அருண் நரசிம்மன்
ஜயதி ஜயதி
புதிதாக எழுதுவதற்கு அமர்கிறேன்.
எதற்கு இதைச் செய்ய வேண்டும்?
தமிழில் என்றில்லை வடமொழியிலும் ஆங்கிலத்திலுமே எழுதப் பிடிக்கவில்லை. ஏன் என்று புரியவில்லை. எவ்வளவு ஆழமாய் சிந்தித்தாலும்… நேர விரயமே. சில மாதங்களாய்… பெரிதாக எழுதிக் குவிக்கவில்லை. பல கதைகள் கருத்துகள் மனத்தினுள் ஊறிக்கொண்டிருக்கின்றன. வெளிவரவேண்டிய உந்துதலை அளிக்க மறுக்கின்றன.
ரைட்டர்ஸ் பிளாக் என்பார்களே… அதற்கு முதலில் ரைட்டர் என்றிருக்க வேண்டுமே. அதுவே சரியா என்பதுமே புரியாதிருப்பதாலும் எழுதப் பிடிக்கவில்லையோ என்னவோ.
உலகின் மீது பரிவோ. பிழைத்தப் போ, என் எழுத்தை வாசிக்கும் அபாக்கியத்திலிருந்து என்று.
ஆழமாய் சிந்திக்காதே. தோன்றியதை எழுது என்று சொல்லிக்கொள்கிறேன். செய்யத் தொடங்குகிறேன்.
பரிணாமம், AI  இவற்றின் இன்றைய நிலை என்ன என்று வாசிக்க வைத்திருக்கும் புத்தகங்களை அலசலாமா என்றால் வெளியில் மழையோசையினூடே பறவையொலிகள். தையல் பறவையும் மைனாவும் பழுப்பு வால் காக்கையும்… ஆ அது என்ன… காட்டுக்குயில். இன்னொன்று மீன்கொத்தி. கெக்கெலித்துச் சிரிக்கிறது. எழுந்து போய் நோட்டமிடுகிறேன். கரும்பச்சைக் காடு ஈரம்சொட்ட வெளிச்சப்படுகிறது. பறவைகள் ஒளிந்திருந்து ஒலிக்கின்றின. எங்கே… கண்டுபிடி பார்ப்போம். உற்று நோக்கினால்…
தலைப்பு முடிவிலா சுற்றில் ஜியென்பி பாட்டில் ஒன்று ஒலிக்கையில் எழுதியது.  ஜயதி ஜயதி பாரத மாதா உதகீதா… இதை முடிக்கையில் சரஸசாமதானபேததண்டசதுர… என்று போய் இன்னொரு மணியின் தனி ஓடிக்கொண்டிருக்கிறது.
மனைவி காபி கேட்கிறாள். அவ்வளவே. பிறகு எழுதுவேன். கோர்வையாய் கோபமாய் கவனிப்பவர் கருதும் விதமாய்.
ஜயதி.
தளத்தில் வாசிக்க →
மார்கழி இசை விழா 2025-2026 - வாரம் 4
கிருஷ்ணகான சபாவில் அஸ்வத் நாரயணன் விக்னேஷ் ஈஸ்வர் இருவரும் இணைந்து வழங்கிய மாலைக் கச்சேரி இறுதிவரை இணக்கமான நல்லிசையாகவே ஒலித்தது.
ஆரபி ராகத்தில் தியாகராஜரின் ‘ஸாதின்சனே’ கிருதியை விறுவிறுப்பான பிரமாணத்தில் இணைந்து தொடங்கிய நேர்த்தி, வராளி புன்னாகவாராளி ருத்திரப்பிரியா என அன்றைய ராகங்களில் ஆலாபனை நிரவல்கள் ஸ்வரகல்பனை என அனைத்தையும் சரிவிகிதத்தில் பிரித்துக்கொண்டது, எடுப்புகளில் தடுமாற்றங்கள் இன்றிக் கிருதிகளைச் சேர்ந்து பாடுவது, அதேசமயம் கார்வையோ வரிகளின் இறுதியோ என்கையில் ஒருவர் மட்டும் ஒலித்துக் கேள்வி ரசனையைக் கூட்டுவது என மேடையில் இருவரின் மனவொழுங்கும் நன்கு அமைந்துவிட்டுள்ளது.
மேல்ஸ்தாயி சஞ்சாரத்தில் பளிச்சென அஸ்வத் தொடங்கிய காம்போதி ராக ஆலாபனை விரிகையில் மத்தியில் விக்னேஷால் தொடரப்பட்டு தரஸ்தாயி சஞ்சாரங்கள் அகாரக் கார்வைகள் என ஓங்கி ஒலித்த அவரது குரலில் கற்பனைவளத்துடன் எழுந்தது. வாக்கியப் பரிமாற்றமாய் இருவரும் இணைந்து குறைத்து ஆலாபனையை முடித்தது நிறைவு. அன்றைய வைகுந்த ஏகாதசித் திருநாளை முன்னிட்டு அரங்கன் மீது தியாகராஜரால் ஆக்கப்பட்ட ‘ஓ ரங்க சாயி’ கிருதி அதன் பல்வகை ராக சொல் அழகுப் பரிமாணங்களும் வெளிப்பட வழங்கப்பட்டது.
அடுத்து துளசிதாஸரின் இந்திப் பாடல். சிந்துபைரவி ராகத்தில் மெட்டமைத்தது வயலின் வித்வான் ஶ்ரீராம்குமார். முற்பகுதியில் உசேனி ராகத்தில் மூன்று நிமிடம் செய்யப்பட இவரது தனி ஆலாபனையே அன்றைய கச்சேரியின் உயரொளி எனலாம். சுவாதித் திருநாளின் தனஶ்ரீ ராகத் தில்லானாவுடன் கச்சேரி நிறைவுற்றது.
தத்தமது வழிகளில் இசைக்கும் இரு கலைஞர்கள் சேர்ந்து பாடும் கச்சேரியில் அனைத்துமே ஒத்திகைகளில் ‘செட்டப்’ செய்ததா என்றால் அவசியம் இல்லை. இக்கச்சேரியின் எடுத்துக்காட்டு ஒரு கட்டத்தில் ஸ்வரகல்பனைப் பரிமாற்றங்களில் விக்னேஷ் குரல் மேல்ஸ்தாயிக் கோர்வைகளை அடுக்கிக்கொண்டே போக உடன் பாடிவந்த அஸ்வத் தானும் அங்கு எட்டி நாராசமாக்காமல் சட்டென மத்திய ஸ்தாயி ஸ்வரங்களாய் இணைந்து பாடிய சமயோசிதம், எத்தனை ஒத்திகைபார்த்தாலும் கைவராத அபாரம். பலே.
அஸ்வத்-விக்னேஷ் இணையில் ஆலாபனைகளில் அபாரமான கற்பனைவளம் ஒருவருக்கு வாய்த்துள்ளது என்றால் மற்றொருவருக்கு லயம் பலம். எடுத்த பிரமாணம் இறுதிவரைப் பிசகாமல் அமர்த்தலான பிடிகளுடன் சாகித்திய சுத்தத்துடன் செவ்வியல் சௌக்கியமான சீரான பயணம் அடுத்தவரது. செம்மங்குடி அரியக்குடி என இரண்டு உயர்வான இசைவழிகள் தத்தமது பலங்கள் பிறழாமல் தொடர்ந்து மேடையில் ஒத்திசைக்கும் என்கையில் ரசிகர்களுக்குச் செல்வத்துள் செல்வம் செவிச்செல்வமே.
பொன்னையா இயற்றிய தெலுங்கு மொழி ‘சாடிலேனி குருகுஹமூர்த்தி’ (பூர்விகல்யாணி ராகம்) கர்பபுரிவாசர் இயற்றிய ‘கமலாம்பனா’ (கானடா ராகம்) என வழக்கமாகக் கேட்கப்படாதக் கிருதிகள் தேர்வும் நன்று. பிருந்தாவன சாரங்கா ராகத்தில் ‘சௌந்தரராஜம்’ கிருதிக்கு இவர் வழங்கிய நிதானமான வடிவம் முன்னொரு நாள் இதே அரங்கில் விக்னேஷ் ஈஷ்வர் (நன்றாகவே) வழங்கிய வடிவத்தைக் காட்டிலும் இதமான கூடுதல் நியாயம் செய்தது என்பேன்.
தியாகராஜரின் ‘துளசிவில்வ’ கிருதிக்கு முன்னால் கேதாரகௌளை ராகத்தில் நிதானமாகத் தொடங்கி ராக உருவம் முழுமையாக வெளிப்படும் சஞ்சாரங்களில் விரித்து எம்.எஸ். சுப்புலட்சுமி பாணி மேல்ஸ்தாயி உருட்டல் சங்கதிகள் தெறிக்க நிறைவான ஆலாபனையை வழங்கினார். இதே ராகம் கிருதி என முன்னொரு நாள் இதே அரங்கில் பாடிய நிஷா ராஜகோபாலுடன் ஒப்பிடுகையில் காயத்திரியின் ஆலாபனை அதிக விரிவும் முழுமையும் கொண்டது எனலாம். ஆனால் கிருதியோ முழுக்கச்சேரியோ, நிஷாவிடம் அமையும் அவகாச விகிதங்கள் காயத்திரியிடம் தேவைப்படுகிறது. ஆலாபனை நிரவல் ஸ்வரகல்பனை என அனைத்து அங்கங்களையும் காயத்திரி விளம்பகாலத்தில் ஓரிரு நிமிடங்கள் (ஆவர்த்தங்கள்) முன்னரே முடித்துக்கொள்ளலாமோ.
அன்று பாடிய காயத்திரி உட்பட குரலாகட்டும் வாத்தியமாகட்டும் சீசன் முழுவதும் பல பெண் கலைஞர்களுக்கும், தன்பாட்டுக்கு குறுக்குசால் ஓட்டி இடையூறுகள் செய்யாமல், கிருதிச் சொல் பாங்காய் மிருதங்கம் வாசித்துவரும் ஜே. வைத்தியநாதனுக்குத் தனி சபாஷ்.
டி.ஆர்.சுப்பிரமணியம் டி.என்.சேஷகோபாலன் என இரண்டு பரிசோதனைப் பாங்கான அபாரமான இசைவழிகளின் சங்கமிப்பில் கற்றுத்தேறியவர் சிலரே. அகடெமியில் காலைக் கச்சேரி வழங்கிய டில்லி முத்துகுமார் அதிலொருவர். இதனால் ‘சாமோதம்’ என டி.ஆர்.எஸ். பாணியில் கிருதியும் ‘பக்தருக்கு சஹானா’ எனத் தொடங்கும் டி.என்.எஸ்.ஸின் பிரபலமான பல்லவியும் ஒரே கச்சேரியில் அடியேனால் கேட்டு ரசிக்க முடிந்தது. இவை இரண்டிற்கு முன்னாலும் சுத்ததன்யாசி சஹானா ராக ஆலாபனைகள், கல்யாணி ராகக் கிருதி (எந்துதோ நீமனஸி) ஆலாபனை அனைத்திலும் முத்துகுமார் பிரகாசித்தார். நிரவல் தானம் ஸ்வரங்கள் என்கையில் கற்பனை ஓட்டத்திற்கும் குரலில் அவற்றின் தொடர் வெளிப்பாட்டிற்கும் அவசியமான இணைப்பு அவ்வப்போது சீர்கெட்டுத் தடுமாறுவது சிற்றிடர். வந்து கேட்பாரில்லையோ என ஹிந்தோளம் சாரங்கா பிலஹரி ராகங்களில் அமைந்த ஊத்துக்காட்டாரின் பாடலுடன் முடித்துக்கொண்டார். உயர்வான இசை.
இக்கச்சேரிக்குப் பின்னர் அகடெமி கேண்டினில் மதியவுணவு வரிசை என்னை ஓரங்கட்டிவிட மீண்டும் அரங்கினுள் நுழைந்து வளரும் கலைஞர் சாய் விக்னேஷின் நண்பகல் கச்சேரியில் அருமையான சங்கராபரணம் ஆலாபனையைக் கேட்டு ரசித்தேன். செவிக்குணவில்லாத போதே பசி.
ஆனந்தபைரவி லலிதா துவிஜாவந்தி விஜயஶ்ரீ என அடுத்து வந்த ராகங்களின் வயலின் வாத்தியப் பாங்கான ஶ்ரீராம்குமாரின் தேர்வுகள் தெளிவென்றால், காபி ராகத்தில் தொடங்கிய ஆலாபனை ஶ்ரீராகம் கேதாரகௌளை சாமா லலிதா எனத் ‘தான’ங்களில் விரித்தது ஜோர். திளைத்திருந்த ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்றார்போல் ‘இந்த சௌக்கிய மணினே’ என தியாகராஜரின் கிருதியை அடுத்து வழங்கியது முத்தாய்ப்பு. நமது மரபிசைப் பரப்பை செவ்வியல் குலைவுகள் ஏதுமின்றி அயல்நாட்டு வயலின் வாத்தியத்தில் கௌரவமாகவும் மதுரமாகவும் சஞ்சரிக்க முடியும் என்பதை ஶ்ரீராம்குமார் நிருபித்தார்.
கணகணவெனக் கச்சேரியைத் தொடங்கிய மிருதங்க வித்வான் திருச்சி சங்கரன் மூச்சுத் திணறல் அதிகரித்துப் பங்கெடுக்க முடியாமல் விலகிக்கொள்ள, கூட்டம் கணம் திகைக்க, கஞ்சீரா வாசித்திருந்த கே.எஸ். கோபாலகிருஷ்ணன் சட்டென தான் மிருதங்கத்திற்கு மாறிக்கொள்ள, நல்லிசை தொடர்ந்தது. தனி ஆவர்த்தனத்திற்கு அப்ளாஸ் முடிந்ததும் கே.எஸ்.ஜி. இரண்டாண்டுகளாய் மிருதங்கத்தை வாசித்திருக்கவில்லை என்றார். நம்பமுடியவில்லை என்றது அடுத்த சுற்று அப்ளாஸ்.
இலவசக் கச்சேரியில், நிரம்பிய அரங்கத்தாரிடம் தன் உடல் நலக்குறைவிற்கு மூச்சுத் திணறலுடன் சங்கரன் மன்னிப்புக் கோரிய அர்ப்பணிப்பு அசாத்தியம் என்றால் கோபாலகிருஷ்ணனின் பலபக்கவாத்தியத் திறன் அபாரம். கலை அநாதி; தன் போக்கில் தொடரும் என்பதை இந்த மார்கழி இசை விழாவிலும் மீண்டுமொருமுறை நிருபித்துக்கொண்டது.
தளத்தில் வாசிக்க →
மார்கழி இசை விழா 2025-2026 - வாரம் 3
[இதன் சுருக்கமான வடிவம் தினமலர் நாளிதழில்<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg> வெளிவந்துள்ளது.]
மைலாபூர் சுந்தரேசன் தெருவில் வி. வி. எஸ். முராரி தன் தந்தை பெயரில் நடத்திவரும் ‘விவிஎஸ் பௌண்டேஷன்’ அறக்கட்டளையின் ‘ஏகாந்த வரிசை’ ஒன்றரை மணிநேரக் கச்சேரிகள் காலை ஆறு மணிக்கே தொடங்கினாலும், சிறு ஆஞ்சநேயர் கோயில் வளாகம் அவ்வப்போது நிரம்பிக் களைகட்டுவது முடிவில் விநியோகிக்கப்படும் சுவையான பொங்கல் பிரசாதத்தால் அல்ல. தன் பங்கிற்கு முராரியே வழங்கிய வயலின் கச்சேரி (கமாஸ் ராக சுஜன ஜீவனா கிருதி, ஆனந்த பைரவி, வாசஸ்பதி ஆலாபனைகள்) சுநாத இதம் என்றால் அடுத்தொரு நாள் இளம் கலைஞர் சுருதி சாகர் வழங்கிய குழலிசை பிரமாதம்.
தோடி ராக வர்ணத்தில் தொடங்கி சாரங்கா யதுகுலகாம்போதி கரஹரபிரியா கானடா என எடுத்துக்கொண்ட ராகங்கள் அனைத்திலும் சிறு பெரு ஆலாபனைகளாகட்டும் சார்ந்த கிருதிகளின் சொல் பாங்கான வாசிப்புத் தன்மையாகட்டும், நிரவல் ஸ்வரகல்பனைகளில் வெளிப்படுத்தும் நிதானம் கற்பனை வளம் என சுருதி சாகர் நம் செவ்வியல் இசையின் வருங்கால குழல் வாத்திய நட்சத்திரம் என்பதை உறுதி செய்தார். அம்ருதவாஹினி (ஶ்ரீராமபாதமா கிருதி) ஸ்வரகல்பனையை மின்னல் தெறித்தார் போல பிருக்கா சங்கதிகளுடன் முடித்தது சிலிர்ப்பு.
ஶ்ரீனிவாஸப் பெருமாள் கோயில் திறந்த வளாகத்தில் ‘விவிஎஸ் பௌண்டேஷன்’ நடத்தி வந்த ‘மங்கல இசை விழா’ காலைக் கச்சேரிகளின் நிறைவாக அய்யம்பேட்டை கேசவராஜ் நாகஸ்வாரம் வாசித்தார். தென்னம்பாக்கம் விக்னேஷ் உடன் வாசித்தார். ஶ்ரீரஞ்சனி ராகத்தில் தியாகராஜரின் ‘புரோசேவாரெவரே’ கிருதிக்கு அடுத்து சாவேரி ராகத்தில் பளிச் எடுப்புடன் பிசிறுகளற்ற வாக்கிய சஞ்சாரங்களுடனான அருமையான ஆலாபனை செய்தார். தொடர்ந்து தஞ்சை ஜில்லா விழாக் கச்சேரிகளில் என்றும் பிரசித்தமான ‘பாவயாமி ரகுராமம்’ கிருதியை வாசிக்க, எனது பால்ய மகிழ்நாட்களின் நினைவுகளோடு வெகுவாய் ரசித்தேன். இடும்பவனம் மணிகண்டனும் பணப்பாக்கம் தமிழ்ச்செல்வனும் நல்ல தவில் துணை வழங்கினார்கள்.
சம்ஸ்க்ருத கல்லூரியில் பாட்டியும் மூத்த வீணையிசைக் கலைஞருமான ஆர். எஸ். ஜெயலட்சுமியுடன் இணைந்து சாருலதா அளித்த மற்றொரு கச்சேரியில் கல்யாணி ராக ஆலாபனை (கிருதி கமலாம்பா பஜரே) ஒருவரது கம்பீரம் என்றால் மற்றொருவரது காருண்யம். கல்யாணியில்தான் எத்தனை பரிமாணங்கள்.
தனிக்கச்சேரிகளில் இயல்பாய் எழுந்துவிடக்கூடிய மனக்கவலைத் தடுமாற்றங்களைக் குறைத்துப் படைப்பூக்க இசையங்கங்கள் மேடையில் பரிமளிக்கும் வண்ணம் முனைப்புடன் உழைக்கையில் சாருலதாவிற்கு வீணையிசையில் முன்னணி இடம் கைகூடிவிடும் என உறுதிபடச் சொல்லலாம்.
இவ்வகை உயரிசை விருந்து சராசரி சீஸன் கூட்டத்தினரின் குவிப்புலத்திற்கு வெளியே அன்றாடம் இலவசமாக வழங்கப்பட்டு உதாசினமாகிச் செல்வது நாளுக்கு எண்பது முதல் நூறு கச்சேரிகள் நடந்தேறும் மார்கழி விழாவின் தவிர்க்கவியலாத் துயரம்.
பத்தாண்டுகளுக்கு முன்னர்கூட அரைமணியாவது பல ராகங்களில் தனி அங்கமாய் விரித்துப் பாடப்பட்ட ‘விருத்தம்’ அநேகமாய் இன்றைய கச்சேரிகளில் வழங்கொழிக்கப்பட்டுவிட்டது. சிலர் மட்டும் கிருதிக்கு முன்னர் (பெண்கள் எம்.எஸ். பாணியில் கச்சேரி தொடக்கத்தில்) அதே ராகத்தில் ஒரு சுலோகம் பாசுரம் எனச் சிறு நியாயம் செய்கிறார்கள்.
வித்திய பாரதி அரங்கில் ‘ஜலஜாக்ஷி’ ஹம்ஸத்வனி ராக வர்ணம், தோடி ராகத்தில் அன்றைய திருப்பாவை எனத் தொடங்கிய சிக்கில் குருசரண் ‘வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்’ என்று பிலஹரியில் விருத்தமாகப் பாடித் தொடர்ந்து கோடீஸ்வரரின் ‘சித்தி விநாயகனே’ கிருதியைப் பாடினார்.
அன்று மிருதங்கம் வாசித்த பத்ரி சதீஷ்குமாரிடம் ஐந்தாண்டுகள் முன்னால் கற்றுக்கொண்ட கோர்வையை ருத்ரபிரியா ராக (ருத்ரகோப ஜாத எனும் தீக்ஷதர்) கிருதியின் ஸ்வரகல்பனை முடிவில் மேல்காலத்தில் வழங்கி அசத்தினார்.
தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதிகளின் ஐந்து ராகங்களையே விரித்து ஆலாபனைகளும் ‘தான’மும் செய்து, மாணிக்கம் மரகதம் மௌத்திகம் நீலம் வஜ்ரம் (வைரம்) என்று ஐந்து ரத்தினங்களைக் குறிப்பிட்டு ‘தியாகராஜாய நமஸ்தே’ என அமைந்த பல்லவியை மிஸ்ர திரிபுடை தாளத்தில் ஐந்து ராகங்களிலும் சிபல சுற்றுகள் நிரவல் பாடி வழங்கியது இக்கச்சேரியின் உயரொளி.
வேறு மேடைகளில் வேறுவிதமாகச் செயல்படும் அதே பக்கவாத்தியக் கலைஞர்கள் செவ்வியல் வழுவாத படைப்பூக்கத்துடன் பாடகர் முன்னடத்துகையில் தாங்களும் அவ்வாறே என ஒத்திசைந்தெழுவதை குருசரணின் கச்சேரியில் காண முடிந்தது. பலே.
சம்ஸ்கிருத கல்லூரியில் மல்லாடி சூரிபாபு கச்சேரி மூத்த தலைமுறையினரின் மற்றொரு முத்தாய்ப்பு. அசாவேரி வர்ணத்தில் தொடங்கியவர் ‘ஏ பாபமு சேத்தி ரா ராமா’ என தியாகையரின் கிருதியை அடானாவில் இறைஞ்சும் உணர்வு வெளிப்படப் பாடினார். உடன் வாசித்த இளவயது நிஷாந்த் சந்திரன் மிருதங்கம் ஜோர். வயலின் இன்னமும் உழைக்க வேண்டும்.
சூரிபாபு ‘சுஜன ஜீவனா ராமா’ கிருதிக்கு முன்னால் செய்த கமாஸ் ஆலாபனை சீசனில் அரிதாகவே கிடைக்கும் என்றால் ‘ஹிமகிரி குமாரி’ கிருதிக்கு முன்னால் செய்த ரகுபிரியா ராக ஆலாபனை வாழ்நாளுக்கே அரிதானது எனலாம். ராக ஸ்வரங்களில் தவறின்றி ஏறியிறங்கிவிட்டேன் என ஆலாபனை செய்பவர்கள், ராகத்திற்கான தனிப்பட்ட உருவம் வருமாறு சம்பூர்ண மேள ராகங்களை எவ்வாறு ஆலாபனை செய்ய வேண்டும் என்று இவரிடம் பாலபாடம் பயிலவேண்டும்.
