன் படத்தின் இறுதியில் நடுத்தர வயதான ஆளாக எப்படி மாறினான்? அப்படி எத்தனை நாட்கள் அந்த மனையின் உள்ளே இருந்தான்? சுருளியில் படத்தின் துவக்கத்தில் வரும் திருடன் பற்றிய கதை எதை உணர்த்துகிறது?

புதையலைக் காப்பாற்றும் பூதம் என்று ஒரு சொல்லாடல் இருக்கிறது அல்லவா? Tumbbad படத்தில் இந்தக் கருத்தை வைத்துக்கொண்டு ஒரு கதை வரும். அதேபோன்ற ஒரு கருத்தை வைத்துக்கொண்டுதான் ப்ரமயுகம் எடுக்கப்பட்டிருக்கிறது. ப்ரமயுகத்தின் ஒரு காட்சியில் ‘இந்த வீட்டின் எஜமானன் மட்டுமல்ல; இந்த வீட்டின் அடிமையும் கொடுமோன் போட்டிதான்’ என்று சமையல்காரன் சொல்வதாக ஒரு வசனம் வரும். அது ஏன் என்று படத்தில் கொடுமோன் போட்டிக்குப் பின்னான கதை வெளியாகும்போது நமக்குப் புரியும்.

கொடுமோன் போட்டி அமர்ந்துகொண்டிருக்கும் அந்த வீடு எப்படிப்பட்டது? மிகப் பழையதாக மாறி, வீட்டுக்குள் இருக்கும் பொருட்கள் எல்லாமே மக்கிப்போய், அந்த வீட்டுக்குள் ஒருவேளை நாம் நுழைந்திருந்தால் அருவருப்பில் மயங்கி விழுந்திருப்போம் என்று சொல்லக்கூடிய வகையில்தான் இருக்கிறது. சரியாகப் பராமரிக்கப்படாமல் ஒருவித அசூயை உணர்வையே ஏற்படுத்தும் வீடு அது. அதில் இருக்கும் சமையல்கூடமும் அப்படியேதான் இருக்கிறது. அங்கே சமையல்காரன் சமைக்கையிலும் சரி, உணவை கொடுமோன் போட்டியும் பாணனும் உண்ணும்போதும் சரி, பார்க்கும் நமக்கு அருவருப்பைக் கடத்தும்வகையில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாகக் கொடுமோன் போட்டிக்கான மாமிச உணவு. இதற்கெல்லாம் காரணம் கொடுமோன் போட்டியாக இருக்கும் சாத்தன் என்பது அந்தக் கதை வெளிப்படும்போது புரிகிறது.

அதர்வண வேதத்தில் கரைகடந்த கொடுமோன் போட்டியின் வம்சத்தில் மூதாதையர் ஒருவர், வாராஹி என்ற துர்மாந்திரீகம் சார்ந்த கடவுளை வழிபட்டு ஒரு வரம் பெறுகிறார். அவரிடம் ஒரு பெட்டி வாராஹியால் அளிக்கப்படுகிறது. அதில் இருப்பது சாத்தன். அந்த சாத்தனை அடிமைப்படுத்தினால் என்ன வேண்டுமானாலும் சாத்தனின் மூலம் அடையமுடியும் என்பது கதை. அந்த சாத்தன், தன்னைக் கொடுமைப்படுத்திய மூதாதையரை வஞ்சித்து, ஏமாற்றிக் கொல்கிறது. அந்தப் பரம்பரையையே கொன்றுவிடுகிறது. அதன்பின் கொடுமோன் போட்டியின் வடிவம் எடுத்துக்கொண்டு அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறது. அந்தக் கொடுமோன் போட்டியின் வம்சத்தைச் சேர்ந்த, வேலைக்காரிக்கும் கொடுமோன் போட்டிக்கும் பிறந்த illegitimate மகன் கொடுமோன் போட்டியின் வடிவில் இருக்கும் சாத்தனுடன் சமையல்காரனைப் போல நடித்துக்கொண்டு, தக்க சமயம் வரும்போது அவனை அடிமைப்படுத்துவதற்காகவே அந்த வீட்டில் பல வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறான். சாத்தனுக்கு அவனது அடையாளம் புரியவில்லை. காரணம் நம்பூதிரிகளான கொடுமோன் போட்டியையும் அவனது  மூதாதையர்களையும் அழித்த சாத்தன், முறைதவறிப் பிறந்த குழந்தையை மனிதனாகவே மதிக்கவில்லை. அந்தப் பக்கமே அதன் கவனம் செல்லாததால் சமையல்காரன் யார் என்றும் சாத்தனுக்குப் புரிவதில்லை. இது எல்லாமே அங்கே நிஜமாக நடந்த அநியாயங்களின் இன்னொரு வடிவமே.

உங்களது உண்மையான வடிவத்தைப் பார்க்கவேண்டும் என்று பாணன் சொல்கையில் கொடுமோன் போட்டியாகிய சாத்தன், அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று சொல்லிச் சிரிக்கிறது. படத்தின் துவக்கத்தில் இருந்தே காலம் என்ற இந்தக் கருத்து பரவலாகவே பேசப்படுகிறது. எத்தனையோ ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்து, பின்னர் அத்தனை குடும்பத்தினர்களையும் அவர்களின் வாரிசுகளையும் அழித்த சாத்தனுக்குத்தான் காலம் என்பதன் பொருள் புரியும். அந்த விலைமதிப்பில்லாத காலத்தை நீ எனக்குக் கொடு என்று சொல்லியே பாணனை அது அடிமைப்படுத்துகிறது. அதேபோல் பிராமணன் என்பவன் பிறப்பால் இல்லை; செய்யும் கர்மா என்ற தொழிலால்தான் அறியப்படுகிறான் என்றெல்லாம் கொடுமோன் போட்டியாகிய சாத்தன் சொல்வது மிகப்பெரிய வஞ்சனையின் வடிவம்தான். காரணம் கேரளாவில் அக்காலத்தில் உயர்சாதியினர் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. ஒரு நம்பூதிரியாகவே தன்னை உருமாற்ற்றிகொண்டு அமர்ந்திருக்கும் சாத்தன் இப்படிச் சொல்லியே முதலில் பாணனை உள்ளே இழுக்கிறது. பின்னர் வழக்கப்படியே அடிமைப்படுத்துகிறது.

அதேபோல், படத்தின் துவக்கத்தில் இரண்டு பேராக அறிமுகம் ஆகையில் அதில் ஒருவனை ஒரு யட்சியை வைத்துக் கொன்றுவிட்டு, தனியாளாக மாட்டிக்கொண்ட பாணனைத் தன்னிடம் வரவைத்து ஒரு சிலந்தி, தனது வலையில் சிக்கிய பூச்சியை எப்படியெல்லாம் துன்புறுத்துகிறதோ அப்படித் துன்புறுத்தி இன்பம் அடைகிறது கொடுமோன் போட்டியாகிய சாத்தன். ஒரு காட்சியில், படத்தின் துவக்கத்தில், அலைந்து திரிந்துகொண்டிருந்த பாணனுக்கு இருப்பிடம் கொடுத்து உணவும் கொடுத்த கொடுமோன் போட்டியிடம் பாணன் வந்துசேர்ந்தது கடவுளின் சித்தம் என்று பாணன் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்ல, ‘கடவுளா? நான் தானே உனக்கு உணவு கொடுத்தது? கடவுள் என்ன செய்தான்?” என்று உடனே கொடுமோன் போட்டி சொல்லும் காட்சி, பாணனைப் பற்றிய பின்னணி விபரங்களையெல்லாம் நேரில் பார்த்ததுபோலக் கொடுமோன் போட்டி சொல்வது, பின்னர் பாணனின் தாயாரிடம் சென்று சேரவேண்டும் என்ற பாணனின் ஆசை பற்றிச் சொல்வது என்பதெல்லாமே பின்னால் வரக்கூடிய சாத்தன் பற்றிய foreshadowing என்பது போகப்போகப் புரியும். வீட்டிலேயே எப்படிப் பாணன் அடைபட்டுக்கிடக்கிறானோ அப்படி சாத்தனும் அங்கேயேதான் அடைபட்டிருக்கிறது. எனவே அளவிடமுடியாத காலம் அதன் கையில் இருக்கிறது. அந்தக் காலத்தை வைத்துக்கொண்டு பிறரைத் தன்னுடைய இஷ்டத்துக்கு ஆட்டுவித்து மகிழ்கிறது.

தனது ஆணையை மீறி வெளியேற நினைக்கும் பாணனிடம், ‘இந்த மழையை மீறி எப்படிச் செல்வாய்?’ என்று கொடுமோன் போட்டி கேட்ட தருணத்தில் இருந்து பல நிமிடங்களுக்கு மழை கொட்டிக்கொண்டே இருக்கிறது. அப்போது ‘இந்த மழை சில நாட்கள் நீடிக்குமா, மாதங்களா அல்லது வருடங்களா என்பது தெரியாது. சென்றமுறை மூன்று வருடங்கள் விடாமல் பெய்தது’ என்று குரூரமாக சிரித்துக்கொண்டே கொடுமோன் போட்டி சாதாரணமாகச் சொல்வதெல்லாம் இந்தப் படத்தில் துவக்கத்தில் இருந்தே வரும் ‘காலம்’ என்பதன் நீட்சிதான். இந்த வீட்டுக்குள் வந்துவிட்டால் காலம் என்பது எப்படியெல்லாமோ வேலை செய்கிறது. பாணனுக்கு திடீரென்று வயதாகிறது. அதுவே கொடுமோன் போட்டி, க்ளைமாக்சில் வடக்கன் வீரகதா போன்ற உண்மையான கொடுமோன் போட்டியின் தோற்றத்தில் இளமையாக வருகிறார்.

தும்பாட் படத்தைப் போலவே ப்ரமயுகத்தின் இறுதியிலும் ஒரு நீதி சொல்லப்படுகிறது. இரண்டு வகையாக அதைப் புரிந்துகொள்ளமுடியும். ‘சாத்தனிடம் இருந்து நீ சக்தியை எடுத்துக்கொண்டால் எங்களைப் போன்றவர்கள் இறந்துவிடுவார்கள். வேண்டாம்’ என்று பாணன் சமையல்காரனிடம் இறைஞ்சுவது ஏற்கனவே கேரள சரித்திரத்தில் நடந்த பெரும் பிரச்னைகளை நினைவுபடுத்தாமல் இருக்காது. அதனுடன் சேர்ந்து, தீமை என்பது அழியாது; வேறு வடிவம் வேண்டுமானால் எடுக்கும் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.

எப்படி Nosferatu, Dracula போன்ற கதைகளில் மிகப்பெரிய வீட்டுக்குள் இருக்கும் எஜமானன் ஒருவன் தனது வீட்டுக்குத் தான் யாரென்று தெரியாமல் வரும் ஒரு அப்பாவியை அடிமைப்படுத்தும் கதை வருமோ அப்படியே அதே வகையைச் சேர்ந்த ப்ரமயுகமும் ஒரு க்ளாசிக் கதையைக் கையாண்டிருக்கிறது. கூடவே இன்செப்ஷன் படத்தை நினைவுபடுத்தும் காட்சி ஒன்றும் படத்தில் உண்டு. அதேசமயம் எடுத்துக்கொண்ட கரு, இதேபோன்ற இன்னொரு கறுப்பு வெள்ளைப் படமான Lighthouse படத்தை லேசாக நினைவுபடுத்தும். சரித்திர காலத்தில் நடக்கும் கதை என்பதால்தான் கறுப்பு வெள்ளை என்பதில் உறுதியாக இருந்ததாக இயகுநர் ராகுல் சதாசிவன் சொல்லியிருக்கிறார். Raging Bull எப்படிக் கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டதோ அப்படி.

சந்தோஷ் சிவன் மலையாளத்தில் ’அனந்தபத்ரம்’ என்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார். இந்தப் படத்திலும் தொன்மம் சார்ந்த ஒரு திகில் கதைதான் மையம். அது ஒரு நாவலில் இருந்து உருவாக்கப்பட்ட படம். இதேபோல் ஜி அரவிந்தன் எடுத்த ‘கும்மாட்டி’ திரைப்படமும் தொன்மம் சார்ந்த கதையே. ஆனால் அனந்தபத்ரம் நேரடியான திகில் படமாக இருக்க, கும்மாட்டி மிக இயல்பான, எளிமையான கதையாக இருக்கும். இதெல்லாம் நான் சொல்வதன் காரணம், மலையாளத்தில் தங்களின் வேர்களை விடாமல் படம் எடுத்துக்கொண்டே இருப்பதே. ஒவ்வொரு கதையும் வித்தியாசமாகவே இருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேல், திரைக்கதை சார்ந்து, ப்ளேக் ஸ்னைடர் தனது Save the Cat (திரைக்கதை என்னும் பூனை) புத்தகத்தில், மொத்தமாகப் பத்து வகைகளுக்குள் உலகின் அத்தனை படங்களயும் பிரித்துவிடலாம் என்று சொல்லி உதாரணங்கள் கொடுத்திருப்பார். அதில் Monster in the House என்பது முக்கியமான ஒரு வகை. அந்த வகையின் கீழ் கச்சிதமாகப் பொருந்தும் படமாகவும் ப்ரமயுகம் இருக்கிறது.

படத்தில் குறைகள் இல்லையா? அவசியம் உள்ளன. க்ளைமேக்ஸ் காட்சிகளில் லேசான செயற்கைத்தன்மை இருந்தது. படத்தில் யட்சி என்று ஒரு கதாபாத்திரம் எந்தவிதப் பின்னணியும் இல்லாமல் வருகிறது. சமையல்காரனுக்குப் பெரிய பின்னணி இல்லை. திடீரென்று கொடுமோன் போட்டியின் மகன் என்று அவன் சொல்லிக்கொள்ளும்போது முன்னாலேயே எதாவது foreshadowing செய்திருக்கலாமே என்று தோன்றியது. ஆனால் இவையெல்லாமே சிறிய குறைகள்தான். படம் பார்க்கும் அனுபவத்தை இவை பாதிக்கவில்லை.

தற்காலத்தில் வந்திருக்கும் மிக அருமையான படமாக ப்ரமயுகம் மாறியிருக்கிறது. கேரளாவில் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவசியம் இது ஒரு முக்கியமான படமும் கூட.  படத்தைப் பாருங்கள். அது உங்களுக்குப் பிடிக்காமல் ஒருவேளை போனாலும் பார்க்காமல் இருக்கவேண்டாம்.  ஆங்கிலத்தில் Mike Flanagan எப்படி ஹாரரில் முக்கியமான ஒரு இயக்குநராகத் திகழ்கிறாரோ, அப்படி அந்தப் பாதையில் ராகுல் சதாசிவன் செல்லத் துவங்கியிருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

பி.கு – Jump Scareகளை எதிர்பார்த்து இந்தப் படத்துக்குச் செல்லவேண்டாம். இது அப்படிப்பட்ட படம் இல்லை.

OTT Platforms & Films – An analysis
அந்திமழை மே 2021 இதழுக்காக எழுதியது.

நான் சாஃப்ட்வேரில் வேலை செய்துகொண்டிருந்தபோது, பெங்களூரில், 2008ன் இறுதி மாதங்களின்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் Bigflix என்ற திட்டத்தின்கீழ், வாரம் மூன்று டிவிடிக்கள் வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம். இதில் ஒரு மெம்பராக சேர்ந்து, கிட்டத்தட்ட 2011 ஜூன், ஜூலை வரை ஏராளமான படங்களை இப்படிப் பார்த்துவந்தேன். ரிலையன்ஸ் பிக்ஃப்ளிக்ஸில் இல்லாத படமே இல்லை. எந்தப் படமாக இருந்தாலும் தரமான ஒரிஜினல் டிவிடி அவர்களிடம் வந்துவிடும். எனவே பிடித்த படங்களை எடுத்துப் பார்த்துக்கொண்டு நிம்மதியாகக் காலம் கழித்த சூழல். அப்போது, 2011 ஜூலை வாக்கில், திடீரென்று, ‘சார்.. இனிமே டிவிடிலாம் கிடைக்காது’ என்றார்கள். ஏன் என்று கேட்டால், இனிமே ஆன்லைன்ல மாத்திட்டாங்க சார். நீங்க பிக்ஃப்ளிக்ஸ் வெப்சைட்ல போயி ஆன்லைன்ல லாகின் பண்ணி படம் பார்க்கலாம் சார்.. டிவிடியை விடவும் தரமான க்வாலிட்டி இருக்கும்’ என்ற பதில் வந்தது. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போதெல்லாம் வேறு எங்கும் இப்படி ஆன்லைனில் பணம் கட்டிப் படம் பார்க்கும் சர்வீஸை நான் பார்த்ததில்லை. எனவே பிக்ஃப்ளிக்ஸ் வெப்சைட்டில் லாகின் செய்து அவர்களின் படங்களை நோட்டமிட்டபோது, பல படங்கள் அதில் இல்லை என்று தெரிந்தது. அப்போதுதான் அவர்கள் ஆன்லைன் சர்வீஸை உருவாக்கிக்கொண்டிருந்த நேரம். எனவே அந்தத் திட்டத்தில் இருந்து விலகிக்கொண்டேன். எனக்குத் தெரிந்து, இந்தியாவில் OTT என்று இப்போது அழைக்கப்படும் இந்த சர்வீஸ், முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ரிலையன்ஸ் பிக்ஃப்ளிக்ஸ் மூலமாகவே என்றே நினைக்கிறேன்.

உண்மையில் இதே காலகட்டத்தில்தான் அமெரிக்காவில் நெட்ஃப்ளிக்ஸும் டிவிடிக்களை வாடகைக்கு விடுவதை நிறுத்தி, ஆன்லைனில் படம் பார்க்கவைப்பதை முயற்சி செய்துகொண்டிருந்தது. இது பின்னால் இதைப்பற்றி ஆராய்ந்தபோது தெரியவந்த விஷயம். நெட்ஃப்ளிக்ஸைப் பின்பற்றியே தனது டிவிடி வாடகை சர்வீஸை ரிலையன்ஸும் செய்துவந்தது. அதேபோல் நெட்ஃப்ளிக்ஸ் ஆன்லைனுக்கு வந்ததும் ரிலையன்ஸூம் ஆன்லைனுக்கு வந்தது. இருப்பினும் அதன்பின் நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா வந்தபோது அதனால் அடிபட்ட ஆன்லைன் ப்ளாட்ஃபாரங்களில் ரிலையன்ஸ் பிக்ஃப்ளிக்ஸும் ஒன்று, இருந்தாலும் இப்போதுவரை பிக்ஃப்ளிக்ஸ் தொடர்ந்து ஆன்லைனில் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா வந்த 2015க்குப் பிறகு ஆமெஸான் ப்ரைம், ஹாட்ஸ்டார், வூட், எராஸ், ஹங்காமா என்று இன்னும் ஏராளமான OTT சர்வீஸ்கள் நமக்குக் கிடைக்கின்றன. எனவே ஒரே நேரத்தில் பல படங்களை பல சர்வீஸ்கள் மூலம் ஆன்லைனில் பார்க்கும் வாய்ப்புகள் இப்போது எக்கச்சக்கம். இப்படி இந்தியாவில், குறிப்பாகத் தென்னிந்தியாவில், தமிழகத்தில் ஆன்லைனில் படம் பார்க்க ஆரம்பித்தபின்னர் நமது படம் பார்க்கும் ரசனை எப்படி மாறியிருக்கிறது? எப்படிப்பட்ட படங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன? நம் தேவைக்கேற்ற படங்கள் இப்போது ஆன்லைனில் தயாரிக்கப்படுகின்றனவா?

உலகம் முழுக்க, இன்றைய தேதியில் மிகப்பிரபலமாக இருப்பவை என்னென்ன மற்றும் 2023 வரை எவையெல்லாம் முக்கியமாக இருக்கப் போகின்றன என்று பிரபல தணிக்கை நிறுவனமான ப்ரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் (PWC) க்ளோபல் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒரு ஆராய்ச்சி அறிக்கையை 2019ல் வெளியிட்டது. இந்த அறிக்கைப்படி, விர்ச்சுவல் ரியாலிடி (VR) என்பதன்கீழ் மக்களுக்கு வீடியோக்கள், கேம்கள் ஆகிய அனுபவங்களை வழங்குவதே உலகின் மிகப்பெரிய வியாபாரமாக 2019ல் இருந்து 2023 வரை இருக்கப்போகிறது; இரண்டாவதாக, OTT. இந்தப் பட்டியலில் கடைசி மூன்று இடங்களில் இருப்பது என்ன தெரியுமா? முறையே புத்தகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் செய்தித்தாள்களும் பத்திரிக்கைகளும் (கடைசி இடம். -5 சதவிகிதம். அதாவது நஷ்டத்தில் இயங்கப்போகின்றன என்று பொருள்).

எந்தக் காலகட்டத்தையும் விட இப்போதுதான் டிஜிட்டலில் வீடியோக்கள் மற்றும் கேம்களை உலகமே வெறித்தனமாகப் பார்க்கும் காலகட்டம் எனலாம். இதனால் பல நூறு ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து படித்துவந்த செய்தித்தாள்கள் மற்றும் அச்சுப் புத்தகங்கள் ஆகியவை இப்போது பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கின்றன. இதனாலேயே எந்தத் தலைமுறையையும் விட இந்தத் தலைமுறையே பொது அறிவு மற்றும் காமன் சென்ஸ் என்ற இயல்பறிவு ஆகிய இரண்டிலுமே கொடூரமான தோல்வியை சந்தித்திருக்கிறது. உலகின் பல நிறுவனங்களுமே மக்கள் எதன்பின்னால் போகிறார்கள் என்பதை வைத்தே தங்கள் வியாபாரத்தை அமைத்துக்கொள்ளும் என்பதால், இப்போது OTT முறையில் படங்கள் மற்றும் சீரியல்களைத் தயாரித்து ஒளிபரப்புவது பேய்வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

இது எப்படி சாத்தியம் ஆகிறது என்றால், ஸ்மார்ட்ஃபோன்கள் பிரபலமானதால்தான் என்று அடித்துச் சொல்லலாம். இது ஆர்கானிக்காக, இயல்பாக நடந்த மாற்றம். டிஜிட்டலுக்கு உலகம் மெதுவே மாறுகையில் ஸ்மார்ட் ஃபோன்கள் வருகின்றன. அவற்றில் டிஜிட்டல் கண்டெண்ட் என்று அழைக்கப்படும் வீடியோக்கள், கேம்கள், Ebooks என்று அழைக்கப்படும் டிஜிட்டல் புத்தகங்கள் என்று எல்லாவற்றையும் ஸ்மார்ட்ஃபோனிலேயே பார்க்கும் வசதி அதிகரிக்கிறது. இதனால் படங்கள் ஆன்லைனுக்கு வருகின்றன. உடனேயே அதை வைத்துக் காசு பார்க்கும் OTT நிறுவனங்கள் உருவாகின்றன. இதனால் இதை வைத்து வளரும் தலைமுறையினர், புத்தகங்களைப் படிக்க மறுத்து, எல்லாவற்றையும் வீடியோக்கள் வாயிலாகவே தெரிந்துகொள்ள நினைக்கின்றனர். இதனால் மெல்ல மெல்ல, எழுதப்படிக்கும் திறன் மங்குகிறது. தாய்மொழியில் எழுதிப்படிக்கும் கூட்டம் குறைகிறது. இதனால் பொது அறிவு முற்றிலுமாக மறையத் துவங்குகிறது. டிஜிட்டல் படங்கள் மற்றும் வீடியோக்களால் மட்டுமே பாதிக்கப்பட்டு அவற்றில் வருவதுபோலவே மக்கள் நடந்துகொள்ள ஆரம்பிக்கின்றனர். இதுதான் டிஜிட்டலின் வளர்ச்சி. இப்படித்தான் OTT ப்ளாட்ஃபாரங்கள் வளருவதை நாம் ஆராயவேண்டும்.

குறிப்பாக, கொரோனா மூலம் சென்ற வருடம் அரசாங்கமே லாக்டவுன் அறிவிக்க, வீட்டிலேயே பல மாதங்கள் அடைந்து கிடந்த இந்தியன் (உலகனும் கூட), இருபத்து நான்கு மணி நேரமுமே கணவன், மனைவி, காதலி, காதலன் ஆகியவர்களின் முகத்தையே பார்த்துப்பார்த்து எரிச்சலாகி, வீட்டை விட்டு வெளியேறமுடியாமல் குழம்பி, என்னடா விடிவுகாலம் என்று தேடியதில் OTT முன்னால் வந்து நிற்க, அதில் தலைகீழாகக் குதித்தான் மனிதன். சென்ற ஆண்டில் மட்டும் இந்தியர்கள் பார்த்துக்குவித்த OTT படங்கள், சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மிக மிக அதிகம். இந்தியாவில் மட்டும் முப்பது சதவிகித ஏற்றம், மார்ச் 2020ல் இருந்து ஜூலை 2020ல் நிகழ்ந்தது. சென்ற வருடம் மட்டும் எத்தனை புதிய படங்கள் நேரடியாக இந்த OTT ப்ளாட்ஃபாரங்களில் வெளியிடப்பட்டன என்று யோசித்துப் பாருங்கள்? அதற்கு முன்பு இப்படி நிகழ்ந்திருக்கிறதா?

சென்ற ஆண்டு பெற்ற வளர்ச்சியை இந்த நிறுவனங்கள் விடுவதாக இல்லை. இதனால் முன்பை விடவும் ஏராளாமான புதிய தொடர்கள் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஜூனில் வெளீயாகப்போகும் ஜகமே தந்திரம் படம் வரையில் ஏராளமான படங்களை எங்கள் ப்ளாட்ஃபார்மில் முதலில் ரிலீஸ் செய்யுங்கள் என்று ஒவ்வொரு OTT நிறுவனமும் பிரபல தயாரிப்பாளர்களின் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கின்றன. உலகத்தை எடுத்துக்கொண்டாலும், மார்ட்டின் ஸ்கார்ஸேஸி, தனது மிகப்பெரிய பட்ஜெட் படமான Irishman படத்தை நெட்ஃப்ளிக்ஸில் முதன்முறையாக வெளியிட்டார். எனவே, சென்ற 2020ம் வருடமே OTT வரலாற்றில் ஒரு மைல்கல் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், உலகம் முழுக்க இப்படி அற்புதமான படங்களும் சீரீஸ்களும் OTTக்கு என்றே எடுக்கப்பட்டு வெற்றியடையும்போது, தமிழில் மட்டும் ஏன் இதுவரை குறிப்பிடத்தகுந்த ஒரே ஒரு சீரீஸோ அல்லது OTT படமோ இதுவரை வெளியாகவில்லை? ஹிந்தியில் கூட OTT சீரீஸ்கள் பல வகைகளில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கின்றன. மலையாளத்தில் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட பல படங்கள் வரிசையாக ஆன்லைனில் வெளியாகி, அவற்றில் பல படங்கள் தமிழகத்திலுமே விரும்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழில் மட்டும் ஏன் கண்டெண்ட் குறைபாடு?

தமிழில் இன்னுமே நல்ல கதைகளை வைத்துக்கொண்டு, வாய்ப்புக்காக முட்டிமோதிக்கொண்டிருக்கும் பலரை எனக்குத் தெரியும். ஆனால் இவர்களுக்குத் தொடர்ந்து இந்த OTTக்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, சராசரிக் கதைகள் வைத்துக்கொண்டு, சிலபல தொடர்புகள் மூலம் இந்த OTTக்களை அணுகும் நபர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதைக் கவனிக்கிறேன். ஒரு OTTயை நேரடியாக அணுகுவது கடினம். எனவே, இங்கேதான் aggregatorகள் என்ற இடைப்பட்ட நிறுவனங்கள் உள்ளே வருகின்றன. இவைகளின் வேலை, கதை வைத்துக்கொண்டிருப்பவர்களையும், OTT நிறுவனங்களையும் இணைத்து வைப்பது. இப்படி இந்தியாவில் பல நிறுவனங்கள் உண்டு. இந்த இடைப்பட்ட நிறுவனங்கள் உங்களிடம் கதை கேட்டு, அவர்களுக்கு அது சமீபத்திய டிரெண்டுகளை ஒத்து இருந்தால் (இவைகள், கடந்த சில மாதங்களில் எப்படிப்பட்ட படங்களோ சீரியல்களோ அதிகமாக மக்களால் OTT வாயிலாகப் பார்க்கப்படுகின்றன என்பது போன்ற சில சர்வேக்களை எடுப்பதுண்டு), உங்களை ஹாட்ஸ்டார், ப்ரைம் போன்ற OTT நிறுவனங்களிடம் கதை சொல்லச் சொல்வார்கள் (இதற்கே ஒரு மிகப்பெரிய வழிமுறை உண்டு. கதையை, பைபிள் என்று அழைக்கப்படும் டெம்ப்ளேட்டில் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். இதில் ஒவ்வொரு எபிசோடின் கதை, நடிகர்கள், லொகேஷன்கள் ஆகிய எல்லாமே இடம்பெறும்). அவர்களுக்கு அது பிடித்தால், அதன்பின் அந்த நிறுவனத்திடம் பணம் பெற்று, தங்கள் கமிஷனை அதில் எடுத்துக்கொண்டு, உங்களை அந்த சீரீஸை எடுக்கச் சொல்வார்கள். இதுதான் இந்த இடைப்பட்ட நிறுவனங்களின் பணி. இப்போது இதை நான் எழுதிக்கொண்டிருக்கும்போதே, பல அக்ரகேட்டர்கள், பல்வேறு கதைகளை இப்படிப் பரிசீலித்து வருகின்றன. அவற்றில் அரசியலும் உண்டு. ஆனால் அது எல்லாபக்கமும் எங்குமே நடப்பதே. நல்ல கதைகள் வைத்திருப்பவர்களால் இந்த இடைப்பட்ட நிறுவனங்களை நேரடியாக அணுக முடிவதில்லை என்பதைக் கவனித்திருக்கிறேன். இந்தக் குறைபாடு மட்டும் நீக்கப்பட்டால் தொடர்ந்து நல்ல சீரீஸ்கள் தமிழில் வரும்.

இதையே இன்னொரு வகையில் பேசினால், இந்தியாவின் OTTயில் யாரெல்லாம் இப்படிப்பட்ட சீரீஸ்களையும் படங்களையும் பிரத்யேகமாக OTTக்கென்றே தயாரிக்கின்றனர் என்று கவனித்தால், கிட்டத்தட்ட 20 பில்லியன் ரூபாயோடு ஆமெஸான் ப்ரைமே முதலிடம் வகிக்கிறது. Paatal Lok, Inside Edge, Mirzapur, Made in Heaven, Four more shots please, Panchayat, Family man, Bandish Bandits என்று ஏராளமான சீரீஸ்களை ப்ரைம் தயாரிக்கிறது. ஆனால் இவையெல்லாமே ஹிந்தி சீரீஸ்கள் என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். ப்ரைம் தயாரித்த தமிழ் சீரீஸ்கள் இதுவரை தோல்வியே. ஹிந்திக்கு பட்ஜெட்டைக் கொடுக்க அவர்கள் தயார். ஆனால் தென்னிந்தியாவில் அவர்களின் பட்ஜெட் மிகக்குறைவு. பிற OTTக்களுமே இப்படித்தான் தென்னிந்தியாவைப் பார்க்கின்றன. காரணம் தென்னிந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட சீரீஸ்கள் தோல்வி. இதை அவசியம் சரி செய்ய முடியும். ஆனால் அதற்கு இந்த அக்ரெகேட்டர்கள் (இடைப்பட்ட நிறுவனங்கள்) இன்னும் கொஞ்சம் தங்களின் தளர்ச்சியான செயல்பாட்டை சரி செய்ய வேண்டும்.

அடுத்ததாக, இந்த OTT ப்ளாட்ஃபாரங்கள் யாரையெல்லாம் கவர்கின்றன? அவசியம் இன்று வரை, தமிழகத்தில், தொலைக்காட்சி சீரியல்களை அன்றாடம் பார்த்து வாழும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்னுமே தொலைக்காட்சியைத்தான் பார்த்து வருகின்றனர். எப்போதாவது புதிய படங்கள் OTTயில் வெளீயானால் மட்டும் இவர்கள் OTT பக்கம் வந்து, பின்னர் தொலைக்காட்சிக்கே திரும்பிவிடுகின்றனர் என்பது தெரிகிறது. பத்தில் இருந்து 45-50 வரையான சமூகத்தையே OTT பெரிதும் நம்பியிருக்கிறது. அதிலும் குழந்தைகள். இப்போதெல்லாம் பலரின் வீட்டிலும் ஸ்மார்ட் டிவி வந்துவிட்டதால், குழந்தைகளே தங்களுக்குத் தேவையான OTT கார்ட்டூனை எளிதில் பார்க்க முடிகிறது. குழந்தைகள் கடந்த ஒண்ணரை வருடங்களாக வீட்டில் வேறு இருப்பதால் இதுதான் வழி, இதைப் பல பெற்றோர்கள் புரிந்தே இருக்கிறார்கள். 16ல் இருந்து குறிப்பாக 30 வரையிலான இளைய தலைமுறையினர் தமிழகத்தில் பார்க்காத OTT சீரீஸ்களே இல்லை என்று சொல்லலாம். வீடியோ கேம்களில் முழுமையாக ஈடுபடும் இந்தத் தலைமுறை, தங்களுக்குப் பிடித்த mind bending OTT நிகழ்ச்சிகளில் முழுமையாக மூழ்கி இருக்கின்றனர் என்பதை அவசியம் சொல்லலாம். சோஷீயல் மீடியாவில் அவர்கள் எழுதும் விமர்சனங்களே சாட்சி. இதுபோக, 30ல் இருந்து 45,50 வரையிலான வயதுகளில் இருப்பவர்கள் தொடர்ச்சியாக வீட்டில் அமர்ந்து வேலை செய்யும்போதே அவ்வப்போது OTT மூலமாகப் படங்களையும் சீரீஸ்களையும் பார்த்துக்கொண்டே வேலை செய்வதும் நன்றாகவே தெரிகிறது.

இப்படி, இந்தியர்கள் மற்றும் உலகம் முழுக்க இருக்கும் அனைத்து நாடுகளின் மக்களிடமும் OTT ப்ளாட்ஃபாரம்கள் நெருங்கிவிட்டன. நமது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத பொருளாக, 2000ல் இருந்து மெல்ல மெல்ல செல்ஃபோன் உருவாகி இப்போது இன்னொரு விரல் போல ஆகிவிட்டதைப் போல், இப்போதே OTT உருவாகிவிட்டது. இன்னும் சில வருடங்களில் உலகையே ஆளப்போகும் பெரும் சக்தியாகவும் மாறிவிடும். இதனால் பல நல்ல சீரீஸ்களும் படங்களும் தமிழ்நாட்டின் கடைக்கோடி வீட்டுக்குள்ளும் ஸ்மார்ட்ஃபோன் மூலம் ஊடுரூவி இருப்பது பாராட்டத்தக்கதே. ஆனால் அதேசமயம், தமிழில் நல்ல சீரீஸ்கள் எடுக்கப்படவேண்டும் என்பதும் திரைத்துறையைச் சேர்ந்த எனக்கு ஒரு எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்தக் கட்டுரை மூலம் அது நடக்க ஒரு சிறிய கல்லை எறிந்ததாகவே எடுத்துக்கொள்கிறேன்.

Image source – https://dazeinfo.com/wp-content/uploads/2020/11/ott-platforms-netflix-amazon-prime-video-hoichoi-alt-balaji-sony-liv-mx-player-disney-plus-hotstar-3.jpg

Tamil Multistarrer films – an Analysis
February 2021 அந்திமழை இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை.

’மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. கூடவே, இரண்டு பெரிய ஸ்டார்கள் ஒரு படத்தில் நடித்திருப்பது பற்றியும் பரவலான விவாதத்தையும் இப்படம் உருவாக்கியிருக்கிறது. விஜய் சேதுபதி ஏற்கெனவே பேட்ட, இறைவி போன்ற படங்களில் ரஜினி, எஸ்.ஜே. சூர்யா முதலியவர்களுடன் நடித்திருந்தாலும், பேட்டையை விடவும் மாஸ்டரில் விஜய் சேதுபதியின் வேடத்துக்கு முக்கியத்துவம் உள்ளது. மாஸ்டர் படமே விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்தின் மீதுதான் துவங்குகிறது. இதனாலேயே படத்தில் பவானியின் கதாபாத்திரத்தின் மீது இயல்பாகவே படம் பார்க்கும் நமக்கு ஒரு கவனம் வருகிறது. இது படம் முழுக்கவே தொடரவும் செய்கிறது. அவசியம் மாஸ்டர் படம் விஜய் சேதுபதிக்கு ஒரு பெரிய வெற்றி என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். அவரே சொன்னதுபோல, ‘ஜே.டிக்கு பவானி வில்லன் என்றால் பவானிக்கு ஜே.டிதான் வில்லன்; எனவே இந்தக் கதையில் பவானியும் ஹீரோதான்’ என்பதே உண்மை. அந்த வகையில், இரண்டு பெரும் ஸ்டார்கள் நடித்திருக்கும் படத்தில் வில்லனுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுவதில் தனி ஒருவனைப்போலவே மாஸ்டரும் அமைந்திருக்கிறது.

இந்தியத் திரைப்படத்துறையை எடுத்துக்கொண்டால், இதுவரை இந்தியிலும் மலையாளத்திலுமே மிக அதிகமான ‘மல்டி ஸ்டாரர்’ படங்கள் வந்திருக்கின்றன. ஒரே படத்தில் நிறைய ஸ்டார்கள் நடிக்கும் படங்களே இவை. தமிழில் இவை அளவு பல ஸ்டார்கள் நடித்த படங்கள் இல்லை என்றாலும், ஓரளவு சொல்லக்கூடிய படங்கள் உண்டு. இத்தகைய மல்ட்டி ஸ்டாரர் படங்கள் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழில் எனக்குத் தெரிந்தவரை, தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார்களான எம்.கே. தியாகராஜ பாகவதரும் பி.யு. சின்னப்பாவும் இணைந்து நடித்ததாகத் தெரியவில்லை. ஆனால், எம்.கே.டி மற்றும் பி.யு.சியின் படங்களில் பல ஸ்டார்கள் நடித்ததுண்டு. எம்.கே.டியின் ராஜமுக்தி படத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார் (பெரிய நடிகராக அறியப்படும் முன்னர்). ஏ. சகுந்தலா, டி.எஸ். பாலையா, காளி என். ரத்னம், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், டி.ஆர். ராஜகுமாரி, கண்ணாம்பா, டி.ஆர். ராமச்சந்திரன், எஸ். வரலட்சுமி ஆகியவர்கள் தொடர்ந்து பி.யு. சின்னப்பா மற்றும் எம்.கே. தியாகராஜ பாகவதரின் படங்களில் நடித்தே வந்திருக்கிறார்கள். எனவே, இந்த இரண்டு நடிகர்களின் படங்களை அவசியம் மல்ட்டி ஸ்டாரர் படங்கள் என்று சொல்லலாம்.

இவர்களின் காலத்திலேயே 1948ல் வெளியான ஜெமினி ஸ்டூடியோஸ் எடுத்த ‘சந்திரலேகா’ பிரம்மாண்டமான மல்ட்டி ஸ்டாரர் படமாக இருந்தது. ரஞ்சன், எம்.கே ராதா, டி.ஆர். ராஜகுமாரி மட்டுமல்லாமல் என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், எம்.எஸ். சுந்தரிபாய் ஆகியோர்களும் நடித்த மெகா பட்ஜெட் படம். இந்தியிலும், பிந்நாட்களில் ஜப்பானிய மொழியிலும் ஆங்கிலத்திலுமே வந்த படம். தமிழின் குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்று.

இவர்களுக்குப் பின்னர் மிகப்பெரிய ஸ்டார்களாக மாறிய சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆரும், ‘கூண்டுக்கிளி’ என்ற ஒரே படத்தில் இணைந்து நடித்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தப் படம் சரியாகப் போகாததையும் படித்திருப்பீர்கள். எப்படி எம்.கே.டி மற்றும் பி.யு.சி படங்களில் பல நடிகர்கள் நடித்தனரோ, அதேபோல் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி படங்களிலும் பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். ஆனால் அவர்களில் பலரும் குணச்சித்திர நடிகர்களே. ஜெமினி கணேசன், சிவகுமார், எம்.ஆர் ராதா, எஸ்.எஸ். ராஜேந்திரன் போன்ற மிகச்சில ஹீரோ நடிகர்களே சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்திருக்கின்றனர். ஆனால் அதேசமயம், மாடர்ன் தியேட்டர்ஸ் தொடர்ந்து எடுத்த துப்பறியும் படங்களில் பல நடிகர்கள் இணைந்து அவற்றை மல்ட்டி ஸ்டாரர் படங்களாக மாற்றியிருக்கின்றனர். ஜெய்சங்கர், அசோகன், ஆர்.எஸ். மனோகர், ரவிச்சந்திரன், தேங்காய் சீனிவாசன் போன்ற ஸ்டார்கள் தொடர்ந்து நடித்தனர்.

இதே காலகட்டத்தில் இயக்குநர் ஸ்ரீதர் சில மல்ட்டி ஸ்டாரர் படங்களை எடுத்திருக்கிறார். அவரது தேநிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை, ஊட்டி வரை உறவு போன்ற படங்கள் மல்ட்டி ஸ்டாரர் படங்களே. ஸ்ரீதரைத் தொடர்ந்து சித்ராலயா கோபு இயக்கிய சில படங்கள் இப்படி அமைந்தன. காசேதான் கடவுளடாவை மறக்க முடியுமா? பின்னர் சி.வி. ராஜேந்திரனும் இப்படி மல்ட்டி ஸ்டாரர் படங்களை எடுத்தார்.

தமிழகத்தின் திரை ரசிகர்களுக்கு இப்போது தோன்றும் பல மல்ட்டி ஸ்டாரர் படங்கள் எழுபதுகளின் பிற்பகுதியில் எடுக்கப்பட்டவையே. குறிப்பாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாஸன் நடித்தவை. ’அபூர்வ ராகங்கள்’ (ரஜினி கௌரவ வேடம்) படத்தில் துவங்கி, ’அந்துலேனி கதா’ (கமல் கௌரவ வேடம் – அவள் ஒரு தொடர்கதையின் தெலுங்கு ரீமேக்), ’மூன்று முடிச்சு’, ’அவர்கள், ’16 வயதினிலே’, ’ஆடுபுலி ஆட்டம்’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ’தப்புத்தாளங்கள்’ (கமல் கௌரவ வேடம்), ’அவள் அப்படித்தான்’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ’நினைத்தாலே இனிக்கும்’, ’தாயில்லாமல் நானில்லை’ (ரஜினி கௌரவ வேடம்), ‘தில்லுமுல்லு’ (கமல் கௌரவ வேடம்) ஆகிய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தனர். இதன்பின் இந்தியில் அமிதாப் பச்சனுடன் ‘கிரஃப்தார்’ படம். ஆனால் அதில் இருவருக்கும் ஒரே காட்சி அமையவில்லை. தனித்தனியே நடித்திருந்தனர். இந்தப் படங்கள் பலவும் வெற்றிப் படங்களே. இவற்றின் பின்னர் இருவரும் பிரிந்து நடிக்கத் துவங்கினர்.

எண்பதுகளில் கார்த்திக், பிரபு, சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர். ‘சின்னத்தம்பி பெரியத்தம்பி’, ‘அக்னி நட்சத்திரம்’ ஆகியவை உதாரணங்கள். மணி ரத்னத்தின் பெரும்பாலான படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்கள் நடிப்பதே வழக்கம். அவரது முதல் தமிழ்ப்படமான ‘பகல் நிலவு’ ஒரு உதாரணம். அதில் முரளி, சத்யராஜ், ரேவதி, சரத்பாபு ராதிகா, நிழல்கள் ரவி முதலியோர் நடித்திருந்தனர். பின்னால் நாயகனில் வேலு நாயக்கரின் வேடத்துக்கு இப்படத்தில் சத்யராஜின் வேடமே காரணம். ’இதயக்கோயில்’ படத்தில் மோகன், ராதா, அம்பிகா, ‘மௌன ராகம்’ படத்தில் மோகன், கார்த்திக், ரேவதி, ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா, விஜயகுமார், ’அஞ்சலி’யில் ரேவதி, ரகுவரன், பிரபு, ’தளபதி’ படத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி, ஜெய்சங்கர், ஷோபனா, ஸ்ரீவித்யா, அர்விந்த் சுவாமி, கீதா, பானுப்ரியா, ’திருடா திருடா’வில் பிரசாந்த், ஆனந்த், ஹீரா, அனு அகர்வால், எஸ்.பி. பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், சலீம் கௌஸ், ;இருவர்’ படத்தில் மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், ரேவதி, தபு, கௌதமி, நாசர், ’ஆய்த எழுத்து’ படத்தில் மாதவன், சூர்யா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, இஷா தியோல், ’ராவணன்’ படத்தில் விக்ரம், கார்த்திக், ஐஸ்வர்யா ராய், ப்ருத்விராஜ் சுகுமாறன், ’கடல்’ படத்தில் கௌதம் கார்த்திக், துளசி, அர்ஜுன், அர்விந்த் சுவாமி, லக்‌ஷ்மி மன்ச்சு, ’ஓகே கண்மணி’யில் துல்கர் சல்மான், நித்யா, பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன், ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் அர்விந்த் சுவாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ஹைதாரி, ஜெயசுதா என்று, இப்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருப்பதிலேயே அதிகமான ஸ்டார்களை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார் (பட்டியல் எழுதுவதற்குள் நாக்கு தள்ளி விட்டது. எடிட்டரின் கவனத்துக்கு). தமிழில் தொடர்ச்சியாக, பல வருடங்களாக இத்தனை ஸ்டார்களை வைத்து இயக்கிக் கொண்டே இருப்பவர் மணி ரத்னமாகத்தான் இருக்கமுடியும்.

சிவாஜி கணேசனை மறுபடியும் எடுத்துக்கொண்டால், அவரது இறுதிக் காலகட்டத்தில் அவரைப் பல நடிகர்களும் தங்களுடன் நடிக்க வைத்து, அவரை மல்ட்டி ஸ்டாரர் படங்களில் உபயோகித்துக்கொண்டனர். படையப்பா இதற்கு ஒரு உதாரணம். ஒன்ஸ்மோர் படமும். தேவர் மகனைக் கூட இப்படிச் சொல்லலாம் என்றாலும், அதில் அவரது நடிப்பு அபாரமாக அமைந்துவிட்டது. எண்பதுகளிலும் இப்படி சில மல்ட்டி ஸ்டாரர் படங்களில் சிவாஜி நடித்திருக்கிறார். ’சந்திப்பு’ அப்படி ஒரு படம்தான். இந்தியில் வெளியான நசீப் படத்தின் ரீமேக். இயக்கியவர், நாம் மேலே பார்த்த அதே சி.வி. ராஜேந்திரன். அதேபோல் பாலாஜி தயாரித்து கே.விஜயன் இயக்கிய ‘விடுதலை’. இது இந்தியில் வெளியாகி நாடெங்கும் சூப்பர்ஹிட்டான ‘குர்பானி’ படத்தின் ரீமேக். இந்தியில் அம்ஜத்கான் நடித்த இன்ஸ்பெக்டர் கான் வேடத்தில், இன்ஸ்பெக்டர் ராஜசிங்கமாக சிவாஜி நடித்தார். இவருடன் ரஜினிகாந்த், விஷ்ணுவர்த்தன் மற்றும் விஜயகுமார் நடித்தனர். சிவாஜி நடித்ததிலேயே அபத்தமாக அமைந்த வேடமாக இதைச் சொல்லலாம்.

இவற்றைத்தவிர, தமிழில் இன்னும் சில மல்ட்டி ஸ்டாரர் படங்கள் உண்டு. விசு எடுத்த எல்லா படங்களுமே மல்ட்டி ஸ்டாரர் படங்கள்தான். வி. சேகர் எடுத்த படங்களும் அப்படியே. வசந்த்தும் மல்ட்டி ஸ்டாரர் படங்கள் எடுத்திருக்கிறார். மணி வண்ணனும். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கிய ‘ஊமை விழிகள்’, செந்தூரப்பூவே’, இணைந்த கைகள்’ ஆகியவையும் மல்ட்டி ஸ்டாரர் படங்கள் மட்டுமல்லாமல், தமிழில் பெருவெற்றி அடைந்து வசூல் சாதனைகள் பல செய்தவை. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய ‘மைக்கேல் மதன காம ராஜன்’ ஒரு மிகப்பெரிய மல்ட்டி ஸ்டாரர் படம் (அதில் கமலே பல ஸ்டார்களாக நடித்தபோதிலும். அப்படியே தசாவதாரம். அத்தனை வேடங்களிலும் கமலே நடித்தார். இது எந்த வகையில் வரும்?). அதே சிங்கீதம் சீனிவாசராவ் முன்னர் எடுத்த அபூர்வ சகோதரர்களும் ஒரு மல்ட்டி ஸ்டாரர் படம்.

இதே வரிசையில்தான் கார்த்திக் சுப்பராஜின் ‘இறைவி’, ‘பேட்ட’ முதலிய படங்களும், நலன் குமரசாமியின் ‘சூது கவ்வும்’ படமும், லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களும் வரும்.

சமீபத்தில் வந்த விக்ரம் வேதா, தனி ஒருவன் ஆகியவை புதிய மல்ட்டி ஸ்டாரர் படங்களுக்கு உதாரணங்கள். அதேபோல், தற்போதைய சூப்பர் ஸ்டார்களான அஜீத், விஜய் ஆகியவர்களில் யாரெல்லாம் மல்ட்டி ஸ்டாரர் படங்களில் நடித்திருக்கிறார்கள் என்று கவனித்தால், அஜீத்தே அதிகமான படங்கள் செய்திருக்கிறார். பாசமலர்கள், ராஜாவின் பார்வையில், கல்லூரி வாசல், உல்லாசம், பகைவன், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் அர்விந்த் சுவாமி, விஜய், பிரசாந்த், விக்ரம், சத்யராஜ், கார்த்திக், அருண் விஜய் ஆகிய நாயகர்களுடனும், தீனாவில் சுரேஷ்கோபியுடனும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மம்மூட்டி, அப்பாஸ், தபு, ஐஸ்வர்யா ராய் ஆகியோருடனும், அசோகா இந்திப் படத்தில் ஷா ருக் கானுக்கு வில்லனாகவும் நடித்திருக்கிறார். மங்காத்தாவில் ஏராளமான நடிகர்களுடன் நடித்தார்.

இதேபோல் மலையாளம், இந்தி ஆகிய படங்கள் பக்கம் செல்லவேண்டும் என்றால் இன்னும் இதேபோல் இரண்டு கட்டுரைகள் தேவைப்படும்., தமிழிலேயே இவ்வளவு மல்ட்டி ஸ்டாரர் படங்கள் என்றால், மல்ட்டி ஸ்டாரர் படங்களே பெரும்பாலும் எடுக்கப்படும் இந்தியிலும் மலையாளத்திலும் எவ்வளவு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். மம்மூட்டியும் மோகன்லாலும் பல படங்களில் இணைந்திருக்கின்றனர். அமிதாப் பச்சன், சசி கபூர், ரிஷி கபூர், வினோத் கன்னா, ரஜினிகாந்த், கமல்ஹாஸன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களுடன் நடித்திருக்கிறார். அமீர் கான், ஷா ருக் கான், சல்மான் கான் ஆகியோரும் இப்படிப் பல படங்கள் செய்திருக்கின்றனர். ஹம் ஆப் கே ஹைன் கோன் படம் தமிழகத்திலேயே பிய்த்துக்கொண்டு ஓடியதே?

எப்போதுமே மல்ட்டி ஸ்டாரர் படங்கள் என்றால் மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் வெளியாகும்போது பாருங்கள் – அது எவ்வளவு கவனம் பெறப்போகிறது என்று. மல்ட்டி ஸ்டாரர் படங்கள் எடுப்பது அவசியம் ஒரு தனிக்கலையே என்று யோசித்தால் தோன்றுகிறது. துவக்க காலத்தில் ஸ்டார்களுக்குள் பெரிய ஈகோ பிரச்னைகள் வந்ததில்லை. ஆனால் போகப்போக ஒவ்வொருவருக்கும் ஒரு வட்டம் உருவாகி, அவர்களை ஒருங்கிணைப்பது பிரச்னையாக மாறிய காலகட்டத்தில், இப்படி மல்ட்டி ஸ்டாரர் படங்கள், பெரிய இயக்குநர்களாலேயே எடுக்க முடிந்தது. இதனால் தமிழில் மல்ட்டி ஸ்டாரர் படங்கள் குறைவு. ஆனால் ஈகோ குறைவாக இருக்கும் இந்தி, மலையாளம் ஆகிய இடங்களில் அதிகமாக இப்போதும் பல நடிகர்கள் இணைந்தே நடிக்கிறார்கள். படங்களும் நன்றாகவே ஓடுகின்றன. ரஜினி கமல் இணைந்து மறுபடியும் நடிக்கிறார்கள் என்ற வதந்தி கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் எழுகிறது. அதேசமயம் இப்படி இரண்டு ஸ்டார்கள் இணைந்தால், படத்தின் பட்ஜெட் உட்பட விற்பனை வரை பல அம்சங்களும் பாதிக்கவும் படுகின்றன. இதையெல்லாம் தாண்டிதான் தமிழில் இப்படிப் படங்கள் எடுக்க யோசிக்கவேண்டும் என்றே தோன்றுகிறது.

Tenet (2020) – English – 2
TENET படத்தின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.

TENET படத்தின் முக்கியமான அம்சம், இறந்தகாலத்துக்குச் செல்வது. இது எப்படி சாத்தியப்படுகிறது? நாம் சென்ற கட்டுரையில் பார்த்ததுபோல, இந்தப் படத்தில் காலப்பயணம் (Time Travel) வருவதில்லை. மாறாக, காலத்தைத் தலைகீழாக மாற்றுதலே (Time Inversion) வருகிறது. இதனால்தான் எதிர்காலத்துக்கு இந்தப் படத்தில் பயணம் செல்வது இயலாது. எனவே எதிர்காலத்துக்கு நாம் எதாவது சொல்லவேண்டும் என்றாலோ, அல்லது எதிர்காலத்தில் இருந்து ஏதேனும் தகவல்கள் வரவேண்டும் என்றாலோ, பொருட்களைப் புதைத்துவைத்து, அதன்மூலம் இறந்தகாலத்தில் அவை எடுக்கப்பட்டு, அவற்றின் மூலம் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. இதற்கு உதாரணம், வில்லன் சாடோர், இளம்வயதில் ரஷ்யாவில் கஷ்டப்பட்டு அணுக்கழிவுகளை எடுக்கும் வேலை செய்யும்போது அவனுக்குக் கிடைக்கும் பார்சல். இது எங்கிருந்து வருகிறது? எதிர்காலத்தில் இருந்து சாடோருக்கு அனுப்பப்பட்டு, அதே ஆவணங்கள் மற்றும் தங்கம் எல்லாமே படத்தில் கப்பலில் இருக்கும் சாடோர், தனது இளம்வயது சாடோருக்கு அனுப்புவதற்காக அவைகளைத் தனது அடியாட்களுக்குக் கொடுக்கிறான். இதை நாயகன் பார்த்துவிட்டு, சாடோரின் அடியாட்களிடம் உதை வாங்குகிறான்.

இந்த விதிக்கு ஒரே விதிவிலக்கு, நீல், எதிர்காலத்தில் இருந்தே நிகழ்காலத்துக்கு வருகிறான். நாயகனுக்கு உதவி, இறக்கிறான். அப்போது, இவையெல்லாமே திரும்பத்திரும்ப நடந்துகொண்டே இருக்கும் என்று புரிந்துகொள்கிறோம்.

இதேபோன்று, TENET படத்தில் வரும் இன்னொரு முக்கியமான விஷயம், Turnstile. இது என்ன? படத்தில் ஆங்காங்கே பாதி உருண்டைகளாக இருக்கும் சிறிய கட்டிடங்கள் போன்ற அமைப்பு. இவற்றுக்குள் செல்லும்போதுதான் இறந்தகாலத்துக்குப் பயணிப்பது சாத்தியப்படுகிறது. இந்தக் கருவிதான், அதனுள் எது வைக்கப்பட்டாலும் அதன் Entropyயைத் தலைகீழாக மாற்றுகிறது. இதனாலேயே இறந்தகாலத்துக்குப் பயணிப்பதும் சாத்தியமாகிறது.

TENET சொல்லும் கதை

இந்த Turnstileகளை உருவாக்கியது யார்? படத்தில் வில்லனாக வரும் சாடோர். ஏன் உருவாக்கினான்? இதுதான் டெனெட் படத்தின் ஒன்லைன். அதன் முக்கியமான கதை. வருங்கால உலகம், இப்போதுள்ள தற்கால உலகத்தால் பாதிக்கப்படுகிறது. எப்படி என்றால், தற்கால உலகத்தினர், பொறுப்பே இல்லாமல் இயற்கையை சீரழிக்கின்றனர். இதனால் உலகின் தட்பவெப்பம் மாறுகிறது. தண்ணீர் குறைந்துவிடுகிறது. எரிபொருள் தீருகிறது. காற்று மாசுபடுகிறது. இப்படி நம் கண் முன்னாலேயே பல இயற்கை அழிவுகள் நடக்கின்றன அல்லவா? இதனால் வருங்காலம் பாதிப்படைகிறது. எனவே உலகம் அழியும் தருவாய்க்குச் சென்றுவிடுகிறது. இதனால், வருங்காலத்தினர், தற்கான உலகை அழித்துவிட்டால், வருங்காலத்தில் எல்லாமே சரியாகிவிடும் என்பதைக் கண்டுபிடிக்கின்றனர்.

இறந்தகாலம் அழிந்துவிட்டால் வருங்காலமும் சேர்ந்தேதானே அழியும்? இந்த விஷயத்தில் இல்லை. காரணம் அப்படி வருங்காலம் அழியாமல் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர். அதுதான் சென்ற கட்டுரையில் நாம் பார்த்த Entrophy – சிதற்றம். என்னவென்றால், ஒரு பொருள், சிறுகச்சிறுக அழியும் தருவாக்குச் செல்வதை மொத்தமாக ரிவர்ஸ் செய்வது. இதனால் என்ன நடக்கும் என்றால், எல்லாமே ரிவர்ஸ் ஆகும். இலை தரையில் இருந்து மேலேறி மரத்தில் ஒட்டிக்கொள்ளும். இறந்தகாலத்தை முற்றிலும் ரிவர்ஸ் செய்து வேறொரு விஷயத்தை உருவாக்கலாம். இந்தப் புதிய விஷயம் எதிர்காலமாக மாறிவிடும். பழைய இறந்தகாலம் அழிந்துவிடும். எனவே, தற்காலத்தில் பூமி அழிந்தபின்னர், எதிர்காலத்தில் இருப்பவர்கள், தங்களுக்குத் தேவையான, எதுவுமே மனிதனால் அழிக்கப்படாத புதிய இறந்தகாலத்தை அவர்களால் உருவாக்கிக்கொள்ள முடியும். உண்மையில் இறந்தகாலத்தில் இருந்தவர்கள்தான் வயதாகி எதிர்காலத்துக்குச் செல்கின்றனர். ஆனால் தங்களது இறந்தகாலத்தில் நடந்த தவறுகள் இனி நடக்கக்கூடாது என்று நினைத்தே, பொருள்களின் சிதற்றத்தை ரிவர்ஸ் செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கின்றனர். இதை வைத்துக்கொண்டு, இறந்தகாலத்தில் ஒரு பேரழிவைத் தூண்டிவிட்டு, உலக மக்கள் அனைவரையும் அழித்தாலே, வருங்காலம் இந்த மனிதர்களால் மாசு அடையாமல் நன்றாக இருக்கும் என்று புரிந்துகொண்டு, அதை சாடோரை வைத்துச் செய்ய நினைக்கின்றனர்.

எனவே, தற்காலத்தில் இருக்கும் வில்லன் சாடோருக்கு வருங்காலத்தில் இருந்து செய்திகள் அனுப்பப்படுகின்றன. ‘உன் வேலை உனது உலகை அழிப்பது. அதை செய்’ என்று. இதை சாடோர் செய்யும்போது அதைத் தடுக்க நினைக்கும் ஹீரோ என்ன செய்கிறான் என்பதே டெனெட்டின் கதை.

இப்போது ஹீரோவுக்கு வருவோம். அவனுக்குப் படத்தில் பெயர் இல்லை. திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஒரு ஆப்ரா ஹவுஸில் ஒரு ரெய்ட் நடக்கிறது. இங்கே என்ன நடக்கிறது என்றால், தீவிரவாதிகள் அங்கே குண்டு வைத்து அனைவரையும் கொல்ல நினைக்கின்றனர். ஆனால் உண்மையில், அங்கே இருக்கும் ஒரு ரகசிய ஆசாமியைக் கொல்வதையே அவர்கள் நிஜமாக செய்ய நினைப்பது. இதை ஹீரோவும் அவனுடன் உள்ளே செல்லும் படையினரும் தடுக்கின்றனர். அப்போதுதான் முதல்முறையாக இந்த டைம் இன்வெர்ஷன் நமக்குக் காட்டப்படுகிறது. முகமூடி அணிந்த ஒரு மனிதன், துப்பாக்கிக் குண்டை ரிவர்சில் செலுத்தி, ஹீரோவைச் சுட நினைக்கும் ஆசாமியிடம் இருந்து ஹீரோவைக் காக்கிறான் (இது யார் என்று படத்தின் இறுதியில் தெரியும். நீல். ஹீரோவின் நண்பன்), அங்கே உள்ளே இருக்கும் ரகசிய மனிதனையும் அவனிடம் இருக்கும் கருவியையும் காப்பாற்றுவதே ஹீரோவின் ஒரிஜினல் வேலை. அதை ஹீரோ செய்கிறான். அங்கே இருக்கும் அத்தனை குண்டுகளையும் செயலிழக்கவும் வைக்கிறான். அப்போதுதான் சில குண்டர்களால் கைப்பற்றப்படுகிறான். அங்கே ஹீரோவைச் சித்ரவதை செய்கிறார்கள். அப்போது தனது நண்பனின் கையில் இருக்கும் ஒரு சயனைடு மாத்திரையை ஹீரோ விழுங்கி, மயங்கி விழுகிறான்.

கண்விழிக்கும்போதுதான், இது எல்லாமே செட்டப் – தனது திறமையைப் பரிசோதிக்கும் முயற்சி என்று ஹீரோவுக்குத் தெரிகிறது. இங்கேதான் ஹீரோவின் நிஜமான நோக்கம் அவனுக்கு சொல்லப்படுகிறது. டெனெட் என்று ஒரு நிறுவனத்தில் அவன் இனி பணிபுரியவேண்டும் என்று. ஹீரோ சம்மதிக்கிறான். (இந்த டெனெட் நிறுவனத்தை எதிர்காலத்தில் உருவாக்கியது ஹீரோவேதான். அவன் தான், இறந்தகாலத்தில், இதெல்லாம் தெரியாமல் இருக்கும் தன்னை இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துக்கொண்டால்தான் இறந்தகாலத்தில் சாடோர் பூமியை அழிக்க நினைப்பதைத் தடுக்க முடியும் என்பதால் இப்படிச் செய்கிறான் என்று பின்னால் சொல்லப்படும்).

இதுதான் டெனெட்டின் ஆரம்பம்.

இனி, டெனெட்டின் முக்கியமான அம்சங்கள் ஒவ்வொன்றாக ஆராயலாம்.

TENET படத்தின் திரைக்கதை

1. ஆரம்பக் காட்சி முடிந்து, டெனெட் என்ற டீமில் சேர்ந்தபின்னர், ஹீரோ செய்யும் முதல் வேலை, ஒரு பெண் விஞ்ஞானியை சந்திப்பது. இங்கேதான், பொருட்களின் சிதற்றத்தை ரிவர்ஸ் செய்யும் கண்டுபிடிப்பு ஒன்று வருங்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பது ஹீரோவுக்குச் சொல்லப்படுகிறது. அந்த விஞ்ஞானி, ஹீரோவுக்கு ஒரு சுவற்றின் பகுதியைக் காட்டுகிறாள். சில உபகரணங்களைக் காட்டுகிறாள். சில துப்பாக்கிக் குண்டுகளையும் காட்டுகிறாள். இந்த உபகரணங்கள் எல்லாமே, அந்தந்தப் பொருட்களின் இயல்பையே ரிவர்ஸ் செய்துகொண்டிருக்கின்றன என்று சொல்கிறாள். அதாவது, குண்டு, துப்பாக்கியில் இருந்து செல்லாமல், சுவற்றில் இருந்து துப்பாக்கிக்குள் வருவது. இதுதான் அந்த ரிவர்ஸ் செய்யப்பட்ட குண்டின் இயல்பு. இதனால், எப்படி சுவற்றில் பாய்ந்ததும் குண்டின் வேலை முடிந்து அது அழிந்துவிடுகிறதோ, அப்படி சுவற்றில் இருந்து துப்பாக்கிக்குள் பாய்ந்ததும் அது அழிந்துவிடுகிறது. இதுதான் சிதற்றத்தின் ரிவர்ஸ். Reversing Entropy. இவையெல்லாமே, இந்தியாவில் சஞ்சய் சிங் என்ற ஆயுத வியாபாரியிடம் இருந்தே கிடைத்தன என்றும் அந்த விஞ்ஞானி சொல்கிறாள். இதனால் ஹீரோ இப்போது சஞ்சய் சிங்கை விசாரிக்கவேண்டி வருகிறது.

2.ஹீரோ இந்தியா வருகிறான். ஆனால் சஞ்சய் சிங் தங்கியிருக்கும் மாளிகைக்குள் செல்ல அவனுக்கு உதவி தேவைப்படுகிறது. இதனால் அவனுக்கு நீல் என்ற ஆசாமி உதவ வருகிறான். ஆனால் நீலுக்கு ஹீரோ வேலையில் இருக்கும்போது குடிக்க மாட்டான் என்பது வரை தெரிந்திருக்கிறது. எப்படி? இப்போது ஹீரோவும் நீலும் சஞ்சய் சிங்கை சந்தித்தால், அவனுக்கு ப்ரியா என்ற மனைவி இருப்பது தெரிகிறது. உண்மையில் இந்த மனைவிதான் ஆயுத வியாபாரத்தை சஞ்சய் சிங்கின் பெயரை வைத்து நடத்தி வருகிறாள் (டிம்பிள் கபாடியா). அவள் மூலமாக ஹீரோவுக்கு சில விஷயங்கள் தெரிய வருகின்றன.  என்னவென்றால், ரஷ்யாவைச் சேர்ந்த சாடோர் என்பவன் தான் இந்த ஆயுதங்களை ப்ரியாவிடம் இருந்து வாங்கியவன். அவன் ஒரு ப்ளூட்டோனிய வியாபாரி. அவனுக்கு ப்ரியா விற்ற ஆயுதங்கள் மிக நார்மலானவை. ஆனால் அவனிடம் இருந்து இதே ஆயுதங்கள் ரிவர்ஸ் செய்யப்பட்டுவிட்டன. எப்படி என்று தெரியாது. அவன் ஏதோ ஒரு வகையில் எதிர்காலத்தோடு பேசுகிறான். எப்படி என்று கண்டுபிடிக்கவேண்டும். இந்த வேலையை ப்ரியா ஹீரோவுக்கு அளிக்கிறாள்.

3.ஹீரோ, மைக்கேல் க்ராஸ்பி என்பவரை (மைக்கேக் கெய்ன்) சந்திக்கிறான். இவர் ஒரு ப்ரிட்டிஷ் உளவுத்துறை ஆசாமி. வில்லன் சாடோரை ஹீரோ எப்படி அணுகவேண்டும் என்று இவர் சொல்கிறார். அப்போதுதான் சாடோரின் பின்னணி பற்றியும் விளக்குகிறார். என்னவென்றால், படத்தின் ஓப்பனிங் ரெய்ட் நடந்த அதே நாளில், சைபீரியா அருகே ஒரு ரகசிய இடத்தில் ஒரு குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. அந்த இடத்தில்தான் சாடோர் சிறுவயதில் இருந்தே வளர்ந்திருக்கிறான். இப்போது பெரிய வியாபாரி ஆகியிருக்கிறான். அவனுக்கு ஒரு மனைவி. காதரீன் பார்ட்டன். இவள் மூலம் அவனுக்கு ப்ரிட்டிஷ் தொடர்புகள் கிடைத்திருக்கின்றன. அவள் ஒரு பெரிய நிறுவனத்தில் பணி புரிவதாகவும், அவளது வேலை, ஓவியங்கள் ஒரிஜினலா போலியா என்று கண்டுபிடிக்கும் வேலை என்றும், ஒரு நாள் அவளது காதலன் டமாஸ் அரெபோ என்ற ஸ்பானிஷ்காரனால் துல்லியமாக உருவாக்கப்பட்ட கோயாவின் ஓவியத்தின் போலியை அது தெரியாமல் சாடோரிடம் அவள் விற்றதாகவும், அதைக் கண்டுபிடித்துவிட்ட சாடோர் அரேபோவைக் கொன்றுவிட்டதாகவும், ஆனால் இந்த ஓவியத்தை வைத்து, காதரீனை வெளியே மாட்டிவிடுவதாக ப்ளாக்மயில் செய்துவருவதாகவும், அதனால் வேறு வழியே இல்லாமல் அவனுடன் அவள் இருப்பதாகவும் சொல்கிறார். கோயாவின் ஓவியத்தை ஃபோர்ஜரி செய்தால் உலகம் முழுதுமே அவளது பெயர் நாறும். நீண்ட வருடங்கள் சிறையும் கிடைக்கும். அவள்தான் ஹீரோவுக்கு சாடோடை நெருங்க உதவுவாள் என்று மைக்கேல் க்ராஸ்பி சொல்கிறார்.

4.ஹீரோ இதன்பின் காதரீனை சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே, மனைவியை எப்போதும் சந்தேகப்படும் சாடோர், தனது ஆட்களை வைத்து ஹீரோவை அடிக்க, ஹீரோ அவர்களை அடித்து வீழ்த்திவிடுவதை காதரீன் கவனிக்கிறாள். அப்போது ஹீரோ, அவளது கணவனிடம் இருக்கும் ஃபோர்ஜரி ஓவியத்தைத் திருடி, ஹீரோயினை சாடோரின் பிடியில் இருந்து விடுவிப்பதாகச் சொல்கிறான். அப்போதுதான் ஹீரோயின், சாடோருடன் அவனது படகில் அவள் வியட்நாமில் கழித்த ஒரு விடுமுறை பற்றிச் சொல்கிறாள். அன்று நிஜமாகவே அவன் மனதில் அன்பு இருந்ததாக அவள் நினைத்து, அவனது பிடியில் இருக்கும் தனது மகனைத் தன்னிடம் கொடுத்துவிடுவான் என்று நினைத்ததாகவும், அது நடக்காமல் போய்விட்டது என்றும் அவள் சொல்கிறாள். (இந்த வியட்நாம் படகு சந்திப்பு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது). சாடோரை விட்டு காதரீன் போகலாம்; ஆனால் அவர்களின் மகனை அவள் மறுபடி பார்க்க முடியாது என்று அன்று அவன் சொன்னதால், வேறு வழியே இல்லாமல் அவனுடனேயே இருப்பதாக அவள் சொல்கிறாள்.

5.இந்த ஓவியம் இருக்கும் இடம், ஆஸ்லோவின் விமான நிலையம். அங்கே ஹீரோவும் நீலும் செல்கின்றனர். அந்த விமான நிலையத்தின் ஒரு ரகசிய அறையில் பல ஓவியங்கள் இருக்கின்றன. பணக்காரர்கள் தங்களின் விலைமதிப்பில்லாத பொருட்களை ஒளித்து வைக்கும் இடம் அது. அதற்குள் இருவரும் வியாபாரிகள் போல வேடமணிந்து சென்று, அந்த இடத்தின் மொத்த செக்யூரிட்டி அம்சங்களையும் தெரிந்துகொள்கின்றனர். அந்த இடத்தை அழிக்க ஒரே ஒரு வழிதான் உண்டு. ஒரு விமானத்தை அந்த இடத்தின் மீது மோதுவது. அப்படி ஒரு விமானத்தை மோதி, அந்த இடமே லாக்டவுன் ஆகும்போது உள்ளே செல்கின்றனர் ஹீரோவும் நீலும். அப்போதுதான் அங்கே ஒரு அறைக்குள் ஒரு பெரிய Turnstile கருவி இருப்பதை முதன்முதலில் ஹீரோ பார்க்கிறான். அவனுக்கு அது என்ன என்று தெரிவதில்லை. அந்தக் கருவியின் இரண்டு வாயிகளில் ஹீரோ ஒரு வாயிலிலும் நீல் இன்னொரு வாயிலிலும் நுழைகின்றனர். இருவருக்கும் இடையே ஒரு பெரிய கண்ணாடி இருக்கிறது. அங்கே தரையில் துப்பாக்கிகள் சிதறிக் கிடக்கின்றன. ஒரு சண்டை நடந்த அறிகுறி தெரிகிறது. கண்ணாடியில் குண்டுகள் துளையிட்டிருக்கின்றன. அந்தத் துளைகளைத் தொடவேண்டாம் என்று ஹீரோ நீலிடம் சொல்கிறான். அப்போது அந்தக் கருவி சுழன்று, இரண்டு வாசல்களில் இருந்தும் இருவர் முகமூடி உடையணிந்து வெளியே வருகின்றனர். இருவரும் ஹீரோவிடமும் நீலிடமும் சண்டையிடுகின்றனர். இதில் நீல் இருக்கும் பக்கம் வந்தவன், நார்மலாக ஓடுகிறான். ஆனால் ஹீரோ இருக்கும் பக்கம் வந்தவன், ரிவர்சில் செயல்படுகிறான். (இருவரும் ஒரே ஆள்தான். அது ஹீரோ. ஏன் என்று அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்). அவனுடன் ஹீரோ நடத்தும் சண்டையே ரிவர்சில் இருக்கிறது. இடையில் நீல், அந்தப்பக்கம் வந்தவனைத் துரத்திக்கொண்டு ஓடி அவனது முகமூடியை அகற்றிவிடுகிறான். உடனேயே திரும்ப ஹீரோவிடம் ஓடிவருகிறான். அப்போது வெளியே விமானம் வெடிக்க, ஷட்டரில் ஏற்படும் ஓட்டை வழியாக அந்த ஹீரோவிடம் சண்டையிட்ட ஆள் வெளியே தப்பிவிடுகிறான்.

இதுதான் படத்தில் முதன்முறையாக, காலம் என்பதை ரிவர்ஸ் செய்வது வருகிறது. படத்தின் இரண்டாம் பாதியில்தான், இந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து, அங்கே இருந்து ஹீரோவும் நீலும் இறந்த காலம் செல்ல முடிவுசெய்து, இதே ஆஸ்லோ விமான நிலையத்தில் விமானம் இடித்த நிகழ்வுக்குத் திரும்பி வருவார்கள். எனவே, அப்போதுதான் இந்த சண்டை நிகழ்ந்தது என்பது இரண்டாம் பாதி பார்க்கையில் புரியும். இது ஏன் நடந்தது என்று அந்த இடத்தில் விரிவாகக் கவனிக்கலாம்.

இதுவரை படத்தில் என்ன காட்டப்பட்டதோ, அதுதான் நமக்குமே புரிந்திருக்கிறது. இனிமேல்தான் இந்த ரிவர்சிங் எல்லாம் நன்றாகவே கவனிக்கப்போகிறோம். அப்படித்தான் படத்தில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இதையெல்லாம் படித்து வையுங்கள். நாளை தொடரலாம்.

Nayattu (2021) – Malayalam
நாயாட்டு படத்தில் வைக்கப்பட்ட கருத்துகள் பற்றி விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. படத்தில் தலித்களை வில்லன்களாக சித்தரித்து, அவர்கள் வேண்டுமென்றே எதிர்தரப்பான போலீஸைப் பழிவாங்க நினைத்து, அதை அரசியல் ஆக்கி, இறுதியில் தேர்தலில் மக்கள் மனதை மாற்றக்கூடிய சக்திகளாக ஆக்கப்பட்டு இருப்பதைப் பலரும் விமர்சிப்பதைக் காண முடிகிறது. அப்படி விமர்சிப்பவர்களின் நியாயம் நன்றாகவே புரிகிறது.

காரணம் தமிழில் தலித்களை மலினமாக சித்தரித்தே படங்கள் பெரும்பாலும் வந்துள்ளன. ஹவுசிங் போர்டில் இருக்கும் நபர் கெட்டவன் என்றே வசனங்கள் இடம்பெற்ற படங்களும் உண்டு. குப்பம் என்றால் அடியாள்.

இதைப்பற்றி இயக்குநர் பா.இரஞ்சித் பல வருடங்கள் முன்னர் ‘நான் மகான் அல்ல’ படம் பற்றி நான் எழுதியிருந்தபோது, பதிலாக எழுதிய கடிதம் ஒன்றை நீங்கள் இங்கே படிக்கலாம்.

எனவே, நாயாட்டு படத்தை விமர்சிக்கும் தமிழ் நண்பர்களின் கருத்தை நான் முற்றிலும் புரிந்துகொள்கிறேன்.

ஆனால், நாயாட்டு ஒரு தமிழ்ப்படம் அல்ல. அது ஒரு மலையாளப்படம். இப்படி நான் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கொஞ்சம் விரிவாகப் பார்த்தால், தமிழ்ப்படங்கள் போல் மலையாளப்படங்கள், பைனரியாக ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, இவன் தலித் – எனவே கெட்டவன். இவன் தலித் அல்ல – எனவே நல்லவன் என்று பேசுவதில்லை. மலையாளப் படங்களின் பின்னணியை நாம் ஆராய்ந்தால் இது நன்றாகவே புரியும். சில உதாரணங்கள் பார்க்கலாம்.

முதலில் முகாமுகம் (1984) – அடூர் கோபாலகிருஷ்ணனின் படம். இந்தப் படத்தின் நாயகன் ஒரு கம்யூனிஸ்ட். ஆனால் படம் செல்லச்செல்ல அவன் மாறுவான். அவன் மூலமாகக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது குற்றச்சாட்டை வைக்கிறார் அடூர் என்ற பிரச்னை இப்படத்தின் மூலம் எழுந்தது. மிகுந்த விமர்சனத்துக்குள்ளான படம் இது. கேரளா ஒரு கம்யூனிஸ்ட் பூமி என்பது அனைவருக்குமே தெரியும். அப்படியென்றால் அடூர் எதற்காக கம்யூனிஸ்ட்களின் கொள்கைகளை இப்படத்தில் விமர்சிக்க வேண்டும்?

அடுத்து Left Right Left (2013) – இந்தப் படமும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான விமர்சனமே. குறிப்பாக பினராயி விஜயன் மற்றும் வி.எஸ். அச்சுதானந்தனுக்கிடையான பனிப்போர் பற்றியது. கூடவே, கம்யூனிஸ்ட் கட்சி ஒரு காலத்தில் எப்படி இருந்தது – அதன்பின் படிப்படியாக எப்படி மாறி, பிற கட்சிகள் போலவே எப்படி தொண்டர் படை, வன்முறை ஆகியவற்றில் ஈடுபடுகிறது என்பதைப் பற்றிய படம் இது. இப்படமும் எதிர்ப்பையே சம்பாதித்தது. ஆனால் இதில் இருப்பவை எல்லாம் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது. உண்மைச்சம்பவங்களின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்ட படம் இது.

மூன்றாவதாக, உப்பு (1987) – 1987ம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற மலையாளப்படம். இதில் முஸ்லிம்களின் சட்டங்கள் பற்றிய விமர்சனங்களை வைத்தனர் இயக்குநர் வி.கே. பவித்ரனும் திரைக்கதையாசிரியர் கே.எம்.ஏ. ரஹீமும். எப்படி என்றோ எழுதப்பட்ட சட்டங்களை தற்காலத்தில் மனிதர்கள் தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்கின்றனர் என்பதைப் பற்றிய படம். இதுவும் மிகுந்த விமர்சனத்துக்குள்ளானது.
குறிப்பாக முஸ்லிம்கள். ஆனால் இயக்குநர் பவித்ரன், இப்படத்தில் இஸ்லாமை நான் விமர்சிக்கவில்லை. அதன் விதிகளை வைத்துக்கொண்டு எப்படி மனிதர்கள் சுயநலமாக செயல்படுகின்றனர் என்பதையே விமர்சித்தேன் என்று தெளிவாகவே பேசினார்.

இவை மூன்றையும் தவிர, இன்னும் பல படங்கள் இப்படி உள்ளன. தட்டத்தின் மறையத்து போன்ற ஒரு சாதாரண ரொமாண்டிக் படத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய பொறி கிளப்பும் வசனங்கள் உண்டு. பி.ஜே.பியையும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் வெளிப்படையாக விமர்சிக்கும் வசனங்களும் பல படங்களில் உண்டு. சாதாரணமாகவே ஒரு நாட்டுப்புறப் பாடலை எடுத்துக்கொண்டால், அம்மா குடித்த பிராந்தி பற்றிய பாடல் தமிழகமெங்கும் ஹிட் ஆகவில்லையா? நாயாட்டு படத்திலேயே ஒரு திருமணம் வருகிறது. அதில் பாடப்பெறும் பாடல் குடி பற்றியதே. அதில் பெண்கள் குடிப்பது ஜாலியாக வருகிறது. அங்கமாலி டைரீஸ் படத்தில் ஒரு திருமணத்தில் நாயகி லிச்சி ஒரு திருமணத்தில் குடித்துவிட்டு ஜாலியாக அனைவருடனும் ஆடுகிறாள். அந்தப் படத்தின் முதல் காட்சியிலேயே ஏசு வேடம் போட்ட ஒருவர், மதுபானக்கடையில் குடிப்பார்.

2013ல் வெளியான பபீலியோ புத்தா படத்தை எடுத்துக்கொண்டால், அந்தப் படத்தில், தலித்களை எப்படி மேல்தட்டு சாதிகள் ஒடுக்கின என்பது பற்றியே பேசப்படுகிறது. கம்மட்டிப்பாடம் படம் போலவே இதிலும் நிலப்பிரச்னை வருகிறது. இந்திய அரசியல் கட்சிகள் எப்படி ஒன்றுசேர்ந்து தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றின என்பது பற்றியதுதான் படம். காந்தியின் கருத்துகளைப் பற்றிய விமர்சனமுமே படத்தில் உண்டு.

ஆனால் அதேசமயம், ’செல்லுலாய்ட் படத்தை எடுத்துக்கொண்டால், அதில் யாருமே சாதிப்பின்னணியோடு காட்டப்படவில்லை; ஜே.சி டேனியேல் கூட அப்படி இல்லை. ஆனால் படத்தில் வரும் பி.கே. ரோஸி பாத்திரம் மட்டும் தெளிவாக, தலித்தாகக் காட்டப்படுகிறது. அது ஏன்?’ என்ற கேள்வியை, 3D Stereo Caste என்ற, மலையாள இசை உலகில் நிலவும் சாதிய வித்தியாசங்களைப் பேசும் டாக்குமெண்ட்ரியை எடுத்த ஏ.எஸ். அஜீத் குமார் ஒரு பேட்டியில் எழுப்புகிறார். அவரது விரிவான பேட்டியில் இப்படிப் பல கேள்விகள் வருகின்றன. ’மலையாளத் திரை உலகில் பெரும்பாலும் நாயர்களும் சிரியன் கிறிஸ்தவர்களும்தான் ஹீரோக்களாக வருகிறார்கள். இப்போதெல்லாம், சாதி பற்றிய கேள்விகளை எழுப்புபவர்களாக இவர்களே ஆகிவிட்டனர். எப்போதோதான் சாதி இருந்தது; இப்போது இல்லை என்றும், எங்கோ பிஹாரில், தமிழ்நாட்டில் மட்டுமேதான் சாதிய வித்தியாசங்கள் இருக்கின்றன; கேரளத்தில் இல்லை என்றும் இவர்களே பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், சாதிய வித்தியாசங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தாலே, அவர்களின் மீது சாதிய முத்திரையை இவர்கள்தான் குத்துகின்றனர். குறிப்பாக தலித்கள் மற்றும் ஆதிவாசிகள் மீது’ – என்பதும் அவரது கருத்தே. அவரது விரிவான பேட்டியை இங்கே படிக்கலாம்.

எனவே, இங்கே நான் சொல்ல வருவது ஒன்றுதான். மலையாளம், தமிழ்த் திரையுலகம் போல எந்த லாஜிக்கும் இல்லாமல் தட்டையாக சாதி வித்தியாசத்தை சொல்லவில்லை என்பதே. பாரதி கண்ணம்மா போலவோ, சின்னக்கவுண்டர், நாட்டாமை, தேவர் மகன் போலவோ எந்த nuancesஉம் இல்லாமல் வெறுமனே சாதியை ரொமாண்டிசைஸ் செய்யும் படங்கள் மலையாளத்தில் குறைவு., அங்கே விமர்சனங்கள் எல்லாவற்றின் மீதுமே வைக்கப்படுகின்றன. ஆணாதிக்கவாதிகள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஆதிக்க சாதியினர், அரசியல் என்று எல்லாமே கேள்விகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றே நினைக்கிறேன். அப்படித்தான் தலித் அரசியலுமே கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். அதன் விளைவுதான் நாயாட்டு போன்ற படங்கள்.

சாதி என்று எடுத்துக்கொண்டால், எண்ணற்ற மலையாளப் படங்களில் சாதி பற்றிய cringe வசனங்களும் காட்சிகளும் உண்டு. ஆனால் அதேசமயம், விமர்சனங்கள் வைப்பதிலும் மலையாளப்படங்கள் தவறியதில்லை. எனவே, தமிழ்ப்படங்களையும் மலையாளப்படங்களையும் ஒப்பிடவே முடியாது. சார்லி போன்ற ஒரு படத்தில், இயல்பாக, குடித்திருக்கும் சார்லி, வீட்டுக்குள் வரும் திருடனின் பெயரைக் கேட்டு, அவன் பெயர் சுன்னி என்று தெரிந்ததுமே, அவன் பெயருக்காக நக்கல் அடித்து, ’கேரளா காங்கிரஸிலேயே இதைவிட நல்ல பெயர் இருக்கிறது’ என்று கிண்டல் செய்து, காரல் மார்க்ஸ், ரோஸா லக்ஸம்பெர்க், வி.எஸ். அச்சுதானந்தன், VSOP – இப்படிப் பெயர் வைக்கவேண்டும் என்று சொல்லும் காட்சி உண்டு. இப்படிப்பட்ட காட்சியைத் தமிழில் ’மாறா’ என்று உருவாக்கும்போது அந்தக் காட்சியில், அண்ணாதுரை, வ.உ.சிதம்பரனார், எம்.ஜி. ராமச்சந்திரன் என்றேல்லாம் தமிழ்ப்பெயர்களை உபயோகிக்க முடியவில்லையே? தமிழில் மலையாளப்படங்கள் போல வெளிப்படையாகப் பெயர் சொல்லி விமர்சிக்க முடிகிறதா? இல்லை.

இதனாலேயே, தமிழ்ப்பட ரசிகர்களாகிய நமக்கு, வேற்றுமொழிப் படத்தில் எங்காவது சாதி என்பது வந்துவிட்டாலேயே, அது தவறு என்ற மனப்பான்மை வந்துவிடுகிறது. இது அவசியம் ஒருவித White man’s guilt தான் என்பது என் கருத்து. எப்படியென்றால், 20 வருடங்கள் முன்னர் வரையிலேயே சாதி oppression என்பது தமிழ்நாட்டின் so called மேல்சாதிகளில் இருந்தே வந்திருக்கிறது. இதை அதன்பின் புரிந்துகொண்ட நாம், அதெல்லாம் வேண்டாம் என்று உதறித் தள்ள முயற்சிக்கும்போது, நம் கண்ணில் படும் சாதி குறித்த எல்லாமே தவறு என்ற கருத்து வருகிறது. அது சரிதான் . ஆனாலும், மலையாளம் போன்ற ஒரு wider diaspora பற்றி நாம் புரிந்துகொண்டால் மட்டுமே நாயாட்டு போன்ற ஒரு படத்தைப் பார்க்க முடியும் என்று எண்ணுகிறேன். தலித்தை வில்லன் என்று சித்தரிக்கும் அதே மலையாளப்படம்தான் பபிலியோ புத்தாவை எடுத்திருக்கிறது. Issue based என்பது மட்டுமேதான் இப்படிப்பட்ட படங்களைப் பார்க்கையில் நாம் கருத்தில் கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறேன்.

இல்லையேல் எப்படி ஆகும் என்றால், தலித் பற்றி எப்போதுமே glorify செய்தே படங்கள் வரவேண்டும் என்ற எண்ணமே மேலெழும். தலித் மட்டும் இல்லாமல், மதங்கள், பிற சாதிகள் என்று எதையுமே விட்டுவைக்காமல் கேள்விகள் கேட்பதில் மலையாளப் படங்களுக்கு ஒரு பெரிய இடம் உண்டு என்பதை நாம் புரிந்துகொண்டால் மட்டுமே நாயாட்டு படத்தால் தமிழ்நாட்டு ஆடியன்சிடம் எழும் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.

எஸ்.பி. பாலசுப்ரமணியம்: பிறமொழிப் பாடல்கள்
சென்ற வருடம் இந்தியா டுடேயின் எஸ்.பி.பி சிறப்பிதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை.  எஸ்.பி.பி பாடிய, தமிழைத் தவிர்த்த பிறமொழிப் பாடல்கள் பற்றியது.

எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடிய முதல் பாடல் தெலுங்கு என்பது அவரது ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதேபோல் அவர் பாடிய இரண்டாம் பாடல், கன்னடம். இதையும் எஸ்.பி. பியின் தீவிர ரசிகர்கள் அறிந்திருக்கலாம். இப்படி 1967ல் தெலுங்கில் அறிமுகமாகி, ஏராளமான பாடல்கள் தெலுங்கில் பாடி, அதன்பின்னரே தமிழில் 1969ல் எஸ்.பி.பி அறிமுகமானார். அதேபோல், எஸ்.பி. பாலசுப்ரமணியம் வாங்கியிருக்கும் தேசிய விருதுகள் ஆறில், ஐந்து விருதுகள் பிற மொழிகளில் பாடியதற்கே அவருக்குக் கிடைத்துள்ளன. தமிழில் ஒரே ஒரு விருதுதான். இப்படி, தமிழில் அறிமுகமானதற்குப் பிறகுமே தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளடங்கிய பிற மொழிகளில் பல பாடல்களை எஸ்.பி.பி பாடியிருக்கிறார் என்பதால், தமிழ் தவிர்த்து, பிற மொழிகளில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பயணம் பற்றிக் கொஞ்சம் கவனிக்கலாம்.

பல பேட்டிகளில் தனது குருநாதர் என்று எஸ்.பி.பி குறிப்பிடுவது, இசையமைப்பாளர் எஸ்.பி., கோதண்டபாணியையே. காரணம், எஸ்.பி.பியின் முதல் பாடல் இடம்பெற்ற ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாதா ராமண்ணா’ படத்தின் இசையமைப்பாளர் கோதண்டபாணிதான். ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து பொறியியல் (AMIE) படித்துக்கொண்டிருந்த மாணவர் எஸ்.பி.பி, கூடூரில் நடந்த ஒரு இசைப்போட்டியில் பாட, அந்தப் போட்டிக்கு நடுவராக வந்திருந்த எஸ். ஜானகி, எஸ்.பி.பியின் குரல் நன்றாக இருப்பதாகவும், சென்னையிலேயே படித்துக்கொண்டிருப்பதால் தமிழில் திரைப்படங்களில் வாய்ப்புகள் தேடும்படியும் பாராட்டுகிறார். (அந்தப் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது வருடம் முதல் பரிசு).. இதனால் ஊக்கமடையும் மாணவர் எஸ்.பி.பி, சென்னை திரும்பி வந்து இரண்டு மூன்று வருடங்கள் மிகுந்த முயற்சிகள் செய்கிறார். ஆனால் பலனில்லாததால், எல்லா முயற்சிகளையும் கைவிட்டுவிட்டு, பொறியியல் படிப்பில் கவனம் செலுத்துகிறார்.

இதன்பின் மாணவர் எஸ்.பி.பியின் 17 வயதில் சென்னையில் ஆந்திரா க்ளப்பில் இந்தியா தழுவிய இசைப்போட்டியில் நடுவராக வந்திருந்த எஸ்.பி. கோதண்டபாணிதான் (பிற நடுவர்கள்:  கண்டசாலா, பெண்டியால நாகேஸ்வரராவ்) மாணவர் எஸ்.பி.பியின் குரலால் கவரப்பட்டு, அவரிடம் வந்து பேசுகிறார். ’நல்லா பாடுறேய்யா.. ஒழுங்கா ப்ராக்டீஸ் பண்ணி மட்டும் பாடிட்டேன்னா, இன்னும் நாப்பது வருஷம் பாடுவ. நிறைய அவார்டெல்லாம் வாங்குவேய்யா’ என்று சொல்கிறார். மறுநாள் தயாரிப்பாளரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். ஆனால் மிக இளம் வயதில் எஸ்.பி.பி இருந்ததால், அவரது குரல் யாருக்கும் பொருந்தாதே என்று தயாரிப்பாளர் சொல்ல, அதன்பின் 2 வருடங்கள் படிப்பை மட்டும் பார்த்துக்கொண்டு, எஸ்.பி. கோதண்டபாணியை சந்திக்காமலே இருந்திருக்கிறார் எஸ்.பி.பி. ஆனால் கோதண்டபாணி சும்மா இருக்கவில்லை. எங்கெங்கோ தேடி, எப்படியோ பலகாலம் கழித்து எஸ்.பி.பியைப் பிடித்துவிட்டார். இது நடந்தது 1963 முதல் 1966 வரையான காலகட்டம்.

அப்போதுதான், கோதண்டபாணியின் விடாப்பிடி முயற்சிகளால் எஸ்.பி.பி 1966ம் வருடம், டிசம்பர் 15ம் தேதி, ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாதா ராமண்ணா’ தெலுங்குப் படத்தில் முதல் பாடலைப் பதிவு செய்கிறார். அப்போதுகூட, பிந்நாட்களில் இத்தனை பெரிய பாடகராக வரப்போவதைப் பற்றி எதுவுமே தெரியாது என்றே எஸ்.பி.பி சொல்லியிருக்கிறார். முதல் வாய்ப்பைத் தன்னைத் தேடிப்பிடித்துக் கொடுத்ததாலேயே எஸ்.பி. கோதண்டபாணியைத் தனது குருநாதர் என்று எஸ்.பி.பி குறிப்பிடுவது வழக்கம்.