இரண்டு ஆயிற்றே என்கையில் அடுத்த ஆலாபனை முகாரி ராகத்தில். இதற்கான ‘ஏமனிதே நீ மேகி’ கிருதியே முக்கியமான உருப்படி. உடன் பாடியவருடன் ஒப்பிட்டுக் கேட்கையில், இவ்வயதிலும் சூரிபாபு குரலில் வெளிப்படும் பிருக்கா கார்வை ஸ்புரிதங்களை வியந்து ரசிக்க முடிந்தது. இசைஞானத்திற்கு வயதுண்டோ.
[இதன் சுருக்கமான வடிவம் தினமலர் நாளிதழில்<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg> வெளிவந்துள்ளது.]
தளத்தில் வாசிக்க →
மார்கழி இசை விழா 2025-2026 - வாரம் 2
[இதன் சுருக்கமான வடிவம் தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது.]
மாலைக் கச்சேரியில் தீக்ஷதர், கோபாலகிருஷ்ண பாரதி, மைசூர் வாசுதேவாச்சார், பொன்னையா பிள்ளை (நீலாம்பரி ராகத்தில் தெலுங்குக் கிருதி), பாபநாசம் சிவன், தியாகையர் என்று பல்வகை இசைக் கர்த்தாக்களின் (பல்வேறு ராகக்) கிருதிகளைக் கையாண்டு, அபங் வகையில் பிம்ப்ளாஸ் ராகத்தில் பானுதாஸரின் மராத்திப் பாடலுக்குப் பின்னர் துளசிதாசரின் ஹனுமான் சாலிஸாவில் முடித்துக்கொண்டார்.
ஆலாபனைக்கு எடுத்துக்கொண்ட சிம்மேந்திர மத்தியமம் (நின்னே நம்மித்தி கிருதி) கேதாரகௌளை (துளசி வில்வ கிருதி) ராகங்களில் லகுவான ஸ்வர ஏற்ற இறக்கங்களுடனும் சஞ்சாரங்களில் குரல் பிசிறல்களோ கற்பனைக் குறைவோ இன்றி அருமையான இசையை வழங்கினார். கேதாரகௌளையில் குறிப்பாக எம்.எஸ். சுப்புலட்சுமியின் தனிப்பட்ட தரஸ்தாயி தொடக்கத்தை (கிருதி சரணத்தில் பரமாநந்தமுதோ எனும் இடத்தில் இசைத்தொலிக்கும் சஞ்சாரங்கள்) சுவீகரித்து விரித்தது ரசிக்கத்தக்க அனுபவம்.
மறுநாள் காலை ஆபேரி ஷண்முகப்பிரியா ராகங்களில் செய்த ஆலாபனைகளில் நல்ல தேர்ச்சி. நிரவல் ஸ்வரங்களில் சீரான வளமான கற்பனை. நிஷாவிடம் ஓங்கி ஒலிக்கையிலும் குரலில் மதுரமான செவ்வியல் சௌக்கியமான இசையே வெளிப்படுவது நிறைவு.
*Sumitra Vasudev, Padma Shankar (violin) and Arun Prakash (mridangam)*சுமித்ரா வாசுதேவ் ராக சுதா அரங்கில் வழங்கிய மாலைக் கச்சேரி செவ்வியல் இசையடர்வு மிக்க இதமான அனுபவம். பைரவி ராக ‘விரிபோணி’ வர்ணத்தில் தொடங்கினார். வழக்கமான இரண்டைக் கடந்த மூன்றாவது சிட்டை ஸ்வரக் கட்டாகட்டும் அரிதாகவே மேடையில் வழங்கப்படும் சரணங்கள் ஆகட்டும் தனது பாண்டித்தியமான பாடாந்தரத்தைத் தொடக்கத்திலேயே வெளிப்படுத்தினார். பாபநாசம் சிவனின் ‘கந்தா வந்தருள்’ கிருதியிலும் அதற்கான ஆலாபனையிலும் ஆபேரி ராகத்தை ‘சுத்த தைவதம்’ கொண்ட தொன்மையான வடிவில் வழங்கியதிலும் இப்பாண்டித்தியம் வெளிப்பட்டது.
கீர்வாணி ராகத்தில் (கீரவாணி இல்லை, இது கவாம்போதி எனும் மேளகர்த்தா ராகம்) தீக்ஷதரின் கிருதிக்குப் பிறகு சங்கராபரணம் ராகம் விரிவான ஆலாபனை. சங்கராச்சார்யம் எனத் தொடங்கும் கிருதியை ஆதி தாளம் இரண்டு களை சவுக்கத்தில் விரித்து நிரவல் ஸ்வரகல்பனைகள் செய்து முடித்தார். அருண் பிரகாஷ் தனி ஆவர்த்தனத்தைக் கணக்குகளுடனேயே கண்ட நடையில் தொடங்கி அசத்தினார். வழக்கம்போல மருதாணி அப்பிய விரல்களின் மென்மையான வாசிப்பைக் கச்சேரி முழுவதும் வெளிப்படுத்தினார்.
சுமித்ராவின் குரல் சுவாசக் கட்டுப்பாடுகள் அபாரம். ஆலாபனை நிரவல் ஸ்வரகல்பனை என்று அனைத்து அங்கங்களும் கூச்சலோ கீச்சுக்குரலோ இன்றி மதுரமாகவே வெளிப்படுகின்றன. அகாரங்களில் அளவுக்கதிகமான திளைத்தல்களோ ராக ஸ்வரங்களில் ஏறி இறங்கும் கற்பனை வறட்சிப் பாசாங்குகளோ கிடையாது.
சுமித்திராவிடம் முழுமைபெற்ற இசைவடிவம் பிராகசிப்பதை உணரமுடிகிறது. அவர் கலை பாரம்பர்யச் செவ்வியல் இசைவடிவம் என்றால், குலையாமல் அதைப் படைப்பூக்கத்துடன் வெளிப்படுத்தும் அவர் திறன் வேதவல்லியின் பாடாந்திரத்தில் பத்திரமாகப் பொதிந்துள்ளது. ரசிகர்கள் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நல்லிசை விருந்தை இவரிடம் எதிர்பார்க்கலாம்.
அகடெமி காலைக் கச்சேரியில் ரித்விக் ராஜா திக்ஷதரின் சதுர்தஸ ராகமாலிகாவில் (பதிநான்கு ராகங்களில்) அமைந்த ‘ஶ்ரீ விஸ்வநாதம் பஜரே’ கிருதியை நிதானமாகவும் நிறைவாகவும் பாடினார். கிருதிக்கு முன்னர் பதினான்கு ராகங்களிலும் கச்சிதமாக ஆலாபனை வழங்கியது அசத்தல். முனைப்போடு உழைத்தால் செவ்வியல் வடிவம் குலையாமல் நம் இசையினுள் எத்தனை புதுமைகளைச் செய்யலாம் என்பதற்கு ரித்விக்கின் இம்முயற்சி சான்று. பலே.
பந்துவராளி ராகம் தானத்திற்கு அடுத்து ‘காணக் கிடைக்குமோ சபேசன் தரிசனம் கண்டால் கலி தீருமே’ என்று பல்லவியை விரித்து முடிக்கும் முன்னர் நேரம் தீர்ந்துவிட்டது.
நாட்டை பைரவி ராகங்களில் கிருதிகளுக்கு அடுத்து பூர்ணசந்திரிகா ராகத்தில் கச்சிதமான சிறிய ஆலாபனை. அவரே ‘சின்ன ராகத்திற்கு சின்ன ஆலாபனை தானம் பல்லவி’ என்று முன்மொழிந்து பல்லவியாக ‘தெலிசிராம சிந்தனதோ நாமமோ சேயவே ஓ மனஸா’ என்பதையே திஸ்ர திரிபுடை தாளத்தில் பாடி ‘ராகம் தானம் பல்லவி’ அங்கத்தைக் கச்சேரியின் முற்பகுதியில் முடித்தார். தொடர்ந்த சிறிய தனி ஆவர்த்தனத்திற்குப் பிறகு தியாகையரின் அதே ‘தெலிசி ராம’ கிருதியை ஆதி தாளத்தில் தனி உருப்படியாக முழுவதுமாகப் பாடினார். அவருக்கு அன்று தோன்றிய புதுமை.
ராமகிருஷ்ணன் மூர்த்திக்குச் சபையோரின் நாடித் துடிப்பு புரிந்திருக்கிறது. அப்ளாஸுகளுக்கேற்ப தன் கச்சேரியை வடிவமைத்துக்கொள்வதில் தவறேதுமில்லை. மெயின் உருப்படி (ஓ ரங்கசாயி) நிரவலில் துரித காலம் உச்சங்கள் ஏதுமின்றி ஸ்வரகல்பனைக்குள் புகுவது, பல்லவியில் நிரவலோ திரிகாலங்களோ ஸ்வரங்களோ ராகமாலிகையோ இன்றி அவசரமாய் முடித்துக்கொள்வது, ஒரே ராகத்தில் (காம்போதி) மட்டும் பெரிய ஆலாபனை, மருந்திற்கு அடுத்ததில் (பூர்ணசந்திரிகா) சில நிமிடங்கள், அதற்கும் குறைவான நிமிடத் தானம், இப்படிப் படைப்பூக்க அங்கங்கள் பலவற்றையும் சுருக்கி வழங்குவது குரல் போனவர்களும் கற்பனை வளமற்றவர்களும் செய்வது. இவர் எதற்கு இவ்வயதிலேயே சுவீகரிக்க வேண்டும்?
காலைக் கச்சேரியில் வஸந்தா ராகத்தில் நிரவல் அரை ஆவர்த்த ஸ்வரங்கள் அசத்தல் என்றால் சிந்தாமணி கேதாரம் ஶ்ரீரஞ்சனி போன்ற ராகங்களின் தேர்வு நல்ல ரசனை. இதில் காம்போதி ராகத்தில் ‘காணக் கண்கோடி வேண்டும்’ என்கிற சிவனின் கிருதி மெயின் உருப்படி.
அடுத்த மாலை வித்திய பாரதி கச்சேரியில் மெயின் உருப்படி சங்கராபரணம். சரோஜதளநேத்ரி கிருதியில் ‘சாமகானவிநோதினி’ என்கிற இடத்தில் நிரவல் ஸ்வரங்கள். வயலின் கமலகிரண் வாங்கி வாசிப்பதில் தேர்ச்சியைக் காட்டினார். அனுபவஸ்தரான கே.வி.கோபாலகிருஷ்ணன் கஞ்சீராவில் கச்சிதமான துணை வழங்கினார்.
இந்தக் கச்சேரியின் உயரொளி என்றால் அது தேவகாந்தாரி ராக ஆலாபனை. ஆரபியும் தேவகாந்தாரியும் ஆண்-பெண் இரட்டையர் போன்ற ராகங்கள். அஸ்வத்தின் கற்பனைக் கட்டமைப்பில் தேவகாந்தாரி ராக ஆலாபனை ஒரு இடத்திலும் ஆரபி எனத் தோன்றாத வகையில் அமைந்தது சிறப்பு.
அஸ்வத் நாராயணனின் கச்சேரியில் விரிவுரையோ எனும் வகையான பேச்சுக்களோ, பாட்டின் பாதி வரிக்கிடையே அநாவசிய நீள் விளக்கங்களோ கிடையாது. இசையே மேலோங்கிப் பேசுகிறது. கிளரொளியிளமை கெடுவதன்முன்னம் கேட்டு ரசிப்போம் இத்தகைய செவ்வியலிசையை.
ராக சுதா அரங்கில் மூத்த கலைஞர் சுகுணா வரதாசாரி வி. பரத் குமாருடன் இணைந்து பாடிய கச்சேரியில் பாபநாசம் சிவனின் சம்ஸ்க்ருத மொழிக் கிருதிகள் பலவற்றை வழங்கினார். நாட்டை ராகத்தில் ‘தயாநிதே ஜானகிபதே’ எனத் தொடங்கிய கிருதிக்கு அடுத்து தோடி ராகத்தில் ‘தபசரணம் மம சரணம்’ என்கிற கிருதியை அதே வரியில் நிரவல் செய்து வழங்கினார்.
ஆலாபனைகளுக்கு சாமா கல்யாணி கரஹரபிரியா ராகங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. முசிறி சுப்பிரமணியம் ரங்கநாயகி பார்த்தசாரதி ஆகியோரிடம் பயின்றிருக்கும் சுகுணா வரதாசாரி தனது தில்லைஸ்தானப் பாடாந்திரப் பக்குவத்தை நிலைநாட்டினார். உடன் பாடிய பரத் குமார் அனைத்து வாய்ப்புகளிலும் அபாரமான குரல் கட்டுப்பாட்டையும் கற்பனை வளத்தையும் வெளிப்படுத்தினார். நிரவல்களை இவ்வளவு நிதானமாகவும் சலிப்பூட்டாமலும் செய்யமுடியுமா என வியக்கையில் சௌக்கிய இசை உற்சாகமான மேல்காலங்களையும் சில ஆவர்த்தங்கள் தொட்டுக்காட்டியது.
உடன் வயலின் வாசித்தவர் இவ்வாண்டு சங்கீதக் கலாநிதி ஆர். கே. ஶ்ரீராம்குமார். பாட்டு மேம்பாட்டு என்றால் வயலின் தாலாட்டு. அருண் பிரகாஷ் மிருதங்கத்தில் கச்சேரி முழுவதும் அனுமானித்து அணைத்து வாசித்தார். தனி ஆவர்த்தனத்தில் ஒருவரும் எழுந்து செல்லவில்லை. தாளம் பலமாய் போடப்பட்டது.
புன்னாகவராளியில் ‘சிவகங்கா நகர நிவாசிநி’, கிருஷ்ணர் மேல் பெஹாக் ராக தில்லானா பாடி, ஶ்ரீ ராகத்தில் ‘ராமம் பஜதே’ எனக் கச்சேரியை முடித்துக்கொண்டார்.
சம்ஸ்கிருத கல்லூரியில் மல்லாடி சூரிபாபு கச்சேரி மூத்த தலைமுறையினரின் மற்றொரு முத்தாய்ப்பு. அசாவேரி வர்ணத்தில் தொடங்கியவர் ‘ஏ பாபமு சேத்தி ரா ராமா’ என தியாகையரின் கிருதியை அடானாவில் இறைஞ்சும் உணர்வு வெளிப்படப் பாடினார். உடன் வாசித்த இளவயது நிஷாந்த் சந்திரன் மிருதங்கம் ஜோர். வயலின் இன்னமும் உழைக்க வேண்டும்.
சூரிபாபு ‘சுஜன ஜீவனா ராமா’ கிருதிக்கு முன்னால் செய்த கமாஸ் ஆலாபனை சீசனில் அரிதாகவே கிடைக்கும் என்றால் ‘ஹிமகிரி குமாரி’ கிருதிக்கு முன்னால் செய்த ரகுபிரியா ராக ஆலாபனை வாழ்நாளுக்கே அரிதானது எனலாம். ராக ஸ்வரங்களில் தவறின்றி ஏறியிறங்கிவிட்டேன் என ஆலாபனை செய்பவர்கள், ராகத்திற்கான தனிப்பட்ட உருவம் வருமாறு சம்பூர்ண மேள ராகங்களை எவ்வாறு ஆலாபனை செய்ய வேண்டும் என்று இவரிடம் பாலபாடம் பயிலவேண்டும்.
இரண்டு ஆயிற்றே என்கையில் அடுத்த ஆலாபனை முகாரி ராகத்தில். இதற்கான ஏமனிதே நீ மேகி கிருதியே முக்கியமான உருப்படி. இவ்வயதிலும் சூரிபாபு குரலில் வெளிப்படும் பிருக்கா கார்வை முத்தாய்ப்புகளை உடன் பாடியவருடன் உடனடியாக ஒப்பிட்டுக் கேட்கையில் வியந்து ரசிக்க முடிந்தது. இசைஞானத்திற்கு வயதுண்டோ.
[இதன் சுருக்கமான வடிவம் தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது.]
தளத்தில் வாசிக்க →
மார்கழி இசை விழா 2025-2026 - வாரம் 2 - தினமலர் வடிவம்
மார்கழி இசை விழா 2025-2026 இரண்டாவது வாரத்திற்கான என்னுடைய விமர்சனங்கள் சிலவற்றின் தொகுப்பு இன்று சென்னை தினமலர் நாளிதழில்<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg> சுருக்கமான வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இணையத்திலும் வாசிக்கலாம்<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg>.
வாசிக்கும் அவகாசம் இருப்போருக்கான இத்தொகுப்பின் நீள்-வடிவம் தனிப்பதிவாக வழங்கப்பட்டுள்ளது.
சென்ற வாரம் நேர்ந்த கலந்தாலோசிக்காத கொந்தல் பிரசுரத்திற்கு தினமலர் ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு மன்னிப்புத் தெரிவித்து உறுதியளித்துத் தொடர்ந்து எழுதச் சொன்னார்கள்.
பிரசுர இட நெருக்கடிக் கட்டாயத்தில் (இது எழுத்தூடகங்களில் அன்றாட பாடு) அனுப்பிய நீள்-வடிவத்தை முதல் நாளே என்னுடன் ஆலோசித்துச் சுருக்கி, உள்ளடக்கத்திற்குப் பங்கம் வராமல் இன்று பிரசுரம் செய்திருக்கிறார்கள்.
பாராட்டுகள். நன்றி.
அருண் நரசிம்மன்.
தளத்தில் வாசிக்க →
Enlightened in Eight-Annas
The English version of my first set of short stories, collected in the book titled Enlightened in Eight Annas, is now available in print form, published by Tamizhini. The Tamil version is already available for your reading pleasure.
As with my other Tamil books, this too would not be available in any of the book stores that you may frequent, be it in city space or cyber space. (Well, if the stars are aligned favourably for you, it could be ordered online from Udumalai Dot com.)
You could get a copy by contacting the publisher (Ph: +91-8667255103 | +91-9884225576 | Email: tamilinibooks AT gmail DOT com) or in Tamizhini stalls at the book fairs held throughout the year at various times in different districts of the state.
Else, send an email to me for getting your copy.
I welcome your thoughts and comments, after reading the book.
– Arunn Narasimhan
Content<svg width="18" height="18" viewBox="0 0 24 24" fill="none" stroke="currentColor" stroke-width="2" stroke-linecap="round" stroke-linejoin="round"><path d="M10 13a5 5 0 0 0 7.54.54l3-3a5 5 0 0 0-7.07-7.07l-1.72 1.71"></path><path d="M14 11a5 5 0 0 0-7.54-.54l-3 3a5 5 0 0 0 7.07 7.07l1.71-1.71"></path></svg>
1. Master Despise
2. Muthamma
3. Grandma’s Gift
4. Vision after the Sermon
5. Rama, who equals you?
6. Poached Potato
7. Unmusical Night
8. Deliverance
9. Enlightened in Eight-Annas
From the blurb (back wrapper content)<svg width="18" height="18" viewBox="0 0 24 24" fill="none" stroke="currentColor" stroke-width="2" stroke-linecap="round" stroke-linejoin="round"><path d="M10 13a5 5 0 0 0 7.54.54l3-3a5 5 0 0 0-7.07-7.07l-1.72 1.71"></path><path d="M14 11a5 5 0 0 0-7.54-.54l-3 3a5 5 0 0 0 7.07 7.07l1.71-1.71"></path></svg>
A short story is not just an event, anecdote, slice of life or reminiscence and associated lessons. Like a novel, it should necessarily provide wholesome experience, feelings and a collective meaning that arise from it. What is told as a short story, can’t or needn’t be presented in a shorter or longer form.
This collection contains nine stories. Beginning with one that narrates the happenings over two days in Portugal in more than twenty pages, it ends with one that narrates events in Srirangam and the USA, happened over a period of twenty years, in four to five pages. Set in the background of an unattended Ilaiyaraaja music concert, of an attended Carnatic Classical music concert, of Chennai, of Srirangam, the collection also includes one set in Pont-Aven, a town in France that enacts a historical fiction in 1888, narrating the events that made Paul Gaugin paint his Vision after the Sermon. In between, there is also a ghost story, without the appearance of a ghost.
தளத்தில் வாசிக்க →
2025-2026 Margazhi Music Season - Sumitra Vasudev at NI
The famous vIribhOni varnam of Pachimiriam Adiappaiyer was rendered in single speed (one kalam) but she delivered the usually skipped third chittai swarams along with few more charanams.
A short sketch of the rAgA was followed by thulasidhalamulache SantOshamugha of tyAgarAjA. Of course, the elegant sangathi towards the end of the pallavi, the stamp of Vedavalli, was rendered with the same poise and melody. Neraval at the standard sarasiruga… line was well done embellished with tight brikkas throughout without making a show of the effort. Violin did a good suporting foil for both the neraval and the swarams that followed.
The next krithi, guruguha dhanyam set in misra jhampai in the rAgA balahamsa is a rarity rendered well.
This was followed by the first elaborate AlApanai in the rAgA AbhEri however delivered with the sudha dhaivatham instead of the chathusruthi one that had substituted in the last decades. The AlApanai was well built, classical and delivered without any cheap or ‘konjal’ phrases.
While listening to the elaboration and later during the swarams, I felt this is not an issue that could intrude into the listening pleasure of the rAgA. AbhEri can as well be shown, identified and exemplified - as the artist did - even without invoking any dhaivatham but using characeteristic phrases comprising the other notes.
The song rendered was kandhA vandharul composed by Papanasam Sivan. Radha Jayalakshmi has sung a version of this song. The same AbhEri rAgA structure (as presented here by Sumitra) was used by NC Vasanthakokilam to deliver ‘pithan endralum’ that is available on YouTube for our listening pleasure.
The song beginning with ‘Indha vibhIshanan mIdhu namaKu…’ set in khamAs was presented, followed by ‘namO namastE gIrvAni’ composed by Muthuswami Dikshitar. The rAgA gIrvAni is the 43rd mElakarthA, also known as ghavAmbOdhi or bhavapriyA.
After these two nice fillers, rAga AlApanai of sankarAbharanam, for the main piece began. The AlApanai developed straight in madhya sthAyi and flowed nicely wihout any cheap phrases or gimmicks even during the thara sthAyi sancharams. Padma Shankar followed in violin with an elaboration very similar in style to that presented by Sumitra but for the last minute or two.
Sumitra has immaculate voice and breath control, keeping everything melodious, either during AlApanai or while doing neraval and swarams, the rendition of phrases (rather, particularly) in the upper registers is bereft of any harshness in tone; not a single shout or screech. And to boot, no indulgence in excessive akArams or scale tumbling calisthenics. The moment the imagination for the day ends, even the main AlApanai is brought to a close in about eight minutes. Well done.
The main song is ‘sankarAcharyam’ set in Adi tAlam (2 kalai). Neraval was rendered with attention to bring out the nuances of the lyrics and the rAgA phrases. No thigh-palming smashing climax nevertheless elegant and fulfilling. A long stretch of swarams connected to a goo thIrmAnam completed the vocal section and lead into the thani avarthanam.
Arun Prakash immdediately went into ‘kanakku’ in kanda nadai and as expected successfully brought everything into scope to claim a deserving round of applause. His accompaniment was as usal sensitive and soft, at times played as if with marudhAni coated fingers. his mridhangam caught the cold from the air conditioner and frequently needed sruthi alignment, even the checking of which he did with soft fingers. Perhaps he should bang the instrument a few more times for it not to rear its sruthi!
Listening to Sumitra live after a decade, it is heartening to observe she has developed into a well rounded classical package without any rough edges of uncertainty or lack of imagination. She knows her art, which remains firmly classical, and her place, which is ensconsed securely in the patantara of Smt. Vedavalli. What a rich live listening experience awaits the rasikas in the coming years.