இந்தப் படத்துக்குப் பிறகு தெலுங்கில் பல படங்கள் எஸ்.பி. கோதண்டபாணியின் இசையிலும், கே.வி. மகாதேவன், எம்.எஸ்.வி, ஜி.கே. வெங்கடேஷ், ராஜேஸ்வர ராவ், மாஸ்டர் வேணு போன்ற, தமிழிலும் சிறப்பாக விளங்கிய இசையமைப்பாளர்கள் தெலுங்கில் இசையமைத்த படங்களில் பாடினார் எஸ்.பி.பி. தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் மட்டுமே இயங்கிய சத்யத்தின் இசையிலும் நிறையப் பாடியிருக்கிறார். இப்படிப் பாடவந்த முதல் இரண்டு வருடங்களில் பெரும்பாலும் தெலுங்குப் பாடல்களில் ஆரம்பித்ததுதான் எஸ்.பி.பியின் இசைப்பயணம். கன்னடமும் கூடவே சேர்ந்துகொண்டது. அப்போது, இன்னொரு போட்டியில் மாணவர் எஸ்,பி,பி பாடியதைக் கேட்டு, பிரபல விளம்பர டிசைனர் பரணிகுமார் (அக்காலத்தில் போஸ்டர்கள், விளம்பரங்களில் கொடிகட்டிப் பறந்தவர்), தமிழில் இயக்குநர் ஸ்ரீதரிடம் அறிமுகப்படுத்துகிறார். ’நெஞ்சிருக்கும் வரை’ படத்தின் செட்டுக்குச் சென்று ஸ்ரீதருக்குப் பாடிக் காட்டுகிறார் எஸ்.பி.பி. இதனால் கவரப்பட்ட ஸ்ரீதர், மறுநாள் தனது அலுவரகம் வரும்படியும், அங்கே இருக்கும் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்திதான் இதில் இறுதி முடிவு எடுக்கமுடியும் என்றும் சொல்ல, மறுநாள் அங்கே செல்கிறார் மாணவர் எஸ்.பி.பி.

அறுபது எழுபது இசைக்கலைஞர்கள் சூழ, எம்.எஸ்.வி ப்ராக்டீஸ் செய்துகொண்டிருக்கிறார். எஸ்.பி.பியை ஸ்ரீதர் அறிமுகப்படுத்த, பாடச்சொல்கிறார் எம்.எஸ்.வி. ஹிந்திப்பாடல் ஒன்றைப் பாடுகிறார் எஸ்.பி.பி (தோஸ்தி படத்தில் முஹம்மது ரஃபியின் ’ஜானேவாலோ ஸரா முட்கே தேகோ முஜே’). நன்றாக இருப்பதாகச் சொல்லி, தமிழில் பாடச்சொல்கிறார் எம்.எஸ்.வி. ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடலின் பல்லவியை மட்டும் பாடுகிறார். தமிழில் எழுதிக்கொடுக்கிறேன். பாடுகிறாயா என்று எம்.எஸ்.வி கேட்க, தமிழ் எழுதப்படிக்கத் தெரியாது என்கிறார் மாணவர் எஸ்.பி.பி. உடனே எம்.எஸ்வி சொல்லச்சொல்ல, வரிகளைத் தெலுங்கில் எழுதிப்பாடுகிறார். தமிழ் உச்சரிப்பை ஆங்காங்கே திருத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்லி, எப்போது தமிழை எழுதப்படிக்கத் தெரிகிறதோ அப்போது அவசியம் வாய்ப்புக் கொடுப்பதாக உறுதியளிக்கிறார் எம்.எஸ்வி. உடனடியாக, போஸ்டர்களைப் படித்தும், சில தமிழ் நண்பர்களின் உதவியோடும் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார் மாணவர் எஸ்.பி.பி. இதற்கிடையில் தெலுங்கில் பல பாடல்கள் பாடி, அங்கேயே நல்ல வருமானத்தால் செட்டில் ஆகிவிடுகிறார்.

பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து, பரணி ஸ்டுடியோவில் ஒரு திலுங்குப் பாடல் பாடிவிட்டு வெளீயே வரும் எஸ்.பி.பியை எம்.எஸ்வி தாண்டிச்செல்கிறார். உடனடியாகத் திரும்பி வந்து, ‘நீ பாலசுப்ரமணியம் தானே? ஏன் என்னை இத்தனை நாட்களாக வந்து பார்க்கவில்லை?’ என்று கேட்க, தான் தமிழ் கற்றுக்கொண்டதைச் சொல்கிறார் எஸ்.பி.பி. உடனே மறுநாள் அவரை வந்து பார்க்கச்சொல்லி, 1969ல் தமிழில் எம்.எஸ்.வியின் இசையில் ஹோட்டல் ரம்பாவில் அறிமுகப்படுத்திவிடுகிறார் எம்.எஸ்.வி. ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு.. இத்தனை நாளா நித்திரை இல்லை இந்த சுகம் வீணாச்சு’ என்ற பாடல். உடன் பாடியவர் எல்.ஆர். ஈஸ்வரி. ஆனால். அப்படம் வராமல் போக, பின்னர் சாந்தி நிலையத்தில் ‘இயற்கையென்னும் இளைய கன்னி’யில் வாய்ப்புக் கொடுக்கிறார் எம்.எஸ்.வி.

அறிமுகமான 1967ல் எஸ்.பி.பிக்குத் தெரிந்த மொழிகள் – தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் கொஞ்சம் இந்தி. தமிழ் சுத்தமாகவே வராது. எஸ்.பி.பி பாடிய முதல் படமான ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாதா ராமண்ணா’வில் வீணை வாசிக்க வந்த கலைஞர் வீணை ரங்காராவ், உடனடியாக எஸ்.பி.பிக்கு இரண்டாவது படமான ’நக்கரே அதே ஸ்வர்கா’ (1967) கன்னடப் படத்தில் தனது இசையில் வாய்ப்புத் தருகிறார். அப்போது எஸ்.பி.பிக்குக் கன்னடம் தெரியாது. ஆனால் பத்தே நாட்களில் கற்றுக்கொள்ளலாம் வா என்று நம்பிக்கை தருகிறார் வீணை ரங்காராவ். இதில்தான் எஸ்.பி.பி பாடிய இரண்டாவது பாடல் இடம்பெற்றிருக்கிறது. ’கனசிதோ மனசிதோ’ என்ற அந்தப் பாடலை எஸ்.பி.பியுடன் பாடியவர் பி.சுசீலா. இவர்தான் எஸ்.பி.பியின் முதல் தமிழ்ப் பாடலிலும் அவருடன் பாடியிருக்கிறார்.

இப்படி ஆரம்பித்த பாலசுப்ரமணியத்தின் தெலுங்கு மற்றும் கன்னடப் பயணங்களோடு, தமிழில் அறிமுகமான அதே 1969ல், இசையமைப்பாளர் தேவராஜன் மூலமாக, மலையாளத்திலும் ’கடல்பாலம்’ அறிமுகமாக அமைகிறது. படத்தின் இயக்குநர், கே.எஸ். சேதுமாதவன். தேவராஜனிடம் எஸ்.பி.பியை அறிமுகம் செய்தவர், ஆர்.கே. சேகர் (ஏ.ஆர் ரஹ்மானின் தந்தை). அக்காலகட்டத்தில் அடிக்கடி ஆர். கே. சேகரின் சென்னை வீட்டுக்குப் பாடல் ரிகர்சல்களுக்காக எஸ்.பி.பி செல்வது வழக்கம். இது, ஆர்.கே. சேகர், மலையாளத்தில் பழசிராஜாவுக்கு (1964) இசையமைத்துவிட்டு, அதன்பின் தேவராஜன் முதலிய இசையமைப்பாளர்களிடம் இசையை கண்டக்ட் செய்பவராகப் பணிபுரிந்துகொண்டிருந்த காலம். இச்சமயத்தில், தனது வீட்டுக்கு ரிகர்சல்களுக்காக வந்துகொண்டிருந்த எஸ்.பி.பியை தேவராஜனிடம் அறிமுகப்படுத்துகிறார் ஆர்.கே. சேகர். அதுதான் கடல்பாலத்தின் ’ஈ கடலும்.. மறுகடலும்’ என்ற பாடல். மலையாளத்தில் அதற்கு அடுத்த பாடல், அதே ஆர்.கே. சேகரின் இசையில் 1971ல் ’யோகமுள்ளவள்’ படத்தில் பாடுகிறார்.

ஆனால் மலையாளத்தில் தனது மறைவு வரையிலுமே, கிட்டத்தட்ட நூற்று சொச்சம் பாடல்கள்தான் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. தெலுங்கிலும் கன்னடத்திலும் மிக ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார். மலையாளத்தில் பல பாடல்களை அவர் பாடாமல் இருந்ததற்குக் காரணம் அங்கே ஏற்கெனவே ஏசுதாஸ் ஏராளமான பாடல்களைப் பாடிக்கொண்டிருந்ததால் இருக்கலாம். கூடவே, மலையாள மொழியின் உச்சரிப்பில் இருக்கும் சிக்கல்களாகவும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், மலையாளத்திலும் அர்ஜுனன், ஷ்யாம், எம்.பி. ஸ்ரீனிவாசன், ரவீந்திரன், ஔசெப்பச்சன், எஸ்.பி. வெங்கடேஷ் (தமிழில் சங்கீதராஜன் என்று அறியப்பட்டவர்), ரவீந்த்ர ஜெயின் (ஆம். இந்தி இசையின் பார்வையற்ற ஞானிதான். ஒரே ஒரு மலையாளப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சுகம் சுககரம். அதில் எஸ்பி.பிக்கு ஒரு பாடல் உண்டு. படத்தில் இந்தப் பாடலுக்கு நடித்தவர் ஷம்மி கபூர்) போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடியிருக்கிறார்.

இந்தியை எடுத்துக்கொண்டாலோ, எஸ்.பி.பி பாடிய முதல் இந்திப் பாடலுக்கே சிறந்த பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது. 1981ல் லக்‌ஷ்மிகாந்த் பியாரிலாலின் இசையில், கமல்ஹாசன் நடித்து, பாலசந்தர் இயக்கிய ‘எக் தூஜே கே லியே’ படத்தில் ‘தேரே மேரே பீச் மே’ பாடலின் சோக வடிவம் அது. அதில் இருந்து ஏராளமான இந்திப்பாடல்கள் பாடிவிட்டார் எஸ்.பி.பி. ஒரு காலகட்டத்தில் சல்மான் கான் நடித்த பல பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பியே. தொண்ணூறுகளில் இந்திப் பாடல்கள் கேட்டவர்கள் இதைக் கவனித்திருக்கலாம். இந்தியில் லக்‌ஷ்மிகாந்த் ப்யாரிலால், ராம் லக்‌ஷ்மன் (பெரும்பாலான ராஜ்ஸ்ரீ நிறுவனத்தாரின் சல்மான் கான் படங்களின் இசையமைப்பாளர்), ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் இசையில் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

தெலுங்கிலும் தமிழிலும் கன்னடத்திலும் தொடர்ந்து மிகவும் பிஸியாகப் பாடிக்கொண்டிருந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.விஸ்வநாத் இயக்கிய ‘சங்கராபரணம்’ படத்தின் மூலமாகத் தனது முதல் தேசிய விருதைப் பெற்றார். இந்தப் படத்துக்காக கே.விஸ்வநாத், எஸ்.பி.பியின் தந்தையைத்தான் முதலில் அணுகியிருக்கிறார். என்னவெனில், ’தினந்தோறும் பல பாடல்கள் ரெகார்டிங் செய்துகொண்டிருக்கிறார் உங்கள் மகன்; ஆனால் எனக்கு அவரது குரல், மிகவும் புதியதாகத் தேவைப்படுகிறது. எனவே, அவர் எந்தத் தினமானாலும் பாடக்கூடிய முதல் பாடலாக என் பாடல்கள் இருக்கவேண்டும். அவர் எப்போது கால்ஷீட் கொடுத்தாலும் சரி’ என்று சொல்லியிருக்கிறார்.  அதற்கு எஸ்.பி.பியின் தந்தை (சாம்பமூர்த்தி – ஹரிகதை காலட்சேபங்கள் செய்துகொண்டிருந்தவர்), அவனுக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு வந்திருக்கிறது; இதை அவன் கேட்காமலா போய்விடுவான்? கேட்காவிட்டால் அவன் செவிட்டில் இரண்டு அறைகள் அறைந்து வழிக்குக் கொண்டுவாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதன்பின்னும் எஸ்.பி.பி அந்த வாய்ப்பை ஒப்புக்கொள்ளவில்லை. காரணம், ’அந்தப் படத்தில் வரும் சங்கர சாஸ்திரி, மிகமிகத் தூய்மையானவர்; கர்நாடக இசையில் கரைகண்டவர். எனக்கோ கர்நாடக இசையே தெரியாது. இதை நான் பாடி, ஒருவேளை இந்தப் படத்தில் சரியாக வராத ஒரே விஷயம் எஸ்.பி.பியின் குரல்தான் என்று அனைவரும் சொன்னால், பாண்டிபஜாரில் பொதுவில் நின்று தூக்கில் தான் தொங்கவேண்டும்’ என்றே சொல்லியிருக்கிறார், ஆனாலும் அவரை வற்புறுத்தி ஒப்புக்கொள்ளவைத்துவிட்டார் கே. விஸ்வநாத். இதனால் ஒவ்வொரு பாடலாக, கே.வி. மகாதேவனின் புகழ்பெற்ற அசோசியேட் புகழேந்தியால் டிராக் பாடப்பட்டு, அந்தப் பாடல்களை டேப்பில் ரெகார்ட் செய்து, செல்லும் இடங்கள் எல்லாம் காரில் கேட்டுக்கொண்டே மனனம் செய்து, அதன்பின்னும் பயத்துடனேயே பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. அவரது வார்த்தைகளிலேயே சொல்லவேண்டும் என்றால், ’ஹாய் பாலு என்று என்னை அழைத்துக்கொண்டிருந்த அனைவரும், நமஸ்காரம் பாலு அவர்களே என்று சொல்ல ஆரம்பித்தது சங்கராபரணத்தால்தான்’.

அந்த உழைப்பு வீண்போகவில்லை. அறிமுகமான பதிமூன்றாம் ஆண்டு, 1980க்கான சிறந்த பாடகருக்கான தேசிய விருது, சங்கராபரணத்துக்காக எஸ்.பி.பிக்குக் கிடைக்கிறது. அவருக்கு மட்டுமல்லாமல், அற்புதமாக இசையமைத்த கே.வி. மகாதேவன், உடன் பாடிய வாணி ஜெயராம் ஆகியோருக்கும் தேசிய விருது கிடைக்கிறது.

உண்மையில் இன்றுமே சங்கராபரணம் பாடல்களை ரசிக்க முடியும். வழக்கமான பாணியில் இல்லாமல், கொஞ்சம் கனமான குரலாகத் தன் குரலை மாற்றிக்கொண்டு, சங்கர சாஸ்திரியாக நடித்த சோமையாஜுலுவின் மத்திம வயதுக்காக அட்ஜஸ்ட் செய்துகொண்டே எல்லாப் பாடல்களையும் பாடியிருப்பார். சங்கராபரணம் சென்னை, கோவை ஆகிய ஊர்களிலும் பல நாட்கள் ஓடியது.

இதற்கு முன்னுமே எஸ்.பி.பி தெலுங்கில் பிரபலமான, பிஸியான பாடகர்தான். இதன்பின்னும் அப்படியே தொடர்ந்தார். தமிழைவிடவும் அதிகமான பாடல்களைத் தெலுங்கில்தான் பாடியிருக்கிறார். எத்தனையோ கதாநாயகர்களை ரசிகர்கள் மனதில் வாழவைத்தார்.

இதன்பின் அடுத்த தேசிய விருது, இம்முறை இந்தியில் கிடைக்கிறது. பாலசந்தர், தனது மரோசரித்ராவை 1981ல் இந்தியில் அதே கமல்ஹாஸனை வைத்து எக் தூஜே கே லியே என்று ரீமேக் செய்கிறார். அந்தப் படத்தில் கதாநாயகன் தமிழ் மட்டுமே தெரிந்த இளைஞன். கோவாவில் வசிப்பவன். அவனுக்குப் பின்னணிப் பாடலை எஸ்.பி.பிதான் பாடவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார் பாலசந்தர். இதற்காக இசையமைப்பாளர்கள் லக்‌ஷ்மிகாந்த் பியாரிலாலிடம் சண்டையே போட்டிருக்கிறார். இறுதியில் அவர்கள் சம்மதிக்க, தனது இரண்டாம் இந்திப்பாடலை அந்தப் படத்துக்காக எஸ்.பி.பி பாடுகிறார். ’தேரே மேரே பீச் மே’ என்ற பாடலின் சோக வெர்ஷன். அற்புதமான பாடல். எக் தூஜே கே லியே பட்டிதொட்டியெங்கும் பிய்த்துக்கொண்டு ஓட, அந்தப் பாடலுக்காக சிறந்த பாடகருக்கான தேசிய விருது இரண்டாம் முறையாக எஸ்.பி.பிக்குக் கிடைக்கிறது. (எஸ்.பி.பி பாடிய முதல் இந்திப்பாடலும் பாலசந்தர் படமே. 1977ல் வெளீயான ‘மீட்டி மீட்டி பாதே(ய்)ன்’ படம். அதில் ‘தில் தீவானா படா மஸ்தானா’ என்பதே இந்தியில் டெக்னிகலாக அவரது முதல் பாடல். ஆனால் இது மன்மதலீலையின் டப்பிங் என்பதால் பொதுவாக எக் தூஜே கே லியேதான் எஸ்.பி.பியின் நேரடி இந்திப் படமாகக் கருதப்படுகிறது).

இதன்பின்னர் எப்படிக் கமல்ஹாஸன் தடதடவென்று ஹிந்தியில் புக்காக ஆரம்பித்தாரோ அப்படி, கமல்ஹாஸன் நடிக்கும் படங்களில் ஆங்காங்கே எஸ்.பி.பியும் பாட ஆரம்பித்தார். பாலசந்தரும் டி. ராமாராவும் எடுத்த இந்திப் படங்களிலும் எஸ்.பி.பிக்கு வாய்ப்புக் கிடைத்தது இந்தப் படங்களுக்கெல்லாம் லக்‌ஷ்மிகாந்த் பியாரிலாலே பெரும்பாலும் இசையமைத்தனர். (கமல்ஹாஸனுக்கும் எஸ்.பி.பிக்குமான தொடர்பு இறுதி வரை இருந்தது. கமல்ஹாஸனின் அத்தனை டப்பிங் செய்யப்பட்ட படங்களுக்கும் அவருக்குப் பின்னணிக் குரல் எஸ்.பி.பியே கொடுத்தார் என்பது தெரிந்திருக்கும்). ரீமேக்குகள் இல்லாமல் இந்தியில் எஸ்.பி.பி பாடிய படங்களில் சாகர் குறிப்பிடத்தக்கது. ஆர்.டி. பர்மனின் இசை. மிகவும் நன்றாக ஓடிய படம். அதில் கமல்ஹாஸனுக்காகப் பாடியிருப்பார்.

ஆனால் எப்படி எஸ்.பி.பிக்கு எக் தூஜே கே லியே இந்தியா முழுக்கப் பெரும் புகழைக் கொடுத்ததோ, அப்படி அவரை மறுபடியும் இந்தியா முழுக்கப் பரப்பியது ‘மைனே ப்யார் கியா’ படம். கதாநாயகனாக சல்மான் கானின் முதல் படம். இசையமைத்தவர் ராம் லக்‌ஷ்மண். சூரஜ் பர்ஜாத்யாவின் படம். இந்தப் படத்தின் பதினோரு பாடல்களில் பத்துப் பாடல்களை எஸ்.பி.பியே பாடினார். அப்படத்தின் ஆடியோ காஸெட், விற்பனையில் சாதனை படைத்து சூப்பர்ஹிட் இசையாக மாறியது. இந்தப் படத்துக்குப் பின்னர், சில வருடங்கள், பாலிவுட்டில் சல்மான் கானின் குரலாகவே மாறினார் எஸ்.பி.பி. குறிப்பாக ஹம் ஆப்கே ஹெய்ன் கோன் படம். இது மைனே ப்யார் கியா போலத் தமிழிலும் அட்டகாசமாக ஓடியது. இந்தப் படத்துக்கும் அதே சூரஜ் பர்ஜாத்யாதான் இயக்கம். அதே ராம் லக்‌ஷ்மண் தான் இசை. இதிலும் மொத்தம் பதினான்கு பாடல்கள். அவற்றில் ஒன்பது பாடல்களை எஸ்.பி.பி தனியாகவும், லதா மங்கேஷ்கருடனும் பாடினார். அத்தனையும் சூப்பர்ஹிட்கள். இசை ரசிகர்கள் இந்த இரண்டு ஆல்பங்களையும் மறந்திருக்கவே முடியாது. சல்மான் கானின் ஓடாத படமான ‘லவ்’ படத்திலும் சித்ராவோடு இணைந்து பாடியிருக்கிறார். ’சாஜன்’ படத்தில் நதீம் ஷ்ரவணின் இசையில் எஸ்.பி.பி பாடிய ‘பஹத் ப்யார் கர்த்தே ஹைன் தும் கோ சனம்’ பாடல் இன்றுமே மறக்கவே முடியாத இந்திப் பாடல்களில் ஒன்று. ஆனால் போகப்போக இந்தியிலிருந்து எஸ்.பி.பி விலகி, தமிழ் & தெலுங்கிலேயே பெரும்பாலும் பாட ஆரம்பித்தார்.

எஸ்.பி.பியின் மூன்றாம் தேசிய விருதும் தெலுங்குதான். 1983ல் கே. விஸ்வநாத் இயக்கிய ‘சாகர சங்கமம்’ (சலங்கை ஒலி) படத்துக்காக. அதில் ‘வேதம் அணுவிலும் ஒரு நாதம்’ பாடலின் தெலுங்கு வடிவத்துக்காகக் கிடைத்தது. இதன்பின் நான்காவது தேசிய விருது, அதே தெலுங்கில் பாலசந்தர் எடுத்த ‘ருத்ரவீணா’ படத்துக்காகக் கிடைத்தது. இதைத்தான் அடுத்து ‘உன்னால் முடியும் தம்பி’ என்று பாலசந்தர் தமிழில் எடுத்தார். ருத்ரவீணாவில் சிரஞ்சீவியும் ஜெமினியும் நடித்திருந்தனர். இதன்பின் ஐந்தாவது விருது கன்னடத்தில். ‘சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்‌ஷர கவாயி’ படத்துக்காக. இதில் அட்டகாசமான ஒரு இந்துஸ்தானி பாடல் பாடியிருப்பார் (உமண்டு குமண்டு கன கர்ஜே பத்ரா). இதற்கு இசை, கன்னடத்தில் இளையராஜாவுக்கு சமமான ஹம்சலேகா. இப்படத்துக்காக ஹம்சலேகாவுக்கும் தேசிய விருது கிடைத்தது. இவற்றுக்கெல்லாம் பின்னர்தான் தமிழில் எஸ்.பி,பிக்கு அவரது இறுதியான தேசிய விருது, ‘மின்சாரக் கனவு’ படத்தின் ’தங்கத்தாமரை மகளே’ படத்துக்குக் கிடைத்தது.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி தவிரவும் இந்தியாவின் பிற 12 மொழிகளில் எஸ்.பி.பி பாடியிருக்கிறார். அவற்றையெல்லாம் எழுதப் புகுந்தால் புத்தகம்தான் எழுதவேண்டி இருக்கும். திரையிசைப் பாடல்களைத் தவிர, பக்திப் பாடல்களுமே ஏராளம் பாடியிருக்கிறார். எப்படித் தமிழகத்தில் எஸ்.பி.பி ஒரு மறக்க முடியாத பாடகரோ, அப்படியேதான் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும். தமிழில் இருந்த அதே புகழ், அவருக்குத் தென்னிந்தியா முழுக்கவே இருந்தது. எத்தனையோ கதாநாயகர்களைத் தனது பாடல்களின் மூலமாக எப்போதும் மக்கள் மனதில் வாழவைத்துக்கொண்டிருப்பவர் அவர். இப்படிப் பல மொழிகளிலும் சூப்பர்ஸ்டாராக விளங்கிய பாடகர் இதற்கு முன்னரும், இனிமேலுமே அரிதுதான் என்பதே ஸ்ரீபதி பண்டிதாராத்யுல பாலசுப்ரமணியம் என்ற எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறக்கமுடியாத வெற்றி.

Tenet (2020) – English – 1
Time Travel என்ற காலப்பயணத்துக்கான விதிகள் என்னென்ன? ஒவ்வொரு படத்திலும், அல்லது ஒவ்வொரு படைப்பிலும் அதை எழுதுபவர்களே அதற்கான விதிகளையும் உருவாக்குவது வழக்கம். காரணம், இதுவரை காலப்பயணம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஒவ்வொரு திரைப்படத்திலும், கதை சார்ந்து, கதையின் சுவாரஸ்யத்துக்காக ஒவ்வொரு விதி இதற்காக உருவாக்கப்படும். அப்படி க்ரிஸ்டோஃபர் நோலன் பிரத்யேகமாகத் தனக்காகவே உருவாக்கியிருக்கும் விதிகள் அடங்கிய படம்தான் TENET.

சிதற்றம் என்ற Entropy

ஆனால், இது உண்மையில் காலப்பயணத்தை முன்வைக்கும் படம் அல்ல. மாறாக, ஒரு பொருளின் சிதற்றம் என்ற ‘Entropy’யை முன்வைக்கும் படம் இது (Entropyக்குத் தமிழில் என்ன என்று தேடினேன். ஒரே ஒரு வார்த்தைதான் கிடைத்தது). சிதற்றம் என்பது, ஒரு பொருள் அதன் காலகட்டத்தில் ஒழுங்கற்றதாகச் சிதறிப் போவதை விளக்கும் சொல். அதன் குறிப்பிட்ட தன்மையை செய்யாமல் இருக்கும்போது எத்தனை சக்தி செலவாகிறது என்பதே சிதற்றம். ஒரு துப்பாக்கி சுடாமல் இருக்கும்போது எத்தனை சக்தி செலவாகிறது? கால நிலையில் முன்னோக்கி செல்லும்போது (தினசரி வாழ்க்கை), இந்த செலவாகும் சக்தி என்பது அதிகரிக்கிறது; நம் உடலில் இருக்கும் செல்கள் அழிவது, குழந்தை கையில் இருக்கும் கண்ணாடி விழுந்து உடைவது, குளங்களில் செடிகொடிகள் மண்டுவது, ஊரெங்கும் குற்றங்கள் அதிகரிப்பது, எப்போதோ வரப்போகும் அழிவை நோக்கியே நமது அண்டவெளியும் விண்வெளியும் பயணிப்பது – இவைகளெல்லாம் சில உதாரணங்கள். சூடான பிரியாணி, அப்படியே வைக்கப்பட்டால் ஆறிவிடுவது இன்னொரு உதாரணம். அந்த சூடு, அறையின் சூட்டோடு கலந்துவிடுகிறது. எளிமையாக, ஒரு விஷயம் ஒரு வேலையைச் செய்யும்போது, அந்த வேலை செய்யப்படாமல் இருப்பதற்குமே சக்தி செலவாகிறது. ஒரு எஞ்சின் செயல்படும்போது, அதன் இயக்கம் என்ற குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போதே, ஒரு குறிப்பிட்ட அளவு சக்தி தானாகவே வெளியேறிவிடுகிறது.

நெருப்பில் ஒரு கட்டையைப் போட்டால் அது எரிந்தே தீரும். இப்படி எரிவதே Entropy. எரியும் கட்டை, எரிவதற்கு முன்னால் இருந்த நிலையை அடையவே முடியாது. காரணம், காலம் என்பது முன்னோக்கியே பயணிக்கிறது. கூடவே, Entropy என்பது குறையவே குறையாது. அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான் அதன் தன்மை. உலகம் என்பது அழிந்தே தீரும். குழந்தையின் கையில் கொடுக்கப்பட்ட கண்ணாடியை அது கீழே போட்டே தீரும். உடலின் செல்கள் சிறுகச்சிறுக அழிவது அதிகரித்தே தீரும்.

மிகமிகமிகமிக எளிமையாக, Entropy is the degree of disorder. இதை நாம் கட்டுப்படுத்தாவிட்டால் இந்த ஒழுங்கின்மை என்பது அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். குளங்களில் இருக்கும் செடிகொடிகளை அகற்றாவிட்டால் குளத்தையே அவை மூடிவிடுவதைப்போல்.

இந்த Entropyயை ஸ்டீஃபன் ஹாக்கிங், காலத்தோடு தொடர்புபடுத்திப் பேசியுள்ளார். ஆனால் அது வேறு ஒரு பொருளில்.

Entropy என்பதை முற்றிலும், நேர் எதிராக மாற்றிவிட்டால் என்ன ஆகும்? காலத்தில் முன்னோக்கிச் செல்லும்போது (இயல்பு வாழ்க்கை. தினமும் நமக்கு வயதாவது) Entropy என்பது அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும் என்று கவனித்தோம். நாம் பார்த்த விறகுக்கட்டை உதாரணம் போல. எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் Entropy என்பதை எதையோ ஒன்றைச் செய்து குறைத்துவிட்டால்? (அதாவது, அதன் சிதற்றத்தைத் தலைகீழாக மாற்றிவிட்டால்?) அப்படிக் குறையும்போது, எல்லாமே தலைகீழாவதால் அந்தப் பொருளின் காலம் பின்னோக்கிச் செல்லக்கூடும் என்பதே TENET படத்தில் நோலன் சொல்வது. அந்தப் பொருளின் காலம் தலைகீழாக மாறுகிறது. எரிந்துமுடிந்த விறகு, மீண்டும் எரியாத விறகாக மாறுகிறது. இப்படி Entropy என்ற சிதற்றத்தை முற்றிலும் மாற்றுவதைத் திரைப்படத்தில் Inversion என்று சொல்வதால், இனிமேல் அதே வார்த்தையையே, காலம் மாற்றப்பட்டதற்கு நாமும் உபயோகிக்கலாம். ஒரு நபரின் காலம் இப்படி மாற்றப்பட்டால், அதற்கு இன்வெர்ஷன் என்று படத்தில் சொல்கிறார்கள்.

Time Inversion

இதனால் என்னென்ன நடக்கும்? ஒரு செயலைச் செய்யும் முன்னரே அதன் பலன் தெரிந்துவிடும். எரிந்த நெருப்பு மெல்ல ரிவர்சில் சென்று, எரியாத கட்டைகள் கிடைக்கும். சுடாமலேயே சுவற்றில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த ஓட்டைகள் இருக்கும். இதனால் துப்பாக்கியை நீட்டியதுமே, குண்டு திரும்பிவந்து துப்பாக்கிக்குள் புகுந்துவிடும். கையில் ஒரு காயம் தானாகவே இருக்கும். ஒரு ஆள் சண்டையிடும்போது அவன் கையில் இருக்கும் கத்தி காயத்தில் பட்டதும், ரீவைண்ட் செய்யப்பட்டதுபோல காயம் மறைந்துவிடும். கப்பல்கள் ரிவர்ஸில் செல்லும். பறவைகள் ரிவர்ஸில் பறக்கும். உடைந்துபோன கார்க்கண்ணாடி, இன்னொரு கார் மோதியதும் நேர் ஆகிவிடும். எல்லாமே நேர் எதிராக நடக்கும். அனைவரும் பின்னோக்கி நடப்பதுபோல இருக்கும்.

ஆனால் இதில் ஒரு கண்டிஷன் என்னவென்றால், அப்படி ஒரு நபரை இன்வெர்ட் செய்து, அவரது காலத்தை ரிவர்ஸ் ஆக்கிவிட்டால், அவர் பார்வைக்கு மட்டுமே இப்படி அவரைத்தவிர எல்லாமே ரிவர்சில் இருப்பதுபோலத் தோன்றும். காரணம் அவருக்கு மட்டுமே காலம் ரிவர்ஸ் ஆக்கப்பட்டிருக்கிறது. அதுவே, நார்மலான ஒரு ஆசாமிக்கு முன்னால் இப்படி இன்வர்ட் செய்யப்பட்ட ஆசாமி வந்தால், அந்த நார்மலான ஆசாமிக்கு, அந்த இன்வெர்ட் செய்யப்பட்ட ஆசாமி ரிவர்சில் நடப்பதுபோல் தோன்றும். ஏனெனில் நார்மல் நபரின் காலம் மாற்றப்படவில்லை. அவருக்குக் காலம் முன்னோக்கி மட்டுமே செல்கிறது. இன்வர்ட் செய்யப்பட்ட ஆசாமியின் காலம் மட்டுமே பின்னோக்கிச் செல்கிறது. இதுதான் இந்தத் திரைப்படத்தில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரே அம்சம். இதனோடு சம்மந்தப்பட்டுதான் படத்தில் எல்லாமே நடக்கிறது.

அதேபோல், இப்படி ஒரு ஆசாமி இன்வர்ட் செய்யப்பட்டால் அவரது உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும்? அவரது உடலின் இயக்கமே மாறிவிடுவதால் அவரது நுரையீரல்களால் வழக்கமாக நடப்பதுபோலக் காற்றை சுவாசிக்க முடியாது. எனவே ஒரு ஆக்சிஜன் மாஸ்க்கை மாட்டிக்கொண்டு, அதன் இயக்கத்தையும் தலைகீழாக மாற்றினால் மட்டுமே அவரால் சுவாசிக்க முடியும். எனவே, திரைப்படத்தில் ஆக்சிஜன் மாஸ்க் மாட்டிக்கொண்டு வரும் அத்தனை கதாபாத்திரங்களுமே இப்படி இன்வர்ட் செய்யப்பட்டவர்கள். அதாவது, கடந்த காலத்தில் பயணிப்பவர்கள். இதுதான் படத்தில் சொல்லப்படும் காலப்பயணம். அவர் தன்னுடன் எடுத்துச்செல்லும் எல்லாமுமே இப்படி நேர் எதிராக, ரிவர்சில் மாறிவிடும்.

Time Travel Rules

சரி. பின்னோக்கிப் பயணிக்கமுடியும் என்பதைப் பார்த்துவிட்டோம். பிற படங்களில் வருவதுபோல, பின்னோக்கி எந்தக் காலத்துக்கு வேண்டுமானாலும் போய்விடலாமா? இதில்தான் TENET வேறுபடுகிறது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை, காலப் பயணம் (Time Travel) என்பதை, காலத்தைத் தலைகீழாகத் திருப்புவது (Time Inversion) என்றே சொல்லியிருப்பதால், இந்தப் படத்தைப் பொறுத்தவரையிலும், பின்னோக்கிப் பயணிக்கும்போதும் ஒரு ஆசாமியின் வயது அதிகரிக்கவே செய்யும். அதாவது, ஒரு வருடம் முன்னால் நடந்த சம்பவத்தைப் பார்க்க ஒரு நபர் இப்படிக் காலத்தில் பின்னோக்கிச் சென்றால், அவரது வயது ஒரு வருடம் ஏறும். பத்து வருடம் பின்னால் சென்றால், பத்து வயது அதிகரிக்கும். 100 வருடங்கள் பின்னோக்கிச் செல்லவேண்டும் என்றால் அந்த மனிதர் இறந்தேபோய்விடலாம். அதேபோல், இந்தப் படத்தில், வருங்காலத்துக்குப் பயணிக்கவே முடியாது. இறந்த காலம் மட்டும்தான். இதனால்தான் இந்தப் படத்தில், சில நாட்கள் முன்னர் நடந்த நிகழ்வுகளுக்கே கதாபாத்திரங்கள் திரும்பவும் பயணிப்பார்கள்.

இதில் உள்ள ஒரு சிறிய உட்பிரிவு என்னவென்றால், கடந்த காலத்துக்குச் செல்லும் நபர் எப்போதுவேண்டுமானாலும் தன்னைத்தானே மறுபடியும் Non-invert செய்துகொள்ளலாம். அதாவது, 2019 டிசம்பர் 8க்கு ஒரு நபர் 2020 டிசம்பர் 8ல் இருந்து பயணிக்கிறார். இது இன்வெர்ஷன். அதாவது பின்னால் பயணிப்பது. அப்போது அவருக்கு எப்படி இருக்கும்? அவர் பார்வையில் ஒட்டுமொத்த 2019 டிசம்பர் 8 மக்களும், கார்களும், எல்லாமும் ரிவர்சில் பயணித்துக்கொண்டு இருக்கும். அவருக்கு ஒரு வயது ஏறி இருக்கும். அக்காலத்தில் இருக்கும் மக்கள் இவரைப் பார்த்தால், இவர் என்ன செய்தாலும் ரிவர்சில் செய்வதுபோலவே இருக்கும். அப்போது, 2019 டிசம்பர் 8ல் ஏற்கெனவே வாழ்ந்துகொண்டிருக்கும் அதே நபரும் இருப்பார். அவருக்கு ஒரு வயது குறைவு. எனவே ஒரே தேதியில், இறந்தகால நபர் என்றும் வருங்காலத்தில் இருந்து அங்கே சென்ற நபர் என்றும் இருவரும் இருப்பார்கள்.

இதுவரை அனைவருக்கும் புரியலாம். இனி சொல்லப்போவது, கொஞ்சம் குழப்பும். என்னவென்றால், இப்படி 2020ல் இருந்து 2019க்குச் சென்ற நபர், தன்னைத்தானே இன்வெர்ட் செய்துகொண்டதால் மட்டுமே அப்படிப் பயணிக்க முடிந்தது. ஆனால் 2019 டிசம்பர் 8ல் வேலை முடிந்ததும், அவர் திரும்ப உடனடியாகத் தற்போதைய 2020 டிசம்பர் 8க்கு வராமல், 2019 டிசம்பர் 8டிலேயே, தன்னை இப்படி இன்வெர்ட் செய்துகொண்டதை சரி செய்துகொண்டு, Non invert செய்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், அவர், 2020 டிசம்பர் 8க்கு வருவதற்காக, ஒரு வருடங்கள் வாழ்ந்தே ஆகவேண்டும். இவருக்கு ஆக்சிஜன் மாஸ்க் தேவையில்லை. தன்னைத்தானே இப்படி non invert செய்துகொண்டதுமே அவருக்கு, அவரைச்சுற்றியுள்ள உலகம் நேராகிவிடும். அப்போது, மொத்தம் எத்தனை ஆசாமிகள் இருப்பார்கள்? உண்மையிலேயே இறந்த காலத்தில் வாழும் நபர், வருங்காலத்தில் இருந்து இறந்தகாலம் சென்றவர் என்ற இருவரோடு சேர்த்து, இப்படி இறந்தகாலம் சென்று, தன்னைத்தானே மாற்றிக்கொண்ட ஆசாமியும் இருப்பார். எனவே மூவர். (இது எப்படி என்று அடுத்த கட்டுரையில் திரைப்படத்தை வைத்து விளக்க முயற்சிக்கிறேன். படத்தில் வரும் பெரிய சுழலும் மெஷின், அதன் சிவப்பு மற்றும் நீலப் பாதைகள் என்பது இதுதான்).

இதில் இப்படி Non invert செய்துகொண்டவரிடம் ஒரு பெரிய மேட்டர் இருக்கும். என்னவெனில், கடந்தகாலத்துக்குச் சென்று, அந்தத் தேதியில் (2019 டிசம்பர் 8) இருந்து எப்போது அவர் வருங்காலத்தில் (2020 டிசம்பர் 8ல்) இறந்தகாலத்துக்குச் செல்ல முடிவு செய்தாரோ அந்தத் தேதிவரை நடந்திருக்கும் அத்தனையுமே தினமும் வாழ்ந்து இவர் தெரிந்துகொள்ளமுடியும். இது மட்டுமல்லாமல், எப்போது இறந்தகால நபர், வருங்காலத்தில் காலப்பயணம் செல்லும் தேதிக்குத் தனது இயல்பான வாழ்நாள் மூலமாக வாழ்ந்து வந்து சேருகிறாரோ, அப்போது மறுபடியும் அவர் இறந்தகாலம் செல்வார். அப்போது மொத்தம் நான்கு நபர்கள் இருப்பார்கள் (மூவரோடு மேலும் ஒருவர்). இவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே, காலப்பயணம் சென்ற தேதியைத் தாண்டியும் வாழுவார். அவர்தான், கடந்தகாலம் சென்று தன்னைத்தானே non invert செய்துகொண்டு மாற்றிக்கொண்ட நபர். இது புரிகிறதா? பாக்கி இருக்கும் அனைவரும், மீண்டும் மீண்டும் காலப்பயணம் செய்த தேதி வந்ததுமே மறுபடியும் இறந்தகாலம் பயணித்துக்கொண்டே இருப்பார்கள். இவர் மட்டும், எல்லாக் கதையும் தெரிந்ததால், இறந்தகாலம் செல்லாமல், அந்தத் தேதியையும் தாண்டி வருங்காலம் நோக்கி வாழ்ந்துகொண்டே இருப்பார். இது படத்தில் ஒரு முக்கியமான இடத்தில் வருகிறது. எனவே, நடந்ததை மாற்ற முடியாது என்பது படத்தில் சொல்லப்படுகிறது.

அதேபோல், அப்படிப் பின்னால் பயணிக்கும்போது, அங்கே இருக்கும் அதே நபரை இங்கே இருந்து பயணிக்கும் நபர் பார்த்து, நெருங்கிவிட்டால், இருவரின் உடலில் இருக்கும் அணுக்களும் வெடித்துச் சிதறிவிடும் என்றும் படத்தில் சொல்லப்படுகிறது (’பேரழிவு – Annihilation’). காரணம், இதில் பின்னோக்கிப் பயணிப்பவரின் உடலில் இருக்கும் எல்லாமே நேர் எதிர். எனவே அப்படிப் பயணிப்பவர், ஒரு கவச உடையை அணிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் இருவரின் அணுக்களும் வெடித்து அழிவு நேராமல் இருக்கும். இரண்டு நபர்களுக்கே இப்படி நடந்தால், உலகம் முழுவதுமே இப்படி இன்வெர்ஷன் செய்துவிட்டால் என்ன ஆகும்? வருங்காலத்தில் இருக்கும் எல்லாமே, இறந்தகாலத்தில் இருக்கும் அதே பொருட்கள், நபர்களுடன் மோதி, வெடித்து சிதறி, உலகமே அழிந்துவிடும்.

இந்த அழிவைத் தடுப்பதுதான் படத்தின் நோக்கம். அப்படி ஒட்டுமொத்த உலகையும் இன்வெர்ட் செய்து அழிக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டு, அதைத் தகர்ப்பதே TENET படத்தின் ஹீரோவின் நோக்கம்.

இவைதான் TENET படத்தில் வரும் இன்வெர்ஷன் என்ற மறைமுகமான காலப்பயணத்தின் விதிகள்.

இவற்றையெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாளை அடுத்த பாகம் வரும்.

Soorarai Pottru (2020) – Tamil
ஒரு ஏழை இளைஞன் ஒரு மிகப்பெரிய கனவை சுமந்துகொண்டு, ஒரு பைசா கூட இல்லாத இடத்தில் இருந்து மேலே வந்து அந்தக் கனவை நிறைவேற்றுகிறான். இந்த வகையான inspiring படங்கள் உலகெங்குமே நிறைய வந்திருக்கின்றன. தமிழில் இவை மிகக் குறைவு. ஒரு காலகட்டம் வரை தமிழில் அண்ணாமலை, படையப்பா, சூரியவம்சம் போன்ற படங்களே வந்துகொண்டிருந்தன. அவைகள் முற்றிலுமே மசலாப்படங்கள். ‘கமர்ஷியல்’ என்ற தமிழ் சினிமா ஃபார்முலாவுக்கேற்ற வகையில் எழுதப்பட்டு எடுக்கப்பட்டவை. அவைகளில், ரஜினி போன்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு ஏற்ற கைதட்டல் காட்சிகள் பல இடம்பெற்றிருக்கும். அவைகள் முற்றிலும் மசாலாக்கள் என்பதால் நம்பமுடியாத காட்சிகள் இருந்தாலும் ரசிகர்கள் அவைகளைக் கண்டுகொள்ளாமல், அப்படங்கள் ஓடின.

அப்படியே கொஞ்சம் தள்ளி வந்தால் குரு என்ற படம் வெளிவருகிறது. இது தமிழுக்கு அவசியம் புதிது. காரணம், மேலே வரும் இளைஞன், முற்றிலும் நல்லவனாக இல்லாமல், அரசு இயந்திரத்தின் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொண்டு, லஞ்சம் கொடுத்து, தில்லுமுல்லு செய்தே மேலே வருகிறான் என்பதை முதன்முதலில் வெளிப்படையாகச் சொன்ன படம் அது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சாதாரணமான தொழில் துவங்கினாலே அப்படித்தான் நடக்கும் என்பது சராசரி மக்களாகிய நமக்கு நன்றாகப் புரியும். இதை குரு பேசியது.

அடுத்ததாக, ’லட்சியம்’ என்ற ஒன்றைப் போற்றும் ஒரு படம் எடுத்தால், அதில் சில பிரச்னைகள் வருகின்றன. எவை என்று சொல்கிறேன். அவற்றைப் பேசலாம். முதலாவதாக, அந்த லட்சியம், அடித்தட்டு மக்களுக்கு எப்படிப் பயனாகப்போகிறது? அல்லது, அந்த லட்சியம் வெற்றியடைந்தால் அதனால் பயன்பெறப்போகிறவர்கள் யார்? அதை, ஒரு படத்தில் எப்படி ஜஸ்டிஃபை செய்வது? உதாரணமாக, ஒரு ஹீரோ அல்லது ஹீரோயின் வெற்றி அடைந்தால் அதனால் பல குடும்பங்கள் வென்றன என்று சொல்வது. அண்ணாமலை இப்படிப்பட்ட படம். அண்ணாமலையின் குடும்பம் மட்டும் அல்லாது, அவரது பால் பொருட்கள் பல அடித்தட்டு மக்களையும் போய்ச்சேர்கின்றன. அண்ணாமலை வைத்திருக்கும் நிறுவனத்தின் பல நூறு ஊழியர்கள் வெல்கிறார்கள். குரு படத்திலும் இதேதான். குருபாயின் பல நிறுவனங்களில் பல ஆயிரம் ஊழியர்கள் பயன்பெறுகிறார்கள். கூடவே எல்லாத்தரப்பு மக்களுக்கும் அந்த நிறுவனங்களால் பலன் கிடைக்கின்றன. எனவே லட்சியங்கள் வெல்லும்போதே, மக்களுக்கும் பலன் கிடைத்து, அனைவருக்கும் ஒரு win-win என்ற சிச்சுவேஷன் அமைகிறது.

ஒரு inspiring திரைப்படத்தின் கதையில் இது மிக முக்கியம். படம் பார்க்கும் யாராக இருந்தாலும் தன்னை அந்தப் படத்துடன் பொருத்திப் பார்ப்பது. படத்தின் நாயகன் அல்லது நாயகி வெல்வதற்காக நாம் உணர்ச்சிவசப்பட்டுக் குரல் கொடுப்பது. இது மட்டும் சரியாக நடந்துவிட்டால் படம் அவசியம் நிலைத்து நிற்கும். மணி ரத்னத்தின் நாயகன், தளபதி, ஜெயம் ராஜாவின் தனி ஒருவன் போன்ற சில படங்கள், படத்தின் நாயகனுக்கு என்ன நடந்தாலும், அவன் என்ன செய்தாலும், இறுதியில் அவன் வெல்லவேண்டும் என்று மக்கள் நினைத்த படங்கள். ஏன் என்று யோசித்தால், அந்தக் கதாபாத்திரங்களின் நோக்கம் அப்படிப்பட்டது. அரசை எதிர்த்து, அரசு செய்யாத விஷயங்களைத் தன்னைச் சார்ந்த மக்களுக்காக நிறைவேற்றிக் கொடுத்தவர்கள் வேலுவும் சூர்யாவும். இவர்களைச் சார்ந்த அத்தனை பேருமே சராசரியான அடித்தட்டு மக்களே. அதுவே தனி ஒருவனில் வரும் மித்ரன், நல்லது வெல்லவேண்டும் என்று நினைப்பவன். அதர்மத்தை செய்யும் நிழல் போன்ற ஒருவனைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று நினைப்பவன். அவனது நோக்கம் நல்லதாக இருந்ததால் ஆடியன்ஸின் ஆதரவு அவனுக்கு இருந்தது.

இந்த அடிப்படையில்தான் சூரரைப் போற்று திரைப்படத்தை நாம் கவனிக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

சூரரைப் போற்று படத்தின் நாயகன் நெடுமாறன் ராஜாங்கம் யார்? அடிப்படை வசதிகளே குறைவாக இருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்தவன். ஒரு வாத்தியாரின் மகன். ஆரம்பத்தில் இருந்தே துடிப்பானவன். இப்படி ஒரு கதாநாயகனை எடுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு லட்சியத்தை அளித்து, அவன் வெல்லவேண்டும் என்று நினைத்தால் அதற்கு என்ன செய்யவேண்டும்? அண்ணாமலை போன்ற அடித்தட்டு மக்களை வாழவைத்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றினான் என்ற நிறைவு அவனுக்கு வரவைத்தால், கட்டாயம் ஆடியன்ஸின் ஆதரவு கிடைக்கும். அப்படியானால் அவன் என்ன செய்யவேண்டும்? இது ஒரு புறம்.

மறுபுறம், கேப்டன் கோபிநாத்தின் புத்தகத்தைப் படித்துவிட்டு, இதைப் படமாக எடுக்கவேண்டும் என்ற ஆர்வம் சுதா என்ற இயக்குநருக்கு வருகிறது (அவர் பெயர் சுதா மட்டுமே. கொங்காரா என்ற சாதியை நினைவூட்டும் பெயர் அவர் படித்து வாங்கிய பட்டம் அல்ல என்பதால் அதை விட்டுவிட்டு இனி சுதா என்றே அழைப்போம்). புத்தகத்தால் கவரப்பட்ட சுதா என்ன செய்கிறார்? நெடுமாறன் ராஜாங்கம் என்ற ஒரு ஏழை கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். அந்தக் கதாபாத்திரத்தை ஒரு அடிப்படை வசதிகள் குறைவான கிராமத்தில் வாழவைக்கிறார். நினைப்பது எதுவுமே நடக்காத ஒரு சூழலை உருவாக்குகிறார். அதன்பின், தந்தை இறந்து, அதற்கு நெடுமாறனால் வரமுடியாமல், எகானமி க்ளாஸ், பிசினஸ் க்ளாஸ் என்ற விமான டிக்கெட் சிக்கலில் மாட்டியதால், அவனுக்குள் ஒரு கோபத்தை உருவாக்கி, சகல மனிதர்களும் விமானத்தில் பறக்கவேண்டும் – ஃப்ளைட் டிக்கெட்டின் விலையைக் குறைத்து, யாராக இருந்தாலும் எளிதில் விமான டிக்கெட் வாங்கிப் பறக்கவேண்டும் என்ற லட்சியத்தை நெடுமாறனுக்குள் உருவாக்குகிறார்.

இங்கேதான் படத்தின் சிக்கல் துவங்குகிறது என்று தோன்றியது. என்ன காரணம் என்றால், நான் ஏற்கெனவே சொன்னபடி, அண்ணாமலை, படையப்பா, குருபாய் எல்லாருமே ஏழைகளுக்கு நேரடியாக வாழ்வளித்தவர்கள். சூரியவம்சமுமே அப்படித்தான். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் தேவைகளை முதலில் பூர்த்தி செய்தால்தான் அந்தப் படத்துக்கு இயல்பிலேயே அனைவரின் ஆதரவும் கிடைக்கும். ஆனால் சுதாவின் சிக்கல் துவங்கியது, கோபிநாத்தின் விமானக் கனவில். காரணம் விமானம் என்பது என்னதான் விலைகளைக் குறைத்தாலுமே அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையின் தேவை இல்லை. இப்போது, இன்றைய தேதியில் விமான டிக்கெட் விலை மிகமிகக் குறைந்துவிட்டாலுமே, விமானத்தில் பறந்தால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மாறிவிடுமா என்று யோசித்தால், உணவு, உடை, இருப்பிடம், சாதி ஏற்றத்தாழ்வுப் பிரச்னைகள், வேலை கிடைப்பது ஆகிய எல்லாவற்றையும் முதலில் கடந்துதான், விமானத்தில் பயணிப்பதற்கு வரவேண்டி இருக்கிறது அல்லவா?

இதனாலேயே, சுதாவுக்கு முன்னால் இருந்த பிரச்னையை இப்படி எளிதில் புரிந்துகொள்ளலாம். நடுத்தர மக்களின் தேவைகளில் ஒன்றான, அவர்களால் பணம் கொடுத்துப் போகமுடியும்படியான விமான சேவையை நாயகன் துவக்குகிறான். கோபிநாத்தே அப்படிச் செய்தவர்தான் (ஒரு ரூபாய்க்கு டிக்கெட் என்பதெல்லாம் அனைவருக்கும் அல்ல. சிலருக்கு மட்டுமே. பாக்கி பிரயாணிகளுக்கெல்லாம் ஆயிரங்களில்தான் டிக்கெட். ஆனால், அந்த விலை, அப்போதைய விமான டிக்கெட்டின் விலையை விடவும் பெருமளவு குறைவு என்பதே சரியானது). ஆனால் நடுத்தர மக்களுக்குமே எப்போதாவது பயன்படும் தேவை இது என்பதைப் படத்தில் காட்டினால் நாயகனுக்கோ அவனது லட்சியத்துக்கோ மக்களின் பெரும் ஆதரவு கிடைக்காது. எனவே, ஒரு அண்ணாமலைக்குக் கிடைத்த ஆதரவு நெடுமாறன் ராஜாங்கத்துக்குக் கிடைக்கவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்? அண்ணாமலை போலவே நெடுமாறன் ஒரு ஏழை, அவனுடைய விமான லட்சியத்தில் ஏழைகளை உள்ளே கொண்டுவரவேண்டும், படத்தில் ஆங்காங்கே ஏழைகளுக்கான வசனங்கள் வைக்கவேண்டும், விமானம் என்பது ஏழை மக்களுக்கான அத்தியாவசியத் தேவை என்று நிறுவவேண்டும், class – caste போராட்டம் பற்றி அங்கங்கே பேசியாகவேண்டும், இதெல்லாம் நெடுமாறன் செய்யும்போது, அவனை கண்மூடித்தனமாக எதிர்க்க சில டுபாக்கூர் வில்லன்கள் வேண்டும், அவர்களுக்கு எதிரே இவன் தொடைதட்டி சவால் விடவேண்டும், இறுதியில் விமானத்தை நெடுமாறன் இறக்கும்போது, ஏழைகள் எல்லாம் வென்றுவிட்டார்கள் என்ற மாயையை ஆடியன்ஸ் மனதில் ஏற்படுத்த வேண்டும். இதுதான் சுதா செய்திருப்பது.

இதனால் இந்தப் படத்தை நான் கண்மூடித்தனமாகத் தாக்குகிறேன் என்று நினைக்கவேண்டாம். சூரரைப் போற்று, அண்ணாமலை போன்ற ஒரு பக்கா மசாலாப் படம். ஆனால் அண்ணாமலை போல இல்லாமல், நாயகனின் கனவு ஒரு எலைட் கனவு. இருந்தாலும் படத்தை எலைட்டாக எடுக்க முடியாது. எடுத்தால் அனைத்துத் தரப்பின் ஆதரவும் கிடைக்காது. எனவே ஏழை பணக்காரன் ஃபார்முலாவை வைத்து, அங்கங்கே செண்ட்டிமெண்ட் தூவி, மக்களை அழவைத்து, அந்த எமோஷனில் நெடுமாறன் என்பவனின் எலைட் மிடில் கிளாஸ் கனவை ஏழைகளுக்கான கனவாக மாற்றி எடுத்திருக்கும் படம் இது என்பதுதான் என் கருத்து. இதனாலேயே இது ஆங்காங்கே சில காட்சிகளில் வேண்டுமென்றே நம்மை ஏமாற்ற முயல்கிறது என்று தோன்றுகிறது.

யோசித்துப் பாருங்கள். சாதி பற்றிய வசனங்கள் எதற்காக? விமானத்தில் பறப்பதற்கும் சாதிக்கும் சம்மந்தம் இருக்கிறதா? ஆண்டான் அடிமை, ஏழை பணக்காரன் என்ற மிகப்பழைய மேட்டரையே லேசாக முலாம் பூசிக் கொடுத்தால் போதுமா? இப்படி ஒரு பக்கம் ஏழை, இன்னொரு பக்கம் அகம்பாவம் உடைய பணக்காரன், ஏழை பணக்காரனிடம் சவால் விடுவது, வெல்வது என்பதை மட்டுமே எடுத்துக்கொண்டால் அண்ணாமலை, சூரரைப் போற்று படத்தை விடவும் சிறந்த படமே. அதில் எனக்கு சந்தேகம் இல்லை. அண்ணாமலையில் ரஜினி கதாபாத்திரத்தின் லட்சியம் இன்னும் எளிமையானது. என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. சூரரைப் போற்று போல, கதாபாத்திரத்துக்குப் பொருந்தாத லட்சியத்தைக் கஷ்டப்பட்டு இழுத்துக்கொண்டுவந்து என்னை அது ஏமாற்றவில்லை.

படத்தில் எனக்குப் பிடித்தவை, நெடுமாறன் மற்றும் சுந்தரிக்கு இடையே வரும் காட்சிகள். அவைதான் முதலில். டிபிகலான தமிழ் சினிமா ஹீரோயினாக இல்லாமல், நெடுமாறனுக்கு இருக்கும் லட்சியம் போலவே தனக்கும் ஒன்று இருக்கிறது என்று அதேபோன்ற கர்வத்துடன் வரும் பெண். இருவரின் லட்சியங்களும் ஒன்றுதான் என்று பேசும் பெண். கணவன் தன்னிடம் பணம் கேட்கத் தயங்கும்போது, ‘மனைவியிடம் பணம் கேட்க என்னடா உனக்கு ஈகோ?’ என்று முகத்துக்கு நேராகக் கேட்கும் பெண். உண்மையில் நெடுமாறனை விடவும் சுந்தரியை ஓரளவு அதிகமாகவே பிடித்தது. இப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியதற்காக சுதாவுக்குப் பாராட்டுகள். குருவில் வரும் சுஜாதா கூட, கணவனை முழுமையாக ஆதரிப்பாளே தவிர, இப்படி தனக்கும் ஒரு லட்சியம் உண்டு என்று சொல்லமாட்டாள். எனவே அவசியம் சுந்தரியின் கதாபாத்திரம் முக்கியமானது.

அடுத்துப் பிடித்த விஷயம், என்னதான் நான் சொன்னபடி, அடித்தட்டு மக்களுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு லட்சியத்தை இழுத்துப் பிடித்து பல டெம்ப்ளேட் விஷயங்களை வைத்து சரிப்படுத்த முயன்றாலும், ஆங்காங்கே துணுக்குகளாக வெளிப்படும் சூர்யாவின் நடிப்பு. ஒரு ஏர்போர்ட்டில் அனைவரிடமும் கெஞ்சிக் கூத்தாடிக் கடன் கேட்பது (இதுவுமே மிகமிக எலைட்டான ஒரு பிரச்னையே. இதையும் கஷ்டப்பட்டு இறக்கி, ஆடியன்ஸுக்குக் கண்ணீர் வரவைக்க முயன்றிருக்கிறார்கள்), வில்லனிடம் சவால் விடுவது, அரசு அலுவலகத்தில் வாய்ப்பு தர மறுக்கும் அதிகாரியின் பி.ஏவிடம் குமுறுவது என்று ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை நடிப்புக்கு வஞ்சமே வைக்காமல் நடித்துத் தள்ளியிருக்கும் சூர்யா. அவசியம் அவருக்கு இது குறிப்பிடத்தக்க படம். சந்தேகமே இல்லை.

ஒரு inspiring படத்துக்கு என்ன தேவை? பொறி கிளம்பும் வசனங்கள். படம் முழுக்க வசனங்களால், ’இது எலைட் கனவு இல்லை; இது அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் லட்சியம்தான்’ என்று நம்மை நிஜமாகவே ஆங்காங்கே நம்பவைத்துவிடுகிறார் விஜயகுமார். அவசியம் இந்தப் படம் வெற்றி அடைந்தால் அதில் குறிப்பிடத்தக்க பங்கு விஜயகுமாருக்கே. நவீன லியாகத் அலிகான் என்றே அவரைச் சொல்லிவிடலாம். அப்படி எழுதியிருக்கிறார்.

சூரரைப் போற்று படத்தின் மிகப்பெரிய பிரச்னையை மிக எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், அன்றாட வாழ்க்கைப் பிரச்னையாக இல்லாத ஒரு விஷயத்தை, நடுத்தர மக்களேகூட அன்றாடம் பயன்படுத்தாமல், ஒரு வருடத்தில் மிகச்சிலமுறைகளே பயன்படுத்தும் விஷயத்தை (விமானப்பயணம்), ‘இது அவசியம் ஏழைகளுக்கு வாழ்வளிக்கும்; பாருங்கள் இறுதிக் காட்சிகளில் ஏழைத் தாய்மார்கள் விமானத்தில் வந்து இறங்குகிறார்கள்’ என்றெல்லாம் நம்மை நம்பவைக்கத் தலைகீழாக நிற்க முயன்றிருப்பதே. இது என்னைப்பொறுத்தவரையில் வேலை செய்யவில்லை. படத்தில் சூர்யாவின் நல்ல நடிப்பை, இந்த லட்சியத்துடன் குழப்பிக்கொண்டு பொருத்திப் பார்க்க என்னால் முடியவில்லை. மாறாக, நடிப்பை மட்டும் துண்டாக ரசிக்க முடிந்தது. அதேபோல் சூர்யாவுக்கும் அபர்ணாவுக்குமான காட்சிகளைத் துண்டாக ரசிக்க முடிந்தது.  இதேதான் ஊர்வசி, கிராமத்து மக்கள் சார்ந்த சில காட்சிகளுமே. முழுப்படத்தையும் எல்லாக் காட்சிகளுடனும் பொருத்திப் பார்த்து ரசிக்க முடியவில்லை. காரணம், இவர்களாக அடித்தட்டு மக்கள், சாதி இதையெல்லாம் வலிந்து இழுத்துக்கொண்டு உள்ளே திணித்து, எமோஷனைப் பிழிந்து நம்மை உணர்ச்சிவசப்பட வைத்தே ஆகவேண்டும் என்று முயன்றது. அது கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை என்றே தோன்றுகிறது.

படம் பிடித்திருப்பவர்களை நான் குறையே சொல்லவில்லை. இது என் கருத்து மட்டுமே.  என்னளவில், இன்னும் இதை இயல்பாக மாற்ற வேலை செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் மறக்க முடியாத படமாக மாறி இருக்கும். அல்லது வெளிப்படையாக கோபிநாத்தின் உண்மையான journeyயை எடுத்திருக்கலாம். அப்படி எடுத்திருந்தால் கூட ஒரு நேர்மையான படைப்பாக இருந்திருக்கலாம். மாறாக, எங்கோ இருக்கும் ஒரு லட்சியத்தை,  நேர் எதிரான பின்னணி, வசனங்கள் என்றெல்லாம் முயன்றிருப்பதுதான் படத்தின் பெரிய issue என்று கருதுகிறேன்.

Softwareம் கருந்தேளும்
அந்திமழை செப்டம்பர் 2020 இதழ், ரெசிக்னேஷன் ஸ்பெஷல். அதில் என் வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தது பற்றி நான் எழுதிய கட்டுரை.

பெங்களூரில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் Lead SQAஆக இருந்த நான், எனது வேலையை விட்டது செப்டம்பர் 1, 2015. எனது பிறந்தநாளில். அதற்குக் காரணம், அந்தச் சமயத்தில் சினிமாவிலும் சாஃப்ட்வேரிலும் ஒரே சமயத்தில் வேலை செய்ய முடியாததே.  நான் 2012ல் இருந்தே இரண்டு வேலைகளையும் செய்து வந்தாலும், 2015ல் ஏதோ ஒன்றுதான் செய்யமுடியும் என்ற இடத்தில் வந்து நின்றது. எனவே, எது வேண்டும் என்று யோசித்து, பென்பொருள் வேலையை விட்டேன். அதன்பின் சினிமாவுக்கு வந்து இன்றுவரை மனதுக்குப் பிடித்த வேலையை செய்துகொண்டிருக்கிறேன்.

இப்போது யோசித்துப் பார்த்தால், 2003ல் இருந்து 2015 வரை பன்னிரண்டு வருடங்கள் சாஃப்ட்வேரில் இருந்தது ஒரு பெரிய காலகட்டம். மென்பொருள் துறைதான் எனக்கு வீடு வாங்க உதவியது. பல நண்பர்கள் கிடைத்தனர். ஏராளமான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். கல்லூரி முடித்துவிட்டு, வெளிவாழ்க்கை பற்றி எதுவும் தெரியாமல் இருந்த என்னை, ஒரு முழு மனிதனாக மாறுவதற்குப் பெரிதும் உதவியது சாஃப்ட்வேர் துறையே. இருக்கும் பெரிய நிறுவனங்கள் அனைத்துக்கும் சென்றிருக்கிறேன். அவற்றில் சில நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறேன். அவற்றில் அவ்வப்போது நடத்தப்படும் சுயமுன்னேற்ற வகுப்புகள் பலவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். இதனால் பலருடனும் பேசி, நம் கருத்தை ஆணித்தரமாக நிறுவும் திறன் இயல்பிலேயே வந்துவிட்டது. இதுபோல் பல விஷயங்களை நான் சிறுகச்சிறுகக் கற்றுக்கொண்டது மென்பொருள் துறைதான்.

அதேசமயம், சினிமாவில் நான் இல்லாவிட்டாலும் எப்படியும் இந்த ஐந்து வருடங்களில் இன்னும் 2,3 நிறுவனஙக்ள் மாறியிருப்பேன் என்றே தோன்றுகிறது. காரணம், நான் சந்தித்த அரசியல். அதைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகச் சொல்கிறேன்.

முதலில், மென்பொருள் நிறுவனங்களில் பல வகைகள் உண்டு. நான் சொல்வது சிறிய, நடுத்தர, பெரிய நிறுவனங்கள் என்ற அளவுகோல் அல்ல. மாறாக, இந்த நிறுவனத்தில் சேர்ந்தால் பல வருடங்களுக்குப் பிரச்னை இருக்காது; இந்த நிறுவனத்தில் அடிக்கடி ஆட்குறைப்பு நடக்கும் – இதுபோன்ற பிரிவுகளையே சொல்கிறேன். இதெல்லாம், 2003ல் இருந்து 2015 வரையான காலகட்டம்.  இந்தப் பன்னிரண்டு வருடங்களில் நான் 6 நிறுவனங்கள் மாறினேன். இறுதியில் வேலை செய்த நிறுவனத்தில் மட்டுமே நான்கரை வருடங்கள். மற்ற நிறுவனங்களில் 1ல் இருந்து 2 வருடங்களுக்குள் மாறிவிடுவேன். காரணங்கள் பல. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் ஒரே ஒரு முக்கியமான காரணம் – அரசியல்.

ஒரு உதாரணம் கொடுக்கிறேன். நான் பெங்களூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதில் எனக்கு மேலாளராக இருந்தது ஒரு வட இந்தியப் பெண். என்னுடன் ஒரே சமயத்தில் இன்னொரு வட இந்தியரும் வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கும் இந்த வட இந்தியப் பெண்தான் மேலாளர். இயல்பிலேயே இந்த இரண்டு பேரும் ஒரே ஊர், ஒரே மொழி என்பதில் ஒன்றுசேர்ந்துவிட்டனர்.  இது ஒரு புறம். அதேபோல், தமிழகம் – ஊட்டியைச் சேர்ந்த ஒரு நபரும் எங்கள் டீமில் இருந்தார். எனவே நானும் அவரும் தமிழில் பேசிக்கொள்வது வழக்கம். ஒரு நாள், அதே நிறுவனத்தின் பக்கத்துக் கட்டிடத்தில் இருந்த எனது கல்லூரி நண்பனுடன் மதிய உணவு சாப்பிடச் சென்றேன். அப்போது என் டெஸ்க்குக்குப் பக்கத்தில் இருந்த அந்த ஊட்டி நபருக்கு இந்த வட இந்திய மேனேஜரிடம் இருந்து ஃபோன். அவர் அப்போது எங்கோ போய்விட்டுக் காரில் அலுவலகம் வந்துகொண்டிருக்கிறார். ஊட்டிக்காரரிடம், ‘ராஜேஷ் அங்கே இருக்கிறாரா? இருந்தால் பேசச்சொல்லுங்கள்’ என்று சொல்ல, நான் அங்கே இல்லை. பக்கத்துக் கட்டிடத்தில் எனது நண்பனுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஊட்டிக்காரர், ராஜேஷ் இங்கே இல்லை என்று சொல்ல, வட இந்திய மேனேஜர் ஃபோனை வைத்துவிட்டார்.

மறுநாள், எங்கள் அனைவருக்கும் பொதுவான மேலாளருடன் ஒரு மீட்டிங். நான் செல்கிறேன். வட இந்திய மேனேஜர் அங்கே இருக்கிறார். இருவர் மட்டுமே. அப்போதே புரிந்துவிட்டது. ஏதோ நடந்திருக்கிறது என்று. குறுக்குவிசாரணை ஆரம்பிக்கிறது.

வட இந்திய மேலாளர் – நேற்று மதியம் உணவு இடைவேளையில் உங்களை நான் அழைத்தேன். அப்போது நீங்கள் அங்கு இல்லை. எங்கு இருந்தீர்கள் என்று சொல்லமுடியுமா?

நான் – பக்கத்துக் கட்டிடத்தில் என் நண்பனுடன் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

வ.இ. மே – இல்லை. நீங்கள் ஒரு பெண்ணை பைக்கில் பின்னால் வைத்துக்கொண்டு ஊர் சுற்றிக்கொண்டிருந்தீர்கள். அதை நானே என் கண்ணால் பார்த்தேன்

நான் – துளிக்கூட வாய்ப்பே இல்லை. இங்குதான் இருந்தேன். வேண்டுமென்றால் இதே நிறுவனத்தில் பணி புரியும் என் நண்பனிடம் கேளுங்கள்.

வ.இ.மே – சரி நீங்கள் போகலாம்

என்ன விஷயம் என்றால், அவர் அலுவலகம் வரும்போது எவனோ ஒரு பெண்ணுடன் பைக்கில் செல்வதைப் பார்த்திருக்கிறார். அவர் கண்ணுக்கு அது நானாகத் தெரிந்திருக்கிறது. உடனே விசாரணை. அன்றில் இருந்து, அந்த வட இந்திய மேலாளர் என்னுடன் சகஜமாகப் பேசுவதை நிறுத்திவிட்டார். அவ்வப்போது வேலை சம்மந்தமாக மட்டுமே பேசுவார்.

இதன்பின் பல மாதங்கள் கழித்து, அலுவலகத்தில் திடீரென்று எனக்கு அழைப்பு. உங்களை வேலை நீக்கம் செய்யப்போகிறோம் என்று. நான் கவலைப்படவில்லை. அடுத்த வாரமே இன்னொரு பெரிய நிறுவனத்தில் 50% அதிக சம்பளத்தில் வேலை கிடைத்துவிட்டது. அங்கேதான் நான்கரை வருடங்கள் இருந்தேன். ஆனால் இங்கே சொல்லவந்தது, எதற்காக என்னை வேலையில் இருந்து எடுக்கிறீர்கள் என்று நான் கேட்கவில்லை. காரணம், என்னுடன் வேலைக்கு சேர்ந்த வட இந்திய நபர் முதலிலேயே என்னிடம் சொல்லிவிட்டார். முதலில் அவரைத்தான் தூக்குவதாக இருந்ததாகவும், என் வட இந்திய மேலாளர் அவரை அழைத்து, உன்னைத் தூக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்று சொன்னதாகவும் (அப்படிச் சொல்லவே கூடாது. அது அலுவலக விதிகளுக்குப் புறம்பானது), அப்படிச் செய்யவேண்டாம் என்று இவர் கெஞ்சியதாகவும், ‘சரி.. நாம் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். எனவே உன்னைத் தூக்கமாட்டேன். மாறாக ராஜேஷைத் தூக்கிவிடுகிறேன்’ என்று அந்த வட இந்திய மேலாளர் சொல்லியிருக்கிறார். இதுதான் காரணம்.

நான் பார்த்தவரை, எனக்கு அமைந்த மேலாளர்களில் ஓரிருவர் மட்டுமே நியாயமானவர்கள். அவர்களில், அந்த வட இந்திய மேலாளரின் தலைமை மேலாளர் குறிப்பிடத்தக்கவர். அதாவது, வட இந்தியரின் நேரடி மேலாளர். அவரிடம் பலமுறை பேசியிருக்கிறேன். தனக்குக் கீழ் வேலை செய்பவர்களின் பிரச்னைகள் அறிந்து, அவர்களுக்கு உதவுபவர். அவரிடம், இந்த வட இந்திய மேலாளர் எனக்கு எதிராக இப்படி ஒரு பாலிடிக்ஸ் செய்கிறார் என்று சொல்லியிருந்தால் தக்க நடவடிக்கை எடுத்திருப்பார். ஆனால் அப்படி நடந்தாலும் எப்படியும் அந்த வட இந்தியருடன்தான் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதால் அவரை நான் அணுகவில்லை. அடுத்த நிறுவனம் மாறிவிட்டேன்.

இது ஒரு சாம்பிள் மட்டுமே. பொதுவாக, முதலில் இருந்தே என் வழக்கம், எனக்கு ஒரு பிரச்னை வந்தால் எங்கிருந்து வந்திருக்கிறதோ அந்தக் காரணத்தை நேரடியாகச் சென்று சந்திப்பதே. மென்பொருள் துறையில் ஒரு protocol உண்டு. ஒரு பிரச்னை வந்தால் நமது மேலாளரிடம்தான் முதலில் பேசவேண்டும். அதன்பின் அவர், அவரது மேலாளரிடம் பேசுவார். இப்படி இருக்கும். ஆனால் மேலாளரே பிரச்னை என்றால்? அந்தச் சமயங்களில் நாம் என்ன பேசினாலும் அது அவரது மேலாளருக்குச் செல்லாது. எனவே, நான் பொதுவாக இப்படிப் பிரச்னை வந்தால், நேரடியாக அலுவலகத்தின் மிகப்பெரிய தலை எதுவோ, அந்த VPயிடமே நேராகப் பேசுவது வழக்கம். இப்படிப் பேசி, பல பிரச்னைகளைத் தீர்த்திருக்கிறேன். எனக்கு மட்டும் அல்ல- பேசவே தயங்கும் சக நண்பர்களுக்காகவும்தான். இதனாலேயே வேறு சில நிறுவனங்களில் என் மேலாளர்களின் வெறுப்பையும் சம்பாதித்திருக்கிறேன். ஆனால் அவற்றைப்பற்றிக் கவலையே பட்டதில்லை. எது நல்லதோ அதைச் செய்யவேண்டும் என்பது என் நோக்கமாக இருந்தது. Hierarchyயை எதைப் பற்றியும் கவலைப்படாமல் மீறுவேன்.

இந்த பாலிடிக்ஸ் என்பது எல்லாபக்கமும் இருப்பதுதான். கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். எதுவாக இருந்தாலும் மேலாளரின் காலில் விழுந்துவிட்டால் வேலைக்குப் பிரச்னை இருக்காது. ஆனால் அது எனக்குப் பிடிக்காத செயல். மென்பொருள் துறையில் இது அவசியம் ஒரு பெரிய பிரச்னை. அங்கே வேலை செய்பவர்களுக்கு என்று எந்த யூனியனோ அமைப்போ கிடையாது. எனவே பல தொழிலாளர்களின் பிரச்னைகள் வெளியே வருவதே கிடையாது. இந்தக் கட்டுரை போன்று யாராவது எழுதினாலோ பேசினாலோதான் உண்டு.

ஒருவேளை நான் இன்னமும் மென்பொருள் துறையில் இருந்திருந்தால் இப்போது ஒரு சீனியர் மேனேஜர் ஆகி, எனக்குக் கீழே ஒரு பெரிய டீம் இருந்திருக்கும். ஆனால் அப்போது நான் அவர்களுக்கு ஒரு சுமையாக இல்லாமல், அவர்களின் பிரச்னைகள் அறிந்து, அவர்களுடன் வெளிப்படையாகப் பேசும் மேனேஜராகவே இருந்திருப்பேன். அதுதான் தேவையும் கூட. அனைவரும் அதைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் இனம், மொழி, சாதி சார்ந்த பிரிவுகள் மென்பொருளிலும் உண்டு. அவற்றால் தேவையே இல்லாமல் பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.

உதாரணமாக, என்னுடன் வேலை செய்த வட இந்தியர்கள் அத்தனை பேரும், ‘நீ என்ன சாதி?’ என்று கேட்காமல் இருந்ததில்லை. சாதி வாரியாகத்தான் பழகுகிறார்கள் என்பதற்காக இதைச் சொன்னேன். அப்போதெல்லாம், ‘சொல்ல முடியாது. இனி இப்படி யாரிடமும் கேட்கவேண்டாம்’ என்றே பதில் சொல்வேன். அதேபோல், நேரடியாக, அறிமுகம் இல்லாதவர்களிடமும் போய், ஹிந்தியில் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பார்கள். ஒருவர் கூட விதிவிலக்கில்லை. அப்போதெல்லாம் பதிலுக்கு நான் தமிழில் பேசுவேன். புரியவில்லை என்பார்கள். நானும் எனக்கு ஹிந்தி புரியவில்லை என்பேன். இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏராளம் உண்டு.  நான் வட இந்தியர்கள் மேல் குற்றம் சொல்லவில்லை. எனக்கு நடந்ததைச் சொன்னேன். என் நண்பனுக்கு ஒரு மேலாளர் இருந்தார். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரின் கீழ் வேலை செய்யும் வட இந்தியர்களும், ஒரு சில தென்னிந்தியர்களும்  அவர் சொல்வதை மதிக்க மாட்டார்கள் என்று வெளிப்படையாகவே சொல்லுவார். சில நாட்கள் கழித்து வேறு நிறுவனம் சென்றுவிட்டார்.

இன்னும் நிறைய எழுத முடியும்.  ஆனால், சொல்ல வந்தது, மென்பொருள் மட்டுமில்லாமல் எல்லாத் துறைகளிலும் அரசியல் உண்டு. நாம் அவற்றைத் துணிவுடன் எதிர்க்கவே வேண்டும் என்பதையே. யார் கண்டது? ஒருவேளை மென்பொருள் நிறுவனத்தில் நான் இப்போதுவரை இருந்திருந்தால் இந்நேரம் ஒரு யூனியனைத் துவங்கியிருக்கலாம்.

The art of Screenplay writing – சில கேள்விகளும் பதில்களும்
இன்று, திரைத்துறையைச் சேர்ந்த நண்பர் Krishna Prasath, அவரது ஃபேஸ்புக்கில் திரைக்கதை எழுதுபவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கு அவரது ஃபேஸ்புக் போஸ்ட்டில் மூன்று பாகங்களாக விரிவாகப் பதில் அளித்திருந்தேன். அவற்றையே இன்னும் விரிவாக ஒன்றுசேர்த்து எழுதினால், கட்டாயம் அனைவருக்கும் உதவலாம் என்று தோன்றியதால் இந்தப் பதிவில் விரிவாக அவரது திரைக்கதை சார்ந்த கேள்விகளையும், எனது விரிவான பதில்களையும் கொடுக்கிறேன். நன்றி.

முதலில் கேள்விகள்.

1. ஒரு நாளில் திரைக்கதை எழுதுவதற்கு எத்தனை மணிநேரங்கள் எடுத்துக்கொள்வீர்கள்?

2. எழுதும் வேலை ஆரம்பித்ததும் கதைக்குள் மூழ்குவதற்கு எத்தனை மணி நேரங்கள் பிடிக்கிறது?

3. celtx, final draft, fountain pen, ball point, gel, pencil, a4, google docs, ms word. எல்லா வடிவங்களிலும் எழுதி இறுதியாக ஒரு வடிவத்திற்கு செட் ஆகியிருப்பீர்கள். எது?

4. யாருடைய திரைக்கதை எழுதும் பாணியை பின்பற்றுவது உங்களுக்கு வசதியாக இருக்கிறது?

5. உங்களின் தனித்துவமான பாணியில் எழுதுகிறீர்களா? சுருக்கமாக அதைப்பற்றி சொல்லுங்கள்?

6. Writers block பற்றிய உங்களின் புரிதல் என்ன? ப்ளாக்கை உடைக்க என்ன யுக்தியை கையாள்வீர்கள்?

7. ஒரு திரைக்கதையை எழுத ஆரம்பிக்கும் முன்னர் பல கதைகளும், 1 லைன்களும், பல ஐடியாக்களும் வந்துபோகும். ஆனால் குறிப்பிட்ட இந்த ஐடியாதான் எழுதுவதற்கு உகந்தது என எதைவைத்து முடிவு செய்வீர்கள்?

8. திரைக்கதை எழுத ஆரம்பித்து பாதி முடித்தபின்னர், “எழுத ஆரம்பித்தபோது இருந்த பெப்பு இப்போதில்லையே” என்ற உணர்வு வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? பெப்பு வரும் வரைக்கும் மெருகேற்ற முற்படுவீர்களா? இல்லை எழுதியதுவரை போதுமென தூக்கிப்போட்டு விடுவீர்களா?, “வெத்து ஈகோ தேவையில்லை. திரைக்கதை எழுதுவது not my cup of tea” என எண்ணிக்கொண்டு ஒரு நல்ல திரைக்கதை எழுத்தாளரை அணுகுவீர்களா?

9. திரைக்கதையை எழுதி முடிப்பதற்கு, அந்த ஐடியாவோ அல்லது ஸ்பார்க்கோ உங்களுக்குள் எதை demand செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்?

10. ஒரு நல்ல திரைக்கதைக்கான முன்னுதாரணக் காட்சி என்று எந்தக்காட்சியை முன்வைப்பீர்கள்?

அடுத்து, எனது பதில்கள்.

1. ஒரு நாளில் திரைக்கதை எழுதுவதற்கு எத்தனை மணிநேரங்கள் எடுத்துக்கொள்வீர்கள்?

கண்டிப்பாக, வேலை ஆரம்பித்ததும், எப்படியும் 6-8 மணி நேரங்கள். சிலசமயம் தனியாக, நம் இடத்தில் இருந்து எழுதும்படி இருக்கும். அப்போதெல்லாம் கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை fix செய்துகொண்டு 6-8 மணி நேரங்கள் எழுதுவேன். சிலமுறைகள் இயக்குநருடன் அமர்ந்து விவாதித்துக்கொண்டே எழுதும்படி இருக்கும். அப்போது இந்த நேரம் மாறுபடும். காரணம் காட்சிகளை இரண்டு பேர் அல்லது ஒரு குழு விவாதித்துக்கொண்டு, பின்னர் எழுதுவதால் 8 மணி நேரம் என்பது 5 அல்லது 6ஆக மாறலாம். (விவாதிக்கும் நேரம் தனி. எப்படியும் ஒரு நாளுக்கு எல்லாவற்றையும் சேர்த்து மினிமம் 8 மணி நேரம் எழுதுவேன்).

நாம் கமிட் ஆகியிருக்கும் திரைப்படம் எப்போது ஷூட் போகப்போகிறது என்பதைப் பொறுத்தும் இது மாறும். பொதுவாகத் திரைக்கதை எழுதுவதற்கு – அதிலும் முதல் draft தயார் செய்வதற்குக் கண்டிப்பாக 1-2 மாதங்கள் ஒதுக்கப்படும். நாம் கமிட் ஆனதும், தயாரிப்பாளரிடம் சம்பளம் பேசி, நமக்கான அட்வான்ஸ் வாங்கிக்கொண்டுதான் திரைக்கதை எழுத ஆரம்பிக்கவேண்டும் என்பது என் கருத்து. நான் இப்படித்தான் செய்கிறேன். எனவே, இதெல்லாமே திரைக்கதை எழுதுவதை நேரடியாக பாதிக்கும். Pre production, ஷூட் எல்லாமே விரைவில் துவங்குகிறது என்றால் திரைக்கதையை வேகமாக முடிக்க வேண்டும். ஷூட்டுக்கு இன்னும் நேரம் உண்டு என்றால் நிதானமாக எழுதலாம்.

அதேபோல் திரைக்கதை எங்கே எழுதுகிறோம் என்பதும் முக்கியம். நமக்கான ஒரு இடம் வேண்டும். பொதுவாகத் திரைப்படங்களில் கமிட் ஆனபின்னர், ஒன்று – இயக்குநரின் அலுவலகத்திலோ, அல்லது இரண்டு – ஏதேனும் ரிசார்ட்டிலோ, மலைகளில் காட்டேஜ்களிலோ – இப்படி எழுதுவதற்கும் விவாதிப்பதற்கும் வசதியான இடங்கள் ஒதுக்கப்படும். எந்தத் தொந்தரவும் இல்லாமல் அங்கே எழுத முடியும். அல்லது நமது வீட்டில், நமக்கான இடத்தில் எழுதலாம்.

கூடவே, திரைக்கதை எழுதும் முன்னர், கதை, பக்காவாக லைன் ஆர்டர் போடப்பட்டு ஒவ்வொரு காட்சியிலும் என்னென்ன நடக்கிறது என்பது மிகத்தெளிவாக இருக்கவேண்டும். திரைக்கதை என்பது இறுதியான ப்ராசஸ். எனவே எல்லாமே தயாராக ஆனபின்னர்தான் திரைக்கதை.

இவை எல்லாமே திரைக்கதை எழுதுவதற்கு மிகவும் முக்கியம்.

2. எழுதும் வேலை ஆரம்பித்ததும் கதைக்குள் மூழ்குவதற்கு எத்தனை மணி நேரங்கள் பிடிக்கிறது?

உடனே. காரணம், கதையை விரிவாகப் பேசும்போதே கதைக்குள் மூழ்கிவிடவேண்டும். திரைக்கதை என்பது இருப்பதிலேயே கடைசி ஸ்டெப். கதையில் முதலில் இருந்து இறுதி வரை என்ன நடக்கிறது என்று நன்றாகத் தெரிந்துகொண்டு தான் திரைக்கதை எழுத வேண்டும். எழுத முடியும். எனவே, எழுதும் வேலை ஆரம்பிக்கும்போதே திரைக்கதைக்குள் – கதைக்குள் மூழ்கித்தான் எழுதவே முடியும். அப்படி இல்லாவிட்டால் திரைக்கதை மேல் interest போய்விடும்.

3. celtx, final draft, fountain pen, ball point, gel, pencil, a4, google docs, ms word. எல்லா வடிவங்களிலும் எழுதி இறுதியாக ஒரு வடிவத்திற்கு செட் ஆகியிருப்பீர்கள். எது?

நான் முதலில் எழுத ஆரம்பித்தது Wordல். ஆனால் அதில் formatting பிரச்னைகள் மிக அதிகம். ஒரு word templete உருவாக்கிக்கொண்டு, பின்னர் அதை ஃபாலோ செய்யலாம். ஆனால் word ஒரு திரைக்கதையை எழுதும் அனுபவம் கொடுக்காது எனக்கு. ஏதோ ஒரு official letter டைப் செய்வதுபோல்தான் இருக்கும். இதனால் celtxக்கு மாறினேன். அட்டகாசமான software அது. பிரம்மாதமாக எல்லா சஜஷன்களும் கொடுக்கும். எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். மற்ற சாஃப்ட்வேர்களில் தமிழில் எழுத முடியாது என்பதும் ஒரு காரணம். நீங்கள் தங்கிலீஷில் எழுதினால், என் சஜஷன் Final Draft.

எதில் வேண்டுமானாலும் எழுதலாம். எழுதும் process தடையில்லாமல், சலிப்பில்லாமல் தொடர வேண்டும். அது ஒன்றுதான் முக்கியம். எழுதும்போது நேரும் ஒரு சிறிய சலிப்பு கூட நமது மனதை முற்றிலும் மாற்றிவிடும் என்பதால், நமக்கு மிக வசதியானது எதுவோ அதை அல்லது அதில் எழுத வேண்டும். பென்சில் பிடித்துப் பேப்பரில் கூட எழுதலாம்.

4. யாருடைய திரைக்கதை எழுதும் பாணியை பின்பற்றுவது உங்களுக்கு வசதியாக இருக்கிறது?

என் சொந்தப் பாணிதான். யாரையும் நான் திரைக்கதை எழுதும்போது ஃபாலோ செய்வதில்லை.

5. உங்களின் தனித்துவமான பாணியில் எழுதுகிறீர்களா? சுருக்கமாக அதைப்பற்றி சொல்லுங்கள்?

கண்டிப்பாக. எனக்கு என்று ஒரு பாணி உண்டு. அதைத்தான் பின்பற்றுகிறேன். பாணி என்பது என்ன? திரைக்கதை என்பது ஒரு standard form என்பதால், சீன் எழுதுவது, சீக்வென்ஸ் எழுதுவது என்பதெல்லாம் அனைவருக்கும் ஒரேபோன்றதுதான். ஆனால் எப்படிக் கற்பனை செய்கிறோம் – எப்படிக் காட்சிகளை உருவாக்குகிறோம் என்பது கண்டிப்பாக வேறுபடும். எனக்கு, எல்லாக் கதாபாத்திரங்களும் நம்பும்படி இருக்கவேண்டும். அவற்றுக்கான தனித்தனி உடல்மொழி, வேறுபாடுகள் இருக்கவேண்டும். இதெல்லாம் பக்காவாக இருந்தால், காட்சிகள் எளிதாக மாறும். இதுதான் என் பாணி.

கூடவே, கதையில் நடக்கும் சம்பவங்கள், கதை நடக்கும் உலகில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் புரிய வேண்டும். எடுத்துக்கொண்ட Genreக்கு முற்றிலும் நாம் குறைவைக்காமல் முடிக்க வேண்டும். இதை செய்திருக்கலாமே என்று படம் வந்ததும் தோன்றக்கூடாது. ஜஸ்டிஃபை செய்வது மிக மிக முக்கியம். லாஜிக் மீறக்கூடாது. ஓரிரு இடங்களில் மீறலாம். ஆனால் அப்படி மீறும்போது அதை சாமர்த்தியமாக மறைத்துவிடவேண்டும். சில பாக்யராஜ் படங்களில், லாஜிக் மீறும்போது அதை மிகச்சரியாக ஒரு கதாபாத்திரம் கேள்வி கேட்கும். அப்போது படம் பார்க்கும் நமக்கும், ‘அட ! நம்ம மனசுல இருக்குறதை அப்படியே கேக்குதே இந்தக் கேரக்டர்’ என்று தோன்றும். இதுதான் நான் சொல்லவந்தது. எனக்கு இது மிக மிக முக்கியம்.

6. Writers block பற்றிய உங்களின் புரிதல் என்ன? ப்ளாக்கை உடைக்க என்ன யுக்தியை கையாள்வீர்கள்?

என்ன முக்கினாலும் சிலசமயம் எதுவுமே தோன்றாது. இது எல்லாருக்குமே நடக்கும். இதை உடைக்க நான் என்ன செய்வேன் என்றால், அப்படியே திரைக்கதையை நிறுத்திவிட்டு, ஒரு படமோ, பாடல்களோ, தூக்கமோ, பப்புக்கு செல்வதோ, நடப்பதோ, புத்தகம் படிப்பதோ, கேம் விளையாடுவதோ – இப்படி எதாவது செய்வேன். ப்ளாக் வந்ததுமே ஒரே மேட்டர் என்னவென்றால், அன்றைய எழுதும் வேலை முடிந்தது என்பதே. இது எனக்கு மட்டும்தான். பிறருக்கு வேறுமாதிரி இருக்கலாம். எனவே இழுத்து மூடிவிட்டு, மற்ற வேலைகள் செய்து, அடுத்தநாள் திரும்பிவந்தால் அவசியம் சல்யூஷன் கிடைத்திருக்கும்.

என் கருத்து என்னவென்றால், இன்று ஒரு ப்ளாக் இருக்கிறது என்றால், இன்று அந்த ப்ளாக் வரும்வரை காலையில் இருந்து அந்தத் தருணம் வரை நம்மைச் சுற்றி நடந்தவை எல்லாமே அந்த ப்ளாக்குக்குக் காரணம் என்றே நினைப்பேன். எனவே, ஒரு நாள் முடிந்து, தூங்கி, மறுநாள் எழும்போது அவையெல்லாம் நம் மனதை விட்டு விலகிவிடுவதால், கட்டாயம் ஒரு நல்ல சல்யூஷன் கிடைத்து, ப்ளாக் விலகிவிடும். அப்படி விலகவில்லை என்றாலும், எப்படியும் விடை கிடைத்தே தீரும். நாம்தானே (உள்மனதில்) அதை உருவாக்கினோம்? அப்போது நாம்தானே அதை உடைக்கவேண்டும்?

7. ஒரு திரைக்கதையை எழுத ஆரம்பிக்கும் முன்னர் பல கதைகளும், 1 லைன்களும், பல ஐடியாக்களும் வந்துபோகும். ஆனால் குறிப்பிட்ட இந்த ஐடியாதான் எழுதுவதற்கு உகந்தது என எதைவைத்து முடிவு செய்வீர்கள்?

Gut feel. எனக்கு, தனிப்பட்ட முறையில், பல லைன்களை யோசித்தாலும், ஏதோ ஒரு லைன் டக்கென்று பிடிக்கும். ஒரு சில நாட்கள் கழித்தும் பிடிக்கும். அதைத் தேர்வு செய்வேன்.

ஆனால், கமர்ஷியலாக எழுதும்போது நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம் உண்டு. இது திரைப்படமாக வந்தால் அனைவருக்கும் பிடிக்குமா என்பதுதான். தமிழ்நாட்டில் இப்படித்தான் யோசிக்க வேண்டும். தயாரிப்பாளர், மக்கள், விநியோகஸ்தர்கள் ஆகிய எல்லாருக்கும் இந்த ஐடியா பிடிக்குமா என்று யோசிக்கவேண்டும். அதுதான் ஒரு படம் கமர்ஷியலாக வெற்றிபெறுவதற்கான ஆரம்ப விதை.

தமிழில் பெரும்பாலும் நான் திரைப்படங்களில் கமிட் ஆகிவிடுவதால், ஒரிஜினல் ஐடியா என்பது இயக்குநருடையதாகவே இருக்கும். அதற்கேற்றவகையில் திரைக்கதை எழுதுவதே வழக்கம். எப்போதாவது சும்மா இருக்கும்போது மனதில் தோன்றிய லைன்களை விரித்து எழுதிக்கொள்வேன். அப்படி ஏராளமான லைன்கள் என்னிடம் உண்டு. அவற்றையும் விரிவாக எழுதி வைத்த ஒன்லைன் ஆர்டர்களும் நிறைய உண்டு. இவையெல்லாமே எனக்கு இன்றும் பிடித்தவையே.

8. திரைக்கதை எழுத ஆரம்பித்து பாதி முடித்தபின்னர், “எழுத ஆரம்பித்தபோது இருந்த பெப்பு இப்போதில்லையே” என்ற உணர்வு வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? பெப்பு வரும் வரைக்கும் மெருகேற்ற முற்படுவீர்களா? இல்லை எழுதியதுவரை போதுமென தூக்கிப்போட்டு விடுவீர்களா?, “வெத்து ஈகோ தேவையில்லை. திரைக்கதை எழுதுவது not my cup of tea” என எண்ணிக்கொண்டு ஒரு நல்ல திரைக்கதை எழுத்தாளரை அணுகுவீர்களா?

ஓகே. என்னைப்பொறுத்தவரையில், கதை பிடித்துவிட்டால், interest factor இறுதிவரை இருக்கும். காரணம், கதாபாத்திரங்கள் மற்றும் லைன். எனக்குப் பிடித்த ஒரு கதை, எனக்குப் போர் அடிக்கவே அடிக்காது. இது என் தனிப்பட்ட கருத்து.

ஆனால் நீங்கள் கேட்டதுபோல் என்னிடம் பலரும் வருகிறார்கள். அவர்களுக்கு நன்றாகவே தெரியும் – அவர்களின் வேலை படம் இயக்குவது என்று. எனவே என் வேலை திரைக்கதை எழுதுவதால், இருவரும் இணைந்து எளிதாக வேலை செய்ய முடிகிறது.

9. திரைக்கதையை எழுதி முடிப்பதற்கு, அந்த ஐடியாவோ அல்லது ஸ்பார்க்கோ உங்களுக்குள் எதை demand செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்?

எதையோ டிமாண்ட் செய்ததால்தான் அந்த ஸ்பார்க்கே முதலில் உருவாகிறது என்றுதான் இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எனவே, கேள்வி ரிவர்ஸ் செய்யப்படவேண்டும். முடிந்தவரை நம்மால் முடிந்த justice அந்தக் கதைக்குக் கொடுத்துவிடவேண்டும்.

10. ஒரு நல்ல திரைக்கதைக்கான முன்னுதாரணக் காட்சி என்று எந்தக்காட்சியை முன்வைப்பீர்கள்?

எனக்கு அப்படி எந்தக் காட்சியும் எழுதும்போது தோன்றாது. ஆனால் சும்மா இருக்கும்போது அடிக்கடி டாரண்டினோவின் திரைக்கதைகள் படித்து, அவற்றைக் காட்சிகளாக எப்படி எடுத்திருக்கிறார் என்று பார்ப்பேன். அதேதான் டேவிட் ஃபிஞ்ச்சரும். இந்த இருவரும் எடுத்திருக்கும் எந்தக் காட்சியுமே எனக்கு முன்னுதாரணம்தான். தமிழில் பாக்யராஜ். ஶ்ரீதர். இவர்களைத் தவிரவும், இன்னும் ஏராளமான திரைக்கதை ஆசிரியர்கள், இயக்குநர்கள் உண்டு. உலகம் முழுக்க. அவர்களைப் பற்றியெல்லாம் எனது தளத்தில் முதலில் இருந்தே எழுதி வருகிறேன்.

இது எல்லாவற்றையும்விட மிக மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது.

தமிழ்த் திரைப்படங்களில் வேலை செய்ய ஆரம்பித்ததும்தான் அதை உணர்ந்துகொண்டேன். அது என்னவென்றால், கமர்ஷியலாக உங்களுக்கு எழுத வருமா வராதா என்பதே. Cinematicஆக எழுதத் தெரியவேண்டும். கமர்ஷியலாக யோசிக்கும் திறமை வேண்டும். இது மிகவும் முக்கியம். நிஜவாழ்க்கைக்கும் சினிமா காட்சிக்கும் வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் மெல்லிய வித்தியாசம் தெரியவேண்டும். ஒரு காட்சி எழுதினால் அது சுவாரஸ்யமாக இருக்கவேண்டும். அதில் உணர்வுகள் இருக்கவேண்டும். கதையை நகர்த்த வேண்டும். ஆனால் கதை நகர்கிறது என்றே ஆடியன்ஸுக்குத் தெரியக்கூடாது. ஒருவித cleverness வேண்டும். இது அவசியம் கமர்ஷியல் படங்களில் பணிபுரிந்தால்தான் வரும்.

இது உலகின் மிகப்பெரும் இயக்குநர்களின் படங்களிலேயே காணக் கிடைப்பதுதான். எடுத்துக்கொண்ட கதையைக் கமர்ஷியலாக, சினிமாட்டிக்காக யோசித்து எழுதத் தெரியவேண்டும். காட்சிகளை சொல்லிக்கொண்டே இருக்கத் தெரியவேண்டும். களங்களை டக் டக்கென்று மாற்றத் தெரியவேண்டும். ஒரு இயக்குநர் ஒரு காட்சியில் மாட்டிக்கொண்டால், அதை உடைத்து, காட்சியை பக்காவாக மெருகேற்றத் தெரியவேண்டும். இதில் எதுவுமே, வீட்டிலேயே அமர்ந்து திரைக்கதைகள் எழுதிக்கொண்டே இருந்தால் வராது. சினிமாவில் வேலை செய்து, அந்தப் படம் வெளியாகி, ஹிட்டோ ஃப்ளாப்போ ஆனால் மட்டுமேதான் சிறுகச்சிறுகப் புரியும். இது புரிந்தால்தான் நல்ல திரைக்கதைகள் நம்மிடம் இருந்து வரும். கள அனுபவம் மிக மிக முக்கியம்.

எனவே, ஒரு திரைக்கதை எழுத்தாளனுக்கு, சினிமாடிக்காக எழுதத் தெரிந்தே ஆகவேண்டும். நான் Exaggerate செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வித்தியாசம் உண்டு. இந்த மொழியில் எழுதினால் இப்படிப்பட்ட காட்சிகள் வந்தால் மக்களுக்கு எளிதாகப் போய்ச்சேரும் என்ற புரிதல் மிக முக்கியம். அதேபோல் ஒரு காட்சி எடுபடுமா எடுபடாதா என்று மக்களின் சார்பில் நின்று யோசிக்கத் தெரியவேண்டும். இதுவும் மிகவும் முக்கியம். அதற்குப் பலநூற்றுக்கணக்கான படங்கள் அந்தந்த மொழிகளில் பார்த்திருக்கவேண்டும். அப்படிப் பார்த்தால்தான் திரைக்கதை எழுதுவது ஓரளவுக்காவது வரும். ஏனெனில், தமிழுக்கு என்று ஒரு format உண்டு. ஒவ்வொரு மொழிக்கும் அது மாறும். அந்த ஃபார்மேட்டை நன்றாக உணரவேண்டும். உணர்ந்தால்தான் அதை உடைக்க/மெருகேற்ற/புரிந்துகொண்டு எழுத முடியும்.

உடனே நான் டெம்ப்ளேட்டாக எழுதச் சொல்கிறேன் என்று புரிந்துகொள்ளக்கூடாது. நான் சொல்வது, ஒவ்வொரு மொழிக்குமான வேறுபாடு புரிந்திருக்கவேண்டும். ஜான் ஆப்ரஹாமின் அக்ரஹாரத்தில் கழுதை ஒரு நல்ல படம். ஆனால் அது மலையாளப் புரிதலுக்கேற்றது. தமிழில் எடுபடவில்லை. சூது கவ்வும் தமிழில் பட்டையைக் கிளப்பியது. ஆனால் மற்ற மொழிகளில் ஃப்ளாப். லூஸியா படம், எனக்குள் ஒருவன் என்று வந்து தமிழில் ஃப்ளாப் ஆகியது. அதுவே திருஷ்யம், எடுக்கப்பட்ட எல்லா மொழிகளிலும் சூப்பர்ஹிட். இதற்கெல்லாம் காரணம் என்ன என்று நன்றாக யோசித்தாலே நான் சொல்லவருவது புரிந்துவிடும். ஒவ்வொரு மொழிக்குமான ரசனை, உணர்வுகள், புரிதல் எல்லாமே வேறு. இது நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். இதைப் பொறுத்துதான் காட்சிகள் வரவேண்டும். ஏனெனில் நாம் எழுதுவது மக்களுக்காக. அவர்களின் சந்தோஷத்துக்காக. எனவே ஆங்காங்கு காம்ப்ரமைஸ் செய்யலாம்.

இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இதை அழகாகச் சொல்லியிருக்கிறார். ‘என் படங்கள் எல்லாமே உங்களுக்காகத்தான். நீங்கள் திடீரென்று பதறுவது, மகிழ்வது, கைதட்டுவது – இப்படிப்பட்ட உணர்வுகளைக் குறிவைத்தே படங்கள் எடுக்கிறேன். உங்களின் கைதட்டல் எனக்கான போதை’ என்று.

இது கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமே பொருந்தும். கலைப்படங்கள் பற்றி இங்கே நான் சொல்லவில்லை. அவற்றுக்கு விதிகள் இல்லை.

திரைக்கதை எழுதுவது என்பது அவசியம் ஒரு கலை. ஒரு வேலை. ஒன்றும் தெரியாமல் அதைத் துவங்கினால் கட்டாயம் வராது. எந்த வேலைக்குப் போகும்போதும் முன் அனுபவம் கேட்கிறார்கள் அல்லவா? திரைக்கதையும் அப்படித்தான். அவசியம் திரைக்கதை என்றால் என்ன என்று நன்றாகப் புரிந்திருக்கவேண்டும்.

நாவல், சிறுகதை எழுதத் தெரிந்தால் திரைக்கதை எழுதிவிடலாம் என்ற ஒரு புரிதலைக் கவனிக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இவை எல்லாமே முற்றிலும் மாறுபட்ட மீடியம்கள். திரைக்கதை எழுதத் தெரிந்தால் மட்டுமே திரைக்கதை எழுதமுடியும்.

Sports films and biopics of Hollywood
அந்திமழை ஜூன் 2020 இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை.

இந்தியாவுக்கு வெளியே, விளையாட்டுகள் மற்றும் அவற்றை மையமாக வைத்த நிஜவாழ்க்கைத் திரைப்படங்கள் மிகவும் பிரபலம். நிஜத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றியும், அவைகளின் முக்கியத்துவங்களைப் பற்றியும், அவை நிகழ்த்தும் மனமாற்றங்களைப் பற்றியுமான திரைவகை இது. இவற்றிலேயே இன்னொரு பிரிவாக, கற்பனையாக விளையாட்டுகளில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்களும் பிரபலம்.  Sports biopics and sports films. இந்த இரண்டு வகைகளும் ஏன் பிரபலம் என்றால், இவைகளில் நடக்கும் சம்பவங்கள் நமது வாழ்க்கைக்கே உத்வேகம் அளிப்பவை. இவற்றில் வரும் கதைமாந்தர்கள், விழுந்து எழும்போது நமக்கே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. கூடவே, மாபெரும் கூட்டம் ஒன்றை வசியப்படுத்த, ஒரு விளையாட்டு போதும். குத்துச்சண்டையோ, பேஸ்பாலோ, பேஸ்கெட்பாலோ, ஃபுட்பாலோ, கிரிக்கெட்டோ – இப்படி எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் நிகழும் பிரச்னைகளையும் அவற்றின்மூலம் கதைமாந்தர்கள் பாதிக்கப்பட்டு உத்வேகம் பெறுவதையும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் ஒரு தியேட்டரில் பார்க்கும்போது அவசியம் ஒரு மேஜிக் நிகழ்கிறது. ‘லகான்’ படம் இந்தியாவில் வந்தபோது அதில் இடம்பெற்ற கிரிக்கெட் பந்தயத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். அதேபோல் ‘சக்தே இந்தியா’ படத்தில் வரும் ஹாக்கிப் பந்தயங்கள். நமக்கே, படத்தில் வருபவர்கள் வெல்லவேண்டும் என்ற வெறி கிளம்பியதா இல்லையா? இதன்மூலம் கிளம்பும் உற்சாகம்தான் ஒரு ஸ்போர்ட்ஸ் படம் எடுக்கப்படுவதற்கான காரணம்.

இந்த வகையில் அனைவராலும் மறக்கப்படமுடியாத படங்கள் பல உள்ளன. நிஜவாழ்க்கையை மையப்படுத்தி எடுத்த படங்களும் சரி, கற்பனையாக எடுக்கப்பட்ட விளையாட்டுப் படங்களும் சரி. அவற்றில் முக்கியமானவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மார்ட்டின் ஸ்கார்ஸேஸி மற்றும் ராபர்ட் டி நீரோவின் ரசிகர்களால் ஜாக் லமோட்டாவை மறக்கவே முடியாது. நிஜவாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு மார்ட்டின் ஸ்கார்ஸேஸி பிரசித்தமானவர். கிட்டத்தட்ட அவரது அத்தனை படங்களுமே புத்தகங்களை வைத்து, நிஜவாழ்க்கையில் வாழ்ந்த மாந்தர்களை வைத்து, கொஞ்சம் மாற்றியும், சில சமயம் அப்படியேயும் எடுக்கப்பட்டவை. அதேபோல் ஜாக் லமோட்டா என்ற ஒரு நிஜக் குத்துச்சண்டை வீரர், தன்னைப்பற்றி எழுதிய சுயசரிதையான ‘Raging Bull: My Story’ என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதே ‘ரேஜிங் புல்’ திரைப்படம். இந்தப் படத்தில் என்ன விசேடம் என்றால், ராபர்ட் டி நீரோ, மெதட் ஆக்டிங் என்ற திரைப்பட நடிப்பு வகைக்குப் பெயர்போனவர். நிஜமான ஜாக் லமோட்டாவை சந்தித்துப் பேசி, பழகியே இந்தக் கதாபாத்திரத்துக்குத் தயாரானார். ஜாக் லமோட்டா உண்மையில் ஒரு வெறிகொண்ட ஆசாமி. காதல், நட்பு, பொறாமை என்று எதுவாக இருந்தாலும் அதில் உச்சம் வரை போனவர். ஒருமுறை ஒரு ஹோட்டலில் உணவு சரியாக இல்லை என்பதற்காக ஒரு மிருகம் போலக் கத்திக்கொண்டு ஹோட்டலின் உள்ளே அங்கும் இங்கும் கோபத்துடன் அலைந்திருக்கிறார் லமோட்டா.  இளம்வயதில் ஒரு கிரிமினலாக இருந்து, பின்னர் சிறையில் திருந்தி, அதன்பின்னர் குத்துச்சண்டை கற்றுக்கொண்டு, பின்னர் வெளியே அக்காலத்தில் இருந்த மாஃபியாவுடன் பழகி, அவர்களுடன் நட்பாகவும், சில சமயங்களில் பிரச்னை செய்தும் (குறிப்பாக டெட்ராய்ட் நகரின் மாஃபியா) 95 வருடங்கள் வாழ்ந்து, 2017ல் மறைந்தவர் லமோட்டா. இவரை அப்படியே தத்ரூபமாக உள்வாங்கி நடித்த ராபர்ட் டி நீரோவுக்குச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. 1981க்கான பல விருதுகள் அப்படத்துக்குக் கிடைத்தன. இன்றும் மிகச்சிறந்த ஸ்போர்ட்ஸ் படங்களில் ஒன்றாக இப்படம் கருதப்படுகிறது.

இருப்பதிலேயே தலைசிறந்த பேஸ்பால் படம் என்று அனைவராலும் பாராட்டுப் பெற்றது ‘புல் டர்ஹாம்’ திரைப்படம். காரணம் இதன் திரைக்கதை. பேஸ்பால் பற்றிய அனைத்துத் தகவல்களும் ஒரு நல்ல கதையோடு சேர்த்துப் படமாக்கப்பட்டதே காரணம். கூடவே, கெவின் காஸ்ட்னர் போன்ற ஒரு பிரம்மாண்டமான ஹீரோ வேறு. இயக்குநர் ரான் ஷெல்டன், தனது சொந்தக் கதையையே படமாக எடுத்தார். உண்மையில் இந்தப் படம், இருப்பதிலேயே நம்ர் 1 விளையாட்டுத் திரைப்படம் என்றும் பல பத்திரிக்கைகளாலும் பட்டியல் இடவும் பட்டிருக்கிறது. ரேஜிங் புல்லா புல் டர்ஹமா என்று பல விவாதங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் இது ரேஜிங் புல் போல ஒவ்வொரு காட்சியிலும் தீவிரமாக எடுக்கப்பட்ட படம் இல்லை. பலவிதமான உணர்ச்சிகளின் கலவை. பன்னிரண்டு வருடங்கள் மைனர் லீக் என்ற பேஸ்பாலில் விளையாடிய கில்லாடி ‘க்ராஷ்’ டேவிஸ் என்ற கதாபாத்திரத்தில் கெவின் காஸ்ட்னர். இவர், டர்ஹாம் புல்ஸ் என்ற அணியால் ஒப்பந்தம் செய்யப்படுகிறார். எதற்காக? எப்பி கால்வின் என்ற, புதிதாக அணியில் இடம்பெற்றுள்ள மிகத்திறமையான பேஸ்பால் வீரனைத் தயார்படுத்த. இருவருமே திறமைசாலிகள் என்பதால் இருவருக்கும் துவக்கத்திலேயே பிரச்னை ஏற்படுகிறது. இருவராலும் ஒத்துப்போக முடியவில்லை. என்றாலும், அந்த அணிக்காகத் தொடர்ந்து கால்வினைத் தயார்படுத்துகிறார் க்ராஷ். பேஸ்பாலில் ஒரு பேட்டி கொடுத்தால் கூட எப்படியெல்லாம் பேசவேண்டும் என்பது உட்பட எல்லாமே சொல்லிக்கொடுக்கிறார். அப்போது ஆன்னி என்ற பெண் அவர்களுக்கு அறிமுகமாகிறாள். அவள், ஒவ்வொரு வருடமும் டர்ஹாம் புல்ஸ் அணியோடு சம்மந்தப்பட்ட ஒவ்வொரு விளையாட்டு வீரனுடன் நெருங்கிப் பழகுவது வழக்கம். மெல்ல மெல்ல க்ராஷுடனும் கால்வினுடனும் அவள் பழகுகிறாள். ஒரு கட்டத்துக்கு மேல், கால்வினை விடவும் க்ராஷைத்தான் அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பது அவளுக்கே புரிகிறது. அந்த சமயத்தில்தான் கால்வின், சட்டென்று, மைனர் லீக்கில் இருந்து மேஜர் லீக் பேஸ்பால் அணி ஒன்றுடன் திடீரென்று சென்றுவிடுகிறான். அவர்கள் கொடுத்த பணமும் புகழுமே காரணம். இதன்பின் என்ன ஆகிறது என்பதே படம். அவசியம் அனைவருக்கும் பிடிக்கும். 1988 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட்களில் ஒன்று இந்தப் படம்.

2014ம் ஆண்டின் கான் பட விருதுகளுக்காகப் பரிந்துசை செய்யப்பட்ட ஒரு படம்தான் அடுத்து நாம் பார்க்கும் படம். கானில், இந்தப் படத்தின் இயக்குநருக்கே சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது. இது தவிரவும் பல்வேறு விருதுகளை வென்ற படம் இது. Foxcatcher.  மல்யுத்தத்தைப் பற்றிய அட்டகாசமான படம் இது. நிஜத்தில் வாழ்ந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களைப் பற்றியது.  டேவ் ஷூல்ட்ஸ் மற்றும் மார்க் ஷூல்ட்ஸ் ஆகிய இருவருமே சகோதரர்கள். 1984ல் லாஸ் ஏஞ்சலீஸில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கியவர்கள். இருவருக்குமே ஒவ்வொருவரின் மீதும் நல்ல மரியாதையும் பாசமும் உண்டு என்றாலும், அண்ணன் டேவின் மீது லேசான பொறாமை, தம்பி மார்க்குக்கு உண்டு. இவர்கள் இருவருக்குமே, அமெரிக்காவின் பில்லியனர் ஜான் டு பாண்ட் என்பவரிடமிருந்து, அவரது மல்யுத்த அகாடெமியில் சேர்ந்து பயிற்சி பெற அழைப்பு வருகிறது. மார்க் ஒப்புக்கொண்டு அவரது பண்ணைக்குச் செல்கிறான். ஆனால் டேவ், தனது குடும்பத்தைக் காரணம் காட்டி, வர மறுத்துவிடுகிறான். மார்க்கின் பயிற்சிகள் துவங்குகின்றன. அங்கே மார்க் சந்திக்கும் சம்பவங்கள், டு பான்ட்டின் வித்தியாசமான உணர்ச்சிகள், பின்னர் மார்க்குடன் சேரும் டேவ், இருவருக்கும் 1988 ஆண்டின் சியோல் ஒலிம்பிக்ஸில் நடக்கும் சம்பவஙகள் என்று உணர்ச்சிகரமாகச் செல்லும் படம் இது. முற்றிலும் நிஜமான சம்பவங்கள். படம் பார்த்ததும் மனதில் ஆழமான உணர்ச்சி ஒன்றினைக் கட்டாயம் எழுப்பும் வகையான படம். வழக்கமாக நகைச்சுவைப் படங்களிலேயே நடிக்கும் ஸ்டீவ் கேரலின் மிக வித்தியாசமான நடிப்பை இதில் பார்க்கலாம்.

அடுத்து நாம் பார்க்கப்போகும் படமும் இரண்டு சகோதரர்களைப் பற்றியதுதான். ஆனால் இது மல்யுத்தம் இல்லை. மாறாக, குத்துச்சண்டை. The Fighter – 2010ல் வெளியான படம். டேவிட் ஓ ரஸல் இயக்கியது. ஏழு ஆஸ்கர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த ஆண் மற்றும் பெண் துணை நடிகர்களுக்கான விருதுகளை வாங்கிய படம். மிக்கி வார்ட் என்ற நிஜவாழ்க்கை குத்துச்சண்டை வீரர் பற்றிய படம். படத்தில், மிக்கி வார்டைத் தயார்படுத்துவது அவரது மூத்த சகோதரர் டிக்கி எக்லுண்ட். டிக்கி, ஒரு காலத்தில் குத்துச்சண்டையில் இருந்துவிட்டு, பின்னர் கோகெய்னுக்கு அடிமையானவர். இன்னொரு அப்பா மூலம் மிக்கியின் அம்மாவுக்குப் பிறந்தவர். மிக்கிக்கு மொத்தம் ஏழு சகோதரிகள். மிக்கியின் அம்மா அலீஸ் வார்ட் தான் மிக்கியின் மேனேஜரும்கூட. ஒரு நாள், ஒரு பந்தயத்தில் நடக்கும் சிறிய குழப்பம் காரணமாக, மிக்கி தோற்றுவிடுகிறான் (மிக்கியுடன் சம எடையில் போட்டியிடும் ஆசாமி வராமல், 20 பவுண்டுகள் அதிக எடையுள்ள இன்னொரு ஆசாமி வருகிறான். அம்மாவும் மூத்த சகோதரனும் பணத்துக்காக ஒப்புக்கொள்கின்றனர்). இதன்பின்னர் வெறுத்துப்போய் குத்துச்சண்டையில் இருந்தே வெளியேறிவிடுகிறான் மிக்கி. ஒரு பாரில் பணிபுரியும் சார்லீன் என்ற பெண்னுடன் பழகத் துவங்குகிறான். இதன்பின்னர் மிக்கியின் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பதே படம். மிக்கியாக மார்க் வால்பெர்க். இவர் நிஜவாழ்க்கையிலும் மிக்கியின் நண்பர். டிக்கி எக்லுண்டாக க்ரிஸ்டியன் பேல். அம்மாவாக மெலிஸா லியோ. இவர்களில் க்ரிஸ்டியன் பேலும் மெலிஸா லியோவும் சிறந்த துணைநடிகர்களுக்கான ஆஸ்கர்கள் வாங்கினர். இந்தப் படம், மிக்கியின் குடும்பத்தில் இருக்கும் ஆயிரம் சிக்கல்கள், மிக்கிக்கும் டிக்கிக்கும் இருக்கும் உறவு, அவனது சகோதரிகள், அம்மா, அவர்களது தந்தை ஆகியோரின் நோக்கஙக்ள் ஆகிய அத்தனையையும் விவரிக்கிறது.

அடுத்து, ஒரு குதிரைக்கும் அதை ஓட்டும் ஜாக்கிக்குமான உணர்ச்சிபூர்வமான உறவு. இதுவும் ஏழு ஆஸ்கர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படம். ஸ்பைடர்மேனாக நடித்துப் புகழ்பெற்ற டோபி மேகயர் நடித்தது. நாற்பதுகளில் மிகப் புகழ்பெற்று விளங்கிய சீபிஸ்கட் என்ற குதிரையைப் பற்றிய படம். 1938ல் அமெரிக்காவின் அந்த வருடத்துக்கான சிறந்த குதிரை விருதை வாங்கிய குதிரை இது. இன்றும், இறுதிப் படியில் இருந்து மேலே முன்னேறும் தன்னம்பிக்கைக்கான சிறந்த உதாரணங்களில் இந்தக் குதிரையின் கதையும் இடம்பெறும். சீபிஸ்கெட் என்ற குதிரையின் கதையோடு, அதன் ஜாக்கி, அதன் உரிமையாளர் மற்றும் அதன் பயிற்சியாளர் ஆகிய அனைவரின் கதையையும் சொல்லும் படம் இது. இந்தக் குதிரைக்கே ஒரு தனிப்பட்ட ஈகோவும் குணாதிசயமும் இருந்திருக்கிறது. அது இந்தப் படத்தில் ஆங்காங்கே அருமையாக இடம்பெறும். கூடவே, அதன் ஜாக்கி ஜான் போல்லார்டுக்கும் அந்தக் குதிரைக்குமான உறவு. இது எப்படி அமெரிககவின் தன்னம்பிக்கை சின்னமாக மாறியது என்பதே கதை. அனைவருக்கும் அவசியம் பிடிக்கக்கூடிய மென்மையான உணர்வுகள் நிறைந்த படம்.

இவை ஒரு சில சிறந்த படங்களே. இவைதவிரவும், இந்த நிஜவாழ்க்கை சம்மந்தப்பட்ட விளையாட்டுப் படங்களில் (Sports biopics), Cinderella man, Miracle, Ali, Remember the Titans, Chariots of Fire, Unbroken, The Damned United, Moneyball, Chariots of Fire, 42, Pride of the Yankees, Rush, Invictus உட்பட பல படங்கள் உண்டு. இங்கு கொடுத்திருப்பவை அவற்றில் முக்கியம் என்று நான் கருதிய படங்களே.

இப்போது, விளையாட்டை மையமாக வைத்த புனைவுகள் பக்கம் வரலாம். உண்மையில் இந்த வகையில்தான் ஆயிரம் படங்கள் இருக்கின்றன. ஒரு விளையாட்டு- அதில் எப்படி முக்கியக் கதாபாத்திரங்கள் பாதிக்கப்படுகிறார்கள் – அதிலிருந்து அவர்கள் எப்படி விடுபடுகிறார்கள் என்ற இந்தக் கருவில், நிஜ வாழ்க்கையை மையமாகக் கொண்ட படங்களின் அதே அளவுக்குப் புனைவுகளை மையமாகக் கொண்ட படங்களும் மக்களின் மனதைத் தொட்டு, அவர்களின் வாழ்க்கைக்கு ஈடு இணையில்லாத இன்ஸ்பிரேஷன்களாக இருந்திருக்கின்றன. இருந்தும் வருகின்றன. அவற்றில் சில படங்களைப் பார்க்கலாம்.

முதலாவதாக, சில்வஸ்டர் ஸ்டாலோனின் ‘ராக்கி’. இந்த சீரீஸீல் இதுவரை ஆறு படங்கள் வந்தாயிற்று. மேலும் ராக்கி ஒரு துணைக் கதாபாத்திரமாக இரண்டு படங்களில் நடித்தாயிற்று. ஸ்டாலோன் ஏற்று நடித்த ராக்கி கதாபாத்திரத்துக்குச் சிலை கூட உண்டு. உலகெங்கும் பலரின் வாழ்க்கை பாதித்த படம் இது. இந்தப் படத்தின் மூலம்தான் ஸ்டாலோன் சூப்பர்ஸ்டார் ஆனார். 1977ம் ஆஸ்கர்களில் பத்து விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, மூன்று விருதுகளைப் பெற்ற படம். இந்தப் படத்தின் திரைக்கதையை எப்படி ஸ்டாலோன் எழுதினார் என்பது இன்றும் பல வெற்றிகரமான தன்னம்பிக்கைப் புத்தகங்களில் இடம்பெறும் அத்தியாயம்.  முஹம்மது அலி மற்றும் சக் வெப்னர் ஆகியோரிடையே மார்ச் 24, 1975ல் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டி இன்றுவரை பிரபலம். ஏனெனில், இந்தப் போட்டியில் சக் வெப்னர் யாரென்றே பலருக்கும் தெரியாது. முஹம்மது அலியோ, உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர். எனவே, பந்தயம் சில நொடிகளில் முடிந்துவிடும் என்று அனைவரும் நினைக்கையில், மொத்தம் பதினைந்து ரவுண்டுகள் போட்டி நடைபெற்றது. முஹம்மது அலீன் இடி போன்ற குத்துக்களை வெப்னர் நீன்ட நேரம் தாங்கி நின்றார். இறுதியில் வெப்னர் தோற்று அலி ஜெயித்தார் என்றாலும்,பதினைந்து ரவுண்டுகள் இப்போட்டி செல்லும் என்பதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவே இல்லை. இதைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கும்போது சில்வஸ்டர் ஸ்டாலோன் மிக இளைஞர். தடதடதடவென்று ஒரு நோட்டுப்ப் புத்தகத்தையும் ஒரு பென்சிலையும் எடுத்துக்கொண்டு எழுதத் துவங்கிய ஸ்டாலோன், இதன் திரைக்கதையை மூன்றரை நாட்களில் முடித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். பதினைந்து ரவுண்டுகள் உலகின் நம்பர் 1 குத்துச்சண்டை வீரனுடன் போட்டிபோட்ட ஒருவனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கற்பனையே ராக்கி. ஒரு மிகப்பெரிய குத்துச்சண்டைப் போட்டிக்கு, உலகின் ஹெவிவெய்ட் குத்துச்சண்டை வீரரான அப்போலோ க்ரீடுடன் மோத எதேச்சையாக ராக்கி என்ற இளைஞன், பெரிய அனுபவங்கள் இல்லாத வீரன் தேர்வுசெய்யப்பட்டு, அவன் எப்படித் தன்னைத் தயார் செய்துகொள்கிறான் என்பதைச் சொன்ன படம் இது. அவனைச் சுற்றி இனிமேல் இடம்பெறப்போகும் ராக்கி சீரீஸின் அத்தனை முக்கியமான கதாபாத்திரங்களும் ஒவ்வொன்றாக இதில் அறிமுகமாயினர்.  உலகம் முழுக்க ராக்கி கதாபாத்திரம் அடைந்திருக்கும் வெற்றி சாதாரணமானதல்ல. எதுவுமே இல்லாமல் இருந்தாலும் வாழ்க்கையில் உச்சத்துக்கு வரமுடியும் என்பதற்கு ராக்கி ஒரு மிகப்பெரிய உதாரணம்.

அடுத்து, ஸ்டாலோன் பிரம்மாண்ட ஸ்டாராக இருந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்த நடிகர் மிக்கி ரூர்க் நடித்த படம். The Wrestler. பிரபல இயக்குநர் டாரன் அரனாவ்ஸ்கி இயக்கியது. 2008ல் வெளியான படம். ராபின் ராம்ஸின்ஸ்கி என்ற மல்யுத்த வீரனைப் பற்றிய படம். WWF பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது பின்னர் WWE என்று மாறி, அதில் ஹிட்மேன் ப்ரெட் ஹார்ட், ஹல்க் ஹோகன், த ராக், ஸ்டோன்கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் முதலிய பலரும் இடம்பெற்றதும் தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட ஒருவன் தான் ராபின். அவனுடைய பட்டப்பெயர், The Ram என்பது. எண்பதுகளில் மிகப்பிரபலமாக இருந்த ராபின், அதன்பின் அனைவராலும் மறக்கப்பட்டு, ஒரு சூப்பர்மார்க்கெட்டில் வேலை செய்துகொண்டு, சிறுசிறு போட்டிகளில் பங்குபெறுகிறான்.  ஒருநாள், அவனுக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. எண்பதுகளில் இவனோடு பல பந்தயங்களில் பொருதிய அயதொல்லா’ என்பவனுடன் திரும்பவும் ஒரு பந்தயம். இது, அவர்களின் கடைசிப் பந்தயத்தில் இருந்து 20 ஆண்டுகள் கழித்து நடக்கிறது என்பதால் பரவலாகப் பேசப்படுகிறது. இதில் ராபின் எப்படிப் பந்தயத்துக்குத் தயாராகிறான் (ஸ்டீராய்ட் ஊசிகளும் போட்டுக்கொள்கிறான்), அவனுக்கு நேரும் இதய அறுவை சிகிச்சை, அவனை விட்டுப் பிரிந்த மகள் ஸ்டெஃப்னி, அவனுக்குப் பிடித்த காஸிடி என்ற பெண் (இவள் ஒரு stripper), ராபினின் முரட்டுத்தனம் கலந்த விளிம்பு நிலை வாழ்க்கை ஆகிய எல்லாமே அட்டகாசமாக வெளிப்பட்டிருக்கும். படத்தில் முக்கியமான இறுதிப் பந்தயம் என்ன ஆனது என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

எதற்குமே லாயக்கில்லாத ஒரு அணி என்று சபிக்கப்பட்டு, எல்லோராலும் எள்ளி நகையாடக்கூடிய ஒரு கொடூரமான பேஸ்பால் அணிக்கு, முன்னாள் வீரனும் இந்நாளைய குடிகாரனுமான ஒரு ஆசாமி கோச்சாக நியமிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? இதில், அந்த அணியே குட்டிப் பசங்கள் அடங்கியது, பசங்கள் எபதைவிட, பிசாசுகள் என்று சொல்லலாம். இதுதான் Bad News Bears. ஒரு வழக்கு. என்னவென்றால், இருப்பதிலேயே சிறந்த மாணவர்கள் பேஸ்பால் அணி ஒன்றில் இடம்பெறுபவர்கள் அனைவருமே திறமைசாலிகள். இவர்களில் குறைந்தபட்சத் திறன் அடங்கியோர் யாருமே எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்று ஒருவர் வழக்குப் போடுகிறார். அதனால், அந்த ஆண்டுக்கான போட்டிகளில், ஒரு அணி – இதில் இருக்கும் அனைவருமே திறமை துளிக்கூட இல்லாத பிசாசுகள் – இடம்பெறுகிறது. இந்த அணிக்குத்தான் குடித்துக்கொண்டே இருக்கும் முன்னாள் வீரர் மோரிஸ் கோச்சாகத் தேர்வுசெய்யப்படுகிறர். அதாவது, நீதிமன்றத்தின் கண்களுக்கு, திறமையே இல்லாதவர்களையும் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்பதற்காக. இந்த அணி ஒரு போட்டி கூட ஜெயிக்காது என்பதே அனைவரின் எண்ணமும். அதேபோல்தான் ஆரம்பத்திலும் நடக்கிறது. எனவே, மோரிஸ், தனக்கு உதவ, தனது முன்னாள் காதலி ஒருத்தியின் மகளை தன் கோச்சிங் அணிக்குத் தேர்வுசெய்கிறார். கூடவே உள்ளூர் வட்டிக்கடைக்காரர்,  ரவுடி கெல்லியையும் தேர்வு செய்கிறார். அந்த அணிக்கு Bears என்று பெயர். இவர்கள் எல்லாரும் சேர்ந்து, அந்த டண்டணக்கா அணியை எப்படி நல்ல அணியாக மாற்றுகிறார்கள் என்பதுதான் படம். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. இதில் பலதரப்பட்ட பசங்கள் வருவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம். மோரிஸாக நடித்தவர், பிரம்மாதமான நடிகர் வால்டர் மத்தாவ். படம் முழுக்க சிரித்துக்கொண்டே இருக்கலாம். அதேசமயம் உணர்வுகளுக்கும் படத்தில் நல்ல மதிப்பும் இருக்கும்.

மறுபடியும் மார்ட்டின் ஸ்கார்ஸேஸியிடமே வருவோம். இது அவர் எடுத்த விளையாட்டை மையமாக வைத்த புனைவு. படத்தின் ஹீரோ டாம் க்ரூஸ். ஆனால் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் பால் ந்யூமேன். இவர் அறுபதுகளின் சூப்பர்ஸ்டார். அக்கால ஹாலிவுட் ரசிகர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும். 1961ல் The Hustler என்ற திரைப்படம் வெளியானது. Pool என்று அழைக்கப்படும் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியும்தானே? பார்க்க பில்லியர்ட்ஸ் போல இருந்தாலும், இரண்டுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. அது இங்கே நமக்கு வேண்டாம். இந்த பூல் விளையாட்டில் பல வித்தைகளைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கும் ஹீரோவின் கதைதான் The Hustler. அதில் பால் ந்யூமேன் தான் ஹீரோ. ஸ்கார்ஸேஸி, 25 வருடங்கள் கழித்து 1986ல் எடுத்த படம், Color of Money. இது ஹஸ்லரின் இரம்டாம் பாகம் என்று தாராளமாகச் சொல்லலாம். முதல் பாகத்தில் ஹீரோவான எட்டீ ஃபெல்ஸன், இதில் ரிடையர் ஆகி, இந்தப் பாகத்தில், பந்தயங்களை உருவாக்குவதிலும், அவற்றில் பெட்கள் கட்டுவதிலும் காலம் கழிப்பவர். அப்போது வின்செண்ட் என்ற இளைஞனைக் கவனிக்கிறார். அவன் பூல் விளையாட்டில் மிகுந்த திறமைசாலி. அவனது காதலி கார்மென், பந்தயத்தில் விருப்பம் இருப்பவர்களை நைஸாக உள்ளே அழைத்து, பந்தயம் கட்ட வைத்து, வின்செண்ட்டோடு சேர்ந்து அவர்களை ஏமாற்றுவதையும் கவனிக்கிறார். தனது பழைய காலம் எட்டீக்கு நினைவு வருகிறது. எனவே, வின்செண்ட் மற்றும் அவனது காதலியோடு ஒரு அணியாகச் சேர்ந்து, பிறரை ஏமாற்றிப் பணம் சேர்க்கலாம் என்று முடிவுசெய்கிறார். இதன்பின் நடக்கும் வேகமான சம்பவங்கள் நிறைந்த படம்தான் கலர் ஆஃப் மனி. இந்தப் படத்துக்காக, எட்டீ ஃபெல்ஸனாக நடித்த பால் ந்யூமேனுக்கு, பல வருடங்களில் பல சிறந்த நடிகர் பரிந்துரைகளுக்குப் பிறகு இதில் ஆஸ்கர் கிடைத்தது.

இந்தப் படங்கள் தவிர, இந்த விளையாட்டுப் புனைவுப் படங்களில் ஏராளம் உண்டு. அவற்றில் மிகப் பிரபலமான படங்களே நூற்றுக்கணக்கில் தேறும். உதாரணமாக, MIllion Dollar Baby, Happy Gilmore, Remember the Titans, The Karate Kid, Bed it like Beckam, Lagaan, Dangal, Dodgeball, A league of their own, The Longest Yard, Talladega Nights, Tin cup, White men can’t Jump, Any Given Sunday, Over the Top, Field of Dreams என்று துவங்கி, எக்கச்சக்கமான படங்கள் உண்டு.

பொதுவாகவே, ஸ்போர்ட்ஸ் படங்கள், ஆடியன்ஸைக் கட்டுவிப்பதில் சிறந்தவை என்பது என் தனிப்பட்ட கருத்து. பிரம்மாண்டமான திரையில் காண்பிக்கப்படும் விளையாட்டு, அதில் இடம்பெறும் உணர்வுகள், கதாபாத்திரங்கள், அவை சந்திக்கும் பிரச்னைகள் என்பவையெல்லாம் அந்தக் கதையின் உணர்வுகளை அப்படியே ஆடியன்ஸுக்குக் கடத்திவிடும் திறன் மிகுந்தவை. எனவே, இத்தகைய விளையாட்டுப் படங்கள், மற்றும் அவைகளின் அமரத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களோடு நாமும் அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவற்றால் உத்வேகம் பெற்று, வாழ்க்கையில் எவ்வளவோ சாதிக்கலாம். அதற்கான உந்துதலை இவை அவசியம் அளிக்கின்றன என்றே சொல்லுவேன்.

‘வயதான’ ஹீரோக்கள்
அந்திமழையில் மார்ச் 2020 இதழுக்காக எழுதிய கட்டுரை இது. 50களுக்குப் பின்னரும் விடாப்பிடியாக ஹீரோக்களாக நடித்தவர்கள் பற்றியும், பின்னர் என்ன ஆனது என்பதைப் பற்றியும்.

ஜான் ட்ரவோல்டா, ஹாலிவுட்டில் மிக இளம் வயதிலேயே சூப்பர்ஸ்டார் ஆனவர்.  தனது 23 மற்றும் 24ம் வயதுகளில் அவர் நடித்த Saturday Night Fever (1977) மற்றும் Grease (1978) ஆகிய படங்களினால் அமெரிக்காவில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்கவே பிரபலமான ஸ்டாராக மாறினார். சாட்டர்டே நைட் ஃபீவர் படத்தை எழுபதுகளின் இறுதிகளில் ஹாலிவுட் படங்களைப் பார்த்த தமிழர்களும் இந்தியர்களும் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். வெளீவந்து ஒரு வருடம் கழித்து 1978ல் இந்தியாவில் ரிலீஸ் ஆனது. இங்கும் நன்றாக ஓடியது. அதுவரை இல்லாத டிஸ்கோ வெறி இந்தப் படத்தால் இந்தியப் படங்களைப் பிடித்தும் கொண்டது. இதன்பின் பல டிஸ்கோ படங்கள், பாடல்கள், நடனங்கள் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாயின.

இப்படி மிகச்சிறிய வயதிலேயே மிகப்பெரிய ஸ்டாராக மாறிய ட்ரவோல்டா, இந்தப் படங்களுக்குப் பிறகு மெல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் ஹாலிவுட்டில் இருந்தே வெளியேறும் நிலைக்கு ஆளானார்.  இந்த இரண்டு படங்களுக்குப் பின் 1980ல் Urban Cowboy படமும் நன்றாகவே ஓடியது. ஆனால் அதனைத் தொடர்ந்து 1989 வரை மிகச்சில ஹிட்களே அவருக்கு அமைந்து, பல தோல்விப்படங்களில் நடித்ததால், புகழை இழந்து, மக்களால் மறக்கப்படும் அளவு வாய்ப்புகள் இல்லாத நடிகராக மாறினார். இதன்பிறகு, Look Who’s Talking, 1989ல் வெளியாகிறது. மிரம்மாண்ட ஹிட்டாக மாறுகிறது. Grease வெளியாகிப் பதினோரு ஆண்டுகள் கழித்து அந்தப் படத்தைப் போலவே மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் ஆகிறது இந்தப்படம். இப்போதுதான் ஜான் ட்ரவோல்டா நிமிர ஆரம்பிக்கிறார். ஆனாலும் கூட, க்வெண்டின் டாரண்டினோவின் Pulp Fiction  1994ல் வெளியான பின்னர்தான் மறுபடியும் இழந்த புகழை மீட்டு,  தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிரம்மாண்ட சூப்பர்ஸ்டாராக ஆக ட்ரவோல்டாவினால் முடிந்தது. Broken Arrow, Face-off போன்ற இந்தியாவில் சூப்பர் ஹிட்டாக ஓடிய படங்கள், பல்ப் ஃபிக்‌ஷனுக்குப் பிறகுதான் அவருக்குக் கிடைத்தன.  அதன்பின் கிட்டத்தட்ட அடுத்த 10-15 வருடங்கள் அவருக்குப் படங்கள் வந்துகொண்டே இருந்தன. இப்போது கடந்த சில வருடங்களாக, ஆங்காங்கே ஒன்றிரண்டு படங்கள் நடித்துக்கொண்டு ரிடையர்மெண்ட் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார்.

ஜான் ட்ரவோல்டா பற்றி ஏன் எழுதினேன் என்றால்,  மிக இளம் வயதில் பிரபலமாகி, பின்னர் பிஸியாக நடிக்கவேண்டிய வயதில் மார்க்கெட் போய், அதன்பின்னர் நாற்பது வயதுக்கு மேல் மறுபடியும் பிரபலம் ஆகியவர். இப்படி ஒரு பிரபலம் இந்தியாவிலும் உண்டு. பிரபல பாடகர் கிஷோர் குமார்.  ஐம்பதுகளில் நடிகர்- பாடகராக மிகப் பிரபலம். பின்னர் ஒரு பத்து வருட காலம் வாய்ப்பே இல்லாமல் இருந்து,  ஆராதனா படம் வந்ததும் மறுபடிப் புகழின் உச்சத்துக்குப் போய், அதன்பின் இறந்த 1987 வரையிலும் அசைக்கவே முடியாத அளவு முதலிடத்தில் இருந்தவர்.

ஹாலிவுட்டில் ஒரு பாணி உண்டு. என்னவென்றால், நீ எத்தனை பிரம்மாண்டமான ஹீரோவாக இருந்தாலும் சரி – ஒரு காலகட்டத்துக்குப் பின்னர், உனக்கு வாய்ப்புகள் கட்டாயம் குறையவே செய்யும். அப்போது உன் இடத்தில் அடுத்த ஹீரோ வந்து சேருவான். அவனுக்குப் பின்னர் இன்னொருவன். இப்படித்தான் ஹாலிவுட் இயங்குகிறது. காரணம், ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு ஹீரோ அங்கே பிரபலம் அடைவார். அவருக்கென்றே பிரம்மாண்ட ரசிகர் பட்டாளம் உருவாகும். அந்தத் தலைமுறை முடிந்து வேறொரு தலைமுறை ரசிகர்கள் வரும்போது அவர்களுக்குள்ளிருந்து அவர்களுக்குத் தேவையான ஹீரோ உருவாவார். அப்போது பழைய ஹீரோவுக்கு வாய்ப்புகள் குறையத் துவங்கும். ஹாலிவுட்டில் மட்டும் இல்லாது, வணிகப்படங்கள் என்ற கமர்ஷியல் படங்கள் எங்கெல்லாம் எடுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் தவறாது நடக்கும் நிகழ்வு இது.  இப்படித்தான் நடக்கவும் வேண்டும்.

அடுத்த உதாரணமாக, உலகெங்கும் பிரபலமான இரண்டு ஆக்‌ஷன் ஹீரோக்களை எடுத்துக்கொள்வோம். சில்வெஸ்டர் ஸ்டாலோன் மற்றும் அர்நால்ட் ஷ்வார்ட்ஸெனெஹர்.  இவர்கள் இருவருமே, நம்மூர் ரஜினி கமல் போலக் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் நடிக்க ஆரம்பித்துப் பிரபலம் ஆனவர்கள். இருவரும் உச்சத்தில் இருந்தபோது இருவருக்குள்ளும் ஒரு சில பிரச்னைகள் வந்திருக்கின்றன.  வெளிப்படையாகவே மேடைப்பேச்சுகளில் இருவரும் இருவரையும் விமர்சனம் செய்திருக்கின்றனர். இருவருக்கும் உலகம் முழுக்க ஓடிய பிரம்மாண்டமான படங்கள் கிடைத்தன. ரேம்போ மற்றும் ராக்கி சீரீஸ்களில் ஸ்டாலோன் நடிக்க, அர்நால்டோ ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து True Lies, Terminator 1 & 2 ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமானார். ஸ்டாலோனுக்கு ரு ஆஸ்கர் உண்டு (ராக்கி திரைக்கதை). இருவருக்கும் பிரம்மாண்டமான தோல்விப்படங்களும் உண்டு (ஸ்டாலோன் – Stop or my mom will shoot, Tango & Cash, Judge Dredd முதலியன. அர்நால்ட் – Last Action Hero, Junior, Jingle All the way முதலியன).  இருவருக்குமே கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் மார்க்கெட் போக ஆரம்பித்ததும் நடந்தது. உடனடியாக அர்நால்ட் அரசியலில் நுழைய, ஸ்டாலோனோ விடாப்பிடியாகப் படங்கள் எடுத்துக்கொண்டே இருந்தார். ஒரு காலகட்டத்தில், தனக்கு முற்றிலுமாக மார்க்கெட் போய்விட்டது என்பதை உணர்ந்து, அவரது சமகால மார்க்கெட் இல்லாத ஆக்‌ஷன் ஹீரோக்கள் பலரையும் ஒருங்கிணைத்து The Expendables படத்தை இயக்குகிறார். படம் பிரம்மான ஹிட் ஆகிறது. அதன்பின் அந்தப் படத்துக்கு அடுத்ததாக இரண்டு பாகங்களும் தயாரித்து நடிக்கிறார்.  மூன்றாவது பாகம் அடிவாங்கியதும், சில படங்களில் சிறிய வேடங்கள் செய்து, தனது ராக்கி கதாபாத்திரமாகவே Creed & Creed 2 படங்களில் நடித்து, ஒருமுறை க்ரீடுக்காக சிறந்த துணை நடிகர் ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டு, ரேம்போ படத்தின் கடைசி பாகத்தை சென்ற வருடம் (2019) எடுத்து, அது கொடூரமான தோல்வி அடைந்ததும் இப்போது சும்மா இருக்கிறார்.  அர்நால்டுமே அரசியல் வாழ்க்கை முடிந்ததும் ஒரு சில படங்களில் நடிக்கிறார். எக்ஸ்பெண்டபிள்ஸ் படத்தில் ஸ்டாலோனும் அர்நால்டும் இணைந்துவேறு நடிக்கிறார்கள். டெர்மினேட்டர் படங்களிலும் பின்னர் அர்நால்ட் நடிக்கிறார். ஆனாலும் எதுவும் உபயோகம் ஆகவில்லை. கடைசியாக வெளீவந்த Terminator Dark Fate, டெர்மினேட்டர் 2வின் அடுத்த பாகம் என்றே அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் படுதோல்வி அடைகிறது. இத்தனைக்கும் உலகெங்கும் பிரபலமான வேடம் அது. அர்நால்டுக்கு ஒரு அடையாளம் ஏற்படுத்திக்கொடுத்த வேடம். இருந்தும் தற்போதைய காலகட்டத்தில் அர்நால்டுக்கு இடம் இல்லை என்று மக்களே அவரைத் தூக்கி வீசிவிட்டார்கள். ஸ்டாலோனுக்கும் இதே கதி. இருவருக்கும் 70 வயதுக்கு மேல் ஆகிறது என்பதும் ஒரு முக்கியமான விஷயம்.

சமகாலத்தை எடுத்துக்கொண்டால், பத்து வருடங்களுக்கு முன்னர் கூட உலகெங்கும் பிரபலமாக இருந்த டாம் க்ரூஸ் மற்றும் ப்ராட் பிட் ஆகியவர்களுக்கு இப்போது மார்க்கெட் குறைவுதான். இருவருக்கும் முறையே 57 மற்றும் 56 வயது ஆகிறது. இருவரும் நடிக்கும் சமீபத்திய படங்கள், அவர்களது படங்கள் முன்னர் ஓடியதுபோல ஓடுவதில்லை. டாம் க்ரூஸ், மிஷன் இம்பாஸிபிள் சீரீஸ் படங்களை நம்பியே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார். ப்ராட் பிட்டுக்கு அதுவும் இல்லை. சமீபத்தில் வெளியான க்வெண்டின் டாரண்டினோவின் Once upon a time in Hollywood படத்தில்,  மார்க்கெட் இல்லாத நடிகராக லியனார்டோ டிகேப்ரியோ நடிக்க, அவருக்கு ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடும் நடிகராக ப்ராட் பிட் நடித்திருப்பார். அந்தப் படம் உண்மையில் நிஜவாழ்க்கையில் பழையபடி மார்க்கெட் இல்லாத லியனார்டோ மற்றும் ப்ராட் பிட்டைப் பற்றிய படம்தான் என்ற வதந்தி ஹாலிவுட்டில் ஓடியது. உண்மையில் லியனார்டோ டி கேப்ரியோவுக்கு இன்னும் மார்க்கெட் போகவில்லை. லியனார்டோவுக்கு 45 வயதுதான் ஆகிறது. இன்னும் குறைந்த பட்சம் 5-6 வருடங்கள் கட்டாயம் அவரது மார்க்கெட் சரியாது.

இன்னும் கொஞ்சம் பழைய ஹீரோக்களை எடுத்துக்கொண்டால், ராபர்ட் டி நீரோ மற்றும் அல் பசீனோவுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. ஹாலிவுட் படங்களில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் இருவருமே. காட்ஃபாதர் மூன்று பாகங்களிலும் அல் பசீனோ பிய்த்து உதறியிருக்க, அதன் இரண்டாம் பாகத்தில் இளம் வயது டான் கார்லியோனியாக ராபர்ட் டி நீரோ பிரம்மாதப்படுத்தியிருப்பார். இருவரும் ஒருசில படங்கள் சேர்ந்தும் நடித்திருக்கிறார்கள். இருவருக்குமே பிரம்மாதமான ஹிட்கள் உண்டு. ஆனாலும், வயதாக ஆக, மார்க்கெட் அவர்களின் கையை விட்டு நழுவவே செய்தது.  பழைய ஹீரோக்களில் உலக சூப்பர்ஸ்டாரான க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டுகே இது நிகழ்ந்தது. ஆனால் அவர் உஷாராகி, படங்களை இயக்க ஆரம்பித்தார். இன்றுவரை நல்ல படங்களை இயக்கிக்கொண்டே இருக்கிறார்.

இந்தியாவில் அமிதாப் பச்சன் இதற்குச் சரியான உதாரணம். இந்தியாவின் வேறு எந்த சூப்பர்ஸ்டாரும் செய்யாததை, தனது ஐம்பதாவது வயதில் அமிதாப் செய்தார். இந்தியாவின் நம்பர் ஒன் சூப்பர்ஸ்டாராக விளங்கிய அமிதாம், தனது ஐம்பதாவது வயதில் ஹுதா கவா (Khuda Gawah) என்ற படம்தான் தனது கடைசிப்படம் என்பதை அறிவித்தார். அதேபோல், அப்படம் வந்து அடுத்த ஒன்பது வருடங்கள் நடிக்கவே இல்லை. ஹுதா கவா திரைப்படத்துக்குப் பின்னர், தனது ABCL நிறுவனத்தைக் கவனிப்பதில் நேரம் செலவிட்டார் அமிதாப். அந்த நிறுவனம் பல பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு, மீளாக் கடனில் தவித்தபோதுதான் திரும்பவும் நடிக்க வந்தார். ஆனால் அப்போது வயதுக்குரிய கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கி, தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் துவக்கினார். ஆரம்பத்தில் அப்படி அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன. அமிதாபின் இரண்டாவது இன்னிங்ஸின் மிகப்பெரிய வெற்றிப்படமாகத் திகழ்ந்து, அவரை நல்ல நடிகராக அடையாளம் காட்டிய முதல் படம் – ‘மொஹப்பதே(ய்)ன்’. ஆதித்ய சோப்ரா இயக்கிய படம். ஷா ருக் கான், ஐஸ்வர்யா ராய் நடித்தது. இதில், கடுமையான ஒழுக்கம் நிரம்பிய கல்லூரி முதல்வராக, காதலை எதிர்த்து வாழும் கதாபாத்திரமாக நடித்திருந்தார். இந்தப் படத்துக்குப் பின்புதான் அமிதாப் பச்சன் என்ற நடிகருக்காகவே திரைப்படங்கள் எழுதப்பட்டன.

இப்போது, அமிதாப் போன்ற சூப்பர்ஸ்டார்களை எடுத்துக்கொண்டால், கன்னடத்தில் ராஜ்குமார், எழுபது வயதுக்கு மேலும் ஹீரோவாக நடித்துக்கொண்டே இருந்தவர். கன்னட விஷ்ணுவர்த்தனுமே இறக்கும் வரை ஹீரோதான். தெலுங்கின் சிரஞ்சீவியும் அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறார். மலையாளத்தில் மம்மூட்டிக்கு 68 வயது. இன்றும் ஹீரோதான். மோகன்லால் – 59 வயது. இப்போதும் ஹீரோ. தமிழில் ரஜினிகாந்த் – 69 வயது. இப்போதுவரை ஹீரோ. இடையில் கபாலி மற்றும் காலாவில்  ஐம்பது வயதுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தார். அவைகள் விமர்சன ரீதியில் அடிவாங்கியதுமே மீண்டும் ஹீரோவாக மாறிவிட்டார். லிங்கா போன்ற நடைச்சுவைப் படங்கள் வெளியாயின. இப்போது தர்பார். கமல்ஹாஸனுக்கு 65 வயது ஆகிறது. தற்போது அரசியலில் பிஸியாக இருக்கிறார். சில வருடங்கள் முன்னர் வரை அவருமே ஹீரோவாகத்தான் நடித்துக்கொண்டும் இருந்தார். தேவ் ஆதேவ் ஆனந்த் ஹிந்தியில் இறக்கும் வரையே ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்ததையும் மறக்க முடியாது. சல்மான் கான், ஷா ருக் கான், ஆமிர் கான் ஆகியவர்களுக்கும் இதே கதைதான்.  மூவருக்கும் கிட்டத்தட்ட 55 வயது ஆகிறது.

தமிழில் அஜீத்தை அவசியம் இதில் நாம் பாராட்ட முடியும். மங்காத்தாவில் 40 வயதுக் கதாபாத்திரம் என்றே சொல்லி நடித்திருக்கிறார். இப்போது நேர்கொண்ட பார்வை வரை ஓரளவு வயதுக்கு ஏற்ற வேடங்களையே செய்து வருகிறார்.

(இந்திய – குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் பலருமே அறுபதுக்குப் பிறகும் தலையில் சாயம் பூசிக்கொண்டு இளமையாகத் தெரியவேண்டும் என்றே கஷ்டப்படுவதையும் நாம் பார்க்கலாம். இதெல்லாம் மொத்தமாகக் கவனித்தால், ஏதோ ஒரு உளவியல் சார்ந்த பிரச்னையாகக்கூட இருக்கலாம். தன் வயது என்னவோ அதன்படி இயல்பாக இருக்காமல், முகமே வயதைக் காட்டிக் கொடுக்கும்போதும் முடியைக் கறுப்பாக்கிக் கொண்டு பிரபலங்கள் நடமாடுவதால் அவர்களைப் பார்த்தாலேயே ஒருவித பயமான உணர்வு வருகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து).

இந்தியாவில், வயதுக்கேற்ற கதாபாத்திரங்கள் என்ற கருத்தே முற்றிலுமாக மறக்கப்பட்டு, எல்லா ஹீரோக்களும் எல்லாக் காலகட்டத்திலும் இளமையாகவே நடிக்கவேண்டும் என்ற கருத்து இப்போதுவரை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதனாலேயே அவர்கள் ரசிகர்களால் எள்ளி நகையாடவும் படுகிறார்கள். இப்போது தமிழில் ரஜினி படங்களைவிடவும் அஜீத், விஜய் படங்கள் நன்றாக வசூல் செய்கின்றன என்பது கண்கூடாகவே தெரிகிறது. மேலே ஹாலிவுட் படங்களில் ஒவ்வொரு தலைமுறை ஹீரோக்களையும் அவர்களுக்கு அடுத்த தலைமுறை ஹீரோக்கள் ஓரம்கட்டுவதைப் படித்துப் பாருங்கள். சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆரை ரஜினி மற்றும் கமல் முந்தினர். காரணம் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் வயதான காலகட்டத்திலும் இளமையாகவே நடித்துக்கொண்டு இருந்தது ரசிகர்களுக்கு அலுத்தது. அதையேதான் ரஜினியும் கமலும் இப்போது செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. கமலாவது அவ்வப்போது இந்தியன் 2 போல வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ஆனால் ரஜினி? இதுதான் இந்திய சினிமாவுக்கும் ஹாலிவுட் சினிமாவுக்கும் வித்தியாசம். பிரம்மாண்டமான இமேஜ் வைத்திருக்கும் நடிகர்கள், அந்த இமேஜ் மறைந்து, ரசிகர்களால் இப்போது இணையங்களில் கிண்டல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலே சொன்ன அத்தனை ஹீரோக்களும் இதில் அடக்கம். நம் ஊரில் இருக்கும் ‘வயதான’ ஹீரோக்கள், இனியாவது வயதுக்குத் தகுந்த பாத்திரங்களில் நடித்தால், அவசியம் அமிதாப் போலப் பேசப்படுவார்கள்.  விருதுகளும் வாங்க இயலும். அதைவிட்டுவிட்டு, இன்னுமே இளமையாகவே நடித்துக்கொண்டிருந்தால், அவசியம் ரசிகர்களால் ஓரம்கட்டப்படும் ஆபத்து இருக்கவே செய்கிறது.

இது பற்றித் தொடர்பான இரண்டு கட்டுரைகள்.

ரஜினி Vs கமல் – 1
ரஜினி Vs கமல் – 2

PS- Header Image taken from this link. இதிலும் ஏன் அஜீத் படம் பெரிதாகவும் பிற நடிகர்கள் படம் சிறிதாகவும் இருக்கிறது என்று என்னைக் கேட்டால், அது ஒரு யூட்யூப் வீடியோவில் இருந்து எடுத்தேன். அதில் அப்படித்தான் இருந்தது. உட்கார்ந்து ஒரு இமேஜ் கொலாஜ் செய்து உருவாக்க நேரம் இல்லை என்பதால் அந்த வீடியோவுக்கும் முறைப்படி லின்க் கொடுத்துவிட்டேன். அவ்வளவே.

ஹாலிவுட் பேய்கள்
அந்திமழை February 2019 இதழில் ஹாலிவுட்டின் பேய்ப்படங்கள் பற்றி எழுதியது இங்கே.

தற்காலத்தில் பேய்ப்படங்கள் எடுப்பது என்பது கொஞ்சம் சவாலான விஷயம். காரணம் மௌனப்படக் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான பேய்ப்படங்கள் உலகெங்கும் வெளியாகிவிட்டன. அவற்றில் நாம் பார்க்காத பேயே இல்லை. பேய்பிடித்த காரில் இருந்து, பேய்பிடித்த மிருகங்கள், பேய்பிடித்த வீடு, பேய்பிடித்த ஆசாமிகள் என்று பேய்பேயாக எக்கச்சக்கப் பேய்களைப் பார்த்தே வளர்ந்துவிட்டோம். பேய்க்கதைகளிலேயே கொஞ்சம் ஜிகுஜிகுஜா படங்களும் உண்டு. கூடவே, ஒரு பேய்ப்படம் என்றால் அதில் பேய் எப்போது வரும், என்ன செய்யும் என்பதிலேயே நமக்கு ஒருவிதப் புரிதலும் இந்தப் படங்களைப் பார்த்ததாலேயே வந்தும்விட்டது. எனவே, பேய்ப்படம் எடுக்கையில், ‘இதோ இங்க பேய் வரப்போகுதா…? கொஞ்சம் மாத்தி, அப்புறமா வர வெய்யுங்க.. இந்த இடத்துல ஆடியன்ஸை பேய் வரப்போகுதுன்னு ஏமாத்துங்க’ என்றெல்லாம் டிஸ்கஷன்களிலேயே பேசப்படும் காலகட்டமாக இது மாறிவிட்டது.

ஆனால், முந்தைய காலகட்டத்தில் இப்படி இல்லை. தரமான பல பேய்ப்படங்கள் உலகின் பல மொழிகளிலும் வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட பேய்ப்படங்களைப் பற்றிப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். முடிந்தவரை அனைவருக்கும் தெரிந்த பேய்ப்படங்களைப் பார்க்காமல், கொஞ்சம் தெரியாத, நல்ல படங்களைக் கவனிப்போம்.

முதன்முதலில் எடுக்கப்பட்ட பேய்ப்படம் என்ற பெருமையை லூமியர் சகோதரர்கள் எடுத்த Le Squelette Joyeux என்ற படம் பெறுகிறது. 1895ல் வெளியானது இது. ஒரு நிமிடத்துக்கும் குறைவானது. ஒரு எலும்புக்கூடு கண்டபடி கைகால் எலும்புகள் பிய்ந்து, ஒட்டி ஆடும் நடனம் இது (கண்ணோடு காண்பதெல்லாம் பாடல் உங்கள் மனதில் தோன்றினால் அதற்கு நிறுவனம் பொறுப்பாகாது). இதன்பின் ஜோர்ஜ் மெலியெஸ் (Georges Méliès – இதைத் தமிழில் உச்சரிக்கவே முடியாது) 1896ல், Le Manoir du Diable என்று ஒரு படம் எடுக்க, முதன்முதலில் ஒரு பேய்ப்படம் என்றால் அதில் என்னன்ன இடம்பெறும் என்ற டெம்ப்ளேட் உருவானது. மூன்று நிமிடப் படமான இது துவங்கியதுமே ஒரு வவ்வால் வரும். அதில் இருந்து ஒரு மனிதன் உருவாவான் (சூனியக்காரன்?). இதன்பின் ஒரு பெரிய பானையை உருவாக்கி, அதில் எதையோ காய்ச்ச, பின்னர் ஒரு சித்திரக்குள்ளன் உருவாகி, பின் ஒரு எலும்புக்கூடு தோன்றி அது வவ்வாலாக மாறி.. மூன்றே நிமிடப் படத்தில் இப்போது நான் சொன்னது முதல் நிமிடம் மட்டுமே.

இப்படியாகப் பேய்ப்படங்கள் உருவாயின. ஃப்ரெஞ்ச்சில் இருந்து ஜெர்மனிக்கு இந்த அலை நகர்ந்தது, முதல் உலகப்போரின்போது. அந்தச் சமயத்தில் ஜெர்மன் அரசு, பிற நாட்டுப் படங்களைத் தடை செய்ததால், எக்கச்சக்கப் படங்கள் ஜெர்மனியிலேயே உருவாயின. (அக்காலத்தில்தான் சாப்ளினும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்). இக்காலகட்டத்தில், The Golem (1915), The Cabinet of Doctor Caligari (1919) ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் கேபினெட் ஆஃப் டாக்டர் காலிகாரி படம் இன்றும் பிரபலம். இப்போதும் எடுக்கப்படும் பல பேய்ப்படங்களின் முன்னோடியான படம் இது. இப்படங்களுக்குப் பின்னர்தான் Nosferatu (1922) வெளியாகிறது. இதற்கு முன்னர் வெளிவந்திருந்த படங்கள் எல்லாமே ஜெர்மன் எக்ஸ்ப்ரஷனிஸத்தை அடிப்படையாகவே கொண்டு எடுக்கப்பட்டிருந்தன (எக்ஸ்ப்ரஷனிஸம் என்பது, நிஜவாழ்க்கையின் தருணங்களை வேண்டுமென்றே உருமாற்றி, அதைப் பார்ப்பவர்களுக்கு அந்தப் படைப்பைப் பற்றிய பல எண்ணங்களை உருவாக்குவது). முதன்முறையாக, நிஜவாழ்க்கை எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட விதமாகவே, எந்தப் பெரிதுபடுத்துதலும் இல்லாமல் உள்ளது உள்ளபடி (ரியலிஸம்) எடுக்கப்பட்ட முதல் பேய்ப்படமாக நாஸ்ஃபெராட்டூ விளங்குகிறது. இந்தப் படத்தை இயக்கியவர் F.W Murnau. இப்படம் ஒரு ரத்தக்காட்டேறியைப் பற்றிய வேம்ப்பையர் படம். இதில் வரும் ரத்தக்காட்டேறி வேறு யாரும் அல்ல- டிராகுலாவில் இருந்து அப்பட்டமாக சுடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் (ஓர்லாக் பிரபு). பெரிதாகப் பேசப்பட்ட படமும் கூட. பிற்காலத்தில் பிரபல இயக்குநர் வெர்நர் ஹெர்ஸாக் இப்படத்தை 1979ல் ரீமேக் செய்து வெளியிட்டார். அதுவும் சிறப்பாகவே இருக்கும்.

Nosferatu (1922) – FULL MOVIE.

நாஸ்ஃபெராட்டூ வெளியானபின்னர் Haxan (1922), The Hunchback of Notre Dame (1923 – USA), The Phantom of the Opera (1925 – USA) ஆகிய படங்கள் வெளியாயின. இதில் கடைசி இரண்டு படங்கள் யுனைடட் ஸ்டேட்ஸில் எடுக்கப்பட்டவை. இவற்றில் நடித்தவர் லியோனிடாஸ் செனி (Leonidas Cheney). அக்காலத்தில், The Man with a thousand faces என்றே அறியப்பட்ட நடிகர். பிறப்பிலேயே வாய்பேச, காதுகேட்க இயலாததால், அனைவருடனும் பழகியே, எப்பேர்ப்பட்ட விஷயத்தையும் வசனமே பேசாமல் நடிக்கத் தெரிந்தவர். பெலா லுகோஸி நடித்த புகழ்பெற்ற டிராகுலா (1931) படத்தில் நடிக்கவேண்டியவர், அப்படம் எடுக்கப்படுவதற்குள் தொண்டையில் வந்த புற்றுநோயால் அகால மரணம் அடைந்தார்.

இக்காலகட்டத்திலேயே திரைப்படங்கள் பேசத் துவங்கிவிட்டன. யுனைடட் ஸ்டேட்ஸ், உலகின் பெரிய திரைப்பட கேந்திரமாக உருவாகிவிட்டது. எனவே, பல திகில் படங்கள் எடுக்கப்பட்டன. மேலே கவனித்த டிராகுலா (1931) அதில் முக்கியமானது. இயக்கியவர் டாட் ப்ரௌனிங். இப்படம்தான் டிராகுலாவின் முதல் திரை அறிமுகமாக அமைந்தது. அதே வருடத்தில் Frankenstein படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களும் நன்றாக ஓடியதால், தடதடவென்று பல திகில் படங்கள் இவற்றைத் தொடர்ந்து வெளியாகின. உதாரணத்துக்கு, 1932ல் வெளியான The Mummy படத்தைச் சொல்லமுடியும். இதைத்தான் தொண்ணூறுகளின் இறுதியில் ஸ்டீவன் சாம்மர்ஸ் ரீமேக் செய்து, உலகெங்கும் பிரம்மாண்ட ஹிட்டாக அமைந்தது. இதன்பின்னர் King Kong (1933)ல் வெளியாகிறது. இது பேய்ப்படம் அல்ல – ஒரு மான்ஸ்டர் படம் என்றாலும், அக்காலத்தில் மிகப்பெரும் ஹிட்டாக அமைந்த படம் இது. 1930ல் இருந்து 1934 வரையிலும் இருந்த காலகட்டத்தை, திகில் படங்களின் பொற்காலம் என்றே பத்திரிக்கைகள் வர்ணிக்கின்றன. அத்தனை திகில் படங்கள் அவ்வருடங்களில் வெளியாகியிருக்கின்றன.

இப்படங்களுக்குப் பிறகு, Werewolve of London (1935) மற்றும் The Wolf man (1941) படமும் குறிப்பிடத்தக்கவை. ஓநாய் மனிதனைக் காட்டிய படங்கள். இவற்றுக்கு இடையிலேயே ஏராளமான திகில் படங்கள் வந்தாகிவிட்டன. அவற்றில் டிராகுலா, ஃப்ராங்கென்ஸ்டைன் படங்களுக்கு வெளியான பல பாகங்களைச் சொல்லமுடியும்.

இக்காலகட்டத்துக்குப் பிறகு, Creature Features என்று அழைக்கப்பட்ட, ஜந்துகளை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் பிரபலமாகத் துவங்கின. இது ஐம்பதுகளின் துவக்கம். 1953ல் The Beast From 20,000 Fathoms வெளியாக, இதைத் தொடர்ந்தே இப்படிப்பட்ட ஜந்துப் படங்கள் எடுக்கப்பட்டன. உண்மையில் இந்தப் படம்தான் காட்ஸில்லா படத்தின் முன்னோடி. இப்படத்துக்குப் பிறகுதான் ஜப்பானில் காட்ஸில்லா (கோஜிரா என்று அங்கே அதற்குப் பெயர்) படங்கள் எடுக்கப்பட்டன. இப்படத்தின் கதையும் காட்ஸில்லாவின் கதையும் ஒரேபோன்றுதான் இருக்கும்.

இந்த creature படங்களுடனேயே, ஏலியன்களைப் பற்றிய வரிசையான படங்களும் அப்போது எடுக்கப்பட்டன. திகில் படம் என்ற கணக்கில் இவையும் வரும். Invasion of the Bodysnatchers (1956) ஒரு உதாரணம். ஐம்பதுகளின் இறுதிவரை இந்த இரண்டுவகைப் படங்களும் ஹாலிவுட்டில் சக்கைப்போடு போட்டன.

ஐம்பதுகளின் முடிவில்தான் இதுவரை மறக்கமுடியாத ஒரு திகில் படம் வெளிவந்தது. ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் எடுத்த ‘சைக்கோ’. இதைப் பேய்ப்படம் என்று சொல்ல முடியாது. இருப்பினும், இந்தப் படம் எழுப்பிய தாக்கம் மிக முக்கியமானது. உலகெங்கும் இப்படம் பார்த்து அனைவரும் பயந்தனர். உளவியல் சார்ந்த திகில் படங்களுக்கு ஒரு அட்டகாசமான பாதை போட்டுக்கொடுத்தது சைக்கோ படமே. இன்றும் ராட்சசன் போன்ற படங்களுக்கு ஆரம்பப் புள்ளி இந்தப் படம்தான். இப்படத்தைத் தொடர்ந்து, இன்னொரு அட்டகாசமான படமாக ‘Birds’ வெளியானது. அதே ஹிட்ச்காக், இம்முறை பறவைகளை வைத்து ஆடியன்ஸை திகிலில் ஆழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து, ‘The Night of the Living Dead’ ஒரு புதிய அலையை எழுப்பியது. முப்பதுகளிலேயே ஸாம்பிகளை வைத்துப் படங்கள் வந்திருந்தாலும், அருமையான மேக்கப், நல்ல நடிப்பு, திகிலைக் கிளப்பும் jump scares என்று ஜார்ஜ் ஏ. ரொமேரோ எடுத்த படம் இது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும், இன்றுவரை ஸோம்பிகளை வைத்துப் படங்கள் வெளிவர இப்படம் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.

அறுபதுகளின் இறுதியிலும், எழுபதுகளின் முடிவு வரையிலும், திகில் படங்களில் குறிப்பாகக் குழந்தைகளை மையப்படுத்தும் வழக்கம் உருவானது. திகிலூட்டும் தீய சக்திகளால் குழந்தைகள் படும் பாடு இந்தக் காலகட்டம் முழுதுமே இருந்தது. அது இன்றுவரை அவ்வப்போது தொடர்கிறது. இது, 1973ல் வெளியான ‘The Exorcist’ படம் மூலம் உலகெங்கும் பரவியது. இன்றும், இப்படத்தின் ரசிகர்கள் உள்ளனர். கடவுளின் சக்தி Vs சாத்தானின் சக்தி என்ற, இன்றுவரை பிரபலமாக இருக்கும் கரு இப்படத்தில் பரக்கக் கையாளப்பட்டிருக்கும். இப்படத்தை மையமாக வைத்து எண்டமூரி வீரேந்திரநாத் ‘துளசிதளம்’ என்று ஒரு நாவல் எழுத, அது தமிழில் சுசீலா கனகதுர்காவால் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழிலும் பலரைப் பயமுறுத்தியது. பின்னர் அது படமாகவும் வெளியானது. (எக்ஸார்ஸிஸ்ட், யுனைடட் கிங்டமில் 1999 வரை வீடியோவாக வரத் தடைவிதிக்கப்பட்டிருந்தது). இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதிய வில்லியம் பீட்டர் ப்ளாட்டி மிகவும் பிரபலம் அடைந்தார். படத்தை இயக்கியவர் வில்லியம் ஃப்ரைட்கின். பல படங்கள் இயக்கியிருந்தாலும், எக்ஸார்ஸிஸ்ட்டே இன்றுவரை அவரது பெயரைப் பலருக்கும் நினைவுபடுத்தும் படமாக இருக்கிறது. வில்லியம் பீட்டர் ப்ளாட்டியால் 1971ல் நாவலாக எழுதப்பட்டு, அதன்பின் திரைப்படமாக வெளிவந்த படைப்பு இது. வில்லியம் பீட்டர் ப்ளாட்டிக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கரும் கிடைத்தது (மொத்தம் பத்து வகைகளில் நாமினேட் செய்யப்பட்டிருந்தது இப்படம்). சிறந்த படத்துக்கான ஆஸ்கருக்குத் தேர்வுசெய்யப்பட்ட முதல் திகில் படமாகவும் இது அமைந்தது.

இப்படத்துக்குப் பின்னர் பல திகில் படங்கள் வரிசையாக வெளியாயின. அதேசமயம், இன்றுவரை திகிலுக்காகவே நினைவுகொள்ளப்படும் ஒரு மனிதரும் பிரபலம அடைய ஆரம்பித்திருந்தார். அவர்தான் ஸ்டீஃபன் கிங். திரைப்படமாக எடுக்கப்பட்ட அவரது முதல் நாவலாக, Carrie அமைந்தது. இப்படத்தை இயக்கியது ப்ரையன் டி பா(ல்)மா. அக்காலகட்டத்தின் மிகப்பெரிய ஹிட படமாகவும் இது அமைந்தது. பள்ளியில் இறுதியாண்டு படிக்கும் Carrie என்ற, பிறருடன் பொருந்திப் போகாத மாணவி, பிறரது அவமானப்படுத்துதலைத் தாங்கமுடியாமல் என்ன செய்கிறாள் என்பதே கதை. அவளுக்குள் இருக்கும் அமானுஷ்ய சக்திகளை ஒரு கட்டத்தில் அவள் உபயோகிக்க ஆரம்பிக்க, அதனால் விளையும் அனர்த்தங்களே க்ளைமேக்ஸ். ஆனால், படத்தின் முதல் பாதியைப் பார்த்தால் ஒரு high school romance படமாகத்தான் இருக்கும். சிறுகச்சிறுக திகில் வெளிப்பட ஆரம்பிக்கும். இப்படத்தில் துவங்கி, ஸ்டீஃபன் கிங்கின் பல திகில் நாவல்கள் இன்றுவரை படமாக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. சில உதாரணங்களாக, The Shining, Pet Cemetary, Dream Catcher, The Mist, IT ஆகியவற்றைச் சொல்லலாம். திகில் அல்லாமல், அவரது பிற நாவல்களுமே நிறையப் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஹாலிவுட் திகில் திரைப்பட வரலாற்றில் ஸ்டீஃபன் கிங்கின் பங்களிப்பு மிக முக்கியமானது.

Carrie படத்துக்குப் பின், இன்னொரு மிக முக்கியமான படம் வெளியானது. இப்படமும் உலகெங்கும் பிய்த்துக்கொண்டு ஓடிய படம். பலரை பயமுறுத்திய படமும் கூட. தமிழிலும் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. The Omen. இதுவும் குழந்தை ஒன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான். இயக்கியவர் ரிச்சர்ட் டான்னர். நடித்தது க்ரெகரி பெக். சைத்தானின் குழந்தை பூமியில் பிறந்து, அந்த உண்மை தெரியாமல் வளர்த்தும் பெற்றோர்கள் மத்தியில் சிறுகச்சிறுக தனது சக்திகளை வெளிப்படுத்த ஆரம்பிப்பதே கதை. தமிழில் அர்ஜுன் நடித்து யார்? என்ற படமாக இப்படத்தின் தழுவல் வெளியானது.

இந்தக் காலகட்டம்தான் திகில் படங்களின் மன்னரான ஜான் கார்ப்பெண்டர் முழுவீச்சில் வெளிவந்த காலமும் கூட. அவரது ‘Halloween’ 1978ல்தான் வெளியானது. அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களை அடுத்த பல வருடங்களுக்கு எடுத்துத் தள்ளினார். கார்ப்பெண்டருக்குப் பல முகங்கள் உண்டு. அவர் இசையமைப்பதிலும் கில்லாடி. அவர் எடுத்த ஹாலோவீன் படத்துக்கு நாற்பது வருடங்கள் கழித்து நேரடி இரண்டாம் பாகம் 2018ல் வெளியானது. பிரம்மாதமான வெற்றியும் அடைந்தது. இப்படத்துக்கு அவரே இசை (இடையில் ஹாலோவீனின் பல பாகங்கள் வெளியாகிவிட்டன).

எழுபதுகளின் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவெனில், அக்காலகட்டம்தான் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ப்ரையன் டி பா(ல்)மா, மார்ட்டின் ஸ்கார்ஸேஸி, ஜார்ஜ் லூகாஸ் போன்ற இளைஞர்கள் முழுவீச்சில் திரைப்படங்களுக்குள் புகுந்த காலகட்டம். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய பாணியில் படங்கள் எடுத்தனர். ஜார்ஜ் லூகாஸ் சயின்ஸ் ஃபிக்‌ஷன் பக்கம் தாவ, பாக்கி மூவரும் பலவகையான படங்கள் எடுத்தனர். அவற்றில் திகில் படங்களும் அடக்கம். ஸ்பீல்பெர்க்கின் Jaws வெளிவந்து, மிருகங்கள் மூலம் திகிலூட்டிய திரைப்பட வகையை மீட்டது. அதேபோல், எழுபதுகளில்தான் ஸ்பெஷல் எஃபெக்ட்கள் முழுவீச்சில் இறக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, எண்பதுகளில் வெளியான அத்தனை திகில் படங்களும், விஷுவலாகப் பிரம்மாதமாக எடுக்கப்பட்டன. இது இன்றுவரை தொடர்கிறது. ஸ்டான்லி க்யுப்ரிக் எடுத்த ‘The Shining’ 1980ல்தான் வெளியானது. இதுவும் ஸ்டீஃபன் கிங்கின் நாவலே. ஆனால் நாவலுக்கும் படத்துக்கும் பல வேறுபாடுகள் உண்டு. இருவருக்கும் இதனால் விரோதமும் உருவானது. ஷைனிங் படத்தின் பிரத்யேக அம்சம் என்னவென்றால், இப்போது பார்த்தாலும் அது நேற்று எடுக்கப்பட்ட படம் போலவே இருக்கும். அத்தனை செய்நேர்த்தியுடன் எடுக்கப்பட்ட படம் அது.

ஸாம் ரெய்மி என்ற இளைஞன், தொண்ணூறாயிரம் டாலர்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு, சில நடிகர்களுடன் காட்டுக்குள் புகுந்து எடுத்து வெளியிட்ட ‘The Evil Dead’ படம் 1981ல் வெளியானது. இப்போது கல்ட் படம் என்று சொல்கிறோமே – அப்படிப்பட்ட படமாக அது அமைந்தது. இந்தியாவிலும் இப்படம் மிகுந்த பிரபலம் அடைந்தது. இதற்குப் பின்னர் ஸாம் ரெய்மி மிகுந்த பிரபலம் அடைந்து, மூன்று ஸ்பைடர்மேன் படங்களையும் இயக்கினார். இவரும் குறிப்பிடத்தகுந்த திகில் பட இயக்குநர்களில் ஒருவர். இவரது Drag me to Hell திரைப்படம் குறிப்பிடத்தகுந்த திகில் படமாகும்.

ஜான் கார்ப்பெண்டர் இயக்கிய ‘The Thing’, 1982ல் வெளியானது. அக்காலகட்டத்தில் இப்படம் சரியாகப் போகவில்லை. இதில் வில்லன் ஒரு ஏலியன் ஜந்து. எந்த உயிரினத்துக்குள்ளும் புகுந்து, பிற உயிரினங்களைக் கொல்லக்கூடிய ஜந்து. அண்டார்ட்டிகாவில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தைய ஒரு விண்வெளி ஓடத்தை அங்கே கண்டுபிடிக்க, அதனுள் இருந்து வெளிவந்திருக்கும் ஏலியன் ஜந்து ஒன்று, பிற உயிரினங்களின் உடலில் புகுந்து, பிறரைக் கொல்கிறது. யார் உடலில் ஜந்து இருக்கிறது என்பதே முதலில் தெரியாமல், தங்களைத் தாங்களே சந்தேகப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை. ஆனால், இந்தக் காலகட்டத்தில்தான் நல்ல ஏலியன் ஒன்றை வைத்து ஸ்பீல்பெர்க் E.T படத்தை இயக்கியிருந்தார். அதற்கு நேர் மாறாக, அழிவு என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் இந்தப் படம் சரியாகப் போகவில்லை. ஆனால் இன்றுவரை திகில் பட ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இது இருக்கிறது.

1984ல் Nightmare on Elm Street வெளியானது. இதுவும் இன்றுவரை பேசப்படும் ஒரு திகில் படம்தான். இந்திய ரசிகர்களுக்கு இப்படம் நினைவிருக்கலாம். அக்காலத்தில் ஈவில் டெட், Howling ஆகிய படங்களுடன் இதுவும் வெளியானது. வெஸ் க்ராவன் எடுத்த இந்தப் படத்தின் ஃப்ரெட்டீ க்ரூகர் என்ற கதாபாத்திரம், மனிதர்களைக் கொடூரமாகக் கொல்லும். அதுவும் குறிப்பாக, அவர்களின் கனவுகளுக்குள் புகுந்து அவர்களைக் கொல்லும். பயந்துபோய் விழிக்கும் அவர்களின் உடல்களில் கனவில் நடந்தவைகளின் அடையாளம் இருக்கும். இதன்பின் ஃப்ரெட்டீ என்ற ஜந்துவால் நிஜத்திலும் அவர்கள் கொல்லப்படுவார்கள். இந்தப் படத்துக்கு இதன்பின் பல பாகங்கள் வந்தன.

தொண்ணூறுகளில் திகில் படங்களில் சைக்கோ கொலைகாரர்கள் அதிகம் இடம்பெற ஆரம்பித்தனர். Silence of the Lambs, Natural Born Killers, Se7en, American Psycho போன்ற படங்கள் சில உதாரணங்கள். அதேசமயம் ரொமாண்டிக்கான திகில் படங்களும் வர ஆரம்பித்தன. காதலியின் கண்முன்னர் கொல்லப்பட்ட காதலன், பேயாகத் திரும்பி வந்து காதலியைப் பல சிக்கல்களில் இருந்து காத்து, தனது கொலைகாரனை அடையாளம் காட்டும் படமாக Ghost வெளியாகி, உலகெங்கும் பிய்த்துக்கொண்டு ஓடியது. டெமி மூர் மிகப்பிரபலம் ஆன படங்களில் இதுவும் ஒன்று. அதேபோல், Scream, I know what you did last summer போன்ற slasher வகையைச் சேர்ந்த படங்களும் வர ஆரம்பித்தன. எண்பதுகளிலேயே உருவாகிவிட்ட Friday the 13th படத்தின் பல பாகங்களையும் இங்கே சேர்த்துக்கொள்ளலாம்.

2000த்துக்குப் பின்னர், ஹாலிவுட் படங்கள், 2001 செப்டம்பர் 11ம் தேதி நிகழ்ந்த பேரழிவினால் பாதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் இறந்து, ஆறாயிரம் பேருக்கும் மேல் காயமடைந்த அந்தச் சம்பவம், அமெரிக்க மக்களின் மனதில் தீராத பயத்தை விதைத்தது. இதனால் அக்காலகட்டத்தில் வெளியான திகில் படங்கள் மக்களால் உளவியல் ரீதியாக ஒதுக்கப்பட்டன. இந்த நிலை ஒரு சில வருடங்கள் தொடர்ந்தது. ஆனால் ஆச்சரியகரமாக, இந்த அழிவுக்கு முன்னர் வெளியான சில படங்களில், இதைப்பற்றிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. உதாரணமாக, 2000ல் வெளியான Final Destination படத்தில் இதேபோன்ற ஒரு விமான விபத்து இடம்பெற்றிருந்தது. எதிர்பார்க்காத பேரழிவுகள் படங்களில் தொடர்ந்து இடம்பெற ஆரம்பித்தது இதற்குப் பிறகுதான். இதன்பின்னர் வெளிவந்த பல படங்களிலும், தீவிரவாதம், அழிவுகள் ஆகியன விளக்கப்பட்டன.

இதற்குப் பின் வந்திருக்கும் பல திகில் படங்கள் பற்றி நமக்கே தெரியும். இக்காலகட்டத்தில்தான் ஆசிய நாடுகளின் ஹாரர் படங்கள் ஹாலிவுட்டில் பிரபலமாயின. அவற்றின் உரிமைகளை வாங்கிப் படம் எடுக்கும் நோக்கம் அதிகரித்தது. குறிப்பாக Ringu (The Ring), A Tale of Two sisters (The Uninvited), Ju-On (The Grudge) ஆகிய திகில் படங்களைச் சொல்லமுடியும். இவற்றில் The Ring மற்றும் The Grudge ஆகியவை ஆங்கிலத்திலும் நன்றாக ஓடின. ஜேம்ஸ் வான் ஹாரர் படங்களுக்குள் வந்து Insidious, The Conjuring ஆகிய படங்களை இயக்குகிறார். அவை உலகெங்கும் ஹிட் ஆகின்றன. Annabelle வெளியாகிறது. It Follows, Lights Out, It comes at Night, The Babadook, Under the Shadow போன்ற வித்தியாசமான பரிசோதனை முயற்சிகள் நடைபெறுகின்றன (இவற்றுக்குப் பல ஆண்டுகள் முன்னர் வெளிவந்த ‘The Blair Witch Project’ படத்தை அவசியம் பாராட்டலாம். மிக வித்தியாசமான பரிசோதனை முயற்சி அது). மேலே சொன்ன படங்களுக்கு அடுத்தடுத்த பாகங்களும் எடுக்கப்படப்போகின்றன (ஒருசில பாகங்கள் ஏற்கெனவே வந்தும்விட்டன).

பயம் என்ற உணர்வு உலகில் இருக்கும்வரை திகில் படங்களுக்கான தேவையும் இருந்துகொண்டுதான் இருக்கும். அதுவரை நாமும் இப்படங்களைப் பார்த்து, கொடூர சொப்பனங்களைக் கண்டுகொண்டுதான் இருக்கப்போகிறோம். தற்காலத்திய நிலையில் திகில் படங்களின் இன்றியமையாத அம்சமாக எது இருக்கிறது என்றால், ஆடியன்ஸை திடீர் என்று திடுக்கிட வைக்கும் தருணங்களே. Jump Scares என்று இந்தத் தருணங்கள் அழைக்கப்படுகின்றன. எத்தனைக்கெத்தனை இந்தத் தருணங்கள் அதிகமோ, அத்தனைக்கத்தனை படங்களின் திகில் தன்மை அதிகரிக்கிறது. காரணம், தற்காலத்தில் உலகின் அத்தனை விதமான திகில் கதைகளும் படமாக எடுக்கப்பட்டுவிட்டன. எனவே புதிதாக எதையும் உருவாக்குவது கடினம். எனவே, காட்சிகளில் கவனம் செலுத்தப்பட்டு, திகில் தருணங்கள் எழுதப்படுகின்றன – உருவாக்கப்படுகின்றன. கூடவே, ஆடியன்ஸும் பல்வேறு படங்களை இணையத்தின் மூலமாகப் பார்த்துப்பார்த்து, கதையையே கண்டுபிடிக்கும் தன்மையும் அதிகரித்து வருகிறது. எனவே வித்தியாசமான ட்விஸ்ட்களும் இப்போதைய தேவை. கூட்டிக்கழித்துப் பார்த்தால், இப்போதைய காலத்தில் திகில் படம் எடுப்பது சாதாரண வேலை இல்லை. நிறைய உழைப்பு தேவைப்படும் ஒரு விஷயம் இது.

தொலைக்காட்சிகளில் பல ஹாரர் வெப் சீரீஸ்கள் இருக்கின்றன. அது ஒரு தனி உலகம். அவைகளைப் பற்றி எழுத இதுபோல் இன்னொரு கட்டுரைதான் தயார் செய்யவேண்டும் என்பதால், அவைகளைப் பற்றி நீங்களே தேடிப்பாருங்கள்.

இயக்குநர் மகேந்திரன் – தமிழ்த் திரைப்படங்களின் அதிசயம்
சென்ற ஆண்டு, இயக்குநர் மகேந்திரன் மறைவுக்குப் பிறகு மின்னம்பலம் இணைய இதழில் எழுதப்பட்ட கட்டுரை இது. நம் தளம் பிரச்னைக்குள்ளாகி, அதன்பின் மீண்டதால் முதல் கட்டுரையாக இது இருந்தால் மகிழ்ச்சி என்பதால் இங்கே கொடுக்கிறேன்.

தங்கப்பதக்கம் திரைப்படத்துக்குக் கதை வசனம் எழுதுகிறார் இயக்குநர் மகேந்திரன். படம் பிரம்மாண்ட வெற்றி அடைகிறது. ஆனால் அதன்பின் ஒரு வருடத்துக்குத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் யாருமே அவரைத் தேடி வரவில்லை. காரணம், தங்கப்பதக்கம் வெற்றி அடைந்தது, சிவாஜி கணேசனின் நடிப்பால்தான் என்று பலரும் எண்ணி, கதை வசனம் எழுதியவரைப் பற்றி முற்றிலும் மறந்துபோனதே. இருப்பினும், தானாகச் சென்று வாய்ப்புக் கேட்க அவரது தன்மானம் அனுமதிக்காததால், தங்கப்பதக்கம் படத்தின் வெற்றிவிழாக் கேடயம், விழாவில் சிவாஜி அணிவித்த தங்கப்பதக்கம் ஆகியவற்றில் இருந்த வெள்ளியை விற்றே குடும்பம் நடத்துகிறார்.

அந்த ஒரு வருட முடிவில் அவரது வீட்டுக்கு எஸ்.எஸ். கருப்பசாமி என்று ஒருவர் வருகிறார்.  ஒரு திரைப்படம் தயாரிப்பதாகவும், அப்படத்தைப் பழம்பெரும் இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு ஆகியவர்கள் இயக்கப்போவதாகவும், அதற்கு மகேந்திரன் தான் கதை வசனம் எழுதவேண்டும் என்றும் கேட்கிறார். மகேந்திரன் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டு எழுதிய அந்தப் படம்  ‘வாழ்ந்து காட்டுகிறேன்’. படம் நன்றாக ஓடுகிறது. அதன்பின்னர் கிட்டத்தட்ட 25 படங்கள் கதை, வசனம், திரைக்கதை என்று எழுதிக் குவித்ததாகவே சொல்கிறார் மகேந்திரன்.

அந்தச் சம்பவம் பற்றி எழுதும்போது, ஒரு வருடம் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தாலும், எஸ்.எஸ். கருப்பசாமி வந்து கதவைத் தட்டியபோது சும்மா தூங்கிக் கொண்டிருக்காமல், அப்போதும் தயார் நிலையில் இருந்ததால்தான் அந்தப் பட வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லி, வாய்ப்பு என்பது எப்போது வந்தாலும், தயார் நிலையில் இருந்தே ஆகவேண்டியது நமது கடமை என்று தனது ‘சினிமாவும் நானும்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார் மிஸ்டர் மகேந்திரன் (அவர் எல்லாரையும் அப்படியே அழைப்பது வழக்கம்).