Sumitra Vasudev, Padma Shankar (violin) and Arun Prakash (mridangam)
தளத்தில் வாசிக்க →
மார்கழி இசை விழா 2025-2026 - முதல் வாரம்
[ இந்தக் கட்டுரையை எழுதிக்கொடுத்த என்னுடைய பெயரின்றி (நல்ல வேளையாக?) தினமலர் கொத்துபரோட்டா வடிவத்திலும்<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg> வாசிக்க நேரலாம்.
மன்னித்துக்கொள்ளுங்கள்<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg>. ]
நாத இன்பத்தில் முனைவர் நந்திதா ரவி ரூபக தாளத்தில் வழங்கிய சாரங்கா ராக வர்ணத்தில் நமது மார்கழி இசை விழாவின் ரசிகானுபவம் தொடங்கியது. வேறு கச்சேரிகளில் பழகிய கல்யாணி (வனஜாக்ஷி) பைரவி (விரிபோணி) ராக வர்ணங்கள் கேட்டாலும் பார்த்தசாரதி ஸ்வாமி சபா பிற்பகல் கச்சேரியில் விவேக் மூழிக்குலம் வழங்கிய வீணை குப்பய்யரின் பெஹாக் ராக வர்ணம் இன்னொரு அரிதான தேர்வு.
வர்ணம் தவிர்த்து மாலா சந்திரசேகர் குழலிசையில் ‘ஶ்ரீமன்நாராயண’ என்று பௌளி ராகத்திலும், பந்துலராமா ‘யோசனா கமலலோசனா’ என்று தர்பார் ராகக் கிருதியிலும், திருமெஞ்ஞானம் ராமநாதன் (உடன் பாண்டமங்கலம் யுவராஜ்) நாகஸ்வரத்தில் கௌளையில் தீக்ஷதரின் ‘ஶ்ரீ மஹா கணபதி ரவதுமா’ என்றும் ஆதித்யநாராயணன் கௌளிபந்துவில் தியாகையரின் ‘தரதியகராதா’ என்றும் தங்கள் கச்சேரிகளைத் தொடங்கிக் கொண்டனர்.
அகடெமியில் பிற்பகல் கச்சேரி செய்த ஆதித்யநாராயணன் விரைவில் முன்னனியில் ஒரு சுற்று வரப்போகிறார். தோடியும் காம்போதியும் அமர்க்களமாக ஆலாபனை செய்தார். தியாகையரின் ‘எந்துகு தயராத’ (ரூபகம்) கிருதியையும் ‘ஆனந்த நடனம் ஆடினார் ததிமி ததிமி என கனகசபையில்’ என்கிற பல்லவியை திஸ்ர திரிபுடை தாளம் நாலு களை சவுக்கத்திலும் இரு மொழிகளின் உச்சரிப்பு நேர்த்தியோடு செம்மையாகப் பாடினார். பல்லவியில் அனுலோமம் திரிகாலம் செய்து நிரவலுக்கும் ராகமாலிகை ஸ்வரங்களுக்கும் (பௌளி குந்தலவராளி ராகங்களில்) அவகாசம் வைத்து நேரத்திற்குத் தனி-ஆவர்த்தனம் விட்டுக் கச்சேரியை நன்கு நிர்வகித்தார்.
குரல் கார்வைகள் விறுவிறு நிரவல் கட்டமைப்பின் விதம் தனக்கு அடுத்து வயலினை அமர்த்திக்கொள்வது கைகளை அபிநயித்து ஆட்டுவது என்று போய் குறித்த இடத்தில் சபாஷ் சொல்வது வரை ஆதித்யநாராயணன் பத்தாண்டுகளுக்கு முன்னரான டி.எம். கிருஷ்ணாவை அப்படியே நகல் எடுத்துள்ளார். வெற்றிகரமாக. இக்கச்சேரியின் கஞ்சீரா இளைஞன் சுநாத் அரூருக்கு இரட்டை சபாஷ்.
ஆதித்யா பல்லவிக்கு முன் செய்ததை விட அடுத்த நாள் நாத இன்பத்தில் மாலைக் கச்சேரியில் பிரசன்னா வெங்கட்ராமன் தியாகையரின் ‘எவரிமாட்ட’ கிருதிக்கு முன் செய்த காம்போதி ஆலாபனை பிரமாதம். செவ்வியல் தன்மையும் பாவமும் நிதானமான கட்டமைப்பும் கற்பனையும் இளகிய வளமான குரலோடு கூட்டி பிராச்சீன ராகத்திற்கு நியாயம் செய்தார். ஆனால் இவர் கச்சேரியின் உயரொளி என்றால் போகிற போக்கில் பாடிய சரசாங்கி ராக ‘ஜெயஜெய பத்பநாப’ கிருதியும் வீரவசந்தம் ராகத்தில் ‘ஏமனி பொகடுதுகுரா’ தியாகையர் கிருதியும் அவற்றிற்கான மதுரைமணிப் பாங்கான விறுவிறுப்பான ஸ்வரகல்பனைகளுமே.
இவ்வகை உயரிசை விருந்து சராசரி சீசன் கூட்டத்தினரின் குவிப்புலத்திற்கு வெளியே இலவசமாக வழங்கப்பட்டு உதாசினமாகிச் செல்வது மார்கழி விழாவின் தவிர்க்கவியலாத் துயரம்.
‘சேடஶ்ரீபாலகிருஷ்ண’ கிருதிக்கு முன் வந்த பிரசன்னாவின் ஆலாபனையை விட அகடெமி காலைக் கச்சேரியில் ராமநாதன் நாகஸ்வரத்தில் வாசித்த துவிஜாவந்தி ஆலாபனை அபாரம். சத்தான சாறு பிழிந்து பருகக் கொடுத்து சௌககாலத்தில் ‘அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்’ என்று கிருதியை இரட்டை நாயனங்களும் இணைந்து தொடங்குகையில் நொடிப்பொழுது மனத்திலெழும் ஆன்மீகச் சிலிர்ப்பு ஒரு கொடை. அதன் தாக்கம் கேண்டினில் ‘இளநீர் இட்லி’யைச் சுவைக்கும் வரை நீடித்தது.
முதல் வாரம் முடியும் முன்னரே மூன்று நான்கு கல்யாணி ஆலாபனைகள் ஆயிற்று (கல்யாணியில்தான் எத்தனை பரிமாணங்கள்!) தோடி காம்போதி-களும் முடித்து சங்கராபரணம் எங்கே என்கையில் மோஹனமும் கரஹரப்பிரியாவும் விஸ்தாரமான ஆலாபனைகளாகக் கேட்கக் கிடைத்தது ராக சுதா அரங்கில் எம்.ஏ. சுந்தரேசன் எம்.ஏ. அனந்தகிருஷ்ணன் இணைந்து வழங்கிய ‘பரூர் பாணி’ இரட்டை வயலின் கச்சேரியில். இலவசமாய் இவ்வகை ‘சக்கனி ராஜ மார்க’ங்கள் அழைக்கையில் சாக்கடைச் சந்துகளுக்குள் ஏன் ரசிகர்களாய் நாம் திண்டாடவேண்டும். மெயின் உருப்படி கிருதியில் தியாகையரும் அன்றே அங்கலாய்த்திருக்கிறார்.
வயலினில் சுந்தரேசன் ஆகட்டும் மற்றொரு நாள் வேரொரு அரங்கில் குழலிசையில் சிக்கில் மாலா சந்திரசேகர் ஆகட்டும் முந்தைய தலைமுறையினருக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட கச்சேரி நேரத்திற்குள் எடுத்துக்கொண்ட அனைத்து ராகங்களையும் கோடிகாட்டும் ஆலாபனைகளுக்கும் ஓரிரண்டில் கிருதி வரிகளில் விஸ்தாரமாக நிரவல் செய்வதற்கும் ஸ்வரகல்பனைக்கும் நிறைய அவகாசம் கிடைப்பது எப்படி.
விவிஎஸ் பௌண்டேஷன் சாமா ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் ஒன்றரை மணிநேர ‘ஏகாந்த வரிசை’க் கச்சேரிகள் காலை ஆறு மணிக்கு மைலாபூர் சுந்தரேசன் தெருவில் நடைபெறுகிறது. ஆட்டோ பிடித்து சென்னைச் சாலைகள் இவ்வளவு அகலமானவையா என வியந்தவாறு ஆஞ்சநேயர்-ராகவேந்திரர் கோயிலடைந்து உள்ளே அம்புக்குறியிடப்பட்ட தரையில் வலமாக நடந்து சுவரோரம் அமர்கிறேன். அகல் விளக்குகளின் வெளிச்சத்தில் மைக் ஸ்பீக்கர் மேடைகள் இன்றி மிருதங்கம் முகர்சிங் பக்கவாத்தியங்களுடன் இரட்டை வீணைக் கச்சேரி நேரத்திற்குத் தொடங்கிவிட்டது.
நாட்டை ராக ‘மஹாகணபதிம்’ கிருதிக்கு அடுத்து ஆபோகி ராகத்தில் ஆலாபனை. தும்மல் இருமல்கள் கார்வைகளை அமிழ்த்திவிடும் அபாய அமைதியினூடே இரண்டு வீணைகளிலும் ராகம் நன்றாகவே வடிவமைந்து ஒலித்தது. ஐயர் சகோதரர்கள் ஆஸ்திரேலிய மெல்போர்ன் வாசிகள். சீசனுக்குத் தவறாமல் வந்து வாசித்துச் செல்கின்றனர். மெயின் உருப்படி கல்யாணி ராகத்தில். முகர்சிங்கும் வீணையும் இரட்டைத் தந்தி வாத்தியங்கள் போல ஸ்ருதியும் லயமும் இணைந்து வழங்கிய கிருதி வடிவம் இவ்வகை ‘சேம்பர்’ இசையரங்கிலேயே கேட்கச் சாத்தியம்.
சுற்றம் அதிகாலை அரையிருட்டிலிருக்கையில் மனத்தினுள் கலைத்தெய்வம் மட்டும் பிரகாசமாய் வியாபிக்க வாய்ப்பதிகம். வெளிச்சம் ஏறியதும் அறையின் குறுக்காய்த் தரையில் பாயும் மின்சார ஒயரும் ராகவேந்திரர் படத்தின் கோணலும் மனத்தின் லௌகீக விமர்சனப்புலத்தை வியாபிக்கத் தொடங்க விடைபெற்றேன்.
இதே ஆர்கனைசர்கள் ‘மங்கல இசை விழா வரிசை’ என அருகிலேயே கேசவ பெருமாள் கோயில் தெருவில் பத்து நாட்களுக்குக் காலை ஏழரை மணிமுதல் நாகஸ்வரக் கச்சேரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். காலணி அகற்றிக் கால்கள் கழுவிக் கால்சிராய் ஈரம் கலையாமல் ஜமக்காளத்தில் சம்மனமிடுகையில் மாம்பலம் துரையும் சைதை வெங்கடேசனும் வர்ணம் முடிந்து துடுக்குகல என்று தியாகையரின் பஞ்சரத்ன கௌளை ராகக் கிருதியைத் தொடங்கிவிட்டிருந்தனர்.
இயல்பில் ஓங்கியொலிக்கும் நாகஸ்வர செட்டிற்குத் திறந்தவெளித் திடலே சரி. கோயில் வளாகம் வேண்டிய ஆன்மீகப் பின்புலத்தை அளிக்கிறது. ஆஞ்சநேயர் கோயிலில் என்னோடு ரசிப்பதற்கு முட்டி மடக்கிச் சம்மனமிட முடியாத நான்கைந்து வெள்ளைக்காரர்களும் சில வெள்ளைத் தலை மைலாப்பூர் வாசிகளும் இருந்தனர். இங்கு என் துணைக்கு ஒரு வெள்ளைக் காகம் மட்டும்.
நாகஸ்வரம் கண்கள் மூடிக் கன்னம் புடைக்க கானமூர்த்தி ஆலாபனையில் ஆழ்ந்திருந்தார். தொடர்ந்து கானமூர்த்தி என்று வேணுகான மூர்த்தியை விவரித்து தியாகையரின் ஆதி தாளக் கிருதி.
அன்று அகடெமியில் ராமநாதன்-யுவராஜ் நாகஸ்வரத்தில் வழங்கிய ஜெயந்தசேனா நாட்டைகுறிஞ்சி (பல்லவிக்கு முன்னர் செய்த) ராக ஆலாபனைகளும் இங்கு வழங்கப்பட்ட கானமூர்த்தி கௌரிமனோஹரி (மெயின் உருப்படி) ராக ஆலாபனைகளும் சீசன் முழுவதும் காத்திருந்தாலும் மீண்டும் அமைவது அரிது. வடபழனி வடிவேலும் வேதாரண்யம் ரமேஷும் செய்த இரட்டைத் தவில் தனி ஆவர்த்தனம், ரூபக தாளத்தில் இரண்டு நாட்களுக்குள் நான் கேட்டதில் மூன்றாவது. பக்தர்களும் இன்றி ஆலய வளாகமே வெறிச்சோடியிருக்க அந்தக்கால அரசனைப் போல அமர்ந்து (திண்டு மிஸ்ஸிங்) ரசித்தேன்.
அடுத்த சுற்றில் காதில் விழும் சாவேரி தன்யாசி வசந்தா போன்ற ராக ஆலாபனைகளைக் கடந்து மாலா சந்திரசேகர் குழலிசையில் வழங்கிய மலையமாருதம், எம்.ஏ.சுந்தரேசன் வயலினில் வழங்கிய குமுதக்கிரியா (கிருதி அர்த்தநாரீஸ்வரம்), விவேக் மூழிக்குலம் வழங்கிய கன்னடா (கிருதி ஶ்ரீ மாத்ருபூதம்) போன்ற ராக ஆலபனைகளைத் தரமான வெளிப்பாடுகளெனக் குறிப்பிடலாம்.
சேர்த்தலை முனைவர் ரங்கநாத சர்மா பா.சா. ஸ்வாமி சபாவில் மாலைக் கச்சேரியில் அரிய எழுபத்தியொன்றாவது மேளகர்த்தா கோசலம் ராகத்தில் (கோடீஸ்வரின் கிருதி காகுகா) வழங்கிய ஆலாபனை நல்ல முயற்சி. இந்தச் சம்பூர்ண ராகத்தினுடைய ஸ்வரங்களை ‘ரிமதநி, பதபகஸ’ என்று பிரித்து விரிக்கையில் வேறு ஜன்ய ராகங்கள் ஒலிப்பது பரவாயில்லை, கோசலத்தின் உருவம் என்னவென்றே புரியாமல் போவது தோல்வி.
இம்முயற்சியுடன் ஒப்பிட்டால் இதே சபாவில் மறுநாள் மாலைக் கச்சேரியில் முனைவர் பந்துல ராமாவின் அரிய ‘சௌவீரம்’ ராக (சுவர்நாங்கி என்றும் சொல்வர்) ஆலாபனை நேர்த்தியானது. நாற்பத்தியேழாவது மேளகர்த்தாவின் வடிவத்தைக் குலைக்காமல் ‘சரஸசௌவீர’ எனும் தீக்ஷதர் கிருதியின் சிட்டைஸ்வரங்களின் அமைப்பிலிருந்தே ராக ஆலாபனையை வடிவமைத்து விரித்தது இவரது செவ்வியல் பாண்டித்தியத்தின் சான்று. வசந்தா சுத்ததன்யாசி பேகடா என்று கச்சேரியில் அனைத்து ராக ஆலாபனைகளும் தரமாக அமைந்தன. பேகடாவில் கண்டஜாதி திரிபுடையில் கண்ட நடையில் அம்பாள் மேலான பல்லவியை (அமைத்தது வயலின் வாசித்த எச்.எஸ்.என். மூர்த்தி, பலே) நிரவல் அனுலோமம் திரிகாலம் என்று விரித்து, சஹானா ஹிந்தோளம் வராளி என ராகமாலிகை செய்து முடித்தார்.
அகடெமியின் மார்கழி விழா தொடக்க நாள் இரவு வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை மிருதங்க வித்வான் அருண் பிரகாஷ் வழங்கினார். மேடையில் இரட்டைத் தம்பூராக்களோடு அரைவட்டமாகப் பலவர்ணப் பட்டாடைகளில் பதினாறு இளைய தலைமுறைக் கலைஞர்கள் வயலின் குழல் நாகஸ்வரம் வீணை சித்திரவீணை முகர்சிங் மிருதங்கம் கடம் என (தவில் காணுமே?) ஆண் பெண் பாடகர்களோடு இணைத்துப் பாட்டிசையும் இடையிசையும் தனித்தனியே அமைத்துப் பலவித வகைகளில் (சிறுபாட்டு, அபங், பல்லவி, தில்லானா போன்ற) இசைவடிவங்களை இடைத் தனி ஆவர்த்தனங்களோடு வழங்கினர். மேடை சட்டென திருவிளையாடல் ‘ஒரு நாள் போதுமா’ பாடல் காட்சியை நினைவூட்டியது. கேட்டு ரசிக்க ஓர் இரவு போதாது.
‘பின்னொரு இரவினேலே’ என்று தொடங்கிய பாரதியார் பாட்டும் ‘வாழ்வினில் அனைவருக்கும் பிரதானமானது மனிதநேயம்’ என்கிற கண்டஜாதி திரிபுடைத் தாளப் பல்லவியும் இந்நிகழ்ச்சியின் உயரொளி. பல்லவியில் ‘பிரதானமான’ என்பதற்குத் தமிழ்ச் சொல் பொருத்தியிருக்கலாம். பாடகர் ‘அனிவருக்கும்’ என்கிற உச்சரிப்பையும் தவிர்த்திருக்கலாம்.
கொண்ணக்கோல் சொல்லித் தனி-யையும் நிகழ்ச்சியையும் பிரமாணம் பிசகாமல் வழிநடத்திய அருண் பிரகாஷிடம் சிறந்த இசையமைப்பாளர் அகமலர்ந்துள்ளார். அன்று காலையே அனைவரும் ஒருசேர ஒத்திகை பார்க்க முடிந்ததாம். அவர் கூறிய தகவல் ஆச்சர்யப்படுத்தவில்லை. நமது செவ்வியல் இசை வடிவின் பலம் அதுதானே. முறையாகக் கற்றுக் கொண்ட எந்த இருவரும் அன்றே சந்தித்த மேடையில் இணைந்து இசைந்து பரிமாற முடியுமே. மார்கழி மேடைகளில் இளைய தலைமுறை அடுத்த கட்டத்திற்கும் காலங்களுக்கும் வேறு வடிவங்களில் அவ்விசையைச் செவ்வியல் பண்புகள் குறையாமல் எடுத்துச் செல்வது சால்பே. பலே.
அருண் நரசிம்மன்
இந்தக் கட்டுரையை எழுதிக்கொடுத்த என்னுடைய பெயரின்றி (நல்ல வேளையாக?) தினமலர் கொத்துபரோட்டா வடிவத்திலும்<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg> வாசிக்க நேரலாம்.
மன்னித்துக்கொள்ளுங்கள்<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg>.
இப்பதிவில் மேலே முழு வடிவக் கட்டுரையிலுள்ள கருத்துகளுக்கும் தவறுகளுக்குமே நான் பொறுப்பு. விளக்கங்கள் வேண்டுமென்றால் வழக்கம் போல மின்னஞ்சலில் எழுதிக்கேளுங்கள்.
நன்றி.
அருண் நரசிம்மன்.
தளத்தில் வாசிக்க →
தினமலர் கொத்து பரோட்டா வடிவத்திற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்
வீடு வரை வந்து விண்ணப்பித்தனரே என்று நிறைய தயக்கங்ககுளுக்குப் பிறகு எழுதிக்கொடுக்கச் சம்மதித்து நாள்தோறும் செய்யாமல் தொகுப்பாய் அளிக்கிறேன் என்று சொல்லி மூன்று நான்கு அரைப்பக்கக் கட்டுரைகளுக்குச் சம்மதித்திருந்தேன்.
ஆயிரம் சொற்களுக்கு மிகாமல் என்பதால் 980 சொற்களில் வெள்ளி காலையே அனுப்பிவிட்டுத் திருத்தங்களோ விளக்கங்களோ சுருக்கங்களோ தேவையென்றால் என்னிடம் கேளுங்கள் என்று சொல்லியிருந்தேன். மதிபேசியில் எடுத்திருந்த படங்களையும் (9) அனுப்பியிருந்தேன்.
ஞாயிறு இதழ் வெளிவரும்வரையிலும் வந்த பின்னரும் எவரும் தொடர்பு கொள்ளவில்லை.
இன்று காலை ஆறு மணி கச்சேரி கேட்டு முடித்து வந்ததும் இணையத்திலும் அச்சுப் பதிவிலும் கவனித்தேன். வந்துவிட்டிருக்கிறது கட்டுரை.
ஐயகோ.
தொடக்கம் எனும் தழிழ்ச் சொல்லை ‘துவக்கம்’ என்று திருத்துவதில் தொடங்கிக் கண்ட இடங்களில் கண்டமேனிக்கு வெட்டியெறிந்து (பிரசன்னா வெங்கட்ராமனுக்கான) பாராட்டை எதிர் விமர்சனமாக்கி, (ஆதித்யாவிற்கான) விமர்சனத்தை சபாஷாக்கி… இப்படியே போய் ஒரு விமர்சனத்தைச் சுருக்கி அடுத்த விமர்சனத்தில் இருந்து வரிகளை இதனுடன் சேர்த்து… உட்கருத்துடனான என்னுடைய ‘ரிடாரிக்கல்’ வினாவிற்கு இவர்களே நான் கேட்காமல் தவறாக விடையளித்து… நான் எழுதிய வரிகளைக் குலைத்து நிராகரித்து நீக்கி… நான் எழுதாத வரிகளைச் சேர்த்து… நாகஸ்வரக் கச்சேரி நடந்தது பெருமாள் கோயிலில், ஆஞ்சநேயர் கோயிலில் இல்லை… (பைதிவே, கோயில் என்பதே தமிழ்ச் சொல் கோ+இல் = கோயில் அதாவது அரசனோ அதிபதியோ இருக்கும் இடம். கோவில் என்பது சரியான தமிழ்ச் சொல் இல்லை, ஆஞ்சநேயர் ‘கோவில்’ என்று நான் எழுதிக்கொடுத்திருக்கவில்லை), நாகஸ்வரக் கச்சேரிக்கு என்னுடன் வராத வெள்ளையர்களை வந்ததாகச் சொல்லி, ஆனால் என் துணைக்கு வந்த வெள்ளைக் காகத்தைக் கொலை செய்து கொத்து பரோட்டா போட்டு… இவர்கள் இவ்வளவு நகைச்சுவையுணர்வு அற்றவர்களுமா… எவ்வளவு தான் புலம்பலாம், இன்னொரு கட்டுரை நீளத்திற்கா?
தாண்டவமாடிவிட்டிருக்கின்றனர்.
அச்சு இதழில் என் பெயருடன் வந்து தொலைத்திருக்கும் வடிவத்தைக் கீழே அளித்துள்ளேன். தினமலர் இணைய இதழ் வடிவத்தை நல்லவேளை என் பெயருடன் பிரசுரிக்கவில்லை<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg> (நன்றி).
தினமலர் கொத்து பரோட்டா வடிவம்
நான் அனுப்பியிருந்த கட்டுரையின் முழு வடிவத்தை இங்கு அளித்திருக்கிறேன்<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg>. பொறுமையும் அவகாசமும் இருப்பவர்கள் என் கட்டுரையின் முழுவடிவத்தையும் தினமலர் கொத்து பரோட்டா வடிவத்தையும் வாசித்து ஒப்பிட்டு மாய்ந்துகொள்ளுங்கள்.