தமிழ் சினிமாவில் மகேந்திரனின் பங்கு பற்றி இந்தச் சில நாட்களில் (2019ல் அவரது மறைவின்போது எழுதியது) பல கட்டுரைகள் எழுதப்பட்டாயிற்று. அவரது முக்கியத்துவம், அவரது கதை சொல்லும் விதம், அவர் எடுத்த படங்களின் தாக்கம் என்று எத்தனை எழுதினாலும் போதாது. காரணம், அவரே சொல்லியபடி, எப்போதும் தயார் நிலையிலேயே இருந்திருக்கிறார் மகேந்திரன். அவரை சில மாதங்கள் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு சென்னையில் பாஃப்டா திரைப்படக் கல்லூரியில் கிடைத்தது.  டைரக்‌ஷன் துறைக்கு அவர் HOD. நான் திரைக்கதைத் துறையில் டைரக்டராகச் சேர்ந்திருந்தேன். என் துறைக்குத் தலைவர், திரு. பாக்யராஜ் அவர்கள். மாணவர்களுக்கு அற்புதமாக வகுப்புகள் எடுப்பார் மகேந்திரன். கூடவே, நூலகத்தில், தன்னைச் சுற்றிலும் மாணவர்களை வைத்துக்கொண்டு, புத்தகங்களின் அருமை பற்றிப் பலசமயங்கள் பேசியிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அவரை அங்கே அணுகிப் பேச முடியும். சிரித்த முகத்தோடு பொறுமையாகவும், இனிமையாகவும் அவருக்கே உரிய வேகமான உடல்மொழியோடு பேசி, நமது சந்தேகங்களைத் தெளிவு செய்வது அவரது வழக்கம். எப்போது பேசினாலும், ஏதேனும் ஒரு புதிய படமோ புத்தகமோ பற்றிச் சொல்லி, நம்மையும் பார்க்கும்படி தூண்டுவார்.  சிறுகதைகள், நாவல்கள், உலகப் படங்கள் என்று பல புதிய விஷயங்களைச் சொல்லுவார். பாஃப்டாவின் நூலகத்தில் அவரது பரிந்துரையின் கீழ் பல புத்தகங்களும் படங்களும் வாங்கி வைக்கப்பட்டன. அவருடன் பேசும்போதெல்லாம், இத்தனை எளிமையாக நம்மிடம் பேசும் இவரா உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, மெட்டி, நண்டு, பூட்டாத பூட்டுக்கள் போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய பிரம்மாண்ட இயக்குநர் மகேந்திரன்? என்ற சந்தேகம் வராமல் இருக்காது. அவரது நெருக்கம் அப்படிப்பட்டது.

மகேந்திரன், அடிப்படையில் ஒரு விமர்சகராகவே தனது வாழ்க்கையைத் துவங்கியவர். நாடோடி மன்னன் வெற்றிவிழாவில் கலந்துகொள்ள 1958ல் மதுரை வந்த எம்.ஜி.ஆர், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் அசோசியேஷனின் திறப்பு விழாவுக்காக வருகைதரச் சம்மதிக்கிறார். அந்த விழாவில், தமிழ் சினிமா பற்றி மூன்றே நிமிடங்கள் பேசும் வாய்ப்பு மாணவராக இருந்த மகேந்திரனுக்குத் தரப்பட, தனது பேச்சுத்திறமையால் மொத்தம் 45 நிமிடங்கள் பேசி, கரகோஷம் வாங்கி, எம்.ஜி.ஆரிடம் பாராட்டுப் பெறுகிறார். அதன்பின் கல்லூரி முடித்து, சென்னையில் சட்டக் கல்லூரியில் சேர்கிறார். அவருக்குப் பணம் அனுப்பிப் படிக்கவைத்த அத்தை திடீரென ஏழே மாதங்களில், பணம் இல்லை என்று சொல்லிவிட, வேறு வழியில்லாமல் ஊருக்கே கிளம்பத் தயாராகிறார் மகேந்திரன். சட்டக் கல்லூரியை விட்டு வெளியே வருகையில், காரைக்குடியைச் சேர்ந்த கண்ணப்ப வள்ளியப்பன் என்பவர் எதிரே வந்து, மகேந்திரனிடம் பேசுகிறார். இருவருக்கும் முன்கூட்டிய பழக்கம் உண்டு. மகேந்திரன் அன்று ஊருக்குத் திரும்ப முடிவு செய்திருப்பதை அறிந்து, ‘இன முழக்கம்’ என்ற பெயரில் தான் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கப்போவதாகவும், எம்.ஜி.ஆர் முன்னாலேயே கல்லூரியில் மிகச்சிறப்பாகப் பேசியதால், பத்திரிக்கையில் சினிமா விமர்சனம் எழுதச்சொல்லி, உதவி ஆசிரியர் வேலையையும் கொடுக்கிறார். மகேந்திரன், மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறார்.

அந்தப் பத்திரிக்கையில்தான் விமர்சனங்கள் எழுதுகிறார் மகேந்திரன். இன முழக்கம் என்பது தி.மு.கவைச் சேர்ந்த பத்திரிக்கை. தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் வேலை செய்த படங்களையும் கூட விட்டுவைக்காமல் மிகக்கடுமையாகவும் கறாராகவும் அவரது விமர்சனங்கள் இருந்ததால் ஆசிரியர் சி.பி. சிற்றரசுக்கு நெருக்கடி வரும் அளவு எழுதினார் மகேந்திரன். அப்போது ஒரு முறை எம்.ஜி.ஆர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க விரும்ப, இன முழக்கத்தின் சார்பாக எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்று ஒரு ஓரமாக நிற்கும் மகேந்திரனை சில வருடங்கள் கழித்துக் கச்சிதமாக அடையாளம் கண்டுபிடிக்கிறார் எம்.ஜி.ஆர். கல்லூரியில் தன்முன் அவர் பேசியதை நினைவுகூர்ந்து, மறுநாள் லாயிட்ஸ் ரோடு வீட்டுக்கு வரச்சொல்லி, ஒரு நல்ல வேலை கொடுக்கப்போவதாகச் சொல்கிறார். உதவி ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, மறுநாள் காலை எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் செல்கிறார் மகேந்திரன். அங்கே, முதல் மாடியில் ஒரு அறையைக் கொடுத்து, பொன்னியின் செல்வன் புத்தகத்தின் ஐந்து பாகங்களையும் கொண்டுவந்து கொடுத்து, அந்த நாவலுக்குத் திரைக்கதை எழுதச் சொல்கிறார் எம்.ஜி.ஆர். திரைக்கதை என்றால் என்ன என்றே தெரியாத மகேந்திரன், எழுதும் வேலையை ஆரம்பிக்கிறார்.

மூன்று மாதங்களில் திரைக்கதையை முடிக்கிறார். எம்.ஜி.ஆரை ‘திருடாதே’ படத்தின் படப்பிடிப்பில் சந்தித்து, திரைக்கதையைக் கொடுக்கிறார். அப்போதுதான், வீட்டில் இருந்து மகேந்திரனுக்கு எந்தப் பணமும் வரவில்லை; மூன்று மாதங்களாக, தினமும் ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டு, ஒரு நண்பனின் உதவியால் சமாளித்து மகேந்திரன் வாழ்ந்ததை எம்.ஜி.ஆர் அறிகிறார். உடனடியாகக் கண் கலங்கி, தன்னைத்தானே திட்டிக்கொண்டு, மறுநாள் ஆயிரம் ரூபாயை அளிக்கிறார்.

இதன்பின் எம்.ஜி.ஆருக்கு அனாதைகள் என்று ஒரு நாடகம் எழுதித் தருகிறார் மகேந்திரன். அதைப் படமாக எடுக்க விரும்பி, மூன்று நாள் படப்பிடிப்பும் நடக்கிறது. ஆனால் ஃபைனான்ஸியர் இறந்ததால் நின்றுவிடுகிறது (அப்படம் வாழ்வே வா – இயக்குநர் : டி. யோகானந்த்).

இதன்பின்னர் காஞ்சித் தலைவன் (சிவகாமியின் சபதத்தைத் தழுவிய படம்) படத்தில் உதவி இயக்குநராக மகேந்திரனை சேர்த்துவிடுகிறார் எம்.ஜி.ஆர். அப்படம் முடிந்ததும், எம்.ஜி.ஆருடனேயே மகேந்திரன் இருந்ததால் அறிமுகமான கே. பாலன், மகேந்திரனிடம் கதை கேட்க, அவர் சொல்லிய கதை பிடித்துப்போய் நாம் மூவர் என்று படம் ஒன்று தயாரிக்கிறார். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் ஆகியவர்கள் நடிக்க, அப்படம் வெற்றிபெறுகிறது. இதுதான் மகேந்திரனின் முதல் படம். கதையாசிரியராக.  இதற்குப் பின்னர் வரிசையாகக் கதைகளும், திரைக்கதைகளும், வசனங்களும் எழுதுகிறார். ஆனால் அவருக்கு அப்போது இருந்த ஒரே ஆதங்கம் – எதைப் பிடிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுதினாரோ, அதேபோன்ற படங்களையே எழுத வேண்டியிருக்கிறதே என்பதுதான். அந்த ஆதங்கம் சிறுகச்சிறுக வளர்ந்து, ஒரு தருணத்தில் துக்ளக் பத்திரிக்கையில் சோவிடம் வேலை செய்வதில் நிற்கிறது. அதன்பின்னர் வேணு செட்டியார் தேடி வந்து, ஒரு படம் இயக்கக் கேட்டுக்கொள்ள, நாவல்களில் இருந்துதான் படம் எடுப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று மகேந்திரன் எடுத்த படம்தான் முள்ளும் மலரும்.

மகேந்திரனின் வாழ்க்கையே முற்றிலும் தற்செயல்களால் ஆனது. சினிமாவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக் கூடப் பார்க்காத நபராகவே கல்லூரியில் இருந்தவர், பின் சென்னையில் சட்டம் படிக்க வந்தது, அது பாதியில் நின்று, ஊருக்குக் கிளம்பும் நேரத்தில் இன முழக்கத்தில் விமர்சனங்கள் எழுதும் வேலை கிடைத்தது, பின் எம்.ஜி.ஆர் இவரைத் தற்செயலாகப் பார்க்க, பொன்னியின் செல்வன் எழுதியது, அதன்பின் அதன்மூலமே சினிமாவில் கதை எழுதும் வேலை, பின்னர் துக்ளக்கில் வேலை, அதன்பின்னர் அந்த அலுவலகத்தில் பார்த்த ஒரு ஜான் வேய்னின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தங்கப்பதக்கம் உருவானது, அதன்பின் ஒருவருடம் யாருமே அழைக்காமல், பின்னர் ஒரு படம் கிடைத்தது, அதன்பின்னர் பல படங்கள் கதை வசனம் திரைக்கதை எழுதியது, பின்னர் முள்ளும் மலரும் இயக்கியது என்று பல தற்செயல்கள். இறுதிவரை ஒரு திட்டம் போட்டு ப்ளான் செய்யாமல், வாழ்க்கையின் தற்செயல்களையே எதிர்கொண்டவர் மகேந்திரன். இதனை அவரது புத்தகத்தில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். அப்படியே, ‘என்னைப்போல் இருக்கவேண்டாம். வாழ்க்கையை ஒழுங்காகத் திட்டமிட்டு வாழுங்கள்’ என்றும் நமக்குச் சொல்லியும் இருக்கிறார்.

மகேந்திரனின் படங்களில் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி ஆகிய படங்களைப் பற்றிப் பலரும் விரிவாகவே எழுதியாயிற்று. எனவே, அவரது பிற படங்கள் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம். அவரது பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு, மெட்டி போன்ற, தற்காலத்தில் பெரிதே மறக்கப்பட்டுவிட்ட படங்கள் பற்றிக் கவனிக்கலாம்.

உதிரிப்பூக்கள் பெருவெற்றி அடைந்து, விருதுகளைக் குவித்தபின்னர், 1980ல் மகேந்திரன் இயக்கிய படம் ‘பூட்டாத பூட்டுக்கள்’. எழுத்தாளர் பொன்னீலனின் ‘உறவுகள்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் (முள்ளும் மலரும் – உமா சந்திரன், உதிரிப்பூக்கள் – புதுமைப்பித்தனின் சிற்றன்னை ஆகியவற்றைத் தொடர்ந்து, அவரது மூன்றாவது படமும் இப்படியே). பூட்டாத பூட்டுக்கள், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் ஆகிய படங்களை விடவும் சற்றே தீவிரமான படம். இப்போது art house என்று சொல்லப்படும் படங்களின் தன்மையைக் கொண்டது. குழந்தை இல்லாத கணவன் மனைவி, மனைவி இன்னொருவரிடம் உறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வது, மனைவியை ஊரே வெறுப்பது போன்றவற்றைக் கையாண்ட படம். நாயகி, தனக்குப் பிடித்த நபருடன் இருக்க விரும்பி ஊரை விட்டே ஓடி அவனிடம் செல்ல, அவன் இவளை அவமானப்படுத்திவிட, திரும்பி வரும் மனைவியைக் கணவன் புரிந்துகொள்வான். இறுதியில் அந்த ஊரை விட்டே அவர்கள் சென்றுவிடுவார்கள்.  ஆனால், படம் இத்தனை எளிமையானது அல்ல. இதே படத்தில், இன்னொரு பெண், என்ன நடந்தாலும் பார்வையில்லாத தன் கணவனை விட்டுக்கொடுக்காமல் இருப்பாள். அவள் கதைக்கும் நாயகியின் கதைக்கும் இருக்கும் மாறுபாடுகளை அருமையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் மகேந்திரன் காட்டி இருப்பார். குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், பக்கம்பக்கமாக வசனங்கள் இப்படத்தில் இருக்கவே இருக்காது. ஓரிரு வரிகள் மூலமாகவே கதையின் முக்கியமான சம்பவங்கள் நகரும். படத்தில் நடித்தது மலையாள நடிகர் ஜெயன், மற்றும் சாருலதா. இப்படத்தைத் தற்போது நீங்கள் பார்க்க நேர்ந்தால், முக்கியமான காட்சிகளில் இசை, மௌனம், மிகக்குறைவான வசனங்கள் எப்படிக் கையாளப்பட்டிருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். அவசியம் பூட்டாத பூட்டுக்கள் ஒரு மிகச்சிறந்த படமே. ஆனால் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போல, அக்காலகட்டத்துக்குப் பாதுகாப்பான கரு இல்லாமல், இப்போதுமே சற்றே பிரச்னைக்குள்ளாகும் கரு ஒன்றை எடுத்துப் படமாக்கியதால், ஆடியன்ஸின் ஒவ்வாமை காரணமாகப் படம் பெரிதும் பேசப்படவில்லை.

இதற்குப் பிறகு ஜானி, அதன்பின் அதே 1980ல் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தை இயக்கினார் மகேந்திரன். மணி ரத்னத்தின் மௌன ராகத்துக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக அமைந்தது இந்தப் படம்தான். 28வது தேசிய விருது விழாவில் மூன்று விருதுகளை வாங்கிய படம் இது (சிறந்த தமிழ்ப்படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிப்பதிவு). இந்தப் படமும் உறவுச் சிக்கல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் என்றாலும், இளைய தலைமுறையின் உறவுப் பிரச்னைகளை வைத்து எடுக்கப்பட்டு, ஒரு கல்ட் க்ளாஸிக் என்றே பேசப்பட்ட படமாக ஆனது. இதன் பாடல்கள் இன்றும் கேட்கப்படுகின்றன (இளையராஜா). ஒளிப்பதிவில் இந்தப் படம் அடைந்த உயரங்கள் அற்புதமானவை (அசோக் குமார்). சுஹாஸினி நடித்த முதல் படம். இந்தப் படத்தையும் மௌன ராகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு இன்ஸ்பிரேஷனில் இருந்து முற்றிலும் ஒரிஜினலாக ஒரு படம் எப்படி எடுப்பது என்பதற்கு இது ஒரு நல்ல பயிற்சியாக அமையும்.

இதன்பின் 1981ல் மகேந்திரன் இயக்கிய படம் ‘நண்டு’. இது எழுத்தாளர் சிவசங்கரியின் புத்தகம். இப்படத்தில், அலஹாபாத்தில் பெரிய பணக்கார வம்சத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தந்தை திருமணம் செய்துகொள்ளச்சொல்லி வற்புறுத்தும் பெண்ணைப் பிடிக்காமல், தந்தை வீட்டை விட்டுப் போகச் சொல்வதால் சென்னை வருகிறான். அவனுக்குத் துவக்கத்தில் இருந்தே ஆஸ்த்மா இருக்கிறது. சென்னையில் ஒரு பெண்ணை சந்திக்கிறான். பின்னர் வீடு தேடும்போது, அதே பெண் குடியிருக்கும் இடத்துக்கே தற்செயலாக வந்து தங்குகிறான். இந்தப் பெண்ணுக்கு ஒரு குடும்பம். அவள் குடும்பத்தில் நிகழும் பிரச்னைகள், நாயகனைக் காதலிக்கும் வீட்டு ஓனரின் பெண், நாயகன் ராம்குமாருக்கு ஆஸ்த்மா என்று தெரிந்து அவனுக்கு உதவும் நாயகி, வீடு தேடி அலைவதில் இருக்கும் பிரச்னைகள், குடித்தனக்காரர்கள், அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகள், வாடகை வீட்டில் போடப்படும் நிபந்தனைகள் என்று கதை நகருகிறது. பின்னர் ராம்குமார், அவனுக்குப் பிடித்த பெண்ணான நாயகி சீதாவையே திருமணம் செய்துகொள்கிறான். அவன் திருமணத்தை அவனது அலஹாபாத் தந்தை எதிர்க்கிறார். குழந்தை பிறக்கிறது. மனைவியோடு குழந்தையைப் பெற்றோருக்குக் காட்டச்செல்லும் நாயகன் மறுபடி அவமானப்படுகிறான். இதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படம்.  இப்படத்திலும் இசை, பாடல்கள், மௌனம் ஆகியவை முக்கியமாகக் காட்டப்பட்டிருக்கும். ‘அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா’ பாடல் நினைவிருக்கிறதா? தனது ஊரான அலஹாபாத்தை தனது மனைவிக்கும் மகனுக்கும் நாயகன் காட்டும் பாடல் இது. கூடவே, கஸல் பாடகர் புபீந்தர் சிங் ஹிந்தியில் பாடும் ‘கைஸே கஹூ(ன்) குச் கெஹ்னா சக்ஹூ(ன்) பாடலும் கவனிக்கத்தக்கது. அவசியம் நண்டு படமும் முக்கியமானதொரு பிரச்னையைப் பேசும் மகேந்திரன் படமே. ஒளிப்பதிவு செய்தவர் அசோக் குமார்.

இதேபோல் இதற்கு அடுத்து மகேந்திரன் இயக்கிய ஒரு மென்சோகம் நிரம்பிய படமே ‘மெட்டி’. ராதிகா, வடிவுக்கரசி, சரத்பாபு, ராஜேஷ் ஆகியவர்கள் நடித்த படம். ஒரு குடும்பம், அந்தக் குடும்பத்துக்கு வரும் மகன் (தாயை விட்டு ஓடிப்போன கணவனின் மகன்), அவனுக்கும் அவனது அம்மாவுக்கும், இரண்டு சகோதரிகளுக்கும் நடக்கும் உணர்வுபூர்வமான காட்சிகள், அதன்பின் இரண்டு மகள்களும் திருமணம் பற்றி முடிவெடுப்பது, அதில் நிகழும் பிரச்னைகள், பின்னர் இவையெல்லாம் இறுதியில் எப்படி முடிக்கப்படுகின்றன என்று காட்டியிருப்பார் மகேந்திரன். ‘மெட்டி’ என்பது இப்படத்தின் முக்கியமான பங்கும் வகிக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸே ஒரு மெட்டியை வைத்தே எடுக்கப்பட்டிருக்கும். இளையராஜாவின் இசையில், ‘மெட்டி ஒலி காற்றோடு’ பாடல் இன்றும் மறக்கமுடியாததாக இருக்கிறதுதானே?  இப்படத்துக்கும் அசோக் குமாரே ஒளிப்பதிவு. எடிட்டிங், லெனின் செய்தார்.

இதன்பின் மகேந்திரன் இயக்கிய கை கொடுக்கும் கையில் ரஜினிகாந்த் மறுபடி நடித்தார். கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகல் கன்னடத்தில் இயக்கிய கதா சங்கமா என்ற படம், இப்போதைய குறும்படங்கள் anthologyக்களாக வருவதற்கு முன்னோடி. அதில் வரும் ஒரு அரை மணி நேரப் படமான முனித்தாயி என்ற கதையே, ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, முழுநீளப் படமாக மகேந்திரனால் எழுதி இயக்கப்பட்டது. ஆனால் இக்காலகட்டத்தில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறியிருந்ததால், மகேந்திரன் கதையில் இரண்டு மாற்றங்களைச் செய்கிறார். ஆனால் பின்னால் அந்த மாற்றங்கள் வேண்டாம்; உள்ளது உள்ளபடியே எடுக்கப்படவேண்டும் என்ற பிரச்னை வர, ‘படம் உறுதியாகவே தோல்வி அடையும்’ என்று சொல்லிவிட்டே இயக்குகிறார். படமும் தோல்வி அடைகிறது.

இதன்பின்னர் கண்னுக்கு மை எழுது என்ற படத்தை இயக்குகையில், சில தனிப்பட்ட நிகழ்வுகளால் முற்றிலும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அந்த மன உளைச்சலாலேயே படத்தில் கவனம் செலுத்த முடியாமல், படம் தோல்வி அடைந்ததாகவும் மகேந்திரனே அவரது புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். இதன்பின் சாசனம் படத்தை எடுத்தபின் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் பின்னர் வெளியே கொண்டுவந்தார். அந்தப் படம் சில மாதங்கள் முன்னர் வரை எங்கிருக்கிறது என்பதே தெரியாமல், இப்போது கட்டணம் வாங்கிக்கொண்டு படங்களை ஆன்லைனில் பார்க்கும் ஒரு தளத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது.

தமிழுக்கு எப்படி ஶ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா ஆகியோர் தங்கள் பாணியில் வித்தியாசமான படங்களைக் கொடுத்தார்களோ, அப்படி மகேந்திரன், தனக்கே உரிய பாணியில், offbeat படங்களையே தொடர்ந்து கொடுத்தார். பாசு பட்டாச்சார்யா, பாசு சாட்டர்ஜி, ரிஷிகேஷ் முகர்ஜீ ஆகியோர்களின் கதை சொல்லும் பாணி அது. சத்யஜித் ரேவின் ரசிகராக விளங்கிய மகேந்திரன், தான் இயக்கிய படங்களை அப்படிக் கொண்டுவந்ததில் ஆச்சரியம் இல்லைதானே? மகேந்திரனின் இன்னொரு சிறப்பம்சம், தன் படங்களை விழாக்களுக்கு அனுப்ப அவர் ஆர்வமே காட்டியதில்லை என்பது. இதனாலேயே ஒளிப்பதிவாளர் அசோக் குமாருக்குக் கிடைக்கவிருந்த இன்னும் பல விருதுகள் கிடைக்காமல் போயிருக்கலாம் என்று மகேந்திரன் வருத்தப்பட்டிருக்கிறார். இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்பவை ஒரு படத்தை எப்படியெல்லாம் பல படிகள் மேலேற்றுகின்றன என்பதற்கு மகேந்திரனின் படங்கள் எடுத்துக்காட்டுகள். கூடவே, இலக்கிய வாசிப்பிலும் அவர் சிறந்தவர். புத்தகங்களை மையமாக வைத்தே படம் இயக்கவேண்டும் என்று உறுதியான கொள்கை கொண்டிருந்தவர். இவையெல்லாவற்றுக்கும் மேலாக, மிகச்சிறந்த, அன்பான, மென்மையான மனிதர். அவருடன் பழகிய யாருக்குமே அவருடன் மீண்டும் மீண்டும் பேசவேண்டும் என்ற எண்ணமே தோன்றும்.

தமிழ் சினிமாவின் முன்னோடிகள் என்ற இடத்தில் மகேந்திரனுக்கு ஒரு அழகான இடம் உண்டு. இனிமையான இசை, அன்பான, மென்மையான உறவுகள் சூழ்ந்த இடம் அது. அவரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் உலவும் அந்த அற்புதமான வெளியில் தற்போது மகேந்திரனும் கலந்துவிட்டார். இனி தமிழில் மட்டுமல்லாமல், படங்கள் உருவாக்கும் ஒவ்வொருவரும் மகேந்திரன் சொன்னவற்றையும் செய்துகாட்டியதையும் பின்பற்றினாலே தமிழ்ப் படங்கள் கட்டாயம் வேறொரு தளத்துக்குச் செல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.  அவரது இடம் யாராலும் நிரப்ப முடியாமல் அப்படியே இருக்கிறது. இன்னும் இருக்கும்.

Yellowstone (Series) – Review
காட்ஃபாதர் படத்தை அப்படியே கொண்டுவந்து தற்காலத்தில், அமெரிக்காவின் மாண்டானாவில் நடக்கும் ஒரு கதையாக மாற்றினால் எப்படி இருக்கும்? அதில் வரும் காட்ஃபாதர் டான் கார்லியோனி, அவரது மூத்த மகன் சான்னி கார்லியோனி, அவரது இரண்டாவது மகன் ஃப்ரெடோ கார்லியோனி, மூன்றாவது மகன் மைக்கேல் கார்லியோனி மற்றும் காட்ஃபாதரின் தளபதியாக வரும் டாம் ஹேகன் ஆகியோர்களை,  கதை நடக்கும் பழைய காலகட்டத்தில் இருந்து அப்படியே கொண்டுவந்து 2018ல் அமெரிக்காவின் மிகப்பெரிய பண்ணை(Ranch)யில் விட்டுவிட்டு, காட்ஃபாதரை அந்தப் பண்ணையின் முதலாளி ஆக்கிவிட்டால்?

இதுதான் யெல்லோஸ்டோன். மாண்டனாவின் போஸ்மேன் பிராந்தியத்தில், அமெரிக்காவின் மிகப்பெரிய பண்ணை வைத்திருக்கும் ஜான் டட்டனுக்கு, ஒருசில எதிரிகளால் என்ன விதமான எதிர்ப்பு வருகிறது? அந்த எதிர்ப்பை ஜான் டட்டன் எப்படி சமாளிக்கிறார் என்பதே இந்த சீரீஸ் சொல்லும் கதை.

உங்களுக்கு டெய்லர் ஷெரிடன் பற்றித் தெரிந்திருக்கலாம். ஹெல் ஆர் ஹை வாட்டர் படத்தின் திரைக்கதை எழுத்தாளர். இந்தப் படம் பல விருதுகளில் பங்கு கொண்டது. அட்டகாசமான வெஸ்டர்ன் படம். இவரேதான் சிகாரியோ படத்தையும் எழுதினார். இவர் ஒரு நடிகரும் கூட. வெஸ்டர்ன் பின்னணி அழுத்தமாக இருக்கும் ஆள். யெல்லோஸ்டோனை எழுதி இயக்கியிருப்பவர் இவர்தான். யெல்லோஸ்டோனில் நடித்திருப்பவர், பழம்பெரும் நடிகர் கெவின் காஸ்ட்னர். க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்குச் சமமாகப் பல வெஸ்டர்ன் படங்களில் நடித்து, எழுதி, இயக்கியிருப்பவர்.  மிகப் பிரபலமான நடிகர். இவர்தான் ஜான் டட்டன்.

இந்த சீரீஸில், மாண்டனாவில் வாழும் செவ்விந்தியர்கள் காட்டப்படுகிறார்கள். பல நூறு வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டிருக்கும் பூர்வ குடிகள் இவர்கள்தானே? அமெரிக்கோ வெஸ்புச்சி, கொலம்பஸ் போன்றவர்கள் அமெரிக்காவைக் கண்டுபிடித்தனர் என்பது வெற்றியடைந்த இவர்கள் சொல்லும் வரலாறு. ஆனால் இவர்கள் போன்றவர்கள் வந்தபின் தான், அங்கு வாழ்ந்துகொண்டிருந்த செவ்விந்தியர்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். பூர்வகாலத்தில் இருந்து சுதந்திரமாக வாழ்ந்து திரிந்த செவ்விந்தியர்கள, வெள்ளையர்கள் வந்தபிறகுதான் அடிமைப்படுத்தப்பட்டு, இன்றுவரை ரிசர்வேஷன்கள் என்று சொல்லப்படும் குடியிருப்புப் பகுதிகளில் வாழ்ஙின்றனர். இதை நாம் மறக்க இயலாது.

இப்படிப்பட்ட செவ்விந்தியர்களின் புதிய தலைவராக, தாமஸ் ரெய்ன்வாட்டர் என்பவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு, பரந்துவிரிந்த பூர்வநிலமான அமெரிக்காவில் இருக்கும் வந்தேறி வெள்ளையர்களைத் துரத்திவிட்டு, அமெரிக்கா முழுமையும் செவ்விந்தியர்கள் பழையபடி நிம்மதியாக வாழவேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது. மாண்டனாவில் இருக்கும் செவ்விந்தியர்களின் குடியிருப்புக்குத் தலைவரானதுமே, பக்கத்தில் உள்ள ஜான் டட்டனின் பண்ணையைத்தான் குறிவைக்கிறார். அமெரிக்காவின் மிகப்பெரிய பண்ணையாக அது இருப்பதால், முதலில் அதை விலைக்கு வாங்கி, ஜான் டட்டனைத் துரத்திவிட்டு, அங்கே செவ்விந்தியர்களை வாழ விட்டு, அதன்பின் ஒவ்வொரு நிலமாக வாங்கவேண்டும் என்பது அவரது எண்ணம்.

அதேசமயம், டான் ஜென்கின்ஸ் என்ற மிகப்பெரிய பணக்காரர் ஒருவர், மாண்டனாவில் ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டல் மற்றும் ஒரு சூதாட்ட விடுதி (கஸீனோ) கட்டவேண்டும் என்று அங்கே வருகிறார். அவரிடம் இல்லாத பணம் இல்லை. அரசியல் செல்வாக்கும் மிகுந்தவர்.  ஜான் டட்டனின் நிலத்துக்குப் பக்கத்து நிலத்தில் ஹோட்டல் கட்டவேண்டும் என்று நினைக்கிறார்.

இப்போது, ஜான் டட்டனுக்கு இயல்பாகவே இரண்டு எதிரிகள் உருவாகின்றனர். ஒருபக்கம் லட்சிய வெறியுடன் இருக்கும் செவ்விந்தியத் தலைவர் தாமஸ் ரெயின்வாட்டர். மறுபக்கம் அகந்தையுடன் வரும் டான் ஜென்கின்ஸ்.

ஜான் டட்டன் இந்த இருவரையும் கவனிக்கிறார். அவருடன், அவரது லவதுகையாக இருப்பது ரிப். ஜான் டட்டன் காப்பாற்றிக்கொண்டு வந்த ஒரு பையன். இப்போது அவரது மூத்த மகன் போல வளர்ந்து, ஒரு தளபதியாக நிற்கிறான். இதுதவிர, ஜான் டட்டனின் மகன் கேய்ஸீ, ராணுவத்தில் பணிபுரிந்துவிட்டு, தந்தையின் ஆளுமை பிடிக்காமல் ஒரு செவ்விந்தியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தனியாக வாழ்கிறான். தந்தை இரக்கமில்லாமல் எடுக்கும் பல முடிவுகள் அவனுக்குப் பிடிக்காததே காரணம். டட்டனுடனே வாழும் இன்னொரு மகன் ஜாமி டட்டன், ஒரு அட்டர்னி (வக்கீல்).  தந்தையின் நிழலைத் தவிற வேறொன்றும் தெரியாதவன். காட்ஃபாதரின் ஃப்ரெடோ போன்றவன். ஜான் டட்டனுக்கு ஒரு மகள். ரூத். இவள் ஒரு இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தில் பணி புரிகிறாள். தந்தையைப் போலவே அறிவு மிகுந்தவள். சாமர்த்தியசாலி. ஆனால் சிறுவயதில் நடந்த ஒரு சோகத்தால், எப்போதும் போதையிலேயே உழல்பவள்.

இதுதான் ஜான் டட்டனின் படை. இவர்களை வைத்துக்கொண்டு, எப்படி எதிரிகளை சமாளிக்கிறார் என்பது, தமிழில் தேவர் மகன் போன்று விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டிருக்கும் சீரீஸ் இது. இதுவரை இரண்டு சீசன்கள் வந்திருக்கின்றன. இன்னும் ஒரு புதிய சீசன், இன்னும் இரண்டு மாதங்களில் வர இருக்கிறது. தவறாமல் பாருங்கள்.

இதைப்பற்றி விகடனில் நான் பேசியிருக்கும் வீடியோ இங்கே.

Psycho (2019) – Tamil
தான் ஒரு ஆட்டெர் (உண்மையில் அவர் ஒரு flawed auteur தான்) என்று ஒருவேளை மிஷ்கின் நினைத்தால் அது அவருக்கு ஆபத்து. அவரை அது இழுத்துக் கீழே தள்ளிவிடும். மாறாக, இயல்பாகவே மிஷ்கின் இருந்துகொண்டிருந்தால் தமிழ் சினிமாவுக்கு அதைவிட நல்லது வேறு எதுவும் இல்லை. தமிழின் குறிப்பிடத்தகுந்த இயக்குநராக மிஷ்கின் மாறிப் பல்லாண்டுகள் ஆகின்றன. அவரால்மட்டுமே சிறப்பாக எடுக்கப்படக்கூடிய கருக்களை எளிதில் இனம்கண்டுகொண்டு, தனக்கே உரிய பாணியில் படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார். என்னளவில், உலகத்தின் பல்வேறு பகுதியில் வாழக்கூடிய மக்களும் ரசித்துப் பார்க்கும் அளவு சிறப்பான படங்களைத் தமிழில் இருந்து எடுக்கக்கூடிய ஒரே இயக்குநராக நான் மிஷ்கினையே சொல்வேன். அவருக்கு அந்தத் திறனும், ரசனையும், ஆழமான அனுபவ அறிவும் உண்டு என்றே கருதுகிறேன். அப்படிச் சில படங்களை மிஷ்கின் எடுக்கக்கூடிய காலகட்டம் வந்துவிட்டது என்றும் நினைக்கிறேன். உலகத் திரை அரங்கில் தமிழகத்தை அடையாளம் காட்டக்கூடிய அப்படிப்பட்ட சிறந்த மிஷ்கினின் படங்களுக்காகக் காத்திருக்கிறேன் – மிஷ்கின் பற்றிய கட்டுரை. karundhel.com. 2017 May.

தமிழில் வந்துகொண்டிருப்பவை, மிகப்பெரும்பாலும் கமர்ஷியல் படங்கள்தான். வணிகத்திரைப்படங்கள் என்று அழைக்கப்படும் இவைகள், கலைப்படங்கள் என்று அழைக்கப்படும் ஆர்ட் படங்களில் இருந்து பெரும்பாலும் வேறுபட்டிருப்பவை. இவற்றுக்கு இடையே இருக்கும் வித்தியாசங்கள் உங்களுக்கே தெரியும். கமர்ஷியல் – மசாலாப் படங்கள் பற்றி இன்னும் ஆழமான எனது கட்டுரையை இங்கே படிக்கலாம். படித்துவிட்டு வாருங்கள். பின்னர் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கலாம்.

அதேசமயம், தமிழின் பிரச்னை என்ன என்றால், ஒரு கமர்ஷியல் இயக்குநர் சற்றே கலைப்படங்களை நினைவுபடுத்தும்படியான காட்சிகள் வைத்துவிட்டால், உடனே அவர்களை இந்தியாவின் கலைப்பட இயக்குநர்களின் பட்டியலில் வைத்துவிடுவதுதான். பாலசந்தர், விஸ்வநாத், மணி ரத்னம் என்று இந்தப் பட்டியலை நாம் எழுதமுடியும். அதில் மிஷ்கினும் தன்னையே சேர்த்துக்கொண்டிருக்கிறார் என்று இந்தப் படம் பார்த்ததும் தோன்றியது.

மிஷ்கின் பற்றி ஏற்கெனவே பலமுறை விபரமாகவும் எழுதியிருக்கிறேன். மிஷ்கினின் படங்கள் – ஒரு விரிவான விமர்சனம்.

இதையும் ஒருமுறை படித்துப் பாருங்கள். அப்போது இந்த சைக்கோ விமர்சனத்தில் மிஷ்கின் பற்றி எழுதப்பட்டிருக்கும் கருத்துகள் இன்னும் தெளிவாகப் புரியலாம்.

Spoiler alert.

இப்போது சைக்கோ படத்தை எடுத்துக்கொள்வோம். சைக்கோவின் கரு என்ன? ஒரு சைக்கோ கொலைகாரன், வரிசையாகக் கொலைகள் செய்கிறான். போலீஸ்துறையில் அவனைப் பிடிக்கமுடியாமல் மண்டையைப் பிய்த்துக்கொள்ளும்போது, பார்வையற்ற ஒரு இளைஞனும், கைகால்கள் இயங்காமல் இருக்கும் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியான பெண்ணும் இணைந்து அவனைக் கண்டுபிடிக்கிறார்கள். இப்போது, சைக்கோ பற்றி இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம். சைக்கோ படம் ஒரு கலைப்படமா? அல்லது கமர்ஷியல் படமா? அவசியம் அது கமர்ஷியல் படம்தான் இல்லையா? அப்படியென்றால், ஒரு கமர்ஷியல் படத்தைக் கலைப்படம் போல எடுக்கலாமா? எடுக்கலாம். அதற்கென்று எந்த விதிமுறையும் இல்லை. கலைப்படம் என்பது, ஆழ்ந்த அழகியல் கூறுகளுடன், இயக்குநரின் மனதில் தோய்ந்த கருத்துகளை வைத்து, எந்த விதமான காம்ப்ரமைஸ்களும் இல்லாமல் எடுக்கப்படும் படம். உதாரணமாக, அலஹந்த்ரோ ஹோடரோவ்ஸ்கியின் El Topo படத்தை எடுத்துக்கொள்வோம். இந்தப் படத்தை நேரம் கிடைத்தால் பாருங்கள். அதேபோல் அவரது Holy Mountain படமும். இந்த இரண்டு படங்களும் பார்த்தால், மிஷ்கின் சைக்கோவில் வைத்திருக்கும் க்ளைமேக்ஸ் போன்ற வேறு சில கருத்துகள் கிடைக்கும்.

இதோ ஹோடரோவ்ஸ்கியின் படங்களைப் பற்றிய ஒரு விஷுவல். இதையும் பாருங்கள். மிக வித்தியாசமான விஷுவல்களின் மூலமும், பலவிதமான குறியீடுகளின் மூலமும் தான் நினைத்தவற்றைப் படங்களாக எடுத்தவர் ஹோடரோவ்ஸ்கி. இந்த வீடியோ பார்த்தால், குறியீடுகள் என்பவற்றைப் படத்தில் வைப்பது எத்தனை கடினம் என்று புரியும். இஷ்டத்துக்கு சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் தோன்றியவற்றை வைத்துவிட்டால் அவை குறியீடுகள் அல்ல என்பதும் புரியும்.

இப்போது மிஷ்கினுக்கு வந்தால், அவரது படங்களிலும் சமீபமாகப் பல்வேறு குறியீடுகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. யுத்தம் செய் படத்தில் இருந்து இது தொடங்கியது. அதில் ரஷோமான் படத்தின் reference வரும். கூடவே ஆங்கிலப் புத்தகம் ஒன்றும் இறுதியில் காணப்படும். இதுவே பின்னர் புத்தர், zen என்றெல்லாம் வெளிப்பட ஆரம்பித்தது. அவைகளைப் பற்றிய வரிகளும் காட்சிகளும் படத்துக்கு சம்மந்தம் இல்லாமல் துருத்திக்கொண்டும் தெரிய ஆரம்பித்தது. இதை இன்றுவரை காணலாம்.

சைக்கோ அவசியம் ஒரு கலைப்படம் கிடையாது. அது ஒரு வணிகப்படமே. இருந்தும், சைக்கோவின் மிஅப்பெரிய பிரச்னை, ஒரு கலைப்படத்துக்கே ஆன சில அம்சங்களை இந்தப் படத்தில் மிஷ்கின் வைக்க நினைத்து, இதனாலேயே கலைப்படமும் இல்லாமல் வணிகப்படமும் இல்லாமல் ஒரு திரிசங்கு சொர்க்க நிலையில் படம் மாட்டிக்கொண்டு, படம் பார்க்கும் பெரும்பாலானவர்களைப் பதம் பார்த்ததுதான். ஒரு சைக்கோவை வைத்து, மிஷ்கினின் யுத்தம் செய் பாணியில் எடுக்கப்படும் படம், அட்லீஸ்ட் யுத்தம் செய் அளவுக்காவது இருக்கவேஎண்டாமா? இத்தனைக்கும் சென்ற வருடம்தான் தமிழின் மிகச்சிறந்த சைக்கோ திரில்லர்களில் ஒன்றான “ராட்சசன்” வெளியாகியிருக்கிறது. கூடவே தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போதெல்லாம் அவசியம் கொரியன், ஜாப்னீஸ் படங்கள் பார்க்க ஆரம்பித்தாயிற்று. இந்தக் காலகட்டத்தில் வந்து, துளிக்கூட சுவாரஸ்யமே இல்லாமல் ஒரு படத்தை எடுத்துவைத்துவிட்டு, “அன்பை ரசியுங்கள்.. லாஜிக்கே தேவையில்லை.. Suspension of Disbelief என்பதே முக்கியம்” என்றெல்லாம் பேட்டி கொடுக்க மிஷ்கின் ஒருவரால் மட்டுமே முடியும்.

ஒரு உதாரணம் கொடுக்கிறேன். படத்தின் நாயகன், கௌதம். அவனுக்குப் பார்வையில்லை. படத்தின் நாயகி, தாஹினி என்ற ஆர்.ஜே. அவளது குரல் அவனுக்குப் பிடிக்கிறது. அவளையே காதலிக்கவும் ஆரம்பித்துவிடுகிறான். அவள் பின்னாலேயே (சாரி. முன்னாலேயே) சுற்றுகிறான். அவள் எங்கெங்கு செல்கிறாளோ, அங்கெல்லாம் அவன் முன்னாலேயே வந்து நின்றுகொள்கிறான். ஏற்கெனவே சிலமுறைகள் (மூன்று என்று நினைவு) அவனிடம் சொல்லிப் பார்த்துவிட்டதாகவும், ஆனால் பயனே இல்லாமல் மீண்டும் இப்படியே சுற்றுகிறான் என்றும் தனது தந்தையிடம் தாஹினி சலித்துக்கொள்கிறாள். இப்படி ஹீரோ, ஹீரோயினின் பின்னாலேயே அவளுக்குப் பிடிக்காமலேயே சுற்றுவது Stalkingதானே? பார்வை இல்லாமல், கை கால் இல்லாமல், வேறு எதுவுமே இல்லாமல் இருந்தாலுமே அதை நாம் எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்? உலகிலேயே இந்தியாவில்தான் இந்த stalking பிரச்னை மிக அதிகம் என்று நமக்கே தெரியும். மிஷ்கின் வைத்தால் மட்டும் அது நியாயமா? கூடவே, ஒரு திருமண நிகழ்ச்சியில் தாஹினி வருகையில் அங்கே ஏற்கெனவே கௌதம் இசையை conduct செய்துகொண்டு இருக்கிறான். அவனைப் பார்த்த கடுப்பில் பார்வையில்லாத கௌதமை அவமானப்படுத்திவிடுகிறாள் தாஹினி. உடனடியாக வெகுண்டு எழும் சிங்கம்புலி, அவனை ஒரு நாற்காலியில் அமர வைத்து, கையில் ஒரு வயலினையும் கொடுத்து, “இந்தா.. பாடு.. உன் காதலைப் பாடுடா” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார். உடனடியாக கௌதம், இதயம் முரளி போல, அதில் வரும் “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா” பாடல் போலவே அதே இளையராஜா இசையமைத்த இன்னொரு பாடலைப் பாடுகிறான். இதைக் கேட்கும் நாயகிக்கு ஒரு க்ளோஸப். அதில் அவள் உருக ஆரம்பிப்பது தெரிகிறது.

80களின் படங்களில் வரும் அதே காட்சியை வைப்பது.இதுதான் மிஷ்கினின் குறியீடா? இந்தக் காட்சி முடிந்ததுமே நாயகி, கௌதமிடம் தன்மையாகப் பேசுகிறாள். கூடவே ஒரு போட்டியும் வைக்கிறாள். அவள் மறுநாள் செல்லும் இடத்தை சரியாகக் கண்டுபிடித்து கௌதம் வரவேண்டும். அப்படிச் செய்தால் அவளது பிறந்தநாளுக்கு கௌதம் வரலாம். இதுவுமே அதே 80களின் காட்சிதானே? இதை எடுக்க மிஷ்கின் எதற்கு? கேட்டால், இதில் ஒரு குழந்தைத்தனம், கலை, அன்பின் வெளிப்பாடு என்றெல்லாம் முழ நீளத்துக்குப் பேட்டிகளும், மிஷ்கின் ரத்தத்தின் ரத்தங்களின் வெறிகொண்ட கருத்துகளும் வரும். இந்தக் காட்சியே எதற்கு என்று பார்த்தால், கதை துவங்கும் புள்ளி அடுத்த காட்சியில் வருகிறது. அதற்காக (??!!?!?).

இப்படி ஆரம்பிக்கும் படத்தில், மிகச்சில காட்சிகளே நம் கவனத்தைக் கவர்கின்றன. போலீஸ் அதிகாரி கமலாதாஸின் வீட்டுக்கு கௌதம் செல்லும் காட்சி அதில் ஒன்று. அதேபோல் அவனைத் தேடி கமலாதாஸ் வரும் காட்சியும். இவைகளைத் தவிர, வில்லனின் அறிமுகம், அதைத்தொடர்ந்து படத்தில் காட்டப்படும் முதல் பிணம், போலீஸீன் விசாரணை, இரண்டாம் கொலை – இவைகளில் எதுவுமே புதிதாக இல்லை என்பது மட்டுமல்ல, துளிக்கூட சுவாரஸ்யமே இல்லாமல், மிக மிக lazy writing என்றே சொல்லும்படி எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ரீதியில் யோசித்துப் பார்த்தால், இந்தப் படத்தில் காட்சிகளை விட, சில ஷாட்களே நம் கவனத்தைக் கவர்கின்றன. கமலாதாஸ், Bone Collector படத்தைப் போலவே, போலீஸ் அலுவலகத்துக்குள் கௌதமை அனுப்பி, இருளில் ஃபைல்களைத் தேடச்சொல்லும் காட்சியில், ஒரு இடத்தில் கௌதமை மேலே டார்ச் அடிக்கச்சொல்லி, அங்கே இருக்கும் தன் படத்தைப் பார்க்கும் ஷாட் அவைகளில் ஒன்று.

படம் முழுக்கவே இப்படித்தான் செல்கிறது. போலீஸால் எதுவுமே கண்டுபிடிக்க முடிவதில்லை என்பதை நம்பும்படியாகவும் மிஷ்கின் எடுக்கவில்லை. கூடவே, காட்சிகள் மிக மிக லேசாக, எந்தவிதமான விறுவிறுப்பும் இல்லாமலேயே பெரும்பாலும் செல்கின்றன. ஆனால், இப்படிப்பட்ட காட்சிகளுக்கும், மிஷ்கினின் ரசிகர்களால் கண்களை மூடிக்கொண்டு பல்வேறு சப்பைக்கட்டுகள் கட்டவும் முடியும். அதையும் பலவாறு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். என் கேள்வியெல்லாம், எந்தவிதமான சார்புநிலையும் இல்லாமல் இப்படத்தைப் பார்த்தாலேயே இந்த ஓட்டைகள் புரிந்துவிடும். அப்படி இருக்க, யாரைத் திருப்திப்படுத்த இப்படி எழுதுகிறார்கள் என்பதே.

படத்தின் வில்லன் ஏன் சைக்கோவாக மாறினான்? எல்லா சைக்கோப் படங்களிலும் வில்லனுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் வரும். நல்லவேளையாக இந்தப் படத்தில் அது இல்லை. இது அவசியம் பாராட்டத்தக்கதுதான். இந்த வில்லனுக்கு ஒரு காரணம் இருந்தாலும், அந்தக் காரணம் வசனங்களிலேயே வந்துவிடுகிறது. அது என்ன காரணம் என்பது பரவலாக அனைவருக்குமே தெரிந்திருக்கும். ‘அவன் கையடிச்சான்’ என்று ரேச்சல் டீச்சர் அலறுவதைப் பார்த்திருப்பீர்கள். கையடிப்பதைக் கண்டுபிடித்து, தனக்கே உரிய ஒரு சைக்கோத்தனத்துடன் அது தப்பு என்று ஆணித்தரமாக ரேச்சல் டீச்சர் நிறுவுகிறார். இதில், தாஹினிக்கு முன்னால் வில்லனும் ரேச்சல் டீச்சரும் அதே சம்பவத்தை அரங்கேற்றும் நாடகமும் படத்தில் உண்டு. ரேச்சலாக நடித்திருக்கும் ப்ரீதம் சக்கரவர்த்தி, அவசியம் நன்றாகவே நடித்திருக்கிறார். இருந்தும், இந்த நாடகக் காட்சிகள், க்ளைமேக்ஸ், அதில் தாஹினியின் கருத்து (அம்மா, குழந்தை), அதைப் பார்த்து மனம் திருந்தும் வில்லன்… எதுவுமே ஒட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம், முதலில் கூறியதுதான். படம் கலைப்படம் இல்லை. கமர்ஷியல் படம். அதில் வந்து, ஒரு கலைப்படத்துக்கே ஆன சில காட்சிகளை வலிந்து திணித்தால் என்ன ஆகும்? கூடவே, இத்தனை கொலைகள் செய்த கொலைகாரனை மன்னித்துவிடுவது, அதைப் பார்த்து அவன் திருந்துவது எல்லாம் மிகப்பெரிய விஷயங்கள். அவற்றுக்கான மிக மிக அழுத்தமான காட்சிகள் வேண்டும். ஆளவந்தானின் க்ளைமேக்ஸில் நந்து அழுவது எத்தனை நம்பமுடியாமல் இருந்ததோ அதைவிட இது நம்பமுடியாமல் இருக்கிறது. இதுவுமே மிக மேலோட்டமான எழுத்தே. இவ்வளவு எளிதில் மன்னித்துவிடமுடியுமா தாஹினி? இறந்தவர்களின் குடும்பத்தார்களை நினைத்துப் பார்த்தீர்களா? அதுசரி. ஒரே பாட்டில் உங்களை விடாமல் stalk செய்த ஹீரோவையே நம்பிவிட்டீர்களே? உண்மையில் இப்படி மிஷ்கின் ஆரம்பத்தில் வைத்தது ஒரு குறீயீடு. காரணம், பின்னால் க்ளைமேக்ஸில் இப்படி வரப்போகிறது என்று படம் பார்ப்பவர்களுக்கு foreshadowing செய்கிறார் (??!!?). இதுதான் படத்தின் மிகப்பெரிய “குறியீடு”.

இவை மட்டும் இல்லாமல், என்னதான் படத்தை நம்பவேண்டும் என்று பிடிவாதமாக அமர்ந்தாலுமே, ஒரு கமர்ஷியல் படமாக சைக்கோவை நம்பிக்கொண்டு இருந்தாலும் எடுபடாத காட்சிகள் பல இருக்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் சோஷியல் மீடியாவில் மீம்கள் போட்டே குவித்துவிட்டார்கள். உதாரணம், கௌதம் கார் ஓட்டுவது. இதை அட்டகாசமான, விறுவிறுப்பான, பார்ப்பவர்கள் நம்பும்படியான காட்சியாக எடுக்க மிஷ்கினால் அவசியம் முடியும். ஆனால் பின்னணியில் பாட்டு, கலைப்படக் கூறுகள் என்று போட்டுத் தள்ளிவிட்டார் என்றுதான் சொல்வேன். அதேபோல் போலீஸ்காரர் முத்துராமன் பழைய பாடல்கள் பாடுவது, வில்லனிடம் மாட்டியபின்னர், அக்கடா என்று படுத்துக்கொண்டு, ரொம்ப டயர்டா இருக்கும்மா (??!??) என்று சொல்வது, அப்போது தனது குடும்பம் பற்றி ஹீரோயினிடம் சொல்வது, ந்தா கழுத்தை வெட்டப்போறாய்யா… எதுனா பண்ணு என்ற நேரத்தில் இன்னொரு பழைய பாடல் பாடுவது…. இதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம் – லாஜிக்கே இல்லாத மிகச் சோம்பலான எழுத்து. இஷ்டத்துக்கு எழுதிவிட்டு, அன்பு, ஞானம், அத்வைதம், புத்தர், Suspension of Disbelief என்று பேசுவது. அஞ்சாதே, யுத்தம் செய் படங்களில் இருந்த விறுவிறுப்பு இதில் துளிக்கூட இல்லாமல், தான் ஒரு auteur என்று முழுக்க முழுக்கத் தன்னையே கண்மூடித்தனமாக நம்ப ஆரம்பித்துவிட்ட மிஷ்கினின் அலட்சியம்தான் படம் முழுக்கவே தெரிகிறது (சில காட்சிகள் மற்றும் ஷாட்கள் தவிர்த்து). எனவே, கமர்ஷியலும் இல்லாமல், கலைப்படமாகவும் இல்லாமல், மிக மிக மெதுவான காட்சிகளுடன் கூடிய ஒரு படமாகவே சைக்கோ எனக்குத் தோன்றியது.

இந்தப் படத்திலும் மிஷ்கினின் டிரேட்மார்ட் குறியீடுகள் இல்லாமல் இல்லை. கௌதம், புத்தர் (என்ன? இதிலுமா? ஆமாம். இதிலும்தான்), அங்குலிமாலா, கமலாதாஸ், zen, கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் எழுத்தாளர்கள் என்று படம் முழுக்கவே குறியீடுகள் மயம். அதேபோல், மிகச்சரியாக, இதற்கு முந்தைய மிஷ்கினின் படங்களில் எப்படி அவர் வலிந்து திணித்து வைத்தாரோ, அதேபோல் இதிலும் பக்காவாக இந்தக் குறியீடுகள் படத்தைப் பின்னால் இழுத்து ப்ரேக் போடுகின்றன.

படத்தில் இன்னொரு பிரச்னை, பல காட்சிகளில் வரும் மிக மிக அதீதமான, jarring இசை. இவ்வளவு இசைக்கான அழுத்தமான காட்சிகளே படத்தில் இல்லை. எனவே, பாஆஆஆம்ம்ம்ம்ம்ம் என்று இளையராஜாவின் இந்த இசை ஒலிக்கையில், எதுக்கு இந்த பில்டப் என்றே கேட்கத் தோன்றுகிறது. இந்தப் பிரச்னை மிஷ்கினின் முந்தைய படங்களிலும் உண்டு. மேலே மிஷ்கின் பற்றிய அலசலில் இதனை முன்னரேயே எழுதியிருக்கிறேன்.

நன்றாக நினைவு வைத்துக்கொள்ளுங்கள். மிஷ்கினின் படங்களைப் பாராட்டிய நான் தான் இங்கே விமர்சனம் வைக்கிறேன். எனது முந்தைய கட்டுரைகளிலுமே, மிஷ்கினின் படங்களின் பிரச்னைகள், பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அம்சங்களை விரிவாக எழுதியே இருக்கிறேன். மிஷ்கினைப் பற்றி மிக மிக விரிவாக critique எழுதியவர்களில் நானும் ஒருவன் தான். இந்த டிஸ்க்ளய்மர் ஏன் என்றால், மிஷ்கினிடம் இருந்து நல்ல படம் வந்தால் எனக்கு மிக மிக மகிழ்ச்சி. அதற்கு அவர் qualified தான். ஆனால் ‘தனது பேட்டிகளில் சைக்கோ பற்றி அவர் ஜஸ்டிஃபை செய்து பேசுவது கொஞ்சம் பயமாகவே இருக்கிறது’ என்று ஒரு நண்பர் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததுபோலதான் நானும் உணர்கிறேன். பழையபடி அட்டகாசமான படங்களை மிஷ்கின் எடுக்கவேண்டும். எடுப்பாரா? சத்தியமாக பயம்தான்.

நமது தளத்தில் மிஷ்கின் படங்களின் விமர்சனங்கள் – Mysskin”s films from Karundhel.com

Ishq (2019) – Malayalam
Trauma எனப்படும் பிரச்னைகளை நமது வாழ்க்கையில் சில தருணங்களில் நாம் சந்திக்கக்கூடும். மனதில் ஆழமான வடுவை உண்டாக்கி, வாழ்க்கை முழுதுமே அந்த சம்பவங்களை நினைத்தாலேயே உடலும் மனமும் நடுங்கக்கூடிய பிரச்னைகள். உதாரணமாக, நடுராத்திரி வண்டியில் நாம் செல்கையில், ஒரு கும்பல் நம்மை வழிமறித்துத் தாக்கினால்? அப்படித் தாக்கும்போது, நம்மால் எதுவுமே செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டால்? (இது பெங்களூரில் ஒவ்வொரு New year அன்றும் இரவில் நடக்கும்). இதைப்போல் நம்மில் பலருக்கும் பல traumaக்கள் இருக்கும். வன்முறை என்பது பல வடிவங்களில் நம் வாழ்க்கையில் நடந்துகொண்டே இருக்கிறது. சிலருக்கு அது, உறவினர்களோ அல்லது வேறு நபர்களோ நம்மை மீறிச் சிறுவயதில் நம்மீது பாலியல் பலாத்காரத்தை இறக்கும்போது நடக்கும். சிலருக்கு, மரணங்களில் அது நடக்கலாம். சிலருக்கு எதிர்பாராத விபத்துகள். இப்படிப் பல சம்பவங்களைச் சொல்லலாம்.

அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தால் என்ன நடக்கிறது என்பதுதான் Ishq. நான் கதையை இங்கே சொல்லப்போவதில்லை. ஆனால், ஏதாவது ஒரு சம்பவத்தில், எதுவுமே செய்ய முடியாமல் மாட்டிக்கொள்ளும்போது நம் மனம் எப்படிக் காயமடையும்? தலைக்கு மேல் கோபம் வரக்கூடும். ஆனால் அந்தக் கோபத்தை வெளியே காட்டவே முடியாது. அப்படிக் காட்டினால் அவசியம் நாம் அந்த இடத்தில் பாதிக்கப்படுவோம் என்னும்போது, அது நம்மை எப்படிப்பட்ட செயல்களைச் செய்யவைக்கிறது?

இது ஒரு புறம் இருக்க, நமது நாட்டில் பெண்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? இரவில் எங்கும் செல்லக்கூடாது; உடைகளைப் பார்த்துப்பார்த்து அணியவேண்டும்; பிறருடன் சிரித்துப் பேசக்கூடாது – இப்படியெல்லாம் இன்னும் ஆயிரம் விதிமுறைகளை அவர்கள் மேல் திணித்துத்தானே நாம் இதுவரை வந்திருக்கிறோம்? நாம் என்று நான் இங்கே சொல்வது, misogynistic என்று சொல்லப்படும் பெரும்பாலானவர்களைக் கொண்ட நமது சமுதாயத்தைத்தான். பெண்கள் மீது ஆழமான விரோதம் – ஆனால் அதை வெளிப்படுத்தமுடியாமல், கிடைத்த சந்தர்ப்பத்தில் எப்படியாவது அதை அவர்கள் மேல் கொட்டிவிடுவது – இதனால் அவர்களின் மனங்களில் ஆழமான காயத்தை உண்டுசெய்துவிடுவது என்பதுதான் இப்படிப்பட்ட சமுதாயத்தின் செயல்திட்டம். இதை அறிந்து செய்பவர்களும் உண்டு – அறியாமல், மனதில் பதிந்துவிட்ட ஆணாதிக்கக் கருத்துக்களால் தலைமுறை தலைமுறையாக பாதிக்கப்பட்டு செய்பவர்களும் உண்டு. எப்படி இருந்தாலும், பெண்களின் மீது வைக்கப்படும் கேள்விகளின் ஆழத்தில் ஒரே ஒரு கருத்துதான் உண்டு – அவன் கூட நீ என்ன செஞ்ச? அல்லது  செய்யப்போற? இதை வெளிப்படையாகக் கேட்கத் தயங்கியே, பலவிதமான கேள்விகளின் மூலம் அதைப் பூசி மெழுகி, விடையைத் தெரிந்துகொள்ளப் பார்க்கிறார்கள். யோசித்துப் பாருங்கள். கணவர்கள், பாய்ஃப்ரெண்ட்கள் ஆகிய யாருக்குமே, ஏதோ ஒரு சமயத்தில், இன்னொரு ஆணுடன் பேசிக்கொண்டிருக்கும் மனைவி – காதலி ஆகியவர்களைப் பற்றிய இந்தச் சந்தேகம் நம்மூரில் வந்தே தீருகிறதுதானே? ராமாயணமே அதைத்தானே சொல்கிறது? அந்தக் காலத்தில் இருந்தே பெண்களுக்குப் பலவிதமான விதிமுறைகளை விதித்தவர்கள்தானே நாம்?

தற்போது அதிகரித்துக்கொண்டே வரும் வன்முறைச் சம்பவங்கள் என்னென்ன? ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தில் மூக்கை நுழைத்து, இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்லியே வன்முறையை வீசுவதுதானே இந்த எல்லாச் சம்பவங்களுக்கும் அடிப்படை? இதில் கலாச்சாரத் தாலிபான்கள், மதவெறியர்கள், சாதி வெறியர்கள், ஆணவக்கொலைகள், தனிப்பட்ட விரோதம், பாலியல் வன்முறை ஆகிய எல்லாமே வந்துவிடும்.

இப்படிப் பாதிக்கப்பட்ட நபர்கள், ஒன்று – எதுவுமே செய்ய முடியாமல், முடங்கி, மனதளவில் பாதிக்கப்பட்டு, வாழ்க்கை முழுதுமே நடைப்பிணங்களாக (அட்லீஸ்ட் மனதளவில்) நடமாடப் பல வாய்ப்புகள் உண்டு. வெளியே என்னதான் இயல்பாக இருக்க நினைத்தாலும், இந்தச் சம்பவங்களின் பாதிப்பு அவர்களை இயல்பான மனிதர்களாக ஆக முடியாமல் தடுத்துக்கொண்டே இருக்கும். வெளியே நடமாடுகையில், தனியாகவோ அல்லது எங்காவது அசந்தர்ப்பமான சமயங்களிலோ, அவசியம் அந்த பயம் வெளியே வந்தே தீரும். எத்தனை கவுன்சிலிங் கொடுத்தாலும் அந்த வடு முழுதாகச் சரியாவது மிகவும் கடினம்.

அடுத்ததாக, அப்படிப் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு, அந்தப் பாதிப்பை சரிசெய்யும் வாய்ப்பு கிடைத்தால்? நான் சொல்வது, பாதிப்பிலிருந்து முற்றிலுமாக வெளிவந்து இயல்பு வாழ்க்கையை வாழ்வது அல்ல. அந்த பாதிப்பு நடந்த சூட்டோடு சூட்டாகவே, தன்னை பாதித்தவர்களின் ஒரு பலவீனமான தருணத்தில் அவர்களை நேருக்கு நேராகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால்? உதாரணமாக, ஹே ராம் படத்தில், சாகேத்ராமின் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த டெய்லரைத் தேடி சாகேத் ராம், கலவரம் நடக்கும் கல்கத்தாவின் தெருக்களில் அலைகிறான் இல்லையா? அப்படி. இது நடந்தால், அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் மனம் என்ன சொல்லும்? அடிக்கு அடி, உதைக்கு உதை, ரத்தத்துக்கு ரத்தம் என்று சொல்லுமா? அல்லது மன்னித்து விட்டுவிடலாம் என்று சொல்லுமா? இது ஆளுக்கு ஆள் மாறும் அல்லவா?

இந்த விஷயங்கள் எல்லாமே, Ishq திரைப்படத்தைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றின.

படத்தில் மொத்தம் நான்கே நான்கு முக்கியமான கதாபாத்திரங்கள்தான். பாக்கி அனைவரும் ஒரு சில காட்சிகளில் வருவதோடு சரி. இந்த நான்கு பேருக்குள் நடைபெறும் உரையாடல்களும், செயல்களும்தான் படம். எந்தக் காட்சியும் அலுக்காமல், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதிலேயே படம் பயணிக்கிறது. இவர்கள் அனைவருமே பிரம்மாதமாக நடித்திருக்கின்றனர்.

க்வெண்டின் டாரண்டினோ, ஒரு விறுவிறுப்பான திரைக்கதை எப்படி இருக்கவேண்டும் என்று சொல்கையில், ஒரு ரப்பர்பேண்டை எத்தனை இழுக்க முடியுமோ அத்தனை இழுக்கவேண்டும் – ஆனால் அது பிய்ந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும் என்பார். முடிந்தவரை முழுக்க இழுத்துவிட்டு, டப்பென்று அதை விட்டுவிட்டால் எப்படி இருக்குமோ அதுதான் ஒரு நல்ல திரைக்கதையின் அடையாளம் என்பது அவரது கருத்து. அதற்கு ஏற்றபடியே, அவரது படங்களில் நீளமான சீக்வென்ஸ்கள் இருக்கும். ஆனால் அவை அலுக்கவே அலுக்காது. அதேபோல், இந்தப் படத்தில் மிக முக்கியமான இரண்டு மிகப்பெரிய சீக்வென்ஸ்கள் உள்ளன. அந்த சீக்வென்ஸ்கள்தான் படமே. அந்த இரண்டு சீக்வென்ஸ்களையும், மிகக் கச்சிதமாக, மிகவும் விறுவிறுப்பாக, பார்க்கும் நமது மனம் பதைபதைக்கும்படி எழுதி, அதை அருமையாக எடுத்திருப்பதுதான் இந்தப் படத்தின் ப்ளஸ்.

படத்தில் நடக்கும் சம்பவங்களைத் திரைக்கதையில் எழுதியவர்களின் பாயிண்ட் ஆஃப் வியூ இல்லாமல், கதாபாத்திரங்களின் பாயிண்ட் ஆப் வியூவாகவே அமைத்திருப்பது படத்தின் அடுத்த சிறந்த விஷயம். எனக்கு வன்முறை பிடிக்காது -எனவே படத்தில் வன்முறை வரக்கூடாது என்றெல்லாம் எண்ணாமல், சம்பவங்கள் – அதற்கு எதிர்வினையான சம்பவங்கள் என்றே எழுதி எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் நமக்கு சில விஷயங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவை நம்மை யோசிக்கத் தூண்டுகின்றன. இப்படித்தான் இந்தப் படம் எனக்குத் தோன்றியது.

இந்தப் படத்தைத் தமிழில் எடுப்பது மிகக்கடினம். காரணம் படத்தின் இரண்டாம் பாதி பார்க்கும்போது உங்களுக்குத் தெரியும். எடுத்தாலும் தமிழில் இப்படிப்பட்ட காட்சிகள் மிகமிக மேலோட்டமாகவேதான் எடுக்கப்படும்.

ஒருவகையில் மலையாளத்தில் இது வந்திருப்பது ஆச்சரியமே இல்லை. அவர்கள் பரிசோதனை முயற்சிகளையும் தாண்டி, இயல்பான ஒரு திரைக்கதையையே எங்கோ கொண்டுசென்றுவிட்டார்கள். அந்த இடத்துக்கு வேறு யாராலும் போட்டிபோடவே முடியாது என்பது என் உறுதியான கருத்து.

முடிந்தால் பார்க்க முயற்சி செய்யலாம். எல்லாவற்றையும் மறந்துவிட்டு, படம் பாருங்கள். பல கேள்விகளை இப்படம் எழுப்பும் என்றே நம்புகிறேன். Moralistic point of view என்று ஒன்று உண்டு. அதாவது, குழந்தைகள் டிவியில் வன்முறைக் காட்சிகளைப் பார்க்கக்கூடாது; நல்லவனாகவே இருக்கவேண்டும்; யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்றறெல்லாம். ஆனால், மனித மனம் என்பது எத்தனை விசித்திரமானது என்பதும், அது எதையெல்லாம் செய்யுக்கூடியது என்பதும் இப்படத்தில் பேசப்பட்டிருக்கின்றன. படம் பார்க்கையில், ஆங்காங்கே கோபம், பயம், எரிச்சல் போன்ற உணர்ச்சிகள் எழுந்தன. ரத்தம் சூடாவதை என்னால் உணர முடிந்தது.

இக்காலத்தில் சீதை வாழ்ந்திருந்தால், ராவணனுடன் பலகாலம் இருந்தாயே? உன் கற்பை நீ நிரூபி என்று ராமன் சொன்னதற்கு அவளது பதில் என்னவாக இருந்திருக்கும் என்பது இப்படத்தின் க்ளைமேக்ஸில் அட்டகாசமாக சொல்லப்பட்டிருக்கிறது.

பி.கு – இந்தப் படத்துக்கு எப்படி டிரெய்லர் கட் செய்திருக்கமுடியும் என்று ஆச்சரியமாகப் போய்விட்டது. ஆனால் அதையும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

எழுதிய ரதீஷ் ரவியும், இயக்கிய அனுராஜ் மனோகரும் அவசியம் பாராட்டத்தக்கவர்கள்.

Brightburn (2019) – English
வேறு ஒரு கிரகத்தில் இருந்து வந்து பூமியில் விழுந்த ஒரு குழந்தை என்றால் அது எப்படி இருக்கும்? இதற்கு சூப்பர்மேன் சாட்சி. பெற்றோருக்கு அந்தக் குழந்தையின் சக்திகள் மெதுவாகத் தெரிய ஆரம்பிக்கும். அதை வைத்துக்கொண்டு அந்தக் குழந்தை தன் வாழ்க்கையில் மெல்ல மெல்ல தன்னையே புரிந்துகொள்ள அந்தப் பெற்றோர்கள் உதவுவார்கள். அதன்பின் அது ஒரு சூப்பர்ஹீரோவாக மாறி, மனிதகுலத்தின் மேன்மைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும். இதுதான் பொதுவான டெம்ப்ளேட். இதற்கு சூப்பர்மேன், ஹெல்பாய், Silver Surfer, He-Man என்பதில் துவங்கி, இன்னும் நிறைய உதாரணங்கள் உண்டு. இதனிலேயே, பூமியில் பிறந்து, பிற கிரகங்களில் சூப்பர்ஹீரோ ஆனவர்களும் உண்டு (Star Lord, Captain Marvel போல). ஆனாலும், இவர்கள் அனைவருமே நல்லவர்களே.

அப்படி இல்லாமல், ஒருவேளை பூமியில் வந்து விழுந்த குழந்தை ஒரு சூப்பர் வில்லனாக இருந்தால்? அதுதான் Brightburn.

Guardians of the Galaxy திரைப்படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன் தயாரிப்பில், அவரது இரண்டு சகோதரர்கள் திரைக்கதை எழுதி, டேவிட் யாரோவெஸ்கி இயக்கிய (இரண்டாவது படம்) இது. இதன் பட்ஜெட் மிகச்சிறியது. வெறும் ஆறு மில்லியன் டாலர்கள். எண்பதுக்கும் மேற்பட்ட ம்யூஸிக் வீடியோக்களும் விளம்பரப் படங்களும் எடுத்திருப்பவர் டேவிட் யாரோவெஸ்கி. ஜேம்ஸ் கன்னின் நீண்டகால நண்பரும் கூட. கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி படத்துக்கும் முன்னரே, ஜேம்ஸ் கன்னும் டேவிட் யாரோவெஸ்கியும் திரைப்படம் ஒன்றை எடுக்கவேண்டும் என்று பல காலம் முயற்சித்திருக்கின்றனர். ஒரு நாள் ஜேம்ஸ் கன்னின் சகோதரர்கள் ப்ரயன் கன் & மார்க் கன் ஆகிய இருவரும், இந்தப் படத்தின் கதையை யாரோவெஸ்கியிடம் சொல்ல, உடனே கதையும் அவருக்குப் பிடித்துவிட, ஜேம்ஸ் கன்னிடமும் கதையைச் சொல்லி, அவரது சம்மதத்தையும் பெற்று, அதன்பின் தயாரிப்பாளர்களைப் பிடித்து, எடுக்கப்பட்ட படம் இது.

இத்தனை காலமாகவே, ஏலியனாக இருந்தால் அது சூப்பர்ஹீரோதான் என்பதை உடைக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

இதற்கு, ஒரு பேட்டியில், அருமையான உதாரணம் கொடுக்கிறார் யாரோவெஸ்கி. பேட்மேன் படங்களிலும் கதைகளிலும், அவர் பொதுவான ஹீரோவாகவே இருந்தாலும், படங்களிலும் கதைகளிலும் வரும் திருடர்கள், கெட்டவர்கள் ஆகியவர்களுக்கு அவர் வில்லன் தானே? ஒரு இருட்டுத் தெருவில் நிற்கும் ஒரு அடியாளின்மீது, திடீரென்று தலைகீழாக இறங்கும் ஒரு முரட்டு உருவம், யாரென்று தெரிவதற்கு முன்னரே தபதப என்று அவனை அடித்துப்போட்டுவிட்டுப் பறந்துசென்றால், அடிவாங்கியவனுக்கு எவ்வளவு பயமாக இருக்கும்? இந்தக் காரணம்தான் இப்படி ஒரு படத்தை இயக்கக் காரணமாக இருந்தது என்பது டேவிட் யாரோவெஸ்கியின் கருத்து.

இந்தத் திரைப்படம் இந்தியாவில் மிகச்சில ஊர்களில் மட்டுமே வெளியாகியுள்ளது. அதிருஷ்டவசமாக, நான் பெங்களூரில் இருப்பதால், சுலபமாகப் பார்க்கவும் முடிந்தது. நான் பார்த்த தியேட்டரில் (கோபாலன் க்ராண்ட் மால்), நான் தான் இரண்டாவது கஸ்டமர். மொத்தம் ஐந்து பேர் வந்தால்தான் படத்தைப் போடமுடியும் என்று சொன்னதால், காத்திருந்தேன். சரியாகப் படம் துவங்கும் நேரத்தில் மூன்றே பேர் மட்டும் வந்து டிக்கட் வாங்க, படம் துவங்கியது.

இந்தப் படத்தை ஒரு Prequel கதை என்றே சொல்லமுடியும். பொதுவாக எல்லா சூப்பர்ஹீரோ படங்களிலும், ஒரு சூப்பர்ஹீரோ எப்படி உருவானான் என்று காட்டுவார்கள் இல்லையா? Batman Begins, Man of Steel, Spiderman, Iron man ஆகியவை போல. அப்படி, ப்ராண்டன் ப்ரேயர் (Brandon Brayer) என்ற குட்டி சூப்பர்ஹீரோ எப்படி உருவாகிறான் என்பதுதான் இந்தப் படம். ஆனால், மற்ற படங்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால், மேலே சொல்லப்பட்ட படங்களில், முதல் 30-45 நிமிடங்களுக்குள்ளாக ஒரு சூப்பர்ஹீரோ உருவாகிவிடுவான். அதன்பின் அந்த சூப்பர்ஹீரோவோடு மோத ஒரு சூப்பர் வில்லன் வருவான். இருவருக்கும் போராட்டம் நடந்து, இறுதியில் சூப்பர்ஹீரோ, தன் சக்திகளை நன்றாக உணர்ந்துவிடுவான். அடுத்த பாகங்களில் இன்னும் பிரம்மாண்டமான வில்லன்களுடன் மோதுவான். அதுவே ப்ரைட்பர்ன் படத்தில், சூப்பர் வில்லனாக ஒரு சிறுவன் எப்படி உருவாகிறான் என்ற – முதல் 30ல் இருந்து 45 நிமிடங்களுக்குள் சொல்லப்படவேண்டிய கதையே, ஒண்ணரை மணி நேரமும் ஓடுகிறது. படத்தின் இறுதியில்தான் அந்தச் சிறுவன் சூப்பர் வில்லனாக முழுமையான அவதாரம் எடுக்கிறான். அத்துடன் படம் முடிகிறது.

இதனால் என்ன நடக்கிறது என்றால், படம் பார்க்கும் நமக்கே, அடுத்தது என்ன நடக்கப்போகிறது, யார் இறக்கப்போகிறார்கள் என்று தெரிந்துவிடுகிறது. படத்தின் துவக்கத்தில் இருந்து அறிமுகமாகும் கதாபாத்திரங்களே மிகக்குறைவு (சிறிய பட்ஜெட் படம்). எனவே அவர்களின் அறிமுகத்தின்போதே, அவர்கள் இறக்கப்போகிறார்கள் என்பதற்கும் சில leading வசனங்கள் வைக்கிறார்கள். இது புரிந்துவிடுவதால், அவர்கள் இறக்கப்போகிறார்கள் என்பதில் சந்தேகம் இன்றி, எப்படி இறக்கப்போகிறார்கள் – அதையாவது பார்க்கலாமே என்று தோன்றிவிடுகிறது. இவைதான் படத்தின் இரண்டு பிரச்னைகள்.

இது சூப்பர்ஹீரோ genreஇலேயே ஒரு ஹாரர் படமும் கூட. கிட்டத்தட்ட slasher படங்களில் வரும் அளவு வன்முறை தெறிக்கிறது. அதுவும், அவைகள் ஒரு சிறுவனால் நிகழ்த்தப்படுகின்றன. மண்டையைப் பிளப்பது, முகரக்கட்டை அறுந்து தொங்குவது, உடலையே ரத்தக்களறியாக்கிப் பிய்த்து வீசுவது போன்ற காட்சிகள் அனைத்தும் இதில் வருகின்றன (இதிலும் ஒரு இடத்தில் ஒரு உடல் தொங்குகையில் நம்மூர் சென்சார் புத்திசாலிகள் அதை blur செய்யச்சொல்லி இருக்கிறார்கள். இதுவே ஒரு A சர்ட்டிஃபிகேட் படம். இதிலுமா?). ‘ஒரு சிறுவன், ஒரு முகமூடி அணிந்ததுமே அவன் பயம்கொள்ளத்தக்க ஆளாக மாறிவிடுகிறான்’ என்பதும் இயக்குநர் டேவிட் யாரோவெஸ்கியின் கருத்துதான். அது உண்மையாகவே அப்படித்தான் இருக்கிறது (Orphanage படம் ஒரு உதாரணம்). படத்தில் மிகச்சில பயமுறுத்தும் தருணங்களும் உண்டு.

ஒருவேளை இதற்கு ஒரு sequel வந்தால்,  இந்தச் சிறுவன் யாருடன் மோதப்போகிறான் என்பது தெரியலாம். ஒரு வித்தியாசமான முயற்சி என்ற வகையில் இப்படத்தைப் பார்க்கமுடியும். ஆனால் நான் சொன்னபடி, கதை ஆரம்பத்திலேயே தெரிந்துவிடவும் வாய்ப்பு உண்டு.

படத்தில், ப்ரைட்பர்ன் என்ற சூப்பர் வில்லனாக வரும் சிறுவனுக்கு, சூப்பர்மேனுக்குரிய அத்தனை சூப்பர்பவர்களும் உண்டு. இதனால் சூப்பர்மேன் கதாபாத்திரத்தையே subvert செய்து, மாற்றி அளித்திருக்கிறார்கள் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.

John Wick 3 – Parabellum (2019) – English
ஜான் விக் முதல் இரண்டு பாகங்கள் பற்றி இங்கே படிக்கலாம்.

ஜான் விக் முதல் பாகம் வந்த காலகட்டத்தில், அப்படி ஒரு தரமான, வன்முறை நிறைந்த ஆக்‌ஷன் படம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. கூடவே, படத்தை இயக்கியது ஹாலிவுட்டின் மிகச்சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர்கள். எனவே படம் பிரமாதமான வரவேற்பைப் பெற்றது. இதனாலேயே, படத்தின் இரண்டாம் பாகமும் 2017ல் வெளியானது. ஆனால் இந்தக் காலகட்டத்தில், ஜான் விக்கைப் போலவே ஒருசில ஸ்டண்ட் படங்கள் வந்தாகிவிட்டன (ஜான் விக் வெளியான அதே அக்டோபரில் டென்ஸல் வாஷிங்டன் நடித்த The Equalizer வெளியாகிறது. அப்படமும் இதேபோல் வெற்றிபெற்று, இரண்டாம் பாகமும் வெளியானது. அதுவும் ஒரு ரிவெஞ்ச் படம்தான். கூடவே, Jack Reacher series. Marveலின் டெட்பூல் இன்னொரு உதாரணம். இவைகளில் எல்லாமே ஆக்‌ஷன் கோரியோக்ராஃபி பிரம்மாதமாக இருக்கும். இதனுடன், சார்லீஸ் தெரான் நடித்த Atomic Blonde. இதன் இயக்குநர், டேவிட் லெடிச் – ஜான் விக்கின் இயகுநர்களில் ஒருவர். டெட்பூல் 2 படத்தையும் இவர்தான் எடுத்தார். இவற்றுடன், ஜான் விக் படத்துக்குப் பிறகு வந்த Fast & Furious படங்களின் பாகங்களையும் நாம் எடுத்துக்கொள்ளலாம்).

தபதப என்று இத்தனை படங்கள் வெளியானதால், ஜான் விக் மூன்றாம் பாகம் எப்படி இருக்குமோ என்று ஒரு கேள்வி இருந்தது. இரண்டாம் பாக விமர்சனத்தின் இறுதியில், மூன்றாம் பாகம் கட்டாயம் வரும் – அது நன்றாகவும் இருக்கும் என்று எழுதியிருந்தேன்.

இரண்டாம் பாகம் விட்ட இடத்தில் இருந்து மூன்றாம் பாகம் துவங்குகிறது (என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்). இந்தப் படத்திலும் பிரம்மாதமான பல ஆக்‌ஷன் சீக்வென்ஸ்கள் இருக்கின்றன. இந்தப் படத்திலும் கொத்துக்கொத்தாகப் பலரும் சாகிறார்கள். இதிலும் ரத்தம் தெறிக்கும் வன்முறை உண்டு (நம்ம சென்சார் போர்டுதான் பல காட்சிகளை வெட்டிவிட்டது). ஆனால், நாம் வேறு பல ஆக்‌ஷன் படங்களையும் பார்த்துவிட்டதால் – அது இயக்குநருக்கும் தெரிந்ததால், கொஞ்சம் Melodramaவை இப்படத்தில் வைத்திருக்கிறார்கள். படத்தின் இடையில் தடால் என்று வெட்டு விழுந்து, கதை வேறு எங்கெங்கோ பயணிக்கிறது. அது படத்தின் வேகத்தைப் பாதிக்கிறது என்றே தோன்றியது. முதல் இரண்டு பாகங்களில், ஒரு உறுதியான கதை இருக்கும். அந்தக் கதையைச் சுற்றியே ஆக்‌ஷன் நடக்கும். ஆக்‌ஷன் கதைக்கு வெளியே போகாது. ஆனால் இதில், ஏற்கெனவே இரண்டு பாகங்களில் ஜான் விக் நடைபெறும் உலகத்தைப் பற்றிப் பல விஷயங்கள் சொன்னதால், புதிதாக எதை வைப்பது என்று தெரியாமல் கொஞ்சம் தடுமாறியிருப்பது தெரிகிறது. பல வெப் சீரீஸ்களில் வரும் அதே பிரச்னை. முதல் சில சீசன்கள் நன்றாக இருக்கும். பின்னர் மாட்டிக்கொள்ளும். கேம் ஆஃப் த்ரோன்ஸ் போல.

அப்படி, இதிலும், ஒரு பிரச்னையில் இருந்து தப்பி ஓடும் ஜான் விக் என்ன செய்கிறான் என்று பார்த்தால், கொஞ்சம் ஏமாற்றம்தான். தனக்கு சம்மந்தமே இல்லாத சில விஷயங்களை செய்கிறான். அவற்றுக்கான காரணங்கள் பெரிதாகவும் இல்லை. Halle Berry ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். அந்தக் காட்சிகளைத்தான் சொல்கிறேன். ஜான் விக்குக்கு முதல் இரண்டு படங்களில் படுபயங்கர பில்டப் கொடுத்துவிட்டு, இந்தப் படத்தில் சட்டென்று அவரை இறக்கிவிட்டுவிட்டதுபோல்தான் தெரிந்தது. அதேபோல் படத்தில் தேவையே இல்லாமல் வரும் drama – ஜான் விக் மொராக்கோ செல்வது, அங்கே பாலைவனம், அதன்பின் High Table, பின் திரும்பி வருவது – நடுவே ஒரு விரலையும் காவு கொடுக்கிறார் – இது எல்லாமே, என்ன நடக்கிறது என்று நன்றாகப் புரிந்தும், நெளியவைத்த காட்சிகள்.

இவையோடு சேர்ந்து, ஜான் விக்குக்கு இரண்டாம் பாகத்தில் உதவிய போவெரி கிங் (லாரன்ஸ் ஃபிஷ்போர்ன்), வின்ஸ்டன் ஆகியோர்களுக்கு இப்படத்தில், High table க்ரைம் சிண்டிகேட்டில் இருந்து வரும் Adjudicator என்ற பெண் கதாபாத்திரம் வழங்கும் தண்டனைகள், பின்னர் ஜான் விக் மொராக்கோ செல்வதற்கு அவன் அணுகும் மர்மப் பெண்மணி (இந்தப் பெண்மணி யார் என்பதும் படத்தில் வரும்), ஜான் விகின் திடீர்ப் பின்னணி ஆகியவையெல்லாம் துளிக்கூட ஒன்ற முடியாமல் போன காட்சிகள்.

ஆனால் இந்தக் காட்சிகளுக்குப் பின்னர், எப்போது ஜான் விக் காண்டினெண்டல் ஹோட்டலுக்குத் திரும்பி வருகிறானோ, அதன்பின் இறுதிவரை ஆக்‌ஷன் மழைதான். அந்தக் காட்சிகள் பிடித்திருந்தன. இரண்டாம் பாகத்தின் க்ளைமேக்ஸ் போலவே, மூன்றாம் பாகக் க்ளைமேக்ஸும் ப்ரூஸ் லீயின் Enter The Dragon & Game of Death படங்களுக்கான tributeஆகவே வைத்திருக்கிறார்கள். குறிப்பாக கேம் ஆஃப் டெத். ஒவ்வொரு தளமாகச் செல்கையில் அங்கே இருக்கும் சக்திவாய்ந்த வில்லன்களை முறியடிப்பது கேம் ஆஃப் டெத்தின் க்ளைமேக்ஸ்.

இதற்கும் அடுத்த பாகம் வரப்போகிறது என்று தெரிகிறது. ஆனால் அவை அவசியம் முதல் இரண்டு படங்களைப் போல இருந்தால் நன்றாக இருக்கும். இருக்கவேண்டும்.

Avengers: Infinity War (2018) – English : Part 2
For all the previous posts about the Avengers & Marvel, please check here –> Everything about Avengers from Karundhel.com

இக்கட்டுரையின் முதல்பாகம்  – Avengers: Infinity War – part 1

சென்ற கட்டுரையில் இன்ஃபினிடி ஸ்டோன்கள் பற்றிப் பார்த்தோம். இனி, Infinity War படத்தின் முக்கியமான கதாபாத்திரமாகிய தானோஸ் பற்றிக் கவனிப்போம்.

தானோஸ் யார்? அவனுக்கு ஏன் இந்தக் கொலைவெறி?

சனிக்கிரகத்தின் நிலாக்களில் ஒன்று டைட்டன். இந்த டைட்டனில் வாழ்ந்த மக்கள், கடவுட்களைப் போன்று சாகாவரம் படைத்தவர்கள். அவர்களில் ஒருவர் அலார்ஸ் (Alars). அலார்ஸ், ஒரு விஞ்ஞானி. அவர்களின் இனத்தைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் நிகழ்த்தியவர். அவருக்குப் பிறந்த மகன் தான் தானோஸ். தானோஸ் பிறக்கையிலேயே, அவனது முகத்தில் இருந்த விகாரத்தைக் கண்டு அலார்ஸ் பயந்தார். சிறுகச்சிறுக தானோஸ் வளர்ந்தபோது பிற டைட்டன்களும் அவனை மெல்ல ஒதுக்க ஆரம்பித்தனர்.

டைட்டனில் மக்கள்தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. அங்கே இருக்கும் பொருட்களை அனைவரும் பங்குபோட்டுக்கொண்டே வாழும்படியான காலகட்டம் வந்தது. அப்போது, தன்னை யாரும் பெரிதாக மதிக்காவிட்டாலும், இந்தப் பிரச்னையைத் தோர்க்க ஒரு வழி சொல்கிறான் தானோஸ். இதைப்பற்றி அவனே Infinity War படத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் சொல்லும் காட்சி இருக்கிறது. அது – பாதி டைட்டன்களை அழித்துவிடுவது. அப்போதுதான் அங்கே இருக்கும் இயற்கையான வளங்கள் அனைவருக்கும் போதுமானதாக இருக்கும். ஆனால் இந்தத் திட்டத்தை டைட்டன்கள் செயல்படுத்தவில்லை. அது மிகவும் அபாயகரமான யோசனையாக இருந்ததே காரணம். ஆனால் சிறுகச்சிறுக வேறுவழியில்லாமல், வளர்ந்துவரும் மக்கள்தொகையால் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு அனைத்து டைட்டன்களும் இறந்துவிட்டனர். இதனால் தானோஸின் சொந்த பூமி அழிந்துபோனது.

இதன்பின்னர் தானோஸ் அண்டவெளியில் வேறு ஒரு பக்கம் சென்று, தனது திட்டத்தை நிறைவேற்ற ஆரம்பித்தான். அண்டவெளியின் மக்கள்தொகையில் பாதியாவது அழிந்தால்தான் மீதமிருப்பவர்களுக்கு அண்டவெளியின் பற்பல வளங்கள் முழுதாகக் கிடைக்கும் என்பது அவனது எண்ணம். இதனால் ஒவ்வொரு கிரகமாக, ஒவ்வொரு நிலாவாக, ஒவ்வொரு பால்வீதியாகச் சென்று படையெடுத்து, அவர்களில் பாதியையோ அல்லது முழுமையாகவோ அனைவரையும் அழிக்கத் துவங்கினான். அப்படிச் செல்கையில், அங்கே அவனுக்குப் பிடித்த குழந்தைகளை எடுத்துக்கொண்டு வந்து வளர்க்கவும் துவங்கினான். அவர்களுக்கு, Children of Thanos என்றும், Black Order என்றும் பெயர். கமோராவையும் நெபுலாவையும் இப்படியாக எடுத்து வளர்த்து, தனது மகள்களாக மாற்றிக்கொண்டான். இவர்களில் கமோராவைப் பார்த்து ஒட்டுமொத்த அண்டவெளியும் பயப்பட்டது. யாராலும் வெல்லமுடியாத வீராங்கனையாக அவளை வளர்த்தான். இதனாலேயே நெபுலாவுக்கும் கமோராவுக்கும் சண்டைகள் நிகழ்ந்தன. ஒரு சமயம், நெபுலாவின் உடலிலிருந்து அவளை கமோராவைத் தாண்டிய வீராங்கனையாக ஆக்கவேண்டிய ஒரு உறுப்பை தானோஸே அகற்றவேண்டி வந்தது. இதனால் நெபுலாவுக்கு தானோஸ் மீது கோபம். கமோராவோ, தன்னை ஈவு இரக்கம் இல்லாத ஒரு உயிராக தானோஸ் உருவாக்கியது கண்டு தானோஸ் மீது வெறுப்பு.

இந்த இருவரைத் தவிர, தன் மீது அளவுகடந்த விசுவாசம் உடைய நால்வரையும் தானோஸ் உருவாக்கினான். அவன் என்ன சொன்னாலும் இவர்கள் செய்து முடிப்பார்கள். அவர்கள்தான் Corvus Glaive, Ebony Maw, Cull Obsidian மற்றும் Proxima Midnight. இவர்கள் நால்வருமே Infinity War படத்தில் தானோஸின் குழந்தைகளாக அறிமுகம் ஆவார்கள். இவர்களில் எபொனி மா என்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். டாக்டர் ஸ்ட்ரேஞ்சை சிறைப்பிடிக்கும் கொடூர முகம் கொண்டவர்தான் எபோனி மா. கல் அப்ஸிடியன் என்பவன் அப்படத்தில் மாவுடன் பூமிக்கு வரும் ராட்சதன்.  கார்வஸ் க்ளேவ் மற்றும் ப்ராக்ஸிமா மிட்நைட் ஆகியவர்கள், விஷனுடனும் ஸ்கார்லெட் விட்ச்சுடனும் சண்டை இடுபவர்கள். கேப்டன் அமெரிக்கா மற்றும் அவருடன் இருக்கும் பிற அவெஞ்சர்களால் வெல்லப்பட்டு மறைபவர்கள்.

அவெஞ்சர்ஸ் சீரீஸில் தானோஸின் பாகம் என்ன?

எல்லாவற்றுக்கும் முதலில், அண்டவெளியின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தானே எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துக்கு தானோஸ் வந்ததுமே, அவனுக்கு நினைவு வந்தது இன்ஃபினிடி கற்கள்தான். அவைகள் தன் வசம் இருந்தால் யாரும் தன்னை எதிர்க்க இயலாது என்பதை தானோஸ் உணர்ந்துகொண்டான். எனவே, முதன்முதலில் அவன் கைப்பற்றிய கல் – Mind Stone. இதை ஒரு ஈட்டி போன்ற ஆயுதத்தில் பதித்துவைத்துக்கொண்டான். அந்த ஆயுதம் அவனுக்கு வலிமையைக் கொடுக்கும் ஆயுதமாக மாறியது.

இதன்பின் அடுத்த கல்லைத் தேடிய தானோஸ், அது ஒரு டெஸராக்டினுள் வைக்கப்பட்டு, அது பூமியில் இருக்கிறது என்று புரிந்துகொண்டான்.  அந்தக் கல்தான் Space Stone. தன்னுடன் இருக்கும் மாபெரும் படையாகிய சிடாரி (Chitauri) என்ற ராட்சதப் படையை, பூமியைக் கைப்பற்றவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த லோகியை அழைத்து, அவன் வசம் ஒப்படைத்தான். அவன் லோகியிடம் போட்ட ஒப்பந்தம் – பூமியைக் கைப்பற்றிய பின்னர், டெஸராக்டைத் தன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்பது. லோகி ஒப்புக்கொண்டபின்னர், மைண்ட் ஸ்டோன் பதிக்கப்பட்ட ஈட்டியை லோகியின் வசம் ஒப்படைத்தான் தானோஸ். பிரம்மாண்டமான சிடாரி படையைத் தலைமைதாங்கி, பூமியின் மீது லோகி படையெடுத்த கதைதான் The Avengers.