சம்பந்தப்பட்ட கலைஞர்களும் ரசிகர்களும் என் முழுக்கட்டுரையை மட்டும் வாசித்துவிட்டு அங்குள்ள பிழைகளுக்கும் விமர்சனத்திற்கும் என்னிடம் வழக்கம்போலச் சண்டை பிடிக்கலாம். விளக்கங்கள் அளிக்கிறேன்.
ஆங்கில நாளிதழ்களில் ஒரு வகை அலட்டல் என்றால் தமிழ் நாளிதழ்களில் இவ்வகை உதாசீனங்கள் ஓயவே இல்லை.
கைநீட்டி காசு வாட்டீல்ல… ஊது-ன்னா ஊத வேண்டியதுதானே என்கிறீர்களா… புத்தகங்கள் உட்பட இதுவரை எழுதிய எந்தத் தமிழ் எழுத்திற்கும் நான் காசு வாங்கியதில்லை.
இப்ப என்ன குடியா முழுகிப்போச்சு… நொடிக்கு நூறு பேர் உலகெங்கிலும் அநியாயமாக இறக்கின்றனர், இது ஒரு மேட்டரா என்கிறீர்களா… இல்லைதான். உங்கள் குழந்தை உங்கள் கண் முன்னால் இறந்து போகையில் இதையே சொல்லிக்கொள்ள முயலுங்கள் (காட்டமாகவே சொல்கிறேன். மன்னியுங்கள். வாசிக்கும் எவருக்கும் இந்நிலை வரவேண்டாம்.)
நன்றி
அருண் நரசிம்மன்
தளத்தில் வாசிக்க →
An apology
That they came home to place their request made me relent and I agreed to write three or four weekly essays for their Sunday edition.
Not to exceed 1000 words limit, I turned in my first essay of 980 words by Friday morning with an express rider to consult me for any editing, deletion and doubt before print. Had also shared few pictures.
Mum’s the word until the Sunday Dinamalar<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg> issue went to print.
Today morning after attending the 6 AM Ekantha Series by VSS foundation (Kudos VVS Murari!) chamber type concert at Mylapore Sundaresan Street, I checked. Both the internet version<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg> (without my name, thankfully) and the print version of the newspaper (with my name, unfortunately) had appeared carrying my essay.
Good lord!
Beginning with the substitution for the Tamil word for begin (thuvakkam instead of my thodakkam!) the essay was mangled, expurgated, bowdlerized and cast apart; so much so that my copious praise for Prasanna Venkatraman got so reduced that it is now left only as a criticism, while my criticism of Adityanarayanan was again reduced to transform into a praise. It went on this way, a hack job that managed to use every editorial procedure in the wrong way; reduction without context to change the original meaning, adding from one review lines into the other, obviously to again change the meaning of the context and review, unnecessarily providing an answer line (not written by me) to my rhetorical question, that too with an incorrect answer to boot, changing the location of the concerts (while the correct ones were provided in my essay), making the wrong ‘white-men’ sit beside me in the wrong concert, while killing off the ‘white crow’ that gave me company in the nagaswaram concert… are these editors this humour-impaired? How much one could rant? As long as my 1000 words essay?
Here is the picture of the Dinamalar ‘kothu parotta’ print version of my essay that had appeared today.
தினமலர் கொத்து பரோட்டா வடிவம்
The Tamil version I had sent to them is here<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg>. I shall post an English version soon for the rasikas and readers enjoyment. You may compare at your leisure to concur.
I apologise to the artists and rasikas for the goof-up that no one could now be identified as the source. Do read the Tamil version<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg> (and the English one when I post it) and you may hold me responsible for the mistakes and criticisms I made therein. As usual, you may contact by email and I shall respond.
While English newspapers are of one snooty kind, these Tamil newspapers and their irresponsible negligence has remained as always.
Haven’t you got paid? Just blow the trumpet and move on; if that’s your word of solace, no Sir, I haven’t taken money for any of my Tamil writings so far, including all my books.
So what’s the big deal? Daily hundreds of innocents get killed unjustifiably, is your grouse such an ordeal? No, of course not. When your child dies before your eyes, is there solace? (Sorry, that is my frustration. No one who reads need to face such a situation in their life.)
Arunn Narasimhan
தளத்தில் வாசிக்க →
எட்டணாவில் உலக ஞானம் – சேஷசாயி கருத்துகள்
பத்திரிக்கைகளின் 1100 வார்த்தைத் தலையணையில் திணிக்கும் கட்டாயம் இல்லாமல் சுதந்திரமாய், சாவகாசமாய் கதையைச் சொல்லியிருப்பது, உன்னுடைய எழுதும் பாணிக்கு வசதியாக இருக்கிறது. (எங்கள் தலைமுறைதான் முற்றத்தில் பாட்டியின் விசாலமான கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள் என்று நினைத்தேன்!)
உனக்கென்ற தனி பாணி நிச்சயமாய் ஏற்படுத்திக் கொண்டுவிட்டாய், (சுஜாதாவின் வாசனை முத்தம்மாவின் வாசனையைப்போல் பரவலாக வியாபித்திருந்த போதிலும்…) ‘வெந்த உருளைக்கிழங்கு’ ஶ்ரீரங்கத்துக் கதைகளில் படித்தால், இடைச் செருகல் என்ற உணர்வு, சுஜாதாவிற்குக்கூடத் தோன்ற வாய்ப்பில்லை.
ஒரு காட்சியின் முப்பரிமாணங்களையும் ஒரேவரியில் கொண்டுவரக்கூடிய அபாரத் திறமை, உப நதிகளும், கிளை நதிகளும் சேர்ந்து, பிரிந்து ஓடும் பெருநதியைப் போல், சிறுகதையைக்கூட நடாத்திச் செல்லும் சாகசம், சிந்திக்க வைக்கும் சிறப்பான கருத்துகள், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், தவறாமல் கஜுராஹோவிற்கு இடம் (சில சமயம் குத்தகை), ஆங்காங்கே வெளிப்படும், பரந்த அறிவின் ஒளிக்கீற்றுகள், இழையோடும் ஹாஸ்ய ஏளனம் - இவை எல்லாம் உன் தனித்துவமான பாணியின் அம்சங்கள்.
அழகான, நேர்த்தியான தமிழ். பட்டப்பா கல்யாணத் தளிகையில், பாயா கரி வாசனை போல் திடுக்கிட வைக்கும் சில சொற்றடர்கள். (மல்டிக்யுஸீன் அனுபவஸ்த்தர்களுக்கு நிச்சயமாக ரசிக்கும்.)
இந்த தொகுப்பின் சிறப்பு வெரெய்ட்டி. குறுநாவல், நாடகம், ப்ரெஞ்ச் மொழியிலிருந்து தமிழாக்கப்பட்ட சிறுகதை (தரிசனம் அப்படித்தான் தோன்றுகிறது- மசாலா பீட்ஸா மாதிரி),கொஞ்சம் தத்துவம், பேய்க்கதை- எல்லாமே தனிச்சுவை. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் படித்திருந்தால், சில பகுதிகளை இன்னும் ரசித்திருப்பேன். ரகசியமாக.
இலக்கிய அரங்கத்தில், மேடையில், உனக்கு நாற்காலி போடப்படுகிறது.
தளத்தில் வாசிக்க →
எட்டணாவில் உலக ஞானம் – வாசகி மங்கை கருத்துகளும் பதில்களும்
பிட்ரேயல் லெட் டௌன் சரியான தமிழ்ச்சொல் தெரியவில்லை. கைவிடப்படல்/கைவிடப்பட்ட நிலை என்று வைத்துக் கொள்வோம். அது செயலாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. ஒரு பார்வையில், உடல்மொழியில், சொல்லில்,  ஒரு பிரச்சனையை நேர்மையற்று எதிர்கொள்வதில் இருக்கும் சிறுமையில் வெளிப்படலாம். அதை செய்வது நாம் மிகவும் நம்பும், நம் ஆதர்சமாக நினைக்கும், வாழ்வில் இணைந்து வரும் ஒருவர் என்றால் அப்போது தொண்டையில் எஞ்சுமே ஒரு கசப்பு அதைத் துப்பிவிட்டு அப்படி எதுவும் நடவாதது போல் மேலே செல்வது எளிதல்ல.
வெகு இயல்பான அன்றாடங்களோடு எந்த ஒரு அபத்திரமான சூழலும் ஏற்பட வாய்ப்பில்லாத வாழ்க்கை. அதை வாழும் இயல்பான கதாபாத்திரங்கள். ஆனால் கைவிடப்படலின் கசப்பை விலகலை கேசவம்,  ஹம்சா, ராமா நீ சமான மெவரு கதை சொல்லி என்று அனைவரும் வேறு வேறு விதமாக எதிர்கொள்கிறார்கள். எதிர்கொள்ளும் நேரம் நிலைகுலைந்து பின் சில நியாயங்களைத் தர்க்கங்களைத் தங்களுக்குள்ளாகவே பேசி கடந்து செல்ல முயல்கிறார்கள். ஆனால் கசப்பின் வண்டல் முற்றிலும் போய்விடுமா என்பது உறுதியில்லை. நிஜ வாழ்க்கையில் அப்படி ஒரு  கசப்பு ஏற்படும் எனில், அது அளிப்பது நெருங்கியவர்கள் என்று நினைப்பவர்களிடமிருந்து கூட ஒரு விலகலை. அப்படியான அனுபவத்துக்குப் பின், சந்திக்கும் ஒவ்வொருவரையும் கவனமாக எடை போட தொடங்கி விடுவோம். அது பெருஞ்சுமை. அதன் பின்னர் அனைத்து உறவுகளும் ட்ரான்சாக்ஷனலாகப் போகும். ஆனால் சக மனிதர்களின் சிறுமைகளை கடந்து செல்ல முடிந்தவர்கள் உண்மையாகவே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
மேடலைன் பெர்னாட் வேறு ரகம். மேடலைனுக்கு பால் கவ்கினைப் பிடித்து இருக்கிறது. என்றாலும் தான் விரும்பும் ஒருவன்  தன்னுடைய ஏற்பையோ மறுப்பையோ அறிய முற்படாமல் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த முனைந்தால் அவள் அவன் மேல் வைத்திருக்கும் மதிப்பு அகன்று அருவருப்புதான் வரும்.
ஆனால் மேடலைனுக்கு பால் கவ்கினிடம் வருவது பரிதாபமும்,  கருணையும். அப்படி ஒரு பரிவையும் கருணையையும் காட்டுவது எல்லாருக்கும் இயன்றதல்ல.  அவன் அதை உணரும் நொடி அவனுக்கான தரிசனம் கிடைத்து விடுகிறது.
“அமைந்த சந்தர்பத்தில் அறிமுகமற்ற நபருடன் நிகழ்ந்து விடும் இனிமையான உடலுறவு பெண்களுக்கு அதிகக் கிளர்ச்சியை அளிக்கலாம்.” அப்படியா? இது யாருடைய அவதானம்?
Male gaze - பெண்ணுடல் சதா நோக்கப்படுவதாக வரும் சித்தரிப்புகள் சலிப்பூட்டுகின்றன. சொல்லப் போனால் கதையின் வேகத்தையும் சுவையையும் குறைக்கின்றன. அதே போல் மொழி விளையாட்டும்.
வேலையில் ஒரு தான் விரும்பும் இடத்தை அடைய தங்களையே பகிரும் பெண்கள் அரதப்பழசான ஒன்றில்லையா? குருநிந்தனை கூடாது என்ற தத்துவ தரிசனத்தை வேறு சம்பவங்களை வைத்து சொல்லியிருக்க முடியாதா?  இல்லை இசையா இரவில் புரபசரை தவறிழைக்க வைத்து இதில் ஆண் பெண் பேதமில்லை என்று எழுதியிருப்பதாக எடுத்துக் கொள்வதா?
ஆனால், சிஸ்கோ கேசவத்திடம் சொல்லும் இந்தச் சொற்களிலும் உண்மை இல்லாமல் இல்லை.
“ஏன் அதையே கேட்கிறாய். யோசி. திருமணமாகி இருபது ஆண்டுகள். குழந்தைகள் கல்லூரிச் செலவு முடியப் போகிறது. வங்கியில் சேமிப்பு. வாழும் சிற்றூரில் ஜீனியஸ் ஸோல்டனின் மனைவி என்கிற மரியாதை … ஏன் இவற்றை மேரி இழக்கப் போகிறாள். மேரி கண்டுகொள்ளப் போவதில்லை. ஸோல்டனுக்கும் தெரியும்.”
குடும்பம் என்ற அமைப்பு இன்னும் பெரிதாக ஆட்டம் காணாமலிருக்க இவ்வகை கணக்குகளும் காரணம் தான். மேரி போன்ற பெண்களுக்கு, உபயோகப்படுத்தப்படும்  சக பெண்கள் மீதும் மதிப்பில்லை.  தங்கள் மீதும் மதிப்பில்லை.
முத்தம்மா தனி வகை.  எல்லாருக்கும் இதம் தரும் ராம்கிகள் தான் எல்லாவற்றையும் இனிமையாக்குகிறார்கள். ஆனால் ராம்கியாய் இருப்பது சிரமம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பாட்டி தந்த பரிசில் நடப்பது போல் நடக்கும் என்றே நான் நம்புகிறேன்.
ஏன் நகரெங்கும் ஜீரியாட்ரிக் கேர் சென்டர்கள்  முளைத்திருக்கின்றன என்பதற்கான விடையை எட்டணாவில் உலக ஞானம் சொல்கிறது.
மங்கை.
அன்புள்ள வாசகி மங்கை அவர்களுக்கு
சிறுகதைகளின் வாசிப்பிற்கு நன்றி. கோர்வையான உங்கள் கருத்துகளைப் பகிர்ந்ததற்கும் நன்றி. ஒரு நூலை அறிமுகம் செய்து பேசுவதற்கு அடுத்த தருணத்தில் உங்களை அழைக்கலாம் என்பது வாசிப்பிலும் பரிசீலித்து வழங்கும் கருத்துகளிலும் தெரிகிறது. உங்களைப் போன்றோர் என் எழுத்தின் வாசகர்கள் என்பது என் நல்லூழ்.
உங்களுடைய முதல் இரண்டு பத்திகளின் கருத்துகளை கவனிக்கையில் ஆச்சரியமே அடைந்தேன். என் உளம் சார்ந்த உட்தெளிவு ஒன்றை – நான் பல ஆண்டுகள் சிந்தித்துக் கண்டடைந்த என்னைப் பற்றிய புரிதலை – என் சில கதைகளின் வாசிப்பு வாயிலாகவே நீங்கள் கண்டு சொல்லிவிட்டீர்கள். இரண்டு சிந்தனைகள் எழுகின்றன. முதலாவது என்னைப் பாதித்த அனுபவங்களை கற்பனை கூட்டி இச்சிறுகதைகளாக உருவாக்கி வழங்கினாலும் ஆழ்மனத்தின் வெளிப்பாட்டுடனேயே எழுதியிருக்கிறேன்; என் மெய்யான உலகப் பார்வையைப் புனைவு எனும் கலைவடிவம் வழியாக வெளிப்படுத்த முயல்வதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறேன். இரண்டாவது கவனமான நல்ல வாசகியிடம் புனைவு அதன் details எவ்வாறு இருப்பினும் on the whole எழுதியவனின் நோக்கத்தையும் உணர்வுகளையும் சரியாகவே கடத்திவிட்டிருக்கும். தொல்ஸ்தோய் சொல்லும் உணர்வுகளைக் கடத்தும் கருவி எனும் கலையின் ஆதாரச் செயல்பாடு என் குறையெழுத்தின் வழியாகவும் நம்மிடையே சரியாக நிகழ்வதில் ஆச்சரியமே.
பல வாசகக் கருத்துகளுக்கான ஏற்புரையை இத்துடன் நிறுத்திக்கொள்வேன். இலக்கியத்தின் மீது உங்களுக்கு மெய்யாலுமே விருப்பமும் குவிந்த ரசனையும் உண்டு என்பதால் author response என்கிற வகையில் குறிப்பிட்ட உங்கள் சில கருத்துகளுக்கு மட்டும் என்னுடைய பதில் கருத்துகளையும் வழங்குகிறேன்.
“அமைந்த சந்தர்பத்தில் அறிமுகமற்ற நபருடன் நிகழ்ந்துவிடும் இனிமையான உடலுறவு பெண்களுக்கு அதிகக் கிளர்ச்சியை அளிக்கலாம்.” அப்படியா? இது யாருடைய அவதானம்?
அந்தக் கதாபாத்திரத்தின் அவதானம். சரியா தவறா என்பதை அப்பாத்திரத்திடமே கேட்க வேண்டும். மேலும் அப்பாத்திரமே ‘அளிக்கலாம்’ என்று சந்தேகத்துடனேயே சொல்கிறது. அளிக்கும் என்று அவதானிக்கவில்லை.
நீங்கள் இலக்கியச் சூழலில் கல்வி பயின்றவர் இயங்குபவர் என்பதை வைத்து உங்களுக்குப் புரியும் என்பதால் ஒன்றைப் பகிர்கிறேன். அந்த ‘அவதான’ வாக்கியமே off tangent வழியில் கதையின் revealஐ வெளிப்படுத்தும் உத்தியே. அதற்காகவே கதையில் முன்னரே ‘அவதானம்’ போல உரையாடலில் இதே வாக்கியம் வைக்கப்பட்டு மீண்டும் கிளைமாக்சில் எடுத்தாளப்படுகிறது.
Male gaze - பெண்ணுடல் சதா நோக்கப்படுவதாக வரும் சித்தரிப்புகள் சலிப்பூட்டுகின்றன. சொல்லப் போனால் கதையின் வேகத்தையும் சுவையையும் குறைக்கின்றன. அதே போல் மொழி விளையாட்டும்.
இவை நியாயமான விமர்சனக் கருத்தே இல்லை. தொகுப்பாக வாசிக்கையில் உங்களுக்கு எழுந்த எண்ணம் என்றே தோன்றுகிறது. அதனால் எழுதிய ஆணைக் குறை சொல்வதற்கென நீங்கள் தேர்வு செய்துகொண்ட உங்களுக்கு வசதியான கருத்து என்பேன். I’ll defend my stance thusly.
ஒன்பது கதைகளில் நீங்கள் ஏற்கெனவே குறிப்பிட்ட மூன்று கதைகளில் (குரு நிந்தனை, ராம நீ சமான மெவரு, இசையா இரவு) இந்த ‘மேல் கேஸ்’ கதாபாத்திரம் வழியாக அதிகமாக வெளிப்பட்டிருக்கலாம். இந்த ‘மேல் கேஸ்’ அளிக்கும் பாதிப்பு இல்லையேல் இக்கதைகளே (இவற்றின் ஆதார சிக்கலே, எஞ்சும் கசப்புணர்வின் தீவிரமே) இல்லையே.
‘தரிசனம்’ எனும் பால் கவ்கின் கதையில் அவர் பார்வையில் இந்த ‘மேல் கேஸ்’ ஓரளவே இருக்கும். பால் கவ்கினின் (lady’s man ஆளுமையான) வாழ்க்கை வரலாற்றை கவனித்தால் நான் அளித்திருக்கும் கற்பனைப் பார்வையின் அவசியம் விளங்கும் (மேடலைனும் கவ்கினை வருணிக்கிறாளே. இந்த female gazeஐ விட்டுவிட்டீர்களே). விட்டால் காதலுக்குக் கண்ணில்லை என்பதை ‘லிடரலா’க மட்டுமே எடுத்துக்கொள்ளச் சொல்வீர்கள் போலிருக்கிறதே.
பாட்டி தந்த பரிசு கதையில் மூன்று பெண்கள்; ஒன்று பாட்டி அடுத்தது பத்மா அடுத்தது நர்ஸ். போகிற போக்கில் ஓரிரண்டு வரிகளில் அந்த நர்சைப் பற்றி மட்டுமே இந்த ‘மேல் கேஸ்’ இருக்கும். அதற்கான காரணம் அக்கதையிலேயே விவரிக்கப்படுகிறது. தமுக்கி எனும் பாத்திரத்தோடு (நாவாசை மட்டும் உள்ள யோக்கியன்) ஒப்பிட்டால் கதாநாயகப் பாத்திரத்திற்கு ஆணின் மிச்ச மூவாசையும் உண்டு என்பதை விளக்கவே சபலமும் (டாக்டர் நர்சுடன் சல்லாபிக்க முயலுவதில் இவனுக்குச் சபலம்) பார்வைவழி வருணனையும் ஓரிரண்டு வரிகளில் வருகின்றன.
மிச்சமுள்ள நாலு கதைகளில் (முத்தம்மா, கஸ்டமரே கடவுள், வெந்த உருளைக்கிழங்கு, எட்டணாவில் உலக ஞானம் ஆகிய கதைகளில்) இந்த ‘மேல் கேஸ்’ ஒன்று மிகச் சொற்பம் அல்லது அறவே கிடையாது.
அதே போல
‘மொழி விளையாட்டு(ம்) கதையின் வேகத்தையும் சுவையையும் குறைக்கின்றன’
என்று கருதுகிறீர்கள்.
ஓரிரண்டைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தால் (specific instances) அவை எழுத்தாளன் தன் எழுத்தைத் தளைகள் நீக்கிக் கூர்தீட்டிக்கொள்ளப் பொருட்படுத்தப்படவேண்டியவையா என்பது தெளிவாகியிருக்கும்.
கிட்டத்தட்ட நூறு எழுதிய பின்னரும் இன்றும் என் ஆய்வுக் கட்டுரைகளின் peer review விமர்சனங்களில் எனக்கு (அதாவது இந்தியர்களுக்கே) ஆங்கிலம் சரியாக எழுத வரவில்லை என்று பொதுப்படையாக ஒரு வரி இருந்தே தீரும். கட்டுரையை அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட பின்னரும். தமிழில் எழுதுகையில் எனக்கு ‘தமிழ் மொழி ஓவராய் விளையாடுகிறது’ என்பதே விமர்சனமாக வழங்கப்படுகிறது.
மொழியில் விளையாடாதவன் எழுத்தாளனே இல்லை. எழுத்தை ஆள முயல்பவனே எழுத்தாளன். இப்படியெல்லாம் தமிழில் மட்டும் புரிந்துகொண்டு தொலைத்துவிட்டேன். போகட்டும் விடுங்கள்.
வேலையில் தான் விரும்பும் இடத்தை அடைய தங்களையே பகிரும் பெண்கள் அரதப்பழசான ஒன்றில்லையா? குருநிந்தனை கூடாது என்ற தத்துவ தரிசனத்தை வேறு சம்பவங்களை வைத்து சொல்லியிருக்க முடியாதா?  இல்லை இசையா இரவில் புரபசரை தவறிழைக்க வைத்து இதில் ஆண் பெண் பேதமில்லை என்று எழுதியிருப்பதாக எடுத்துக் கொள்வதா?
இலக்கை அடையத் தங்களையே பகிரும் பெண்கள் அரதப்பழசான ஒன்றே. இன்றும் அப்பகிர்வை விரும்பும் ஆண்கள் எத்துறையின் வேலையிலும் நிர்வாக வரிசைகளிலும் இயங்குவதும் அரதப்பழசே. மனிதர்கள் இருக்கும் வரையில் இவ்வகை அரதப்பழசான வடிவங்கள் இலக்கியத்தில் வந்துபோய்க்கொண்டே இருக்கும்.
முக்கியமாக ‘குரு நிந்தனை’ கதையின் மையமும் திரண்டு வரவேண்டிய பொருளும் அந்தத் தத்துவ தரிசனத்தின் உண்மைப் பொருள் சார்ந்ததே இல்லை. மீண்டும் வாசிக்கையில் நீங்களே ஏற்கலாம். ஏனெனில் நீங்களே எழுதிச் சொல்வது போல தத்துவ தரிசனம் என்பதெல்லாம் அந்தக் கதாநாயகன் தான் நம்பியவர் ஏமாற்றுகையில் சறுக்குகையில் தன் மனத்தைத் தேற்றிக்கொள்ள எழுப்பிக்கொள்ளும் ஒரு சமாதான வழிவகையே. அதே வகை தவறை அவனும் செய்கையில் அதே தத்துவ தரிசன அரணைத் தற்காப்புச் சமாதானமாக முன்வைக்க முயலுகிறான்.
‘குரு நிந்தனை’யையும் ‘இசையா இரவை’யும் ஒப்பிட்டு ஆச்சரியப்படுத்துகிறீர்கள். முதலாவதில் பெண் சம்மதத்துடன் செய்கிறாள். இரண்டாவதில் அவ்வாறில்லை. புரபசர் பாத்திரம் ஒருவகையில் ஒரு trope மட்டுமே. அக்கதையின் மையம் ஹம்சாவின் ஏமாற்றம் சார்ந்ததே இல்லை என்பேன். பார்க்கப்போனால் ஏற்கெனவே கணவனிடமும் ஹம்சா ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளாள். அந்தக் கதையின் மையம் மன்னிக்கும் மனங்களைச் சுற்றி இயங்குகிறது என்றே கருதுவேன். யார் யாரை எதற்காக எச்சூழலில் மன்னித்தார்கள் என்பதே யோசனைக்குரிய விஷயம். மறுவாசிப்பில் நீங்களும் இவ்வாறு யோசிக்கலாம்.
மீண்டும் உங்கள் விரைவான ஆழமான வாசிப்பிற்கும் அருமையான கருத்துகளுக்கும் நன்றி.
என் பதில்களில் தேவைக்கதிகமாக ஓங்கியடித்திருந்தால் அப்பிழை பொறுக்கவும்.
வாசிப்பு தொடரட்டும். மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்
அருண்
தளத்தில் வாசிக்க →
எட்டணாவில் உலக ஞானம் - சிறுகதைகள்
சென்னை அண்ணா நூல் நிலைய அரங்கில் சனவரி 9ஆம் தேதி மாலை 6 மணி அளவில் தமிழினி நூல் வெளியீட்டு நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளது. அதில் இப்புத்தகத்தையும் சேர்த்து மேலு சில சென்னை எழுத்தாள நண்பர்களின் புக்ககங்களும் வெளியிடப்படுகின்றன. ஆர்வமும் அவகாசமும் அமையும் சென்னை வாசகர்களை நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன்.
இப்புத்தகம் சார்ந்த சில தகவல்கள் பின்வருமாறு.
பின்னட்டையில் எழுதப்பட்டுள்ள வரிகள் (இவை புத்தகத்தை வரைவடிவில் வாசித்தப் புண்ணியவான் யாரோ மனமுவந்து பதிப்பாளர் வேண்டுகோளிற்கிணங்கி எழுதிக்கொடுத்தது போல அநேகமாகப் புத்தக ஆசிரியனே எழுதிக்கொள்வதுதான்): சிறுகதை என்பது சம்பவமோ வாழ்க்கை விள்ளலோ அனுபவப் பகிர்வோ நினைவோட்டமோ சார்ந்த நீதிகளோ மட்டும் அல்ல. நாவலைப் போலவே அவை முழுமையான அனுபவத்தை, அதிலிருந்து எழும் மேலதிகமானப் பொருளை உணர்வுகளை வழங்க முற்படவேண்டியது அவசியம். சிறுகதையாகச் சொல்லப்பட்டவை வேறு சிறு பெரு வடிவங்களில் திறம்பட அளிக்க முடியாதவை, அவசியமில்லாதவை.
இத்தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. போர்ச்சுகல் நாட்டில் இரண்டு நாட்களில் நடப்பவற்றை இருபது பக்கங்களில் சொல்லும் கதையில் தொடங்கி, அரங்கம் அமெரிக்கா என இருபதாண்டுகளில் நடப்பவற்றை இரண்டு மூன்று பக்கங்களில் சொல்லும் கதையில் முடிகிறது. கேட்காத இளையராஜா கச்சேரிப் பின்னனியில், கேட்கும் கர்நாடக சங்கீதக் கச்சேரிப் பின்னனியில், நகரத்தில், அரங்கத்தில் என்று வகைந்து, பிரெஞ்சு நாட்டு பாண்ட்-அவன் சிற்றூரில் 1888இல் ஓவியர் பவுல் கவ்கின் பெற்ற தரிசனமும் வரலாற்றுப் புனைவாக இத்தொகுப்பினுள் உள்ளன. நடுவில் பேயே வராத ஒரு பேய்க் கதையும் உண்டு.
கடந்த பத்து ஆண்டுகளில் நான் ஏதேதோ புத்தகங்கள் எழுதுவதாகக் கேள்விப்பட்டு அன்பர்கள் சிலர் இவற்றை நீ ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் உடனுக்குடன் வாசித்திருப்பேனே என்று அங்கலாய்த்துள்ளனர். வீ டோண்ட் ஸி டமில் பிக்சர்ஸ்… காதலிக்க நேரமில்லை காஞ்சனா கணக்காய். அவர்களின் விண்ணப்பம் நிறைவேறும் வகையில் Enlightened in Eight-Annas என்கிற தலைப்பில் இக்கதைகள் ஆங்கில வடிவத்திலும் வெளிவந்துள்ளன. இதற்கான தனி ஆங்கிலப்பக்கத்தில்/பதிவில் விபரங்களை அளிக்கிறேன்.
கதைகளை வாசித்த பிறகு வாசகக் கருத்துகளை என்னுடன் பகிர்ந்தால் மகிழ்வேன்.
தளத்தில் வாசிக்க →
யார் நல்ல இலக்கிய வாசகர்?
கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் திரளாகப் பங்கெடுத்துக்கொண்ட நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பும் செயல்பாடும் பிரமாதம். இன்முகத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்பட்டிருந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அனைத்துப் பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்.
அனைவருக்கும் வணக்கம். என் பெயர் அருண் நரசிம்மன். அருண்-தான் என் பெயர். நரசிம்மன் என் தந்தையார். குடவாசலில் பிறந்தேன். ஶ்ரீரங்கத்தில் வளர்ந்தேன். அமெரிக்காவில் படித்தேன் முனைவர் பட்டம் பெற்றேன். இன்று சென்னை மாநகரவாசி. பொறியியலில் முனைவர் பட்டதாரி. கடந்த இருபது ஆண்டுகளாக இதோ இங்கிருக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ஐஐடியில் இயந்திரவியல் துறையில் மெக்கானிக்கல் பேராசிரியனாக வேலை. அதனால் ஓரளவு வசதியுடன் வாழமுடிந்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் என என்னைக் கருதலாம். வேலையில் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசுகிறேன். பேசவேண்டும். தமிழில் இல்லை. இந்தியில் பேசுவதில்லை.
நானும் ஒரு புனைவெழுத்தாளன் என்பதற்கு அத்தாட்சியாகத் தமிழில் இதுவரை மூன்று நாவல்கள் வெளிவந்துள்ளன. சில அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளேன். தமிழினி வெளியிட்டுள்ளனர்.
கேள்வி: இந்த நாவல்களை வாசிக்கத் தேர்வு செய்கையில் அறிமுகத்திற்காக முன்னர் குறிப்பிட்ட என்னைப் பற்றிய சில தகவல்கள் உங்களுக்குப் பயன்படுமா? பயன்படுமா என்பதைவிட அவசியப்படுமா?
அருண் நரசிம்மனா… பெயரப் பாத்தா தெரியல… பிராமின். ஶ்ரீரங்கம்னா அய்யங்காராதான் இருக்கணும். ஐஐடில வேலைனாவே ஒரு மாதிரிதாங்க இருப்பாரு. தமிழ்லவே இப்பதான் எழுதிப்பழகிட்டிருப்பாரு. சென்னைல வசிக்காரு. வசதிபட்ட வாழ்க்கையாதான் இருக்கும். கார்ல தான் போவாரு. பிளைடுலதான் போவாரு. ரயில்ல பர்ஸ்ட் கிளாஸ்தான். பல்லவன் பஸ்ல ஏறிருப்பாரா மாட்டாரு. பாதசாரிப் பொதுசனத்தைப் பத்தி இன்னா தெரியும் இவுருக்கு. வெள்ல வந்து சர்தார் பட்டேல் ரோட்டை ஒருதபா நடந்து கிராஸ் பன்னிருப்பாரா ஆட்டோகாரங்கிட்ட வன்டாம்பார் சாவுக்கிராக்கி வூட்ல சொல்லிகினு வண்ட்டியா… இப்டி ஒருவாட்டியாச்சும் பேச்சு கேட்ருப்பாரு. லன்சுக்கு பீட்ஸா பர்கர்னு சாப்டுகிட்டு… இவுரெல்லாம் தமிழ்ல கதை எழுதி… இலக்கியம் அது இதுனு. ஆராச்சும் பேஸ்புக்ல சொல்வாங்கல்ல… அப்பால பாத்துப்பம்… வேற நல்ல புக்ஸா இல்ல.
என் நாவல் ஒன்றை கையிலெடுத்துப் படிக்கத் தொடங்கி சில மணி நேரங்களுக்குப் பிறகு படித்து முடித்தும் விடுகிறீர்கள். இந்தச் செயல்பாட்டை நீங்களாகவே தீர்மானித்துத் தொடங்கி நிகழ்த்துவதற்கு அந்த நாவலின் ஆசிரியனான நான் குடவாசலில் பிறந்திருப்பது முக்கியமானதா? ஶ்ரீரங்கத்தில் வளர்ந்திருப்பது முக்கியமானதா? குறிப்பிட்ட ஒரு குலத்தில் பிறந்திருப்பதும் அதன் சூழலில் வளர்ந்திருப்பதும் இந்த நாட்டின் சமூகத்தின் வளர்ச்சியில் வரலாற்றில் அதன் பங்களிப்பும் பற்றாக்குறையும்… ஆசிரியன் பிறந்திருப்பது குறிப்பிட்ட நாட்டிலும் மாநிலத்திலும் நகரத்திலும் இடத்திலும் வேலையிலும்… இவையெல்லாம் புனைவெழுத்தை வழங்கிய ஆசிரியனின் குணநலங்கள். இவற்றிற்கும் புனைவெழுத்திற்கும் தொடர்புள்ளதா? உங்கள் வாசிப்பை தீர்மானிக்கும் அளவிற்கு?
அழுக்கு பரிசாரகன் செய்யும் சமையலை சாப்பிடுவதில்லையா நீங்கள்? பிரமாதம் என்று கருதி…
உணவில் சரியாகச் செயல்படும் இந்தப் பிரித்தாளும் மனத்தை வாசிக்கும் இலக்கியத்தில் செயல்படுத்த மாட்டீர்களா என்ன? நல்ல இலக்கிய வாசகர் தானே நீங்கள்?
அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு: யார் நல்ல இலக்கிய வாசகர்?
ஒரு விடை உருவாகிவிட்டது போலிருக்கிறதே: வாசிக்க முனையும் புனைவை அதன் ஆசிரியனின் ஆளுமையை ஒதுக்கிவைத்துவிட்டு அணுக முனைவது நல்ல இலக்கிய வாசகனுக்கு அடையாளம்.
முன்னால நான் சொன்னவற்றினால் முகம் சுளிக்க வேண்டாம்.
ஒருவர் பெயரைக் கேட்டாலே கேட்ட மாத்திரத்தில் நமக்குள் அபிப்பிராயங்கள் உருவாகிவிடுகின்றன. அருண் நா ஒரு ஒப்பினியன் அருண் நரசிம்மன் நா ஒரு ஒப்பினியன். தமிழ் கதைல வர்ரா மாதிரிதான். செங்கமலம்னா நல்லவ ரீட்டா நா கெட்டவ. இப்டி…
மேலே நான் சொன்னதெல்லாம் எனக்கு நடந்தவையே.
தமிழினி பதிப்பாசிரியரே என்னைப் பற்றி இப்ப நான் சொன்ன அபிப்பிராயங்களைதான் முன்முடிவுகளா எழுப்பி வெச்சுருந்தாரு. ஆனால் மறந்துவிடக்கூடாது. அவர்தான் என் எழுத்தைப் பதிப்பித்தார். இந்த முன்முடிவுகளை அவராகவே தகர்த்துக்கொண்டு இல்லை ஒதுக்கிவெச்சுட்டு என்னோட சில எழுத்துக்களை வாசித்துப் பார்த்துவிட்டு…
நல்லா ஞாபகம் இருக்கு… ஶ்ரீரங்கத்துக்கு டிரெய்ன்ல போய்ட்டிருந்தேன். செகண்ட் கிளாஸ் சேர்கார்ல. நல்ல வெயில். கீழே பலாப்பழக்கூடைல முட்டி இடிச்சு ஒக்காந்துருந்தேன். இவுரு போன்ல கூப்டாரு. பட்டன் மொபைல் தான் வெச்சுருந்தேன். மதிபேசி இல்லை. சார்… சொல்லுங்க சார். என்ன அருண்… எங்கிருக்கீங்க… கிளாஸ் இல்லயா… வீட்லயா. சார்… டிரெய்ன்ல போய்ட்ருக்கேன். கொஞ்சம் சத்தமா பேசுங்க சார்… ஒண்ணும் காதுல விழல. படிச்டேங்க… நீங்க கொடுத்ததலாம் படிச்டே… நீங்க எழுத்தாளர்தாங்க… சந்தேகமில்லாம… கவலைபடாம எழுதுங்க. சார்… என்ன சொல்றீங்க… கதை நல்லாலையா… பர்ஸ்ட் கிளாஸ்ல போய்ருந்தா ஏசி கூபேல வெளி ஓசை இல்லாம அவர் பேசினது மொதோ வாட்டியே கேட்ருக்கலாம்.
பின்னாளில் ஒரு நாவல் எழுதி முடிச்சு அப்பறமா பேச்சுவாக்குல சொன்னாரு… பிரமாதமான தமிழ் நடைங்க தன்னால வாச்சுருக்கு ஒங்குளுக்கு அடிச்சு வெளயாடுங்க அருண். அப்ப பொறுக்க முடியாம சொல்லிட்டேன்: ஞாபகமிருக்கா சார்… மொதோவாட்டி ஒங்க கடைல வந்து பேசினப்ப ஐஐடியா… தமிழ்ல இப்பதான் எழுதிப் பழகிட்டிருப்பிங்க… அப்டிதான… அப்டினு கேட்டீங்களே சார். சட்னு பேச்சு விட்டுபோச்சு. சிகரெட் புடிச்சுகிட்டே வந்தாரு. இதாங்க… இதுக்குதாங்க யாகாவாராயினும் நாகாக்க…னு சொல்லிவெச்சுருக்காரு… மெய்யாலுமே வருத்தப்பட்டார். எனக்கும் சங்கடமா போச்சு… சே சே… அப்டிலாம் இல்ல சார். இப்டிலாம் சொன்னாலும் நீங்கதானே அப்பறமும் படிச்சீங்க என்னோட புக்சலாம் போட்டீங்க… ரெண்டு வருஷம் டைம் வேஸ்ட் பன்னிருக்க வேண்டாம்ல… எதுக்கும் ஒரு வேளை வரனுமில்ல.
சரி. நிற்க. யார் நல்ல இலக்கிய வாசகர்? எங்க சுத்தினாலும் டாப்பிக்கு வந்துடனும். எங்கு சுற்றியும் ரெங்கனைச் சேர்… ஶ்ரீரங்கத்தில் சொல்வார்கள்.
விளாடிமிர் நபகாவ் என்றொரு எழுத்தாளர் இருந்தார். லொலீதா எழுதியவர் என்றால் தெரியும். தமிழின் முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரை பாதித்தவர். லொலீதா-வால் உந்தப்பட்டு லாசரா அபிதா என்று எழுதினார். சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் வாசித்திருப்பீர்கள். இதன் மூலம் அல்லது உந்துதல் நபகாவ் எழுதிய ரியல் லைப் ஆப் செபாஸ்டியன் நைட். இரண்டையும் வாசித்துப்பாருங்கள் புரியும்… சரி. நபகாவ் வருமானத்திற்காக சில சமயம் கல்லூரிகளில் இலக்கியம் பற்றி வகுப்பெடுத்திருக்கிறார். இவற்றின் சாரங்கள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இவர் வகுப்புகளில் தொடக்கத்தில் முன்வைக்கும் கேள்வி: யார் நல்ல வாசகர்? அதாவது இலக்கியத்தைப் பொறுத்தவரையில், யார் நல்ல வாசகர்?
இவரே சில அவசர பதில்களையும் வழங்கிச சோதிக்கிறார். எடுத்துக்காட்டாக: நல்ல இலக்கிய / புனைவு வாசகன் என்பவன்…
வாசிக்கும் கதையின் நாயகன் நாயகியுடன் ஒன்றுபட்டிருக்க வேண்டும். மனத்தால் ஒத்திசையும் கதாபாத்திரம் ஒன்றை கண்டுகொள்ள முடியவேண்டும்.
உரையாடல் சம்பவங்கள் நிரம்பப்பெற்ற புனைவுகளையே ஒப்பீட்டளவில் மேலதிகமாக விரும்ப வேண்டும்.
ஏதாவது புத்தகம் வாழிக்கும் விவாதிக்கும் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
சமூகவியல் பொருளாதாரம் இவற்றைப் பற்றிய அறிவுடன் வாசிக்க வேண்டும்.
கற்பனை வளம் கொண்டவனாக இருக்க வேண்டும்.
அவனுமே வளரும் கதாசிரியனாக எழுத்தாளனாக இருக்க வேண்டும்.
கதையை திரைப்படத்தில் கண்டிருக்க வேண்டும்.
நினைவாற்றல் கொண்டிருக்க வேண்டும்.
மொழியகராதி வைத்திருக்க வேண்டும்.
கலையம்சம் கவித்துவம் பற்றி உணர முடிய வேண்டும்.
இப்படிப் பொதுவாக நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் இலக்கிய வாசகனைப் பற்றிய பல முன்முடிபுகளை பதில்களாக வீசுகிறார். இவற்றில் எவை நல்ல இலக்கிய வாசகனுக்குப் பொருந்தும்? பல வகுப்புகளில் பல நாவல்களின் விரிவான பரிசீலனைகள் எடுத்துக்காட்டுக்களுடன் தன்னுடைய விடைகளை வழங்குகிறார்.
நாம் அரை மணிக்குள் செய்யப் பார்ப்போம். நான் யோசித்துக் கண்டடைந்த அல்லது தக்க காரணங்களால் ஏற்றுக்கொண்ட விடைகளையே முன்வைக்கிறேன். உங்களுக்கு அவற்றுடன் வேறுபாடுகள் இருக்கலாம். இருக்க வேண்டும். என் சிந்தனைகளை முன்வைத்து உங்களைச் சிந்திக்கவைப்பதே நோக்கம். பேச்சிற்கான பயன் அதற்கடுத்து அது ஏற்படுத்தும் மௌனமே.
முதலில் ஒன்றைச் சொல்லிவிட்டோம். ஆக்கத்தை வாசிப்பதில் ஆசிரியனின் ஆளுமையை குறுக்கிட விடக்கூடாது பழகிக்கொள்ள வேண்டும். இது நல்ல இலக்கிய வாசகனுக்கு அவசியமான அடையாளம்.
அடுத்து புத்தக விரும்பி — இவனை நல்ல வாசகன் என்பதற்கில்லை. நிறைய புத்தகம் சேர்த்திருப்பவன், அவற்றை வாசித்திருப்பவனும் என்பதற்கில்லை. அப்புத்தகங்கள் கஞ்சனின் வைப்புநிதி போல… பூதம் காத்த புதையலென அவற்றை வைத்திருப்பதே… புத்தகங்களைச் சேர்த்தவனுக்கு மகிழ்ச்சி. வாசித்திருப்பதில் இல்லை. கஞ்சனின் வைப்புநிதி பேரறிவாளன் திரு ஆகா. நிறைய வாசிக்க வேண்டுமென்பதில் குறியில்லை. நிறைவாக வாசிப்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.
இதற்கு அவசியங்கள் என்றால்…
கவனத்துடன் வாசிப்பவன், மொழியை அறிந்து வாசிப்பவன், நினைவாற்றல் அதிகமுள்ளவன், கலையம்சம் கவித்துவம் பற்றி சிறிதளவேனும் புரிந்தவன்… இவ்வாறெல்லாம் வகுக்கலாம்.
புனைவாக்கத்தை முழுமையாக உள்வாங்கிப் பரிசீலித்து அனுபவங்களை தொகுத்துக்கொள்வதற்கு நினைவாற்றல் பொறுமை நிதானம் மூன்று கூறுகளையும் வளர்த்துக்கொள்பவன் நல்ல இலக்கிய வாசகன்.
முன்னாடி நூறு பக்கத்துல படிச்சது கடைசில மறந்துவிட்டா கிளமாக்ஸ்ல செத்தது யாரு குத்தினது யாருன்னே தெரியாம… எழுத்தாளன் வழங்கிய கதையைவிட வாசகனால் உருவாக்கிக்கொள்ளப்பட்ட கதை சுவாரஸ்யமாய் இருக்கலாம். இதுதான் மாய எதார்த்தமோ… என்றெல்லாம் சங்கடமாகிவிடும். ஒண்ணுமில்லை. நினைவாற்றல் கம்மி. முன்னாடி படிச்சது மறந்து போச்சு. நல்ல வாசகனுக்கு நினைவாற்றல் அவசியமே. அது மட்டுமில்லை. நிதானம் பொறுமை. நேரத்தை வழங்க முடிந்த பொறுமை. கவனக் கலைப்புகளுடன் கத்தி பேசிக்கொண்டு… ரேஷன் கடைல கியூல நிற்கும் வகை பொறுமையோ நிதானமோ இல்லை. ஒருமுகமான நிதானம் பொறுமை. கவனத்துடனான நிதானம். பொறுமை.
ஏனென்றால்.
ஓவியத்தை ரசிப்பது போலில்லை இலக்கியம். உடனடியாக முழுக் காட்சியும் ஓவியமும் கண் வழியே மனத்தினுள் சென்று தாக்கி பாதித்து உணர்வுகளை எழுப்பிவிடும். நாவல் புனைவாக்கம் இவ்வாறில்லை. ஒரு அவகாசம் வேண்டும் இதை வாசித்து முடித்து அதன்பிறகே அதன் முழுமையான பாதிப்பை உணர்வதற்கு. வாசிக்கையில் ஒரு தொடர் அனுபவம் என்றாலும் புனைவாக்கத்தை ரசிப்பதற்கு முழுமையாக ஆனந்தம் பெறுவதற்கு மனத்தினுள் முன்னால் நடந்தவை பின்னால் நடந்தவை இரண்டிற்குமான இணைப்பு தொடர்ச்சி ஆசிரியன் விட்ட இடைவெளிகளைத் தங்கள் கற்பனையால் வாசகன் நிரப்பிக்கொள்வது அதனால் கிடைத்த ஒரு முழுமையான கலையாக்கம் என்ன அளித்தது எதைப் பெற்றோம்… இவ்வாறு அசை போடும் மனவொழுங்கே புனைவாக்கத்தை ரசிப்பதற்கான செயல்பாடு. தேவை. அவசியம்.