ஆனால் பூமியில் இருக்கும் வீரர்கள் சாதாரணமானவர்கள் அல்ல; அவர்கள் லோகியை முறியடித்துவிட்டனர் என்பதைத் தானோஸ் உணர்ந்துகொள்கிறான். இப்போது டெஸராக்ட் தோர் வசம் இருக்கிறது. எனவே முழுபலம் வாயந்த ஆஸ்கார்டைத் தாக்குவது கடினம் என்று புரிந்துகொண்டும், அதன்பின்னும் சும்மா இருக்காமல், அடுத்த கல்லைத் தேட ஆரம்பித்தான். இந்த அடுத்த கல்தான் Power Stone. அது, ஒரு கோளத்தினுள் வைக்கப்பட்டு, எங்கோ இருக்கிறது என்று தெரிந்துகொள்கிறான். முதலில் தன்னுடைய மகள்களாகிய கமோராவையும் நெபுலாவையும் அதனைக் கண்டுபிடிக்கச்சொல்லி அனுப்ப, அது Cloud Tombs of Praxius என்ற பறக்கும் பிரமிடுகள் அடங்கிய பிராந்தியத்தில் இருக்கிறது என்று அவர்கள் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் கமோராவால் அதைக் கைப்பற்ற முடியாமல், நெபுலாவும் அங்கே சிக்கிக்கொண்டு அவளது கையை நெபுலா இழக்க நேர்கிறது.

இதன்பின்னர் Guardians Of Galaxy படத்தில் வரும் இன்னொரு வில்லனான Ronan The Accuser என்பவனைக் கூட்டு சேர்த்துக்கொண்டு, பவர் ஸ்டோனை அவன் கைப்பற்றிக் கொடுத்தால், அவனது லட்சியமான அவனது எதிரி கிரகமான நோவாவையும், அதன் மக்களான ஸாண்டாரியன்களையும் ஒட்டுமொத்தமாக அழித்துக்கொடுப்பதாக ஒரு ஒப்பந்தம் போடுகிறான். ஆனால் அந்தக் கல் இருக்கும் கோயிலான மோராக்கில் ஸ்டார் லார்ட் என்பவன் கையில் அது சிக்கிவிட, இந்த முயற்சியும் தோல்வி. ஆனால் கொஞ்ச காலத்திலேயே ரோனானிடம் அக்கல் சிக்கிவிடுகிறது. ஆனால் அதை தானோஸீடம் கொடுப்பதற்குப் பதில் அவனே அதைப் பயன்படுத்திக்கொண்டு அதன் சக்தியை கிரகித்துக்கொள்ள, தானோஸ் அவனுடன் அத்தனை தொடர்புகளையும் அறுத்துக்கொள்கிறான். பின்னர் கார்டியன்ஸ் ஆஃப் காலக்ஸி அணியினரிடம் ரோனான் மாட்டிக்கொண்டு இறக்கிறான். அந்தக் கல், ஸாண்டார் கிரகத்தைச் சேர்ந்த போலீஸ்காரர்களான நோவா கார்ப்ஸிடம் பத்திரமாக சேர்ப்பிக்கப்படுகிறது. இம்முறையும் தானோஸுக்குத் தோல்வி.

இனி யாரை நம்பியும் பயனில்லை என்று புரிந்துகொள்கிறான் தானோஸ். தானே செயலில் இறங்குகிறான். முதலில் Infinity War படத்தில் வரும் Dwarf ( Eitri என்பதே அவனது பெயர்) மூலமாக, ஆரம்பத்திலேயே ஒரு கையுறையைத் தயார்செய்துகொண்டு, பின்னர் அவர்களின் கிரகமான Nidavellirஇல் இருக்கும் அத்தனை பேரையும் அழித்துவிடுகிறான் தானோஸ். அழித்தல் அவனது இயல்பு. அழித்தலின் மூலம்தான் அண்டவெளியின் balance காப்பாற்றப்படும் என்பது அவன் கருத்து. ஆனால் இந்த எய்த்ரி மட்டும் அழிக்கப்படாமல் தானோஸினால் விடப்பட்டுவிடுகிறான். இந்தக் கையுறையை வைத்துக்கொண்டே ஒவ்வொரு கல்லாக தானே சென்று எடுக்கிறான். இந்தக் கையுறைக்கு Infinity Gauntlet என்று பெயர்.

இடையில், கமோராவை அழைத்து, Soul Stone என்ற கல் பற்றிய தகவல்களை சேகரிக்கச் சொல்கிறான் தானோஸ். அவள் அவனிடமிருந்து பிரிந்து, அவனைப் பிடிக்காமல், கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி அணியினரோடு சேர்ந்துவிடுகிறாள். ஆனால் அவளது சகோதரியான நெபுலாவைப் பிடிக்கும் தானோஸ், Soul Stoneஇன் இருப்பிடம் பற்றிக் கமோரா தனக்குத் தெரியும் என்று சொன்னதை அறிந்துகொள்கிறான். இதனால் Infinity War படத்தில் கமோராவைப் பிடித்துக்கொண்டு அவளிடமிருந்து அதன் இருப்பிடத்தை அறிந்துகொள்கிறான்.

இப்படியாகத்தான் தானோஸ் இன்ஃபினிடி கற்களை சேகரிக்க ஆரம்பித்தான். அந்தக் கதைதான் Infinity War படத்தில் விரிவாகச் சொல்லப்படுகிறது. எனவே இப்படம் தானோஸைப் பற்றிய படம் என்றே சொல்லிவிடமுடியும். தானோஸுக்கு இருக்கும் பின்னணிக் கதையைப் படத்தில் காட்டவேண்டும் என்று விரும்பியதாகவும், பின்னர் கடைசி நிமிடத்தில் அது வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதையும், அதற்குப் பதில் வசனங்களில் ஆங்காங்கே அவற்றை சொருகிவிட்டதாகவும் இயக்குநர்கள் ருஸ்ஸோ சகோதரர்கள் சொல்லியிருக்கின்றனர்.

இதோ இந்த வீடியோவைப் பார்த்தால், இந்தக் கட்டுரையில் நான் சொன்னதையெல்லாம் கச்சிதமாக ஆங்காங்கே மார்வெல் அவர்களின் படங்களில் எப்படி நுழைத்திருக்கிறது என்று புரிந்துகொள்ளமுடியும்.

அடுத்த கட்டுரையில் இன்னும் சில விஷயங்களைக் கவனிக்கலாம்.

(தொடரும்)

Avengers: Infinity War (2018) – English : Part 1
அவெஞ்சர்களைப் பற்றிய அறிமுகத்துக்கு, நம் தளத்தின் பழைய கட்டுரைகளைப் படித்துப் பார்க்கலாம் —> Everything about Avengers from Karundhel.com

கடந்த பத்து ஆண்டுகளாக நாம் நன்கு அறிந்த அவெஞ்சர்கள் அத்தனை பேரும் இணைந்து செயல்படும் ஒரு பிரம்மாண்டமான போர்க்களம். அந்தக் களத்தின் மையத்தில், அனைவரையும் இணைக்கும் புள்ளியாக, பல வருடங்களாக நாம் மார்வெல் படங்களில் ஆங்காங்கே கேட்டுக்கொண்டும், போஸ்ட் க்ரெடிட்கள் மற்றும் ஒரு சில காட்சிகளில் பார்த்துக்கொண்டும் இருந்த தானோஸ் (Thanos). கெவின் ஃபீய்ஜ் பத்து வருடங்கள் முன்னர் போட்ட அட்டகாசமான திட்டத்தின் முதற்கட்ட க்ளைமாக்ஸ் இது. இதற்குப் பின்னும் மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸ் தொடரத்தான் போகிறது என்பது கெவின் ஃபீய்ஜ்ஜின் கருத்து. அதெல்லாம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.

முதலில், Infinity Stones.

Guardians of The Galaxy படத்தில் இந்த இன்ஃபினிடி ஸ்டோன்ஸ் பற்றிய விரிவான அறிமுகம் வருகிறது. அந்தப் படத்தில் Collector என்ற கதாபாத்திரம் இதை விளக்குகிறது. அதேபோன்ற விளக்கம் Infinity War படத்திலும் துவக்கத்தில் வரும். அண்டவெளி என்பது ஒன்று உருவாவதற்கு முன்னாலேயே ஆறு பிரம்மாண்ட சக்திகள் இருந்துவந்தன. Cosmic Entities என்ற பெயரில் இருக்கும் சக்திகளால் உருவாக்கப்பட்டவையே இந்த இன்ஃபினிடி ஸ்டோன்ஸ். Lord of the Rings படங்களில் வரும் மோதிரங்கள் போன்றவை இவை. ஒவ்வொரு கல்லுக்கும் ஒவ்வொரு சக்தி. இவைகளை வைத்துக்கொண்டு பல கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பலரும் அவற்றின் சக்தியைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். Entrophy, Infinity, Death & Eternity என்பதே இந்தக் கற்களை உருவாக்கிய சக்திகளின் பெயர். இந்தக் கற்களை சாதாரண நபர்களால் கட்டுப்படுத்த இயலாது. எனவே, அந்தக் கற்களைச் சுற்றி ஒரு கவசம் போன்ற ஒன்றை உருவாக்கி, அதன்பின் அவற்றைப் பயன்படுத்தியவர்கள் பலர்.

உதாரணமாக, முதன்முதலில் மார்வெல் படங்களில் நாம் பார்த்த இன்ஃபினிடி கல்லான Tesseract என்பதைச் சொல்லலாம். அதனுள் இருந்தது Space Stone. அந்தக் கல்லை நேரடியாக உபயோகிக்காமல், டெஸராக்டினுள் வைத்து உபயோகித்து வந்தனர். அதைத்தான் லோகி Avengers படத்தின் முதல் காட்சியில் S.H.I.E.L.D அமைப்பிடம் இருந்து திருடினான். இந்தக் கல்லை வைத்துக்கொண்டு பல portalகளை உருவாக்கி, வெவ்வேறு விண்வெளிகளுக்கு இடையே செல்லமுடியும்.

Captain America: The First Avenger திரைப்படத்தில், ரெட் ஸ்கல் என்ற வில்லனிடம் இருந்தது இந்த டெஸராக்ட்தான். இதைவைத்துக்கொண்டுதான் HYDRA அமைப்பினால் பல ஆயுதங்களை உருவாக்க முடிந்தது. இதைத்தான் கேப்டன் அமெரிக்கா அந்தப் படத்தின் இறுதியில் விமானம் மூலம் அழித்தார். அதைத்தான் S.H.I.E.L.D அமைப்பினர் கண்டுபிடித்து, தங்களிடம் வைத்துக்கொண்டனர் (THOR படத்தின் End Credits). அதைத்தான் அவெஞ்சர்ஸ் படத்தின் துவக்கத்தில் லோகி திருடினான். அந்தப் படத்தின் இறுதியில் தோர் லோகியைக் கைதுசெய்து, ஆஸ்கார்ட் கிரகத்துக்குக் கொண்டுசென்றுவிடுவார். அவருடன் அந்த டெஸராக்டும் பயணப்படும். Thor: Ragnarok படத்தில், அந்த டெஸராக்ட் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் லோகி செல்வது காட்டப்பட்டிருக்கும். எனவே, அந்தக் கல் லோகியிடம் சென்றுவிட்டது. அந்தப் படத்தின் இறுதியில், ஆஸ்கார்ட் அழிந்தபின் அனைவரும் ஒரு விண்கலத்தில் பயணப்படும்போது, ராட்சத விண்கலம் ஒன்று இவர்களின் கப்பலை வழிமறிக்கும். Infinity Wars பார்த்தவர்களுக்கு, அது தானோஸின் விண்கலம் என்று புரிந்திருக்கும். இதனால், இன்ஃபினிடி வார்ஸ் படத்தின் முதல் காட்சியிலேயே தானோஸிடம், லோகி வைத்திருந்த Space Stone சென்றுவிட்டது.

அடுத்து, Mind Stone.

Avengers படத்தில், லோகியின் கையில் இருக்கும் ஆயுதத்தில் ஒரு கல் பதிக்கப்பட்டிருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும். அந்தக் கல்தான் மைண்ட் ஸ்டோன். இதை வைத்துக்கொண்டு பிறரின் மனங்களை எளிதில் கட்டுப்படுத்த இயலும். அந்த ஆயுதத்தை எல்லாரின் நெற்றியிலும் லோகி வைத்து அவர்களைக் கட்டுப்படுத்துவதை அப்படத்தில் காணமுடியும். இந்தக் கல்லை லோகியிடம் கொடுத்தது யார் தெரியுமா? தானோஸே தான். லோகியால் பூமியைக் கைப்பற்ற முடியும் என்று நம்பியே தானோஸ் அக்கல்லை லோகியிடம் கொடுத்தான். இந்தக் கல், Age of Ultron திரைப்படத்தில் டோனி ஸ்டார்க்கின் வசம் வருகிறது. இந்தக் கல்லின் அபரிமிதமான சக்தியால்தான் அப்படத்தில் Ultron என்ற சுயமாகச் சிந்திக்கக்கூடிய ப்ரோக்ராமை டோனி ஸ்டார்க் உருவாக்குகிறார். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் அந்தப்படம். அப்படத்தின் இறுதியில், Vision என்ற சூப்பர்ஹீரோவாக அந்தப் ப்ரோக்ராம் உருமாறுகிறது. அதன் தலையில் Mind Stone பதிக்கப்படுகிறது.

Reality Stone

இந்தக் கல்லால், எந்தப் பொருளையும் கட்டுப்படுத்த முடியும். Malekith என்ற கொடூரமான வில்லன், இந்தக் கல்லை வைத்துக்கொண்டுதான் ஆதிகாலத்தில் ஆஸ்கார்டின் மீது படையெடுத்தான். Dark Elves என்ற அவனது இனம், ஈதர் (Aether) என்ற சக்திவாய்ந்த ஆயுதம் ஒன்றை வைத்துக்கொண்டு ஒன்பது உலகங்களையும் தாக்கி வெல்லப்பார்க்கிறது. இந்த ஈதர் என்பது ஆயுதம் என்று நான் சொன்னது சரியல்ல. அது ஒரு சக்தி. ஆனால், அஸ்கார்டில் இருந்து, தோரின் தாத்தா போர் (Bor) பாய்ந்து வந்து, இந்த இருண்ட தேவதைகளை தடுக்கிறார். அந்த நேரத்தில், அவர்களின் தலைவன் மாலெகித் (Malekith) அங்கிருந்து தப்பித்து, எங்கோ அண்டவெளியில் தனது சில சகாக்களோடு சென்று ஒளிந்துகொள்கிறான். அப்படியே அந்த விண்கலம் பிறரது பார்வையில் இருந்து மறைந்துவிடுகிறது. அந்த ஈதர் என்ற சக்தி, போரினால் எங்கோ ஒளித்து வைக்கப்படுகிறது. அவன் பின்னர் Thor: The Dark World படத்தில் திரும்புவான். அதே ஈதரை உபயோகிக்க நினைப்பான். இந்த ஈதர் என்பது ரியாலிடி ஸ்டோனால்தான் கட்டுப்படுத்தப்படுகிறது.

அந்தப் படம் முடிந்ததும் ஆஸ்கார்டில் இருந்து இருவர், கலெக்டரிடம் சென்று இந்த ரியாலிடி ஸ்டோனைக் கொடுப்பார்கள். இப்படித்தான் இந்தக் கல், கலெக்டரிடம் வந்து சேர்ந்தது. அந்தக் கல்லைத்தான் தானோஸ், Infinity War படத்தில் கலெக்டரை எளிதில் அடித்துப்போட்டுவிட்டு எடுத்துக்கொண்டு செல்வான். கூடவே கமோராவையும் கவர்ந்துசென்றுவிடுவான்.

The Power Stone

இந்தக் கல்லின் சிறப்பம்சம், இதை வைத்துக்கொண்டு மாபெரும் சக்தியை உருவாக்கி, ஒரு கிரகத்தையே அழிக்க முடியும். Guardians of the Galaxy திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில், ஸ்டார் லார்ட், ஒரு இருண்ட இடத்துக்கு வந்து, The Orb என்ற உருண்டையான வஸ்துவைத் திருடுவான் அல்லவா? அதற்குள் இருந்ததே இந்தப் பவர் ஸ்டோன். அந்த இடம் சாதாரணமான இடம் அல்ல. Infinity Stones உருவாக்கப்பட்டபோது, இந்த இடத்தில்தான் Entrophy, Infinity, Death & Eternity ஆகிய நான்கு மாபெரும் சக்திகள் அவற்றை உருவாக்கின. அந்தப் படத்தில், அந்தக் காட்சியிலேயே பின்னணியில் வரும் சுவற்றில் இவர்களின் உருவங்கள் பதிக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தின் பெயர் மோராக் (Morag). அது ஒரு கோயில்.

இந்தக் கல்லை, ஸ்டார் லார்டிடம் இருந்து Ronan The Accuser என்பவன் பறித்துக்கொள்கிறான். அவன் வேலை, அக்கல்லை தானோஸிடம் அளிப்பது. மாறாக, அதைத் தானே வைத்துக்கொண்டு, அப்படத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழிக்கப்போவதாக தானோஸிடமே சவால் விடுவான்.

அந்தப் படத்தின் இறுதியில், இக்கல்லை கார்டியன்ஸ் கைப்பற்றி, Nova Corps என்ற விண்வெளி போலீஸிடம் அளிப்பார்கள் (படத்தின் துவக்கத்தில் ஸ்டார் லார்ட் கைதுசெய்யப்படுவான் அல்லவா? அவனைக் கைது செய்பவர்களே நோவா கார்ப்ஸ்).

ஆனால் இந்த நோவா கார்ப்ஸை மிக எளிதாக அழித்துவிட்டு, அக்கல்லை தானோஸ் கைப்பற்றிவிடுகிறான். Infinity Wars படத்தின் துவக்கத்திலேயே தானோஸின் மூலம் இதை நாம் அறிந்துகொள்கிறோம். படத்தில் அக்காட்சிகள் காட்டப்படவில்லை. ஒருவேளை அடுத்த படத்தில் அக்காட்சி ஒரு ஃப்ளாஷ்பேக்காக வரக்கூடும்.

The Time Stone

காலத்தை மிக எளிதாக முன்னும் பின்னும் கட்டுப்படுத்துவதே இக்கல்லின் வேலை. Doctor Strange படத்தில், ஸ்டீஃபன் ஸ்ட்ரேஞ் இக்கல்லை, Library of Kamar-Taj கட்டிடத்தில் கண்டுபிடிப்பார். படத்தின் இறுதியில் வில்லன் டோர்மாம்முவை டைம் லூப்பில் சிக்கவைத்து கடுப்பேற்றி விரட்டுவாரே – அது இந்தக் கல்லின் உதவியால்தான். இக்கல்லை, Eye of Agamotto என்ற ஒரு பெண்டண்ட்டினுள் வைத்து, டாக்டர் ஸ்ட்ரேஞ்சே தன்னுடன் வைத்துப் பாதுகாத்து வருகிறார். இக்கல்லைத்தான் அவரே முன்வந்து தானோஸிடம் அளித்துவிடுவார், இன்ஃபினிடி வார் படத்தில். அதற்கான காரணம் எளிது. அவரால் இக்கல்லின் உதவியால் காலத்தில் முன்னும் பின்னும் சென்று பார்க்க இயலும். எனவே தானோஸை எப்படி வெல்வது என்பதை எதிர்காலத்துக்குள் சென்று பார்த்து, அதனாலேயேதான் அக்கல்லை அவனிடம் கொடுப்பார். அப்படித் தானோஸிடம் அக்கல் கிடைத்தால்தான் அவெஞ்சர்கள் அவனை வெல்ல முடியும் என்பதே காரணம். அதனால்தான் தானோஸினால் மரண அடி வாங்கிய டோனி ஸ்டார்க்கையும் விட்டுவிடச்சொல்லி, தானோஸிடம் சொல்வார். இதன் விளைவை அடுத்த படத்தில் காணமுடியும்.

Soul Stone

Infinity War படத்தின் மிக முக்கியமான கல் இது. அடுத்த படத்தில் இது இன்னும் நன்றாக உபயோகிக்கப்படப்போகிறது. இக்கல்லினால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும். அதேபோல், உயிரோடு இருப்பவர்களை மறையவைத்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர்களின் உயிரை அடைத்துவைக்கவும் முடியும். இந்தக் குறிப்பிட்ட இடம், Infinity War படத்தில் வருகிறது. அதில் தானோஸ், குட்டிப்பெண்ணாக இருக்கும் கமோராவைப் படத்தின் இறுதியில் ஒரு இடத்தில் சந்திப்பான். அந்த இடம்தான் இது. காலம், வெளி ஆகிய எதுவும் அற்ற இடம். இந்தக் கல்லுக்கேயான பிரத்யேகமான உலகம் அது.

ஓகே. இப்போது எல்லாக் கற்களையும் பார்த்தாயிற்று. இந்தக் கற்களையெல்லாம் யாருமே தங்களின் கைகளில் வைத்திருக்கவே முடியாது. அவற்றின் சக்தி அவர்களை அழித்துவிடும். எனவே, Infinity War படத்தில் வரும் Dwarf ( Eitri என்பதே அவனது பெயர்) மூலமாக, ஆரம்பத்திலேயே ஒரு கையுறையைத் தயார்செய்துகொண்டு, பின்னர் அவர்களின் கிரகமான Nidavellirஇல் இருக்கும் அத்தனை பேரையும் அழித்துவிடுகிறான் தானோஸ். அழித்தல் அவனது இயல்பு. அழித்தலின் மூலம்தான் அண்டவெளியின் balance காப்பாற்றப்படும் என்பது அவன் கருத்து. ஆனால் இந்த எய்த்ரி மட்டும் அழிக்கப்படாமல் தானோஸினால் விடப்பட்டுவிடுகிறான். அவன் ஒரு தேவதச்சன் போன்றவன். ஆயுதங்களை உருவாக்குவதில் கில்லாடி. இறந்துகொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தின் சக்தியால் தோருக்கு, Stormbreaker என்ற ஆயுதத்தை உருவாக்கிக் கொடுக்கிறான் எய்த்ரி. இந்த ஆயுதத்தால் தானோஸின் இதயத்தைக் கிழிக்க தோரால் முடிகிறது. ஆனால் அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் தானோஸ், Soul Stone இன் உதவியால் அவெஞ்சர்களில் சரிபாதியை அந்தக் கல்லின் உலகத்துக்குள் சிறைப்பிடித்துவிடுகிறான்.

இவைதான் கற்களைப் பற்றிய விவரங்கள். அடுத்த கட்டுரையில் இன்னும் பல விஷயங்களைப் பார்க்கலாம்.

(தொடரும்)..

Mukkabaaz (2018) – Hindi
இந்தியாவின் வட பகுதிகளிலும் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும், சாதி என்பது இன்றுமே பிரதான பங்கு வகிக்கும் ஒரு விஷயம். பெயருக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்ப்பதே அங்கெல்லாம் வழக்கம். நான் பெங்களூரில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுமே – அதிலும் ITயில்- என்னிடம் பேசிய வட-கிழக்கு-மேற்கு  இந்தியர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் நேரடியாகவே முகத்துக்கு நேராகவே, ‘நீ எந்த சாதி?’ என்றே கேட்டிருக்கின்றனர். அதில் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. காரணம் அவர்களுக்குள், அவர்களின் பெயர்களைக் கேட்டதுமே அது புரிந்துவிடுகிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பெயருக்குப் பின்னால் தகப்பன்களின் பெயர்களைப் போட்டுக்கொள்வதால் அவர்களுக்கு இந்தக் குழப்பம். தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக்கொள்ளும் வழக்கம் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது என்றாலுமே, இன்றும் இங்கும் சாதியின் பெயரால் நடக்கும் பிரச்னைகளை நாம் படித்துக்கொண்டும் கேள்விப்பட்டுக்கொண்டும்தான் இருக்கிறோம். ஆனாலும் ஒருசில விஷயங்களில் வட-கிழக்கு-மேற்கு இந்தியாவுக்கு நம் தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை.

இந்தச் சூழலில், வட இந்தியாவில் முன்னேறத் துடிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனுக்கு சாதியின் பெயரால் நடக்கும் அநியாயங்கள் என்னென்ன என்பதை ஒரு முக்கியமான விஷயமாக எடுத்துக்கொண்டு பேசியிருப்பதே ‘முக்காபாஸ்’ படத்தின் பிரதான அம்சம்.

அனுராக் காஷ்யப் இப்படத்தில் செய்திருப்பது என்னவென்றால், ஒரு சாதாரண காதல் கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு இப்படிப்பட்ட உண்மையான பிரச்னைகள் சார்ந்த காட்சிகளைப் பின்னணியில் வைத்திருப்பதுதான். இதனாலேயே இந்த சாதாரணமான கதை, அசாதாரணமான ஒரு தளத்தில் வைக்கப்பட்டுவிடுகிறது. படத்தின் வில்லனின் பெயர் ‘பக்வான் தாஸ் மிஷ்ரா’. மிஷ்ரா என்பது பிராம்மணர்கள் உபயோகிக்கும் சாதிப்பெயர். அவனுமே படம் முழுதுமே, ‘நாமெல்லாம் பிராமணர்கள். நம்மை விடக் கீழ்சாதியினரிடம் நாம் தோற்றுவிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான். அந்த ஊரின் பெரிய மனிதனாகவும் இருக்கிறான். அவனால் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்துவிடமுடியும். இந்தச் சூழலில், ‘டாக்குர்’ சாதியைச் சேர்ந்த ஒருவன், இவனது பிராம்மண சாதியைச் சேர்ந்த ஒரு நெருங்கிய உறவுக்காரப்பெண்ணைக் காதலித்துவிட்டால்? (இவனது சகோதரன் மகள்).  இவனது உதவியில்லாமல் அவனால் குத்துச்சண்டை வீரனாக ஆகவே முடியாத சூழ்நிலை என்றால்?

இதுதான் முக்காபாஸ். இதில் இருக்கும் இரண்டு விஷயங்கள் – எளியவன் ஒருவன் குத்துச்சண்டை வீரனாக மாறுவது மற்றும் ஏழை ஒருவன் பணக்காரப் பெண்ணைக் காதலிப்பது ஆகியவை இந்திய சினிமாவில் மிகப்பழைய விஷயங்கள். ஆனால் அவைகளை மிக இயல்பாக, சாதி சார்ந்த பின்னணியில் காட்டியதுதான் அனுராக் காஷ்யப்பின் சாமர்த்தியம். அதனாலேயே முக்காபாஸ் பலராலும் பேசப்பட்டுக்கொண்டும் இருக்கிறது.

இதில் ஒருசில குறியீடுகளை அனுராக் காஷ்யப் வைத்திருக்கிறார். முதலாவது, கதாநாயகிக்கு வாய்பேச இயலாது. அவள் ஒரு பெண். அதிலும் ஆணாதிக்க சிந்தனைகள் உச்சத்தில் இருக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த பெண். எனவே, வாய்பேச முடிந்தாலும் அவளால் இவைகளுக்கெதிராகக் குரல் எழுப்ப இயலாதுதான். இதுதான் அவளால் பேச முடியாமல் இருப்பதற்கான குறியீடு. ஆனால் அவளது செய்கைகளின் மூலம் தன்னைக் காதலிப்பவனை மணந்துகொண்டுவிடுகிறாள். அவன் தனது லட்சியத்தை அடைவதற்கு உற்ற துணையாகவும் இருக்கிறாள். மிகவும் தைரியமான, வெளிப்படையான ஒரு பெண் இப்படத்தின் நாயகி.

படத்தின் நாயகன், தனது விளையாட்டுத் திறமையால் ஒரு அரசு அலுவலகத்தில் சேர்கிறான். அவனுக்கு மேலதிகாரியாக இருப்பவர் ஒரு யாதவ். இவனோ ஒரு டாக்குர். யாதவ் இனம், டாக்குர்களிடம் பல்லாண்டுகாலம் அடிமையாக இருந்தது என்பது நமக்கே தெரியும். இந்த சூழலில், யாதவ் சாதியைச் சேர்ந்த அந்த மேலதிகாரி, டாக்குர் சாதிக்காரன் ஒருவன் அவருக்கு அடிமையாக வேலை செய்வதை – குறிப்பாக அவன் மேஜையைத் துடைப்பதை புளகாங்கிதத்தோடு வீடியோ எடுக்கிறார். எடுக்கும்போதே அவனிடம் சொல்லவும் செய்கிறார் – ‘காலம் எப்படி மாறிவிட்டது பார்த்தாயா? என் தந்தை, உங்கள் இனத்தினரிடம் வேலைக்காரராக இருந்தார் தெரியுமா?’ என்று. இதுபோன்ற வசனங்கள் படம் நெடுகிலும் ஆங்காங்கே இருக்கின்றன. ஒரு இடத்தில், மகள் விருப்பப்படும் நாயகனுக்கே தனது பெண்ணை மணம் செய்துகொடுக்க முடிவுசெய்துவிடும் சகோதரனை அழைத்து, ‘அடேய். அவள் உனது பெண் தானே? அப்படியென்றால் உன் முடிவுதானே அங்கே எடுக்கப்படவேண்டும்? அவள் நினைப்பதையெல்லாம் நாம் செய்துவிடலாமா? நம் குடும்பத்தில் எப்போதுமே பெண்களின் முடிவுகளை நாம் மதிக்காமல்தானே இருந்திருக்கிறோம்?’ என்று கேட்கிறான். இதுபோன்ற வசனங்களால், அந்தப் பிராந்தியம் இன்றும் எப்படி இருந்துகொண்டிருக்கிறது என்பதை அனுராக் அட்டகாசமாகக் காட்டியிருக்கிறார்.

படத்தில் காண்பிக்கப்படும் இன்னொரு விஷயம் – இந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு அமைப்புகளில் ஏன் நல்ல வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. குறிப்பாக, மூளை வீங்கிய முதலாளிகள் எதைப்பற்றியும் யோசிக்காமல் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளால் எப்படித் திறமையான வீரர்களை வீணடிக்கிறார்கள் என்பதைக் கச்சிதமாகக் காட்டியிருக்கிறது இப்படம்.

படத்தில் தற்கால இந்தியாவைத் தோலுரித்துக் காட்டும் பல வசனங்கள் இருக்கின்றன. ‘பாரத் மாதா கீ ஜேய்’ என்று கத்திக்கொண்டே ஹீரோ வில்லனை அடி வெளுக்கும் காட்சி ஒரு உதாரணம். படம் ஆரம்பிப்பதே மாட்டுப் பிரச்னை  சம்மந்தப்பட்ட காட்சியோடுதான். அதேபோல், ஒரு காட்சியில், தன்னிடம் வந்து இறைஞ்சும் ஹீரோவை எப்படி வில்லன் அவமானப்படுத்துகிறான் என்று கவனியுங்கள்.

ஒட்டுமொத்தமாக, இப்படத்தைப் பற்றி அனுராக் காஷ்யப் சொல்லியிருப்பதே போதும். ‘தற்கால இந்தியாவில் நடக்கும் பல பிரச்னைகளை இப்படத்தில் வைக்க விரும்பினேன். ஆனால் சென்சாரில் வெட்டுப்படக்கூடாது என்பதால், சாமர்த்தியமாக அவைகளை உள்ளே நுழைத்தும் விட்டேன்’. இதுதான் இப்படத்தின் அடித்தளம். இதற்கு மேல்தான் பிற சம்பவங்கள். வழக்கமான அனுராக்கின் ப்ளஸ் பாயிண்ட்களான இயல்பான நடிப்பு, பாடல்கள், காட்சிகள் ஆகிய எல்லாமே இப்படத்தில் உண்டு என்பதால், படம் சுவாரஸ்யமாகவும் இயல்பாகவும் செல்கிறது. இருப்பினும், படத்தின் நீளம் என்னைக் கொஞ்சம் நெளியவும் வைத்தது. இரண்டு மணி நேரங்கள் மட்டும் என்று இருந்திருந்தால் இன்னும் வேகமாகவும் அட்டகாசமாகவும் இருந்திருக்கும்.

Amitabh Bachchan – The Phenomenon
சில வாரங்கள் முன்னர் தமிழ் ஹிந்துவில் வெளியான கட்டுரை இது.

அமிதாப் பச்சன் என்ற சூப்பர்ஸ்டார், ஒரு நல்ல நடிகராகப் பரிமாணம் அடைந்தது அவர் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திக்கொண்டபின்புதான். 1992வில், ‘ஹுதா கவா’ (Khuda Gawah) படத்திற்குப் பிறகு, ‘இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை’ என்ற முடிவை அவர் மேற்கொண்டபோது அவருக்கு வயது ஐம்பது. அந்த வகையில், இந்தியாவின் பல சூப்பர்ஸ்டார் நடிகர்களுக்கு அவர் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார் எனலாம். ரஜினிகாந்துக்குத் தற்போது அறுபத்து ஏழு வயது. இன்றும் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். அதனாலேயே ‘லிங்கா’ போன்ற அபத்தங்கள் நிகழ்ந்தன. கமல்ஹாஸனுக்கு வயது அறுபத்து மூன்று. அவரும் இப்போது வரை ஹீரோதான். இவ்வளவு ஏன்? கன்னடத்தின் ராஜ்குமார், இறக்கும்வரை ஹீரோ. விஷ்ணுவர்த்தனும் அப்படியே. சிரஞ்சீவி அரசியலில் இருந்து திரும்பிவந்தபின் இப்போதும் ஹீரோதான். இன்னும் இந்தப் பட்டியலில் மம்மூட்டி, மோகன்லால் என்று பலரும் உண்டு. இவர்கள் யாருமே செய்யத் துணியாததை, ஐம்பது வயதிலேயே அமிதாப் செய்துவிட்டார் (ஆனால் கமல்ஹாஸன், கடந்த சில வருடங்களாகத் தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் செய்து வருவதை அவசியம் குறிப்பிடவேண்டும்).

இதற்கும் முன்னரே நடிப்பில் இருந்து சில வருடங்கள் விலகியிருந்த அனுபவம் அமிதாபுக்கு உண்டு. 1986ல், ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் ரீமேக்கான ‘ஆக்ரி ராஸ்தா’ படத்தில் நடித்துமுடித்ததோடு நடிப்பை விட்டுவிட்டு, அரசியலில் புகுந்தார். அதன்பின் 1988ல்தான் மறுபடி நடித்தார். இந்த இடைவெளியில், அலஹாபாதில் இந்தியாவின் மிகப்பெரிய வோட்டு வித்தியாசங்களில் ஒன்றில் பகுகுணாவுக்கு எதிராகப் போட்டியிட்டு ஜெயித்தார். பின் மூன்றே வருடங்களில் பதவியை ராஜினாமா செய்து, திரைப்படங்களில் மறுபடியும் நடிக்க ஆரம்பித்தார்.

ஹுதா கவா திரைப்படத்துக்குப் பின்னர், தனது ABCL நிறுவனத்தைக் கவனிப்பதில் நேரம் செலவிட்டார் அமிதாப். அந்த நிறுவனம் பல பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு, மீளாக் கடனில் தவித்தபோதுதான் திரும்பவும் நடிக்க வந்தார். ஆனால் அப்போது வயதுக்குரிய கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கி, தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் துவக்கினார். ஆரம்பத்தில் அப்படி அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன. அமிதாபின் இரண்டாவது இன்னிங்ஸின் மிகப்பெரிய வெற்றிப்படமாகத் திகழ்ந்து, அவரை நல்ல நடிகராக அடையாளம் காட்டிய முதல் படம் – ‘மொஹப்பதே(ய்)ன்’. ஆதித்ய சோப்ரா இயக்கிய படம். ஷா ருக் கான், ஐஸ்வர்யா ராய் நடித்தது. இதில், கடுமையான ஒழுக்கம் நிரம்பிய கல்லூரி முதல்வராக, காதலை எதிர்த்து வாழும் கதாபாத்திரமாக நடித்திருந்தார். இந்தப் படத்துக்குப் பின்புதான் அமிதாப் பச்சன் என்ற நடிகருக்காகவே திரைப்படங்கள் எழுதப்பட்டன.

அப்படி வெளியான படங்களில் மிக முக்கியமானது ‘அக்ஸ்’ (Aks). அமிதாப் எழுபதுகளில் மாபெரும் ஹீரோவாகத் திகழ்ந்தபோது, அவரது வெற்றிக்குப் பக்கபலமாகத் திகழ்ந்த இயக்குநர் ப்ரகாஷ் மெஹ்ராவின் மகன் ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மெஹ்ரா இயக்கிய படம். மிக வித்தியாசமான கதைக்களம் கொண்டது. அமிதாபுக்கு எதிராக நடித்தவர் இன்னொரு அட்டகாசமான நடிகரான மனோஜ் பாஜ்பாய். படம் பெருவெற்றி அடையாவிட்டாலும், அமிதாப்பின் வில்லத்தனமான நடிப்பை அனைவருக்கும் அடையாளம் காட்டியது. இதன்பின்னர் நடிகர் அமிதாப் பச்சனின் காட்டில் அடைமழை பெய்யத் துவங்கியது (இதுதான் கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் அமிதாப் தொகுப்பாளராக மாறிய தருணமும் கூட. அது அவரை இந்தியாவின் அத்தனை வீடுகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது).

இதோ இந்தப் பாடலை மறக்காமல் பாருங்கள்.

ஆனால் இந்த இரண்டாவது இன்னிங்ஸிலும் சில கொடூரங்கள் அமிதாபுக்கு நிகழ்ந்தன. கரன் ஜோஹர் இயக்கிய ‘கபி குஷி கபி கம்’, சஞ்ஜய் குப்தா இயக்கிய ‘காண்டே’ (க்வெண்டின் டாரண்டினோ இயக்கிய ரிஸர்வாயர் டாக்ஸின் அப்பட்டமான நகல்), கைஸத் குஸ்தாத் இயக்கிய ‘பூம்’, ரவி சோப்ரா இயக்கிய ‘பாக்பான்’ (இந்தப் படம், எண்பதுகளில் விசு இயக்கிய ‘வரவு நல்ல உறவு’ படத்தின் ரீமேக். யோசித்துப் பாருங்கள். விசு செய்த கதாபாத்திரத்தை அமிதாப் பச்சன் செய்தால் எப்படி இருக்கும்? பிழியப் பிழிய அழவைக்கும் ஒரு குடும்ப சீரியல் போன்ற படம் இது) என்று வரிசையான கொடுமைகள் அமிதாபுக்கு நிகழ்ந்தன. அமிதாப் பச்சன் என்ற ஹீரோ, நடிகராக மாறிவிட்டார் என்று தெரிந்ததும், பாலிவுட்டின் அத்தனை மொக்கை இயக்குநர்களும் அமிதாப்பின் மீது வெறியுடன் பாய்ந்து விழுந்து கடித்து விட்டனர் என்றுதான் இந்தக் காலகட்டத்தைச் சொல்லமுடியும். அவ்வப்போது அமிதாப்பை இவர்களிடம் இருந்து காப்பாற்றியவர்கள் என்று ஃபர்ஹான் அக்ஹ்தர் (லக்‌ஷ்யா), யாஷ் சோப்ரா (வீர்  ஸாரா – இதுவே ஒரு கண்ணீர்க் காவியம்தான். ஆனால் காலம் சென்ற மதன் மோஹனின் நல்ல இசையால் தப்பியது), அமோல் பாலேகர் (பஹேலி), நிஷப்த் (ராம் கோபால் வர்மா) போன்றவர்கள்தான். இதில் ராம் கோபால் வர்மா, அமிதாப்பை விடாமல் பிடித்துக்கொண்டு, அவரது திரைவாழ்க்கையிலேயே ஆகச்சிறந்த கொடூரமான ‘ஆக்’ (ஷோலேவின் ரீமேக்) படத்தை எடுத்தார். இதற்குப் பிறகும் சர்க்கார் படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களில் நடித்தது அவசியம் அமிதாப்பின் பெருந்தன்மை என்றுதான் சொல்லவேண்டும்.

அமிதாப் நடிகராக மாறிய காலகட்டத்தில் ஒரு சில மறக்கமுடியாத படங்கள் உண்டு. அவற்றில் ‘ப்ளாக்’ படத்துக்குத் தனி இடம் உண்டு. அந்தப் படம் பார்த்தவர்கள், பார்வையற்ற ராணி முகர்ஜியின் கதாபாத்திரத்துக்கும், அமிதாப்பின் கதாபாத்திரத்துக்கும் இருக்கும் அற்புதமான தொடர்பை எண்ணிப் பார்க்காமல் இருக்கமுடியாது. சஞ்சய் லீலா பன்ஸாலி எடுத்த அபூர்வமான நல்ல திரைப்படம் இது (இப்போதெல்லாம், ராஜஸ்தானி அங்கிகள் அணிந்துகொண்டு, ஐம்பது – நூறு பேரை மிகப் பிரம்மாண்டமான செட்களில் நடனமாட விட்டு, தீபிகா படுகோனேவை நடுவில் நடனமாட வைப்பதையேதான் பல வருடங்களாக இவர் செய்துகொண்டு இருக்கிறார். அவ்வப்போது திரைப்படங்களின் பெயரை மட்டும் மாற்றுவார்).

அதேபோல், The Last Lear படமும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் பலரின் கவனத்துக்கு ஆளாகாமலேயே போய்விட்டது. எனக்குத் தனிப்பட்ட முறையில் அமிதாப் நடித்து மிகவும் பிடித்த படம் இது. இதைப்பற்றி எப்போதோ ஒரு காலத்தில் நான் எழுதிய கட்டுரை – The Last Lear.

ராம் கோபால் வர்மா எடுத்த ‘சர்க்கார்’ படத்தையும் அவசியம் சொல்லியே ஆகவேண்டும். காட்ஃபாதரை நகலெடுத்திருந்தாலும் (நம்மூர் ‘நாயகன்’ போல), அற்புதமான தனித்தன்மையுடன் அமிதாப்பின் பிரம்மாண்டத்தை உணர்த்திய படம் அது. ’அக்னீபத்’ படத்தில் விஜய் தீனாநாத் சௌஹான் என்ற பெயரில் அட்டகாசமான நடிப்பை அமிதாப் கொடுத்திருப்பார். அதைவிட இது பிரம்மாண்டமான கதாபாத்திரம். இதேபோல், நம்மூர் பால்கி இயக்கிய ‘சீனி கம்’ (Cheeni Kum) படத்தையும் மறக்கமுடியாது. அமிதாப் பச்சன் காதலில் சிக்கியவராக நடித்த படங்கள் மிகக்குறைவு. அவற்றில் இது முக்கியமான ஒன்று. அறுபது வயதுக்கு மேற்பட்ட செஃப் ஒருவருக்குக் காதல் வந்தால் என்னாகும்? இளையராஜா தமிழில் இசையமைத்திருந்த அற்புதமான சில பாடல்களை ஹிந்திக்குக் கொண்டுசென்ற படம் இது. நன்றாகவும் ஓடியது. இதன்பின் பால்கி அமிதாப்பை வைத்து மேலும் இரண்டு படங்கள் இயக்கியாகிவிட்டது.  இரண்டுமே நல்ல படங்களே.

Paa – Review & Shamitabh – Review

இதன்பிறகு பல படங்கள் வந்தாலும், ஷூஜித் சர்க்கார் இயக்கிய ‘பிகு’ (Piku) மற்றும் அவர் கதை எழுதிய ‘பிங்க்’ (Pink) படத்தையும் குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும். இவை இரண்டையும் பார்க்கவில்லை என்றால் பார்த்துவிடுங்கள். இவற்றில் பிகுவே எனக்கு மிகவும் பிடித்த படம்.

நம் காலத்தின் மாபெரும் சூப்பர்ஸ்டார்களில் முதன்மையானவர் அமிதாப் பச்சன் என்ற வகையில், ஹீரோவாக இருந்தபின்னர் நடிகர் என்று மாறி, தன்னைக் கச்சிதமாக சினிமாவில் பொருத்திக்கொண்டவர் – அவர் இல்லாமல் அப்போதும் திரைப்படங்கள் இல்லை; இப்போதும் இல்லை என்ற நிலையைக் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாகத் தக்கவைத்துவருபவர் – எனது பள்ளி நாட்களை மறக்கமுடியாமல் ஆக்கிய ஹீரோ – என்று எப்படி எண்ணிப் பார்த்தாலும் அமிதாப் பச்சனை மறக்கவே முடியாது. தமிழில் ரஜினியும் கமலும் இப்படி வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை (ஹீரோவாகவே இல்லாமல் பிற கதாபாத்திரங்களையும்) சரமாரியாக நடித்துப் பெயர் வாங்கும் காலகட்டம் எப்போது வரும் என்று எண்ணிப் பார்க்கிறேன். அனேகமாக எனது ஐந்து வயது மகன் கல்லூரி சேரும்போதாவது அது வந்துவிட்டால் மகிழ்ச்சி.

The Post (2017) – English
அமெரிக்கப் படங்களில், உண்மைச் சம்பவங்களைச் சார்ந்த அரசியல் படங்கள் ஏராளம். அவற்றைப் பற்றி ஒரு சிறிய கட்டுரையும் எழுதியிருக்கிறேன். அங்கே என்ன நல்ல விஷயம் என்றால், அரசையும் அரசியல் அமைப்பையும் எப்படி வேண்டுமானாலும் திரைப்படங்களில் விமர்சிக்கலாம். நம்மூர் போல் அல்ல. அப்படி ஒரு படம் – மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட உண்மைச் சம்பவம் – அதையும் ஸ்பீல்பெர்க் இயக்கினால்? எதிர்பார்த்தபடியே ஆஸ்கர்களில் இப்படம்இரண்டு பிரிவுகளில் – சிறந்த நடிகைக்கான பிரிவில் மெரில் ஸ்ட்ரீப்புக்காகவும், சிறந்த படத்துக்கான பிரிவிலும் – நாமினேட் ஆகியிருக்கிறது.

ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். ஒரு நாட்டின் ரகசியங்கள் ஒரு செய்தித்தாளில் வெளியானால், அது சரியா தவறா? அதனால் அந்த நாட்டுக்கு அவப்பெயர்தான் கிடைக்கப்போகிறது என்ற நிலையில், இது தர்மமா அதர்மமா? இதுதான் இந்தப் படத்தின் மைய இழை. சுருக்கமாக – வியட்நாம் போரில் அமெரிக்க அரசு பலத்த முன்னேற்றம் கண்டுகொண்டிருப்பதாகவே யுனைடட் ஸ்டேட்ஸின் மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். அரசின் பிரச்சாரமே காரணம். ஆனால் கடந்த இருபது வருடங்களாகவே போரில் யுனைடட் ஸ்டேட்ஸின் படைகளுக்குப் பின்னடைவே என்பதுதான் உண்மை. இது போரில் ஈடுபட்ட அத்தனை மேல்மட்ட அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.

டேனியல் எல்ஸ்பெர்க் என்ற நபர், போர் நடந்த இடங்களுக்குச் சென்றிருக்கிறார். போரைக் கண்ணால் கண்டும் இருக்கிறார். அவர் அரசின் மேல்மட்ட அதிகாரிகளுடன் போருக்குச் சென்றவர். அப்போதே, போரில் யுனைடட் ஸ்டேட்ஸுக்குப் பின்னடைவுதான் என்பதைக் கண்டுகொண்டவர். அரசு அதிகாரிகளும் இதையேதான் நினைக்கிறார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். எனவே, சில வருடங்களுக்குப் பிறகு, அவர் கையில் கிடைக்கும் அத்தனை ரகசிய ஆவணங்களையும் – இவையெல்லாம் போரில் அமெரிக்க அரசின் உண்மை நிலவரத்தை சுட்டிக் காட்டும் ஆவணங்கள் – தயக்கமே இல்லாமல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வேலைசெய்யும் ஒரு ரிப்போர்ட்டருக்கு அனுப்பிவிடுகிறார்.

இதுதான் இப்படத்தின் துவக்கம். யுனைடட் ஸ்டேட்ஸ் அரசு, மக்களை நம்ப வைப்பதற்காக இருபது வருடங்களுக்கு மேல் நடத்திய ஒரு நாடகத்தின் முக்கியமான நிஜ ஆவணங்கள், இப்படியாக ஒரு செய்தித்தாளின் கைக்கு வந்து சேருகின்றன. இந்த இடத்தில், ஒரு சிறிய நிகழ்வாக, வாஷிண்டன் போஸ்ட் இதழின் நிறுவனர் கேதரீன் க்ரஹாம் என்ற பெண்மணி பற்றிய ஒரு சிறிய கதையும் விரிகிறது. அந்தப் பத்திரிக்கை, முதன்முதலாக ஒரு பப்ளிக் ஆஃபர் செய்யப்போகிறது. மக்களிடம் நிதி வசூலித்து, பங்குகள் விற்கப்போகிறது. பரம்பரை பரம்பரையாகத் தனது குடும்பத்திடம் இருந்த செய்தித்தாள் இப்போது மக்களுக்கு சொந்தமாகப்போவது பற்றி அவருக்குத் தயக்கம். இதை எப்படி எதிர்கொள்வது என்ற கலக்கம். கூடவே, இத்தனை நாட்கள் தனது கணவரால் நடத்தப்பட்ட பத்திரிக்கையில் பல ஜாம்பவான்கள் இன்னமும் வேலை செய்துகொண்டு உள்ளனர் என்பதும், அவர்களுக்குத்தான் தன்னை விடவும் பத்திரிக்கை பற்றி நன்றாகத் தெரியும் என்பதுமே அவருக்குப் புரியும். எனவே, தன்னால் இப்பத்திரிக்கையை நடத்த இயலுமா என்ற பயமும் அவருக்குள் இருக்கிறது.

இப்படி இருக்கையில், எல்ஸ்பெர்க், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையிடமும் அதே ரகசிய ஆவணங்களைச் சில திருப்பங்களுக்குப் பிறகு தருகிறார்.

இதுதான் இப்படத்தின் களம். அத்தனை பெரிய அரசு ரகசியத்தை எப்படி இரண்டு பத்திரிக்கைகள் மக்கள் முன் வைக்கப் பாடுபடுகின்றன என்பதும், நிக்ஸனால் ஆளப்படும் அரசு, எப்படி ஒரு இரும்புக்கரம் கொண்டு இதைத் தடுக்க நினைக்கிறது என்பதும்தான் கதை. இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைதான் பணக்காரப் பத்திரிக்கை. அதன் செல்வாக்கு மிகவும் பிரசித்தம். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையோ ஒரு ‘குடும்பப் பத்திரிக்கை’ என்றே படத்தில் ஒரு வசனம் வருகிறது. படத்தின் துவக்கத்தில் ஜனாதிபதி நிக்ஸனின் மகளுக்குத் திருமணம் நடக்கும். அந்தத் திருமணத்துக்கு ஒரே ஒரு ரிபோர்ட்டரைக் கூட அனுப்ப முடியாத பத்திரிக்கை அது. இதுதான் படத்தின் ப்ளஸ் பாயிண்ட். இப்படி ஒரு சொங்கி பத்திரிக்கை, அவ்வளவு பெரிய ரகசியங்களை எப்படிக் கையாளப்போகிறது?

இந்தக் கதையின் விசேட அம்சம் என்னவெனில், நமது தளத்தில் பல வருடங்களுக்கு முன்னர் நாம் பார்த்திருக்கும் ‘All the President’s Men‘ படத்துக்கும் இந்தப் படத்துக்கும் இருக்கும் தொடர்புதான். உண்மையில் ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்றே அழைக்கப்பட்ட இந்த சம்பவத்துக்குப் பின்னர்தான் ‘வாட்டர்கேட் ஊழல்’ என்ற பிரபல ஊழல் நடந்தேறியது. அதை வெற்றிகரமாக வெளிக்கொண்டுவந்த நிருபர்களின் கதைதான் ‘All the President’s Men’. எனவே, இந்தப் படம் அப்படத்துக்கு ஒரு வெற்றிகரமான prequel. இப்படத்தின் இறுதிக் காட்சிதான் All the President’s Men படத்தின் துவக்கக் காட்சி.

படத்தில் மெரில் ஸ்ட்ரீப்பும் டாம் ஹேங்ஸும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். மெரில் ஸ்ட்ரீப் எனக்கு மிகவும் பிடித்த நடிகையும் கூட. இப்படத்துக்காக அவருக்கு ஆஸ்கர்களில் நாமினேஷன் கிடைத்துள்ளது. அது அவருக்கு 21வது நாமினேஷன். இவற்றில் 2 தடவைகள் சிறந்த நடிகை விருதும், ஒரு முறை சிறந்த துணை நடிகை விருதும் வென்றுள்ளார். ஹாலிவுட் சரித்திரத்தில் யாருமே 21 முறைகள் நாமினேட் செய்யப்பட்டதும் இல்லை. இம்முறை அவர் இந்த விருதை வெல்ல வாய்ப்பிருப்பதாகவே நினைக்கிறேன்.

இத்தனை வருடங்கள் கழிந்தபோதும், ஒரு இயல்பான, குறைந்த பட்ஜெட் படத்தை ஸ்பீல்பெர்க் இயக்கியிருப்பது எனக்குப் பிடித்தது. அவர் தற்சமயம் இன்னொரு பெரிய பட்ஜெட் படம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அவ்வப்போது இப்படி இறங்கி நல்ல படங்களையும் கொடுத்தே வந்திருக்கிறார். படத்தின் சிறப்பம்சம் அதன் இயல்புத்தன்மை. ஆனால் அதுவே அதன் நெகட்டிவ் அம்சமாகவும் ஆகலாம். காரணம் படம் முழுதும் வசனங்களாலேயே ஓடுகிறது. அது சிலருக்கு அலுப்பைக் கொடுக்கக்கூடும்.

இப்படத்தின் இன்னொரு சிறப்பம்சம் இதன் வசனங்கள். குறிப்பாக, நிக்ஸன் பற்றிய வசனங்கள் அத்தனையுமே டொனால்ட் ட்ரம்புக்குக் கச்சிதமாகப் பொருந்துவதைக் காணலாம். கூடவே, டாம் ஹேங்ஸும் மெரில் ஸ்ட்ரீப்பும் இணைந்திருக்கும் காட்சிகளில் எல்லாம், இந்த இருவரின் பிரமாதமான நடிப்பைக் கவனிக்காமல் இருக்கவே முடியவில்லை. ஆரோக்கியமான போட்டி அது.

பலருக்கும் Spotlight படத்தின் நினைவு இப்படம் பார்த்தபின் வரலாம். எனக்கு வந்தது. படத்தின் உணர்வுபூர்வமான க்ளைமேக்ஸ் எனக்குப் பிடித்தது. உங்களுக்கும் அவசியம் பிடிக்கும்.

Carbon (2018) – Malayalam
நம் வாழ்க்கையில், நிலையான வேலை இல்லாமல், தெளிவான மாதச் சம்பளம் இல்லாமல், அங்கே இங்கே அலைந்து திரிந்து, ஏதோ ஒரு வேலையைச் செய்து, இந்திந்த வேலையில் இந்திந்தப் பலன்கள் உள்ளன என்றெல்லாம் தானாகவே மனக்கணக்கு போட்டுக்கொண்டு திரியும் எத்தனை பேரை நாம் சந்தித்திருக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். நம்மில் பலரும் நிலையான மாதச்சம்பளம் வாங்கிக்கொண்டு வாழ்ந்தவர்கள் அல்லது வாழ்பவர்கள் (நான் 12 வருடங்கள் ITயில் அப்படி இருந்து, தற்போது இரண்டரை வருடங்களாக சினிமாவில் இருப்பதால் நானுமே அப்படித்தான் என்று வைத்துக்கொள்ளலாம்). இவர்களில் பலரிடம் உள்ள ஒரே ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், செய்துகொண்டிருப்பதை மலை போல் நம்புவார்கள். அதில் இருந்து அவசியம் பெரும் பணம் ஒரு காலத்தில் வரப்போகிறது என்று உறுதியாக இருப்பார்கள். உண்மையில் எனது அனுபவத்தில் அப்படி ஒரு மிகப்பெரிய கூட்டத்தையே கோவையில் சந்தித்திருக்கிறேன். வைரம், வைடூரியம், மரகதக்கல் என்று என்னென்னமோ சொல்லிக்கொண்டு, கும்பல் கும்பலாக பேக்கரிகளில் டீ குடித்துக்கொண்டிருப்பார்கள். என் வீட்டின் அருகிலேயே. ஒரு பத்து வருடங்களாக இதே கும்பல் தினந்தோறும் அங்கே சந்தித்துக்கொண்டிருந்தது. இதே காரணங்கள். எல்லாருமே பத்து வருடங்களாக ஒரே நம்பிக்கை. ஒரே புன்சிரிப்பு. வாழ்க்கை விரைவில் மாறப்போகிறது என்ற உறுதியான எண்ணம். ஒரு நாள் அதில் தலைவர் வயதாகி இயற்கை மரணமே அடைந்துவிட்டார். உடனே அதில் இன்னொருவர் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இதுபோல ஒருவன் தான் சிபி செபாஸ்டியன். தனது வீட்டுக்கே வாரக்கணக்கில் வராமல் இருப்பவன். கையில் கிடைத்த வியாபாரங்களைச் செய்பவன். ஒரு காலகட்டத்தில் வைரக்கல் விற்கவேண்டும் என்பான். ஆனால் வைரம் அவனிடம் இருக்காது. வேறு ஒருவன் இவனிடம் அப்படிச் சொல்லியிருப்பான். ஆனால் அதை வைத்துக்கொண்டு ஒரு டீலரைப் பிடித்துவிடுவான். அங்கிருந்து ஓரளவு பணமும் கிடைக்கும். இப்படியே நிலையற்ற வாழ்க்கையை எப்படியும் பெரும் பணம் ஒரு நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே ஓட்டிக்கொண்டு இருப்பவன்தான் சிபி. இவனைப் பார்த்த மாத்திரத்தில் எனக்கு என் சிறுவயதில் பார்த்த பல நிஜமான மனிதர்கள் நினைவு வந்தனர். எப்போதோ பணம் வரப்போகிறது என்ற நம்பிக்கையில் தினம்தோறும் ஓட்டாண்டியாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். தங்கள் குடும்பங்களிடமும் இதே காரணங்களைச் சொல்லி, அவர்களுக்கும் இலக்கில்லாத ஒரு நம்பிக்கையைக் கொடுத்து வாழவைத்துக்கொண்டிருப்பவர்கள். பணம் வரப்போகுதுங்க.. இப்போ கடன் கொடுங்க. பின்னால மொத்தமா திருப்பிர்ரேன்.. என்று சொல்லிப் பணம் வாங்கியிருப்பவர்கள். சிபியும் அப்படி வாங்குகிறான். ஆனால் பணம் கொடுக்க முடிவதில்லை.

இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு, மிகப்பெரும் பணம் பற்றிய ஒரு செய்தி கிடைத்தால் என்னாகும்? அந்தச் செய்தி உண்மையா பொய்யா என்று நிரூபிக்கக்கூடியவர்கள் யாருமே இல்லை. ஒருவேளை அந்தப் பணம் இல்லை என்றால் உயிரே போய்விடும் என்ற சூழல். அதற்காக மனிதத் தடமே பதியாத பல பகுதிகளில் அலையவேண்டும் என்ற பிரச்னை. அதெல்லாம் சிபிக்குத் தடைகளாகவே இல்லை. மாறாக, பணம் கிடைக்கும் என்ற ஒரே நம்பிக்கைதான் அவனை எங்கெல்லாமோ செலுத்துகிறது. அந்த நம்பிக்கை இறுதியில் அவனை என்ன செய்தது என்பதே படம்.

‘கார்பன்’ படத்தின் மிகப்பெரிய பலமே, வாழ்க்கை நிம்மதி ஆகிவிடும் என்ற உறுதியான குருட்டு நம்பிக்கைதான். அத்தகைய நம்பிக்கையை நான் பலரிடமும் பார்த்திருக்கிறேன். அதனாலேயே யாரும் செய்யத் துணியாதவற்றை தடால் என்று செய்துவிடுவார்கள். அது நல்லதாக முடியுமா கெட்டதாக முடியுமா என்பதெல்லாம் secondary. ஆனால் அந்த நம்பிக்கை அவர்களை என்னவெல்லாமோ செய்ய வைத்துவிடுகிறது என்பதுதான் இங்கே விஷயம். கூடவே, சிபி கெட்டவன் இல்லை. அவனும் நம்மைப்போலவே ஒரு சராசரி மனிதன்தான். அவனுக்கும் வாழ்க்கையில் முன்னேறவேண்டும்தான். படத்தில் ஒரு இடத்தில், நாயகி அவனிடம், இந்த வேலைக்கு முன்னர் என்ன செய்தாய் என்று கேட்கும்போது பதில் பேச மாட்டான். இறுதியில், அதை அவளிடம் சொல்லி, இனிமேல் அப்படி வெறுமனே survive மட்டுமே செய்யவேண்டும் என்ற நோக்கம் இல்லை என்றும், நன்றாக வாழவேண்டும் என்ற தாபம் இருப்பதாகவும் சொல்லி, ஒரு முடிவை எடுக்கிறான். அவனது கதாபாத்திரம் இந்த எண்ணத்தை வெளிப்படுத்துவது எனக்கு மிகவும் பிடித்தது.

அது மட்டும் இல்லாமல், ஆரம்பத்தில் இருந்தே அவனது கதாபாத்திரம் செய்யும் எல்லா வேலைகளிலும் அந்தப் பதற்றம் உண்டு. ஒருவிதப் பதைபதைப்புடன், எதையாவது செய்து வாழ்க்கையில் நிம்மதியாக இருந்துவிடவேண்டும் என்று பல வேலைகளைச் செய்துகொண்டே இருக்கிறான் சிபி. அவனைப் பார்த்தால் உங்களுக்கும் அப்படிச் செயல்படும் பலரும் நினைவுக்கு வரலாம்.

படத்தில் வரும் பல கதாபாத்திரங்களுமே இயல்பாகவே இருக்கின்றன. நாயகி சமீரா இன்னொரு உதாரணம். அவளது நோக்கம் என்று படத்தில் எதுவுமே இல்லை. She is just another ‘mountain Junkee’. ஆனால் அந்தக் கதாபாத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கவனித்துப் பாருங்கள். அதேபோல்தான் படம் நெடுக வரும் பாலன் பிள்ளை. மிக அட்டகாசமான நடிப்பு. பாலன் பிள்ளையாக கொச்சு ப்ரேமன் பிறிகட்டி அடித்திருக்கிறார். ஸ்டாலின், கண்ணன் ஆகிய பாத்திரங்களும் அருமையானவை. இவர்களையெல்லாம் மீறி, சிபி என்ற நிலையற்ற தன்மை கொண்டு வாழ்க்கை முழுதும் பதைபதைப்புடன் ஓடிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாஸில். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரத்தில் ஒன்றாக இது மாறிப்போனது. சிபி, தனது வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இடங்களிலும், இனி என்ன செய்யப்போகிறான் என்று முடிவெடுக்கும் இடங்களிலும் அந்தக் கதாபாத்திரம் உதிர்க்கும் சிரிப்பை கவனித்துப் பாருங்கள். அது ஒன்றே அதன் இயல்புத்தன்மையைப் பிரதிபலித்துவிடும். அதன் உடல்மொழியும் அபாரம். நான் மிகவும் ரசித்தேன்.

இதுதான் படம். சிபியின் பயணம். படம் பார்க்கும் சிலருக்கு, அது பிடிக்காமல் போகலாம். காரணம் படம் ‘மெதுவாக’ச் செல்கிறது என்று நீங்கள் எண்ணக்கூடிய எல்லாக் காரணங்களும் படத்தில் உண்டு. படத்தில் ட்விஸ்ட்கள் இல்லை. ஜகஜக பாடல்களோ காட்சிகளோ இல்லை. வாவ் சீன்ஸ் இல்லை. மிக இயல்பாக வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் படம் இது. ஆகவே எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்குப் பிடிக்காமலும் போகலாம். படத்தின் துவக்கத்தில் இருந்து, முடிவு வரை எனக்கு எல்லாக் காட்சிகளுமே பிடித்தன. குறிப்பாக முடிவு.

இப்படி ஒரு கதாபாத்திரத்தைக் கண்டுபிடித்து, அதைச் சுற்றியும் ஒரு கதையை அமைத்த வேணுவை அவசியம் நான் பாராட்டுகிறேன். குறிப்பாக, படத்தில் சில காட்சிகளுக்கு முன்கூட்டியே அமைக்கப்படும் foreshadowing கூட இல்லை. இயல்பாக அப்படியப்படியே அமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இதன் திரைக்கதையையும் பாராட்டுகிறேன். எந்த ஒரு கட்டமைப்புக்குள்ளும் மாட்டாமல், சிபி என்ற கதாபாத்திரத்தின் பயணத்தை அழகாகப் படம்பிடித்துக்காட்டியிருக்கிறார் வேணு.

படத்தில் விஷால் பார்த்வாஜ் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பிஜிபால் பின்னணி இசை.

பி.கு

1. இந்தப் படம், ஏனோ எனக்கு வெர்னர் ஹெர்ஸாக்கின் சில படங்களை நினைவுபடுத்தியது.

2. சென்ற ஆண்டு, கிட்டத்தட்ட இதே போன்றதொரு கருவோடு, இலங்கையைச் சேர்ந்த ‘Red butterfly dream / Rathu Samanala Heenayak’ என்ற படத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதைவிடவும் இதுதான் பிரமாதம். ஒருவேளை இயக்குநர் வேணு அந்தப் படம் பார்த்திருக்கக்கூடும். இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

The political films of Hollywood
சில மாதங்கள் முன்னர் ‘அந்திமழை’ பத்திரிக்கைக்காக எழுதப்பட்ட கட்டுரை இது.

ஹாலிவுட்டின் James Bond, உலகெங்கும் பிரபலம். எப்போதுமே ஜேம்ஸ்பாண்டின் படங்களில் ரஷ்யர்கள், கொரியர்கள், ஜெர்மானியர்கள் என்று பிற நாட்டவர்களே பெரும்பாலும் வில்லன்கள். அவர்களை ஒரு இங்லீஷ்காரரான பாண்ட் எப்படி முறியடிக்கிறார் என்பது சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கும். ப்ரிட்டிஷ் ஏஜெண்ட்டான பாண்டை வைத்து யுனைடட் ஸ்டேட்ஸைச் சேர்ந்த ஹாலிவுட்டில் படங்கள் எடுக்கப்படும் அரசியல் பின்னணியைச் சற்றே யோசியுங்கள். அமெரிக்காவின் பிற நாடுகளின் வளர்ச்சி மீதான பயமே அதில் மறைபொருளாக வெளிப்பட்டிருக்கும். இதுதான் பாண்ட் படங்களின் அரசியல். ‘ஹாலிவுட்டின் அரசியல் சினிமாக்கள்’ என்பதில் இதுபோன்ற படங்களும் அடக்கமே.

ஹாலிவுட்டில் அரசியல் திரைப்படங்கள் எப்படியெல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றதுமே, ‘அரசியல்’ என்ற அம்சம் கையாளப்பட்ட படங்களை ஒரு பட்டியலாகக் கொடுத்துவிடமுடியும். ஏனெனில், அங்கே அவ்வளவு படங்கள் அரசியல்வாதிகளைப் பற்றியே எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசியல் என்பது ஒரு மிகப்பெரிய வார்த்தை. பொதுவாக, politics என்பது மட்டும் அல்லாமல், ஒரு சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றியும், அவர்களின் உரிமைகள் பற்றியுமே இந்த வார்த்தையை வைத்துக்கொண்டு நாம் விவாதிக்க முடியும். கூடவே, சரி – தவறு என்ற நிலையில் விவாதிக்கப்படும் எதற்குமே ‘அரசியல்’ என்ற வார்த்தை பொருந்தும்.

அதற்கு முன்னர், இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். பொதுவாகவே ஆங்கிலப் படங்களில் கையாளப்படும் கட்டமைப்பு என்னவெனில், எப்போதுமே எதிரி வெளியே இருந்து வருவான். பல படங்களில் ரஷ்யர்களை வில்லன்களாக அவர்கள் காண்பித்திருக்கிறார்கள். அதேபோல் கொரியர்கள். வியட்நாமை மையமாக வைத்தே பல படங்கள் வந்துள்ளன. முஸ்லிம்களையும் இப்படியே காட்டியிருக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் இருந்தே இதுபோன்ற படங்கள் வந்ததால், அங்கே மக்களின் மனோபாவத்திலுமே, அமெரிக்கர்கள் அல்லாதவர்கள் மீது நேசபாவமான மனநிலை இல்லாமல், அவர்களை விரோதிகளாகப் பார்க்கும் எண்ணங்கள் ஒளிந்தே இருக்கின்றன. இதனாலேயே அவர்கள் ஒருவிதப் பாதுகாப்பின்மையை எப்போதும் உணர்கிறார்கள். இதுதான் ஹாலிவுட்டில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்களுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல். எனவே, ஒட்டுமொத்தமாக, ‘அரசியல்’ என்ற வார்த்தையால் நாம் என்னென்ன முக்கியமான படங்களை விவாதிக்க முடியுமோ, அவை அத்தனையையும் சுருக்கமாகக் கவனித்துவிடலாம்.

முதலில், ஹாலிவுட்டின் அரசியல் படங்களுக்கெல்லாம் முன்னோடியான ஒரு படம் பற்றிப் பார்க்கலாம். இந்தப் படத்தில் நாயகன் ஒரு அரசியல்வாதி. ஆனால் அதனால் இப்படம் அரசியலைப் பேசுகிறது என்று சொல்ல இயலாது. மாறாக, இப்படம் எடுக்கப்பட்ட காலத்தில் இருந்த சமூக நிலையைப் பற்றியே இப்படம் அதிகமான தகவல்களைத் தருகிறது. ஒரு காலகட்டத்தில் யுனைடட் ஸ்டேட்ஸில் செல்வந்தர்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருந்தது?அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் அடைய நினைத்த அத்தனையையும் அடைந்துவிட்டார்களா? ஒருவேளை செல்வம் சேர்ப்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்ததா? அவர்களின் மன நிம்மதி என்னவாயிற்று? அவர்கள் பிறருடன் பழகுகையில் பிறர் அவர்களைப் பற்றி என்ன நினைத்தார்கள்? இப்படிப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் விடையாகவே இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும். இதனாலேயே, வாழ்க்கையைப் பற்றிய பல கேள்விகளுக்கு விடையாக இப்படம் இன்றுவரை விளங்குவதாலேயே இது பிரபலம் அடைந்திருக்கிறது. அதுதான் ஆர்ஸன் வெல்லிஸ் இயக்கிய ‘Citizen Kane’. 1941ல் வெளியான படம். ஒரு பிரம்மாண்டமான ஆளுமை- உலகத்தையே தனது கைக்குள் வைத்து இயக்க நினைத்த நபர், உண்மையில் தன் மனதுக்குள் நினைத்தது கிடைக்காமல் வாழ்க்கை முழுதும் ஏங்கிய சிறுவனே என்பதில் எத்தனை காவிய சோகம் இருக்கிறது? இதுதான் சிடிஸன் கேன் பேசும் அரசியல்.

உலகம் முழுக்கத் தற்போது பீதியை விளைவிக்கும் விஷயம் என்னவென்றால், எந்த நாடு வேண்டுமானாலும் பிற நாடுகளின் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுத்துவிடலாம் என்பதுதான். ஸ்திரத்தன்மை இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது எத்தனை கொடூரமானது? இதற்குக் காரணம் என்ன? அதிகாரம் என்பதை மூளைக்குள் எடுத்துச்செல்லும் ஒரு சில தனி நபர்களின் சுயநலம் தானே? இதைப் பொட்டில் அடித்தாற்போல் விளக்கிய படம், ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய ‘Doctor Strangelove or: How I learned to stop worrying and Love the Bomb’ திரைப்படம். 1962ல் வெளியான படம் இது. படம் முழுக்கவே, வரப்போகும் யுத்தம் பற்றிய ஒரு மிகப்பெரும் விவாதம் நடக்கும் அறையில்தான் நடக்கிறது. மறைகழன்ற ஒரு அமெரிக்க ஜெனரல் நினைத்தால், எப்போது வேண்டுமானாலும், ஜனாதிபதிக்கே தெரியாமல் ஒரு ந்யூக்ளியர் யுத்தத்தைத் துவங்கிவிடலாம் என்பதுதான் இந்தப் படம் தெரிவித்த ஆபத்தான உண்மை. கூடவே, நியூக்ளியர் குண்டு போடப்படும்போது, அதன்மீது ஒரு அமெரிக்கன், கௌபாய் தொப்பியைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பது இன்றுவரை மறக்கமுடியாத ஒரு குறியீடு. அப்படி அந்தக் குண்டை வீசச்சொல்லி ஆணையிடும் ஜெனரலின் பெயர் – ஜாக்.D.ரிப்பர் என்பதும் இன்னொரு பிரமாதமான குறியீடு (ஜாக் த ரிப்பர் என்பவன் இன்றுவரை தேடப்படும் கொலைகாரன் என்பது தெரிந்திருக்கும். From Hell திரைப்படம் மற்றும் க்ராஃபிக் நாவலைப் படித்துப் பாருங்கள்). குப்ரிக்கின் மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. அற்புதமான அரசியல் பகடி.

நிக்ஸனின் ஆட்சியில், வாட்டர்கேட் என்ற மாபெரும் பிரச்னை வெடித்தது. நிக்ஸனின் அரசாங்கம், அவருக்கு அரசியல் எதிரிகளாக இருந்தவர்களின் பேச்சுக்களை ஒட்டுக்கேட்டது. அவர்கள் மீது விசாரணைகளைத் தந்திரமாக நிகழ்த்தியது. முதலில் இவை எல்லாமே மிகவும் ரகசியமாகவே நடந்தன. ஆனால், இதன்பின்னர் ஒரு குறிப்பிட்ட சம்பவம், இந்தப் பிரச்னையைப் பொதுவில் கொண்டுவந்து நிறுத்தியது. வாஷிங்டனில் இருந்த Democratic National Committee (DNC) என்ற அலுவலகத்தில், ஜூன் 17, 1972வில் அடையாளம் தெரியாத சில நபர்கள் இரவில் நுழைந்தனர். இதைப் பற்றிய விசாரணையில், அவர்கள் கைது செய்யப்பட்டு, க்யூபாவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று தெரியவந்தது. இவர்களைப் பற்றி விசாரிக்கையில், நிக்ஸனின் அரசுக்கும் இவர்களுக்கும் இருக்கும் மெல்லிய தொடர்பு தெரியவர, நிக்ஸனின் அரசு இதை மறைக்கப் பிரயத்தனம் செய்தது. இதைத் தொடர்ந்து இரண்டு பத்திரிக்கை நிருபர்கள் (கார்ல் பெர்ன்ஸ்டீன் மற்றும் பாப் வூட்வேர்ட்), இந்தப் பிரச்னையைத் தீர விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தனர். நிக்ஸனின் அரசையே ஆட்டம்காண வைத்த அறிக்கை அது. இதனை மையமாக வைத்து வெளியான திரைப்படம்தான் ‘All the President’s Men’. ஹாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய படம். அங்கே, நேரடியாக ஒரு முன்னாள் ஜனாதிபதியை விமர்சித்து இப்படி ஒரு படம் இப்போதும் எடுக்க முடியும். அதுதான் ஹாலிவுட்டின் பலம். நம் நாட்டில் குஜராத் கலவரங்களைப் பற்றி ஒரு படம் வெளிப்படையாக எடுக்க முடியுமா? யோசித்துப் பாருங்கள். நந்திதா தாஸ் பட்ட பாடுகளைப் பற்றி நீங்களே படித்துப் பார்க்கலாம்.

பொதுவாக நம்மூரில், ஏதாவது அரசியல்வாதி எதிலாவது மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்? அரசியல்வாதியோ, அரசோ பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளும்போதெல்லாம், வேறொரு பிரச்னையை இவர்களாகவே உருவாக்கி\கசியவிட்டு, தங்களின் மீது இருக்கும் கறையை மக்கள் மறக்கும்படி பார்த்துக்கொள்வதை இந்தியாவெங்கும் நாம் பார்த்தே வருகிறோம். அதுவேதான் ‘Wag the Dog’ படத்தின் கதையும். ஒரு பாலியல் பிரச்னையில் அமெரிக்க ஜனாதிபதி மாட்டிக்கொள்கிறார். தேர்தல் இன்னும் இரண்டு வாரங்களில் வரப்போகிறது என்ற நிலையில், இதனை மக்கள் மறக்கவேண்டும் என்றால் என்ன செய்வது? உடனடியாக ஒரு அரசியல் ராஜதந்திரி (ராபர்ட் டி நீரோ) அழைக்கப்படுகிறார். அவரது யோசனையின்படி, போலியான ஒரு போர் உருவாக்கப்படுகிறது. ஹாலிவுட்டைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளர் (டஸ்டின் ஹாஃப்மேன்) அழைக்கப்பட்டு, போலியாக வீரர்களை வைத்து அல்பேனியாவில் ஒரு யுத்தத்தை உருவாக்கப் பணிக்கப்படுகிறார். அதில் ஒரு அமெரிக்க வீரன் மாட்டிக்கொண்டதாக மீடியாவெங்கும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அவனைக் காப்பாற்ற ஒரு அணி கிளம்புகிறது. இப்படிச் செல்லும் கதையில், இறுதியில் அந்தத் தயாரிப்பாளர், தான் செய்த வேலைகளுக்காக க்ரெடிட்ஸ் கோர, அந்த அரசியல் ராஜதந்திரி அவரையும் கொன்றுவிடுகிறான். இறுதியில் போரை முடித்ததற்காகப் பழைய ஜனாதிபதியே மறுபடியும் தேர்வு செய்யப்படுகிறார். இதைப்போல் யுனைடட் ஸ்டேட்ஸின் அரசியலைப் பகடிக்குள்ளாக்கிய படங்கள் குறைவே. இப்படத்தை எழுதியது, திரைக்கதை ஜீனியஸ்களில் ஒருவராகக் கருதப்படும் டேவிட் மாமெட். படம் இன்றுவரை முக்கியமான அரசியல் படமாகக் கருதப்படுகிறது.

உலகம் முழுக்க மிகப்பிரபலமாக இருந்த ஒரு அமெரிக்க ஜனாதிபதி, ஜான் எஃப். கென்னடி. இவரது மரணத்துக்குப் பின் பல சர்ச்சைகள் இன்றும் உலவிக்கொண்டு இருக்கின்றன. அவர் எப்படி இறந்தார் என்பதற்கு விடையாகப் பலரும் பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். கென்னடியின் மரணத்தைப் பற்றிய ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டதுதான் ‘JFK’. இயக்குநர் ஆலிவர் ஸ்டோன், இதுவரை மூன்று அமெரிக்க ஜனாதிபதிகளைப் பற்றிய படங்கள் எடுத்திருக்கிறார். ஜே.எஃப். கே படத்துக்குப் பின்னர் நிக்ஸன் மற்றும் W ஆகிய இரண்டு படங்கள். JFKவில், கென்னடி கொல்லப்பட்டது ஒரே ஒரு கொலைகாரனால் அல்ல (லீ ஹார்வி ஆஸ்வால்ட்) என்றும், மொத்தம் மூன்று கொலைகாரர்கள் சுட்டதால்தான் கென்னடி உயிரிழந்தார் என்றும் வாதாடும் வக்கீல் ஜிம் கேரிஸனாகக் கெவின் காஸ்ட்னர் நடித்திருந்தார். நியூ ஆர்லியன்ஸில் வாழ்ந்துவந்த க்ளே ஷா என்ற நபர்தான் கென்னடியின் மரணத்தில் முக்கியப் பங்கு வகித்தார் என்று இந்தத் திரைப்படம் சொல்லும். கென்னடியின் மரணம் என்பது, வியட்நாம் போரில் இருந்து யுனைடட் ஸ்டேட்ஸை வாபஸ் வாங்கவும், அமெரிக்க உளவு ஸ்தாபனமான CIAவைக் கலைக்கக் கென்னடி நினைத்ததனாலும்தான் நிகழ்ந்தது என்பது இந்தப் படம் சொல்லும் செய்தி. இதில் உதவி ஜனாதிபதி லிண்டன் ஜான்ஸனுக்கும் பங்கு இருந்தது என்று இத்திரைப்படத்தில் வெளிப்படையாகவும் சொல்லப்பட்டிருக்கும். பல பிரச்னைகளைச் சந்தித்த படம் இது. தகவல்களை இஷ்டத்துக்கு ஆலிவர் ஸ்டோன் மாற்றியமைத்திருந்ததாகவும் பல பத்திரிக்கைகள் எழுதின. இச்சமயத்தில், நம்மூரில் ‘குற்றப்பத்திரிக்கை’ படத்துக்கு நேர்ந்த தலைவிதி நினைவு வருகிறது. பல வருடங்களாக வெளிவராமலேயே இருந்து, கண்டபடி சிதைக்கப்பட்டு வெளியான படம் அது. இதுதான் இந்தியாவுக்கும் யுனைடட் ஸ்டேட்ஸுக்கும் வித்தியாசம்.

யுனைடட் ஸ்டேட்ஸில் வெளியாகியிருக்கும் அரசியல் படங்கள் எக்கச்சக்கம். அவற்றில் எனக்குப் பிடித்த ஒரு சில படங்களைத்தான் இங்கே கொடுத்திருக்கிறேன். இவைகளைத் தவிர, இன்னும் ஏராளம் உண்டு. அவற்றில், சில முக்கியமான படங்கள்: Malcolm X, Bulworth, The Manchurian Candidate, Milk, Lincoln, All the King’s Men, Election, The Great Mcginty, The Ides of March, Frost/Nixon, Fahrenheit 9/11 (Documentary), Duck Soup, Three Days of the Condor, Syriana, Reds, The Candidate, Inglourious Basterds, Seven Days in May, The Conender மற்றும் பல. கூடவே, டிவி சீரீஸ்களான The West Wing & House of Cards ஆகியவைகளையும் தவறாமல் பார்க்கலாம்.

Malayalam Films – The New Wave
ஒரு சில மாதங்கள் முன்னர் ‘அயல் சினிமா’ வின் முதல் இதழுக்காக நான் எழுதிய கட்டுரை இது. இரண்டாவது இதழில் இதன் இரண்டாம் பாகம் வெளிவந்தது. அதை ஒரே கட்டுரையாக இங்கே கொடுக்கிறேன்.

சமகாலத் தமிழ், மலையாளம் ஆகிய திரைப்படங்களுக்கு ஒரு சிறிய ஒற்றுமை உண்டு. இந்த இரண்டிலும், New Wave என்று அழைக்கப்படக்கூடிய புதிய அலை, கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் துவங்கியது. ’ட்ராஃபிக்’ திரைப்படம் மலையாளத்தில் வெளியான ஆண்டு 2011 ஜனவரி. தமிழில் ‘அட்டகத்தி’ வெளியான ஆண்டு 2012 ஆகஸ்ட். தமிழில் வேண்டுமானால் இந்தப் புதிய அலை ஒரு குறிப்பிடத்தகுந்த சொல்லாக இருக்கலாம். ஆனால் மலையாளத்தில், ஏற்கெனவே ஒரு புதிய அலை எப்போதோ வந்திருக்கிறது. கே.ஜி. ஜார்ஜ், அடூர் கோபாலகிருஷ்ணன், பரதன், பத்மராஜன் அரவிந்தன் முதலிய இயக்குநர்கள் உருவான எழுபதுகளைத்தான் சொல்கிறேன். இவர்கள் கையாளாத கருக்களே இல்லை என்னும் அளவு, அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் முற்றிலும் வித்தியாசமான படங்களைக் கொடுத்தவர்கள் இவர்கள். இதுதான் மலையாள சினிமாவின் முதல் புதிய அலை. இதன்பின்னர்தான் தற்போது மற்றொரு புதிய அலை வந்திருக்கிறது எனலாம்.

இப்போதைய புதிய அலையில், ராஜேஷ் பிள்ளை, லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி, வினய் கோவிந்த், ரோஷன் ஆண்ட்ரூஸ், அன்வர் ரஷீத், வினீத் ஸ்ரீனிவாசன், ராஜீவ் ரவி, அல்ஃபோன்ஸ் புத்திரன், ஆஷிக் அபு, சமீர் தாஹிர், அமல் நீரட், அஞ்சலி மேனன், மார்ட்டின் ப்ரக்கட், திலீஷ் போத்தன் முதலியவர்கள் உட்பட்ட ஒரு பெரும் படையே வந்து குதித்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், இந்த இயக்குநர்கள் தவிர, இவர்களது படங்களில் ஒளிப்பதிவாளர்களாகப் பணிபுரியும் ஷைஜு காலித், சுஜித் வாசுதேவ், ஜோமோன்.டி. ஜான், லோகநாதன் ஸ்ரீனிவாசன், ராஜீவ் ரவி, அமல் நீரட், சமீர் தாஹிர் (இவர்கள் இயக்குநர்களும் கூட), ப்ரதீப் நாயர், அபிநந்தன் ராமானுஜம், ப்ரதீஷ்.எம்.வர்மா, கிரீஷ் கங்காதரன், ஆர். திவாகரன், ஆனந்த். சி. சந்திரன் முதலியவர்களும் சரி, இசையமைப்பாளர்களாக இருக்கும் ராஜேஷ் முருகேசன், கோபி சுந்தர், ப்ரஷாந்த் பிள்ளை, ரதீஷ் வேகா, அல்ஃபோன்ஸ் ஜோஸஃப், பிஜிபால், ரெக்ஸ் விஜயன், ராஹுல் ராஜ் முதலியவர்களும், எடிட்டர்களாகப் பணிபுரியும் டான் மேக்ஸ், மகேஷ் நாராயணன், வி.சாஜன், விவேக் ஹர்ஷன், ப்ரவீன் ப்ரபாகர் ஆகியவர்கள் அத்தனை பேரும் இளைஞர்களே. எங்காவது ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், தொழில்நுட்ப ரீதியாக இவர்கள் அத்தனை பேரும், ஒரே காலகட்டத்தில், ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வந்து குதித்தது ஆச்சரியகரமான விஷயம். இது மட்டும் இல்லாமல், இப்படங்களில் நடிக்கும் ஃபஹத் ஃபாஸில், துல்கர் சல்மான், நிவின் பாலி, இஷா தல்வார், நஸ்ரியா, பார்வதி, நித்யா மேனன், ரீமா கலிங்கல், ஆஸிஃப் அலி உட்பட்டவர்களும் இதேபோல இளைஞர்கள்.

இப்படி ஒரு பெரும் பட்டாளமாக இவர்கள் வந்து, பலப்பல படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டம் போல மலையாளப்படவுலகம் இத்தனை பரந்துவிரிந்து  இருந்ததில்லை என்றுவேண்டுமானால் அவசியம் சொல்லமுடியும்.

இந்த மலையாளப் புது அலையுடன் தமிழில் ஏற்பட்ட புது அலையை ஒப்பிட்டால், இங்கே தமிழில் வெறும் சலனங்களே இதுவரை நிகழ்ந்துள்ளன என்றுதான் சொல்லவேண்டும். அட்டகத்தி என்ற அற்புதமான படத்தில் துவங்கிய இந்தப் புதிய அலை, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜிகர்தண்டா, தெகிடி, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி, காக்காமுட்டை, குற்றம் கடிதல், விசாரணை, துருவங்கள் பதினாறு, மாநகரம், மரகத நாணயம், அறம், அருவி மற்றும் இவற்றைப் போன்ற பல்வேறு புதிய படங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தாலும், ஒரு மகேஷிண்டே ப்ரதிகாரம் போலவோ, ஒரு நார்த் 24 காதம் போலவோ, ஒரு கிளி போயி போலவோ, ஒரு அன்னையும் ரசூலும் போலவோ, உஸ்தாத் ஹோட்டல் போலவோ, இன்னும் மும்பை போலீஸ், 1983, தட்டத்தின் மறையத்து, சாப்பா குரிசு (தமிழில் வந்து படுதோல்வி அடைந்தது) போன்ற படங்கள் நமக்கு அளித்த மிக வித்தியாசமான களங்களும் கதாபாத்திரங்களும் போலவோ தமிழில் நமக்கு அவ்வளவாகக் கிடைக்கவில்லை என்றே சொல்லவேண்டும். நான் சொன்ன தமிழ்ப்படங்கள் நல்ல படங்கள்தான். சந்தேகமே இல்லை. ஒவ்வொன்றும் அவை எடுத்துக்கொண்ட genreக்கு தவறாமல் எடுக்கப்பட்ட படங்களே. ஆனால் நான் சொல்ல வருவது – தமிழில் பல restrictions இன்னமும் இருக்கின்றன.

தமிழில் வந்த புதிய அலையைச் சேர்ந்த பல திரைப்படங்களும், வணிக வெற்றி என்ற ஒரு விஷயத்தையே கருத்தில் கொண்டு அமைந்தன. இதற்குத் தயாரிப்பாளர்களே பெரும்பாலும் காரணம். நார்ட் 24 காதம் போன்ற ஒரு படத்தைத் தமிழில் எடுப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு, காரணம், எந்தச் செயலுமே செய்யாமல், ஒரு கும்பலின் கூடவே அலைந்துகொண்டிருக்கும் கதாபாத்திரத்தை இங்கே செய்ய நாயகர்களே நம்மிடம் இல்லை. இதுதான் தமிழின் புதிய அலையின் பிரச்னை. அதேபோல், இந்தப் புதிய அலையில் வெளிவந்த இயக்குநர்களான பா. இரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், நலன் குமரசாமி, பாலாஜி தரணிதரன், தெகிடி ரமேஷ், முண்டாசுப்பட்டி ராம், இன்று நேற்று நாளை ரவிக்குமார், காக்காமுட்டை மணிகண்டன், பிரம்மா, கோபி நயினார் முதலியவர்கள் திறமைசாலிகளே. ஆனால் அவர்களுக்கேற்ற புதிய களங்களை அவர்கள் தேர்வுசெய்துகொண்டு படங்கள் இயக்குவதற்கு, தமிழின் வணிகப்பட ஃபார்முலா குறுக்கே நிற்கிறது. இல்லையென்றால் இவர்களாலும் அழகான, மனதைத்தொடும் படங்களை அளிக்க இயலும் என்பது என் கருத்து.

இந்தப் புதிய அலையில் வெளிவந்த மலையாளப்படங்களை சற்றே உன்னிப்பாகக் கவனித்தால், அவற்றின் கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் வித்தியாசப்படுகின்றன என்பதிலும், வணிகப்படங்களே ஆனாலும், அந்தப் படங்களின் கதைகள் எப்படி வித்தியாசப்பட்டிருக்கின்றன என்பதையும் நம்மால் எளிதில் அறிய முடியும். அறுபதுகளில் துவங்கி எண்பதுகளில் முடிந்த ஹிந்தி Off beat படங்களை இங்கே நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். இப்படங்களின் பிதாமகர்கள் ரிஷிகேஷ் முகர்ஜி, பாஸு சட்டர்ஜீ, பாஸு பட்டாச்சார்யா ஆகியோர். இவர்களின் படங்களில் மத்தியதரக் குடும்பங்களே பிரதானமான கதாபாத்திரங்கள். அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், அவர்களுக்குள் இருக்கும் உறவுமுறைகள், அவர்களின் கனவுகள், இடம்பெயர்ந்து வேறு இடத்துக்குச் செல்லும் அவர்களின் இடர்ப்பாடுகள் ஆகியவையே முக்கியமான அம்சங்களாக இருக்கும். இத்தனைக்கும் இவைகள் கலைப்படங்கள் இல்லவே இல்லை. இவையுமே தரமான வணிகப்படங்களாகவே அமைந்தன. ஆனால் எடுத்துக்கொண்ட கருப்பொருளால் இவை Off beat படங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட இப்படிப்பட்டவைதான் இந்தப் புதிய அலையைச் சேர்ந்த மலையாளப்படங்கள்.

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியின் சமீபத்திய ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அங்கமாலி என்ற சிற்றூரில் பிறந்து வளர்ந்த சில பொடியர்கள், அந்த ஊரில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ரவுடிகளாக எப்படி மாறுகிறார்கள்; அப்படி ரவுடிகள் ஆனதும் அவர்களுக்குள் என்னென்ன நடக்கிறது என்பதைத் துளிக்கூட சுவாரஸ்யம் குன்றாமல் அவரால் முற்றிலும் புதுமுகங்களைப் போட்டுச் சொல்ல முடிந்திருக்கிறது. படத்தின் மையமான கருப்பொருள் – பன்றி இறைச்சி வணிகம். அந்த ஊரில் இதுதான் பிரதான தொழில். அந்த ஊரில் இருந்து சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த அத்தனை ஊர்களுக்கும் பன்றி இறைச்சி அனுப்பப்படுகிறது என்பதைப் படத்தின் வாயிலாகவே அறியலாம். அங்கமாலி என்ற ஊரைப்பற்றிய மிகச்சிறப்பான அறிமுகமாகவும் இப்படத்தை நாம் கருத முடியும். படத்தில் வரும் கதாபாத்திரங்களான வின்ஸெண்ட் பெபே, ’10ML’ தாமஸ், ரவி, U Clamp ராஜன், வர்க்கி, மரம்கொத்தி சிஜோ, கானாகூனா மார்ட்டி, லிச்சி ஆகியோரின் பின்புலத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர்கள் எப்படியெல்லாம் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால், இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் தமிழில் வரவே இயலாது என்று புரியும். பன்றி இறைச்சியை மையமாகக் கொண்ட படம் ஒன்றைத் தமிழில் எடுக்க முடியுமா என்றே தெரியவில்லை.

கூடவே, திருமணம் ஒன்றுக்குச் செல்லும் பெண் ஒருத்தி, அங்கே மது கிடைக்குமா என்று வினவுகிறாள். மது அருந்திவிட்டு, அட்டகாசமான கொண்டாட்டத்துடன் விழுந்து புரண்டு ஆடுகிறாள். ஆசைதீர ஆடிவிட்டு, மெல்லத் தள்ளாடிக்கொண்டே, மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சாலையில் தள்ளாடிக்கொண்டே நடந்துசெல்கிறாள். லிச்சியின் கதாபாத்திரத்தைப் பற்றிய ஏராளமான தகவல்கள் போகிற போக்கில் இப்படி நம்முன் கொட்டப்படுகின்றன. எதை எடுப்பது, எதை விடுவது என்பதே தெரிவதில்லை. அது மட்டும் அல்ல – அங்கமாலி டயரீஸ் படம் பார்த்தால், நாட்டு வெடிகுண்டு செய்யும்போது மரத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டுதான் தயாரிக்கவேண்டும் என்ற தகவலும் தெரியவருகிறது. கூடவே, பன்றிகளின் முகத்தில் எப்படித் துணியைப் போடுவது, அங்கமாலியில் அதிகம் உண்ணப்படும் உணவுகள் என்னென்ன, அங்கமாலியில் போய் வெஜிடேரியன் உணவை ஆர்டர் செய்தால் எப்படி இருக்கும், அங்கமாலியில் தலையெடுக்கும் மதவாதக் கட்சிகளின் பின்னணி, கடுமையான ரவுடிகளாக இருந்தாலும், பிரச்னை முடிந்துவிட்டது என்றால் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்திக் கொண்டாடும் மனிதர்கள் என்று ஏராளமான தகவல்கள். இவற்றுடன் சேர்ந்து, துளிக்கூட அலுக்காத ஒரு கதையும் சொல்லப்படுகிறது.

லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியின் ‘ஆமென்’ படம்தான் எனக்குத் தனிப்பட்ட அளவில் மிகவும் பிடித்தமானது. அந்தப் படத்தின் அளவு அங்கமாலி டயரீஸ் என்னைப் பாதிக்கவில்லைதான். இருந்தாலும், படத்தில் குறை என்று எதுவுமே சொல்ல இயலாது என்பதே படத்தின் வெற்றி.