கவிதையை மூன்று விதமாக அடையாளப்படுத்துவார்கள். திராட்சா பாகம் நாரிகேல பாகம் பலசபாகம் என்று. திராட்சா ருசி… வாயில்போட்டவுடன் டேஸ்ட். நாரிகேல பாகம் தேங்காய்… மட்டையை உரித்து அடித்து உடைத்து திருவி சக்கரை சேர்த்து வாயில் போட்டா டேஸ்ட்… பலச பாகம். பலாப்பழம். பறிப்பதற்கே பிராணவஸ்தை… கொண்டுவந்து வீட்ல கொல்லைல வெச்சு குத்தி நெம்பி உரிச்சு… கை காலெல்லாம் கோந்து ஒட்டிக்கொண்டு… விளக்கெண்ணெய் தடவி கை வழுக்கிச் சுளை சுளையா உரிச்சு பிச்சு… கொட்டை எடுத்து… தேன்ல கலந்து வாய்ல போட்டா அதி ருசி…
ஓவியக்கலை ஒருவகையில் திராட்சா பாகம் எனலாம். கண்டவுடன் ஆனந்தம். அம்பாள் தரிசனம் போல. நாவல்கள் புனைவிலக்கியம் இவ்வாறில்லை. இதற்கான அவகாசத்தை வழங்கியபிறகே இதன் சுவை மனத்தினுள் தெளிவடையும். பலாப்பழம் போல…
ஒரு வகையில் புனைவு வாசிப்பாளன் என்று ஒருவனுமில்லை. நல்ல இலக்கிய வாசகர்கள் அனைவருமே புனைவு மறுவாசிப்பாளர்களே. இந்த அடையாளத்தை வளர்த்துக்கொள்பவன் நல்ல இலக்கிய வாசகன்.
சமையல் பதார்த்தத்துடனும் ஒப்பிடலாம் புனைவாக்கத்தை. (இதுக்குதான் லன்ச் டைத்துல 12 மணிக்குப் பேசக் கூப்பிடக்கூடாது. சாப்பாடே குறியா எடுத்துக்காட்டுகள் வருகின்றன. செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும்… அவுரு சொல்லுவாரு… பசி வயித்த கிள்ளுது… இப்ப போயி… வயிற்றுக்கு உணவு பிறகே செவி கவி எல்லாம்…)
சமையல் பதார்த்தம் வாயில் போட்டவுடம் சுவை தெரிந்துபோகும். தொடர்ந்து சாப்பிடலாமா என்பதையும் முடிவு செய்துவிடும். ஆனால் சுவை உங்களுக்கு வேண்டிய அளவுகளில் இல்லை என்றாலும் தொடர்ந்து சாப்பிட்டு முடித்தால் பசி ஆறியிருக்கும். அதே போலவே புனைவும். முழுவதும் வாசித்த பிறகு பெறும் அனுபவப்பயன் வேறுவிதமாக அமையலாம். திருப்தியளிக்கலாம். ஆனந்தம் வழங்கலாம்.
ரெண்டு பக்கத்துல பிடிக்கலைனு தூக்கிக் கடாசாம… கொஞ்சம் பொறுமை வளர்த்துக்கொண்டால்… பிறகு சுவை கூடிவரலாம். சில ஏமாற்றியும் விடலாம். இந்தச் சோதனையை செய்துபார்க்கும் பக்குவம் வேண்டும்.
இவற்றைப் புரிந்துகொள்பவன் நல்ல இலக்கிய வாசகன்.
அடுத்து சில கோளாறுகளை குறிப்பிடுவோம்.
புனைவாளனை வரலாற்றாசிரியனாகக் கொள்வது. அல்லது சமூகவியலாளன் என்று. அல்லது புரட்சியாளன் அரசியல் வழிநடத்தி தத்துவ ஞானி… இப்படியெல்லாம் காண்பது. இதெல்லாம் வாசகப் பேதமைகள். நல்ல இலக்கியங்களை வாசிப்பதற்கான இடையூறுகள். குழப்படிகள். மனப் பிராந்திகள்.
Fiction in general should never become analytic. As a matter of fact, the writer of fiction should not even try to dabble in psychology and its various isms. Genuine literature informs while it entertains. It manages to be both clear and profound. It has the magical power of merging causality with purpose, doubt with faith, the passions of the flesh with the yearnings of the soul. It is unique and general, national and universal, realistic and mystical. While it tolerates commentary by others, it should never try to explain itself. These obvious truths must be emphasized, because false criticism and pseudo-originality have created a state of literary amnesia in our generation. The zeal for messages has made many writers forget that storytelling is the raison d’être of artistic prose.
இவ்வாறு கூறுவது சிங்கர். இலக்கிய நோபல் வென்ற ஐசக் பாஷிவிஸ் சிங்கர்.
வரலாற்றை மட்டும் எடுத்துக்காட்டுகிறேன்.
சார்லஸ் டிக்கன்ஸின் நாவல்களில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தை அறிந்துகொண்டுவிட முடியுமா? அதாவது அந்நாட்டின் வாழ்வியலை சமூகவியலை வரலாற்றை… முடியாது.
கல்கியின் சிவகாமியின் சபதம். அதிலிருந்து பல்லவர்களின் வரலாற்றையும் ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் வாழ்வியலையும் சமூகவியலையும் அறிந்துகொண்டுவிட முடியுமா? ஓரிரு செய்திகளும் தகவல்களும் தெரியவரலாம். அவையே முழுமையான வரலாறு என்று சொல்வதற்கில்லை. சொல்லப்போனால் தகவல்களோ பெயர்களோ செய்திகளோ நாட்களோ தவறாகக்கூட இருக்கலாம். சில சரியாகவும் இருக்கலாம். ஆனால் அவை உறுதியான முழுமையான வரலாறில்லை. வாழ்வியலில்லை. அவசியமில்லை. அவை கல்கி பல்லவர் ஆட்சிகாலப் பின்புலத்தில் உருவாக்கியிருக்கும் புனைவின் அம்சங்கள். கூறுகள். சிவகாமியின் சபதம் எனும் புனைவில் அவ்வாறு வரலாற்றைத் தேடுவது கல்கி எனும் புனைவாளனுக்கு வாசகன் செய்யும் நீதியா?
சாண்டில்யன் புனைவுகளில் இருந்து சோழர்களின் வாழ்வியலை அறிவது போலத்தான். சொல்லப்போனால் சாண்டில்யனில் இருந்து சோழர்களின் சல்லாபங்களைக்கூட நம்மால் வரலாற்றுக் கூற்றுகளாக அறியமுடியாது. சரியாக இருக்காது.
அந்தக்கால இங்கிலாந்தைப் பற்றித் தெரிந்துகொள்ள சார்ல்ஸ் டிக்கன்சையும் அந்தக்கால பிரான்சை தெரிந்துகொள்ள விக்டர் ஹியூகோவையும் வாசிப்பவர்களை தேர்ந்த இலக்கிய வாசிப்பாளர்கள் என்றே கருத இயலாது. நாடுகளைப் புத்தகங்கள் வாயிலாகத் தெரிந்துகொள்ள வல்லுநர்கள் எழுதிவைக்கும் வரலாற்று பூகோள ஆக்கங்களை வாசிக்கலாம். நாடு அல்லது இனம் அல்லது ஒரு பகுதியின் மக்களைத் தொகுத்து தெரிந்துகொள்ளத் துறை வல்லுனர்கள் எழுதிவைத்திருக்கும் எத்னோகிராபி சமூகவியல் புத்தகங்கள் இப்படி. புனைவாசிரியன் சமூகவியளாலன் இல்லை (அவ்வாறு தங்களைத் தவறாகக் கருதிக்கொள்ளும் புனைவெழுத்தாளர்கள் உண்டு; இன்னும் டேஞ்சராகத் தங்களைப் புனைவாசிரியனாகக் கருதிக்கொள்ளும் சமூகவியலாளர்களும் உண்டு). புனைவாசிரியன் தத்துவ ஞானி இல்லை (தொல்ஸ்தோயை இவ்வாறு கருதினால் அவரது ஆக்கங்கள் நம்மைக் குழப்பியே விடும்). சைகாலஜிஸ்டும் இல்லை.
எழுத்தாளன் கட்டுரைகள் எழுதலாம். வரலாற்றுப் புத்தகமோ விஞ்ஞானப் புத்தகமோ எழுதலாம். ஆனால் புனைவாசிரியனாகச் செயல்படுகையில் அவன் கதைசொல்லியே. கதை எனும் சொல்லே சொல்வது நிஜமல்ல என்பதைக் குறிப்பிட உருவாக்கப்பட்டதுதானே. புனைவு எனும் கலை வழியே எழுத்தாளன் உணர்வுகளையே தன்னிடமிருந்து ஆக்கம் வழியாக வாசகனுக்குக் கடத்த முயல்கிறான். அதனால் ஒருவகையில் அப்புனைவுலகில் நிகழும் புறவயமான காட்சிகளுமே அகவயமான எழுச்சிகள் கொண்டவை. அகம் தீண்டிய புறமே புனைவின் இலக்கணம். கன்னி நாவலில் (கவிஞர் பிரான்சிஸ் கிருபா எழுதி தமிழினி வெளியிட்டது) முதல் சில பக்கங்களில் வரும் மழைக் காட்சியை வாசித்துப் பாருங்கள்; அகம் தீண்டிய புறம்.
அடுத்து…
புனைவில் எழுத்தாளனைக் காண்பது. அதாவது எழுதப்பட்டிருக்கும் புனைவு அனைத்துமே எழுத்தாளனின் ‘உண்மைக் கதை’… என்று கருதுவது. மிகப் பெரிய ஊறு.
இந்த மனப்போக்கின் நீட்சி என்றால்…
பார்ப்பதை கேட்பதை… உள்ளதை உள்ளபடியே… எழுதிவைத்திருக்கும் எழுத்து என்று தேடுவது. அல்லது வாசிக்கப்படுவத்து அவ்வாறான ஆக்கமா என்று கேட்பது. இல்லை கற்பனைதான் என்றால் ஏதோ வகையில் மட்டம் என்று கருதுவது. உண்மைக் கதை என்று சொன்னால் சுவாரசியம் கூடுவதாகக் கருதுவது.
உள்ளதை உள்ளபடியே அப்படியே எழுதிவைக்க எழுத்தாளன் எதற்கு? புனைவாளன் எதற்கு? கலைஞன் எதற்கு? பத்திரிகை நிருபர் போதுமே. அல்லது சுய சரித்திரம் என்று எழுதிக்கொள்ளலாம். அவை புனைவல்லவே. கலையல்லவே.
எடுத்துக்காட்டு என்னை வைத்தே வழங்குகிறேன். விளம்பரம் என்று கருதாதீர்கள். மன்னித்துக்கொள்ளுங்கள். உரையைத் தொடர்வோம்.
அமெரிக்க தேசி என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். அமெரிக்காவில் படித்த நாட்களின் அனுபவத்தில் உருவானது. வழக்கமாக வரும் கேள்வி இந்த நாவல் உங்கள் சுய சரிதையா. நாம் இல்லை என்று மறுக்க மறுக்க அது ஆமாம் ஆமாம் அதுமட்டுமேதான் என்றே கேட்பவரின் காதுகளில் ஒலிக்கும். சைபிரியாவில் எத்தனை குளிர் என்றால் வாட்டர் என்று டைப் அடித்தால் ஐஸ் என்றுதான் திரையில் விழுமாம்.
உண்மையில் இந்த நாவலில் வழங்கப்பட்டிருக்கும் அரங்கத்தின் பகுதிகள்கூட என்னுடைய பள்ளிப்பருவ வாழ்க்கை கிடையாது. பள்ளி நண்பர்களுக்குத் தெரியும். நான் அரங்கத்தின் பிரசித்தமான வீதிகளில் வாழ்ந்தவன் இல்லை. காவிரிக்கரையோரம் ஒதுங்கியே வசித்தவன். நாவலின் நாயகன் போல குறும்பானவனோ துடுக்கானவனோ தன்னம்பிக்கையாளனோ காஸனோவாவோ இல்லை. அவை அனைத்துமே என் மனப்புருடனின் குணங்கள். நாவலின் அமெரிக்க பல்கலைக்கழகப் பகுதிகளும் சம்பவங்களும் இவ்வாறே. அங்குள்ள நண்பர்கள் தமிழில் வாசிக்க முடிந்தால் அறிவார்கள் நாவலின் சம்பவங்கள் நேரடியாக என்னுடைய அமெரிக்க வாழ்க்கை இல்லை என்பதை. பலருடைய அனுபவவெளியில் தோய்ந்து செய்த மாயக்கலவை.
இப்படிச் சொன்னதும் இரண்டு ஆண்டுகள் முன்னால் அவர் உழைத்த துறையில் கரைகண்டவர் (இது உண்மையே) மெத்த படித்தவர் மேதாவிலாசி என எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் என்னிடம் ‘அப்டின்னா இங்க ஒங்காந்தே அடிச்சுவுட்டதுன்னு சொல்லுங்க…’ என்றார். என்னே இலக்கிய வாசிப்பு முதிர்ச்சி. ஒன்று சுயசரிதை வரலாற்று அல்லது டைரி குறிப்பு அல்லது பார்த்ததை அப்படியே எழுதிவைக்கும் நிருபர் வேலையாக இருக்கவேண்டும் இல்லை அந்நாட்டிற்கே போகாமல் இங்கிருந்தே அடித்துவிட்டதாக இருக்க வேண்டுமாம். இவ்விரண்டிற்கும் வேறான புனைவுவெளி எனும் நிஜத்திற்கு அருகிலேயே இயங்கும் கற்பனைப் படைப்பூக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் (புனைவெழுத்துக்)கலை என்பதையே புரிந்துகொள்ளாதவர். இவர்கள் புனைவெழுத்தின் விமர்சகர்களாகத் தங்களைக் கருதிக்கொள்வதில் பிரச்சனையில்லை அக்கருத்துக்களை புனைவாசிரியர் பொருட்படுத்திக் கருத்தில் கொண்டு தன்னுடைய எழுத்தைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் கருதுவதே வேடிக்கை.
புனைவின் நிகழ்வுகள் நீட்சிகள் வாழ்க்கையின் அனுபவங்களில் தொடங்கப்பட்டுள்ளன அல்லது முடிக்கப்பட்டுள்ளன அல்லது பிரதிபலிக்கப்பட்டுள்ளன. கலையாக்கத்தில் கடத்தப்பட வேண்டிய உணர்வுகளை முன்வைத்து இவை ஆசிரியனால் விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுக் கையாளப்படுகின்றன. இந்த அளவிற்கே நாவல்கள் ஆசிரியர்களுடைய வாழ்க்கை சுய சரிதை என்றாகும். மறுபக்கத்தில் முழுவதும் கற்பனையான கதை என்று ஒன்றுமில்லை இருந்தாலும் சுவைக்காது மனிதர்களுக்குப் பயன்படாது. ஒன்றுதான் சொல்லமுடியும். நான் அமெரிக்கா சென்றிருக்கவில்லை என்றால் இந்நாவலை எழுதியிருக்க முடியாது. அதற்கு மேல் புனைவையும் நிஜத்தையும் குழப்பிக்கொள்வது சிலருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு என்பதை ஒருவராலும் தடுக்க முடியாது.
என்னுடைய அமெரிக்க தேசி நாவலில் வரும் அமெரிக்காவும் ஶ்ரீரங்கமும் நிஜமல்ல. அதாவது நிஜம் மட்டுமல்ல. சம்பவங்களும் அவ்வாறே. என் கற்பனை தீண்டிய நிஜங்கள். இப்புனைவு மெமாயர் இல்லை. அமெரிக்க வாழ் இந்தியர்கள் வரலாறு இல்லை. அமெரிக்கர்களின் சோஷியாலஜி இல்லை. ஐந்து நாடுகளில் ஐம்பது நாள் சுற்றுப்பயணம் என்கிற பயணக் குறிப்புகள் இல்லை. உங்கள் பயணத்தில் இந்நாவலில் வரும் ஒரு சம்பவமுமே உங்களுக்கு நிகழாமலும் போகலாம். சில பல சமூக அவதானிப்புகளும் தகவல்களும் விரவியிருக்கலாம். ஆனால் இவை நிஜங்களின் கற்பனை வடிகட்டல். ஏதோ சில பொது (யுனிவர்சல்) உணர்வுகளை வாசிப்பவரிடம் எழுப்ப முயல்வதற்கான என் பொய்’மை’யில் தோய்ந்த வாய்மை.
சுயசரித்திரத்தையே புனைவாக வழங்குமளவு நான் அவ்வளவு திறனற்ற எழுத்தாளன் இல்லை.
ஆக…
நல்ல இலக்கிய வாசகன் செய்யவேண்டியது புனைவையும் படைப்பாளியின் வாழ்க்கையையும் குழப்பிக்கொள்ளாமல் அந்த ஒப்பீடு புனைவை ரசிப்பதற்கான அளவீடோ அடையாளமோ இல்லை… ஒரு பொருட்டே இல்லை என்று உணர்ந்து… இவ்வகை மனப்போக்குகளில் மாட்டிக்கொள்ளமல் தொடர்ந்து ஆக்கத்தின் வாசிப்பை நிகழ்த்த முயல்வது.
அடுத்து செய்நேர்த்தி…
தகவல் பிழைகளைக் கண்டுகொண்டுவிட்டதாகக் கருதிக்கொள்வது… சென்னை என்கிற ஊரில் நடக்கும் கதை என்கையில் நேரில் நாம் பார்க்கும் சென்னையாகவே அது இருக்க வேண்டும் என்று கருதுவது. இல்லை. முதலில் முக்கியமாக அவசியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது அது கதை. பொய். புனைவு. அந்தச் சென்னை அந்தக் கதைக்கான சென்னை. அதில் வரும் சென்னையில் அடையாறு பாலத்திற்கு அடியே நதி ஓடலாம் அதில் படகுகளும் இருக்கலாம். அடுத்தபடியாக ஓரத்தில் மலை இருக்கலாம். இல்லங்க… செந்தாமஸ் மௌண்ட் கொஞ்சம் தள்ளிதான் இருக்கு என்று சொல்லக்கூடாது. எழுத்தாளன் அவன் புனைவை வழங்குவதற்காக எடுத்துக்கொள்ளும் உரிமை அது. என்ன சொல்லலாம் என்றால் ஒரே கதையில் ஒரு பக்கத்தில் அடையாறு ஆறுக்கு அடுத்து மலை இருப்பதாகவும் அடுத்த அத்தியாயத்தில் அதற்கு அடுத்து மடு இருப்பதாகவும் எழுதிவைத்தாலேயே சொதப்பலான எழுத்து. மற்றபடி புனைவுலகம் விவரிக்கும் நிஜவுலகக் கூற்றுகளும் கற்பனை சார்ந்தவையே. பொய்’மை’யில் தோய்ந்த வாய்மை.
டெவில் இஸ் இன் தி டீடெய்ல்ஸ் என்பார்கள். தகவல்களையும் தளை மீறிய எழுத்தையுமே உற்று நோக்கிக்கொண்டிருந்தால் காவியங்களிலும் சாத்தான் மட்டுமே தென்பட்டுக்கொண்டிருக்கும். நாவல் எனும் புனைகளம் வானத்தில் திருவிக்ரம கால் வரையும் தூரிகை வீச்சு. ஜெட் விமானப் புகை காட்டும் வான்வரைவு (ஸ்கை ரைட்டிங்). நாவல் புறத்திலிட்ட வானளாவிய வளைகோடே வாசகன் அகத்தில் பதியவேண்டிய மனக்கீறல். அதன் நிறங்களோ வர்ணக்குழைவுகளின் விகிதங்களோ வளைகோட்டின் அத்தியாய அங்கங்களோ முக்கியமில்லை. அனைத்துமே புகையாகி வாசக மனவெளியில் வீசும் காற்றில் சிலநாட்களுக்குள் கரைந்துபோயிருக்கும். புனைவை அதனருகில் இருந்து மட்டுமே கண்டு தோய்ந்து வாசித்து ரசித்து மறவாமல் விலகிக்கொள். பிறகான வாழ்க்கையில் அடிமனத்தில் தேங்கியிருக்கும் அதன் கசண்டே அந்நாவல் உனக்கு வழங்கிய உலகப்புரிதல். பண்பாடு என்பதே கற்றவை முழுவதும் மறந்தும் மனத்தில் மிஞ்சுவதுதானே.
நல்ல இலக்கியங்களை வாசிப்பவன் நல்ல இலக்கிய வாசகன் எனலாமா.
அப்ப எவை நல்ல இலக்கியங்கள்? நாம் ஒவ்வொருவருமே நான் வாசித்த அனைத்துமே நல்ல இலக்கியங்களே… என்று கூறலாம். அப்ப வேறு யாரோ வரையறுப்பவற்றை சாவதற்குள் வாசிக்க வேண்டிய 100 நாவல்கள். இதுவரை வெளிவந்தவற்றில் தவறவிடக்கூடாத 1000 நாவல்கள். பில் கேட்ஸ் வழங்கும் புத்தகப் பரிந்துரைப் பட்டியல். இப்படி நல்ல இலக்கியங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியுமா…
பில் கேட்ஸ் காலேஜ் டிகிரியே முடித்திராதவர். தனது கணினித் துறை வர்த்தக முன்னெடுப்புகளில் அபாரமாக உழைத்து மிகப் பெரிய வெற்றி கண்டவர். இதனால் இவர் நல்ல இலக்கிய வாசகன் என்றாகிவிடுமா? கமல்ஹாசன் ரசித்த திரைப்படங்கள் பட்டியலில் நல்ல திரைப்படங்கள் இருக்கலாம். உங்களுக்கும் அவை பிடித்துமிருக்கலாம். இவ்வகைப் பரிந்துரையில் ஓரளவு நியாயம் உள்ளது. சுனில் காவாஸ்கர் கிரிக்கெட் கமென்டரி சொல்வது போல. துறையில் சாதித்தவர்கள் அத்துறையில் பரிந்துரைகள் வழங்கினால் பரிசீலிக்கலாம். ஏற்கலாம். குறைந்த பட்சம் பொருட்படுத்தலாம். பில்கேட்ஸ் வழங்கும் இலக்கியப் புத்தகப் பரிந்துரையும் நான் வழங்கும் இலக்கியப் புத்தகப் பரிந்துரையும் நிறைய தயக்கத்துடனேயே அணுகவேண்டும் ஏற்க வேண்டும். அது நல்ல வாசகனுக்கான அடையாளம்.
எதை வாசிக்கலாம் எதை ஒதுக்கலாம் என்பது உங்கள் உரிமை. என்றுமே அடுத்தவரை உம்முடைய ரசனையைத் தீர்மானிக்க விடக்கூடாது. உரிமையிழப்பு. ஆனால் கவனம். ஓரேடியாக முரண்டு பிடிக்கக்கூடாது. ஏன் சொல்கிறேன் என்றால் ஒரேடியாக நீ சொன்னால் கிடையாது என் வழி தனீ… வழி… என்று உரிமை என்கிற பெயரில் சிலவற்றை வளர்த்துக்கொண்டுவிடுவோம். நல்ல வாசிப்பிற்கே முட்டுக்கட்டைகளாகிவிடலாம்.
நீயாநானா நிகழ்ச்சியில் ஒருமுறை விருந்தினராகப் போயிருந்தேன். உடனிருந்த நண்பர் கவிஞர் மகுடேசுவரன் என்னை அவரது வாசகர் ஒருவரிடம் அறிமுகப்படுத்தினார். ஏதோ நல்லது செய்வதாக நினைத்துதான் செய்தார். ‘இவரை தெரியுமா… இவரும் எழுத்தாளர்தான். சொம்பு கொடை மலை இப்டி கதையெல்லாம் எழுதிருக்காரு… நாவல்கள் எழுதியுள்ளார். நீங்கதான் நிறைய கதையெல்லாம் படிப்பீங்களே… இவரை படிச்சிருக்கீங்களா…’ அவர் ‘இல்லை’ என்று சொல்லி நிறுத்தியிருக்கலாம். அவர் ‘நான் உயிரோடு இருக்கும் எழுத்தாளர்களை வாசிப்பதில்லை… என்று குறிக்கோள் வைத்திருக்கிறேன்.’ என்றார். மகுடேசுவரனுக்கு சங்கடமாகிவிட்டது. ‘நானும் உயிரோடு இருக்கும் வாசகர்களுக்கு எழுதுபவனில்லை. வருங்காலத்திற்கே எழுதுகிறேன்…’ என்று சொல்லிவைத்தேன். இவர் நல்ல வாசகரா என்றால்… தன்னுடைய முன்முடிபுகளால்… அதற்கு ஏதோ காரணங்கள் இருக்கலாம்… ஆனால் அவ்வாறான முன்முடிவு ஒன்றால் சிலபல நல்ல புத்தகங்களை புனைவுகளை வாசிக்கும் அனுபவத்தை இழந்துவிடுகிறார். உரிமை என்பதற்காகச் சமகாலப் பங்களிப்பையே மறுத்துக்கொள்வது சால்பல்ல.
அடுத்தவரின் ஆலோசனைகளை நமக்கான தேர்வுதானா என்று பரிசீலிக்கலாம். அந்த அளவு வெளிக்காற்றும் சிந்தையும் ஆலோசனைகளும் பரிந்துரைகளும் தன்னால் வந்துபோவதற்கு மனக் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைத்திருக்க வேண்டும்.
இவை நல்ல வாசகனுக்கு அடையாளங்கள்.
அடுத்து அதிமுக்கியமான ஒன்று:
ஆனந்தம் பெறுவதற்கே இலக்கியம் வாசிக்கிறோம்.
At its best, art can be nothing more than a means of forgetting the human disaster for a while. சிங்கர் சொல்கிறார். I am still working hard to make this “while” worthwhile. என்றும் எழுதிவைக்கிறார்.
உத்திகளிலும் செய்நேர்த்திகளிலும் பரிசோதனை முயற்சிகளிலும் சிக்கிக்கொண்டு இந்த ஆனந்தத்தை இழந்துவிடக்கூடாது. இலக்கியத்தின் முக்கியமான இழை எளிமையானது. மனிதனுக்கு அவன் உணர்வுகளுக்கு நேரடியாகப் பயனளிப்பது. ஆண் பெண் உறவுச் சிக்கல்களின் நிறமாலைகளே இலக்கியத்தின் ஊற்றுக்கண்கள். இதில் புகுந்து புறப்பட்டிருக்கும் உணர்வுகளைப் பெறுவதிலேயே ஆனந்தமும் கைகூடுகிறது.
இதை இழந்துவிடக் கூடாது. மறந்துவிடக் கூடாது. ஆனந்தம் பலவகை தராதரங்களில். வாசிக்கும் ஆக்கத்தில் எத்தரத்தில் ஆனந்தம் அமைந்திருக்கிறது என்பதில் தெளிவு வேண்டும். பலவகை ஆனந்தமும் புனைவிலக்கியத்தில் இருந்து வாசகனால் பெற முடிந்தவையே.
இரண்டு கொலைகளைச் செய்துவிட்டுக் கொலையாளி தப்பி ஓடிவிடுகிறான். நகரத்தில் சமுதாயத்தில் மறைந்து கொள்கிறான். போலிஸ் துரத்துகிறது. சில அத்தியாயங்கள் சில உச்சகட்ட துரத்தல்கள் விரட்டல்கள் சண்டை காட்சிகள் பிறகு… மாட்டிக்கொள்கிறான். சிறை. சுபம். இல்லை போலிசால் சுடப்பட்டு மாள்கிறான் வீழ்கிறான். தப்பு செஞ்சா தண்டனைதாங்க என்கிற நீதி முன்வைக்கப்படுகிறது. சுபம். ரெண்டு மணிநேரத்தில் வாசித்துவிடலாம். வாசிப்பதில் ஒருவகையான ஆனந்தம். மறுப்பதற்கில்லை. சூப்பர் சேஸ் மாப்ளே… சான்ஸே இல்ல… கதைன்னா இப்டி விறுவிறுனு போகணும்பா… ‘ஏய்… நாம் பாத்தா சைலண்டு பாஞ்சா வயலண்டு…’ போலிஸ் சூப்பர் வசனம் ஒன்று நினைவில் தங்கலாம். களிப்பே உவப்பே. ஒரு மட்டத்தில் நின்றுவிடும் ஆனந்தம்.
இதே கதைக் களம் இன்னொரு நாவலில் வழங்கப்படுகிறது. எவ்வாறு. முதல் சில அத்தியயங்களில் பொறுமையாகக் கொலையாளியின் ஆளுமை விவரிக்கப்படுகிறது. பரிதாபமான ஏழை மாணவன். கடனாளி. குடும்பத்தை விட்டுப் பிரிந்தவன். அக்கா விபச்சாரியோ என்று சந்தேகப்பட்டவள். அந்நாட்டின் மிகச் சாதாரண மற்றுமொரு குடிமகன் அன்னாடங்காச்சி சமூகப் பிரதிநிதி.
இவன் காரணங்களே முன்வைக்கப்படாமல் திடீரென்று இரண்டு கொலைகள் செய்துவிடுகிறான். ஒரு கொலை தான் வேடிக்கை பார்க்கும் கந்துவட்டிக்காரரை. ஓரளவு திட்டமிட்டு. ஆனால் ஏன் என்று அவனுக்கே புரியாமல். அடுத்த கொலை சற்றும் திட்டமிடாமல் ஒரு முன்விரோதமும் இல்லாமல் அந்தக் கொலையைப் பார்த்துவிட்ட சிறு பெண்ணை.
ஓடுகிறான். சமூகத்தினுள் ஒளிகிறான். அன்றாடத்தினுள் அமிழ்கிறான். அலைகிழிகிறான்.
மனத்தினுள் போராட்டம். சாப்பாடு பிடிக்கவில்லை. தூக்கமில்லை. தூங்கினால் பயங்கரக் கனவுகள். குடும்பம் உறவு எவரிடமும் நாட்டமில்லை. பேசப் பிடிக்கவில்லை.
நாயகன் கொலைகளுக்கான தத்துவ விசாரங்கள் நிகழ்த்திக்கொள்கிறான். பார்ப்பவரிடமெல்லாம் முன்வைக்கிறான். தான் செய்த கொலைகளை நியாயப்படுத்த நெப்போலியன் வரை தன் கட்சிக்கு சார்பாகப் பேசுவதற்கு அழைக்கிறான். வாசகனிடம் முன்னிறுத்துகிறான். கூடவே சிறுபெண்ணைக் காரணமில்லாமல் கொன்றுவிட்ட அநியாயத்தை நியாயப்படுத்த முடியாமல் தவிக்கிறான். போலிஸ்காரனுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டதோ தான்தான் கொலைகாரன் என்று… ஏன் இன்னும் பிடிக்காமல் விட்டு வைத்திருக்கிறான்…
அடுத்த இருநூறு பக்கங்களுக்கு இந்தப் மனப் போராட்டமே அவன் செயல்பாடுகளாகவும் சிந்தனையாகவும் சுற்றிலும் காணும் புறமாகவும்… அனைத்துமே இந்த மனப் போராட்டம் வழியாகவே வாசகனுக்குக் காட்சிப்படுத்தப்படுகிறது. குற்ற உணர்வின் பரிதவிப்பில் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறான். நாயகனைப் போலவே வாசகனுக்கும் தொண்டை வற்றுகிறது.
சம்பவம் முன்னர் சொன்ன திரில்லர் கதையின் அதே சம்பவமே. முடிவும் அஃதே. ஆனால் முக்கியமாகக் கூடவே சம்பவங்களுக்கு முன்னும் பின்னுமான கதாபாத்திரங்களின் மனப் போராட்டம் விரித்துவைக்கப்படுகிறது. ஆடு புலி ஆட்டம். சதுரங்கக் காய் நகர்த்தல்கள்… அனைத்திலும் இந்த மனப்போராட்டம் ஊடுருவிப்போகிறது.
இலக்கியச் சுவை என்றால்… போலிஸ் கொலைகாரனுக்கு இடையில் நடந்துவரும் இந்தச் சதுரங்கக் காய்நகர்த்தல்களில் இடையில் திடீரென்று ஒரு பிச்சைக்காரன் தானே முன்வந்து நாந்தாங்க அந்தக் கொலைகளைச் செய்தேன் என்கிறான். போலிஸ் இன்ஸ்பெக்டருக்கு பயங்கரக் கடுப்பு. போடா மவனே…
இலக்கியச் சறுக்கல் என்றால்… பிறகு மனத்தளவில் உத்தமியான விபச்சாரி ஒருவள் வந்து கொலைகாரனைத் திருத்துகிறாள்… அல்லது அவளுக்காக இவன் மாட்டிக்கொள்கிறான். சிறையில் வருந்துகிறான். மோட்சம் பெறுகிறான்.
இவனுக்கு ராஸ்கல் நிகாவ் என்று பெயர்.
என்ன தலைப்பு யார் எழுதியது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும்.
இந்த நாவலை வாசிக்கையிலும் ஆனந்தமே. ஆனால் தீவிரமான ஆனந்தம். சத்தானது. பல தளங்களில் அளிக்கப்படும் வகையில் பல்முனை பல்சுவை ஆனந்தம். சாதா திரில்லரில் கிடைப்பதைவிட மேலானது அல்லது தீவிரமானது. திரட்சியானது. வீரியமானது. இரண்டு வகை ஆனந்தத்தைப் பெறுவதிலும் தவறொன்றுமில்லை.
நல்ல இலக்கிய வாசகனால் இரண்டு வகைகளையும் பெறும் பக்குவத்துடன் வாசிப்பை நிகழ்த்த முடியவேண்டும். பிறகு நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் எந்தவகை ஆனந்தம் எந்த நேரத்தில் எவ்வளவு வேண்டும் என்பது வாசிப்பவனின் உரிமை. அவரவர் தமத தறிவறி வகைகளில்… அனைத்துப் புனைவு வாசிப்புமே நிஜங்களின் அவலங்களை மறந்துவிட்டு ஓரளவேணும் ஆனந்தமாக இளைபாறுவதற்கே.
தொகுத்துக்கொள்வோம். யார் நல்ல இலக்கிய வாசகர்?
ஆக்கத்தையும் ஆசிரியனையும் பிரித்து வைத்துக் கொண்டு ஆக்கத்தை அதன் பலங்களுக்காக ரசிப்பவன் அனுபவிப்பன் நல்ல இலக்கிய வாசகன்.
ஆனந்தம் பெறுவதற்கே வாசிக்கிறோம். இதை இழந்துவிடக் கூடாது. மறந்துவிடக் கூடாது. ஆனந்தம் பலவகை தராதரங்களில். வாசிக்கும் ஆக்கத்தில் எத்தரத்தில் ஆனந்தம் அமைந்திருக்கிறது என்பதில் தெளிவு வேண்டும். பலவகை ஆனந்தமும் புனைவிலக்கியத்தில் இருந்து வாசகனால் பெற முடிந்தவையே. அனைத்து புனைவு வாசிப்புமே நிஜங்களின் அவலங்களை மறந்துவிட்டு ஓரளவேணும் ஆனந்தமாக இளைபாறுவதற்கே.
புனைவாக்கத்தை முழுமையாக உள்வாங்கிப் பரிசீலித்து அனுபவங்களை தொகுத்துக்கொள்வதற்கு நினைவாற்றல் பொறுமை நிதானம் மூன்று கூறுகளும் வளர்த்துக்கொள்பவன்.
ஓவியத்தை ரசிப்பது போலில்லை இலக்கியம். அவகாசம் வேண்டும் முழுமையாக உள்வாங்கிப் பின்னர் அனுபவித்து ரசிப்பதற்கு. என்ன அளித்தது எதைப் பெற்றோம்… இவ்வாறு அசை போடும் மனவொழுங்கே புனைவாக்கத்தை ரசிப்பதற்கான செயல்பாடு. தேவை. அவசியம். நல்ல இலக்கிய வாசகர்கள் அனைவருமே புனைவு மறுவாசிப்பாளர்களே. இந்த அடையாளத்தை வளர்த்துக்கொள்பவன் நல்ல இலக்கிய வாசகன்.
புறவயமான மொழியறிவு வாக்கிய அமைப்பு சொல் நேர்த்தி நடை உடை பாவனைகள் உத்திகள் என்று எழுத்தின் செய்நேர்த்திக் கூறுகளை ரசிக்க முயல்வதோடு நிறுத்தாமல் ஓரளவேனும் அகவயமான கலையம்சம் கவித்துவம் போன்றவற்றை ரசிப்பதற்கான கற்பனை வளத்தையும் வளர்த்துக்கொள்ள முயல்பவன்.
வரலாற்றுப் புனைவுகளில் இருந்து வரலாறை கற்றுக்கொள்ள முடியுமா? அவை வரலாறு என்பதைவிட அவை புனைவுகள் என்பதே அங்கு முக்கியம்.
புனைவு ஆசிரியனின் சுய சரித்திரம் இல்லை என்கிற தெளிவு. அதே போல அவன் கேட்டதை பார்த்ததை அப்படியே எழுதிவைப்பவன் புனைவாசிரியனே இல்லை. பத்திரிகை நிருபர். அது நன்றாகவும் எழுதப்பட்டிருக்கலாம். உங்களுக்குப் பிடித்தும் இருக்கலாம். ஆனால் அது இலக்கியக் கலை இல்லை. புனைவு நிஜம் போலவே ஜோடிக்கப்பட்டிருக்கும் பொய். அந்தப் பொய்யின் வழியே ஆசிரியன் பேருண்மைகளைப் பரிசீலிக்கலாம் பகிரலாம். இந்தப் புரிதலுடன் ஆக்கத்தை வாசிக்க அணுகுபவன் நல்ல வாசகன்.
கடைபிடிக்கவேண்டிய வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரே முக்கியமான பழக்கம் என்றால்: முன்முடிபுகள் எதுவுமின்றி ஒரு ஆக்கத்தை வாசிக்க அணுக வேண்டிய செயல்பாடு.
தத்துவ ஞானிகள் நமக்கு ஞானம் பிறக்க நம் மனத்தை காலிப் பாத்திரமாக வைத்திருப்பது அவசியம் என்பார்கள். கேள்விப்பட்டிருக்கலாம். சற்றே பொதுப்படுத்திச் சொன்னால் எந்த கற்பிதத்தைப் எளிமையாகப் பெறுவதற்கும் அதற்கு முன்னே முன்புடிபுகளைக் களைந்துவிட்டு நிற்க வேண்டும். கற்பது எளிது.
புனைவாக்கப் புனலின் முன்னால் தன்னை காலிப் பாத்திரமாக நிறுத்திக்கொள்ள முடிபவன் நல்ல வாசகன். அப்புனைச் சுனையில் இருந்து எவ்வளவு பெறமுடியுமோ அது அளிக்கவல்ல அனைத்தையுமே மனத்தினுள் வாங்கிப் பருகி அனுபவிக்க முயல்பவன் நல்ல வாசகன்.
விளையாட்டில் திறமையானவர்களும் இவ்வாறுதான் செயல்படுவார்களாம். கீத் சேத்தி தெரியும். இந்தியாவின் சிறந்த பில்லியர்ட்ஸ் ஆட்டக்காரர்களில் ஒருவர். சுயசரித்திரமாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் வெற்றிக்கான குறிப்பிடுகிறார். முக்கியமான காரணம் ஒரு ஷாட் அடிக்க முனைகையில் பழசை எல்லாம் மறந்துவிட வேண்டும். ஒவ்வொரு ஷாட்டின் தொடக்கத்திலும். போன ஷாட் வெற்றியா தோல்வியா அது இந்த ஷாட்டை பாதிக்குமா… நினைவில் நிறுத்தி யோசித்தால் பாதிக்கும். மறந்துவிடு. மனசை நிச்சலனமா வெச்சுக்கோ. அதுவரை திரண்டிருக்கும் திறனால் மட்டுமே செயல்பாடு. நினைவுகளால் அல்ல. அங்கேயே கிரிக்கெட்டிலும் இப்படித்தான் என்று கீத் சேத்தி குறிப்பிடுகிறார். ராகுல் டிராவிடை குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஒவ்வொரு பந்தை யார் வீசினாலும்… எப்பந்து யார்யார்கை வீசப்பட்டாலும்… எதிர்கொள்கையில் பழசு முழுவதையும் மறந்துகொண்டு அந்த பந்திற்கான ஷட்டை மட்டுமே பயன்படுத்த முனைந்து… இப்டி… அதாவது மனசை காலில் பாத்திரமாக வைத்துக்கொண்டு செயலை அணுகினால் முழுவெற்றி எளிதாகக் கைகூடும்.
துரோணர் அர்சுனனுக்குச் சொன்னதும் இதுதானே… மரம் தெரிகிறதா… இல்லை குருவே. கிளை தெரிகிறதா… இல்லை குருவே. இலை தெரிகிறதா… இல்லை குருவே. சுற்றிலும் நாங்கள் இருப்பது… இல்லை குருவே. பட்சி தெரிகிறதா… இல்லை குருவே. அதன் கண்… தெரிகிறது குருவே. விடு பானத்தை… அர்ச்சுனன் சிறந்த வில்லாளி. வாசிக்கும் செயல்பாட்டில் மனத்தில் இந்த ஒருமுகம் வேண்டும். அமிழ்தல் வேண்டும். பிற அனைத்துமே கவனக் கலைப்புகள். நல்ல இலக்கிய வாசகனுக்கு வாசிக்க முனையும் இலக்கியம் மட்டுமே பொருட்டு.
ஶ்ரீநாரத நாதா… சரஸீருஹ ப்ருங்க சுபாங்கா… தியாகையர் தனது பிரசித்தமான கானடா ராகக் கீர்த்தனைப் பல்லவியில் நாரதரை இவ்வாறு வருணிக்கிறார். சங்கீதக் களஞ்சியமான தாமரைமலரின் மீது அச்சங்கீத அதிருசித்தேனைப் பருகியபடியே அமர்ந்திருக்கும் வண்டே என்று வருணிக்கிறார் நாரதரை. வண்டு ஆச்சார்ய ஸ்தானத்தை நிர்மாணம் செய்கிறது. ப்ரமனகீத நியாயத்தால். அந்த வண்டைப் போலவே வாசகன் இருக்க வேண்டும் என்கிறேன். துருவித் துருவி இலக்கியத் தாமரை வழங்கும் கலைத் தேனை உண்டுவிட முயலவேண்டும். உண்டு மயங்கி பரவசமடைந்துப் பயனுற வேண்டும். இந்தப் பரவசமே நல்வாசகனை அவனது வாழ்க்கையில் திடமாக வழிநடத்திச் செல்லும். இலக்கியத்தின் பயனும் அதுவே.
நன்றி.
தளத்தில் வாசிக்க →
இல்புறம் -- நாவல்
தமிழினி வெளியிட்டுள்ளது. விலை 690 ரூபாய். நடந்துவரும் சென்னை புத்தக விழாவில் தமிழினி கடையில் கிடைக்கும். பிறகும் தமிழினியிடம் தொடர்பு கொண்டால் பெறலாம். அல்லது உங்கள் ஊரில் புத்தக விழா நடக்கையில் அங்கு தமிழினி விரிக்கும் கடையில் கிடைக்கும். புத்தகக் கடைகளிலோ நூல்நிலையங்களிலோ தென்படாது.
இல்புறம் நான் உருவாக்கிய சொல். இல்லறம் என்பதற்கு எதிர்ப்பதம் இல்லை. புறத்தே ஒரு இல் என்று சுருக்கிவிடவும் வேண்டாம். மனது ஒவ்விச் செய்ய விரும்புவது அறம். மனங்கள் ஒவ்விப் பழகுவது இல்லறம். ஒவ்வா மனங்கள் நாடுவது இல்புறம். இவ்வாறுதான் நாவலின் பின்னட்டையில் விளக்கமளித்துள்ளேன்.
கதை என்ன என்றால்… நூற்றாண்டுகளாக இலக்கிய மையப்பொருளாக இயங்கிவரும் ஆண்-பெண் உறவுச் சிக்கல் சார்ந்த புனைவிழையே. சமகாலச் சூழலில் தமிழ் பேசும் நகர்ப்புற மத்தியதரக் குடும்பங்களின் வாயிலாகப் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
மைய இழைகள் இரண்டு மட்டும் சுருக்கமாக: இல்லறம் வழங்கும் ஒருவனுக்கு ஒருத்தி வகை ஆனந்தம் வரையறுப்பதால் வற்றிவிடுவதா. பன்னாட்டு மென்பணி நிறுவன மேலாளர் விவேக் ஆசைப்பட்டு மணந்த வாசுகியை நடுவயதில் விடுத்து அவள் தோழி விவிதாவை நாடியது இவ்வகையில். இந்தச் சமகால இல்புறத்தில் கோவலன் தண்டனை பெறுவது கண்ணகியிடமா மாதவியிடமா?
பள்ளித் தலைமை ஆசிரியை வைதேகிக்கு இல்லறம் அளித்திருக்க வேண்டிய ஆனந்தம் கணவன் ‘சாப்டுவேர் கூலி’ வருணிடம் வற்றிவிட்டதில் அவள் தன்னுடைய மாணவனிடம் இல்புறம் பழகலாமா. இந்தச் சமகால இல்புறத்தில் சபிக்கப்பட்டது அகலிகையா முனிவரா?
மற்ற மொழிகளைப் போலவே தமிழிலும் தீவிர இலக்கிய ஆர்வலர்கள் சிறுபான்மைக் குழுவே. இவர்களிடம் நான் சொல்லவேண்டியதில்லை. எப்படியும் வாசித்துவிடுவார்கள். என் புனைவெழுத்தை முன்பின் சந்தித்திராத புதிய வாசகர்களுக்கு முடிவெடுக்க உதவும் வகையில் ஒரு தகவல்: மாதிரிக்காக நாவலின் ஒரு அத்தியாயம்<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg> சனவரி 2024 தமிழினி இணைய இதழில் இடம்பெற்றுள்ளது.
நாவலை வாசித்த பிறகு வாசகக் கருத்துகளை என்னுடன் பகிர்ந்தால் மகிழ்வேன்.
தளத்தில் வாசிக்க →
நிறமற்ற வானவில்
இது தமிழினி வெளியிடும் என்னுடைய நான்காவது அறிவியல் சார்ந்த நூல். முன்னர் பிரசுரமான மூன்று அறிவியல் நூல்களும் இந்த ஆண்டு மறுபதிப்பு கண்டிருக்கிறது. அனைத்தும் நடந்துவரும் 2024 சென்னை புத்தக விழாவில் தமிழினி கடையில் கிடைக்கும். பிறகும் தமிழினி-யிடம் தொடர்புகொண்டால் கிடைக்கும்.