அங்கமாலி டயரீஸ் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. இன்னும் இதுபோன்ற படங்களான கம்மட்டிப்பாடம், இயோபிண்டே புஸ்தகம், ஒழிவு திவசத்தே களி முதலிய படங்களைப் பற்றி ஏராளமாக எழுத இயலும். சுருக்கமாகக் கவனித்தால், கம்மட்டிப்பாடத்தில் ஒரு வரலாறே சொல்லப்பட்டது. எர்ணாகுளத்தின் கம்மட்டிப்பாடம் என்ற குப்பத்தில் வாழ்ந்துவந்த தலித்கள் எப்படி ஏமாற்றப்பட்டு அவர்களின் நிலங்களை சொற்ப விலைக்கு விற்றுவிட்டுச் சென்றார்கள், அவர்களின் வியர்வை சிந்திய இடங்கள் எப்படி மாடமாளிகைகளாக ரியல் எஸ்டேட் கும்பல்களால் மாற்றப்பட்ட்டன என்ற துயரம் நிரம்பிய வரலாறு. ஆனால் அப்படம் துயரமான மெலோடிராமாவாகவா இருந்தது? எத்தனை கொண்டாட்டத்துடன் அப்படம் இருந்தது? அதிலும் எத்தனை விதம்விதமான கதாபாத்திரங்கள்? நண்பனைத் தேடிவரும் ஒரு நபரின் வழியாக, கம்மட்டிப்பாடத்தின் ஒட்டுமொத்தப் பின்னணியும் எப்படி உலகுக்கே சொல்லப்பட்டது? நான்கு முக்கியமான கேரள அரசு விருதுகளை இப்படம் அள்ளியது.

இவைபோன்ற கனமான பின்னணி இல்லாமல், எளிய காதல் கதைகளை எடுத்துக்கொண்டாலும், தட்டத்தின் மறையத்து, உஸ்தாத் ஹோட்டல், சால்ட் அண்ட் பெப்பர், அன்னையும் ரசூலும், என்னு நிண்டே மொய்தீன், பெங்களூர் டேஸ், ப்ரேமம், கிஸ்மத், சார்லீ, ஆமென், நேரம், 100 டேஸ் ஆஃப் லவ், ஓம் சாந்தி ஓசானா, அனார்கலி, நீனா, மகேஷிண்டே ப்ரதிகாரம் (இதை ரொமாண்டிக் படம் என்று குறுக்கிவிட இயலாதுதான். ஆனால் காதல் இதில் அருமையாகக் கையாளப்பட்டிருப்பதால் இங்கே கொடுக்கிறேன்) என்று துவங்கி ஏராளமான படங்களைப் பற்றி எழுதிவிடமுடியும். இவை ஒவ்வொன்றிலும் இடம்பெறும் காதல், தனித்துவமானது. ஒரே போன்ற உணர்வைத் தராமல், இந்த ஒவ்வொரு படமும் மிகவும் வித்தியாசமான உணர்வுகளைத் தரவல்லவை. உதாரணமாக, உஸ்தாத் ஹோட்டலில், கரீம் பாயின் காதல் எத்தனை குறும்பானது? எத்தனை ஆழமானது? சுலைமானி ச்சாய் குடிக்கும்போதெல்லாம் இவரது நினைவுதான் இப்போதெல்லாம் வருகிறது (பெங்களூரில் மூலைக்கு மூலை சுலைமானி கடைகள் உண்டு. அத்தனையும் அருமையான தேநீர் வழங்கவல்லவை). இதைப்போலவே, ஆமென் படத்தில், பாதிரியாரான வின்ஸெண்ட் வட்டோளிக்கும் வெளிநாட்டுப் பெண்ணான மிஷெலுக்கும் இடையே மலரும் அன்பு, சால்ட் அண்ட் பெப்பரில் பரம்பில் காளிதாஸனுக்கும் மாயா க்ருஷ்ணனுக்கும் இடையே துளிர்க்கும் காதல், என்னு நிண்டே மொய்தீனில் மொய்தீனுக்கும் காஞ்சனமாலாவுக்கும் இடையே தோன்றிய பிரேமம்.. இப்படி ஒவ்வொரு படத்தையும் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

காதல் படங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும், முற்றிலும் வித்தியாசமான பின்னணி கொண்ட பல படங்கள் மலையாளத்தில் உண்டு. கிளி போயி படம் ஒரு உதாரணம். Stoner படங்கள் என்றே வெளிநாடுகளில் ஒரு வகை உண்டு. கஞ்சா, ஹெராயின் முதலிய லாகிரி வஸ்துக்களால் உண்டாகும் பிரச்னைகள் பற்றிய படங்கள். இவைகளில் இடம்பெறும் பிரதான கதாபாத்திரங்கள், இவைகளை உபயோகித்து, ஒருவித மயக்க நிலையில் செய்யும் காட்சிகள் படங்களில் இடம்பெறும். Fear and Loathing in Las Vegas, The Big Lebowski, Herold & Kumar சீரீஸில் ஒன்றிரண்டு படங்கள், Pinapple Express ஆகியவை ஒருசில உதாரணங்கள். இந்த வகையிலும் மலையாளப் படங்கள், இந்தியாவுக்கே முன்னோடிகளாகத் திகழ்கின்றன. கிளி போயி அப்படிப்பட்ட ஒரு ஸ்டோனர் படம். படத்தில், நாயகனும் அவன் நண்பனும், கோவா சென்று வருகையில் அவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஹெராயினும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுமே படம். இதில் உபயோகிக்கப்படும் ‘கெட்ட வார்த்தைகள்’ என்று சொல்லப்படும் cuss wordsகளின் உபயோகம் பிரம்மாதமாக இருக்கும். உண்மையில் இளைய தலைமுறையினர் இப்படித்தான் வாழ்கின்றனர். இதைப்போன்ற வசனங்கள் தமிழில் இடம்பெற்றால் படமே வெளிவர இயலாது. குறிப்பாக, இதில் ஒரு பெண் ஒரு காட்சி முழுக்க fuck fuck fuck fuck என்று சொல்லிக்கொண்டே ஜாலியாக கஞ்சா புகைப்பார். இவற்றையெல்லாம் தமிழில் யோசிக்கவே முடியாது. கிளி போயி போலவே, இடுக்கி கோல்ட் படமும் குறிப்பிடத்தகுந்த படம். இதிலும் இடுக்கியில் விளையக்கூடிய உலகத்தரமான கஞ்ஜா பற்றிச் சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் கரு வேறு. தாங்கள் பள்ளியில் படித்த காலத்தை நினைவுகூர்ந்து, அங்கே பயணப்படும் சில நடுத்தர வயது மனிதர்களின் கதை. இதிலும் ஒரு உணர்வுபூர்வமான திருப்பம் உண்டு.

இவை மட்டும் அல்லாமல், heist films என்று உலகப்படங்களில் கையாளப்படும் வகையும் மலையாளத்தில் உண்டு. கொள்ளையடிப்பது. ஏதேனும் பெரிய அளவு பணத்தையோ அது போன்ற விலையுயார்ந்த வஸ்துக்களையோ திட்டமிட்டுக் கொள்ளையடிப்பது. Con என்று அழைக்கப்படும் விதமான படங்கள். உதாரணமாக, சப்தமஸ்ரீ தஸ்கரஹா படத்தைச் சொல்லலாம். இதில் ஏழு திருடர்கள் ஒன்றுசேர்ந்து, அவர்களில் ஒருவரை வஞ்சித்த வில்லனின் பணத்தை ஒட்டுமொத்தமாக எப்படிக் கொள்ளையடிக்கிறார்கள் என்று சிரிக்கச்சிரிக்கச் சொல்லப்பட்டிருக்கும். இதேபோல் கோஹினூர் படமும், எண்பதுகளில் ஒரு நகைக்கடை சில பலே திருடர்களால் எப்படி சாமர்த்தியமாகக் கொள்ளையடிக்கப்பட்டது என்று சொல்லக்கூடிய படம். இந்த இரண்டு படங்களிலும், குறிப்பிடத்தகுந்த திருப்பங்கள் உண்டு.

தமிழில் Feel good என்ற வகையைச் சேர்ந்த படங்களை நான் அதிகமாகக் கண்டதில்லை. மிகவும் அரிது. ஆனால் மலையாளத்தில் இதுவும் சர்வசாதாரணமாகக் கையாளப்படுகிறது. தட்டத்தின் மறையத்து துவங்கி, இன்றைய ப்ரேமம் வரை ஏராளமான படங்கள் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தகுந்த படம் – சார்லீ. இந்தப் படம் எனக்கு ஏற்படுத்திய மனமாற்றம் பற்றி ஏராளமாக எழுதமுடியும். எத்தகைய துயரமோ சோகமோ இருக்கும் எப்பேற்பட்ட நபரையும், இரண்டே மணி நேரத்தில் மனம் முழுக்க மகிழ்ச்சியை நிரம்பச் செய்துவிடக்கூடிய படம் இது. ஒரு வகையில், Amelie படத்தை ஓரளவு நினைவுபடுத்தக்கூடிய கரு. ஆனால் முற்றிலும் மலையாள மண்ணுக்கேற்ற கதை. நாயகன் சார்லீ ஒரு மர்ம மனிதன். பலரது வாழ்க்கையிலும் சார்லீயின் பாதச்சுவடுகள் இடம்பெற்றிருக்கின்றன. அவர்கள் அனைவராலும் மறக்கவே இயலாத அற்புதமான மனிதனாக சார்லீ இருக்கிறான். டெஸ்ஸா என்ற பெண், இப்படிப்பட்ட நபர் தங்கியிருந்த வீட்டுக்குக் குடிவர, அங்கே அவனே கைப்பட வரைந்திருக்கும் ஒரு காமிக்ஸ் புத்தகத்தைப் படிக்கிறாள். பாதியில் முடிந்துவிட்ட அந்தப் புத்தகத்தால் சார்லீயைச் சந்திக்கவேண்டும் என்ற ஆவல் வர, அக்கதையில் இடம்பெற்றிருக்கும் ஒரு திருடனைப் பிடித்து, அவன் மூலமாக ஒவ்வொருவராகச் சந்தித்து, இறுதியில் சார்லீயைப் பார்க்கிறாளா இல்லையா என்பது கதை. இக்கதை, ஒவ்வொரு நொடியும் அத்தனை மகிழ்ச்சியுடனும் கொண்டாட்டத்துடனும் நெகிழ்வான தருணங்களோடும் சொல்லப்படுகையில், வாழ்க்கையை இப்படியெல்லாம் வாழ்ந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை எவருக்கும் வராமல் போகாது. பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்று அத்தனை அம்சங்களிலும் அற்புதமான சில மலையாளப் படங்களில் சார்லீயும் ஒன்று.

அதேபோல், லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியின் ஆமென் படத்தையும் இங்கே மறுபடி சொல்லியே ஆகவேண்டும். குமரங்காரி என்ற கிராமத்தில், மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவாகத் தங்கிவிட்ட பேண்டு வாத்தியக் குழு. ஒரு காலத்தில் சிங்கம் போல இயங்கிய எஸ்தப்பன் ஆசானின் மகன் சாலமன். எஸ்தப்பன் இறந்தபின்னர், அவரது நண்பரான லூயிஸ் பாப்பனின் ஆதரவில் பேண்டுக் குழு இயங்கி வருகிறது. எல்லாப் போட்டிகளிலும் தோற்கிறது. சாலமனுக்கு அந்தக் குழுவில் இணைந்து க்ளாரிநெட் வாசிக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் அவனது தாழ்வு மனப்பான்மை, அதனைத் தடுக்கிறது. அப்போது அந்தக் கிராமத்துக்கு வருகிறார் பாதிரியார் வின்ஸெண்ட் வட்டோளி. கிராமத்து மாந்தர்களை மெல்ல மாற்றி, ஒவ்வொருவரும் தங்களைப் புரிந்துகொள்ளவைக்கிறார். சாலமனின் பிரம்மாதமான வாசிப்பு வெளிப்பட, பேண்டுக்குழு ஜெயிக்கிறது. சாலமனின் காதலும் கூடவே சேர்ந்து வெல்கிறது. இத்தனை வேலைகளைச் செய்த வட்டோளி யார்? அதுதான் ஆமென். இந்தக் கதையை ஒவ்வொரு ஃப்ரேமிலும் மகிழ்ச்சியும் துடிப்பும் உணர்ச்சிகளும் பீறிட ஒரு படத்தில் அடக்க முடியுமா? அதுதான் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியின் மாயாஜாலம். இப்படத்தில் அச்சு அசலான கதை மாந்தர்கள் உண்டு. நகைச்சுவை உண்டு. ஆடல் உண்டு. பாடல் உண்டு. மனதைத்தொடும் உணர்வுகள் உண்டு. அங்கமாலி டைரீஸை விடவும் ஆமென் தான் லிஜோ ஜோஸின் மிகச்சிறந்த படைப்பு என்பது என் கருத்து.

இவைதவிர, போலீஸ் படங்கள், சஸ்பென்ஸ் படங்கள், குடும்பச் சித்திரங்கள், பெண்ணியக் கருவை மையமாகக் கொண்ட படங்கள், வழக்கமான வணிக ஹீரோயிஸப் படங்கள், கலைப்படங்கள், பரீட்சார்த்தமான படங்கள் என்று ஒரு மிகப்பெரிய உலகமே மலையாளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறது. மும்பை போலீஸ் படம் எப்படிப்பட்ட கருவைக் கையாண்டது? படம் பார்க்காதவர்களுக்காக, அதன் கருவைச் சொல்லாமல் தவிர்க்கிறேன். மெமரீஸ் படத்தின் கதையை யோசித்துப் பாருங்கள். தவறு செய்த ஒருவன், அந்தத் தவறு நினைவில் இருந்து முற்றிலும் அழிந்துபோனபின்னரும், அதே தடயங்களை வைத்து, அந்தத் தவறைச் செய்தவன் அவன்தான் என்று புரிந்துகொள்ளும் வகையில் பிரம்மாதமாக எழுதப்பட்ட திரைக்கதை அது. அதேபோல், ஒரே ஒரு துளிக் கதையுடன், சம்பவங்களின் நகர்வையே மையமாக வைத்து எழுதப்பட்ட ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படமும் குறிப்பிடத்தகுந்த போலீஸ் படமே. ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் அவர் சந்திக்கும் சம்பவங்கள், அந்தச் சம்பவங்களுக்கான எதிர்வினைகள் என்றே படம் முழுதும் நகரும்.

இவைதவிர, வெளிப்படையாக அரசியல்வாதிகளின் நிஜப்பெயர்களை வசனங்களில் கொண்டுவந்து நக்கல் அடிப்பது, மதங்களையும் அரசியல் கட்சிகளையும் விமர்சிப்பது (கம்யூனிஸ்ட்களை விமர்சித்த படமான ‘தட்டத்தின் மறையத்து’ ஒரு உதாரணம். இதிலேயே முஸ்லிம்களின் மேலும் விமர்சனம் வைக்கப்பட்டது. அதேபோல் அங்கமாலி டைரீஸ் படத்தில் பி.ஜே.பி கட்சியின் மீது அப்பட்டமான ரவுடிகள் அடங்கிய கட்சி என்ற விமர்சனம் வைக்கப்பட்டது) போன்ற அம்சங்களை மலையாளப் படங்களில் மட்டுமே காணமுடியும். தமிழில் ஒரு படத்தில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பி.ஜே.பி ஆகிய கட்சிகளை அவர்களின் கொடிகளைப் போட்டு விமர்சித்துவிட முடியுமா? கேரளத்தில் விமர்சனங்களுக்கு எப்போதும் தடையில்லை என்பதே மனதுக்கு மகிழ்வூட்டக்கூடிய விஷயமாக இருக்கிறது.

ஏராளமான உணர்ச்சிகள் சார்ந்த கதைக்களங்கள், அவை நடக்கும் மண்ணின் இயல்பான கதாபாத்திரங்கள், அவர்களைச் சுற்றி அமைக்கப்பட்ட தெளிவான, பார்ப்பவர்களின் மனதில் தங்கிவிடக்கூடிய கதை என்பவைதான் மலையாளப்படங்களின் பலம்.

நடிப்பு என்று வந்துவிட்டால், தமிழில் இல்லாத நடிகர்களே கிடையாது. ஒரு காலத்தில் எம்.ஆர்.ராதா, சிவாஜி கணேசன் என்று துவங்கி, இன்றைய குரு சோமசுந்தரம் வரை தமிழில் ஏகப்பட்ட நடிகர்கள் உண்டு. ஆனால் இந்த நடிகர்களின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையான படங்கள் தமிழில் உள்ளனவா? சிவாஜியையே எடுத்துக்கொண்டாலும், முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். ஆனால் அவர் தன்னை ஒப்புக்கொடுத்த இயக்குநர்கள் யார் எவர் என்று கவனித்தால், மிகமிகப் பெரும்பாலும் முற்றிலுமான வணிகப்படங்கள் இயக்கிய இயக்குநர்களையே அவர் பெரிதும் நம்பியிருந்தார் என்று விளங்கும். வணிகப் படம் என்றால், தேவர் மகனும் ஒரு வணிகப்படம்தான். பட்டாக்கத்தி பைரவனும் ஒரு வணிகப்படம்தான். முதல் மரியாதையும் முற்றிலுமே ஒரு வணிகப்படமே. சிவாஜியின் நடிப்பு வாழ்க்கையின் துவக்கத்தில் அவர் செய்த பல கதாபாத்திரங்கள் வித்தியாசமானவை. நகைச்சுவை (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தெனாலிராமன்), வில்லன் (அந்த நாள், திரும்பிப்பார், கூண்டுக்கிளி), குணச்சித்திரம் (எதிர்பாராதது, தூக்கு தூக்கி, மங்கையர் திலகம்) என்று பல்வேறுபட்ட கதாபாத்திரங்களில் சிவாஜி மிக அதிகமாக நடித்த காலகட்டம் இது. வீரபண்டிய கட்ட பொம்மன் படத்துக்குப் பின் இத்தகைய பரிசோதனைகளை அவர் பெரும்பாலும் மேற்கொள்ளாமல், ஒரு வசதியான வட்டத்தைத் தன்னைச்சுற்றி உருவாக்கிக்கொண்டு, அந்த வட்டத்துக்குள்ளேயே தனது நடிப்பை வெளிப்படுத்தியதோடு திருப்தி அடைந்துவிட்டார் என்றே சொல்வேன்.

இதுவேதான் சிவாஜிக்குப் பின்னர் மிகப்பெரிய நடிகர் என்று பெயரெடுத்த கமல்ஹாஸனுக்கும் நடந்தது. கமல்ஹாஸனுக்குப் பின்னர் வந்தவர்களில் விக்ரம் ஒரு நல்ல நடிகர் என்றே பலரும் சொல்கின்றனர். அவருக்கும் இதுதானே நடந்தது? இவர்கள் எல்லாருமே, அற்புதமான இயக்குநர்களைத் தேடிச் செல்லாமல், தனக்கு என்று ஒரு வட்டத்தை உருவாக்கிக்கொண்டு, அதிலேயே வணிகவெற்றி அடையக்கூடிய படங்களில் நடித்து வருகின்றனர் (கமலே தேடிச்சென்ற இயக்குநர்களில் முதன்மையானவர் என்று பரதனைச் சொல்லமுடியும். ஒரே ஒரு படம்தான் பரதனுடன் வேலை செய்தார்). அப்படியென்றால், இவர்களை நல்ல நடிகர்கள் என்று மனமார எப்படிச் சொல்லமுடியும்? பல்வேறு பரிசோதனைகளை வெற்றிகரமாகச் செய்பவன் தானே நல்ல நடிகன்? தனது வட்டத்தை விட்டு வெளியேறி, பல புதிய களங்களைத் தேடுபவன் தானே நல்ல நடிகன்? கமல்ஹாஸன், பல படங்களில் தனது நடிப்பை நிரூபித்திருக்கிறார்தான். ஆனால் அது எப்படிப் போதும்?

இதை அப்படியே மலையாளப் புதிய அலைக்குப் பொருத்திப் பார்க்கலாம். இந்தப் புதிய அலையின் தலைசிறந்த நடிகர் என்று யாரைத் திரைரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்? துல்கர் சல்மான்? நிவின் பாலி? ஆஸிஃப் அலி? ஜெயசூர்யா? பிருத்விராஜ்? இந்த்ரஜித்? ரீமா கலிங்கல்? ரெம்யா நம்பீசன்?பார்வதி? இவர்கள் எல்லாருமே நல்ல நடிகர்களே. ஆனால் இவர்களையும் தூக்கிச் சாப்பிடும் திறன் படைத்த ஒரு மகாநடிகன் தான் ஃபஹத் ஃபாஸில். இதை யாராலும் மறுக்கமுடியாது. ஃபஹத் ஃபாஸிலை மையமாக வைத்து, நடிப்பு என்ற அம்சத்தை இந்த மலையாளப் புதிய அலையில் சற்று அலசிப்பார்க்கலாம்.

ஃபஹத் ஃபாஸில் என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்று மக்களுக்குத் தெரியவந்த படம் என்ன? கேரளா கஃபே, காக்டெய்ல், டோர்னமெண்ட் முதலிய படங்களில் அவர் நடித்திருந்தாலும், சாப்பா குரிசு என்ற படம்தான் ஃபஹத்தை அனைத்து ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தியது. அப்படத்தின் கரு என்ன? தன்னிடம் வேலை செய்யும் பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கும் ஒரு பணக்காரன், தனது செல்ஃபோனைத் தொலைத்துவிட, அது இன்னொருவன் கைக்குக் கிடைக்கிறது. இந்த இருவருக்கும் நிகழும் போராட்டமே படம். இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் தமிழில் எந்த ஹீரோ நடிக்கக்கூடும் என்பதை எண்ணிப் பாருங்கள். அப்போதுதான் ஃபஹத் ஃபாஸிலின் குணம் புரியும். கதாநாயகனாகவே நடிக்கவேண்டும் என்று இல்லாமல், கதாபாத்திரத்துக்கு நன்மை செய்யவேண்டும் என்பதுதான் அவரது குணம். இதை அவரது எல்லாப் படங்களிலும் பார்க்கலாம். அதேசமயம், ஃபஹத்தும் ஆக்‌ஷன் படங்களில் நடித்திருக்கிறார். இயோபிண்டே புஸ்தகம் ஒரு உதாரணம். ஆனால் அதிலும் கதையை ஒட்டியே அவரது நடிப்பு வெளிப்பட்டிருக்கும்.

சரி. அடுத்து ஃபஹத் பிரபலமான படம் என்ன? 22 ஃபீமேல் கோட்டயம். அதில் அவரது கதாபாத்திரம் என்ன? தமிழில் ‘மாமா’ என்று மரியாதையாகச் சொல்லப்படும் பிம்ப்தான் அவரது கதாபாத்திரம். படம் பார்த்தவர்களுக்கு இது புரியும். இந்த பிம்ப் பாத்திரத்தில் தமிழில் யார் நடிப்பார்கள்? என்னதான் படத்தின் இறுதியில் ஃபஹத்தின் கதாபாத்திரம் மேல் நாம் கொண்ட எண்ணம் மாறினாலும், கிட்டத்தட்டப் படம் முழுக்கவே அவர் பிம்ப்தானே? இதற்கு அடுத்து அவர் நடித்த அன்னையும் ரஸூலும், ஆமென், 5 சுந்தரிகள், நார்த் 24 காதம், பெங்களூர் டேஸ், இயோபிண்டே புஸ்தகம், மஹேஷிண்டே பிரதிகாரம், டேக் ஆஃப், தொண்டிமுதலும் திருக்சாட்சியும் ஆகிய அத்தனை முக்கியமான படங்களிலும் ஃபஹத் ஃபாஸிலின் கதாபாத்திரங்கள் வித்தியாசமானவையே. இதுமட்டும் இல்லாமல், அந்தந்தப் படங்களில் அவரது நடிப்பைக் கவனித்துப் பாருங்கள். அப்போதுதான், தமிழின் சிறந்த நடிகர்கள் என்று கொண்டாடப் படுபவர்களுக்கும், ஃபஹத் ஃபாஸிலுக்குமான வித்தியாசம் புரியும். ஃபஹத் எப்போதும் தன்னை ஒரு ஸ்டாராக முன்னிலைப்படுத்திக்கொள்ளவே இல்லை. தனக்கென்று ஒரு வட்டமும் வைத்துக்கொள்ளவில்லை. எப்போதுமே, நடிப்புக்குச் சவாலாக விளங்கக்கூடிய கதாபாத்திரங்களையே அவர் தேர்வு செய்கிறார். இதனால்தான் அவரது படங்கள் அவ்வளவு அற்புதமாக விளங்குகின்றன. ஃபஹத்தின் படங்களையே உதாரணமாக வைத்து யோசித்துப் பாருங்கள். அந்தக் கதாபாத்திரங்களைத் தமிழில் செய்யக்கூடிய அளவு நடிகர்கள் இங்கே யார்? ‘இமேஜ்’ என்ற சிறையில் மாட்டிக்கொண்டிருப்பவர்களாக அல்லவா இங்கே நம் நடிகர்கள் உள்ளார்கள்?

இதுதான் தமிழுக்கும் மலையாளத்துக்குமான மிகப்பெரிய வித்தியாசம் என்று எண்ணுகிறேன். என்னவெனில், மலையாளத்திலுமே ஃபஹத் நடிக்கும் படங்கள், முற்றிலும் கலைப்படங்கள் அல்லவே அல்ல. அவைகளுமே வணிகப் படங்களே. ஆனால் வணிகப் படங்கள் என்று நாம் தமிழில் நினைக்கும் மாற்றவே முடியாத சட்டகம் அங்கே இல்லை. கதையைப் பொறுத்து அங்கே வணிகப்படங்களுக்குப் புதிய புதிய சட்டகங்கள் மாட்டப்படுகின்றன. எனவே அவைகளில் ஃபஹத் போன்ற நல்ல நடிகர்கள் நடித்துத் தங்களை நிரூபிக்க முடிகிறது. தமிழிலுமே அட்டக்கத்தி, குற்றம் கடிதல், விசாரணை, காக்காமுட்டை, ஆரண்யகாண்டம் என்று எப்போதாவது இப்படிப்பட்ட படங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் தமிழில் முதன்மையான நடிகர்கள் என்று கருதப்படும் யாராவது இப்படிப்பட்ட படங்களில் நடித்துள்ளார்களா? ஏன் இல்லை என்று யோசித்துப் பாருங்கள். மலையாளத்தில், சூப்பர்ஸ்டார்களாகக் கருதப்படும் மம்மூட்டியும் மோகன்லாலுமே அற்புதமான பல படங்களில் நடித்துள்ளவர்கள்தான். ஆனால் தமிழில் ‘மாஸ்’ என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு பல படங்களின் ஜீவனையும் குலைத்து, நல்ல படங்களை விரும்புபவர்களைத் திரையரங்கத்தின் பக்கமே வரவிடாமல் துரத்தித் துரத்தி அடிக்கின்றனர்.

அடுத்ததாக, மலையாளப் படங்களைப் பற்றி நான் சொல்ல நினைப்பது, அவற்றின் கதையம்சம். சற்றே யோசித்துப் பார்க்கலாம். ஒரு காலத்தில், கல்யாணப்பரிசு, நெஞ்சிருக்கும் வரை, அபூர்வ ராகங்கள், பதினாறு வயதினிலே, தண்ணீர் தண்ணீர், புன்னகை மன்னன், கிழக்குச் சீமையிலே, சேது, பிதாமகன், அன்பே சிவம், மகாநதி என்றெல்லாம் நல்ல கதையம்சம் இருக்கும் படங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தன. ஆனால் இப்போது தமிழில் வரும் படங்களையெல்லாம் ஒப்பிட்டுப் பாருங்கள். காட்சிகளாலேயே ஓடக்கூடிய படங்களாகவே அவை இருக்கின்றன. கடைசியாகக் கதையம்சத்தால் ஓடிய தமிழ்ப்படம் எது என்று உங்களால் சொல்லமுடியுமா? எப்போதாவது பருத்தி வீரன், சுப்ரமண்யபுரம் என்று ஏதாவது ஒரு படம் வரும். ஆனால், நான் சொல்ல வருவது, நாம் கதைகளை விட்டுவிட்டு, திரைக்கதைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதையே. திரைக்கதை விறுவிறுப்பாக இருந்தால் ஒரு படம் ஓடக்கூடும்தான். ஆனால் அந்த விறுவிறுப்பான திரைக்கதைக்காக இவர்கள் வைக்கும் காட்சிகள் எல்லாமே ஒரேபோன்றவையாக அல்லவா இருக்கின்றன? எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல், கட்டமைப்பை மட்டும் நன்றாக முன்னிறுத்தினால் போதுமா?

இதிலும் மலையாளப் படங்கள் முன்னோடிகளாகவே விளங்குகின்றன. நான் மேலே பட்டியல் போட்டுள்ள படங்கள் மட்டும் அல்லாமல், இன்னும் பல மலையாளப் படங்களையும் பாருங்கள். தற்காலத்தில் வெளியாகிப் புகழடைந்துள்ள படங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் கதை என்பது ஒரு இன்றியமையாத அம்சம் என்பது புரியும். அவர்கள் கதையைத்தான் முதலில் எடுத்துக்கொள்கிறார்கள். அந்தக் கதையை, மக்களின் மனதில் புகுத்தும் வண்ணம் படம் எடுக்கிறார்கள். அங்கும் விறுவிறுப்பான படங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றுக்குள்ளும் மனதைத் தொடும் கதையை அவர்கள் எப்படியாவது வைத்துவிடுகிறார்கள். சப்தமஸ்ரீ தஸ்கரஹா, செகண்ட்ஸ், மும்பை போலீஸ், முன்னறியிப்பு, திருஷ்யம், மெமரீஸ், 7த் டே, ஒப்பம் முதலிய படங்களில் இல்லாத கதையா? மலையாளத்தில் முதலில் கதை. பின்னர்தான் திரைக்கதை. தமிழில், முதலில் வாவ் சீன்ஸ் வேண்டும் என்றேதான் அனைவரும் கேட்கின்றனர். அவற்றை வைத்துத் திரைக்கதையை உருவக்கி வெளியிட்டும் விடுகின்றனர். இதனால்தான் தமிழில் வெளியாகும் பல படங்கள் நம் நினைவை விட்டே சென்றுவிடுகின்றன என்று கருதுகிறேன்.

இன்னும் பல பக்கங்கள் மலையாளப் புது அலையைப் பற்றி எழுதமுடியும். ஆனால் இந்தக் கட்டுரையில் சுருக்கமாக எழுதிய விஷயங்கள்தான் முதன்மையாக நான் சொல்ல நினைத்தவை. தமிழ்த் திரைப்படங்களில் வேலை செயும் ஒரு திரைக்கதை கன்சல்டண்ட்டாக, ஒரு திரைக்கதை எழுத்தாளனாக என் மனதில் தோன்றிய ஆற்றாமையையே இங்கே பதிவு செய்திருக்கிறேன். தமிழில் நல்ல கதைகள் உருவாகவேண்டும்; அவற்றின் மூலம் நல்ல நடிகர்கள் அடையாளம் காணப்படவேண்டும் என்பதே என் மிகப்பெரிய ஆசை. அதனை நோக்கிய பயணத்தில்தான் இருந்துகொண்டிருக்கிறேன். இக்கட்டுரையைப் படிக்கும் நண்பர்கள், தயவுசெய்து இதில் இருக்கும் விஷயங்களை எண்ணிப் பார்த்தால், அதுவேகூடத் தமிழில் அட்டகாசமான பல படங்கள் வருவதற்கு ஒரு ஆரம்ப விதையாக இருக்கலாம்.

Vikram Vedha (2017) – Tamil
விக்ரம் வேதா, நான் சற்றே எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம். ஏனெனில், ஓரம்போ எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ‘வ குவார்ட்டர் கட்டிங்’, திரைப்படமா, ஸ்பூஃப் முயற்சியா என்ற குழப்பத்திலேயே எடுக்கப்பட்டிருந்ததால் அதை விட்டுவிடுவோம். மாதவன், விஜய் சேதுபதி என்ற ஹெவிவெய்ட்கள் இருந்ததால் படத்தை வெள்ளியன்றே பார்த்துவிட்டேன். பார்த்துவிட்டு, ஃபேஸ்புக்கில் இரண்டு ஸ்டேட்டஸ்கள் போட்டிருந்தேன். ஆனால் இவற்றில் கதை பற்றி எதுவும் கூறவில்லை. இந்தக் கட்டுரையில்தான் கதையையும் சேர்த்துக் கவனிக்கப்போகிறோம். Spoiler Alert.

1. முதல் ஸ்டேட்டஸ்

2. இரண்டாம் ஸ்டேட்டஸ்

இனி, படத்தைப் பற்றி விரிவாகக் கவனிக்கலாம்.

முதலில், படத்தின் நல்ல அம்சங்களைப் பார்க்கலாம்.

1. கதையின் பின்னணி

முதலாவதாக, படத்தின் நல்ல அம்சம், ஒரு பழைய கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு நவீனகாலப் பூச்சைப் பூசியிருப்பதுதான். விக்கிரமாதித்தன் – வேதாளம் என்பது என் பள்ளிக்காலத்தில் கிட்டத்தட்ட அனைத்துச் சிறுவர் சிறுமியருக்கும் தெரியும். அதற்குக் காரணம் அம்புலிமாமா போன்ற சிறுவர் பத்திரிக்கைகள். கூடவே, விக்கிரமாதித்தன் கதைகள் என்ற பெரிய புத்தகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸால் அருமையான முறையில் அப்போது வெளியிடவும் பட்டிருந்தது. நான் அந்தப் புத்தகத்தைப் பள்ளி நாட்களில் படித்தும் இருக்கிறேன். அதேபோல், அப்போது ராமானந்த் சாகர் வழங்கிய ‘விக்ரம் ஔர் வேதாள்’ என்ற தொலைக்காட்சி சீரியலும் மிகப்பிரபலம். அதில், பின்னாட்களில் ராமனாக நடித்த அருண் கோயல் விக்கிரமாதித்தனாக நடித்தார்.

சில வருடங்களுக்கு முன்னர், ‘கரிகாலன்’ என்ற திரைப்படம் விக்ரமை வைத்து எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். இயக்குநர் எல்.ஐ. கண்ணன் இயக்கிக்கொண்டிருந்த படம் இது. கரிகாலனின் கதையை நல்ல சிஜியோடு அளிக்க முயன்ற படம். அதேபோல், ஆங்கிலத்தில் Sherlock என்ற பிபிசி சீரியல், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சாகசங்கள் புரிந்த ஷெர்லக் ஹோம்ஸை, இருபத்தோராம் நூற்றாண்டில் நம்மிடையே உலவவிட்டது. இப்படி, பழைய விக்கிரமாதித்தன் கதையைத் தற்போதைய உலகுக்கு எடுத்துவந்தது உண்மையிலேயே நல்ல முயற்சிதான் (அதே சமயம், இப்படி எடுக்க நினைத்துக் கையைச் சுட்டுக்கொண்ட மணி ரத்னத்தின் ‘ராவணன்’ படமும் நினைவுக்கு வருகிறது.  அவரது ‘தளபதி’, முற்றிலும் வேறுபட்ட அட்டகாசமான முயற்சி).

வேதாளத்தைக் கைப்பற்ற நினைக்கும் விக்கிரமாதித்தனின் முதுகில் ஏறிக்கொண்டு, வேதாளம் பல கதைகளைச் சொல்கிறது. சரியான விடையளித்தால் அவனை விட்டுவிட்டு மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிடும்.  பின்னர் மறுபடியும் போய் வேதாளத்தைக் கைப்பற்றுவான். பின்னர் மறுபடியும்… இப்படியேயே அவனது வாழ்க்கைக்குத் தேவையான பல தத்துவங்களை வேதாளம் சொல்லிக்கொடுக்கும். விக்கிரமாதித்தன் அந்தத் தத்துவங்களைத் தெரிந்துகொண்டு இன்னும் நல்ல மனிதனாக, நல்லரசனாக வேதாளத்தின் துணையோடு மாறுவான்.

இதே கதையைத்தான் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்பக் கொடுத்திருக்கிறார்கள் புஷ்கரும் காயத்ரியும். படத்தில் வேதாளம் மூன்று கதைகளைச் சொல்கிறது. அக்கதைகளின் முடிவில் என்ன நடக்கும் என்று விக்ரமைக் கேட்கிறது. அப்போது விக்ரமுக்கு ஏற்படும் புரிதல்கள் மூலமாகக் கதை நகர்கிறது என்பது அவசியம் ஒரு சுவாரஸ்யம் ஊட்டக்கூடிய கட்டமைப்புதான்.

2. விக்ரம்

விக்ரமாக நடித்துள்ள மாதவன் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர்மையான போலீஸ் அதிகாரி.  சுற்றி நடக்கும் வேறு எந்தப் பிரச்னை பற்றியும் எதுவும் கவனிக்காமல், எடுத்துக்கொண்ட வேலையை மட்டுமே தீவிரமாகக் கவனிக்கும் கதாபாத்திரம்.இறந்துபோன தந்தையைப் போலவே முரட்டுத்தனமான நேர்மையுடைய நபர். மனைவியைக் காதலிக்கும் அதிகாரி. இயல்பாகவே ஒரு நேர்மையாளன், தன்னை இஷ்டத்துக்குப் பணிபுரிய விடாமல் தடுக்கும் மேலதிகாரிகளின் மீதும், இப்படிப்பட்ட சூழலை உருவாக்கிய சமூகத்தின் மீதும் ஓரளவு கோபத்துடனும் அலட்சியத்துடனும்தான் இருப்பான். அந்தக் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் மாதவன். அந்தக் கதாபாத்திரம் வேலையில் காட்டக்கூடிய புத்திசாலித்தனமும், நிஜவாழ்க்கையில் பிற விஷயங்களில் மெத்தனமாக இருப்பதையும் நன்றாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அதேசமயம் இதனாலேயே ஒரு பிரச்னையும் கதையில் துருத்திக்கொண்டு தெரிகிறது. அதை விரிவாகப் பின்னால் கவனிக்கலாம்.

3. கதைக்குள் கதைகள்

விக்கிரமாதித்தன் கதையில், கதைக்குள் கதை என்ற கதைசொல்லல் முறை மிகவும் பிரபலம். படித்தால் உங்களுக்கும் தெரியும். போஜராஜனுக்குக் காட்டில் சிம்மாசனம் ஒன்று கிடைக்க, அது விக்கிரமாதித்தன் உபயோகப்படுத்திய சிம்மாசனம் என்று உணர்கிறான். பெருமையுடன் அதில் அமரப் போகையில், அதன் ஒவ்வொரு படியிலும் இருக்கும் பதுமைகள், பல கதைகளை அவனுக்குச் சொல்கின்றன. அவன் கருத்தையும் கேட்கின்றன. இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படி வீதம் 32 நாட்களில் 32 படிகளை ஏறி அந்தச் சிம்மாசனத்தில் அமர்கிறான் போஜன். அப்படி ஏறுகையில் அதில் ஒரு பதுமை சொல்வதுதான் விக்கிரமாதித்தனின் கதை.

அதேபோல், படத்திலும், கதைக்குள் கதையாக மூன்று கதைகள் வருகின்றன. ஒவ்வொரு கதையையும் வேதா என்ற கேங்ஸ்டர், போலீஸ் அதிகாரி விக்ரமுக்குச் சொல்கிறான். அதில் அவனது கருத்தையும் கேட்கிறான். இது இயல்பாகவே நான்-லீனியர் வடிவம். அதனை எடுத்துக்கொண்டு, கதையையும் நான் – லீனியராக வடிவமைத்திருப்பது நன்றாக இருந்தது. அதாவது, அந்தத் திரைக்கதைக் கட்டமைப்பு. இயல்பாகவே க்வெண்டின் டாரண்டினோ ஸ்டைலில் கதைக்குள் மூன்று அத்தியாயங்களை இப்படித் திரைக்கதையில் அமைக்க, புஷ்கர் காயத்ரியால் முடிந்திருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன்.

4. இசை

படத்தின் இசை, எனக்குப் பிடித்திருந்தது. ‘ஆடு பாம்பே’ மெட்டில் அமைக்கப்பட்ட ‘கறுப்பு வெள்ளை’ பாடல் படம் முழுதும் வருகிறது. அதேபோல், அதன் மாறுபட்ட வடிவமான ‘ஒரு கதை சொல்லட்டா’, ‘டசக்கு டசக்கு’ ஆகிய பாடல்களும் நன்றாக இருந்தன. திடீரென்று இடம்பெறும் மெக்ஸிகன் கிடார், அவ்வப்போது இடம்பெறும் இசைத்துணுக்குகள் என்று இசையில் எந்தப் பிரச்னையும் இல்லை. படம் முழுதும் அதன் இசையை ரசித்தேன். இசையமைத்திருக்கும் ஸாம் சி.எஸ் நன்றாக அவரது வேலையைச் செய்திருக்கிறார்.

5. வசனங்கள்

படத்தில் கூடுதல் வசனங்களை மணிகண்டன் எழுதியிருக்கிறார். படத்தில் சந்தானம் என்ற போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். இவரது வசனங்களைப் படத்தில் இனம்காண முடிந்தது. படத்தில் எங்கெல்லாம் இயல்பான வசனங்கள் வருகின்றனவோ, அதெல்லாம் மணிகண்டனின் வேலை என்பது, அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். மணிகண்டனுக்குப் பாராட்டுகள்.

படத்தின் ப்ளஸ் பாயிண்ட்கள் இவை. சரி. படத்தின் மைனஸ் பாயிண்ட்கள்?

1. வேதா

படத்தில் வேதாவாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதே குழப்பமாக இருந்தது. படத்தின் துவக்கத்தில் கெத்தாக வந்து சரணடையும் கதாபாத்திரம், வெளியில் வந்ததுமே சூது கவ்வும் தாஸாக மாறிவிடுகிறது. பின்னர் ஒரு சில காட்சிகளில் காதலும் கடந்து போகும் கதிரவனாக மாறிவிடுகிறது. அதன்பின்னர் மறுபடியும் வேதாவாக மாறுகிறது. இந்தக் கதாபாத்திரம் வில்லனா அல்லது ஆண்ட்டி ஹீரோவா என்பதில் புஷ்கர் காயத்ரிக்குமே குழப்பம் இருந்திருக்கிறது என்று கணிக்கிறேன். ஜிகர்தண்டாவில் அசால்ட் சேது இரண்டாம் பாதியில் எப்படி மாறினார்? அப்படி, இதில் ஆங்காங்கே கேரக்டர் ஜம்ப் அடிக்கிறது (அதிலாவது அதற்கு நல்ல justification இருந்தது). விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை நல்லவன் என்று காட்டுவதற்காக இப்படி எழுதியிருக்கிறார்கள் என்பதும் நன்றாகப் புரிகிறது. இந்த ஜம்ப்தான் எனக்கு நெருடிக்கொண்டே இருந்தது. மாதவனின் கதாபாத்திரத்தில் பெரும்பாலும் எந்தப் பிரச்னையும் இல்லை (ஒரு பிரச்னை. அதைப் பின்னால் கவனிப்போம்). ஆனால் விஜய் சேதுபதி, கெத்தான வில்லனா, இல்லை காமெடிக் கதாபாத்திரமா, இல்லை மொக்கை ரவுடியா, இல்லை குணச்சித்திர வேடமா? ஆரம்பத்தில் இருந்து இப்படி மாறி மாறி, அந்தக் கதாபாத்திரத்தில் சுவாரஸ்யமே போய்விடும்படி எழுதப்பட்டிருக்கிறது. துவக்கத்தில் வந்த அளவு பலமான கதாபாத்திரமாகவே படம் முழுக்க இருந்திருக்கவேண்டும். அப்படி இருந்திருந்தால் (ஒரு கனமான வில்லனாக), இந்தப் படம் இன்னொரு தளத்துக்குச் சென்றிருக்கும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. என்னால் வேதாவோடு ஒன்றவே முடியவில்லை.

அடுத்து, இந்தக் கதாபாத்திரம் பலரையும் கொன்றிருக்கிறது. அப்படியென்றால் அது வில்லன் தானே? இதே பிரச்னைதான் கபாலியில் ரஜினிகாந்த்தின் கதாபாத்திரத்துக்கும் இருந்தது. கபாலி ஒரு கடத்தல்காரன். ஆனால் அவனை காந்தியாக சித்தரிக்க முயன்றதால், அந்தக் கதாபாத்திரம் பல இடங்களில் ஜம்ப் அடித்தது. அதேதான் இங்கும்.

2. விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, ஒரு மாஸ் ஹீரோவாக உருமாறிவிட்டார். ஆனால், அவரது இந்தக் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்து ஆராய்ந்து பாருங்கள். வேதா என்ற வடசென்னை ரவுடியாக அவரால் நன்றாக நடிக்க முடிந்திருக்கிறதா? (வடசென்னை ரவுடி என்பதே ஒரு கொடூரமான க்ளிஷே. சென்னையைப் பற்றியே அறியாமல் இருந்தால்தான் வடசென்னை ரவுடி என்ற, அடித்துத் துவைக்கப்பட்ட அரதப் பழைய க்ளிஷேவை உபயோகப்படுத்தமுடியும். அதை விட்டுவிடுவோம்).

சூது கவ்வுமில் விஜய் சேதுபதி நடித்தபோது, தாஸ் கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருந்தினார். அதேபோல், காதலும் கடந்து போகும் படத்திலும் கதிரவனாக அப்படியே இருந்தார். காரணம், விஜய் சேதுபதியை நன்றாக அறிந்த நலனால் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் எழுதப்பட்டிருந்தன. அதுவே, இப்போது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘தர்மதுரை’, ‘இறைவி’, ’கவண்’, ‘றெக்க’, ‘ஆண்டவன் கட்டளை’, ’சேதுபதி’, ’நானும் ரவுடிதான்’ ஆகிய படங்களில் எப்படி நடித்திருந்தார்? நடிப்பதற்கென்று எந்தவிதமான முயற்சியும் செய்யாமல், ஜஸ்ட் லைக் தட் வசனங்களைப் பேசிவிட்டுச் செல்பவராகவே இருந்தார். ஆரம்பகால ‘பீட்ஸா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படங்களில் இந்தப் பிரச்னை இல்லை. அதாவது, அதிலெல்லாம் உடலையும் கொஞ்சம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஓரளவு நடிக்கவும் செய்தார். ஆனால் அவற்றுக்குப் பிறகு, கதாபாத்திரமாக மாறி நடிக்கும் தன்மை அவரிடம் குறைந்துகொண்டே வருகிறது. உடலும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எல்லாப் படங்களிலும் ஒரேபோன்று நடித்தால் எப்படி? இந்தப் படத்தில், தாராளமாக சூது கவ்வுமில் இருந்தே நான்கைந்து சீன்களை வெட்டி வைத்திருந்தாலும் தெரிந்திருக்காது. அப்படி இருக்கிறது அவரது நடிப்பு (எனது பீட்ஸா விமர்சனத்தில், 2012ல், விஜய் சேதுபதி பற்றி நான் என்ன எழுதியிருக்கிறேன் தெரியுமா? இதோ – //விஜய் சேதுபதி, இன்னும் கடினமாக உழைக்கவேண்டும். ஜாலியாக நடிப்பதுபோன்ற மாயை – சசிகுமார் பாணி expressionless நடமாட்டம் உதவாது// – இந்த வரிகள்தான்).

அவசியம் விஜய் சேதுபதி தன்னை ஒருமுறை கவனிக்கவேண்டும். இனியாவது படத்துக்குப் படம் கொஞ்சமாவது மாறுபட்டு நடிக்கவேண்டும். ஒரேபோன்ற நடிப்பு இனி உதவாது. அவரது டயலாக் மாடுலேஷன், உடல்மொழி, நடனம் எல்லாமே கடந்த நான்கைந்து வருடங்களில் துளிக்கூட மாறவில்லை. கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைப்பதால் தப்பித்து வருகிறார் (இனியும் அது நடக்காது. ஒரே போன்ற கதாபாத்திரத்தையே சூது கவ்வும், காதலும் கடந்துபோகும், விக்ரம் வேதா என்று நடித்துக்கொண்டே இருக்கிறார்).

3. திரைக்கதை

படத்தின் மிகப்பெரிய பிரச்னை, இதன் திரைக்கதை. ஏன் என்று சொல்கிறேன். நான் ஏற்கெனவே சொன்னபடி, இதன் கட்டமைப்பு பலமானது. விக்கிரமாதித்தன் கதை – அதில் வேதாளம் கூறும் கதைகள் – அதில் விக்கிரமாதித்தன் முடிவைச் சொல்வது – அதன்மூலம் தன் வாழ்க்கையைப் பற்றியே அறிவது என்பது உண்மையில் அட்டகாசமான கட்டமைப்பு. ஆனால் அதில் வருவது என்ன என்று பார்த்தால், மூன்றுமே ஃப்ளாஷ்பேக் கதைகள். ஃப்ளாஷ்பேக்கில் ஒன்றும் தவறில்லைதான். ஆனால் அதில் இறுதியில் வேதா கேட்கும் கேள்விகளுக்கான விடைகளை, பள்ளியில் படிக்கும் மாணவன் கூடச் சொல்லிவிடுவானே? அத்தனை சுலபமான கேள்விகள் அவை. கூடவே, முதல் கதையைத் தவிர, பாக்கி வரும் இரண்டு கதைகளுமே மிகவும் மெதுவானவை. தொய்வு நிறைந்தவை.

அடுத்ததாக, படத்தில் முன்வைக்கப்படும் கதை என்ன? வேதாவின் கேங்ஸ்டர் கும்பல், அதன் நடுவே ஒரு துரோகி, அவனால் போலீஸ் அதிகாரி விக்ரமுக்கு நேரும் இழப்பு என்பதுதானே? இதுதானே ரிசர்வாயர் டாக்ஸ் காலகட்டத்தில் இருந்தே நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்? இந்தக் கதை வலுவான கதை இல்லையே? இதில் என்ன புதுமை இருக்கிறது? தன்னைச்சுற்றி இருக்கும் சதிவலையை விக்ரம் உணர்கிறான் என்ற கருத்து நல்ல கருத்துதான். ஆனால் எப்படி என்று கவனித்தால், வேதாவுடன் இருக்கும் ஒரு நபர், தான் தான் கேங்ஸ்டராக ஆகியிருக்கவேண்டும் என்ற கோபத்தால் போலீசுக்குப் பணம் கொடுத்து, வேதாவின் கும்பலில் ஒவ்வொருவராகத் தீர்த்துக்கட்டுகிறான் என்பதில் சுவாரஸ்யமான விஷயமே இல்லையே? மிக எளிதில் யூகிக்கக்கூடிய விஷயமாக அல்லவா அது இருக்கிறது?

இதை, ட்விஸ்ட் என்ற பெயரில் இறுதியில் கொண்டுவதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பிரச்னை. உண்மையில் இன்னும் கொஞ்சம் உழைத்திருந்தால், தமிழில் வந்திருக்கக்கூடிய சிறந்த க்ரைம் த்ரில்லர்களில் ஒன்றாக இந்தப் படம் மாறியிருக்கும். ஏனென்றால், விக்ரம் திறமையான போலீஸ்காரன். ஆனால் துவக்கத்தில் இருந்து, தன்னைச்சுற்றி இருக்கும் போலீஸ்காரர்கள் பணத்தில் திளைப்பதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறான் என்பது நம்பவே முடியவில்லை. ஒரு மொக்கை போலீஸ் என்றால் நம்பலாம்.  விக்ரமோ, ராகவன் போலத் தனது இன்ஸ்டிங்க்ட்டை உபயோகப்படுத்தும் அளவு திறமைசாலி. ஆனால் அவனுக்கு யாரைப்பற்றியும் தெரியவில்லை என்பது துளிக்கூடப் பொருந்தாமல் இடிக்கிறது. துவக்கத்தில் இருந்தே மெல்ல மெல்ல அவன் ஒவ்வொரு விஷயமாக வேதாவின் மூலமாகப் புரிந்துகொண்டு, இவர்களைப் பற்றி மெல்ல மெல்ல அறிந்து, இரு குறிப்பிட்ட இடத்தில் எல்லாமே அவனுக்குப் புரிந்தால் நன்றாக இருந்திருக்கும். மாறாக, அத்தனை உண்மைகளும் ஒரே இடத்தில் பளிச் என்று புரிவதுதான் திரைக்கதையின் பலவீனம். அதுவும் எப்படி? ஆரம்பத்தில் வந்த டயலாக்- மகனைப் பள்ளியில் எக்கச்சக்க ஃபீஸ் கட்டிச் சேர்ப்பது, தங்கைக்கு எஞ்சினியரிங் மாப்பிள்ளை – எல்லாமே ஒரே காட்சியில் வந்துவிடுகிறது. இவைகளே இயல்பில் மிகவும் வீக்கான சம்பவங்கள். அவற்றின் மூலம்தான் ஹீரோவுக்கு எல்லா உண்மைகளும் புரிகிறது என்பதை எப்படி நம்பமுடியும்?

ஒரு நல்ல கதைதான் நல்ல திரைக்கதையாக மாறும். ஒரு சராசரிக் கதை, நல்ல திரைக்கதையாக மாறும் வாய்ப்புகள் குறைவே. அந்தப் பிரச்னைதான் இது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஆடியன்ஸுக்கு எதெல்லாம் பிடித்திருக்கிறது என்பது அவர்களின் responseஇலேயே தெரிகிறது. விஜய் சேதுபதியின் எண்ட்ரி, அவர் மாதவனை அடித்துவிட்டுத் தப்பிப்பது, க்ளைமாக்ஸ் ட்விஸ்டை மாதவன் புரிந்துகொள்ளும் இடம், க்ளைமாக்ஸ் சண்டை, மற்றும் படம் முடியும் நேரத்தில் வரும் standoff. இவைகள் ஓரளவு எனக்குமே பிடித்திருந்தன. தனிப்பட்ட காட்சிகளாகப் பார்க்கும்போது. ஆனால் ஒட்டுமொத்தப் படத்தில் இருக்கும் அத்தனை பிரச்னைகளையும் இந்தக் கைதட்டல் காட்சிகளால்  மறந்துவிடவேண்டும் – படத்தைக் கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும் என்றால் அது என்னால் இயலாது. உண்மையில் அட்டகாசமாக வந்திருக்கவேண்டிய கதையில், பல இடங்களைக் கோட்டை விட்டுவிட்டனர் என்றே சொல்ல நினைக்கிறேன். அதுதான் விக்ரம் வேதாவைப் பற்றிய எனது விமர்சனம்.

ஸ்லோ மோஷன் காட்சிகளும், அதற்கேற்ற நல்ல பின்னணி இசையும், பில்டப் காட்சிகளும் எப்போதும் படத்தைக் காப்பாற்றிக்கொண்டே இருக்கமுடியாது. திரைக்கதையில் அதனைச் சாதிக்கவேண்டும். திரைக்கதை வலுவாக இல்லாவிட்டால், இந்தப் பிற விஷயங்கள் படத்தைக் காப்பாற்றுவது இயலாது. ஆனால், ஒரு விஷயம் – தமிழ்நாட்டில் கட்டாயம் ‘தலைவா’ என்று அலறவைக்கும் பில்டப் காட்சிகள், ஸ்லோ மோ, பின்னணி இசை, ஸ்டார்களின் கால்ஷீட் ஆகியவையே, மெதுவான காட்சிகளை மறக்கடித்துவிட்டு ஒரு படத்தைக் காப்பாற்றப் போதுமானவைதான். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் விக்ரம் வேதா. ஆரண்ய காண்டம், சூது கவ்வும், தனி ஒருவன் போன்ற படங்களின் வரிசையில் வந்திருக்கவேண்டிய படம் – அப்படித் திரைக்கதையில் கவனம் செலுத்தாததால், ஒரு வெற்றிப் படமாக மட்டுமே இருந்துவிட்டுப் போய்விடப்போகிறது. சில வாரங்களில் இப்படம் மறக்கப்பட்டுவிடக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம். அதில் எனக்கு வருத்தமே.

Wonder Woman 3D: English (2017)
ஹாலிவுட்டில் ஆயிரக்கணக்கில் இயக்குநர்கள் இருந்தாலும், பெண் இயக்குநர்கள் எத்தனை பேர் என்று யோசிக்க முடிகிறதா? தமிழின் அதே பிரச்னைதான் அங்கும். பெண் இயக்குநர்கள் மிகமிக சொற்பம். ஹாலிவுட்டின் ஒவ்வொரு பெண் இயக்குநருக்கும் மொத்தம் 24 ஆண் இயக்குநர்கள் இருக்கிறார்கள் என்று வேனிடி ஃபேர் எடுத்த ஒரு சர்வே தெரிவிக்கிறது. யோசித்துப் பார்த்தால், மீரா நாயர் (Mira Nair), கேதரின் பிகலோ (kathryn Bigelow), சோஃபியா காப்புலா (Sofia Coppola), குரீந்தர் சாதா (Gurinder Chadha), மார்த்தா கூலிட்ஜ் (Martha Coolidge) என்று மிகக் குறைவான இயக்குநர்களையே பட்டியல் இட முடியும். இந்தப் பட்டியலில் பேட்டி ஜென்கின்ஸ் (Patty Jenkins) மிகவும் முக்கியமானவர். 2003ல் வெளியாகிப் பரவலாகப் பாராட்டுகளைக் குவித்த Monster படத்தை இயக்கியவர். இப்படத்துக்காக நாயகி சார்லீஸ் தெரானுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் கிடைத்தது. இப்படத்தின் திரைக்கதையையுமே பேட்டி ஜென்கின்ஸேதான் எழுதியிருந்தார் என்று சொல்லியே ஆகவேண்டும். மிகுந்த திறமைசாலி.

ஆனால், மான்ஸ்டர் படத்துக்குப் பின்னர் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. 2003ல் வெளியான மான்ஸ்டர் படத்துக்குப் பின்னர், 2017ல் வெளியாகியிருக்கும் ‘வொண்டர் வுமன்’தான் அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது திரைப்படம். இதற்கு முன்னர் 2011ல் ஒரு tv movie இயக்கியிருக்கிறார் (Five). இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இதுவரை ஹாலிவுட்டில் எந்தப் பெண் இயக்குநரும் 100 மில்லியன் டாலர் படம் ஒன்றை இயக்கியதே இல்லை! அதேபோல் சூப்பர்ஹீரோ படம் ஒன்றையும் எந்தப் பெண்ணுமே இயக்கியது இல்லை! கூடவே, பெண் சூப்பர்ஹீரோ படம் ஒன்றை இயக்கியிருக்கும் முதல் பெண் இயக்குநரும் பேட்டி ஜென்கின்ஸ் தான்.

ஒரு சிறிய தகவல் – பேட்டி ஜென்கின்ஸுக்கு 2011ல் ஒரு சூப்பர் ஹீரோ படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு மாதங்கள் அந்தப் ப்ராஜெக்டில் இருந்தபின்னர் அவர் தயாரிப்பு நிறுவனத்தால் நீக்கப்பட்டார். அந்தப் படம் – Thor: The Dark World. தயாரிப்பு நிறுவனம் – மார்வெல்! அதன்பின் மார்வெலின் போட்டி நிறுவனமான டிசியில் இப்போது இன்னொரு சூப்பர்ஹீரோ படம் ஒன்றை அவர் இயக்கியிருப்பது ஆச்சரியமே.

போலவே, ஒரு மிகப்பிரபலமான காமிக்ஸ் கதாபாத்திரமான வொண்டர் வுமன், 2017ல்தான் முதல் திரைப்படத்தைக் காண்கிறது என்பது ஆச்சரியம் இல்லையா? இதுவரை வொண்டர் வுமன் படங்களுக்கான முயற்சிகள் எப்படி நடந்தன?

வொண்டர் வுமனுக்கான முயற்சிகள் துவங்கியது 1996ல். அப்போது அதை இயக்க முடிவானவர் இவான் ரெய்ட்மேன். 1971ல் இருந்து இன்றுவரை படம் எடுத்துக்கொண்டிருப்பவர். பிரபல இயக்குநர். ஆனால் அது நடக்கவில்லை. சில வருடங்கள் இழுத்துக்கொண்டு படுத்துவிட்டது. பின்னர் 2005ல், இன்னொரு தற்போதைய மார்வெல் பிரபல இயக்குநர் உள்ளே நுழைந்தார். ஜாஸ் வீடன்! அவெஞ்சர்ஸ் இரண்டு பாகங்களையும் இயக்கியவர். ஆனால் அவரும் சில வருடங்கள் முயன்று, பின்னர் திரைக்கதையைப் பாதியில் விட்டுவிட்டு வெளியேறிவிட, அந்தச் சமயத்தில் பேட்டி ஜென்கின்ஸ் எடுத்திருந்த மான்ஸ்டர் வேறு நல்ல பெயர் வாங்கியிருந்தது வார்னர் ப்ரதர்ஸுக்குத் தெரியவர, அப்போதே பேட்டியை வொண்டர் வுமன் படத்தை இயக்கச் சொல்லி வார்னர் அணுகியது. உண்மையில் ஜாஸ் வீடன் எழுதும் திரைக்கதையை பேட்டி இயக்குவதாக ஏற்பாடு. ஆனால் ஜாஸ் வெளியேறியதால் பேட்டிக்கும் வாய்ப்பு பறிபோனது.

அதன்பின்னர், ஓரிரு முயற்சிகளுக்குப் பின்னர், மிஷெல் மெக்லாரன் என்ற இன்னொரு பெண் இயக்குநர் அழைக்கப்பட்டார் (Breaking Bad & Walking Dead சீரீஸில் சில எபிஸோட்கள் இயக்கி, எம்மி விருது வென்றவர்). ஆனால் ஆறு மாதங்களில் மிஷேலும் வெளியேறினார். பின்னர்தான் ஸ்டுடியோ மறுபடியும் பேட்டி ஜென்கின்ஸையே அழைத்தது. இம்முறை, ஸாக் ஸ்னெய்டர் உள்ளே நுழைந்து, கதையை டெவலப் செய்தார். அவருடன் Geoff Johns, Jason Fucks, Allan Heinberg ஆகியோரும் இணைந்து கதையை எழுதினர். பின்னர் அந்தக் கதையில் இருந்து ஒரு திரைக்கதையை அலன் ஹெயின்பெர்க் எழுத, அந்தப் படம்தான் தற்போதைய வொண்டர் வுமனாக மாறியது.

பேட்டி ஜென்கின்ஸ் ஒரு நூறு மில்லியன் டாலர் சூப்பர்ஹீரோ படத்தை இயக்கியதைத் தொடர்ந்து, சோனியும் மார்வெலும் இரண்டு பெண் இயக்குநர்களைத் தேர்வு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மார்வெலின் Captain Marvel படம், அன்னா போடெனால் இயக்கப்படப்போகிறது (அவருடன் இணை இயக்கம் ரையான் ஃப்ளெக்). சோனி, அதன் Silver & Black படத்தை இயக்க, ஜினா – ப்ரின்ஸ் பைத்வுட்டிடம் கோரியிருக்கிறது. எனவே, இனி வரும் காலத்தில் பெண் இயக்குநர்கள் பெரிய பட்ஜெட் படங்களைத் தொடர்ந்து இயக்கவே போகிறார்கள். பேட்டி ஜென்கின்ஸ் அடுத்த வொண்டர் வுமன் படத்தை இயக்கத் தயாராகிவிட்டார்.

சரி. படம் எப்படி? Rotten Tomatoes தளத்தில் தற்போதைய ஸ்கோர் 94%. அதுவும் விமர்சகர்களின் ஸ்கோர் இது. பொதுவாக அந்தத் தளம் மிக மிக உறுதியான, கறாரான ரேட்டிங்கையே கொடுக்கும். அதுவும் விமர்சகர்கள் இணைந்து கொடுக்கும் ரேட்டிங்தான் (IMDB எல்லாம் டுபாக்கூர் ஆகி நீண்ட காலம் ஆகிறது. அதைப் பார்ப்பதையே நான் நிறுத்தியாகிவிட்டது). ராட்டன் டொமாட்டோஸில் இவ்வளவு ரேட்டிங் வாங்கிய சூப்பர்ஹீரோ படங்கள் மிக மிக சொற்பம்.

என்னைப்பொறுத்தவரை, வொண்டர் வுமனும் இன்னொரு சூப்பர்ஹீரோ படமே. வழக்கமான சூப்பர்ஹீரோ படங்களில் என்னென்ன இருக்குமோ அதெல்லாமே வொண்டர் வுமனிலும் இருக்கின்றன. ஆனால் வொண்டர் வுமனின் ப்ளஸ் பாயிண்ட், அதன் பெண் ஹீரோ. இதை நான் சொல்லக் காரணம் என்னவென்றால், டயானா ப்ரின்ஸ் அனுபவிக்கும் உணர்ச்சிகள் கதைக்குத் தனி ஏற்றம் கொடுக்கின்றன. துவக்கத்தில் குட்டிப்பெண்ணாக இருந்து, போர்க்கலைகளைக் கற்று, பின்னர் அந்தத் தீவிலேயே மிகச்சிறந்த warriorஆக அவள் தேர்வடைந்து, தீவில் இருந்து வெளியேறி, உலகப்போர் நடக்கும் இடத்துக்குச் சென்று நிகழ்த்தும் சாகசங்கள் முழுதுமே உணர்ச்சிகளோடு கலந்ததாக இருக்கிறது.

இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.  ஒரு சூப்பர்ஹீரோ படத்தை எடுப்பதால் எந்த விஷயமும் இங்கே compromise ஆகவே இல்லை. இதுதான் வொண்டர் வுமனுக்கும் பாஹுபலிக்கும் வித்தியாசம். பாஹுபலியில் பல்வேறு டுபாக்கூர்கள் இருந்தன. ஆனால் வொண்டர் வுமனில் அவை இல்லை. காரணம், எடுத்துக்கொண்ட கதைக்கு ஒவ்வொரு காட்சியிலும் நியாயம் வழங்குகிறது வொண்டர் வுமன். ஆனால் பாஹுபலி, ஆடியன்ஸை முட்டாள்கள் ஆக்கியது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்கும்.

வொண்டர் வுமன் என்ற டயானா ப்ரின்ஸ் ஒரு தேவதை. ஸ்யூஸுக்கும் (Zeus) இவளுக்கும் ஒரு சம்மந்தம் உண்டு. களிமண்ணால் ஆன உருவத்த்துக்கு உயிர் கொடுத்துக் குட்டிப்பெண்ணாக ஆக்கியது ஸ்யூஸ். அதைத தவிரவும் இன்னும் சில தொடர்புகளும் உண்டு. அதெல்லாம் படம் பார்க்கையில் புரியும். எனவே, இவளிடம் சில விசேட சக்திகளும் உண்டு. அவற்றை டயானா உபயோகிப்பது கச்சிதமாக அவளது பிறப்போடு பொருந்துகிறது. எனவே படத்தை ஒன்றிப்போய்ப் பார்க்கவும் முடிகிறது. இது பாஹுபலியில் இல்லை.

ஆனால் ஒரு குறை என்னவென்றால், டயானா, அவளது தீவில் இருந்து வெளியேறுவது வரை, படத்தில் கதை இருந்தது. அதன்பின் கதை மறைந்துபோய், காட்சிகளினால் மட்டுமே திரைக்கதை நகர்கிறது. எனவே, அக்காட்சிகளில் என்னென்ன நடக்கப்போகிறது என்பது நமக்குத் தெரிந்தே இருக்கிறது. இதனால்தான் படத்தின் இரண்டாம் பாதி, ஏனைய சூப்பர்ஹீரோ படங்கள் போலவே இருந்தது. அவற்றில் என்னென்ன நடக்குமோ அதெல்லாமே இதிலும் நடக்கிறது.

இருந்தாலும், படத்தின் சுவாரஸ்யம், நான் சொன்னபடி இதன் உணர்ச்சிகளில் இருக்கிறது. டயானாவின் காதலன், அவன் செய்யும் வேலைகள், அவனது mission, அவனுடன் டயானா சிறுகச்சிறுக நெருங்குவது என்று அந்த எபிஸோட் நன்றாக இருக்கிறது.

அதேபோல், படத்தில் சொல்லப்படும் செய்தி கட்டாயம் தற்போதைய உலகுக்குத் தேவை. மனிதர்களை விட சக்திவாய்ந்த ஒரு தேவதையின் பார்வையில் உலகம் எப்படி அவளுக்குள் evolve ஆகிறது என்பது இதில் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், போர்களின் அழிவு, அந்த அழிவுகளில் இருந்து மனிதகுலம் காக்கப்படவேண்டும் என்றால் என்ன தேவை என்பதெல்லாம் டயானாவின் வாயிலாக நமக்குச் சொல்லப்படுகிறது. இதனால், டயானா என்ற கதாபாத்திரத்தின் இயல்பு, அவளது நோக்கம் எல்லாமே தெளிவாக விளக்கப்பட்டு, நமது மனதில் இடம்பெற்றுவிடுகிறது. இதுதான் ஒரு பெண் சூப்பர்ஹீரோவின் ப்ளஸ் பாயிண்ட். அது இப்படத்தில் கச்சிதமாக இடம்பெற்றுள்ளது.

உண்மையைச் சொல்லப்போனால், டயானாவாக நடித்திருக்கும் கேல் கடாட்டுக்காக இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. கேல் கடாட்டாக ஒருவேளை ஏதாவது மொக்கை ஹீரோயின் நடித்திருந்தால்கூட இப்படம் கட்டாயம் ஆடியன்ஸுக்குப் பிடித்தேதான் இருந்திருக்கும். காரணம் அந்தக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்ட விதம். டயானாவின் கதாபாத்திரமும், படத்தில் ஆங்காங்கே இடம்பெறும் உணர்வுபூர்வமான தருணங்களுமேதான் இப்படத்தை நான் பார்க்கக் காரணம்.

இப்படம் DCயின் பயணத்தில் ஒரு அட்டகாசமான மைல்கல். கட்டாயம் உலகெங்கும் இப்படம் வெற்றிபெறப்போகிறது. டிசியின் சூப்பர்ஹீரோ பயணத்தில் இதற்கு முன்னர் வெளியான Batman Vs Superman படமும், Suicide Squad படமும் மிகவும் சராசரிப் படங்களே. ஆனால் இப்படம் அவற்றையெல்லாம் முந்திக்கொண்டு, இன்னும் பல வருடங்கள் டிசியின் பெயரைப் பறைசாற்றப்போகிறது என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. அதேபோல், இந்த வருட இறுதியில் வரப்போகும் Justice League படமும் கட்டாயம் சிறப்பாக இருக்கும் என்றும் கருதுகிறேன் (காரணங்கள் பல உண்டு. அதைப்பற்றி விரைவில் ஒரு பதிவு எழுதுகிறேன்). எனவே, மார்வெல் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த சூப்பர்ஹீரோ உலகில், முதன்முறையாக டிசி ஒரு அணுகுண்டை வொண்டர் விமன் மூலமாக இறக்கியிருக்கிறது. அந்தக் குண்டு வெடிக்கத் துவங்கியாகிவிட்டது. இனி உலகம் முழுதும் டயானா ப்ரின்ஸின் ஆதிக்கம் இன்னும் சில வாரங்கள் கட்டாயம் இருக்கும்.

பி.கு – எனக்கு இதுவரை மிகப்பிடித்த சூப்பர்ஹீரோ தீமாக வொண்டர் வுமனின் தீம் இசை மாறி ஒரு வருடம் ஆகிவிட்டது. அந்த இசையை Tina Guoவின் கைவண்ணத்தில் இங்கே காணலாம்.

இது வொண்டர் வுமனின் ட்ரெய்லர். Extended.

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
நான் பதிவு (அல்லது பாதிவு) எழுத வந்ததில் இருந்தே இந்தக் குறியீடு என்ற வார்த்தை இணைய உலகில் நாயடி பேயடி வாங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். எப்போதுமே பிற இடங்களில் என்னென்ன பின்பற்றப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் ரிவர்ஸில் திருகி, நசுக்கி, பிதுக்கியே பின்பற்றுவது தமிழ் மக்களாகிய நமது வழக்கம்.

உதாரணமாக, புரட்சி என்ற அருமையான வார்த்தையை நாம் ‘புர்ச்சி’யாக மாற்றிவிட்டோம். சினிமாவில் நாலு புர்ச்சி வசனங்கள் பேசி நடித்தால் புரட்சித் தலைவர் என்று பட்டம். அதுவே அந்தப் புரட்சித் தலைவருடன் நடித்தாலே போதுமானது – புரட்சித் தலைவி பட்டத்தை எடுத்து வழங்கிவிடுவோம். இதுகூடப் பரவாயில்லை. இங்லீஷ் மொழியின்மேல் தமிழர்களாகிய நமக்கு இருக்கும் வெறி கட்டுக்கடங்காதது. பின்னே? ஒரு தமிழ்த் தலைவர் இங்லீஷில் நன்றாகப் பேச, எழுதத் தொடங்கிவிட்டாலேயே பெர்நாட்ஷாவை வம்புக்கு இழுத்து, வம்படியாக ‘தென்னாட்டு பெர்நாட்ஷா’ என்று பட்டம் கொடுத்து விடுவோம். இதுபோல் தளபதி, புரட்சி தளபதி, புரட்சித் தமிழன், இளைய தளபதி என்று இந்தப் புரட்சி வாங்கும் அடி கொஞ்சநஞ்சம் அல்ல. இதைப் பற்றிச் சாரு விரிவாகவே எழுதியிருக்கிறார்.

இதேதான் குறியீடு என்ற விஷயத்துக்கும் தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது.

திரைப்படங்களில் குறியீடு என்றால் என்ன?

ஏதோ ஒரு மறைபொருளான கருத்தை, வெளிப்படையான ஒரு சம்பவத்தின் மீதோ காட்சியில் இடம்பெறும் கதாபாத்திரங்கள்/பொருட்கள் மீதோ சுமத்திக் காட்டுவதே குறியீடு. இதில் என்ன முக்கியம் என்றால், ‘இதோ பாருங்கள் குறியீடு.. இதோ இங்கே குறியீடு வைத்திருக்கிறேன் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றெல்லாம் இயக்குநர் கூவக்கூடாது. அதாவது, எதையாவது பார்த்தவுடனேயே வெளிப்படையாகக் குறியீடு என்பது தெரிந்துவிட்டது என்றால் அது குறியீடே அல்ல என்று பொருள்.

உதாரணமாக, பழங்கால, சங்ககாலத்தில் எடுக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் கூட, முத்தக் காட்சி என்றதுமே ஹீரோ & ஹீரோயின்கள் டகால் என்று குனிந்துகொள்ள, இரண்டு அசிஸ்டெண்ட்கள் கேமராவுக்கு வெளியே தயாராகக் காத்திருந்து, நீட்டும் இரண்டு பெரிய பூக்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும். முத்தத்தைப் பூக்கள் ஒன்று சேர்வதாகக் காட்டுகிறார்களாம். இதுதான் குறியீடு என்று பலரும் இன்றும் நம்புகிறார்கள் (!!!???). அஸிஸ்டெண்டுக்குக் கற்பனை வளம் அதிகமாக இருந்தால், அந்த இரண்டு பூக்களும் கண்டபடி பின்னிப் பிணைந்து கில்மா செய்வதும் உண்டு (!!!!???). அப்படியென்றால், ஹீரோவும் ஹீரோயினும் ‘பெரிய’ வேலை செய்கிறார்கள் என்று அர்த்தமாம்.

இது அல்ல குறியீடு. இரண்டு பேரும் குனிந்தவுடனேயே, ரசிகனுக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துவிடும். அங்கே பூக்களே தேவையில்லை. பூக்கள் என்பது ரசிகனை அண்டர் எஸ்டிமேட் செய்யும் வேலை.

குறியீடு என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ‘சிடிஸன் கேன்’ படத்தில், ‘ரோஸ்பட்’ என்ற வார்த்தையை உச்சரித்தபடியே கேன் இறந்துபோகிறார். அது என்ன என்று படம் முழுக்க ஒருவன் தேடுகிறான். இறுதியில்தான் தெரிகிறது – அது அவர் சிறுவயதில் வைத்திருந்த ஒரு Sled – பனியில் சறுக்கும் சாதனம். அப்படியென்றால் என்ன? மரணப்படுக்கையில் அந்த sledஐ அவர் மிஸ் செய்கிறார் என்றா அர்த்தம்? அது கிடைத்தால் ஜிங் என்று படுக்கையில் இருந்து குதித்துப் பனியில் சறுக்கித் துள்ளி விளையாட ஆரம்பித்துவிடுவாரா?

இல்லை. அந்த ஸ்லெட் என்பது அவர் முற்றிலுமாக இழந்த அவரது இளமைப்பருவத்தையே குறிக்கிறது. மரணப்படுக்கையில் இதை நினைவுகூரும் கேன், ‘என்னுடைய அருமையான இளமையை முற்றிலுமாகத் தொலைத்துவிட்டேனே’ என்று ஆற்றாமையால் வருந்தியே இறக்கிறார்.

இதுதான் குறியீடு. ஒரு குறியீடு இப்படித்தான் மறைபொருளாகப் படம் முழுக்க விரவியிருக்கவேண்டும். இப்படி இருந்தால்தான், ஆடியன்ஸின் புத்திசாலித்தனத்தை underestimate செய்யாமல், அவர்களை மதித்து, ஒரு இயக்குநர் அவர்களையும் தனது ஆட்டத்தில் விளையாட அழைக்கிறார் என்று அர்த்தம்.

சிடிஸன் கேன் எடுக்கப்பட்ட வருடம் – 1941 என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதுதான் இங்கே மிகவும் முக்கியம்.

ஆக, 1941இலேயே, ஒரு இயக்குநருக்கு இப்படிப்பட்ட குறியீடுகள் பற்றிய முழுமையான புரிதல் இருந்திருக்கிறது. அதுவும் எப்படிப்பட்ட காலகட்டம் அது? நாம் இந்தியா முழுக்க, நமது புராணங்களில் இருந்து பக்திக் கதைகளை எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்த காலம். இதுகூடப் பரவாயில்லை. அதற்கும் பல ஆண்டுகள் முன்னரே, 1925இலேயே செர்கய் ஐஸன்ஸ்டீன் என்ற மேதை, ‘பேட்டில்ஷிப் போடம்கின்’ என்ற படத்தை ரஷ்யாவில் இயக்கிவிட்டார் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும், அந்த நாட்டின் மண் சார்ந்த படங்கள்தான் ஆரம்பகாலத்தில் எடுக்கப்பட்டிருக்கும். யுனைடட் ஸ்டேட்ஸில் கூடத் துவக்ககாலத்தில் பல்வேறு genreகள் இப்படி முயற்சிசெய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், நம் நாட்டில் விடாப்பிடியாகப் புராணங்களையே நாம் பலவருடகாலம் பிடித்துத் தொங்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறோம். அப்படியே ஹாலிவுட்டிலிருந்து கவலையே படாமல் காப்பிகளும் துவக்ககாலத்திலேயே அடித்துத் தள்ளியிருக்கிறோம். ஆனால் இவை அல்ல நான் சொல்ல வருவது.

எந்தக் குறியீடுமே, இயக்குநர் வலிந்து திணிப்பதாக இருக்கக்கூடாது. அதுதான் முக்கியம். அப்படித் திணித்தால், அது ‘குறி ஈடு’ ஆகிவிடும். அதாவது, வெளிநாட்டில் புரட்சி என்றால் என்ன? அதுவே தமிழ்நாட்டில் அதற்கு அர்த்தம் என்ன என்று பார்த்தோம் அல்லவா? அப்படிப்பட்ட பரிகாசத்துக்கு உரிய வார்த்தை ஆகிவிடும்.

இது ஒரு புறம் என்றால், ஒன்றுமே இல்லாத ஒரு காட்சியில்கூட, ரசிகர்களுக்கு அந்த இயக்குநரைப் பிடித்துவிட்டால், அவர்களே உருவாக்கும் குறியீடுகள் பற்றிப் பல பக்கங்கள் எழுதலாம். பரத்வாஜ் ரங்கன் என்ற மணி ரத்ன ஆழ்வாரின் பக்தர், இப்படி மணி ரத்னத்திடமே ஓயாமல் பல குறி ஈடுகளைப் பற்றிக் கேட்க, ‘நான் சும்மா வைத்தவை அந்தக் காட்சிகள்.. அவற்றில் குறி யீடும் இல்லை ஒரு மண்ணும் இல்லை’ என்று மணி ரத்னம் இந்த பக்தரை curtஆக வெட்டிவிடுவதை Conversations with Mani Ratnam புத்தகத்தில் காணலாம். அந்த மட்டில் மணி ரத்னத்தின் நேர்மையை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

தமிழில் ஒரு சில இயக்குநர்களுக்கு மட்டும் இந்த ‘குறி ஈட்டுக் குவியல்’ பட்டம் எப்போதுபார்த்தாலும் ரசிகர்களால் வெறித்தனமாகக் கொடுக்கப்படுவதைக் காணலாம். மிஷ்கின் ஒரு உதாரணம். அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் பா. இரஞ்சித். இவர்களின் எந்தக் காட்சியிலும்- ஏன் போஸ்டர்களில் கூட – பல்வேறு குறியீடுகளை ரசிகர்களாகக் கண்டுபிடித்து ஆர்கசம் எய்துவது சமீபகாலங்களில் நடந்துகொண்டே இருக்கிறது. உதாரணமாக, பிசாசு படத்தில் பெரிய பொட்டு வைத்துக்கொண்டு ஒரு அம்மணி ஒரே ஷாட்டில் கொடூரமாக முறைத்துக்கொண்டு நிற்பார். அந்த அம்மணி பற்றி இணையமெங்கும் பல கருத்துகள் கொட்டப்பட்டன. அவற்றையெல்லாம் படித்தால், தன்னை ஒரு செர்கய் ஐஸன்ஸ்டைன் என்றே மிஷ்கின் நம்ப ஆரம்பித்துவிடலாம். அப்படிப்பட்ட கருத்துகள் அவை.

நேற்று வெளியான ‘காலா’ போஸ்டர்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட குறி ஈடுகளின் எண்ணிக்கை இதுவரை 132438756321. இன்னும் சில நாட்களில், இந்த எண் infinity கூட ஆகலாம். ரஜினி அமர்ந்திருக்கும் வண்டியின் எண், அம்பேத்கர் இறந்த வருடம் என்று துவங்கி, அதில் வரும் நாய், ரஜினியின் தாடி வெள்ளையாக இருப்பது, மீசை கறுப்பாக இருப்பது, காலா என்ற பெயர்க்காரணம், ஸ்தல புராணம், தண்டவாளம், அதில் இருக்கும் கட்டைகளின் எண்ணிக்கை, மனிதர்கள் நடப்பது என்று துவங்கி, இரஞ்சித்தை ஒரு தேவதூதன் ஆக்கும் வேலை இணையம் முழுக்கவே பயங்கரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரஞ்சித் இயல்பான மனிதர் என்பதால் இவற்றைப் படித்து சிரித்துக்கொண்டிருக்கக்கூடும்.

இவற்றையெல்லாம் குறியீடு என்று எப்படி ரசிகர்கள் சொல்கிறார்கள் என்பதே புதிராக இருக்கிறது. அம்பேத்கர் இறந்த வருடம் பற்றி அம்பேத்கரைத் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அது எப்படிக் குறியீடு ஆகும்? அதன்மூலம் சொல்லவரும் விஷயமல்லவா குறியீடு? வெறுமனே ஒரு எண்ணை ஒளித்துவைத்துவிட்டால்  அது குறியீடு ஆகிவிடுமா?? இதேபோல், ‘நீலம்’ என்ற அமைப்பு இரஞ்சித்தினுடையது. அது மிகவும் வெளிப்படையான கருத்துதானே? அது எப்படிக் குறியீடு ஆகும்? இரஞ்சித் வெளிப்படையாகத்தான் தனது கருத்துகளை எடுத்துவைக்கிறார். இவையெல்லாம் ரசிகர்களால் மிகமிக அதிகமான பில்டப் கொடுக்கப்பட்டு அவர்களைப் பொறுத்தவரை குறியீடுகளாக மாறி, இரஞ்சித்தைக் கடவுள் ஆக்கும் வேலை கனகச்சிதமாக நடந்துகொண்டு இருக்கிறது என்றுதான் இதை அவதானிக்க இயலும்.

Symbolism மற்றும் Semiotics என்பது ஒரு சமுத்திரம். அவற்றைப் பற்றி இணையத்தில் படித்துப் பாருங்கள். ஏராளமான தகவல்கள் கிடைக்கும். அவற்றை எப்படி உபயோகிக்க வேண்டும் – அவற்றை எப்படிக் கவனிக்க வேண்டும் என்பது நிஜமாகவே நமக்குத் தற்போதைய காலகட்டத்தில்தான் தேவை. அவற்றை முதலில் நாம் உள்ளது உள்ளபடி புரிந்துகொண்டால்தான் குறியீடுகள் என்று நாம் நம்பும் விஷயங்கள் உண்மையில் வெறும் ‘குறி  ஈடு’கள்தான் என்று நமக்குப் புரியும். துவக்ககாலத்தில் இருந்து நமது முன்னோர்கள் உணர்ச்சிவசப்பட்டு நடிகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் என்ன செய்தார்களோ (உணர்ச்சிவசப்பட்ட ஆர்கச நிலையில் அவர்களுக்குப் பட்டம் கொடுத்து அவர்களைக் கடவுள் ஆக்குவது), அதையேதான் நாமும் தற்போது செய்துகொண்டிருக்கிறோம் என்பதாவது நமக்குப் புரியவேண்டும்.

ஒரு இயக்குநரை நிம்மதியாகப் படம் எடுக்க விட்டாலே போதும். அவரைப்பற்றி ஆஹா ஓஹோ என்று பில்டப் கொடுப்பதால் எரிச்சலே மிஞ்சும். இதுவேதான் தற்போதைய அஜீத் பற்றி எழுதப்பட்டு வரும் சம்பவங்களும். அஜீத்தைப் புனிதர் ஆக்கும் வேலை கனகச்சிதமாக நடந்துகொண்டிருக்கிறது. விட்டால் செய்ண்ட் பால் போல அஜீத்தையும் ஒரு செய்ண்ட்டாக இவர்களே உருமாற்றி, போப்பையும் நம்பவைத்துவிடுவார்கள் போல. இப்படி எதையும் நாம் செய்யாமல், அவர்களை அவர்களின் இயல்பில் விட்டுவிட்டாலே போதும் – திரைப்படங்கள் நல்லதாக மாறும்.

எனவே, எதைப்பற்றி நாம் எழுதினாலும், முதலில் அவற்றை நன்றாகப் புரிந்துகொள்வோம். புரிந்துகொண்டு எழுதினால்தானே அவை உண்மை? இல்லாவிட்டால் நாம் எழுதுவது வெறும் உணர்ச்சிவசப்பட்ட நிலையின் சில வரிகள் என்றுதானே பொருள்? ஆகையால், குறியீடுகளின் நிஜப் பொருளை முதலில் அறிவோம். பின்னர் எல்லாவற்றிலும் குறியீடுகளைக் கண்டுபிடித்துக் கன்னாபின்னா என்று உணர்ச்சிவசப்பட்டு எழுதுவதைப் பார்த்துக்கொள்ளலாம்.

Lebowski Image source – http://imgur.com/jo5bjEB

Hollywood & A few Punch Dialogues
அந்திமழையின் மே 2017 இதழில், ஹாலிவுட் படங்களின் பஞ்ச் டயலாக்குகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரை இது.

தமிழ்ப்படங்களில் இப்போதெல்லாம் பஞ்ச் டயலாக் என்ற ஒரு வஸ்து தவறாமல் இடம்பெறுகிறது. ரஜினியில் இருந்து நேற்று திரைப்படங்களுக்கு வந்த இளம் ஹீரோ முதல் இப்படிப்பட்ட பஞ்ச் டயலாக்குகள் தவறாமல் வைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட காட்சிகளுக்கு இளைய தலைமுறையினரிடம் வரவேற்பு இருப்பதே காரணம். இதனாலேயே, கதைக்கே சம்மந்தமில்லாமல், நடிக்கும் கதாநாயகனை மனதில் வைத்துக்கொண்டே இப்படிப்பட்ட பஞ்ச்கள் எழுதப்படுகின்றன. இந்தியாவிலேயே தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில்தான் இப்படிப்பட்ட பஞ்ச்கள் அதிகம். ஹிந்தியில் ஓரளவு உண்டு. ஆனாலும், தமிழர்களுக்கு இப்படிப்பட்ட நாயகரளின் பின்னால் கண்மூடித்தனமாக ஓடும் வியாதி இருப்பது கண்கூடு. அதன் விளைவுதான் ரசிகர்களைத் திருப்திப்படுத்த எழுதப்படும் பஞ்ச் டயலாக்குகள் என்பதிலும் சந்தேகமில்லை. இதுவேதான் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் நடக்கிறது.

சரி. உலகிலேயே அதிகமான படங்களை ஒரு குடிசைத்தொழில் போல உற்பத்தி செய்துகொண்டிருக்கும் ஹாலிவுட்டில் இப்படிப்பட்ட பஞ்ச்கள் உள்ளனவா? அங்கெல்லாம் ரசிகர்களைத் திருப்தி செய்வது நடிகர்களுக்கு அவசியம் இல்லையா?

ஹாலிவுட்டிலும் பஞ்ச்கள் உண்டு. ஆனால் அவை எப்போதுமே கதையோடு சேர்ந்தே இருக்குமே தவிர, நடிக்கும் நாயகனுக்காக எழுதப்படாது. இதுதான் ஹாலிவுட் வசனங்களின் சிறப்பு. இதனாலேயே அங்கெல்லாம் பஞ்ச்கள் என்று அழைக்கப்படாமல், ‘ஒன் லைனர்ஸ்’ என்றே இவை அழைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட ஹாலிவுட் படங்களின் சிறந்த சில ஒன் லைனர்களை நாம் இந்தக் கட்டுரையில் கவனிக்கலாம். இவைகளைத் தவிரவும் ஏராளமான ஒன் லைனர்கள் உண்டு என்றாலும், அவற்றில் ஒரு சிலவற்றைப் பற்றி எழுதுவதே நோக்கம்.

ஹாலிவுட்டின் முதல் பேசும் படமாகிய ‘ஜாஸ் சிங்கர்’ (1927) படத்தில் ஒரு வசனம் உண்டு. “Wait a minute! Wait a minute! You ain’t heard nothin’ yet. Wait a minute, I tell ya, you ain’t heard nothin’! Do you wanna hear ‘Toot, Toot, Tootsie!’? என்று துவங்கும் வசனம் அது. இதைத்தான் உலகின் முதல் பஞ்ச் வசனம் என்று சொல்லவேண்டும். காரணம் இதுதானே உலகின் முதல் பேசும் படம்? அதில் வரும் துவக்க வசனத்தை உலகின் முதல் பஞ்ச் என்றுதானே சொல்லவேண்டும்? ஆடியன்ஸைப் பார்த்து ஜாக் ராபின் என்ற கதாபாத்திரம் இதைப் பேசும். ‘ஒலி திரைப்படங்களில் இடம்பெற ஆரம்பித்துவிட்டது. இனி ரகளைதான்’ என்று பொருள்படும் வசனம் இது.

இதன்பின் பெரிதும் நினைவுகொள்ளப்பட்ட வசனம் என்ன தெரியுமா? 1931ல் வெளியான Frankenstein படத்தில், ஃப்ராங்கென்ஸ்டைன் கதாபாத்திரத்துக்கு உயிர் வந்து அது கைகளை அசைக்கும்போது, அதற்கு உயிர் கொடுத்த மருத்துவர், ஆச்சரியம் கலந்த வெறியோடு “Look! It’s moving. It’s alive. It’s alive… It’s alive. It’s moving, it’s alive, it’s alive, it’s alive, it’s alive, IT’S ALIVE!” என்று கத்தும் வசனம்தான். அது இன்றுவரை பிரபலம். ஹாலிவுடின் சாகாவரம் பெற்ற ஒன் லைனர் இது.

யுனைடட் ஸ்டேட்ஸின் மிகப்பிரபலமான நாவல் ‘Gone with the wind’. மார்கரெட் மிட்செலால் எழுதப்பட்டது. இந்த நாவல் ஹாலிவுட்டில் 1939ல் படமாக்கப்பட்டது. அந்த நாவலின் ஹீரோ (ஆண்ட்டி ஹீரோ) ரெட் பட்லர், கதாநாயகி ஸ்கார்லெட் ஓ ஹாராவிடம், “Frankly, my dear. I don’t give a damn” என்று சொல்லும் வசனம் உலகப் பிரசித்தம் அடைந்தது. ரெட் பட்லராக நடித்தவர் க்ளார்க் கேபிள். ஹாலிவுட்டின் கனவு நட்சத்திரம். எனவே இந்தப் படமும் சரி, இந்த வசனமும் சரி, இன்றும் மறக்கப்படாமல் இருந்துகொண்டிருக்கிறது.

அடுத்த பன்ச் டயலாக், 1941ல் வெளியான ‘Citizen Kane’ படத்தின் பிரபல வசனம். படத்தில் சிடிஸன் கேனாக நடித்து இயக்கியிருந்த ஆர்ஸன் வெல்லிஸ், தனது மரணப்படுக்கையில் உச்சரிக்கும் பெயர்.  “R-o-s-e-b-u-d.” இந்தக் காட்சியில் ஒரு சஸ்பென்ஸ் உண்டு. படத்தின் துவக்கம்  முதலே இதற்கு என்ன அர்த்தம் என்ற சஸ்பென்ஸ் ஏற்படும். இதற்கு விடை, படத்தின் இறுதிக்காட்சியில் விளங்கும். ஒருவேளை படத்தை இன்னும் பார்க்காத நபர்களுக்காக, அந்த சஸ்பென்ஸை உடைக்காமல் விடுகிறேன். ஆனால் ரோஸ்பட் என்பது இன்றும் பல லட்சக்கணக்கான சினிமா ஆர்வலர்களுக்கு ஆர்ஸன் வெல்லிஸை நினைவுபடுத்தாமல் போகாது.

அடுத்த பஞ்ச் வசனம், “Of all the gin joints in all the towns in all the world, she walks into mine” என்ற வசனம். இது 1942ல் வெளியாகி உலகெங்கும் பிரம்மாதமாக ஓடிய ‘Casablanca’ திரைப்படத்தில் இடம்பெறும் வசனம். ஒரு உடைந்துபோன காதல் மறுபடி துளிர்க்கையில் வரும் வசனம் இது. சுருக்கமாக: காதலன் காதலி. திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர். ஆனால் திருமணத்தன்று காதலி காணாமல் போகிறாள். சில வருடங்கள் கழித்து, இவனை ஒரு இடத்தில் சந்திக்கிறாள். அப்போது நாயகன் பேசும் காட்சி இது. காதலி எங்கே போனாள்; இப்போது ஏன் இவனை சந்தித்தாள் என்பதெல்லாம் படம் பார்க்கையில் புரியும். கிட்டத்தட்ட இதே உணர்வுகளை ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் காணமுடியும்.

“Well, uh – a boy’s best friend is his mother.” இதுதான் உலகைக் கலக்கிய அடுத்த பஞ்ச். இது இடம்பெற்ற படம் – ‘Psycho’. ஹிட்ச்காக்கின் அமரத்துவம் வாய்ந்த படம். படத்தின் அடிநாதமே, தாயின் பிணத்தைத் தன்னுடனேயே வைத்திருக்கும் சைக்கோ மகன் பற்றியது. அவனது குணத்தை ஆடியன்ஸுக்குத் தெரியப்படுத்தும் வசனம் இது. ஆனால் இது வரும்போது படத்தில் இதெல்லாம் யாருக்கும் தெரியாது. க்ளைமேக்ஸ் முடிந்ததும்தான் இந்த வசனத்தின் முக்கியத்துவம் எல்லாருக்கும் புரியும். படத்தின் கருவை முதலிலேயே வெளிப்படையாகப் பேசும் வசனம் இது. படத்தில் சைக்கோவாக வரும் நார்மன் பேட்ஸ், படத்தில் குளியலறையில் கொல்லப்படும் (இன்னொரு புகழ்பெற்ற காட்சி) விவியன் லேயிடம் படத்தின் துவக்கத்திலேயே பேசும் வசனம். இதுதான் ஹிட்ச்காக்கின் ஜீனியஸ்.

இதற்கு அடுத்த பஞ்ச், இன்றுவரை பல படங்களில் சொல்லப்பட்டுவிட்டது. உலகுக்கு என்றும் அழியாத ஒரு ஹீரோவை அளித்த முதல் படமான ‘Doctor No’ (1962)வில் வரும் வசனம் இது. “…Bond. James Bond.” பேசியவர் ஷான் கானரி. இதுவரை அனைத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் வந்துவிட்ட பஞ்ச் இது.

செர்ஜியோ லியோனி இயக்கிய புகழ்பெற்ற வெஸ்டர்ன் படமான ‘The Good, The Bad, and the Ugly (1966) படத்தில் இடம்பெற்ற “You see, in this world there’s two kinds of people, my friend: Those with loaded guns and those who dig. You dig” என்பதுதான் அடுத்த பஞ்ச். இந்தப்படத்தில் நாயகனாக நடித்த க்ளிண்ட் ஈஸ்ட்வுட் அடிக்கடி பேசும் வசனம் இது. படத்தின் க்ளைமேக்ஸில், சமாதிக்கு உள்ளே இருக்கும் புதையலைத் தோண்டுகையில் வரும் வசனம். இதன் முதல் பகுதியான “You see, in this world there’s two kinds of people, my friend:” மட்டும் அடிக்கடி வரும். அதன் இரண்டாம் பகுதி மட்டும் மாறும். என்றும் அழியாமல், மனதில் பசுமையாக நினைவிருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.

“I’m gonna make him an offer he can’t refuse.” இது அடுத்த பஞ்ச். இது இடம்பெற்ற படம், நம்மூரில் குஞ்சு குளுவானுக்குக் கூடத் தெரியும். ’1972ல் வெளியான ‘The Godfather’. உலகெங்கிலும் வெளியான பல கேங்ஸ்டர் படங்களுக்கு முன்னோடி. தமிழில் நாயகன் திரைப்படத்துக்கு இன்ஸ்பிரேஷனாக விளங்கிய படம். காட்ஃபாதராக நடித்த மார்லன் ப்ராண்டோவுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் பெற்றுத்தந்த படம் (அவர் அதை வாங்கவில்லை என்பது வேறு விஷயம். காரணத்தைத் தேடிப்படித்துக்கொள்க).

இதற்கடுத்த பஞ்ச், 1977ல் வெளியாகி, இன்றுவரை உலகின் அத்தனை பேராலும் விரும்பப்பட்ட கல்ட் படங்களில் ஒன்றாக விளங்கிக்கொண்டிருக்கும் படம் ஒன்றில் இடம்பெறுவது. இதை இயக்கியவர் ஜார்ஜ் லூகாஸ். இப்போது எளிதில் விளங்கியிருக்குமே? Star Wars. “The Force will be with you, always”படத்தில் அடிக்கடி இடம்பெறும் வசனம் இது. ஜெடாய் போராளிகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும்போது அவர்கள் உச்சரிக்கும் வசனம். இன்றுவரை பல ஸ்டார் வார்ஸ் படங்களில் இது வந்துவிட்டது. இதைச் சொன்னாலே புல்லரிக்கும் வகையில் இந்த வசனம் படத்தில் கையாளப்பட்டிருக்கும். அதே ஸ்டார் வார்ஸ் சீரீஸில் 1980ல் வெளியான இரண்டாம் படமான ‘Empire Strikes Back’ படத்தில், ஒரு முக்கியமான கட்டத்தில், வில்லன் டார்த் வேதெர், ஹீரோ லூக் ஸ்கைவாக்கரிடம் சொல்லும் “No, I am your father” என்ற உலகப்பிரசித்தமான வசனத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இருவருக்குமான உறவு முதன்முறையாக ஸ்கைவாக்கருக்குத் தெரியும் இடம் இது. ஆடியன்ஸ் அதிர்ச்சியடைந்த இடமும் கூட.

“I’ll be back” – இது என்ன படம் என்று தெரிகிறதல்லவா? ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘The Terminator’ (1984) படத்தில் அர்நால்ட் ஷ்வார்ட்ஸெனிக்கரின் கதாபாத்திரம் பேசும் வசனம். அந்தப் படத்தில் அதுதான் வில்லன். ஆனால் பின்னர் கெமரூன் இயக்கிய ‘Judgement Day’ படத்தில் ஹீரோவாக நடித்த கதாபாத்திரம் இது. அப்படத்திலும் இதை சொல்லும். இந்த வசனத்தைக் கேட்டாலே அர்நால்டின் முகம் மனதில் தோன்றுவதுதான் இதன் விசேடம். இதன் இரண்டாம் பாகத்தில் அர்நால்ட் பேசும் “Hasta la vista, baby” வசனமும் மறக்கமுடியாதது.

அடுத்த பஞ்ச்சின் விசேடம், அது ஒரு கெட்ட வார்த்தை என்பதே. ஆனால், அது உச்சரிக்கப்படும் இடம், மிகுந்த ஜாலியான இடம். ஒரு கட்டிடம். அதனுள் வில்லனிடம் பணயக்கைதியாக மாட்டியிருக்கும் மனைவி. அந்த மனைவியோடு பிரச்னை என்றாலும், அவளைப் பார்க்க வரும் கணவன், இதை உணர்கிறான். தன்னந்தனியாக அவளைக் காப்பாற்ற உள்ளே ரகசியமாக நுழைகிறான். ப்ரூஸ் வில்லிஸை உலகம் முழுக்கவும் சூப்பர்ஸ்டாராக மாற்றிய படம், ‘Die Hard’ (1988). இதில், வில்லனைப் பார்த்து ப்ரூஸ் வில்லிஸ் கதாபாத்திரம் பேசும் வசனமான “Yippie ki-yay, motherfucker” இன்றும் பிரபலமான வசனம். ப்ரூஸ் வில்லிஸின் கதாபாத்திரமே, ஆபத்தில் குருட்டு தைரியத்தோடு நுழைந்து அதிரடிகள் புரியும் பாத்திரம் என்பதால் இந்த டயலாக் மிகவும் பிரபலம் ஆனது.

1991ல் வெளியான ‘The Silence of the Lambs’, உலகுக்கு ஒரு புதுவகையான வில்லனை அறிமுகப்படுத்தியது. தனக்குப் பிடிக்காதவர்களைக் கொன்றுவிடுவதோடு மட்டும் அல்லாமல், அவர்களை சமைத்துச் சாப்பிட்டுவிடும் கதாபாத்திரம் இது. மட்டுமல்லாமல், அந்த சமையலை, தன் நண்பர்களுக்கும் அவர்கள் அறியாமல் பறிமாறும் சைக்கோவான டாக்டர் ஹான்னிபல் லெக்டர் பேசும் வசனம் இது. படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் க்ளாரீஸ் ஸ்டார்லிங்கிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, “A census taker once tried to test me. I ate his liver with some fava beans and a nice Chianti” என்று சொல்வார். அவரது குரூரத்தை முழுக்க வெளிக்கொணர்ந்த வசனம் இது. அப்படி அவர் பேசுவதைக் கவனித்தாலே நம் முதுகெலும்பு சில்லிட்டுப் போகும். இந்தக் கதாபாத்திரத்துக்காக ஆண்ட்டனி ஹாப்கின்ஸுக்கு ஆஸ்கர் கிடைத்தது பற்றிச் சொல்லவே தேவையில்லை.

1994ம் வருடத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இப்போது அட்டகாசமான படங்களாகக் கொண்டாடப்படும் ஷஷாங்க் ரிடெம்ப்ஷன், பல்ப் ஃபிக்ஷன், ஃபாரஸ்ட் கம்ப், ஜுராஸிக் பார்க் ஆகியவை எல்லாமே ஒரே சமயத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றில், ஆஸ்கர்களை அள்ளிய ஃபாரஸ்ட் கம்ப் படத்தில், “My Mama always said, ‘Life was like a box of chocolates; you never know what you’re gonna get” என்ற வசனம் உலகப்புகழ் பெற்றது. இன்றும் பலரால் அடிக்கடி பகிரப்படும் வசனம் இது. ஃபாரஸ்ட் கம்ப்பின் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை இந்த ஒரே வசனத்தில் நம்மால் புரிந்துகொண்டுவிடமுடியும் என்பதுதான் இதன் தனிச்சிறப்பு.

“The greatest trick the Devil ever pulled was convincing the world he didn’t exist” என்ற வசனம் The Usual Suspects (1995) படத்தில் பேசப்பட்டபோது, அதுவரை படம் பார்த்த ஆடியன்ஸ், சஸ்பென்ஸின் உச்சகட்டத்துக்குப் போயிருந்தார்கள்> காரணம், படத்தின் வில்லன் யார் என்பதை அந்த வில்லனே பேசும் காட்சி இது. அதுவரை படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களில் யாரெல்லாம் வில்லனாக இருக்கக்கூடும் என்ற கேள்வி ஆடியன்ஸின் மண்டையைக் குடைந்துகொண்டிருந்த நேரத்தில், துளிக்கூட சம்மந்தமில்லாத ஒரு நபர் (ஆனால் படம் முழுக்க வந்துகொண்டிருந்த நபரும் கூட)தான் வில்லன் என்று ரகசியத்தைப் போட்டு உடைத்தால் எப்படி இருக்கும்? இன்றுவரை ஹாலிவுட்டின் மிகச்சிறந்த சஸ்பென்ஸ் தருணங்களில் இதுவும் ஒன்று. இத்திரைக்கதையை எழுதிய க்ரிஸ்டோஃபர் மெக்வார்ரீ, இன்று ஹாலிவுடின் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவர்.

காமிக்ஸ் கதாபாத்திரங்களை வைத்துப் படங்கள் எடுக்கும்போது, காமிக்ஸின் ஃபீல் கச்சிதமாக வரும்படியேதான் படங்கள் எடுக்கவேண்டும். ஆனால் பல இயக்குநர்கள் தவறவிடும் இடம் இது. உதாரணமாக, பேட்மேனை மையமாக வைத்து Batman, Batman Returns, Batman Forever, Batman & Robin என்ற நான்கு படங்கள் வார்னர் ப்ரதர்ஸால் எடுக்கப்பட்டது. இவைகளில் முதலிரண்டு பாகங்களை இயக்கியவர் டிம் பர்ட்டன். இந்த நாங்கு படங்களில், இறுதி இரண்டு படங்கள் கோமாளித்தனத்தின் உச்சகட்டமாக இருக்கும். எனவே இதன்பின் சில வருடங்கள் பேட்மேனைக் கிடப்பில் போட்டது வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம். அதன்பின் க்ரிஸ்டோஃபர் நோலன் என்ற இளைஞர் வந்து Batman Begins என்ற படத்தை இயக்கினார். விமர்சன ரீதியில் அது நல்ல பெயர் வாங்கியது. பின்னர் இதற்குள் பிரபல இயக்குநராக மாறியிருந்த நோலன், The Dark Knight என்ற படத்தை இயக்க, உலகின் மிகச்சிறந்த காமிக்ஸ் தழுவலாக அது மாறியது. இன்றுவரை உலகின் சிறந்த ஆக்‌ஷன் படங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. இந்தப் படத்தில், ஜோக்கரின் கதாபாத்திரம் ஹீத் லெட்ஜரால் நடிக்கப்பட்டது. நடித்ததும் அவர் இறந்தும் போனார். அவருக்கு சிறந்த துணை நடிகர் ஆஸ்கரும் இறப்புக்குப் பின்னர் வழங்கப்பட்டது. அந்தக் கதாபாத்திரம் பேசிய “Why so serious?”என்ற வசனம் உலகப்பிரசித்தி அடைந்தது. ஜோக்கருக்கு உண்டான பின்னணியை ஜோக்கரே இரு இடங்களில் விவரிப்பான். அப்போது அவன் சொல்லும் வசனங்களில் இது ஒன்று. இந்தப் படம் வந்ததும்தான், இன்று டிஷர்ட்களில் ஜோக்கரின் படத்தைப் போட்டுக்கொண்டு சுற்றும் பலருக்கும் ஜோக்கர் என்ற கதாபாத்திரத்தைப் பற்றியே தெரிந்தது.

இவைகளே உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற ஹாலிவுட் பஞ்ச் வசனங்கள். இவைகளைத் தவிரவும் இன்னும் ஏராளம் உண்டு. அவற்றில் சிலவற்றைக் கீழே கொடுக்கிறேன். எது எந்தப் படம் என்று நீங்களே தேடிப்பாருங்கள். பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கும்.

“He-e-e-e-re’s Johnnie!”

“Snakes. Why’d it have to be snakes?”

“E.T. phone home.”

“Say ‘hello’ to my little friend!”

“Go ahead, make my day.”

“Get away from her, you BITCH!”

“I’ll have what she’s having.”

“As far back as I can remember, I always wanted to be a gangster…To me being a gangster was better than being president of the United States.”

“You can’t handle the truth!”

“Get busy livin’, or get busy dyin’.”

“Houston, we have a problem.”

“They may take our lives, but they’ll never take our freedom!”

“To Infinity and Beyond!”

“I’m the king of the world!”

“The first rule of Fight Club is: you do not talk about Fight Club”

“Are you not entertained! Are you not entertained! Is this not why you are here!”

Mysskin & His Films – a Critique
இலங்கையைச் சேர்ந்த தினகரன் பத்திரிக்கையின் ‘பிரதிபிம்பம்’ பக்கத்தில் மிஷ்கினைப் பற்றி விரிவாக எழுதிய இரண்டு பாகக் கட்டுரையின் முழு வடிவம் இங்கே. நான் ஏற்கெனவே எழுதிய கட்டுரைகளில் புதிய விஷயங்கள் பலவற்றைச் சேர்த்து மொத்தமாகக் கொடுத்திருக்கிறேன்.

மிஷ்கினைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர் ‘Auteur‘ என்ற பதத்தைப் பற்றிப் பார்த்தே ஆகவேண்டும். உடனேயே படிப்பவர்கள் தெறித்து ஓடாமல் மேலும் கவனித்தால் தமிழில் உலக சினிமாக்கள் வளர்வதற்குத் தேவையானவை பற்றிப் படிக்கலாம். இல்லை – கமர்ஷியல் மசாலாக்கள் மட்டும்தான் தேவை என்பவர்கள் நேரடியாக இந்தக் கட்டுரையின் கீழ்பாதிக்குப் போய்விடலாம்.

‘Auteur’ என்பதை ‘ஆட்டெர்’ என்றும் ’ஓத்தர்’(ஃப்ரெஞ்ச்) என்றும் சொல்லலாம். ஒரு எழுத்தாளர் ஒரு நாவலை எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது நடையையும் அவரது சமூக நோக்கத்தையும் அவரது பல படைப்புகளிலும் தனியாகக் கண்டுபிடித்துவிடமுடியும். தனது படைப்புகளின் வழியே தான் எப்படி தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைக் கவனிக்கிறோம் என்பதைப் பதிப்பகங்கள், பக்கங்கள், விலைகள் போன்றவைகளிலெல்லாம் கவனம் செலுத்தாமல்/பாதிக்கப்படாமல் முத்திரை போலப் பதிப்பவரே ஆட்டெர். அவர் படங்களிலோ அல்லது எழுத்துகளிலோ ஒரே ஒரு பக்கம்/ஒரு காட்சியைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் இன்னார் என்பதை விளக்கமாகச் சொல்லிவிட முடியும். அந்த வகையில் டாரண்டினோ, ரித்விக் கடக், சத்யஜித் ரே, ஹிட்ச்காக், ஸான் ரென்வா (Jean Renoir), ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ (Francois Truffaut), லார்ஸ் வான் ட்ரையர், ஃபெலினி, டேவிட் லின்ச், ஆந்த்தோனியோனி, கிம் கி டுக், கிம் ஜீ வூன், போங் ஜூன் ஹோ, தகாஷி கிடானோ போன்று பலரும் ஆட்டெர்கள்தான். இவர்களது படங்களில் எந்தக் காட்சியைப் பார்த்தாலும் அது இவர்கள் இயக்கியது என்பதைச் சொல்லிவிடமுடியும். இதில் ஒரு பாடபேதம் என்னவென்றால், ஆட்டெர்கள் இயக்குவது மட்டுமல்லாமல் படத்தை எழுதுவதும் முக்கியம் என்றும் ஒரு பள்ளி இருக்கிறது. த்ரூஃபோதான் இந்தப் பள்ளியின் நிறுவனர். இதைப்பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் முடிந்தால் தனியாக விரிவாகப் பார்ப்போம். இப்போது ஆட்டெர் என்றால் என்ன என்பதே முக்கியம். ஆட்டெர் பற்றி என்ன என்று தெரிய மேலே கொடுக்கப்பட்டுள்ளவர்களின் படங்களைப் பார்த்திருப்பதும், த்ரூஃபோ போன்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதைத் தெரிந்திருப்பதும் அவசியம்.

அடுத்ததாக, தமிழில் உலகப்படங்கள் இல்லை என்று பல கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஏன் என்று கவனித்தால், கமர்ஷியல் படங்களே இங்கே முக்கியம். பணம் சம்பாதிப்பது ஒன்றே லட்சியம். அப்படி இருக்கும் பட்சத்தில் தமிழில் உலகப்படங்கள் வர வாய்ப்பே இல்லை. கூடவே, எந்த இயக்குநருக்கும் தனிப்பட்ட சமூகப் பார்வை அவசியம். சமூகப்பார்வை உலகப்படங்கள் பார்த்தால் மட்டும் வந்துவிடாது. இலக்கியங்கள் படிக்கவேண்டும். காமன் சென்ஸ் வேண்டும். உலகின் burning issues பற்றியும், அதனால் பாதிக்கப்படும்/கொத்துக்கொத்தாக செத்துவிழும் மனிதர்கள் பற்றியும் empathy வேண்டும். இன்னும் முக்கியமாக, மனிதனை மனிதனாகப் பார்க்கும் பார்வை வேண்டும். இதெல்லாம் ஐரோப்பா, கொரியா போன்ற இடங்களைச் சேர்ந்த இயக்குநர்களுக்கு இயல்பாகவே வருகிறது. எனவே அங்கே ஆட்டெர்கள் அதிகம். அவர்கள் மூலமாக உலகப்படங்களும் அதிகம்.

இனி, தற்காலத் தமிழ்ப்பட சூழலுக்கு வந்தால், இன்றைய தேதியில் ஆட்டெர் என்ற பதத்துக்கு மிஷ்கினே முதல் ஆள். ஆனால் மிஷ்கின் முழுமையான ஆட்டெர் அல்ல. அவர் ஒரு flawed auteur. நல்ல இயக்குநர் என்ற இடத்துக்கு ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறார் என்று அவசியம் சொல்வேன். அப்படிச் சொல்வதற்குப் பிசாசு வரை அவரது பயணமே காரணம். இன்னும் நான்கு படங்கள் போதும்; மிஷ்கின் ஒரு முழுமையான உலக இயக்குநர் ஆகிவிடுவார் என்பது என் கருத்து.

தமிழில் இருக்கும் ஒரு இயக்குநரை உலக இயக்குநர் ஆகப்போகிறார் என்று சொன்னால் உடனே ஒரு கும்பல் எள்ளி நகையாடத் தயாராக இருக்கும். ஏன் அப்படி ஆகக்கூடாது? இந்த ஸ்டேட்மெண்ட்டைப் பார்த்து சிரிப்பதற்கு முன்னர் போய் ஆட்டெர் என்றால் என்ன; உலக சினிமா என்ன சொல்கிறது என்பதையெல்லாம் அனுபவித்துத் தயாராக வந்தால்தான் அவர்கள் முதலில் சிரிக்கவே ஆரம்பிக்கலாம். ஒரு விஷயம் என்னவென்றே தெரியாமல் இருப்பவர்களுடன் பேசவே முடியாது.

மிஷ்கினுக்கு என்று ஒரு பாணி இருக்கிறது. ஒரு படத்தை ஐந்தே நிமிடங்கள் பார்த்தாலும், அது மிஷ்கின் படம் என்பதை மிகத்தெளிவாக சொல்லிவிடலாம். அவர் படங்களின் முதல் ஷாட்கள் பெரும்பாலும் வித்தியாசமான கோணங்களில் இருப்பதை கவனித்திருக்கலாம். ‘அஞ்சாதே’வில் உடற்பயிற்சி செய்யும் அஜ்மலை காண்பித்துவிட்டு அப்படியே கேமரா ந……..கர்ந்து அவரை தாக்க வருபவர்களை காட்டும். ‘யுத்தம் செய்’யில் டாப் ஆங்கிள் ஷாட்டுடன் படம் தொடங்கும். உடனே மழை. ’முகமூடி’யில் இருட்டுக்குள் இருக்கும் கேமரா, மிகத்தொலைவில் இருந்து வரும் லாரியை காட்டும். அந்த ஷாட், இருளும் ஒளியும் கலந்து, ஒரு Noir ஸ்டைலில் இருக்கும் (Noir = மொத்த படத்திலும் அந்த ஷாட் மட்டும்தான்). அதேபோல ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திலும் முதல் ஷாட் ஒரு டாப் ஆங்கிள் ஷாட்தான்.

மிஷ்கினுக்கு என்றே இன்னும் சில ஷாட்கள் உள்ளன. ஒரு ஷாட்டில் வசனங்களை பேசாமல், கதாபாத்திரங்களின் உடல்மொழியாலேயே நடப்பதைப் புரியவைக்கும் விதமான ஷாட்கள். உதாரணம்: அந்த ஷாட்டுக்குள் இருக்கும் கதாபாத்திரம், தலையை மெதுவாக தொங்கப்போட்டுக்கொள்ளும். அல்லது மெதுவாக தலையை உயர்த்தும். இல்லையேல் வலது, இடது பக்கங்களை இதேபோல் மெதுவாக கவனிக்கும். அந்த ஷாட்டும் அந்த செய்கை முடிந்தபின்னரும் ஓரிரு நொடிகள் அப்படியே கட் ஆகாமல் இருக்கும். இந்த ஷாட்களில் நடிக்கும் நடிகர்கள் சொதப்பினால், அந்த ஷாட் நகைச்சுவை ஷாட் ஆகிவிடும்.

இவையெல்லாம்தான் மிஷ்கினை ஒரு flawed auteur என்று நான் அழைக்கக் காரணங்களாக இருக்கின்றன. ஒருவிதமான திரைமொழியைத் தனது சொந்த முத்திரையாகப் பாவிப்பதே ஒரு ஆட்டெரின் பாணி. ஆனால் அவருக்கு இவையெல்லாம் இயல்பிலேயே வரும். எடுத்துத் திணிப்பதைப்போல் இருக்காது. எனவே திரைப்படத்தின் போக்கை இதுபோன்ற முத்திரைக் காட்சிகள் பாதிக்காது. ஆனால் மிஷ்கினின் படங்களில், அவரது ‘முத்திரைக் காட்சிகள்’ வரும்போதெல்லாம் படத்தில் இருந்து நமது கவனம் சிதறுகிறது. இக்காட்சிகள் எப்படி ஒரேபோன்று இருக்கின்றன என்றெல்லாம் எண்ணம் செல்கிறது. இதனால்தான் மிஷ்கின் ஒரு flawed auteur.

மிஷ்கினின் கடைசிப் படமான ‘பிசாசு’ அவசியம் ஒரு அருமையான படம். இந்தப் படம் ஆரம்பித்த அரைமணி நேரத்துக்குள்ளேயே 3 Iron மற்றும் Bittersweet Life படங்களைப் பார்க்கையில் எப்படிப்பட்ட அனுபவம் கிடைத்ததோ அதன் சில துளிகள் தென்பட ஆரம்பித்தன. முழுமையாக அல்ல; அதனால்தான் மிஷ்கினை flawed auteur என்று சொன்னேன். இன்னும் அவர் ஒரு முழுமையான இயக்குநர் ஆகவில்லை. அதற்கு இன்னும் சில படங்கள் பிடிக்கும். ஆனால் அந்தப் பயணத்தில் குறிப்பிடத்தக்க தூரம் சென்றுவிட்டார் என்றுதான் சொல்வேன் (முழுமையான இயக்குநர் என்றால் தமிழில் இல்லை. உலகின் எந்த நாட்டிலும் எவரது படங்களை மொழி வித்தியாசம் இல்லாமல் ரசிக்கிறார்களோ அவரே முழுமையான இயக்குநர்). ‘பிசாசு’ ஒரு பேய்ப்படம் அல்ல. உணர்வுரீதியில் அமைந்த ஒரு நல்ல படம். நம்மூரில் பேய் என்றாலே சில க்ளிஷேக்கள் உள்ளன. பேய் ஏன் அதற்கு நேர் எதிராக இருக்கக்கூடாது? பேய் என்றால் கொடூரமாகத்தான் இருக்கவேண்டுமா? 3 Iron படத்தில் கதாநாயகி ஸுன் – ஹ்வா எப்படி நாயகன் டே-சுக்கின் பின்னாலேயே சென்றுவிடுகிறாள்? இத்தனைக்கும் டே-சுக் அவள் வீடுபுகுந்து அங்கே வாழ வந்திருப்பவன். ஆனால் ஒரு பேச்சு கூட பேசாமல் அவனுடனேயே அவள் சென்றுவிடுகிறாள் என்பதைப் படம் பார்க்கையில் கவனிக்கலாம். அதில் வசனங்கள் மிகக்குறைவு. ஆனாலும் அந்த இரண்டு பாத்திரங்களுக்கும் இடையேயான அன்பும் காதலும் பிணைப்பும் எளிதில் யார் வேண்டுமானாலும் புரிந்துகொண்டுவிடலாம். ஆனால் அதைப் புரிந்துகொள்ளக் குறைந்தபட்சம் கிம் கி டுக் யார் என்றாவது தெரியவேண்டும். அப்படித்தான் பிசாசும். ’இது ஒரு வழக்கமான தமிழ் மசாலா பேய்ப்படம்’ என்று நினைத்துக்கொண்டு பார்த்தால் இந்தப் படம் உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பார்த்தால் அவசியம் பிடிக்கும்.

இதேபோல்தான் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படமும். உணர்வுபூர்வமான ஒரு நல்ல படம் அது. ஆனால் இப்படத்தில் ஒருசில பிரச்னைகள் உண்டு. கதாபாத்திரங்களின் உடல்மொழி (குறிப்பாகப் படத்தில் வரும் வில்லன். மிகவும் செயற்கை). வில்லன் மட்டும் இல்லாமல், படத்தின் பல நடிகர்களின் உடல்மொழியுமே செயற்கைதான். இதுபோன்று மிஷ்கினின் ஒவ்வொரு படத்திலும் குறிப்பிட்டே சொல்லக்கூடிய அளவு செயற்கை ஷாட்கள் இருக்கும். எனவேதான் மிஷ்கினை flawed auteur என்று குறிப்பிட்டேன்.

அதுவே மிஷ்கினின் ‘யுத்தம் செய்’, மிகத் தரமான திரைப்படம். வாயுரிஸம் என்று சொல்லப்படும், பிற மனிதர்கள், தனித்தோ அல்லது அவர்களுடைய இணையுடனோ இருக்கையில், அவர்களின் தனிப்பட்ட செய்கைகளை மறைந்திருந்து பார்த்து சந்தோஷம் அடையும் செயல் பற்றிய கச்சிதமான படம். இந்த வாயுரிஸத்தைக் கருவாகக் கொண்ட சில முக்கியமான படங்கள் உண்டு. ஒரு சிறந்த உதாரணமாக, 8mm படத்தைச் சொல்லலாம். Snuff படங்கள் எடுக்கும் ஒரு கும்பலையும், அந்தக் கும்பலை வளைத்துப் பிடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியையும் பற்றிய படமான இதில், அந்த அதிகாரிக்கு ஒரு ஸ்னஃப் படத்தைக் கொடுத்துத் துப்பறியச் சொல்வதே, ஒரு இறந்துபோன செல்வந்தரின் வயதான மனைவி. அவரது அலமாரியில் இந்த ஸ்னஃப் படம் அகப்படுகிறது (ஸ்னஃப் படங்களைப் பற்றி ஒரு குறிப்பு – ஸ்னஃப் படங்களில், சம்மந்தப்பட்ட பெண்களைப் படத்தின் இறுதியில் சித்ரவதை செய்து கொல்லும் காட்சிகளும் இருக்கும்). ஜோயல் ஷூமேக்கரின் இயக்கத்தில், நிகலஸ் கேஜ் நடித்த இப்படம், பார்ப்பவர்களின் மனதை விட்டு அகலாது. இதன் தாக்கம் அப்படிப்பட்டது. அதேபோல், Sex. lies and videotape (1989) படத்தையும் சொல்லமுடியும். ஸ்டீவன் ஸாடர்பர்க்கின் அறிமுகப்படமான இதில், பெண்களுடன் பேசி, அவர்களின் செக்‌ஷுவல் அனுபவங்களையும் ஆசைகளையும் வீடியோவில் பதிவு செய்யும் ஒரு நபரையும், தனது கணவன் மீது உள்ள வெறுப்பினால் (கணவன், இந்தப் பெண்ணின் தங்கையுடன் உறவு கொண்டிருக்கிறான்), அவனுடன் படுத்து, தானும் தன் மனதில் உள்ள எண்ணங்களைப் பதிவு செய்யும் ஒரு பெண்ணையும் பற்றிய படம் இது (எனக்கு மிகப்பிடித்த படங்களில் ஒன்று). இன்னமும் பல படங்கள் இருந்தாலும் (Peeping Tom இன்னொரு உதாரணம்), எனக்குப் பிடித்த இரண்டு ஆங்கிலப் படங்கள் இவை.

இப்படிப்பட்ட படங்களின் தரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படமே யுத்தம் செய். படத்தின் மிகப்பெரிய பலம்,  ஜேகே என்ற கதாநாயகனின் கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கும் விதமே. ஜேகே, ஆறுச்சாமி போலவோ, அன்புச்செல்வனைப் போலவோ, அல்லது பல விஜயகாந்த்தின் கதாபாத்திரங்களைப் போலவோ, வலிந்து திணிக்கப்படும் ஒரு சூப்பர் ஹீரோ அல்ல. அவன், உங்களைப் போலவும், என்னைப்போலவும், நமது பக்கத்துவீட்டு ராமசாமியைப் போலவும் ஒரு சராசரி மனிதன். அவனுக்கும் பல மனக்குறைகள் உண்டு. அந்த மனக்குறைகளுக்குத் தீர்வு காண முயலும் அதே சமயத்தில், தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட வேலையையும் முடிக்க முயலும் நம்மைப்போன்ற அதே மனிதன் தான் அவன். இது, படத்தின் பெரிய பலமாக அமைந்துவிடுகிறது. அதேபோல், ஜேகே செய்யும் காரியங்களும் ஹீரோத்தனமாக இல்லை. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்கும் வேலையைக் கூட அவன் செய்கிறான். அதேபோல், தனக்குத் தேவையான தகவலைக் கொடுக்க மறுத்து, அவனைச் சரமாரியாகத் திட்டும் பெண்மணியைக் கூட அவனால் எதிர்த்துப் பேச முடிவதில்லை. உடன்வரும் கான்ஸ்டபிள், முன்வந்து திட்டும்வரை, அவன் தலைகுனிந்தே நின்றிருக்கிறான் (’அடி செருப்பால’ என்று அந்தக் கான்ஸ்டபிள் திட்டத் தொடங்கும் காட்சி, படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகளில் ஒன்று).

அதுவே, யுத்தம் செய்யின் பலவீனம், மிஷ்கின் என்றே சொல்லமுடியும். மிஷ்கின், தனது உலக சினிமா அறிவையும், தனது ஆங்கிலப் புத்தக அறிவையும் இப்படத்தில் திணிக்கிறார். அந்த வசனங்களும் தேவையே இல்லாதவை (படத்தில், சேரனின் கதாபாத்திரம், ரஷோமான் திரைப்படத்தை refer செய்து பேசும் வசனத்தையும், இறுதியில், ஆங்கிலப் புத்தகம் ஒன்றின் க்ளோஸப்போடு தொடங்கும் காட்சியையும் பற்றித்தான் சொல்கிறேன்). மிகவும் செயற்கையாக, படத்தின் flowவிலிருந்து தனித்துத் துருத்திக்கொண்டு இந்த வசனங்கள் தெரிந்தன. இது மிஷ்கினின் பல படங்களில் வருவதை நான் கவனித்திருக்கிறேன். அதேபோல், அஞ்சாதே படத்தை நினைவுபடுத்திய ஒரு காட்சி, இப்படத்தில் உண்டு. பாலத்தின் மேல், சேரன் அடியாட்களுடன் இடும் சண்டைக்காட்சி. அஞ்சாதே படத்தில், மருத்துவமனையில், நரேனிடம் ஒவ்வொருவராக வந்து, சரமாரியாக அடிவாங்கிக்கொண்டு, பின்னர் மீண்டும் போய், வரிசையில் நின்றுகொள்ளும் இளிச்சவாய் முகமூடி ஆட்களை நினைவிருக்கிறதா? அதேபோல், இதிலும் வரிசைகட்டி வந்து சேரனிடம் குத்து வாங்கும் அடியாட்கள் உண்டு. ஒவ்வொரு படத்திலும் மிஷ்கின் ஒரேபோன்று சில காட்சிகள் அமைப்பதற்கு இது ஒரு உதாரணம். ஆனாலும், இந்த பலவீனங்களையெல்லாம் மறந்துவிட்டுப் பார்க்கும்படியான மிகத்தரமான படம் ‘யுத்தம் செய்’.

மிஷ்கினின் ‘நந்தலாலா’, அவசியம் நல்ல அனுபவத்தைத் தரும் படமே. ஆனால் என்ன பிரச்னை என்றால், ‘கிகுஜிரோ’ படத்தை அப்படியே தழுவி எடுக்கப்பட்ட படம். அதுதான் அப்படத்தை ரசிப்பதில் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. சில காட்சிகள், தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணம், பாட்டியுடன் அகி கழிக்கும் அந்த ஆரம்ப நிமிடங்கள், அகியின் பணத்தைத் திருடும் திருடன் (கிகுஜிரோவில், சிறுவனிடம் பாலியல் பலாத்காரம் செய்யும் பாத்திரம் வரும்), அகியின் தாயாரை பாஸ்கர் மணி சந்திக்கும் காட்சிகள், தனது தாயாரை பாஸ்கர்மணி சந்திக்கும் காட்சி, நரிப்பல் காட்சி (இது கிகுஜிரோவில், ஏஞ்சல் பெல்லாக வருகிறது), லாரி டிரைவரிடம் ஹார்ன் திருடும் காட்சி (கிகுஜிரோவில், கல்லால் லாரிக்கண்ணாடியை உடைப்பான் கிகுஜிரோ), பாஸ்கர் மணியின் பெயர் நமக்கு முதன்முதலில் அறிமுகமாகும் இறுதி நிமிடங்கள் (கிகுஜிரோவிலும், அவனது பெயர், இறுதிக்காட்சியில் தான் நமக்குத் தெரியவரும்) ஆகிய சில உதாரணங்களைச் சொல்லலாம். பார்த்த உடனே கிகுஜிரோவில் இருந்து அப்படியே எடுத்துவைத்திருக்கும் காட்சிகள் புரிந்துவிடுவதால் அலுப்பே மேலிடுகிறது.

திருடப்படாத, மிஷ்கினே சொந்தமாக வைத்துள்ள காட்சிகளே அருமையாக இருக்கையில், அவர் ஏன் இப்படிச் சுட வேண்டும்? சுடாமலேயே நல்ல படம் ஒன்றை நமக்குத் தந்திருக்க முடியும் இல்லையா?

அதேபோல், கிகுஜிரோவில் இருந்த தெளிந்த நீர் போன்ற அமைதியும் அறியாமையும் (innocence) நந்தலாலாவில் இல்லை. உதாரணம்: கிகுஜிரோவின் தாயாரை, மனநோய் விடுதியில் சென்று சந்திக்கும் காட்சி. ஒரே ஒரு நிமிடம் மட்டுமே அக்காட்சி படத்தில் இருக்கிறது. தாயாரைத் தூரத்தில் இருந்து பார்க்கும் கிகுஜிரோ, உடனேயே வெளியே வந்துவிடுகிறான். ஆர்ப்பாட்டமே இல்லாமல் – ஆனால் அதே சமயம் நமது நெஞ்சைத் தொடும் காட்சி இது. நந்தலாலாவிலோ, அழுது ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் ,இக்காட்சியின் ‘தமிழ்ப்படுத்தப்பட்ட’ வடிவம் நமக்குக் கிடைக்கிறது. ஒருவேளை ஒரு ஒரிஜினல் காட்சியாக இருக்கும்பட்சத்தில், நமக்கு இது பிடிக்கக்கூடும். ஆனால், கிகுஜிரோ ஏற்கெனவே நம் கண்ணுக்குத் தெரிவதால், இக்காட்சி படத்தில் சரியாக அமையவில்லை என்று தெரிகிறது.

கிகுஜிரோவில், தாயை வைத்துக்கொண்டு கிகுஜிரோ அல்லல்படுவதில்லை. தன்னுடன் வந்திருக்கும் சிறுவனை எப்படி சந்தோஷமாக வைத்துக்கொள்வது என்பதிலேயே அவனது சிந்தனை செல்கிறது. அது, படத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் தருகிறது. ஏனெனில், இப்படம், கிகுஜிரோவின் தாயைப் பற்றிய படமே அல்ல. இது முழுக்க முழுக்க அந்தச் சிறுவனின் உள்ளத்தில் நிகழும் மாற்றங்களையும் அவனது மென்சோகத்தையும் நமக்கு உணர்த்தும் படம். இவை நிகழ்வதாலேயே, அந்தச் சிறுவனும் தனது நிலையில்தான் இருக்கிறான் என்ற உணர்ச்சி, கிகுஜிரோவின் உள்ளத்தில் ஆணியடித்ததைப் போல் பதிந்துவிடுகிறது. இதுதான் அவன் அந்தச் சிறுவனைப் புரிந்துகொள்வதற்கும் முதல்படியாக இருக்கிறது. ஆனால் நந்தலாலா, பாஸ்கர்மணியின் தாயாரை மையப்படுத்தியே இரண்டாம் பாதியில் செல்வதால், கதை சற்றே தனது நேர்க்கோட்டில் இருந்து பிறழ்ந்துவிடுகிறது. நந்தலாலாவில், ‘ஓ.. நீயும் என்னப்போலதான் அம்மாவைத் தேடிப்போறியா’ என்று பாஸ்கர்மணி வெளிப்படையாகக் கேட்டு, இருவருக்கும் உள்ள ஒற்றுமையைப் பறைசாற்ற வேண்டியிருக்கிறது. இப்படி இருக்கவேண்டும் என்பதற்காகவே, பாஸ்கர் மணியும் தனது தாயாரைத் தேடிப் பயணிப்பது போன்ற ஒரு ஜோடனையை மிஷ்கின் செய்யவேண்டியிருந்திருக்கிறது. இது, கதையின் போக்கைச் சற்றே அசைத்துப்பார்க்கிறது.

இவையெல்லாம்தான் நந்தலாலாவின் பிரச்னைகள். ஒருவேளை கிகுஜிரோ பார்க்காமல் நந்தலாலா பார்த்தால் படம் பிடிக்கக்கூடும். ஆனால் அதற்காக, கிகுஜிரோவில் இருந்து வெட்டிவைக்கப்பட்ட காட்சிகளை எப்படி மன்னிக்க முடியும்?

ஒருவேளை, கிகுஜிரோவின் இரண்டாம் பாதியைப் போல் நந்தலாலாவை எடுத்திருந்தால், மக்கள் அலுப்படைந்துவிடுவார்களோ என்பதுகூட மிஷ்கினின் கவலையாக இருந்திருக்கலாம். இதுதான் மூலப்படத்தில் இருந்து சுடும்போது நேரும் அவலம். சொந்தமாகப் படமெடுப்பதன் மூலம், இதுபோன்ற சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றன.

மிஷ்கினின் ‘அஞ்சாதே’ பற்றி யோசித்துப் பார்த்தால், தமிழின் மிகத்தரமான  ஆக்‌ஷன் த்ரில்லர்களில் அஞ்சாதே முதலிடத்தை வகிக்கக்கூடும் என்று தோன்றுகிறது. காரணம், அஞ்சாதேவில் உணர்வுகள் கலந்த காட்சிகள் மிக அதிகம். இக்காட்சிகளின் வழியாகவே கதை சொல்லப்படுவதால், படம் முழுக்கவும் கதாபாத்திரங்களுடன் ஒன்றிவிடுகிறோம். அதேசமயம் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்படும் கதை எத்தகையது? படம் பார்க்கும் ஆடியன்ஸை சீட்டின் நுனியில் அமரவைக்கும் தன்மையுடைய கதை இது. அதுதான் அஞ்சாதேவின் பலம். இப்படத்தின்மூலம் மிஷ்கின் விஸ்வரூபம் எடுத்தார். மிஷ்கினின் முழுமையான படம் என்று அஞ்சாதேவைக் கட்டாயம் சொல்ல இயலும்.

மிஷ்கினின் இசை பற்றி யோசித்தால், அரோல் கொரேலியாகட்டும் (பிசாசு); இளையராஜாவாகட்டும் (நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்); சுந்தர் சி பாபுவாகட்டும் (அஞ்சாதே); கேவாகட்டும் (யுத்தம் செய்); இந்த எல்லாப் படங்களையும் கவனித்தால், இசையை மட்டும் ஒலிக்க வைத்தாலே அது மிஷ்கின் படம் என்று யாராலும் உடனேயே சொல்லிவிடமுடியும். அதுதான் ஒரு ஆட்டெரின் அடையாளம். யாராக இருந்தாலும் அங்கே அந்த இயக்குநரின் கையில் இருக்கும் ஒரு பேனாதான். அந்தப் பேனாவை வைத்துக்கொண்டு அந்த இயக்குநர் எழுதுவதுதான் எழுத்து. அப்படித்தான் மிஷ்கினின் எல்லாப் படங்களின் இசையுமே. அவசியம் தனது படங்களின் இசையிலும் மிஷ்கின் முத்திரை பதிக்கத் துவங்கியுள்ளார். ஆனாலும் அதில் குறைகள் இல்லாமல் இல்லை. உதாரணமாக, பிசாசு படத்தின் இடைவேளைக்கு முன்னால் வரும் லிஃப்ட் சீக்வென்ஸில் இசை மிகவும் அதிகம். அதேபோல் வசனங்களிலும் காட்சிகளிலும் என்ன சொல்லப்படுகிறதோ அதை இசையும் தனியாக சொல்லப்பார்க்கிறது. அது கூறியது கூறல். ஒரே விஷயத்தை இருமுறை சொல்வது. அது நன்றாகத் தெரியவும் செய்கிறது. அடுத்த சில படங்களில் இது அவசியம் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தைவிடவும் பிசாசு படத்தில் இசை நன்றாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதால் சொல்கிறேன்.

சித்திரம் பேசுதடி ஒரு சராசரிப் படமே. அதன்பின் வந்த அஞ்சாதே ஒரு தரமான ஆக்‌ஷன் படம். அதில் உணர்வுகளும் சமபங்கு வகித்தன. யுத்தம் செய் படத்தில் ஆக்‌ஷனை விட உணர்வுகள் மிக அதிகமாக இருந்தன. இருந்தாலும் அது மக்களுக்குப் பிடித்தது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் முற்றிலும் உணர்வுரீதியான படம். பிசாசும் அப்படியே. ஆனால் இதில் உணர்வுகள் சொல்லப்பட்டிருக்கும் விதம் மிஷ்கினின் மனதின் அடியாழத்திலிருந்தே வருகிறது. அதுதான் ஒரு ஆட்டெரின் அடையாளம்.

இதுபோன்ற முயற்சிகளுக்கு ஆதரவு தருவதன்மூலம் நமக்கு என்ன லாபம் என்றால், நல்ல படங்கள் எப்படி இருக்கும் என்று தமிழிலேயே நமக்குத் தெரிவதுதான். இந்தப் படத்திலேயே அவரது பிரத்யேக உருவாக்கமும் எண்ணங்களும் பிரதிபலிக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் இப்படிப்பட்ட படங்கள் வெற்றியடைந்தால் அவசியம் மிஷ்கின் இன்னும் சிறப்பான, முழுமையான படங்கள் எடுப்பார் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட படங்கள் வந்தால் இந்தியாவின் சார்பிலும் வருங்காலத்தில் தரமான உலகப்படங்கள் எடுக்கப்படும். அவைகளை மிஷ்கினே இன்னும் சில வருடங்களில் எடுக்கக்கூடும். இருந்தாலும், தான் ஒரு ஆட்டெர் என்று ஒருவேளை மிஷ்கின் நினைத்தால் அது அவருக்கு ஆபத்து. அவரை அது இழுத்துக் கீழே தள்ளிவிடும். மாறாக, இயல்பாகவே மிஷ்கின் இருந்துகொண்டிருந்தால் தமிழ் சினிமாவுக்கு அதைவிட நல்லது வேறு எதுவும் இல்லை. தமிழின் குறிப்பிடத்தகுந்த இயக்குநராக மிஷ்கின் மாறிப் பல்லாண்டுகள் ஆகின்றன. அவரால்மட்டுமே சிறப்பாக எடுக்கப்படக்கூடிய கருக்களை எளிதில் இனம்கண்டுகொண்டு, தனக்கே உரிய பாணியில் படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார். என்னளவில், உலகத்தின் பல்வேறு பகுதியில் வாழக்கூடிய மக்களும் ரசித்துப் பார்க்கும் அளவு சிறப்பான படங்களைத் தமிழில் இருந்து எடுக்கக்கூடிய ஒரே இயக்குநராக நான் மிஷ்கினையே சொல்வேன். அவருக்கு அந்தத் திறனும், ரசனையும், ஆழமான அனுபவ அறிவும் உண்டு என்றே கருதுகிறேன். அப்படிச் சில படங்களை மிஷ்கின் எடுக்கக்கூடிய காலகட்டம் வந்துவிட்டது என்றும் நினைக்கிறேன். உலகத் திரை அரங்கில் தமிழகத்தை அடையாளம் காட்டக்கூடிய அப்படிப்பட்ட சிறந்த மிஷ்கினின் படங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

Image courtesy – https://silverscreen.in/tamil/features/mysskin-interview-the-lone-wolf/

Baahubali 2: The Conclusion (2017) – Tamil & Telugu
‘ஒரு மனிதன், பொதுவாக மனிதர்களால் முடியாததையெல்லாம் செய்யும் படங்கள் அவ்வப்போது வருவதுண்டு . அவற்றை நாம் superhero படங்கள் என்று அழைப்போம். ஹாலிவுட்டில் வெளிப்படையான சூப்பர்ஹீரோக்கள் உண்டு. நம்மூரில் சூப்பர்ஹீரோ உடைகள் எதுவும் அணியாமலேயே, ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்கள் செய்வதைவிடவும் நம் ஹீரோக்கள் பத்து மடங்கு அதிகமான சாகசங்கள் செய்வார்கள். இதுவரை அப்படித்தான் இருந்துவந்தது.

பாஹுபலியின் முதல் பாகத்தில் இதை ராஜமௌலி உடைத்தார். ‘ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்கள் எல்லாம் ஜுஜுபி..அந்தப்பக்கம் போயி விளையாடுங்கடா.. நாங்கல்லாம் டிரெய்னையே விரலை அசைச்சே ரிவர்ஸ்ல ஓட வைக்கும் தெலுங்கு டைரக்டருங்கடா.. இப்பப்பார்டா என் வித்தையை’ என்று சூளுரைத்து, ராட்சத மிருகங்களான கிங் காங், காட்ஸில்லா, டைனோசார், காய்ஜு ஆகியவை மனிதவடிவில் வந்தால் என்னாகும் என்று படம் எடுத்தார். அதுதான் பாஹுபலி 1. பின்னே? கிங் காங் சைசில் உள்ள சிலையை குட்டியூண்டு ஹீரோ அசால்ட்டாகத் தாங்குவது, அருவியின் கீழிருந்து சரசர என்று ஏறி அருவியையே தாண்டுவது என்று காட்ஸில்லாவும் கிங்காங்கும் செய்ததையெல்லாம் ஹீரோவை செய்யவைத்து அட்ராசிடி செய்தார். ஹீரோ இப்படி என்றால், வில்லனோ மாமிசமலை சைசில் உள்ள எருமையை அடக்குவது என்றெல்லாம் டபிள் டைனாசாராக மாறினான்.

இதெல்லாமே ட்ரிப்பிள், எட்டு மடங்கு, ஆயிரம் மடங்காக இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் பாஹுபலி 2. ஹீரோ அட்ராசிடீஸ் இதில் உச்சகட்டம். காட்ஸில்லாவை மனிதனாகக் காட்டும் புதுவித சூப்பர்ஹீரோ படம் இது. பக்காவான, அக்மார்க் தெலுங்கு டப்பிங் படம். No doubt.

வானில் பறக்கிறார்கள்.. மரத்தைப் பிடுங்கி அடிக்கிறார்கள்.ஐம்பதடி அறுபதடி பாலத்தை வெறும் குதிரை மேலிருந்து ஹீரோ அசால்ட்டாகத் தாண்டுகிறான்..கல்லாலான பிரம்மாண்டமான தேரில், அதைவிட பிரம்மாண்ட பிள்ளையார் சிலையை ஜாலியாக இழுத்து வீசுகிறான்.. ஏ யப்பா.. மனுசப்பயலா எதாச்சும் செய்யுங்கடா என்று அலறலாம் போலவே தோன்றியது. அட இதெல்லாம் கூடப் பரவாயில்லை. ஆனால், மதில் சுவற்றுக்கு வெளியே இருந்து ஹீரோவின் அத்தனை படைகளும் கோட்டைக்குள் ஜிங்ஜிங் என்று குதிப்பதற்கு ஒரு ஐடியா செய்திருக்கிறார் பாருங்கள் ராஜமௌலி.. (ரயில் விரலசைவால் ரிவர்சில் போவதை நினைத்துக்கொள்ளவும்). அசல் தெலுங்கு இயக்குநர் ஒருவர், அசல் தெலுங்கு ஆடியன்சுக்காக எடுத்திருக்கும் அச்சு அசல் தெலுங்குப்படம் என்பதற்கு அதுவே போதும்’.

–இந்தப் பதிவை ஃபேஸ்புக்கில் நேற்று பாஹுபலி 2 பார்த்ததும் எழுதியிருந்தேன். அது எப்படி இந்தியாவின் மிகப்பெரிய வசூல் சாதனைகளில் ஒன்றைச் செய்த ஒரு படத்தின் இரண்டாம் பாகம் பற்றி எழுதலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். உண்மையைச் சொன்னால், எனக்கு எந்தப் படத்தின் மீதும் வெறுப்பு இல்லை. நான் பாஹுபலியைப் பற்றி மேற்சொன்னவாறு எழுதியதற்குப் பல காரணங்கள் உண்டு. விரிவாகக் கவனிக்கலாம்.

முதலில், எனது முதல் பாக விமர்சனம் இங்கே. படிக்க விரும்புபவர்கள் படித்துக் கொள்ளலாம். முதல் பாகத்தைப் பற்றி மட்டுமல்லாமல், இரண்டு பாகங்களின் பின்னணியைப் பற்றியும் அதில் தெளிவாகவே எழுதியிருக்கிறேன்.

Baahubali 1- The Beginning- Review

Spoiler Alert.

முதலில், படத்தைப் பற்றிய என் கருத்து. முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது, படத்தின் சில காட்சிகள் எனக்குப் பிடித்தே இருந்தன. துவக்கத்தில், சிவகாமியின் ஆணைப்படி, நாட்டைச் சுற்றிவந்து, மக்களைப் பற்றி அறிந்துகொள்ளக் கட்டப்பாவோடு மாறுவேடத்தில் பாஹுபலி கிளம்பும் காட்சியைத் தொடர்ந்த, குந்தளநாட்டுக்கு அவன் செல்வது, அங்கே தேவசேனாவைப் பார்ப்பது, காதல் கொள்வது, பன்றி வேட்டைக்கு அவர்கள் செல்வது, காதல் காட்சிகள் ஆகிய காட்சிகள்தான் அவை. படத்துவக்கத்தில் வரும் இக்காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் feel சுவாரஸ்யமாக உள்ளது.  அனுஷ்காவை இவ்வளவு அழகாக எந்தப் படத்திலும் பார்த்ததே இல்லை. போலவே படத்தின் இடைவேளைக் காட்சியும் மிகவும் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. எனக்குப் பிடித்தது.

ஆனால், இவற்றுக்குப் பின்னர் வரும் காட்சிகளில் பல பிரச்னைகள் உள்ளன. அவை, கதைக்குள் போகமுடியாமல் தடுத்தன. எவை அவை என்று சொல்கிறேன்.

சிவகாமிதேவி, முதல் பாகத்தில் எப்படிக் காட்டப்படுகிறார்? ஒரு நேர்மை தவறாத ராணியாக, குடிமக்கள் மேல் பாசம் உள்ள ராணியாகவே, மிகுந்த கம்பீரத்துடன் அவர் காட்டப்படுகிறார். பாஹுபலியை முதல் பாகத்தில் இளவரசனாகவும் அறிவிக்கிறார். ஆனால் இந்தப் பாகத்தில், தேவசேனாவை பாஹுபலி அழைத்துவரும் இடத்தில் எப்படிக் காட்டப்படுகிறார்? பாஹுபலியைத்தான் தேவசேனா விரும்புகிறாள்; பல்வாள் தேவனை அல்ல என்ற உண்மை புரிந்ததுமே, மகனுக்கு வாக்குக்கொடுத்துவிட்ட ஒரே காரணத்தால், குடிமக்களின் மேல் அத்தனை பாசம் உள்ள ராணி, அந்தக் குடிமக்களுக்கு பாஹுபலியின் மீது எத்தனை பாசம் உள்ளது என்பதை நன்றாக அறிந்த ராணி, ஒரே கணத்தில், பாஹுபலியைப் பதவி இறக்கி, பல்வாள் தேவனை இளவரசன் ஆக்கிவிடுகிறாள். ஒரு ராணி, தனது சொந்தக் காரணங்களுக்காக இப்படி இஷ்டத்துக்குப் பதவிமாற்றம் செய்துகொண்டிருக்கலாமா? செய்யலாம். ஒரு கொடுங்கோல் ராணி அப்படிச் செய்யலாம். மண்டையில் மசாலா இல்லாத ராணி அப்படி தாராளமாகச் செய்யலாம். ஆனால் எல்லா அம்சங்களிலும் சிறந்தவர் என்று நமக்குக் காட்டப்பட்ட சிவகாமியின் கதாபாத்திரம் இப்படிச் செய்தால் அதை எப்படிப் புரிந்துகொள்வது? இத்தனைக்கும் பாஹுபலி மக்களுக்காகச் சேவை செய்வதில் எந்தக் குழப்பமும் செய்யவில்லை. மக்களை நட்டாற்றில் விடவில்லை. கொஞ்சகாலம் முன்னர்தான் குந்தள தேசத்தில் நடைபெற்ற மாபெரும் படையெடுப்பைத் தோற்கடித்து, மகிழ்மதியையே காப்பாற்றியுள்ளான் வேறு (குந்தள தேசம், மகிழ்மதியின் எல்லையில் உள்ளது என்று படத்தில் சொல்லப்படுவதை மறந்துவிடவேண்டாம்).  எனவே, தான் தனது மகனுக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக, டமால் என்று     பாஹுபலியைப் பதவி இறக்கிவிட்டு, மகனை இளவரசனாக அவசரமாக அறிவிக்கும் சிவகாமிக்கும், முதல் பாகத்தில் அத்தனை சிறப்பாகக் காட்டப்பட்ட சிவகாமிக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா? ஏன் இத்தனை பெரிய முரண் இந்தக் கதாபாத்திரத்தில்? இத்தனைக்கும் இந்தப் பதவி மாற்றம் மக்களுக்காக அல்லவே அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். முற்றிலும் சுயநலமான மாற்றம் இது. ஒரு  கதாபாத்திரத்தை உருவாக்குவதில் ஒரு லாஜிக் வேண்டாமா? இப்படித்தான் கண்டபடி ஒரு கதாபாத்திரத்தைச் சிதைப்பதா?

பாஹுபலி தேவசேனாவைத் திருமணம் செய்கிறான். வில்லன் பல்வாள்தேவன், ஒன்பது மாதங்கள் சும்மாவா இருந்தான்? எந்தப் பிரச்னையும் செய்யவில்லையா? கரெக்டாகக் குழந்தை பிறக்கப்போகும் நேரத்தில்தான் பிரச்னை செய்வானா? அப்படியென்றால் அவன் வில்லனா இல்லை பைத்தியமா? ஏனெனில், ஒன்பதாவது மாதம்தான் பாஹுபலி மனைவியோடு அரண்மனை விட்டு வெளியேறவேண்டும். அப்போதுதான் குழந்தை பிறக்கையில் பாஹுபலியைக் கட்டப்பா கொல்ல முடியும். எனவே, நடுவே எதையும் காட்டத் தேவையில்லை. ஆடியன்ஸ்தான் நாம் எதைக் காட்டினாலும் நம்புவார்களே? பக்கா தெலுங்கு டெக்னிக். அப்படியே, பல்வாள்தேவனின் நோக்கம்தான் என்ன? நாட்டை ஆளவேண்டும். இதைத்தவிர, பாஹுபலியைப் போட்டுத்தள்ள வேண்டும். ஓகே. ஆனால் பல்வாள்தேவனைப்பற்றி எதுவுமே நமக்குத் தெரிவதில்லை. ஆங்காங்கே வருகிறான். க்ளைமேக்ஸில் சண்டை போடுகிறான். அவ்வளவே. ஒரு உறுதியான வில்லனாக இல்லாமல், சப்பை வில்லனாக மட்டுமே பல்வாள்தேவன் இருக்கிறான்.

தன் மனைவியை மட்டும் இல்லாமல், போகிற, வருகிற அத்தனை பெண்களையும் கண்டபடி தடவும் ஒருவனை பாஹுபலி கொல்கிறான். கொல்வதற்கு முன்னர், அவனது விரல்களை வெட்டியதற்காக தேவசேனாவைக் கைது செய்து இதே சிவகாமிக்கு முன்னர் நிறுத்துகின்றனர். அப்போது விசாரணை நடக்கிறதா? குற்றம் சாட்டப்பட்டவனை மட்டுமே விசாரிக்கின்றனர். தேவசேனா, உண்மையைச் சொல்ல, அதை ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர். சத்தியசந்தையாகப் போற்றப்படும் சிவகாமி கூட உண்மையைத் தீரவிசாரிக்காமல், அவசர அவசரமாக தேவசேனாவுக்கு தண்டனையே கொடுக்க நினைக்கிறாள். ஏன்? தன்னை முகத்துக்கு நேராகக் கேள்வி கேட்டவள் தேவசேனா என்ற காழ்ப்பினால் மட்டுமே. மறுபடியும் கேட்கிறேன். அப்படியென்றால் சிவகாமியின் கதாபாத்திரம் உண்மையில் எப்படிப்பட்டது? ஏன் கண்டபடி இந்தக் கதாபாத்திரத்தை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார்கள்? அவ்வளவு பெரிய சபையில் இதைக்கூடவா சரியாக விசாரிக்காமல் டுபாக்கூர்தனமான தீர்ப்பு வழங்குவார்கள்? இது ஏனென்றால், அரண்மனை விட்டு பாஹுபலி வெளியேற்றப்படவேண்டும் . அப்படியென்றால் என்ன செய்யலாம்? எழுது ஒரு சீனை. வெட்டு விரல்களை. யாரையும் விசாரிக்காதே. கொல்லு அவனை. அவசரமான தீர்ப்பு வழங்கு.. வெளியேற்று இருவரையும். இதற்குத்தான்.

பாஹுபலி அரண்மனையை விட்டு வெளியேறியாகிவிட்டது. இதன்பின் வில்லன் பல்வாள்தேவன் என்ன செய்கிறான்? ஒருவனைத் தேர்வு செய்து, அவனிடம் தந்தை பிங்களதேவனை விட்டு, பல்வாள்தேவனைக் கொன்றால்தான் இனி பாஹுபலி நிம்மதியாக இருப்பான் என்று சொல்கிறான். அவன் ஒரு மரமண்டை (???!!) என்பதால் பல்வாள் தேவனைக் கொல்லச் செல்ல, அங்கே பல்வாள்தேவன் இதை எதிர்பார்த்து, அவனைக் கொல்கிறான். இதெல்லாம் எதற்கு? சிவகாமியிடம் இதைச் சொல்லி, பாஹுபலிதான் பல்வாள்தேவனைக் கொல்ல ஆள் அனுப்பினான் என்று சொல்லி, பாஹுபலியைக் கொல்ல ஆணை பிறப்பிக்கவேண்டுமாம் (??!!). இதில் எங்காவது லாஜிக் இருக்கிறதா? எதைச்சொன்னாலும் சிவகாமி நம்பிவிடுவாள் என்றால், முதல் பாகத்தில் பெரிய சூரி (சூரனுக்கு எதிர்ப்பதம்) போல அவளை ஏன் காண்பித்தீர்கள்? ஏனெனில் அது முதல் பாகம். அப்போது எதை வேண்டுமானாலும் சொல்வோம். இது இரண்டாவது பாகம். இதிலும் எதை வேண்டுமானாலும் சொல்வோம். நாங்கள் எதைச் சொன்னாலும் நீங்கள் நம்பியே ஆகவேண்டும் என்ற தெலுங்கு டெக்னிக்தான். கூடவே, அந்த மரமண்டை, பாஹுபலியின் கத்தியை வைத்துக்கொண்டு இறந்தால், உடனடியாக பாஹுபலியை அழைத்து விசாரிக்காமல், முட்டாள் போல அவனைக் கொல்ல வேண்டும் என்றா சிவகாமி தீர்ப்பு சொல்வாள்? இதில் ஏதேனும் லாஜிக் உள்ளதா?

பாஹுபலியைக் கொல்லவேண்டும். உடனடியாகக் கட்டப்பா வரவழைக்கப்படுகிறான். அவனிடம் சிவகாமி, போய் பாஹுபலியைக் கொல் என்று சொல்கிறாள். கட்டப்பா மறுக்கிறான். உடனே சிவகாமி சொல்வது என்ன? நீ கொல்கிறாயா நானே கொல்லட்டுமா? உடனே கட்டப்பா சம்மதித்து விடுகிறார். பாஹுபலி என்ன கசாப்புக்கடையில் இருக்கும் ஆடா யார் கொல்லலாம் என்று ஷாட் பூட் த்ரீ போட்டுப் பார்த்து ஜாலியாக முடிவுசெய்வதற்கு? நாடே போற்றும் வீரன். ஒரு முன்னாள் இளவரசனை, சேனாதிபதியை இப்படித்தான் படுமுட்டாள்தனமாகத் திட்டம் (???!!) போட்டுக் கொல்வார்கள்? இதில் துளிக்கூட எந்த லாஜிக்கும் இல்லை. இல்லவே இல்லை.

சரியப்பா. கட்டப்பா ஒத்துக்கொண்டுவிட்டார். கொன்றும் விட்டார். திரும்பி வந்து பல்வாள்தேவனின் சதியை சிவகாமியிடம் சொல்கிறார். உடனே சிவகாமி உண்மையை உணர்ந்துவிடுகிறாள். அப்படிப்பட்ட கட்டப்பா, படத்தின் ஆரம்பத்திலேயே, பிங்களதேவன், தன் மனைவி சிவகாமியைக் கொல்லவேண்டும் என்று பேசுவதை ஒட்டுக்கேட்டபின்னரும் ஏன் அதை சிவகாமியிடம் சொல்லாமல் மவுன விரதம் காத்துவந்தார்? அடேய் லூசு கட்டப்பா. இதை முன்னாலேயே சிவகாமியிடம் சொல்லியிருந்தால் பல்வாள் தேவனையும் பிங்களதேவனையும் கம்பி எண்ணவைத்துக் களி தின்ன வைத்திருக்கலாமே? சிவகாமிதேவிதான் யார் எதைச் சொன்னாலும் மண்டையை மண்டையை ஆட்டும் முட்டாள் என்றுதானே இந்தப் படத்தில் ராஜமௌலி எழுதிவைத்திருக்கிறார்? பின் ஏன் சிவகாமியிடம் படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லவில்லை? சொன்னால் படமே முடிந்துவிடும் என்பதால்தானே?

இதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம். சிவகாமி, இளம் பாஹுபலியுடன் தப்பிக்கும்போது கட்டப்பா என்ன செய்கிறார்? பல்வாள் தேவனைப் பொடனியிலேயே ஒரு அடி போட்டுத் தள்ளிவிட்டுவிடுகிறார். கட்டப்பா ஒரு அடிமை. சொன்னசொல் தவறாத அடிமை. இதைக் கட்டப்பாவே ஒத்துக்கொள்ளும் வசனமும் படத்தில் உண்டு. அப்படிப்பட்ட ஒரு அடிமை, இளவரசனை அள்ளையிலேயே போடும்போது இளவரசன் என்ன செய்திருக்கவேண்டும்? கட்டப்பாவைக் கைமா செய்திருக்கவேண்டாமா? ஆனால் இதன்பின்னரும் கட்டப்பா 25 வருடங்கள் அங்கேயே சேவகம் செய்கிறார். இத்தனைக்கும் பெற்ற தாய் சிவகாமியைப் பல்வாள்தேவனே அம்புவிட்டுக் கொல்வதையும் இரண்டு முட்டைக் கண்களால் பார்க்கிறார் வேறு. அப்படியென்றால் கட்டப்பாவும் லூசுதானே? எவனாவது, தன் அன்புக்குப் பாத்திரமான இளவரசன் இறந்து, அதைவிட அன்புக்குப் பாத்திரமான அரசியைப் பெற்ற மகனே கொன்றதைப் பார்த்துக்கொண்டும் அடிமுட்டாள் போல 25 வருடங்கள் அங்கேயே வேலை செய்வானா? இது ஏன் என்றால், அப்போதுதான் மகேந்திர பாஹுபலி வருவான்.. அவனிடம் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்ல ஒரு வீணாகப்போன தண்டம் வேண்டும். அது கட்டப்பாவைத்தவிர வேறு யார் என்று ராஜமௌலிகாரு யோசித்து ஆஸ்கர் வெல்லும் திரைக்கதை எழுதியதால்தான் (???!!). பின்னால் ஒரு இடத்தில், ராஜமௌலி இதை சமாளிக்க ஒரு வஜனம் எழுதியிருக்கிறார் பாருங்கள் – அற்புதமான வஜனம் அது. இந்த வஜனம் ஒன்றே ஆஸ்கர் பெறும் தகுதி கொண்டது – ‘அரசி குழந்தையுடன் இறந்துவிட்டாள் என்று எண்ணிதான் இங்கேயே 25 வருடங்கள் வேலை செய்தேன்’. இதுதான் அந்த வஜனம். அட மண்டையில் மசாலா இல்லாத கட்டப்பாவே- உன் அரசியை உன் கண் முன்னரே அவள் மகன் கொன்றிருக்கிறான். அதைப் பார்த்தபின்னுமா வெட்கம் கெட்டு அங்கேயே இருந்தாய்? ஒரே ஒரு எதிர்ப்பைக் கூடக் காட்டாத நீ ஒரு வெட்டி முண்டம் வீணாகப்போன தண்டம் தானே?

இத்தனை ஃப்ளாஷ்பேக்கையும் கேட்கும் ஷிவு என்ற ஜுனியர் பாஹுபலி, உடனடியாக வீரம் கொண்டு கிளம்புகிறான். ஒரு பயிற்சியும் இல்லை. ஆனால் கச்சிதமாக அம்பெய்கிறான். அந்த அம்போ, ஒரு தலையைப் பல கிலோமீட்டர்கள் carry செய்து, பல்வாள்தேவனின் மண்டையின் அருகே போடுகிறது. ஒரு sniper போல இவ்வளவு துல்லியமாக அம்பெய்தும் ஜூ.பாஹுபலி, ஒரே அம்பில் பல்வாள்தேவனை அங்கிருந்தே போட்டுத் தள்ளியிருக்கலாமே? படம் சீக்கிரம் முடிந்திருக்குமே?

ஜூ.பாஹுபலி, கோட்டையின் வெளியே இருக்கிறான். பல்வாள்தேவன், பாஹுபலியின் அம்மா தேவசேனாவைக் கடத்திக்கொண்டு கோட்டைக்குள் போய்விட்டான். பாஹுபலி, 50-60 அடி உயரம் உள்ள கோட்டையின் வாசலை ஒரே தாண்டாகத் தாண்டி (???!!) உச்சிக்குப் போய்விட்டான். பல்வாள் தேவன் அம்பெய்து அவனை வீழ்த்திவிட்டான் (தனது பரம எதிரி – குழந்தையிலேயே அவனைப் போட்டுத்தள்ளவேண்டும் என்று நினைத்தவன் மீது அம்பெய்கிறான். ஆனால் காயம் மட்டுமே படுத்துகிறான். கொல்லவில்லை. ஏன்? ஏனெனில் க்ளைமேக்ஸில் கிங்காங் Vs காட்ஸில்லா சண்டையை இருவரும் போடவேண்டுமே?).  இப்போது எப்படிக் கோட்டைக்குள் செல்வது? சுற்றுமுற்றும் பார்க்கிறான். அவனைப்போலவே ராஜமௌலியும் புஜங்கள் துடிக்க அங்குமிங்கும் பார்த்தபடி யோசிக்கிறார். ஆ!! கோட்டை வாயிலைச்சுற்றிப் பனைமரங்கள் உள்ளன. ஐடியா!! பாஹுபலி ஓடிச்சென்று பனைமரத்தை வளைக்கிறான். வீரர்கள் பிடித்துக்கொள்கின்றனர். எப்படியும் 60-70 வயதாகியிருக்கும் கட்டப்பாவை இழுத்துக்கொண்டு (முதியோர் வன்கொடுமை!) வளைக்கப்பட்ட பனைமரத்தின் மீது ஏறுகிறான். இவனுடன் 3-4 வீரர்களும் ஏறுகின்றனர். உடனே என்ன செய்கிறார்கள்? பனைமரத்தை விடுகின்றனர். வளைக்கப்பட்ட பனைமரம் சொய்ங் என்று நிமிர்கிறது. அத்தனை பேரும் மதிலைத் தாண்டி உள்ளே தூக்கி எறியப்படுகின்றனர். உடனேயே வானில், பல அடி உயரத்தில் அனைவரும் கச்சிதமாக இணைந்துகொள்கின்றனர். உள்ளே எறியப்பட்டதும் அதைவிடக் கச்சிதமாக, செம்மையாக லாண்டிங் ஆகிப் போர் புரிகின்றனர். அட்டகாசம்! அற்புதம்! இதை நேரில் பார்த்தால்தான் உங்களுக்குப் புரியும் (???!!!). விஜய் ரயிலைத் தாண்டியது, ரஜினி பலூனில் ஜம்ப் செய்து சறுக்கியது ஆகியவற்றையெல்லாம் பார்த்துச் சிரித்தவர்கள், இந்தக் காட்சிக்குப் புளகாங்கிதம் அடைவதைப் பார்க்கவேண்டுமே?

நான் முதலிலேயே சொன்னதுபோல, ஒரு நடமாடும் கிங் காங் குரங்கைப்போல் பாஹுபலி ஸ்டண்ட் செய்கிறார். ஒரு மனிதனால் துளிக்கூட முடியாத பல வேலைகளை ஜாலியாகச் செய்கிறார். இதெல்லாம் எப்படிச் சாத்தியம்? இதைக் கொஞ்சம் கூட ராஜமௌலி எங்கேயும் விளக்கவில்லை. பாஹுபலி ஒரு ஹல்க் போல உலா வருகிறான். அவ்வளவுதான். எந்தவிதமான லாஜிக்கோ பின்னணியோ இல்லாமல் எப்படி இதை நம்புவது? (இதற்கு நான் ஃபேஸ்புக்கில் ஒரு நண்பருக்குக் கொடுத்த பதில் இது – ‘சிம்பிளா சொல்லணும்னா, கதாபாத்திரத்தை நம்பத்தகுந்ததா உருவாக்கணும். அந்தக் கதாபாத்திரத்துக்கு நம்பத்தகுந்த பின்னணி இருக்கணும். பாஹுபலி ஒரு மனிதன். கடவுளோ கந்தர்வனோ இல்லை. சாதாரண மனிதன் ஒருத்தன் அவ்ளோ பெரிய சிலையை எப்படி அசைக்க முடியும்? என்ன காரணம்? எந்த ஃபேண்டஸி படமா இருந்தாலும், நல்ல படமா இருந்தா இப்படிப்பட்ட கதாபாத்திரத்தை இயல்பா உருவாக்கிருப்பாங்க. ஒருத்தன் மரத்தைப் பிடுங்கி அடிக்கிறான்னா அவனுக்கு அது எப்படிச் சாத்தியம்? எதுவுமே சொல்லாம, இஷ்டத்துக்கு ஒருத்தன் என்ன வேணா செய்யலாம்னு உருவாக்குவது ஆடியன்சை ஏமாற்றும் செயல்’. இது ஃபேண்டஸியே இல்லையே?).

முதல் பாகத்தில் என்ன நடந்தது? ஜூனியர் பாஹுபலி உள்ளே வரும்போது அத்தனை படைவீரர்களும் சந்தோஷப்பட்டு, பூமி அதிர வரவேற்பு கொடுக்கிறார்கள்தானே? அனைவருக்கும் பாஹுபலி மறுபடியும் வந்தது சந்தோஷம். ஆனால், இந்தப் பாகத்தில் என்ன நடக்கிறது? க்ளைமேக்ஸ் சண்டையில், அப்படி பாஹுபலியை ஆதரித்த ஒரு படைவீரன் கூட இவன் பக்கம் வரவில்லையே? அது ஏன்? ஏனென்றால் ராஜமௌலி அப்படி எடுத்துவைத்திருக்கிறார். அதனால்தான்.

மேலே நான் சொன்ன காரணங்களை நன்றாக ஒருமுறை படித்துப் பாருங்கள். உலகம் முழுக்கவே பல ஃபேண்டஸிக்கள் வெளியாகி உள்ளன. அவற்றில், தரமான ஃபேண்டஸிக்கள், ஆடியன்ஸின் புத்திசாலித்தனத்தை அறவே மதிக்காமல், இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடியன்ஸ் வளைவார்கள் என்று ஆடியன்ஸை முட்டாள்கள் ஆக்காது. மாறாக, ஆடியன்ஸைப் பரிவுடன் நண்பர்களாகவே நடத்தும். பாஹுபலி அப்படிப்பட்ட ஃபேண்டஸி அல்ல. அல்லவே அல்ல. அது ஒரு சரிதிரப்படம். அவ்வளவே. இது ஃபேண்டஸி என்ற genreக்குள்ளேயே வராது.

நான் சொல்லும் விஷயம் எளிமையானது. உங்களுக்குப் பாஹுபலி இத்தனை அபத்தங்களையும் தாண்டிப் பிடித்திருக்கலாம். தவறே இல்லை. ஆனால், அதில் இந்த அபத்தங்கள் உள்ளன என்பதைக் கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கள் என்பதையே நான் சொல்கிறேன். ராஜமௌலி ஒரு அக்மார்க் தெலுங்கு இயக்குநர். தெலுங்கு ஆடியன்ஸுக்காக இத்தனை ஓட்டைகள் உள்ள ஒரு திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் என்பது என் கருத்து. அதை நான் படம் பிடித்திருக்கிறது என்று சொல்பவர்கள் மேல் திணிக்கவே இல்லை. அதேபோல், இதுதான் இந்தியாவின் தலைசிறந்த காவியம்.. ஹா ஹூ என்று உணர்ச்சிவசப்பட்ட கருத்துகளை என் மீது திணீக்காதீர்கள். இந்தப் பதிவில் நான் சொல்லியிருப்பவைகளை ஒருமுறையேனும் படித்து, யோசித்துப் பாருங்கள்.

வெறும் ஸிஜியை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட ஒரு படத்தை – சொல்லப்பட்ட கதையில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் வைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு வளைக்கப்பட்ட படத்தை – எப்படிக் கண்மூடித்தனமாகப் பாராட்ட முடியும்?

பின்குறிப்புகள்

பி.கு 1- இந்தக் காட்சி, பாஹுபலி 2வில் எங்கே வருகிறது என்று தெரிகிறதா?

பி.கு 2- பலபேர் செய்யும் வேலை என்னவென்றால், ஒரு படத்தின் சில காட்சிகள் பிடித்தாலேயே, படமே சிறந்தது என்று சொல்வதே. எனக்கும்தான் பாஹுபலி 2வின் சில காட்சிகள் பிடித்தன. ஆனால் பெரும்பாலான காட்சிகளில் மிகப்பெரும் ஓட்டைகள் இருப்பதும் தெளிவாகவே தெரிகிறது. அவைகளை விரிவாகவும் எழுதியிருக்கிறேன். இவைமட்டுமல்லாமல், எதைக் காட்டினாலும் ஆடியன்ஸ் தலையை ஆட்டுவார்கள் என்று ஆடியன்ஸைக் குறைந்த மதிப்பீடு செய்தே ராஜமௌலி பாஹுபலி இரண்டு பாகங்களையும் எடுத்திருக்கிறார். இப்படி ஆடியன்ஸை மதிக்காமல் எடுக்கப்படும் படங்களின் பிரச்னைகளைத்தான் விரிவாக எழுதியிருக்கிறேன்.

பி.கு 3 – பாஹுபலி படம் உண்மையில் ஒரே படமாக எடுக்க நினைத்தே எடுக்கப்பட்டது. பின்னர், அதில் footage அதிகமாக இருக்கவே, இரண்டு பாகங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த இரண்டாவது பாகத்தில், ஃப்ளாஷ்பேக் முடிந்து ஜூனியர் பாஹுபலி படைதிரட்டிக்கொண்டு செல்வதில் இருந்து இறுதிக்காட்சி வரையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முதல்பாகத்திலேயே படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இரண்டாம் பாகத்துக்காக எடுக்கப்பட்ட காட்சிகள் எவை என்றால், படத்தில் வரும் ப்ளாஷ்பேக் காட்சிகளில் பெரும்பாலானவைதான். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் துளிக்கூட நம்பமுடியாமல், கிங்காங்கும் காட்ஸில்லாவும் மனித உருவில் மோதிக்கொள்வதைப் போலவே இருக்கின்றன. காரணம் அவை மூன்று வருடங்கள் முன்னரே முடிக்கப்பட்டுவிட்டதால்தான். முதல்பாகத்தில் இப்படிப்பட்ட நம்பமுடியாத காட்சிகள் பல உண்டு. அதுவே, இரண்டாம் பாகத்துக்கென்றே எடுக்கப்பட்ட புதிய காட்சிகளில் பல காட்சிகள் நன்றாக இருக்கின்றன. எவை என்று முதலிலேயே சொல்லியிருக்கிறேன். இந்த வேறுபாட்டைக் கவனித்துப் பாருங்கள்.

பி.கு 4 – எனது முதல்பாக விமர்சனத்திலேயே, படத்தைப் பற்றி நான் சொல்லியிருக்கும் ஒட்டுமொத்தக் கருத்துகள் உள்ளன. இவையெல்லாமே இரண்டாம் பாகத்துக்கும் பொருந்தும் என்பதால் அவற்றைத் திரும்பவும் சொல்லவில்லை. பாஹுபலி விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட படைப்பு இல்லை. எந்தப் படைப்பு வந்தாலும் விமர்சிக்கப்படவேண்டியதே என்பதை, உணர்ச்சிவசப்படுவதற்கு முன்னர் நாம் யோசித்துப் பார்க்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.

காற்று வெளியிடை (2017)
மணி ரத்னத்தின் படங்களைப் பற்றி விரிவாக அனலைஸ் செய்து நான் எழுதிய கட்டுரையை முதலில் படிக்க விரும்புபவர்கள் படித்துக்கொள்ளலாம் – Mani Ratnam – The Waning Trajectory?

இந்தக் கட்டுரையில் நான் எழுதியிருந்த இறுதிப் பத்தி இங்கே.

‘தனது படத்துக்காக ‘டைம்’ பத்திரிக்கையின் உலகில் சிறந்த நூறு படங்கள் பட்டியலில் இடம்பெற்ற மணி ரத்னம், அவரது பாணியை அழுத்தமாகப் பதிக்கும் சிறந்த படம் ஒன்றை எடுக்கப்போவதற்காகத் தமிழ்த்திரை ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.  மணி ரத்னம் தமிழ்த்திரை ரசிகர்களிடம் ஏற்படுத்திய தலைமுறை மாற்றங்கள் அப்படிப்பட்டன. ஏற்கெனவே ‘நாயகன்’, ‘இருவர்’ போன்ற அற்புதமான படங்களைக் கொடுத்திருக்கும் மணி ரத்னத்தால் அது இன்னமும் முடியும் என்றே மனதில் தோன்றுகிறது.  மூளையோ, இனிமேல் அவரால் அப்படியெல்லாம் எடுத்தல் முடியாத காரியம் என்கிறது. பொறுத்துப் பார்க்கலாம்’.

மீண்டும் ஒரு முறை காதலைப் பரிசோதித்துப் பார்த்திருக்கும் மணி ரத்னத்தின் திரைப்படம். மணி ரத்னத்தின் அத்தனை முந்தைய திரைப்படங்களிலும் காதல் முக்கியமான பங்கு வகித்திருக்கிறது. படத்தில் கையாளப்படும் பிரச்னை பம்பாய்க் கலவரமாக இருந்தாலும் சரி, தீவிரவாதமாக இருந்தாலும் சரி, இன்னும் தாயைத் தேடும் குழந்தை, தொழிலதிபராக நினைக்கும் கிராமத்து ஆள், இரண்டு அரசியல்வாதிகளின் போட்டி, பெரும்புதையல் கிடைத்த கிராமவாசிகள் என்பதுபோல எதுவாக இருந்தாலும் சரி, அவரது பெரும்பாலான படங்களில், காதல் ஒரு தனி எபிஸோடாகவே வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து அஞ்சலி மட்டும்தான் காதல் அவ்வளவாக explore செய்யப்படாத மணி ரத்னத்தின் படம். ஆனால் அதிலும் வேறுவகையான, லேசான காதல் ஒன்று உண்டு. இந்த அத்தனை படங்களிலும் படத்தின் பிரச்னை பேசப்படுகிறதோ இல்லையோ, காதல் அழுத்தமாகவே பேசப்பட்டிருக்கிறது. மணி ரத்னத்தின் படங்களில் காண்பிக்கப்படும் பிரச்னைகள் அழுத்தமாக இராது. அவற்றைச் சரியாகக் காண்பிப்பதில் அவருக்கு ஏதேனும் குழப்பங்களோ தயக்கங்களோ இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஆனால் இதெல்லாம் சரியாக இல்லை என்றாலும், இதுவரை அவரது படங்களில் காதல் மேலோட்டமாகக் காட்டப்பட்டதே இல்லை. கடும் திராபையான ராவணனிலும் கூட ஓரளவு அழுத்தமான காதல் இடம்பெற்றிருந்தது. எல்லோராலும் விமர்சிக்கப்பட்ட கடல் படத்தில்கூட, காதல் comparitively நன்றாகவே காட்டப்பட்டிருந்தது. ஓ காதல் கண்மணி மேலோட்டமான படம்தான். ஆனால் படம் முழுக்கக் காதலே முக்கியமான பிரச்னை.

இப்படி, எந்தப் படமாக இருந்தாலும் காதலை அழுத்தமாகக் காட்டியிருந்தவர் மணி ரத்னம். வேறு பிரச்னைகளைக் கையாளும் படங்களிலேயே இப்படி என்றால்,  காதல் பற்றிய படமாக இருந்தால்? பல்லவி அனுபல்லவி, மௌன ராகம், கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே), தில் ஸே, அலைபாயுதே என்று காதல் படங்களில் பிரம்மாதமான காட்சிகளை அமைத்தவர் மணி ரத்னம். அலைபாயுதேவில், திருமணத்துக்குப் பின் தாலியை மாதவன் ஒளித்து வைக்கும் காட்சி எப்படி? கேஷுவலாக, இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையை விமர்சித்திருப்பார். தில் ஸேயில், மனதுக்குப் பிடித்த பெண்ணோடு வட இந்தியாவில் நீண்ட தூரம் பயணிக்கும் சீக்வென்ஸ் ஒன்று உண்டு. இப்போது பார்த்தாலும் மனதைக் கவ்வும். இருவரில் எவ்வளவு அழுத்தமான காட்சிகள் இருந்தன? குரு படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம், தனது கணவனுடன் ஓடிவரும் காட்சி எப்படி? கணவனுடன் படுத்துக்கொண்டே அவனுடன் போலியாகச் சண்டை போட்டு, அளவில்லாக் காதலுடன் முடியும் காட்சி எப்படி இருந்தது? தளபதியில் ரஜினியிடம், தனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டதை ஷோபனா சொல்லும் காட்சி இன்னும் எனக்கு நன்றாக நினைவுள்ளது. இதேபோல் நாயகன், மௌன ராகம், கீதாஞ்சலி, அக்னி நட்சத்திரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியாவில் காதலைக் கையாண்ட வணிக இயக்குநர்கள் பலர் உள்ளனர். அவர்களில் கட்டாயம் முதல் சில இடங்களுக்குள் மணி ரத்னத்தை அவசியம் வைக்க இயலும்.

எனவே, காற்று வெளியிடை என்ற, காதலை முன்வைத்து எடுக்கப்படும் திரைப்படம் வெளியாகப்போகிறது என்றதுமே, என் எதிர்பார்ப்பு இப்படித்தான் இருந்தது. படத்தில் எதைப் பேசினாலும் சரி, காதல் கட்டாயம் தனி எபிஸோடாக, அழுத்தமாகக் காண்பிக்கப்படப்போகிறது என்றுதான் நினைத்தேன். இதனாலேயே, படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களைக் கண்டுகொள்ளவில்லை. குடும்பத்தோடு (ஐந்து பேர்) இன்று மாலை படம் பார்த்தோம். எங்களில் ஒருவருக்குக் கூட, படம் திருப்தி அளிக்கவே இல்லை. நானாவது அவ்வப்போது வந்த சில ஷாட்களை ரசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் Shreeக்கும் சரி, அவளது பெற்றோருக்கும் சரி, படம் தலைவேதனை அளித்தது என்று அறிந்துகொண்டேன். படம் பார்த்ததில் ஒரே நன்மை, ஒன்றரை வயது நிலா, கைதட்டி ஆரவாரம் செய்து படம் முழுக்கப் பார்த்ததுதான். இதுதான் அவளது முதல் படம். துளிக்கூட அழாமல், சிரித்துக்கொண்டே பார்த்தாள்.

படம் ஏன் எனக்குப் பிடிக்கவில்லை என்று விரிவாகச் சொல்ல முயல்கிறேன்.

1.  படத்தின் கரு

ஆணாதிக்க மனப்பான்மை உடையவன் ஒருவனுக்கும், மனம் முழுக்க இனிமை நிரம்பிய ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டால் என்ன ஆகும்? இதுதான் படத்தின் கரு. அப்படி ஆணாதிக்க மனப்பான்மை உடையவன் ஒரு போர் விமானி. அந்தப் பெண் ஒரு மருத்துவர். இவர்களுக்கு அறிமுகம் நேரும் காட்சி நன்றாக இருக்கிறது. விபத்தில் படுகாயம் அடைந்த விமானியை, புதிதாக மருத்துவமனைக்கு வந்திருக்கும் அந்தப் பெண் சிகிச்சை அளித்துக் குணமாக்குகிறாள். ஆனால் இந்தக் காட்சிக்குப் பின்னர், வேறு எந்தக் காட்சியிலும் அழுத்தம் இல்லை. மிகவும் மேலோட்டமாக எழுதப்பட்ட காட்சிகளாகவே அவை இருந்தன. ஏர்ஃபோர்ஸ் தலைமையகத்தில் நடக்கும் நடனக்காட்சி, அதன்பின் நாயகன் வருண் சக்கரபாணிப் பிள்ளை (தேவையே இல்லாத சாதி reference வேறு நடுவில் வந்து குதிக்கிறது), நாயகி லீலாவை விமானத்தில் அழைத்துச் செல்வது, இருவருக்கும் காதல் வருவது, லீலாவைத் தொடர்ந்து வ.ச பிள்ளை அவமானப்படுத்திக்கொண்டே இருப்பது, இருவரும் பிரிய நேர்வது, பின்னர் சேர்வது ஆகிய எந்தக் காட்சியிலும், நின்று நிதானித்து நகரக்கூடிய அழுத்தம் இல்லை. அவசரமாகவே காட்சிகள் நகர்கின்றன. இதனால் அந்தக் காட்சிகளில் ஒன்ற முடிவதில்லை (இந்த இடத்தில் ஒரு பழைய நினைவு – நாம் மேலே பார்த்தோமே, குருவின் மனைவிக்கும் குருவுக்கும் கட்டிலில் நேரும் செல்லச்சண்டை, அதை மறுபடி ஒருமுறை பாருங்கள் – நான் சொல்வது புரியும். அதில் சொல்லப்படும் உணர்ச்சிகள் அத்தனை இருக்கும்). காட்சிகளில் ஒன்ற முடியாததால், அவர்களின் பிரச்னையை நாம் தள்ளி நின்று தூரமாகக் கவனிக்கும்படி நேர்கிறது. இதனால் துளிக்கூடப் படத்தோடு ஒன்ற முடிவதில்லை.

கூடவே, நாயகன் போர்விமானி என்பது எதற்காக? நாயகன் சார்ந்த விமானக் காட்சிகள் படத்தில் எங்கேயும் முக்கியமான பங்கு வகிக்கவில்லையே? உதாரணமாக, நாயகனில், ஹீரோ தாதா என்றால், அவனது தாதா வேலைகள்தான் படத்தில் முக்கியமானவை. அதனுள் ஆங்காங்கே பிற சம்பவங்கள் காட்டப்படும். போர்விமானி என்பது, ஜாலியாக வேலைக்குச் செல்வதுபோன்ற விஷயம் இல்லை. அது கட்டாயம் தனிப்பட்ட, வித்தியாசமான வேலைதான். அப்படி ஒரு வேலையில் இருக்கும் நாயகன், அது சார்ந்த எதையுமே செய்யாமல் ஹீரோயின் பின்னாலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறானே? அது ஏன்? ஏதோ சடங்கு போல, குண்டுவீசச்சென்று கைதாகிறான். அந்தப் பாகிஸ்தான் எபிஸோடிலும் அழுத்தம் இல்லையே? சிறையில் ஜாலியாக ஹீரோ மழையில் வாக்கிங் செல்கிறான்; சுவற்றை நோண்டுகிறான்; தப்பிக்கிறான். அதுகூடப் பரவாயில்லை. தப்பித்தபின்னர் என்ன செய்கிறான்? முன்பு இருந்ததை விடவும் கேஷுவலாக, ஏதோ இன்பச்சுற்றுலா செல்வதுபோல பஸ் பயணம் செய்து ஆஃப்கன் எல்லையை அடைகிறான். பிடித்துவைக்கப்பட்டுள்ள இடத்தில் இன்னும் ஜாலியாக பாம் செய்து வெடிக்கிறார்கள். பின்னால் வீரர்கள் துரத்துகிறார்கள். வழியில் ஒரு லாரியில் ஏறித் தப்பிக்கிறான். உடனேயே பின்னல் துரத்தும் கமாண்டர் என்ன சொல்கிறார்? “அவனைச் சுடாதீர்கள். அவன் உயிரோடு வேண்டும்”. அடப்பாவிகளா? எந்த ஊர் ராணுவத்தில் இவ்வளவு நல்ல கமாண்டர்கள் கிடைக்கிறார்கள்?

சிறையில் இருந்து தப்பிக்கும் பகுதிகள் எல்லாமே நிஜக்கதைதான். ஃப்ளைட் லெஃப்டினண்ட் திலீப் பாருல்கர் என்பவர், 1971 பங்களாதேஷ் போரின்போது இதேபோல் பிடிக்கப்பட்டு இதைப்போலவே சுவற்றில் ஓட்டை போட்டு பஸ்ஸில் தப்பித்திருக்கிறார். ஆனால் நான் சொல்லவந்தது, அப்படிப்பட்ட சம்பவங்களை மேலோட்டமாகக் காண்பித்திருக்கத் தேவையே இல்லை. பாகிஸ்தான் எபிஸோடெல்லாம் தனிப்படத்துக்கான சம்பவங்கள். அதேபோல் ஆணாதிக்க வெறியுள்ள நபர் ஒரு பெண்ணைக் காதலிப்பதெல்லாம் இன்னொரு தனிப்படம். இரண்டு படங்களையும் இணைத்து அரைவேக்காட்டாக ஆக்கிவிட்டார் மணி ரத்னம் என்றுதான் படம் முடிகையில் தோன்றியது.

2. கதாபாத்திரங்கள்

கதாநாயகனாக வரும் வ.ச பிள்ளை எப்படிப்பட்ட நபர்? ஈகோயிஸ்ட். அப்படிப்பட்ட ஒரு நபர், ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது கட்டாயம் பல பிரச்னைகள் ஏற்படும்தான். ஆனால் அவைகளையெல்லாம், மிகவும் தட்டையாக, அந்தப் பெண்ணைப் பலர் முன்னிலையில் கத்துவது, சொன்ன தேதிக்கு ரிஜிஸ்டர் திருமணம் செய்ய வராமல் இருப்பது போன்ற சம்பவங்களிலேயே எஸ்டாப்ளிஷ் செய்ய முயன்றிருப்பதுதான் படத்தை அலுப்புள்ளதாக்குகிறது. உண்மையில் இந்த ஒட்டுமொத்தப் படத்தின் கதையையும் ஒரே மணிநேரத்தில் சொல்லிவிடமுடியும். அவ்வளவுதான் தாங்கும். அப்படிப்பட்ட, குறைவான கனமுடைய கதையை இரண்டேகால் மணி நேரம் சொன்னால் எப்படி எடுபடும்?

படத்தின் ஹீரோ இயல்பிலேயே பெண்களை இஷ்டத்துக்குக் கையாள்பவன் என்றுதான் வசனங்களிலேயே சொல்லியாயிற்றே? பின் எதற்கு வ.ச பிள்ளையின் தந்தை பெரிய பிள்ளையை வேறு காட்டி, அவர்கள் குடும்பத்தைக் காட்டி, அவர் தனது மனைவியை எடுத்தெறிந்து பேசுவதைக் காட்டி, ‘ஆகமொத்தத்தில் வ.ச பிள்ளையின் முரட்டுக்குணம் எங்கிருந்து வந்தது தெரியுமா? அவன் தந்தை பெரிய பிள்ளையிடமிருந்துதான்’ என்று காட்டுவதற்காக எதற்கு அந்த மருத்துவமனைக் காட்சி? அதிலும் பெரிய பிள்ளையின் குடும்பமே பாஸந்தியில் முக்கியெடுத்த சேட்டுகள் போலவே இருக்கிறார்கள் வேறு. அப்படி இருந்தாலும், நாயகன் தமிழண்டா என்று நிரூபிப்பதற்குத்தான் பெரிய பிள்ளையைக் காட்டினார்கள் போலும். சாதிப்பெயரைப் படத்தில் திணிப்பது என்று முடிவெடுத்தபின்னர், நாயகனுக்குப் பேசாமல் நான் முதலிலிருந்து எழுதுவதுபோல, வ.ச பிள்ளை என்றே பெயர் வைத்திருந்தால் முடிந்தது. தமிழன் லிங்க் எஸ்டாப்ளிஷ் ஆகியிருக்கும். இத்தனை பெரிய சேட்டுக்குடும்பத்தைக் காட்டி, மன்மோகன்சிங் தமிழ் பேசுவது போல ஒரு கலர் கலர் பாட்டை வேறு கா……ட்டியிருக்கத் தேவையே இல்லை என்று தோன்றியது. அந்தக் குடும்பம் சார்ந்த காட்சிகள் முழுக்க முழுக்க திராபைகளாகவே இருந்தன (இன்னொரு ஒப்பீட்டை செய்யாமல் இருக்க முடியவில்லை. தில் ஸே படத்திலும் ஒரு பெரிய குடும்பம் நாயகனுக்கு இருக்கும். ஆனால் அவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை யோசித்துப் பாருங்கள். எவ்வளவு இயல்பானவை அவை?)

அதேபோல், இந்தப் படத்திலும் பாரதியார் வெறி. ராவணனில், நாயகியைக் கடத்தும் வில்லன், பாரதியார் பாட்டை எசப்பாட்டாகப் பாடிக்கொண்டுதான் நாயகியைக் கடத்துவான். அப்போதே பயங்கர எரிச்சல் வரும். இதிலும், துவக்கத்திலேயே, பாரதியார் பாட்டை வ.ச பிள்ளை பாடத் துவங்கியதுமே அதே கடுப்பு எழுந்தது. அனேகமாகப் படத்தின் வேறு காட்சிகளிலும் இது வரும் என்று நினைத்தேன். நல்லவேளையாக அப்படியெல்லாம் வரவில்லை. மீன்குழம்புடன் பாரதியார் பாடலை ஊட்டி வளர்த்த தாய், ராஷ்ட்ரபாஷாவில் இறுதி பண்டிட் பரீட்சையெல்லாம் பலமுறை எழுதித் தேர்ச்சி பெற்றிருப்பவர் போலவே தோன்றியது. எனவே அந்த வசனம் வந்ததும் சிரிப்பு வந்துவிட்டது. பிள்ளை, பாரதியார் பாடல் என்ற ரெஃபரன்ஸ் எல்லாமே நாயகன் பச்சைத் தமிழன் என்று எஸ்டாப்ளிஷ் செய்வதற்குத்தானா? ஆம் எனில் எடுபடவில்லை என்றுதான் சொல்லமுடியும்.

உலகிலேயே, மணி ரத்னம் படத்தில்மட்டும்தான் நாயகன், ‘என் ஆசை ராணியே.. பச்சக்கிளியே’ என்றெல்லாம் நாயகியை அழைப்பான் போலும். எத்தனை செயற்கையான வசனங்கள் இவை? கேட்கும்போதே எரிச்சல் வந்தது. இதையெல்லாம் யாருமே மணி ரத்னத்திடம் சொல்வதில்லையா? ஆனால் இதெல்லாமே ராவணனில் இருந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது (??!!).

அடுத்ததாக, நாயகி. நாயகியின் பின்னணிக்கு மணி ரத்னம் கஷ்டமெல்லாம் படவில்லை. எப்படி மணி ரத்னத்தின் சிஷ்யர் அழகம்பெருமாள், வி.கே.ராமசாமியை டும் டும் டும்மில் வைத்தாரோ, அப்படி டெல்லி கணேஷை ஒரு செட் ப்ராப்பர்ட்டியாக வைத்துவிட்டார். முடிந்தது கதை. இவ்வளவுதான். மேலும் அவளது குடும்பம் பற்றி ஓரிரு தகவல்கள் மட்டுமே வருகின்றன. அவளது அண்ணன், அவள் பனிரண்டாவது படிக்கும்போதே இறந்துவிட்டான் என்பது கட்டாயம் ஒரு முக்கியமான, கனமான தகவல்தான். ஆனால் அதுவுமே திரைக்கதைக்குப் பயன்படவே இல்லை. ஓரிரு இடங்களில் ஹீரோ பரிதாபமாக வசனம் பேசுவதற்கு மட்டுமே உதவுகிறது.

எனவே, ஹீரோ, ஹீரோயின் ஆகிய இருவரின் பின்னணிகளுமே தட்டையாக உள்ளன. ஆனால் மணி ரத்னத்தின் பிற படங்களில் ஹீரோ ஹீரோயின்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். மௌன ராகம் டைட்டில்களிலேயே ரேவதியின் சிறுவயதுப் புகைப்படங்கள் இருக்கும். அவற்றின்மூலம் நாயகியின்மீது ஆடியன்ஸுக்கு ஒரு பரிவு வந்திருக்கும். அலைபாயுதேவில் ஹீரோ ஹீரோயின்களின் பின்னணி எவ்வளவு அழுத்தமாக இருந்தது? ஏன்? சமீபத்திய ஓ காதல் கண்மணியில் கூட அது நன்றாகவே இருந்தது. ஹீரோ ஹீரோயின்களின் பின்னணி தட்டையாக இருந்தால், இயல்பிலேயே அவர்கள் மீது நமது கவனம் செல்லாது. இந்தப் படத்திலும் அவர்கள் மீது நம் கவனம் செல்லவில்லை.

3. நடிப்பு

ஹீரோ வருண் சக்கரபாணிப் பிள்ளையாக கார்த்திக். இந்தப் படம் பார்க்கையில்தான் எனக்கு மிகப்பெரிய உண்மை ஒன்று விளங்கியது. இத்தனை காலம் கார்த்திக்கை மீசை இல்லாமல் பார்த்ததே இல்லை என்பதால், அவரது நடிப்பில் பெரிய குறைகள் எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் இதில் மீசையில்லாமல் அவர் வசனம் பேசி நடிக்கையில்தான், இத்தனை நாள், மீசை அவரது முகபாவங்களை மறைத்து திசைதிருப்பியுள்ளது என்று புரிந்தது. தெளிவாகச் சொல்கிறேன். கார்த்தி இயல்பாகச் சிரிக்கையில், அவரது வாய் லேசாகக் கோணிக்கொள்கிறது. மீசை இருந்ததால் அது நமக்குத் தெரியவில்லை. மீசை இல்லாமல் முகமே மொழுக்கட்டீர் என்று இருப்பதால் இப்படத்தில் அந்தக் கோணல் நன்றாகத் தெரிகிறது. இதுவேதான் அவரது பிற முகபாவங்களுக்கும். மீசைதான் கார்த்தியின் காவலன். இனி மீசை இல்லாமல் கார்த்தி நடித்துவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அட்லீஸ்ட் ஒட்டுமீசையாவது ஓக்கே. எனவே, க்ளோஸப் மற்றும் மிட்ஷாட்களைத் தவிர்த்து லாங்ஷாட், முதுகைக் காண்பிப்பது ஆகியவற்றில் அவரது நடிப்பு பரவாயில்லை.

நாயகியாக நடித்துள்ள அதிதி ராவ் ஹைதரி (ஹைதாரி என்று நினைத்தேன். டைட்டிலில் ஹைதரி என்றுதான் போடுகிறார்கள்) மட்டும்தான் என்னைப்பொறுத்தவரையில் படத்தைத் தாங்குகிறார். அவரது முகபாவங்கள் பிரமாதம். குறிப்பாக, முதன்முதலில் வ.ச பிள்ளையோடு ஃப்ளைட்டில் ஏறிச்செல்லும்போது, ‘கத்தட்டுமா’ என்று கேட்டுவிட்டு, ஒரு கணம் தயங்கிவிட்டுக் கத்தும் காட்சி அட்டகாசம். அந்தத் தயக்கத்தைக் கவனித்துப் பாருங்கள். நான் சொல்வது புரியும். இப்படிப் பல காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார் அதிதி. எனவே அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.

அலைபாயுதேவில் இரண்டே காட்சிகளில் வீணடிக்கப்பட்ட விவேக் போல, இதில் ‘வீரத்தமிழர்’ ஆர்.ஜே.பாலாஜி. ஸ்கோப்பே துளிக்கூட இல்லாத கதாபாத்திரம். அந்த ‘ஓ’ காட்சி மட்டும் நன்றாக இருந்தது.

இவர்களைத் தவிர, வேறு எந்தக் கதாபாத்திரமும் நினைவில் கூட வரவில்லை.

படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கொஞ்சம் கூட சுவாரஸ்யம் இல்லாமல், தேமே என்று நான் பார்த்த இரண்டாவது மணி ரத்னம் படம் இது (அப்படிப்பார்த்த முதல் படம், ராவணன்). ராவணனிலாவது பாடல்கள் நன்றாக இருந்தன. இதிலோ நிஜமாகவே பாடல்கள் மிகவும் ஆவரேஜாகத்தான் இருந்தன. ஒரே ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லை. ரஹ்மான், யாரோ புதுமுக  இயக்குநருக்கு அவசரமாகப் போட்டுக்கொடுத்ததுபோலவே இருந்தன பாடல்கள்.  மிகமிக average பாடல்கள். பின்னணி இசை நன்றாக இருந்தது. குறிப்பாகக் க்ளைமேக்ஸில் அந்தக் குட்டிப்பெண் வருகையில் வரும் இசை. அது ரஹ்மானின் குரல்தானே?

ஒளிப்பதிவும் பிரமாதம். ரவிவர்மன் அனுபவித்துச் செய்திருக்கிறார்.இந்தப் படம் பேசப்படுகிறது என்றால் அது இவரால் மட்டுமே என்பது என் கருத்து. அதிலும், ரெவனண்ட் போல மிகவும் செயற்கையான ஒளிப்பதிவு அல்ல ரவிவர்மனுடையது. காட்சிகளோடு சேர்ந்த இயல்பான ஒளிப்பதிவு என்பதால் மிகவும் பிடித்தது.

4. படத்தின் பிரச்னை

படத்தின் தலையாய பிரச்னை, இதன் கரு. உண்மையில் மிகவும் நல்ல கரு இது. பெண்களைப் பொருள்களைப் போல உபயோகிப்பவனுக்கு ஒரு பெண்ணின் மீது காதல் வந்தால் எப்படி இருக்கும்? இதில் explore செய்ய ஏராளமான விஷயங்கள் உண்டு. அவற்றை மட்டுமே கவனித்து ஆழமாக எழுதியிருந்தால், அவசியம் இது நல்ல படமாக வந்திருக்கும். இந்த சப்ஜெக்ட்டில் எனக்கே ஆழமான அனுபவங்கள் எல்லாம் உண்டு. அதை விட்டுவிட்டு, நாயகன், பைலட், பாகிஸ்தான், எஸ்கேப் என்றெல்லாம் கதை தாறுமாறாக வழிதவறியதால், எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட் படுத்துவிட்டது. அதிலும், இப்படிப்பட்ட ஒரு ஈகோயிஸ்ட் ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது, இப்படத்தில் வருவதுபோலமட்டும்தானா நடக்கும்?உண்மையில் இந்தப் பிரச்னை படத்தில் பேசப்படவே இல்லை என்றுதான் சொல்வேன். மணி ரத்னமா இதை எழுதினார்? ஆச்சரியமாக உள்ளது. நான் முதலிலேயே சொன்னதுபோல, உளவியல் பிரச்னைகளை அத்துபடியாகக் கையாளக்கூடிய திறமைபெற்றவர் அவர். ஏதோ அவசரகதியில் ஏன் இப்படியெல்லாம் தட்டையாக எழுதவேண்டும்? புரியவில்லை. போலவே, இறுதிக் காட்சியில், சந்தூர் சோப் விளம்பரத்தில் நாம் பல வருடங்களாகப் பார்க்கிறோமே? அப்படி, நாயகனும் நாயகியும் பேசுகையில் ஒரு குழந்தை ஓடிவந்து ‘மம்மீ’ என்று அழைக்கிறது. ‘அம்மாவா? இவளா?’ என்று அந்த சோப் விளம்பரத்திலேயே பலமுறை பார்த்தாயிற்று. சொல்லவருவது, துளிக்கூட ஒட்டாத பல காட்சிகளை வம்படியாக இதில் மணி ரத்னம் புகுத்தியுள்ளார் என்பதே.

படத்தின் இரண்டாம் பிரச்னை அந்த பாகிஸ்தான் விவகாரம். ஏற்கனவே சொன்னதுபோல, இது ஒரு உண்மைச் சம்பவம். அதைப் படத்தில் வைக்க மணி ரத்னம் விரும்பியிருக்கிறார். எனவே, இரண்டு தனிப்பட்ட கதைகளை ஒன்றிணைத்து வெளியிட்டுவிட்டார். அதுதான் பிரச்னை. இரண்டு கதைகளும் சேரவே மாட்டேன் என்கின்றன. விடாப்பிடியாக இரண்டையும் பிடித்து இணைத்திருக்கிறார். படாரென்று இணைப்பு பிய்ந்து, இரண்டு கதைகளும் தெறித்துக்கொண்டு இரண்டுபக்கமும் ஓடிவிட்டன என்பது படம் பார்க்கையில் புரிகிறது.

படத்தின் மூன்றாம் பிரச்னை, கார்த்தியை மீசையை மழிக்க வைத்தது. அட்லீஸ்ட் மீசையோடாவது கார்த்தி நடித்திருந்தால், இப்போது அவரது முகபாவங்களைக் கழுவி ஊற்றுபவர்கள் அமைதியாக இருந்திருக்கலாம். இனி மீசையை எடுத்துவிடவேண்டாம் என்றுதான் நம்மால் கோரிக்கை விடுக்கமுடியும் (இந்தப் பிரச்னை சூர்யாவுக்கு இல்லை என்பது கொஞ்சம் ஆசுவாச செய்தி).

ஒரே ஒரு பாடல் கூடப் பிடிக்காமல், திரையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த முதல் மணி ரத்னம் படம் இது. கூடவே, average காட்சிகளும் சேர்ந்துகொண்டு, மிக மிக அலுப்பான, அசுவாரஸ்யமான ஒரு உணர்வையே அளித்தன. ஒரு மணி நேர டெலிஃபிலிமைப்போய் இரண்டேகால் மணி நேரம் எடுத்து, நம் பொறுமையைச் சோதித்துவிட்டாரே இந்த மணி ரத்னம் என்ற ஆற்றாமையும் தோன்றியது (படத்தில் ஒருசில நல்ல காட்சிகள் உண்டு. அறிமுக மருத்துவமனைக் காட்சி, முதன்முறை வானில் பறப்பது,  பனிப்புயல் வருகையில் நாயகனும் நாயகியும் பேசிக்கொள்வது, க்ளைமேக்ஸின் வசனங்கள் என்று. ஆனால் படத்தின் நெகட்டிவ் அம்சங்கள் இவற்றையெல்லாம் மறைத்துவிட்டன).

மணி ரத்னம் எப்போதும் bounce back செய்யக்கூடிய ஆள்தான். கடல் முடிந்ததும் ஓ காதல் கண்மணியை எடுத்தார். எந்த ஆடியன்ஸுக்காக அதை எடுத்தாரோ, அவர்கள் அப்படத்தைக் கொண்டாடவே செய்தார்கள். அப்படி, அனேகமாக அடுத்த படத்தில் குறிப்பிட்ட ஆடியன்ஸை அவர் குறிவைக்க முயலலாம். பொறுத்துப் பார்க்கலாம்.

Thor: Ragnarok (2017) – Sneakpeek
இதற்கு முன்னர் நம் தளத்தில் அவெஞ்சர்கள் பற்றி எழுதிய அத்தனை விபரமான கட்டுரைகளையும் இங்கே படிக்கலாம்.

The Avengers – Detailed posts at karundhel.com

Thor: Ragnarok படத்தின் டீஸர் ட்ரெய்லர் சற்றுமுன்னர் மார்வெல் ஸ்டூடியோஸால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் பற்றிச் சில விஷயங்கள் சொல்லவேண்டும் என்று தோன்றியதால் இந்தக் கட்டுரை. Hope it is interesting to read.

First things first. டீஸரை இங்கே பார்த்துவிடுங்கள்.

பார்த்தாயிற்றா? இனி, உள்ளே போகுமுன்னரே, Spoiler Alert. இப்படத்தில் என்ன நடக்கப்போகிறது என்றெல்லாம் தெரியவேண்டாம் என்று நினைக்கும் நபர் என்றால், கிளம்பிவிடுங்கள்.

முதலில், Ragnarok என்றால் என்ன?

நம்மூரில் பிரளயம் என்று சொல்லப்படுவதுதான் ராக்னராக். ஓடினில் இருந்து தோரில் இருந்து அனைத்து தேவதைகளும் இந்தப் பிரளயத்தில் அழிந்து, ஆஸ்கார்ட் மற்றும் பிற உலகங்கள் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டு வெள்ளத்தில் இருந்து எழும். அப்போது மறுபடியும் சிருஷ்டி துவங்கும். இதுதான் ராக்னராக் என்ற வார்த்தைக்கு அர்த்தம்.

இந்தப் படத்தில், அஸ்கார்டுக்கு அழிவு வரப்போகிறது. எனவே இப்படத்தின் பெயர் அதைக் குறிக்கிறது.

அஸ்கார்டுக்கு யாரால் அழிவு வரும்?

பல படங்களிலும், பல கதைகளிலும் வரக்கூடிய விஷயம்தான் இது. சமீபத்தில் Wrath of the Titans படத்தில்கூட இது இடம்பெற்றது. கடவுளர்களின் தலைவர் ஸ்யூஸ் (ஸீயஸ் என்று தப்பாக அழைக்கப்படும் கடவுள்), தனது தம்பி ஹேடெஸ்ஸுடன் சேர்ந்து செய்யும் சாகஸம் அது. ஹேடெஸ்தான் பாதாளலோகத்தில் இருந்து வரும் ஆவிகளின் கடவுள். இந்த ஹேடெஸ், ஸ்யூஸின் இடத்துக்கு வரவேண்டும் என்று அவ்வப்போது நினைப்பது உண்டு.

இதேபோல், நம் கதையில், அஸ்கார்டின் அரசர் ஓடின், இறந்தவர்களின் கிரகங்களான ஹெல் மற்றும் நிஃபல்ஹீம் ஆகிய கிரகங்களை அரசாள நியமித்த நபர்தான் ஹெலா. இவள்தான் ராக்னரோக்படத்தில் ஓடினுக்கும் அஸ்கார்டுக்கும் எதிராகப் புரட்சி செய்யப்போகிறாள். படத்தில் இந்தக் கதாபாத்திரத்தை கேட் ப்ளாஞ்செட் ஏற்று நடித்திருக்கிறார்.

ஹெலா பற்றி ஒரு பேட்டியில் கேட் ப்ளாஞ்செட் சொல்கையில், ‘பல்லாண்டு காலமாக – பல யுகாந்திரங்களாக ஹெலா அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு இருந்திருக்கிறாள். ஒரு நாள் அதெல்லாம் சேர்ந்து வெடித்துச் சிதற, இப்படத்தில் நீங்கள் பார்க்கப்போகும் ஹெலா பிறக்கிறாள்’ என்று பேசியிருக்கிறார். எனவே ஹெலாவால் அஸ்கார்ட் பேரழிவுக்குள்ளாகப்போகிறது என்றே தெரிகிறது.

அடுத்ததாக, இந்தப் படத்தில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு கதாபாத்திரம்- வாக்கெரீ (Valkyrie). இவளுக்கும் ஹெலாவுக்கும் பழைய கணக்கு ஒன்று உண்டு. டீஸரிலேயே அது வருகிறது. ஹெலாவோடு வாக்கெரீ சார்ந்த அஸ்கார்டின் படை மோதுகிறது. அதில் வாக்கெரீ தோற்கிறாள். தோற்றபின் அங்கிருந்து வெளியேறி, பிரபஞ்சத்தின் வேறொரு இடத்தில் தஞ்சம் அடைகிறாள்.

வாக்கெரீ சேரும் இடம், க்ராண்ட்மாஸ்டர் என்று அழைக்கப்படும் பிரபஞ்சத்தின் அதிக வயதான நபரின் இடம். இந்த க்ராண்ட்மாஸ்டர், Guardians of the Galaxy படத்தில் நாம் பார்த்த Collector என்ற கதாபாத்திரத்தின் சகோதரன். இந்த க்ராண்ட்மாஸ்டர் ஒரு ஹெடோனிஸ்ட். அப்படித்தான் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெஃப் கோல்ட்ப்ளம் விவரித்திருக்கிறார். ‘க்ராண்ட்மாஸ்டர் ஒரு ஹெடோனிஸ்ட்; வாழ்வின் பலவிதமான சுவைகளையும் மணங்களையும் தேடித் திரிபவர்’ என்று. டீஸரில்கூட, தன்னிடம் வரும் வாக்கெரீயிடம், ‘இன்று என்ன கொண்டுவந்திருக்கிறாய்?’ என்று க்ராண்ட்மாஸ்டர் கேட்கும் காட்சி உள்ளது.

எனவே, அஸ்கார்டில் இருந்து பிரிக்கப்படும் தோர், அண்டவெளியின் வேறொரு இடத்தில் இருக்கும் க்ராண்ட்மாஸ்டரிடம் வந்து சேர்கிறான் என்றே நாம் புரிந்துகொள்ளவேண்டி இருக்கிறது. ஏன்? இந்தப் போட்டியில்தான் ஹல்க்க்உடன் அவன் மோதப்போகிறான். இந்தப் படமே, ஹல்க்கும் தோரும் இணைந்து செயலாற்றும் ஒரு Buddy Movie என்றுதான் சென்றவருடம் மார்வெல் அறிவித்திருந்தது. இந்த இருவரும் யதேச்சையாகச் சேராமல், மார்வெல்லின் கதைகளில் முக்கியப்பங்கு வகிக்கும் க்ராண்ட்மாஸ்டரின் முன்னிலையில் மோதல் ஒன்று நிகழ்ந்து, அதில் இருவரும் சேர்வது ஜாலியான அம்சம்தானே?

சரி, டீஸரின்படி, தோர், ஹெலாவிடம் அகப்படுகிறான். ஹெலாவின் இருண்ட, ஆவிகள் சூழ்ந்த உலகில் சங்கிலிகளால் கட்டிப்போடப்பட்டு இறக்கப்படுகிறான். தோரின் பலம்வாய்ந்த ம்யோல்நீர் என்ற சுத்தியல், ஹெலாவால் சுக்கல்சுக்கலாக உடைக்கப்படுவதைக் காண்கிறோம்.  இதற்கு முன்னர் காமிக்ஸில் தோரின் சுத்தியல் மூன்றுமுறை உடைக்கப்பட்டிருக்கிறது (Thor Vs The Destroyer, Thor Vs Molecule Man & Thor Vs Bor). ஆனால் ஹெலாவினால் தோரின் சுத்தியல் உடைக்கப்படுவது இதுவெ முதன்முறை. எனவே, தன்னைவிடப் பலம்வாய்ந்த ஒரு எதிரியை முதன்முறையாக தோர் சந்திக்கிறான் என்றே பொருள்.

டீஸ்ரில் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. ஷாட் பை ஷாட்டாகக் கவனித்தால் தெரியும். ஹெலாவின் தலைக்கவசம் அதில் முக்கியமானது. பெரிய மான்கொம்புகள் போன்ற வஸ்துக்களுடனான அவளது தலைக்கவசம், ஒரு ஆயுதம். அது அசையக்கூடியது. எனவே, அந்த ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு அவள் ஏதேனும் சாகசங்கள் செய்யக்கூடும். அடுத்தபடியாக, அஸ்கார்டின் பாதுகாவலனான ஹெய்ம்டால் இதிலும் வருகிறான். இட்ரிஸ் எல்பா நடிக்கும் கதாபாத்திரம் இது. அதேபோல், தோர் காமிக்ஸ்களில் வில்லனாக இடம்பெறும் Skurge the Executioner இந்த டீஸரில் இருக்கிறான். மொட்டைத்தலையுடன் மிஷின்கன்னால் சுடும் ஷாட்டை கவனியுங்கள். இவனும் தோரும் பல காமிக்ஸ்களில் மோதியிருக்கிறார்கள். இவன் ஹெலாவுடன் இருக்கக்கூடும். அல்லது, ஹெலாவிடம் இருந்து தோர் தப்பிக்க உதவியிருக்கவும் கூடும் (அப்படி ஒரு இடம் காமிக்ஸ்களில் வருகிறது). ஹெலாவின் படையைப் பார்க்கிறோம். அவர்கள் செய்யும் அழிவைக் காண்கிறோம்.

டீஸரைப் பார்க்கையில், இது கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி ட்ரெய்லர்கள் போலவே இருப்பதாகவும் தோன்றியது. இதற்குமுன்னர் வெளியான இரண்டு தோர் படங்களின் டீஸர்களை எடுத்துப் பாருங்கள். அப்போதுதான் நான் சொல்வது புரியும். அவற்றில் துளிக்கூட நகைச்சுவையே இருக்காது. இதில் நகைச்சுவை உண்டு. கூடவே, கார்டியன்ஸின் ட்ரெய்லர்கள் போலவே, இதிலும் ஒரு குறிப்பிட்ட பாடல் வருகிறது. பாடல்களை எடுத்து உபயோகிப்பதில் கார்டியன்ஸ் ட்ரெய்லர்கள் புகழ்பெற்றவை. Blue Swede குழுவின் Hooked on a Feeling பாடல் முதல் கார்டியன்ஸ் டீஸரில் வந்திருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள். அதேபோல, இதில் Led Zeppelin குழுவின் The Immigrants பாடல் வருகிறது. இப்பாடலின் வரிகளைப் படித்துப் பாருங்கள். வைக்கிங் கடவுளர்கள் பற்றியும், தோர் பற்றியும், அவனது சுத்தியல் பற்றியும் வரிகள் வருவது புரியும். எனவே, கார்டியன்ஸ் ட்ரெய்லர் போலவே இந்த டீஸர் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இதைப் பார்த்தாலேயே புரிந்துவிடும். அதனாலேயேதான் இதில் நகைச்சுவையும் இருக்கிறது.

அதேபோல், படத்தின் டீஸரில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் எண்பதுகளின் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களின் font. இதுவுமே மிகவும் ஜாலியான ஒரு மனநிலைக்கு நம்மைக் கொண்டுசெல்கிறது.

என் அனுமானம் என்னவென்றால், இந்த டீஸரில் காட்டப்பட்ட அனைத்துமே, படத்தின் முதல் சில நிமிடங்களில் நடக்க நிறைய வாய்ப்பு உண்டு என்பதே. ஹெலா அஸ்கார்டைத் தாக்குகிறாள். தோர் சிறைப்படுத்தப்பட்டுத் தப்பிக்கிறான். வேறொரு பக்கம் போகிறான். அங்கே வாக்கெரீயால் சிறைப்படுத்தப்பட்டு, க்ராண்ட்மாஸ்டரிடம் வருகிறான். ஹல்க்குடன் மோதுகிறான். மோதியபின் இணைகிறான். இருவரும் சேர்ந்து ஹெலாவைப் பந்தாடுகிறார்கள். இதுதான் இப்படத்தின் கதையாக இருக்கும் என்று யூகிக்கிறேன்.

நவம்பர் மூன்றாம் தேதி Thor: Ragnarok வெளியாகிறது. அதற்கு இரண்டு வாரங்கள் கழித்துதான் DC குழுமத்தின் Justice League வெளியாகிறது. பொதுவாகவே, பல்லாண்டுகளாகக் கவனித்து வருகையில், மார்வெல்லே டிஸியைவிடவும் மார்க்கெட்டிங், விளம்பரங்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றனர். கூடவே, மார்வெல் படங்களில்தான் நாம் எதிர்பார்க்கும் அனைத்துமே இருக்கின்றன. டிஸியின் படங்கள் இதுவரை நகைச்சுவையைத் தொட்டதே இல்லை. எப்போதும் அழுதுவடியும் ஹீரோக்கள் டிஸியின் மற்றோரு சாபக்கேடு. இவையனைத்தையும், இதற்கு முன்னர் வெளியான பேட்மேன் Vs சூப்பர்மேன் படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், கட்டாயம் தோர்: ராக்னராக் தான் பிரம்மாண்டமாக ஜெயிக்கப்போகிறது என்றே தோன்றுகிறது. பேட்மேன், வொண்டர்வுமன், சைபோர்க், ஃப்ளாஷ், அக்வாமேன் ஆகிய ஐவரும், கூட சூப்பர்மேனும் இடம்பெறப்போகும் ஜஸ்டிஸ் லீக்கைவிடவும், தோரும் ஹல்க்கும் சேர்ந்து அதிரடி சாகஸங்கள் செய்யப்போகும் ராக்னராக்கில் நான் எதிர்பார்க்கும் அனைத்தும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்குத்தான் நான் காத்திருக்கிறேன்.

Will post more the moment new updates are available about Thor:Ragnarok.

சென்ற வருடம் வெளியான வெகேஷன் ட்ரெய்லர் இங்கே.

மாநகரம் (2017)
முதலில் தாமதமான விமர்சனத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிடுகிறேன். இரண்டு நாட்கள் முன்னர்தான் படத்தைப் பார்க்க நேர்ந்தது. கடும் திரைக்கதை வேலைகள்தான் காரணம்.

திரைக்கதை என்பது எழுத்தாளனும் ஆடியன்ஸும் ஆடும் ஆட்டம். இதில் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் இருவருமே பரஸ்பரம் ஒருவரையொருவர் மதித்து, புரிந்துகொண்டு செயல்பட்டால்தான் ஆட்டம் பிரமாதப்படுத்தும். இல்லாவிட்டால், ஆடியன்ஸ் முட்டாள் என்று எழுதுபவன் நினைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு ஆடியன்ஸை அவமானப்படுத்துவதுதான் நடக்கும். தமிழில் பல படங்கள் இப்படிப்பட்டவையே. ஆடியன்ஸுக்கும் சிந்திக்கத் தெரியும்; அவர்களுக்கு உண்டான மதிப்பை அளிக்கலாம் என்று புரிந்துகொண்டு படமெடுக்கும் இயக்குநர்கள் சொற்பம். அப்படி ஆடியன்ஸைப் புரிந்துகொண்டு எடுக்கப்பட்டுள்ள ஒரு படம்தான் மாநகரம் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

படத்தின் துவக்கத்திலேயே, முதல் காட்சியில் இருந்தே கதை துவங்கிவிடுகிறது. கதையில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரங்கள் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்துவிடுகிறோம். அங்கிருந்து, இவர்களுக்குள் நிகழும் சிக்கல்களால் கதை நகர்ந்து, முடிவை எட்டுகிறது. இந்த முதல் காட்சியில், அனைவரும் ஒரே டாஸ்மாக்கில் சந்திப்பது மட்டுமே எனக்கு உறுத்தலாக இருந்தது.  காரணம், ஒன்றிரண்டு தற்செயல்கள் என்பது மன்னிக்கப்படலாம். ஆனால் அத்தனை பேரும் எந்தவிதமான முன் காரணமுமே இல்லாமல் தடால் என்று ஒரு இடத்தில் இருப்பது – அங்கிருந்து பிரச்னை வெடிப்பது என்பது மிகமிகத் தற்செயல். நம்புவதற்கு மிகவும் கடினமானது.  இதைப்போலவே ஒரு காட்சி சூது கவ்வும் படத்தில் உண்டு. தாஸை மூவரும் சந்திக்கும் காட்சி. ஆனால் இது தற்செயலாக இருக்காது. காரணம் அவர்கள் அனைவருக்குமே அங்கு வரக்கூடிய காரணங்கள் முன்கூட்டியே தெளிவாக இருக்கும்.

மாநகரம் திரைப்படத்தின் பெரிய பிரச்னை இதுதான். எந்தக் காட்சியை எடுத்துக்கொண்டாலும், இவர்களுக்குள்ளேயேதான் கதை நகர்கிறது. யார் எங்கே சென்றாலும், அந்த இடத்துக்குப் பிற கதாபாத்திரங்களும் ஜாலியாக, கச்சிதமாக வந்துவிடுகிறார்கள். எனவே, எந்தக் காட்சி வந்தாலும், அங்கே என்ன நடக்கப்போகிறது என்று எளிதாக யூகித்துவிடமுடிகிறது. இது ஒன்றுதான் படத்தின் பிரச்னை.

ஆனால் இந்தப் பிரச்னையும் முதலில் சில நிமிடங்களுக்கு மட்டும்தான்.  காரணம் திரைக்கதை. டாஸ்மாக் காட்சி முடிந்ததுமே படத்தில் நம்மால் ஒன்றிவிடமுடிகிறது. என்னதான் எல்லாக் காட்சிகளிலும் தற்செயல் சம்பவங்கள் நிகழ்ந்து,  பிற கதாபாத்திரங்கள் டாண் என்று வந்து நின்றுவிட்டாலும், படத்தை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் முழுதாக ரசித்துப் பார்க்க முடிகிறது. அதுதான் மாநகரத்தின் வெற்றி. இப்படி ஒரு தமிழ்ப்படத்தை முற்றிலுமாக ரசித்தது சூது கவ்வும் படத்தில்தான். அதற்கு முன்னர் ஆரண்யகாண்டம்.

படத்தின் மிகப்பெரிய பலம், ராம்தாஸ். ராம்தாஸ் என்றால் யாருக்குமே புரியாமல், முனீஸ்காந்த் என்றால்தான் அனைவருக்கும் புரியும் அளவு முண்டாசுப்பட்டியில் பிரமாதப்படுத்தியவர். இவரது கதாபாத்திரத்தில் இருக்கும் எளிமையும், அதற்கு நேர் எதிரான அந்தக் கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அட்டகாசம். ராம்தாஸ் பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் ஆடியன்ஸ் பிரம்மாதமான வரவேற்பு கொடுத்ததைக் காண முடிந்தது. வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். எனக்குமே மிகவும் பிடித்தது. க்ளைமேக்ஸ் காட்சியில் சிறுவனின் தலையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு earphoneல் போலீஸிடம் கேட்டுக்கேட்டு செயல்படும் காட்சி தமிழுக்குப் புதியது. அவசியம் அனைவருக்கும் பிடிக்கக்கூடியது. Black Humor.

ராம்தாஸின் கதாபாத்திரத்துக்கு அடுத்தபடியாக, சந்தீப் கிஷன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். இவர் அறிமுகம் ஆகும்போது, இது ஹீரோவா இல்லை ரவுடியா என்று யோசித்தேன். காரணம் ஆஸிட் அடிக்கிறார். முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார். ஆனாலும் சற்று நேரத்துக்குப் பின் இவரது கதாபாத்திரம் இயல்பானதாக மாறிவிட்டது. எனக்குப் படத்தில் ஸ்ரீயின் கதாபாத்திரத்தை விட சந்தீப்பின் கதாபாத்திரம்தான் பிடித்தது. இவர்தான் படத்தின் active ஹீரோ. இவரால்தான் பல காட்சிகள் நகர்கின்றன. ஸ்ரீயும் நன்றாக நடித்திருக்கிறார்தான். ஆனால் அவர் எப்போதுமே react மட்டும்தான் செய்துகொண்டிருக்கிறார். சார்லியும் அப்படித்தான். சார்லியும் ஸ்ரீயும் படத்தின் உணர்வுபூர்வமான தருணங்களுக்குச் சொந்தக்காரர்கள். இருவரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

ஆனால், ஒரு சிறிய விஷயத்தை மறக்க முடியவில்லை. ஆரண்யகாண்டத்தில் வரும் காளை கதாபாத்திரம் நினைவிருக்கிறது அல்லவா? அந்தக் கதாபாத்திரம் அப்படத்தின் உணர்ச்சிபூர்வமான தருணங்களை நமக்கு வழங்கியது. அதனால் அப்படமும் முழுமையான படமாக மாறியது. ஆனால் மாநகரத்தில் அப்படத்தை முழுமையானதொரு அனுபவமாக மாற்றக்கூடிய விஷயங்கள் சற்றே குறைவாக இருந்தன. ஏனெனில், படத்தில் வரும் பல கதாபாத்திரங்களும் துண்டான மனிதர்கள்தான். அவர்களுக்கு எந்தவிதமான பின்னணித் தகவல்களும் படத்தில் இல்லை. இதுபோன்ற பல த்ரில்லர்களும் அப்படித்தான் இருக்கும். சூது கவ்வுமில் எந்தக் கதாபாத்திரத்தின் பின்னணி நமக்குத் தெரிந்தது? ஆனால் நாம் சொல்ல வருவது, ஆரண்யகாண்டத்தில் காளை, சூது கவ்வுமில் தாஸ் போன்ற கதாபாத்திரங்கள் வழங்கிய உணர்வுபூர்வமான தருணங்களை. மாநகரத்தில் சார்லிக்கு ஒரு பின்னணி உண்டு. நோய்வாய்ப்பட்டிருக்கும் மகன். ஆனால் அது படத்தில் ஒரு செய்தியாக மட்டும்தான் வருகிறது. அதனால் நேரும் உணர்ச்சிகள் ஆடியன்ஸின் மனதுக்குக் கடத்தப்படுவதில்லை. அதேபோல், ஸ்ரீயும் சார்லியும் இரண்டாம் பாதியில் நீண்டநேரம் எதுவும் செய்யாமலேயே சுற்றிக்கொண்டிருப்பது போலவே தோன்றிக்கொண்டிருந்தது. இதனால், படம் முழுதும் விறுவிறுப்பாகச் சென்றாலும் கூட, படம் முடிந்து வருகையில் ஒருசில காட்சிகள் மட்டுமே மனதில் தங்குகின்றன.

எல்லாக் கதாபாத்திரங்களும் எல்லாக் காட்சிகளிலும் எல்லா இடங்களிலும் இருப்பது – இவர்களை எப்போதுபார்த்தாலும் இணைத்துக்கொண்டே இருக்கும் தற்செயல் சம்பவங்கள் – இதுமட்டும்தான் படத்தின் பிரச்னை. ஆனால், நான் சொன்னபடி, ஆடியன்ஸுக்கு இது ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை என்பது படம் பார்க்கையில் உணரமுடிந்த விஷயம். மாநகரம் போன்ற வேகமான படங்கள் அவசியம் தமிழுக்குத் தேவை. நான் முதலிலேயே சொன்னபடி, இஷ்டத்துக்குத் தான்தோன்றித்தனமாக, ஆடியன்ஸ் முட்டாள்கள் என்று நினைத்து டுபாக்கூர் காட்சிகளுடன்  போலியாக எடுக்கப்படும் படங்களே ஓடும்போது, மாநகரத்தை அவசியம் அனைவரும் பார்க்கவேண்டும் என்றே நினைக்கிறேன். இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Life (2017) – English
ஒரு ஏலியன் படம் எப்படி இருக்கவேண்டும்? நம் மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அதிலிருந்து இம்மி கூடப் பிசகாமல் எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் Life. ரிட்லி ஸ்காட் எடுத்த Alien (1979) படத்துக்கும் இந்தப் படத்துக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ‘ஏலியன்’ படத்தை இப்போது எடுத்தால் எப்படி இருக்குமோ, அதுதான் இந்தப்படம் என்றே சொல்லிவிடலாம். பல காட்சிகள், ‘ஏலியன்’ படத்தில் இருந்து அப்படியப்படியே எடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இதில் எதுவுமே புதிதாகச் சொல்லப்படவில்லை. ஆனால் அதற்காக இந்தப்படம் மொக்கை என்றும் சொல்லமுடியாது. ஏன் என்று சொல்கிறேன்.

ஒரு ஏலியன் இடம்பெறும் த்ரில்லர் எப்படி இருக்கவேண்டும்? ஏதோ ஒரு இடம். அந்த இடத்தில் ஒருசில நபர்கள். அவர்களுக்கு ஒரு நோக்கம். இவர்களுக்கு இடையே வந்து மாட்டிக்கொள்ளும் ஏலியன். அந்த ஏலியனால் ஒவ்வொருவராகக் கொல்லப்படும் நபர்கள். இறுதியில் இவர்களில் உயிர்பிழைத்திருக்கும் ஓரிரு நபர்களின் மூளையில், இதுவரை நடந்த நிகழ்ச்சிகளின் இடையே இருந்து திடீரென்று ஒரு புதிய உண்மை ஃப்ளாஷ் ஆகி, அதனால் அவர்கள் அந்த ஏலியனை வெற்றிகொள்ளுதல். வெற்றியோடு வீடு திரும்புதல். இதுதான் ஏலியன் வில்லனாக இருக்கும் படத்தின் டெம்ப்ளேட். ஏலியன் வில்லனாக நடித்திருக்கும் படங்களையெல்லாம் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள். Alien, Alien2, Alien3, Prometheus, Species, The Blob என்று ஏராள உதாரணங்கள் உண்டு. இவைகள் எல்லாமே நான் சொன்ன டெம்ப்ளேட்டின்படிதான் இருக்கும். ஏனெனில், விண்கலத்தில் மாட்டிக்கொள்ளும் ஏலியனை வில்லனாகச் சித்தரிக்கவேண்டும் என்றால் இப்படித்தான் காட்டமுடியும். இந்தக் கதையில் விண்கலம் என்பதற்குப் பதில் வீடு, ஏலியன் என்பதற்குப் பதில் பிசாசு என்று வைத்துக்கொண்டால் ஈவில் டெட் போன்ற படங்களை எடுத்துவிடலாம். எனவே இது ஒரு பொதுப்படையான டெம்ப்ளேட்.

ஆனால், இந்தக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு, படம் பார்க்க வரும்முன்னரே படத்தின் கதையைத் தெரிந்துகொண்டு திரையரங்கு வரும் ஆடியன்ஸை எப்படியெல்லாம் அதிரவைக்கமுடியும் என்று யோசித்தே எழுதப்பட்டிருக்கிறது இந்தப்படம். இதன் திரைக்கதையை எழுதியவர்கள், Deadpool படத்தை எழுதிய அதே Rhett Reese & Paul Wernick ஜோடிதான். ‘ஏலியன்’ படத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்தத் திரைக்கதையையும் இவர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஏலியன் படத்தில் இல்லாத இரண்டு விஷயங்கள் இதில் உண்டு. இரண்டுமே முக்கியமான விஷயங்கள்தான். Spoiler Alert. ஒன்று – படத்தின் ஹீரோ என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் கதாபாத்திரம்தான் முதலில் மண்டையைப் போடுகிறது. இரண்டு – படத்தின் முடிவு. அதை நான் சொல்லப்போவதில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

பிற ஏலியன் படங்களுக்கும் இதற்கும் உள்ள இன்னொரு வித்தியாசம், ஏலியனின் உருவ அமைப்பு. ஒரு பிரம்மாண்ட ராட்சதன் போல இல்லாமல், ஜெல்லி மீனும் ஆக்டோபஸும் கலந்த கலவை போல உள்ள ஏலியன், பயத்தை மேலும் கூட்டுகிறது. அதேபோல், ஏலியனைப்பற்றிய வசனங்கள் (ஏலியன் நம்மை விரோதியாக நினைப்பதில்லை; ஆனால், இரண்டு வித்தியாசமான உயிரின வகைகள் இருக்கும் ஒரு இடத்தில், அவற்றில் வலிமையான உயிரினம் கட்டாயம் பிற உயிரினத்தைக் கொன்றே தீரவேண்டும். அப்போதுதான் அது உயிர்பிழைக்க முடியும்) நன்றாக எழுதப்பட்டுள்ளன. அதேபோல், இதில் ரத்தம் சார்ந்த வன்முறை கொஞ்சம் அதிகம்.

ஆனால், படத்தின் நெகட்டிவ் பாயிண்ட்களாக, எந்தக் கதாபாத்திரத்துக்கும் பின்னணியே இல்லை. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் தனது மனைவிக்குக் குழந்தை பிறப்பதைப் பார்க்கிறது. அவ்வளவுதான். அனைவருமே துண்டான மனிதர்கள். ஒரு கேங்க்ஸ்டர் படத்தில் இப்படி வரலாம். சூது கவ்வும், Snatch, Lock stock and Two Smoking Barrels போன்ற படங்களில் இப்படிப்பட்ட மனிதர்கள்தான் வருவார்கள். பழைய ஏலியன் படங்களிலும் இப்படிப்பட்ட மனிதர்கள் உண்டு என்றாலும், இப்போது எடுக்கப்படும் படங்களில், உணர்வுபூர்வமான காட்சிகளின்போது ஆடியன்ஸ் படத்தோடு ஒன்ற, கதாபாத்திரங்களின் பின்னணி அவசியம் தேவை. அது இல்லாதது, படத்தின் பெரிய மைனஸ். கூடவே, எப்படியும் ஒவ்வொருவராக எல்லோரும் இறக்கப்போகிறார்கள் என்பது எளிதில் தெரிந்துவிடுகிறது. கதையில் புதுமையே இல்லாதது அடுத்த மைனஸ். ஆனால், இந்த மைனஸ்களை ஆடியன்ஸ் மறந்துவிடவேண்டும் என்ற நோக்கில்,ஒருசில திடுக் தருணங்களோடு விறுவிறுப்பான திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. அந்தந்தத் தருணங்கள் வருகையில் படம் விறுவிறுப்பாகவே செல்கிறது.

அதுவே, விறுவிறுப்பான தருணங்களைத் தெளிவாக உணர்த்தியிருக்கும் திரைக்கதையில், சில முக்கியமான சம்பவங்கள் சரியாக எழுதப்படவில்லை. உதாரணமாக, இவர்களின் distress signal கிடைத்ததும் கொஞ்சம் தள்ளி வரும் ஆளில்லாத விண்கலம் dock செய்யப்படும் காட்சி ஒரு உதாரணம். அது குழப்பத்தையே விளைவிக்கிறது. அதேபோல், அவ்வளவு நேரம் விண்வெளியில் காற்றே இல்லாதபோதுகூட சர்வைவ் செய்யத் தெரிந்த ஏலியனுக்கு, படத்தில் ஒரு கதாபாத்திரம் ஆக்ஸிஜனை உபயோகித்து எரியும் விளக்கைக் காட்டும்போது அதை ஓடிவந்து கட்டிப்பிடித்து கருணாஸ் பியர் பாட்டிலைக் கன்னத்தோடு வைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் விடுவதுபோலக் காட்சிகள் அமைத்திருப்பது சற்றே நகைச்சுவையாக இருந்தது. இதுபோலப் படத்தில் சில காட்சிகள் உண்டு. ஏலியனை சரியாக டிஃபைன் செய்யவில்லை.

உங்களுக்குக் கேள்விகள் இல்லாமல், ஓரளவு விறுவிறுப்பான காட்சிகளோடு நன்றாகத் தெரிந்த கதையோடு ஒரு ஏலியன் த்ரில்லர் பார்ப்பதில் விருப்பம் இருந்தால் தாராளமாக இப்படத்தைப் பார்க்கலாம். ஆனால் என் கவலையெல்லாம், இதே கதையை வைத்துக்கொண்டு தாத்தா ரிட்லி ஸ்காட் அடுத்த ஏலியன் படத்தோடு கிளம்பிவிட்டார். விரைவில் Alien: Covenant படம் வெளியாகப்போகிறது. அது, அதே ஏலியன் கதைதான். அதுதான் பயமாக இருக்கிறது.

ஆஸ்கர் விருதுகள் – 2017 – சர்ச்சையும் விருதுகளும் – தினகரன் (இலங்கை) கட்டுரை
இந்தக் கட்டுரை, விருதுகள் வழங்கப்பட்டபின்னர் இலங்கையைச் சேர்ந்த தினகரன் பத்திரிக்கையில் எழுதியது.

சில நாட்களுக்கு முன்னர் நடந்துமுடிந்த ஆஸ்கர் விருதுகளின் க்ளைமேக்ஸில், ‘லா லா லேண்ட்’ பட்டமே சிறந்த படமாக அறிவிக்கப்பட்டு, பின்னர் உடனடியாகத் தவறு நடந்துவிட்டதாகச் சொல்லப்பட்டு, ’மூன்லைட்’ படத்துக்கு அந்த விருது கொடுக்கப்பட்டதைக் கவனித்திருப்பீர்கள். இந்த மாபெரும் தவறு எப்படி, ஏன் நடந்தது என்பதைவிடவும் (PWC நிறுவனம் இதற்குப் பொறுப்பேற்றுள்ளது), சிறந்த படமாக அறிவிக்கப்பட்ட மூன்லைட்டின் குழுவினர், லா லா லேண்ட் படத்தின் குழுவோடு மேடையைப் பகிர நேர்ந்தது என்பதே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. மூன்லைட், கறுப்பினத்தவர்களைப் பற்றிய படம். வெள்ளையர்களுக்குக் கறுப்பின மக்களின்மேல் எப்போதுமே ஒருவித அசூயை உண்டு. விருது மூன்லைட்டுக்கு என்று திருத்தி அறிவிக்கப்பட்டபின்னர், விழாவைத் தொகுத்தளித்த ஜிம்மி கிம்மெல், லா லா லேண்டுக்காகவே முதலில் பரிதாபப்பட்டார். இதனை நீங்கள் வீடியோவில் பார்த்தால் தெரியும். வெள்ளையர்களால், வெள்ளையர்களுக்காகவே நடத்தப்படும் ஒரு நிகழ்வில், சிறந்த படமாக ஒரு கறுப்பினப்படம் அறிவிக்கப்படும்போது, வெள்ளையர்களின் படம் தோற்றுவிட்டதே என்ற பரிதாப உணர்வே அரங்கில் அதிகம் மேலிட்டது. கூடவே, மூன்லைட்டுக்குக் கிடைத்திருக்கவேண்டிய உச்சபட்ச மரியாதை கிடைக்காமல், லா லா லேண்ட் குழுவோடே மேடையைப் பகிர நேரிட்டது.

இதைத்தான் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டும் என்று கருதுகிறேன்.

மூன்லைட்டுக்கே சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது (மஹெர்ஷாலா அலி). அதேபோல், சிறந்த adapted திரைக்கதையையும் மூன்லைட் பெற்றது.

சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டவர், பென் ஆஃப்லெக்கின் சகோதரர் கேஸி ஆஃப்லெக் – ’மேன்செஸ்டர் பை த ஸீ’ படத்துக்காக. இது மிகவும் நல்ல தேர்வு. இவருடன் போட்டியில் இருந்த ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் (ஹாக்சா ரிட்ஜ்), ரையன் காஸ்லிங் (லா லா லாண்ட்), டென்ஸல் வாஷிங்டன் (ஃபென்ஸஸ்) ஆகியோர் எதிர்பார்க்கப்பட்டவர்கள்தான். ஆனால், இதில் நகைச்சுவையான அம்சம், Lion படத்துக்காகச் சிறந்த நடிகராகத் தேர்வுசெய்யப்படவேண்டிய தேவ் படேல், அதே படத்துக்காகச் சிறந்த துணை நடிகர் பிரிவில் இடம்பெற்றிருப்பதே. ஒரு படத்தின் ஹீரோவைத் துணைநடிகராக ஆஸ்கர் கமிட்டி எப்படித் தேர்வுசெய்தது என்பது ஆஸ்கர் கமிட்டிக்கு மட்டுமே வெளிச்சம் (தேவ் படேல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். வெள்ளையர் அல்ல என்பது யோசிக்கப்படவேண்டிய அம்சம்).

சிறந்த நடிகைக்கான விருது, எதிர்பார்க்கப்பட்டபடியே எம்மா ஸ்டோனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது (லா லா லேண்ட்). சிறந்த இயக்குநருக்கான விருதும் லா லா லேண்டுக்காக, டேமியன் சஸலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. முப்பத்து இரண்டே வயதில், இவ்விருதை வாங்கும் மிகவும் இளமையான இயக்குநர் இவரே. இவரது ‘விப்லாஷ்’ படத்தை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். 2014ல் வெளியான அப்படத்துக்காகச் சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். மிகவும் திறமையான இளம் இயக்குநர்களில் ஒருவர். அதேசமயம், மூன்லைட்டின் இயக்குநர் பேரி ஜென்கின்ஸும் லேசுப்பட்டவர் இல்லை. இவரும் ஒரு இளம் இயக்குநர்தான். 2008ல் வெளியான ’மெடிசின் ஃபார் மெலன்கலி’ படத்துக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டவர். இம்முறை இவருக்குத்தான் இவ்விருது வழங்கப்பட்டிருக்கவேண்டும் என்பது ஆஸ்கர் படங்களைப் பார்த்த பல விமர்சகர்களின் கருத்து. இவ்விருவருக்கும் பலத்த போட்டி நிலவியது. ஆனால் இறுதியில் லா லா லேண்ட் வென்றது.

சிறந்த திரைக்கதைக்காக, மான்செஸ்டர் பை த ஸீ படம் விருது வென்றிருக்கிறது. இதுவும் நல்ல தேர்வே. இத்துடன் இடம்பெற்ற படங்களில், ‘ஹெல்ல் ஆர் ஹை வாட்டர்’ படம் கொஞ்சம் கவனிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது. மிகவும் நல்ல படங்களில் இதுவும் ஒன்று.

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரப் பிரிவில், ‘சூசைட் ஸ்க்வாட்’ படம் விருது பெற்றிருக்கிறது. வழக்கமாக இப்படிப்பட்ட ஒரு வணிகப்படம் இவ்விருதை வெல்லும் வாய்ப்பு குறைவு. இந்தப் படமே ஒரு சராசரியான படமும் கூட என்றாலும், இந்தப் பிரிவில் பல்வேறு சூப்பர்ஹீரோக்களைக் கச்சிதமாக உருவாக்கியிருந்ததால், சரியாகவே இவ்விருது கொடுக்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் (ஆனால் இப்படத்தை விடவும் சிறந்த படமான ‘டெட்பூல்’, எந்தப் பிரிவிலும் தேர்வு செய்யப்படவில்லை).

சிறந்த அனிமேஷன் படங்களில், ‘ஸூடோஃபியா’ தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. சென்ற வருடம் வெளியான மிகச்சிறந்த படங்களில் அதுவும் ஒன்று. சந்தேகமில்லை. ஆனால், அத்துடன் இடம்பெற்ற ‘கூபோ அண்ட் த டூ ஸ்ட்ரிங்க்ஸ்’ படமும் மிகச்சிறந்ததொரு படம். உண்மையில் ஸூடோஃபியா ஒரு வழமையான கமர்ஷியல் படமே. ஆனால் கூபோ, சொல்லும் கதையிலும், எடுத்துக்கொண்ட கருவிலும் மிகச்சிறந்த கருத்துகள் பலவற்றைச் சொல்லியது.

இந்த விழாவில், மிகப்பெரிய ஏமாற்றங்களில் ஒன்று, இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸேஸியின் ‘சைலன்ஸ்’ படத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டது. வழக்கமாக ஸ்கார்ஸேஸி எடுக்கும் படங்கள் எப்போதும் ஆஸ்கர்களில் கவனிக்கப்படும். ஆனால், அவரது முப்பது வருடக் கனவுப்படமான சைலன்ஸ் இம்முறை எந்தப் பெரிய பிரிவிலும் கண்டுகொள்ளப்படவே இல்லை.

இன்னும் பிற பிரிவுகளில் கொடுக்கப்பட்ட விருதுகள் குறித்து நீங்களே இணையத்தில் படித்திருக்கலாம்.

ஆஸ்கர்களைத் தொடர்ந்து கவனிக்கையில், சென்ற வருடமும் அதற்கு முந்தைய வருடமும், சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை ஆகிய இருபது பெயர்களில் ஒருவர் கூட வெள்ளையரல்லாதோர் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இம்முறை அந்தக் கொடூரம் நடக்காமல், பல வெள்ளையரல்லாதோரும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது ஓரளவு ஆசுவாசம் தரக்கூடியது. ஆனால், புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துக்ளக் தனமாக அறிவித்திருக்கும் பல முட்டாள்தனமான சட்டங்களால் (சில நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் யுனைடட் ஸ்டேட்ஸினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது அவற்றில் ஒன்று), இரானிய இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹதி, இவ்விழாவைப் புறக்கணித்திருப்பதாக அறிவித்திருந்தார். அவருக்குத்தான் சிறந்த வெளிநாட்டுப் பட விருது வழங்கப்பட்டது (’த சேல்ஸ்மேன்’). இது எவ்வளவு பெரிய நகைமுரண்? அதேபோல், இவ்விழாவில், மெக்ஸிகோவைச் சேர்ந்த கேல் கார்ஸியா பெர்னால் விருது ஒன்றை வழங்க வருகையில், ‘ஒரு மெக்ஸிகனாக, ஒரு வெளிநாட்டுக்காரனாக, அங்கிருந்து யுனைடட் ஸ்டேட்ஸுக்கு வேலை நிமித்தம் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளியாக, ஒரு மனிதனாக, நம்மையெல்லாம் பிரித்தாள நினைக்கும் எல்லாவிதமான சுவர்களையும் நான் எதிர்க்கிறேன்’ என்று பேசியது குறிப்பிடத்தக்கது. வெள்ளையர்களால் பெரும்பான்மையான வெள்ளையர்களுக்காக விருதுகளை வழங்கும் ஆஸ்கர்களில் இதுபோன்ற பிரச்னைகளை நான் தீவிரமாகக் கவனிக்கிறேன். இவைதான் எனக்கு முக்கியமானதாகப்படுகின்றன. குறிப்பாக, நான் முதல் பத்தியில் சொல்லியிருப்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்.

ஆஸ்கர் விருதுகள் – 2017 – பரிந்துரைகள் பற்றிய குமுதம் கட்டுரை
குமுதத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஆஸ்கர் விருதுகள் பரிந்துரைக்கப்பட்டபோது எழுதிய கட்டுரை இது. விருதுகள் அளிக்கப்படுவதற்கு முன்னால். விருதுகள் அளித்ததற்குப் பின் இலங்கையைச் சேர்ந்த தினகரன் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையை நாளை வெளியிடுகிறேன்.

ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருதுகளின் நாமிநேஷன்களில் ஏதேனும் பிரச்னைக்குரிய அம்சம் இல்லாமல் இருக்காது. பொதுவாக ஆஸ்கர்கள் என்பது ஒரு whitewash. அதாவது, வெள்ளையர்களின் விழா. ஏதேனும் ஒப்புக்குச் சப்பாணியாக, வெள்ளையர்கள் அல்லாதவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது ஒவ்வொருமுறையும் பிரச்னையாக விவாதிக்கப்படும். இதுபோலவே, இந்த முறையும் சர்ச்சைக்குரிய நாமினேஷன்கள் இல்லாமல் இல்லை. விரிவாகக் கவனிப்போம்.

முதலில், சிறந்த திரைப்படத்துக்கான பிரிவில், La La Land மொத்தம் பதிநான்கு பிரிவுகளில் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் எதிலெல்லாம் விருதுகளை அள்ளும் என்பது விரைவில் தெரிந்துவிடும். இது ஒரு சாதனை. இதற்கு முன்னர் இரண்டே படங்கள்தான் இத்தனை பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன (All about Eve – 1950 & Titanic – 1997). லா லா லேண்டின் இயக்குநர், டாமியன் சஸெல் (Damien Chazelle), ஆஸ்கர்களுக்குப் பரிச்சயமானவர்தான். 2014ல் வெளியான Whiplash படத்துக்காகச் சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (ஆனால் வெல்லவில்லை). விப்லாஷ் உலகெங்கும் பெற்ற வரவேற்பு நமக்கே தெரியும். இது இவரது இரண்டாவது படம். இப்போது லா லா லாண்டை ஒரு ம்யூஸிகலாக எடுத்துள்ளார். உலகெங்கும் உள்ள விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்படக்கூடிய படமாக இருக்கிறது லா லா லாண்ட். அவசியம் ஒருசில விருதுகளை வாங்கப்போகிறது. இதனுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் படங்களில், Hell or High Water கட்டாயம் நல்ல தேர்வு. Hacksaw Ridge, இயக்கிய மெல் கிப்ஸனுக்காகப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் கடந்த பத்து வருடங்களாக, மெல் கிப்ஸனை ஆஸ்கர் கமிட்டி ஒதுக்கியே வைத்திருந்தது (2006ல், குடித்துவிட்டு வண்டி ஓட்டிக் கைதாகும்போது யூதர்களைக் கண்டபடி கெட்டவார்த்தையில் திட்டியிருந்தார் மெல் கிப்ஸன். இது இணையமெங்கும் பிரபலமானது. இதைத்தொடர்ந்து பலரும் கிப்ஸனின் மேல் கடுப்பாயினர்).

இந்தப் பட்டியலில் இருக்கும் Arrival, ஒரு கடும் திராபை (திரைக்கதை ரீதியிலும், வசூல் ரீதியிலும்). இந்தப் படத்தை, இண்டர்ஸ்டெல்லாரை விஞ்சிவிட்டது என்றே இணையத்தில் சில விமர்சகர்கள் கருத்து இட்டுக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தை நீங்கள் பார்க்க நேர்ந்தால் தெரியும்- இது ஒரு overhyped படம் என்று. ஒருவன், ஒரு மணி நேரமாக ஒரு வெங்காயத்தை உரித்துக்கொண்டே இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அரைவல் அப்படிப்பட்டது. இதை இயக்கியவர் டெனிஸ் வில்லன்யூவ். இவரது முந்தைய படங்களான Prisoners மற்றும் Sicario ஆகியவையும் இதேபோன்று overhype செய்யப்பட்டவையே. இதனாலேயே இவருக்கு ஒரு அறிவுஜீவி இமேஜ் இருப்பதால் இந்தப் படமும் இம்முறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பிரிவில் இடம்பெற்றிருக்கும் Lion மற்றும் Fences ஆகியவையும் ஓரளவு நல்ல தேர்வுகளே.

ஆனால், எந்தப் படம் உலகம் முழுக்க எதிர்பார்க்கப்பட்டதோ, எந்தப் படத்தை முப்பது வருடங்களாக இயக்கவேண்டும் என்ற கனவைச் சுமந்துகொண்டிருந்தாரோ, அத்தகைய இயக்குநரான மார்ட்டின் ஸ்கார்ஸேஸியின் Silence படத்தை ஆஸ்கர்களில் கண்டுகொள்ளவே இல்லை. இது இந்த ஆண்டின் மாபெரும் ஏமாற்றம். அதில் சந்தேகமே இல்லை. அரைவல் போன்ற அரத திராபைகளைத் தேர்வு செய்யும் கமிட்டி, சைலன்ஸை விட்டுவிட்டது எதிர்பார்க்கப்பட்டதே என்றாலும், ஸ்கார்ஸேஸி போன்ற ஜீனியஸ் இயக்குநருக்கு எதிராக இத்தனை கொடூரமாக ஆஸ்கர் கமிட்டி செயல்படும் என்பது முற்றிலும் மனக்கசப்பையே தருகிறது (இப்படத்துக்கு, சிறந்த ஒளிப்பதிவின் கீழ் ஒரே ஒரு நாமினேஷன் மட்டுமே). அதேபோல், சென்ற வருடக் கான் (Cannes) விழாவில் பெரிதும் பாராட்டப்பட்ட Loving படத்தையும் சிறந்த படத்துக்கான ஆஸ்கர்களில் கண்டுகொள்ளவில்லை.காரணம்? லவிங் படத்தின் கதை, அதில் உள்ள கதாபாத்திரங்களின் நிறம் ஆகியவையே.

சிறந்த நடிகர் பிரிவில் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் (ஹாக்சா ரிட்ஜ்), ரையன் காஸ்லிங் (லா லா லாண்ட்), டென்ஸல் வாஷிங்டன் (ஃபென்ஸஸ்) ஆகியோர் எதிர்பார்க்கப்பட்டவர்கள்தான். இவர்கள் மூவருக்குமே பலத்த போட்டி உண்டு. மூவரில் யாருக்குக் கிடைத்தாலும் நல்லதுதான். நான்காவதாகக் கேஸி ஆஃப்லெக் (பென் ஆஃப்லெக்கின் சகோதரர்), ஐந்தாவதாக விக்கோ மார்டென்ஸன் (காப்டன் ஃபண்டாஸ்டிக்) ஆகியோரும் உள்ளனர். விக்கோவுக்குக் கிடைப்பது மிக மிக சந்தேகம். இந்தப் பட்டியலில் இருக்கும் மிகப்பெரிய நகைமுரண், Lion படத்துக்காகச் சிறந்த நடிகராகத் தேர்வுசெய்யப்படவேண்டிய தேவ் படேல், அதே படத்துக்காகச் சிறந்த துணை நடிகர் பிரிவில் இடம்பெற்றிருப்பதே. ஒரு படத்தின் ஹீரோவை எப்படித் துணைநடிகராகத் தேர்ந்தெடுக்கமுடியும்? ஆஸ்கர் கமிட்டிக்கே வெளிச்சம் (தேவ் படேல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். வெள்ளையர் அல்ல என்பதை நினைவில் வைக்கவும்).

சிறந்த நடிகை பிரிவில், மெரில் ஸ்ட்ரீப், இருபதாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் (Florence Foster Jenkins). இது ஒரு சாதனை. ஆனால் அதேசமயம், இப்படத்துக்காக இவரைத் தேர்ந்தெடுக்கவேண்டியதில்லை. முந்தைய இரண்டு மூன்று விருது விழாக்களில், டொனால்ட் ட்ரம்ப்பைக் கடுமையாக மேடையில் விமர்சித்திருந்தார் ஸ்ட்ரீப். இந்தப் பேச்சுக்கள் கொடுத்த பப்ளிஸிடிதான் இதற்குக் காரணம் என்றே பலரும் கருதுகின்றனர். இதை இங்கே சொல்லநேர்வது ஏனென்றால், அரைவல் படத்தில் சிறப்பாக நடித்திருந்த ஆமி ஆடம்ஸ், பட்டியலில் இடம்பெறவே இல்லை. படம் கடும் மொக்கை என்றாலும், நடிப்பு என்று கவனித்தால் கட்டாயம் ஆமி ஆடம்ஸ் ஸ்கோர் செய்வார். ஸ்ட்ரீப்புக்குப் பதில் ஆமி ஆடம்ஸின் பெயரே இடம்பெற்றிருக்கவேண்டும். இந்தப் பட்டியலில் எம்மா ஸ்டோனின் பெயர் (லா லா லாண்ட்) எதிர்பார்க்கப்பட்டதே. நாம் ஏற்கெனவே பார்த்த லவிங் படத்துக்காக, அதன் கதாநாயகி ரூத் நெக்காவின் பெயரும் பட்டியலில் உண்டு.

மற்றபடி, இன்னொரு பெரிய ஏமாற்றம், Finding Dory படத்தையும் இம்முறை ஆஸ்கர்கள் கண்டுகொள்ளவில்லை. உலகெங்கும் பிரமாதமான வரவேற்புப் பெற்ற அனிமேஷன் படம் இது. அதேசமயம், இதைவிட சுவாரஸ்யத்தில் மிகக் குறைவான Moana படம் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இன்னொரு முக்கியமான விஷயம், சிறந்த ஒளிப்பதிவாளர்கள் பட்டியலில், ஆஸ்கர் சரித்திரத்திலேயே முதன்முறையாக, கறுப்பினத்தைச் சேர்ந்த ப்ராட்ஃபோர்ட் யங் (அரைவல்) தேர்வுசெய்யப்பட்டிருப்பதே. யோசித்துப் பாருங்கள். இதுவரை 88 ஆஸ்கர் விழாக்கள் நிகழ்ந்துள்ளன. எண்ணற்ற கறுப்பின ஒளிப்பதிவாளர்கள் இருந்து வந்துள்ளனர். ஆனால் சரித்திரத்திலேயே முதன்முறையாக இப்போதுதான் அப்படிப்பட்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்வதா கோபப்படுவதா? இதுதான் ஆஸ்கர் கமிட்டியின் மெத்தனம்.

அடுத்ததாக, உலகெங்கும் கிழித்துத் தோரணம் கட்டப்பட்ட ‘சூஸைட் ஸ்க்வாட்’ படத்துக்கு ஒரு ஆஸ்கர் நாமினேஷன். சிறந்த சைகை மற்றும் ஒப்பனைக்காக. அதேசமயம், உலகெங்கும் பிய்த்துக்கொண்டு ஓடிய ‘டெட்பூல்’ படத்துக்கு எந்த நாமினேஷனும் இல்லை (கோல்டன் க்ளோப்களில் இது நாமினேட் செய்யப்பட்டது). இதுவும் நகைமுரணே.

ஆனால், இந்த ஆஸ்கர்களின் ஒரே நல்ல அம்சம் என்னவெனில், இதுவரை இல்லாத அளவு, இம்முறை அமெரிக்கர்கள் அல்லாதவர்களில் ஓரளவு கணிசமான சதவிகிதத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வுசெய்யப்பட்டிருப்பதே. உண்மையில், சென்ற வருடமும் அதற்கு முந்தைய வருடமும், சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை ஆகிய இருபது பெயர்களில் ஒருவர் கூட வெள்ளையரல்லாதோர் இல்லை! இதைத்தான் முதல் பத்தியில் குறிப்பிட்டேன். ஆனால் இம்முறை, மொத்தமாகப் பதினெட்டு ஆஃப்ரோ அமெரிக்கர்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வருடமும் வெள்ளையரல்லாதோர் இடம்பெறாமல் இருந்திருந்தால் கட்டாயம் மிகப்பெரிய பிரச்னை வெடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படியாக, அமெரிக்கர்களுக்கு மட்டுமே சொறிந்துகொடுக்கும் விருது விழாவான ஆஸ்கர்கள் இம்முறை, கொஞ்சம் ‘உலகளாவிய’ விழாவாக மாறுவதாகத் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. அமெரிக்கர்களல்லாதோருக்கு விருதுகள் கிடைக்கின்றனவா இல்லையா என்பதில் இனும் சில நாட்களில் திரைக்கதையின் முடிவு தெரிந்துவிடும். என்ன இருந்தாலும், இது கச்சிதமாக எழுதப்பட்ட திரைக்கதை என்பதில் எனக்குத் துளிக்கூட சந்தேகம் இல்லை.

John Wick: Chapter Two (2017) – English
ஜான் விக் படத்தின் முதல் பாகம் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. படத்தை இயக்கியவர்கள் ஹாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் சாட் ஸ்டாஹெல்ஸ்கியும் டேவிட் லெய்ட்ச்சும் (Chad Stahelski & David Leitch). திரைக்கதை எழுதியவர் டெரெக் கோல்ஸ்டாட் (Derek Kolstad). முதல் பாகம்தான் அவரது முதல் முக்கியமான திரைக்கதை. இதெல்லாம் எனது முதல் பாக விமர்சனத்தில் நீங்கள் படித்துக்கொள்ளலாம். முதல் பாகத்தைப் பற்றி விரிவாக அதில் எழுதியிருக்கிறேன்.

இம்முறை, போன படத்தை இயக்கிய இருவரில் ஒருவரான சாட் ஸ்டாஹெல்ஸ்கி மட்டும் தனியாகக் களத்தில் இறங்கியிருக்கிறார். திரைக்கதை, அதே டெரெக் கோல்ட்ஸ்டாட்தான்.

நான் இந்த இரண்டாம் பாகத்துக்காகப் பல வாரங்கள் காத்திருந்தேன். ஹாலிவுட்டில், இரண்டாம் பாகம் என்பது பெரும்பாலும் மொக்கையாக இருப்பதற்குப் பல்வேறு சாத்தியக்கூறுகள் உண்டு. என்றாலும், முதல் பாகத்தின் ஸ்டண்ட்கள் அவ்வளவு அருமையாக இருந்தன. கூடவே திரைக்கதையும் மிக வேகமாகச் சென்றது. எனவே, இரண்டாம் பாகத்தில் திரைக்கதை மொக்கையாக இருந்தாலும், ஸ்டண்ட்களுக்காகவே எப்படியும் படத்தைப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

உண்மையில் படம் முதல் பாகத்தின் அளவு நன்றாக இருக்கிறது. எங்கும் சொதப்பவில்லை. முதல் பாகத்தில் எப்படியெல்லாம் கியானு ரீவ்ஸின் ஜான் விக் கதாபாத்திரத்துக்கு டயலாக்கிலேயே பில்டப் வைத்திருந்தார்களோ, அதே டயலாக் அப்படியே இதிலும் வருகிறது (I once saw him kill three people in a bar, with a pencil). அதே பாபா யாகாவாக (the BoogeyMan) கியானு வருகிறார். அந்தக் கதை முடிந்து ஒரு சில நாட்களிலேயே இந்தக் கதை துவங்கிவிடுகிறது. முதல் பாகத்தின் இறுதியில், வில்லன் விக்கோவை ஜான் விக் மரண அடியோடு விட்டுவிட்டுப் போய்விடுவான். விக்கோ இறந்துவிடுவான் என்று அர்த்தம். அதில் இருந்து துவங்குகிறது இந்தப்பாகம். தனது கார் இன்னும் விக்கோவின் சகோதரன் ஆப்ராமிடம் இருப்பதால், அவனைத் தேடி ஜான் விக் செல்கிறான். அவனது ஆட்கள் அனைவரையும் கொன்றுவிட்டு, ஆப்ரமிடம் இருக்கும் காரை எடுத்துக்கொண்டு, ஆப்ரமை சந்தித்து, சமாதான உடன்படிக்கை செய்துகொண்டு விடைபெறுகிறான். இதுதான் படத்தின் ஓப்பனிங் சீக்வென்ஸ். ஒவ்வொரு ஷாட்டும் அதிரடியோடு, துப்பாக்கிக்குண்டுகள், ஸ்டண்ட்கள் ஆகியவையோடு அடி பிரிக்கிறது இந்த சீக்வென்ஸ்.

இதன்பின் கதை துவங்குகிறது. சாண்டினோ டி அண்டோனியோ என்ற இடாலியைச் சேர்ந்த பிரபல தாதாவின் உதவியால்தான் அடிதடியில் இருந்து ரிடையர் ஆகி, தனது காதலியைக் கைப்பிடிக்க ஜான் விக்கால் முடிகிறது (இது முதல்பாகத்துக்கும் முதலில் நடந்த prequel story. வசனங்களால் மட்டுமே உணர்த்தப்படுகிறது). எனவே, பதிலுக்கு, க்ரைம் உலகின் முக்கியமான புள்லியாக விளங்கும் அவனது சகோதரியைக் கொல்லவேண்டும் என்ற கோரிக்கையோடு ஜான் விக்கை சாண்டினோ சந்திக்கிறான். ஆனால், தொழிலிலிருந்து ரிடையர் ஆகிவிட்டதால் இனி அடிதடியில் இறங்க முடியாது என்று ஜான் விக் மறுத்துவிட, அவனது வீட்டை எரித்துவிடுகிறான் சாண்டினோ. இவர்களின் அடிதடித் தொழிலில் சில விதிகள் உண்டு. ந்யூ யார்க்கின் காண்டினெண்டல் ஹோட்டலின் நிறுவனர் வின்ஸ்ட்டன்தான் தொழிலின் முக்கியப் புள்ளி. விதிகள் அவர் உருவாக்கியவை. அதன்படி, blood oath என்ற, இன்றியமையாத உதவியை யார் செய்திருந்தாலும், அவருக்கு அதை நாம் திருப்பிச் செய்தாகவேண்டும். எனவே, வேறு வழியின்றி, சாண்டினோவின் சகோதரியைக் கொல்ல ரோம் செல்கிறான் ஜான் விக்.

இதுதான் படத்தின் துவக்கம். இதன்பின் என்ன நடந்தது என்பதைப் படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

கிட்டத்தட்ட ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் போல பில்டப் கொடுக்கிறது ஜான் விக் சாப்டர் டூ. ஆனால் அப்படத்தில் இருப்பதுபோன்ற lighter moments இதில் கிடையாது. பற்றவைத்த பட்டாசு போல, சர்ரென்று துவங்கி முடிகிறது படம். ரோமில் சாண்டினோவின் சகோதரியைக் கொல்வது சாதாரண விஷயம் கிடையாது என்று ஜான் விக்குக்குத் தெரியும். எனவே, நன்றாகத் தன்னைத் தயார் செய்துகொள்கிறான். ஒவ்வொரு ஆயுதமாக, தற்காப்புக்கான அத்தனையையும் சேகரித்துத் தயாராக வைத்துக்கொள்கிறான். இதெல்லாம் அப்படியே பாண்ட் படம்தான். மிஸ்டர் Q போல இதில் பலர் உண்டு. அனைவருக்கும் ஜான் விக்கைத் தெரியும். அனைவரும் அவன்மீது மரியாதையும் பயமும் வைத்துள்ளனர். The Ghost, BoogeyMan என்றெல்லாம் பல பெயர்கள் ஜான் விக்குக்கு உண்டு. ஜான் விக் ரோமுக்கு வந்துவிட்டான் என்ற தகவல் தெரிந்ததும், போப்பைக் கொல்லத்தான் வந்திருக்கிறானோ என்றெல்லாம் சந்தேகப்படும் மனிதர்கள் படத்தில் உண்டு.

சாதாரண மனிதர்களைப்போலவே, கொள்ளைக்கூட்டத்தாருக்கும் உறுதியான விதிகள் உண்டு என்பது ஜான் விக் universeஇன் முக்கிய அம்சம். இந்த விதிகள்தான் படத்தை சுவாரஸ்யம் ஆக்குகின்றன. இந்த விதிகளால்தான் இறுதியில் ஜான் விக் அனைவரிடமும் இருந்து தப்பித்து ஓடமுடிகிறது. இதே விதிகள்தான் அவனை இப்படத்தின் இறுதியில் the most wanted criminal ஆகவும் ஆக்குகின்றன (போலீஸால் அல்ல. பிற கிரிமினல்களால். அவன் தலைமேல் ஏழு மில்லியன் டாலர் தொகை விலையாக வைக்கப்படுகிறது).

படத்தின் ஸ்டண்ட் கோ ஆர்டினேட்டர் J.J Perry. இப்படத்தின் ஒவ்வொரு ஸ்டண்ட்டும் பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகே கோரியோக்ராஃப் செய்யப்பட்டுள்ளது. ஜு-ஜிட்ஸு, ஜூடோ மற்றும் சாம்போ (Sambo – a Russian martial arts variety) ஆகிய மூன்றோடு, மூன்றுவிதமான துப்பாக்கிகளையும் (ரைஃபிள், ஷாட்கன் & பிஸ்டல்) வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஸ்டண்ட்கள் இவை. படத்தின் ஸ்டண்ட்களின் ஸ்பெஷாலிடி என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் பொருட்களையும் சேர்த்துக்கொண்டே சண்டைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன (ஒரு பென்சிலை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் எதிராளியைக் கொல்லலாம் என்பதற்கு இதில் கிட்டத்தட்ட முடிவின் அருகே வரும் ஒரு சீக்வென்ஸ் உதாரணம்). இவைகளால், முதல் பாகத்தை விடவும் பிரம்மாண்டமாக இல்லாமல், அதே போன்ற flavorஓடு இப்படம் இருக்க முடிகிறது. இரண்டுக்கும் எந்தப் பெரிய வித்தியாசமும் இல்லை. முதல் பாகத்திலேயே ஜான் விக் என்னவெல்லாம் செய்துவிடுவான் என்பது நமக்கு நன்றாகவே சொல்லப்பட்டுவிடுவதால், இதில் அவன் கொல்லும் ஏராளமான அடியாட்களைக் கண்டு நமக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை.

அதேபோல், படத்துக்காகக் கியானு ரீவ்ஸ், மூன்றரை மாதம் கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளார். ஸ்டண்ட்கள் மட்டுமல்லாமல், உலகின் சிறந்த துப்பாக்கி மேதைகளும் கியானுவுக்குப் பல டிப்ஸ்களை அளித்துள்ளனர். அதேபோல், பாண்ட் படங்கள் போல இதில் நம்பமுடியாத ஸ்டண்ட்கள் எல்லாம் இல்லை. மாறாக, கியானு பல தடவைகள் சுடப்படுகிறார். காயம் அடைகிறார். நம்பும்படியாகத்தான் இவையெல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், துப்பாக்கிகளின் ரிதத்தை வைத்து இதன் soundtrackகில் ஆங்காங்கே இசைக்கோர்ப்புகளும் எழுதப்பட்டுள்ளன.

கீழுள்ள வீடியோவில், கியானு எப்படியெல்லாம் துப்பாக்கிப் பயிற்சி செய்கிறார் என்று கவனியுங்கள். அவரது aim துல்லியமாக இருப்பதையும் கவனிக்கலாம்.

இந்த வீடியோவில், எப்படியெல்லாம் பயிற்சிகளை கியானு மேற்கொண்டார் என்று பார்க்கமுடியும்.

இதனாலேயே, படத்தின் ஸ்டண்ட்கள் அவ்வளவுமே மிகவும் நம்பத்தகுந்த வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள்.

இதோ, படத்தின் துவக்கத்தில் இடம்பெறும் கார் சேஸ் காட்சி. முழுக்க நான்கு நிமிடங்கள் ஓடக்கூடியது. ஆக்‌ஷன் பிரியர்களுக்குக் கட்டாயம் பிடிக்கும்.

ஒட்டுமொத்தமாக, முதல் பாகம் பிடித்தால் கட்டாயம் இதுவும் உங்களுக்குப் பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்தது. படத்தின் அத்தனை பின்னணித் தகவல்களும் முதல் பாகக் கட்டுரையிலேயே உண்டு. அதையும் ஒருமுறை படித்துவிடுங்கள்.

பி.கு

1. படத்தின் க்ளைமேக்ஸ், ப்ரூஸ் லீயின் எண்டர் த ட்ராகன் படக் க்ளைமாக்ஸுக்கு ஒரு tribute. படம் பார்க்கையில் புரிந்துகொள்வீர்கள்.

2. ஒரிஜினல் ஜாங்கோவில் ஜாங்கோவாக நடித்த Franco Nero இதிலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

3. படத்துக்கு அவசியம் மூன்றாம் பாகம் உண்டு. அது கட்டாயம் நன்றாகவும் இருக்கும்.

Kong: Skull Island-3D (2017) – English
காங்: ஸ்கல் ஐலாண்ட் படம், வார்னர் ப்ரதர்ஸ்/லெஜண்டரி பிக்சர்ஸ் வழங்கும் ஒரு மான்ஸ்டர் படம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், வழக்கமான மான்ஸ்டர் படங்களைப் போல் அல்லாமல், இப்படம் உலகெங்கும் நல்ல விமர்சனங்களைக் குவித்துக்கொண்டிருக்கிறது என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கக்கூடும். உண்மையில் ஜுராஸிக் வேர்ல்ட் படத்தோடு இதனை ஒப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள் விமர்சகர்கள். அப்படம் இதற்கு முன்னர் ஜுஜுபி என்பதுதான் ஏகோபித்த கருத்து. அது உண்மையா? படம் எப்படி?

முதலில், இந்த மான்ஸ்டர்வெர்ஸ் பற்றிய சில தகவல்கள். எப்படி மார்வெல் நிறுவனம், அவெஞ்சர்கள் சீரீஸை ஒவ்வொன்றாக வெளியிட்டு வெற்றி அடைந்ததோ (மார்வெல்லின் இந்த சக்ஸஸ் ஃபார்முலா ஹாலிவுட்டில் விரிவாக அலசப்பட்டுக்கொண்டிருக்கிறது), அப்படித்தான் லெஜெண்டரியும், தன்னிடம் உள்ள மான்ஸ்டர்களை வைத்து சில படங்கள் எடுக்க முடிவு செய்தது. அப்படி reboot செய்யப்பட்டதுதான் 2014ல் வெளியான Godzilla படம். ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதை எப்போதோ (தொண்ணூறுகளிலேயே) எழுதப்பட்டுவிட்டது. 1994ல் டெர்ரி ரோஸியோவும் டெட் எலியட்டும் இதனை எழுதி முடித்துவிட்டனர் (இந்த இருவரும் தற்கால ஹாலிவுட் திரைக்கதையில் ஜாம்பவான்கள். அலாதீனில் தொடங்கி, பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் முதல் மூன்று படங்கள் இவர்களின் கைவண்ணமே. ஆனால், படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருக்கவே, இந்தத் திரைக்கதை கைவிடப்பட்டது. அதன்பின்னர் ஒரு சில வருடங்கள் கழித்து, இண்டிபெண்டன்ஸ் டே படத்தை எடுத்துப் பிரம்மாதப்படுத்தியிருந்த ரோலாண்ட் எம்மரிச் மற்றும் டீன் டெவ்லினை அப்போது காட்ஸில்லாவின் உரிமம் பெற்றிருந்த ட்ரைஸ்டார் நிறுவனம் அணுகியது. அவர்கள் விதித்த ஒரே கண்டிஷன், பழைய திரைக்கதையை எடுத்துக்கொள்ளமாட்டோம் – எங்கள் இஷ்டத்துக்குத் திரைக்கதை எழுதுவோம் என்பதே. ட்ரைஸ்டார் ஒப்புக்கொள்ள, நாம் கண்ட காட்ஸில்லா (1998) வெளியானது.

அப்படத்தில் காட்ஸில்லா வில்லன். எனவே இறுதியில் இறந்துவிடும். ஆனால் உண்மையில் காட்ஸில்லாவின் பழைய திரைப்படங்களில் காட்ஸில்லா என்பது ஒரு ஹீரோ. தேசியச்சின்னமாகவே அறிவிக்கப்படக்கூடிய அளவு புகழ்பெற்றது. இதையொட்டியே டெர்ரி ரோஸியோவும் டெட் எலியட்டும் தங்களது திரைக்கதையை அமைத்திருந்தனர். ஆனால் அதை முற்றிலும் மாற்றி, ரோலாண்ட் எம்மரிச்சும் டீன் டெவ்லினும் காட்ஸில்லாவைக் குரூரமான வில்லனாக (வில்லியும் கூட. முட்டையிடும் காட்ஸில்லாவை நினைவிருக்கிறதா?) மாற்றிவிட்டனர்.

காட்ஸில்லாவை எடுத்த ட்ரைஸ்டாரின் உரிமையை அந்நிறுவனம் புதுப்பிக்காமல் விட்டுவிட்டது. எனவே 2003ல் அவ்வுரிமை பணால் ஆகிவிட, அதன்பின்னர் 2009ல் லெஜண்டரி நிறுவனம் காட்ஸில்லாவின் உரிமையை வைத்திருந்த ஜப்பானிய நிறுவனம் டோஹோவிடம் இருந்து ஹாலிவுட்டில் படமெடுக்கும் உரிமையைப் பெற்றது. அப்போது, ஏற்கெனவே டெர்ரி ரோஸியோவும் டெட் எலியட்டும் எழுதிக் கைவிடப்பட்டிருந்த ஒரிஜினல் திரைக்கதையை எடுக்கலாம் என்று லெஜண்டரி முடிவுசெய்தது. அதன்பின்னர் அந்தத் திரைக்கதையை வைத்துக்கொண்டு மேலும் அதில் பல மாற்றங்கள் செய்து வெளிவந்ததுதான் 2014ல் வெளியான காட்ஸில்லா. இக்கதையில் காட்ஸில்லாதான் ஹீரோ.

இப்படித்தான் லெஜண்டரியின் மான்ஸ்டர்வெர்ஸ் துவங்கியது.

இந்த சீரீஸில் அடுத்த rebootஆக, கிங்காங்கை உருவாக்க முடிவுசெய்தனர். காட்ஸில்லா கதைகளில் கிங்காங் இடம்பெறுவது அதன் ஜாப்னீஸ் படங்களைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். இதுமட்டுமல்லாமல் வேறு பல ராட்சத ஜந்துக்களும் காட்ஸில்லா கதைகளில் வரும். எனவே, இப்படிப்பட்ட ஜந்துக்களை வைத்து சில படங்கள் எடுக்கலாம் என்பது லெஜண்டரி நிறுவனத்தின் முடிவு.

கிங் காங் பற்றிக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களுக்கு, எண்பதுகளில் இங்கே வெளியான கிங் காங் படம் நினைவிருக்கலாம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பழைய கிங்காங்கின் ரீமேக் அது. இந்தப் படத்தை அடுத்து, கிங் காங் லிவ்ஸ் என்ற இன்னொரு படமும் வெளியானது. அதுவும் நன்றாக நினைவிருக்கிறது. அப்படத்தில் கிங் காங்குக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை நடக்கும். அதற்கு ஒரு ஜோடியும் இருக்கும். இரண்டு ராட்சத apeகள் நகரில் அட்டகாசம் செய்யும். இறுதியில் இவர்களுக்கு ஒரு குட்டி பிறக்கும்.

கிங் காங் லிவ்ஸ் படத்துக்கும், நேற்று வெளியாகியிருக்கும் Kong: Skull Island படத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டிலுமே, பிரச்னை செய்யும் ராணுவ மேஜரைக் கிட்டத்தட்ட ஒரே போன்றுதான் கிங்காங் கொல்லும். ஒரே அடி. சட்னி. ட்ரெய்லரில் கூட அதைக் கவனிக்கலாம்.

போலவே பீட்டர் ஜாக்ஸன் எடுத்த கிங் காங் படத்தையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

படம் எப்படி?

கதை துவங்குவது எழுபதுகளில். எனவே, சென்ற படமான காட்ஸில்லாவுக்கு இது prequel. இக்கதை நடக்கையில் காட்ஸில்லா ஆர்ட்டிக்கில் தூங்கிக்கொண்டிருக்கிறது.

மான்ஸ்டர்களை வைத்துக்கொண்டு மொக்கையைப் போடாமல் நன்றாகவே இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் கிங்காங் இருக்கும் ஸ்கல் தீவில் வேறு பல ஜந்துக்களும் வாழ்கின்றன. சில நல்ல ஜந்துக்கள். பல கொடிய ஜந்துக்கள். டெர்ரோடாக்டில் போன்ற ரத்தவெறி பிடித்த பறவைகளும் உண்டு. இவற்றுக்கு நடுவே, கிங்காங் ஒரு மன்னனைப் போல வாழ்கிறது. அது ஓரளவு குட்டிதான். இன்னும் முழுமையாக வளரவில்லை (அதற்கே 104 அடி). அதன் பெற்றோர்களையும் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிற குரங்குகளையும், பூமிக்கு அடியே இருக்கக்கூடிய ஒரு பிரம்மாண்டப் பல்லி கொன்றுவிட்டிருக்கிறது. எனவே அந்த ஜந்துக்கள்மீது கொலைவெறியில் இருக்கிறது கிங்காங். ஸ்கல் தீவை ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் தீவில் பல குண்டுகளைப் போட்டுவிடுகிறார்கள் நம் ஆராய்ச்சியாளர்கள். இதனால் பூமிக்கு அடியே வாழக்கூடிய அந்தக் கொடூரமான பல்லிகள் மேலே வந்துவிடுகின்றன. இவற்றால் நாசம் விளைகிறது. கிங்காங்குக்கும் இப்பல்லிகளுக்கும் சண்டை நடக்கிறது.

ஒரு மான்ஸ்டர் படம் என்றால் திரைக்கதை எப்படி இருக்கவேண்டும் என்று ப்ளேக் ஸ்னைடர் (‘Fade In முதல் Fade Out வரை‘) சொல்லியிருக்கிறார். அதை என் காட்ஸில்லா பதிவிலேயே பார்க்கலாம். சுருக்கமாக:

1. ஒரு வெறிபிடித்த ஜந்து.

2. அதைக் கொல்லத் துடிக்கும் மனிதர்கள்.

3. அந்த ஜந்து அதகளம் செய்ய ஒரு இடம்.

4. அந்த ஜந்து வெளிவந்து அதன் அட்டகாசத்தை ஆரம்பிக்க ஒரு சம்பவம். இந்தச் சம்பவம் பொதுவாக ஏதேனும் ஒரு பாவச்செயலாகத்தான் இருக்கும். சுயநலத்துக்காக யாராவது ஒரு மனிதன் செய்யும் இந்தப் பாவம்தான் அந்த ஜந்துவை வெளிக்கொண்டுவரும்.

5. அந்தப் பாவம் செய்தவர்களை எதேச்சையாகவோ அல்லது குறிப்பாகவோ அந்த ஜந்து வேட்டையாடும்.

6. இதற்குப் பிறகு எல்லாமே அந்த ஜந்துவை எப்படி நாயகன் துரத்துகிறான் என்பதில்தான் இருக்கிறது.

இது அனைத்துமே இதிலும் உண்டு. வெறிபிடித்த ஜந்து என்பது இங்கே ஓரளவு கிங்காங்கையும், பெருமளவு ராட்சதப் பல்லியையும் குறிக்கும். அதைக் கொல்லத் துடிக்கும் மனிதர்கள் கதையில் உண்டு. ஜந்து அதகளம் செய்யும் இடமாக, ஸ்கல் தீவு. மனிதர்களின் பேராசையில் போட்ட குண்டுகளின் பலனாகத்தான் பல்லிகளும் கிங்காங்கும் கடுப்பாகின்றன. அதேபோல், குண்டு போட்டவர்களை இரண்டுமே வேட்டையாடுகின்றன.

இவற்றைக் கட்டாயம் சுவாரஸ்யமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நாம் இதுவரை பல மான்ஸ்டர் படங்களைப் பார்த்திருப்பதால் இப்படம் புதிதாக இல்லாமல் போக வாய்ப்பு உண்டு. இருப்பினும், ஜுராஸிக் வேர்ல்ட் படம் பிடித்திருந்தால் இதுவும் பிடிக்கும். ஸிஜி அட்டகாசமாக உள்ளது. 3டியில் நிஜமாகவே வேலை செய்திருக்கிறார்கள். ஜந்துக்களின் உருவாக்கத்தில் நல்ல க்ரியேட்டிவிடி.

An as usual film. But if you wanna go lose your mind on these monsters, this is a film for you. எனக்குப் பிடித்தது.

பி.கு

படத்தில் ஒரு போஸ்ட் க்ரெடிட் சீன் உண்டு. அதைப் பார்க்க மறக்காதீர்கள். அடுத்த படத்துக்கான ட்ரெய்லர் அது. இந்த சீரீஸில் அடுத்த படத்தின் ஹீரோ பற்றிய குறிப்புகள் இதில் உண்டு.