நூலின் பின்னட்டை விளம்பர வரிகள்: பள்ளி கல்லூரிகளில் தேர்வு விழுக்காடு நல்ல வேலை என்று ஏதோ ஒரு முடிவை நோக்கி அவசரகதியில் பரிமாறிக்கொள்ளப்படும் அறிவியில் சார்ந்த விஷயங்களை பாடம் என்று தெரியாமல் சற்று நகைச்சுவையுடன் வரலாற்று விஸ்தாரத்தில் சாய்வு நாற்காலியில் இருந்து புரட்டினால் எப்படி இருக்கும் என்கிற உந்துதலின் வெளிப்பாடே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளின் நோக்கம்.
ஓரிரு கருத்துக் கட்டுரைகளும் பொது அறிவியல் இயற்பியல் உயிரியல் என்று வழக்கமான வகைகளில் சில கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன என்றாலும் இந்நூலில் கணிதம் சார்ந்த எளிய விளக்கங்கள் கொண்ட மூன்று கட்டுரைகளை அமைக்க முடிந்தது ஒரு நல்ல தொடக்கம். அடுத்த ஆண்டுகளில் ‘பூச்சி பூச்சி’யாகச் சமன்பாடுகளுடன் முழுவதும் கணிதம் சார்ந்த எளிய விளக்க நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட முடியலாம். பார்ப்போம்.
தமிழில் அறிவியல் நூல்கள் விற்காது என்று கருதும் பதிப்பாசிரியரும் விற்கும் என்று கருதும் பதிப்பாசிரியரும் உண்மையே சொல்கின்றனர் என்று ஏற்கெனவே எழுதியிருந்தேன். தமிழில் எழுதப்படும் அறிவியல் நூல்களின் விற்பனை இன்றும் இந்த இரட்டுறமொழிதலின் இடைவெளியிலேயே நடக்கிறது. இனியும் அவ்வாறே என்று தோன்றுகிறது.
நூலை வாங்கி வாசித்தபிறகு தொடர்பான கருத்துகளை என்னுடன் பகிர்ந்தால் மகிழ்வேன்.
நிறமற்ற வானவில் நூலின் உள்ளடக்கம்
(தலைப்புக் கட்டுரை நீங்கலாக அனைத்து கட்டுரைகளின் முன்வடிவமும் இந்த வலைதளத்தில் பதிவுகளாக உள்ளன)
1. அன்றாட அறிவியல் சிந்தை
2. பேய் பிசாசுக்களும் பேயஸ் தியரமும்
3. கட்டடங்களும் கோபுரங்களும்
4. தொழிலறம்
5. இடவியலும் வடைவியலும்
6. கோனிங்ஸ்பெர்கின் ஏழு பாலங்களும் வரைகோலங்களும்
7. மாவு மிஷினும் மோபியஸ் பட்டையும்
8. 42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா
9. மகுடி இசையும் பாம்புச் செவியும்
10. பூனை குறுக்கிட்டால் மேக்னெட்டோரிஸப்ஷன்
11. டூகேன் பறவை அலகினால் ஆன பயன்
12. நிறமற்ற வானவில்
13. நூலறிவு
14. மாநகர் (சு)வாசம்
15. அழைப்பும் பிழைப்பும்
அட்டை வடிவமைப்பு: அருண் நரசிம்மன்
தளத்தில் வாசிக்க →
அமெரிக்க தேசி -- வாசகர் கடிதம் -- விக்னேஷ்வரன்
வணக்கம். என் பெயர் விக்னேஷ்வரன். சில ஆண்டுகளுக்கு முன்னால் நானும் என் மனைவி விஷ்ணுப்ரியாவும் UK-வில் வசித்துவந்த போது நாங்கள் இருவரும் சேர்ந்து வாசித்து மகிழ்ந்த ‘அமெரிக்க தேசி’யை அவள் வெகுவாய் ரசித்து தங்களுக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். லட்சியம், கனவு, கற்பனை, விருப்பம், தேடல் என்ற பல உந்துதல்களால் வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க வந்த நான், பல்வேறு சம்பவங்கள் மற்றும் அனுபவங்களின் வழியாக என் தேடலின் முடிவு நான் தொடங்கிய இடத்திலேயே உள்ளது என்று கண்டுகொண்ட நாட்களில் தான் நாங்கள் அமெரிக்க தேசியை வாசித்தோம். ஆகையால் தேசிகனின் வாழ்க்கையை மிகத் தெளிவாக என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
நான் இப்படி கனவுத்தேடலில் (பொறுப்புணர்ச்சியோடும் தான்) ஈடுபட்டுக்கொண்டிருந்த காலங்களில் என் பெற்றோர்களும் உற்றோர்களும் எங்கள் வருங்காலத்தைப் பற்றியும் என் நடவடிக்கைகளையும் எண்ணி எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள் என்று பின்னால் இப்போது தெளிவாகப் புரிந்தாலும் அப்போது அந்த அனுபவங்கள் எனக்குத் தேவை தான் என்றும் நம்புகிறேன். ஒருமுறை என் மனைவி என் அப்பாவிடம் அமெரிக்க தேசியைப் பரிந்துரைத்து புத்தகத்தை ஆர்டர் செய்து வரவழைத்தும் கொடுத்தாள். அப்பா நூலினை அவ்வப்போது ‘வாக்கிங்க்’ போகும்போது எடுத்துச் சென்று வாசித்தார் என்று எனக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் அது அவருக்குள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது டைரிக்குறிப்புகள் வழியாக அறிந்தேன். அதனைப் புகைப்படம் எடுத்து இத்துடன் இணைத்துள்ளதோடு அவரது எழுத்தினை சுலபமாகப் படிப்பதற்கு ஏதுவாக ஒரு வேர்டு டாக்குமெண்ட்டில் தட்டச்சு செய்து அதனையும் இணைத்துள்ளேன்.
அவர் என்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்றும், நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளும் போது என் கருத்துகள் நடைமுறைக்கு ஒவ்வாதனவாய் கற்பனை மிகுந்தனவாய்த் தோன்றி அவருக்கு பெருத்த கவலை ஏற்பட்டிருந்தாலும் அவற்றை என்மீது திணிக்காமல் அவர் எப்போதும் என் போக்குக்குத் துணையாய் இருந்திருக்கிறார் என்றும் இதனை வாசிக்கும் போது மேலும் நன்றாகப் புரிந்துகொள்கிறேன். அதனால் நன்றியறிதலும் ஏற்படுகிறது. தேசிகனின் வார்த்தைகள் அவருக்குள் ஏதோ ஒரு ஆழத்தைத் தொட்டிருக்கின்றன. தங்களிடம் இதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. நன்றி!
அன்புடன்,
விக்னேஷ்வரன்.
[கீழுள்ளவை விக்னேஷ்வரனின் தந்தையாரின் டைரி குறிப்புகளில் இருந்து — அருண்]
அமெரிக்க தேசி
இப்புத்தகத்தின் ஆசிரியர் திரு.அருண் நரசிம்மன் குடவாசலில் பிறந்து ஶ்ரீரங்கத்தில் வளர்ந்தவர். அமெரிக்கப் பல்கலையில் ‘வெப்பவியல் துறையில்’ பிஎச்டி படிப்பில் ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்றவர். தற்போது சென்னை ஐஐடியில் பணிபுரிந்து வருகிறார். நான் படித்த நாவல்களில் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நாவல்களில் மிகச் சிறந்த ஒன்று என இதைக் கருதுவதால் இந்நாவலைப் பற்றி எழுதவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.
நாவலில் வரும் தேசிகன் என்ற முதன்மை பாத்திரம் மூலமும், உரையாடல்கள் மற்றும் அவனது எண்ணங்கள் மூலமும் நாவலின் பலபக்கங்களில் வாழ்க்கைத் தத்துவங்கள் யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. தேசிகன் தான் படித்த ஸெயிண்ட் ஜோசஃப் கல்லூரி, பௌதிகத்தில் பட்டம் பெற்றது, தன் பள்ளி அனுபவங்கள், கல்லூரி வாழ்க்கை, பின் திருச்சியில் வேலையிலிருந்தபோது கிடைத்த காதல் அனுபவங்கள் எல்லாமே படிக்க சுகானுபவமாக இருந்தது.
தேசிகன் ஶ்ரீரங்கத்தில் ஒரு வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்தவன். ஆராய்ச்சிப் படிப்பு செய்ய வேண்டும் என்ற லட்சிய வெறியால் அமெரிக்கா சென்று, அங்கு பல கஷ்டங்கள் பெற்று, நேர்கொண்ட பார்வை மாறாமல் லட்சிய வேட்கையுடன் தனக்கு வந்த இன்னல்களையும், படிக்கும்போது சகமனிதர்கள் மற்றும் பல்கலைப் பேராசிரியரின் தடைகளையும் தன் லட்சியங்களால் கடந்தவன். பல நண்பர்களையும் சம்பாதித்தவன். பல துரோக சம்பவங்களையும் அமெரிக்காவில் சந்தித்தவன். ஆனால் எல்லாவற்றையும் தன் லட்சிய வேட்கையால் கடந்தவன். தன் நோக்கம் மாறாத வகையில் கடும் உழைப்பைக் கொடுத்து, பிஎச்டி முடித்து பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆகாமல் தன் தாய்த்திருநாட்டுக்கே திரும்ப வந்து பணிசெய்தவன். அவனுடைய பார்வையிலும் எண்ணங்களிலும் கீழ்க்காணும் வகையிலுள்ளவை பொன்னேட்டில் பொறிக்கச் செய்யும் வகையில் ஆசிரியரின் எழுத்து வலிமை மிகவும் பாராட்டத் தக்கது.
“இரவு படுக்கையில் மனம் தொலைந்து புரள்கையில் தேசிகனுக்குத் திரண்டெழுந்தது ஒன்றுதான். வாழ்க்கையில் இனியாவது தனக்குப் பிடித்ததை மட்டுமே செய்ய வேண்டும். அதன் மூலமே பொருளீட்டிக் கொள்ள முனைய வேண்டும். வாழும் வாழ்க்கையில் நிலைத்திரு. உயிர்த்திரு. வாழ்க்கையைப் பணத்திற்கு விற்று நிலைத்திருத்தலை வாங்க நினைக்காதே. ‘கற்கக் கசடற’ என்பது ஓர் இலக்கு என்றால் கற்றபின் வாழ்க்கையில் அதற்கேற்ப நிற்க வேண்டும். மாடல்ல மற்றையவை.“
(அற்புதமான வரிகள்)
“அனுபவங்கள் வளர்ந்து நம் உலகப்பார்வையும் மாறவே செய்யும். கூடவே லட்சியங்களும். நமக்கிருக்கும் திறமைகளை எக்காலகட்டத்திலும் செம்மையாக்கி, மனத்தில் திரளும் இலட்சியங்களை அடையவே முயல வேண்டும். அக்காலகட்டத்தில் சாதனைகள் சோபித்து சுயம் பிழைத்தோங்கும். பிடித்தமானதாகவே வளரும் வாழ்க்கை”
(வைர வரிகள்)
“தெளிவு அவசியம். உள்ளத்தில் அமைதி. இன்று நிச்சயம் அமைதி மேலோங்கியுள்ளது. எதிலும் என்னைக் குறைத்து உள்ளதை உள்ளவாறே காணும் அமைதி. அரங்கன் கருவறையில் அரைநிமிட நாழிகை என்றாவது கிட்டும் அமைதி.”
(நூலாசிரியரின் எண்ண ஓட்டத்திற்கு நன்றி)
“மனிதம் என்பது திறமையில்லை. திறமையற்றவன் என்றும் ‘மனிதம்’ நிரம்பியவனாயிருக்கலாம். எங்கும் மனிதனாயிருக்கலாம். திறமை இருப்பதனாலேயே ஒருவன் திறமையற்றவனின் வாழ்வைத் தீர்மானித்து விட முடியாது. அமெரிக்காவில் பலர் செய்வது போல ‘மனிதம் அற்ற திறமை’ மடமை. மனிதமற்ற வல்லமை கொடுமை. உத்தமர்களின் உள்ளங்கள் மனிதநலத்திற்கே என்றால் மத்யமர்களின் மனிதமும் மனிதகுலத்திற்கே. மனிதமே குலத்தைப் பேணுகையில் தனிமனிதத் திறமைகளுக்கு தனித்த உருவேது?”
“லோகக்ஷேமம் வஹாம்யஹம், வஸுதைவ குடும்பகம் என்பவையெல்லாம் ஏற்றளிப்பது மனிதத்தையே. மனிதகுலத்தை ஆள நினைக்கும் கேப்பிட்டலிசமோ கம்யூனிசமோ அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். அந்நாணயம் மனிதத்தை விலைபேச முடியாச் செல்லாக்காசு. காதலும், காமமும் நாணய தரிசனங்களே. கிளரொளி இளமை வெளியில் சுண்டிவிட்ட நாணயம். அந்நாணயம் ‘சர்வே ஜனா சுகினோ பவந்து’ என்று புரந்து பொலியும் நித்யமான அன்பை விலைபேச முடியாத செல்லாக்காசு.”
“அறிவேட்கையுடன் அடையமுடிந்த எதுவோ அன்றே அரங்கனிடம் அறிவிலியாய்ப் பெற்றிருக்க முடிந்ததுவே. எதுவும் இலவசமாய் உனக்குக் கிடைப்பதில்லை. ஆனால் இலவசமாய் இங்கு இருப்பதை இருக்கும் இடத்திலேயே விலையின்றி நீ சென்றடையலாம். இதுவும் ஏதோவொரு ஞானமரபின் சாரமாகத் தான் இருக்க வேண்டும்.”
மேற்கூறிய ‘அமெரிக்க தேசி’ புத்தகத்தில் ஆசிரியர் திரு.அருண் நரசிம்மன் அவர்கள் தேசிகன் கதாபாத்திரத்தில் தன்னைப் பொருத்திப் பார்த்து பரவசத்துடன் அனுபவங்களை வாசகர்களுடன் பல இடங்களில் பகிர்ந்துள்ளார். ஆசிரியரின் நல்ல எண்ணம்தான் இப்புத்தகத்தை எழுதத் தூண்டியிருக்கிறது. மிகவும் நல்ல சிந்தனைகளையும் போதனைகளையும் நாம் வாழும் வாழ்க்கைக்கு எது மிகச் சிறந்தது, தேவையானது என எல்லாவற்றுக்கும் விடை இப்புத்தகத்தில் பல இடங்களில் காண முடிகிறது.
என் மூத்த மகன் விக்னேஷ்வரனும் கதையில் வரும் தேசிகன் போல் … அவனது நல்வாழ்க்கைக்கு ஆசீர்வதித்த இறைவனுக்கு நன்றி, நன்றி, நன்றி. [இந்தப் பத்தியில் தனிப்பட்ட குடும்பத்தின் தகவல்கள் இருப்பதால் பொதுவெளியில் வைப்பதற்கு முன்னர் அவற்றை நீக்கியுள்ளேன் — அருண்]
அன்புள்ள விக்னேஷ்வரனுக்கு,
பொங்கல் நாள் வாழ்த்துகள்.
உங்களுடைய மின்னஞ்சலுக்கு நன்றி. நிறைவாக இருந்தாலும் வாசிக்கையில் ஆச்சர்யமே ஓங்குகிறது. உங்களுடைய, உங்கள் தந்தையாருடைய வாசிப்பனுபவங்களுடன் உங்கள் மனைவி விஷ்ணுப்பிரியாவின் வாசிப்பனுபவத்தையும் சேர்த்து கவனிக்கையில் சில கருத்துகள் சொல்லத் தோன்றுகிறது. சுருக்கமாகவே அளிக்கிறேன்.
புலம் பெயர்ந்து சிலகாலம் வாழ்ந்த தம்பதியர் உங்களிருவருக்கும் இந்நாவலின் வாசிப்பனுவம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் எதிர்பார்க்கக் கூடியவையே. நல்லவேளையாக அவை உங்களிருவருக்கும் பயனுள்ளவையாகவே இருந்துள்ளது என்று அறிகையில் நிம்மதியே. உங்கள் தந்தையின் வயதொத்த அல்லது மூத்த வயதான பலருக்கும் இந்நாவல் பிடித்திருந்திருக்கிறது. சில ஆண்டுகளாக என்னுடன் பகிரப்படும் வாசகக் கருத்துகளில் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. சிற்றூரிலிருந்து தொடங்கி நாடு கடந்து மாநகரம் கண்டு ‘வயதிற்கு வர’ முயலும் ஒரு கல்லூரி மாணவனின் அனுபவங்கள் மனவோட்டங்கள் கருத்துகள் ஏன் மூத்த வயதினரையும் பாதிக்கிறது? அவர்களுக்கும் நாவலின் நாயகன் போலவே மகன் மகள் இருப்பார்களே என்பது ஒரு பதில்.
மீட்பின் உறுதியைக் கொஞ்சமேனும் வழங்கமுடியாத கலை ஆக்கங்களால் அவற்றை அனுபவிக்க விழையும் மனிதனுக்கு என்ன பயன். இந்நாவலை எழுதுகையில் என்னளவில் மீட்பளிக்கவல்ல கலைவடிவத்தை முயல்கிறோம் அதற்கான வீச்சைக் குறைக்காமல் வழங்க வேண்டும் என்பதை மட்டுமே உணர்ந்திருந்தேன். அதனாலேயே எழுத்தார்வமும் புனைவு வடிவப் பரிசோதனை விருப்பங்களும் இழுத்துச் சென்ற போக்கில் எழுதிக்கொண்டு போனாலும் நாவலின் சம்பவங்களில் வாய்ப்பமைகையில் மீட்பை அடிக்கோடிடவே முயன்றிருக்கிறேன் — சில இடங்களில் துருத்திக்கொண்டு நின்றாலும், உபதேசக் கருத்துகளாகத் தொக்கி நின்றாலும் திருத்தவில்லை. இந்நாவலின் மீட்பாம்சங்களே அவற்றை உணர முடிந்த (வயதான) அனுபவசாலிகளைக் கவருகிறது என்று கருதுகிறேன்.
இலக்கியம் (கலை) வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் என்பது ஒரு சாரரின் நம்பிக்கை. நமது வாழ்க்கையே இலக்கியத்துடன் அவ்வப்போது ஒத்துப்போவதாகத் தென்படலாம் என்றே கருதுகிறேன். இதன் வெளிப்பாடே நமது தனிப்பட்ட வாழ்க்கையின் சில வினாக்களுக்குத் தேர்வான விடைகளை இலக்கியம் வழங்கும் என்கிற நம்பிக்கை. இதுவும் மீட்பு எனும் யாவருக்கும் பொதுவான கலைக் குணத்தின் சிறு அம்சமே. இவ்வாறு நேரடியாகச் சால்பான விடைகளை வழங்கியதாக நாம் கருதிக்கொள்ளும் குறிப்பிட்ட ஆக்கத்துடன் இணக்கமான உறவேற்படுத்திக்கொள்கிறோம். நம்மை ஏமாற்றிவிட்டதாகக் கருதும் ஆக்கங்களைப் ‘பயனற்றவை’ என்று ஓரங்கட்டுகிறோம்.
நீங்களும் உங்கள் மனைவியும் இந்நாவலை வாசித்துப் பெற்ற அனுபவம் ஒரு வகை; உங்கள் தந்தையாரின் வாசிப்பனுபவம் வேறு வகை. ஒரு நல்ல நாவலின் வாசிப்பனுபவம் எந்த வாசகரை எந்த கட்டத்தில் எவ்வகையில் பாதிக்கும் என்பதை அனுமானிக்க முடியாது. தமிழில் விமர்சகராக அறியப்படுபவர் நாவல் வெளிவந்த சமயம் தனது ‘படித்து மிகவும் நொந்துபோன நாவல்கள்’ பட்டியலில் ‘அமெரிக்க தேசி’யை முதலிடத்தில் வைத்திருந்தார். சாந்தி.
அன்புடன்
அருண்
தளத்தில் வாசிக்க →
மாநகர் (சு)வாசம்
மார்கழி தை முடிந்து இன்றும் குளிர்கிறதே காலையில் பத்து மணிக்கும் மாநகரில் பல இடங்களில் பனிப்புகை போலிருக்கிறதே. உலகில் பல மாநகரங்களில் மாசுக் காற்றினால் இன்றளவில் ஆண்டு முழுவதும் இவ்வாறான பனிப்புகைக்காலமே. முன்பனி பின்பனி என்றில்லை நடுபனி கெடுபனி. அனைத்துமே பகலில் வெளிர் மஞ்சள் நிறத்தில்.
மதிபேசிக்களில் ‘க்ளீன் யேர் இண்டக்ஸ்’ போன்ற ஆப்புக்களின் வழியே சுற்றுச்சூழலையும் அவற்றின் மாசுக்களையும் பொறுப்பான குடிமகனாக நாள்தோறும் கவனித்து காரேரி அலுவலகம் சென்றதும் ‘இந்த நாடு நேரே நாய்களிடம் சென்றுகொண்டிருக்கிறது’ என்று சக மதிபேசித் தலைமுறையினரிடம் கையாலாகாத அறச்சீற்ற முறையீட்டில் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடும் என்னைப்போன்ற மற்றுமொரு ‘வாட்ஸப் வாரியர்’ ஆக இருக்கும் உங்களுக்கும் இது தெரிந்ததே.
உலக நாடுகளின் சுவாசக் காற்றுத் தரத்தின் அளவீடு மணிநேர துல்லியத்தில் [https://waqi.info/\<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg>] இணையதளத்தில் கிடைக்கிறது. கார்பன் சல்பர் நைட்ரஜன் இவற்றின் ஆக்சைடுகள் சுவாசிப்பதால் காலப்போக்கில் கேடு என்றால் சாலைப் போக்குவரத்தினால் காற்றில் உலவும் துகள் மாசுக்கள் நுரையீரலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்பவை.
நெஞ்சுக் கூட்டினுள் தலைகீழாக வேர்விட்டு வளர்ந்த மரம் போல நுரையீரல் தொண்டைக்குழாயில் சுவாசக்குழாய் அடிமரமெனத் தொடங்கிப் படிப்படியாகப் பல இரட்டைக் கிளைகளாகப் பிரிந்து ‘அல்வியொலர் ரீஜன்’ என்றழைக்கப்படும் பிரதேசமாக விரிகிறது. இதன் முடிவில் அதாவது பதினேழாம் கிளை முதல் இருபத்தியோராம் கிளைவரை மைக்ரோ- அளவில் (இங்குள்ள முற்றுப் புள்ளி ஒரு மில்லி மீட்டர் என்றால் அதைவிட ஆயிரத்தில் ஒரு பங்கு சிறிதான அளவு) பல்லாயிரக்கணக்கானப் பொத்தல்களாகி முடிகின்றன. நாம் ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கையிலும் மூக்கு தொண்டை எனத் தொடங்கி இந்த அல்வியொலைக்கள் வரை வந்துபோகும் சுவாசக்காற்று அங்கு (17 முதல் 21 வரையிலான கிளைகளைச்) சுற்றியுள்ள தசைச் சுவர்களில் பொதிந்திருக்கும் ரத்தநாளங்களினூடே பாய்ந்திருக்கும் ரத்தத்தோடு பிராணவாயு கரியமிலவாயு இவற்றைப் பரிமாறிக்கொள்கிறது. ஆக்சிஜன் செறிந்த ‘நல்ல ரத்தம்’ இருதயத்தின் உந்துவிசையோடு உடலுக்குள் பாய்கிறது. மேலே குறிப்பிட்ட அசுத்தக் காற்றின் மாசுத் துகள்களின் ஒரு சாரர் மைக்ரோ அளவினர் என்பதால் நகரவாசிகளின் நாசித்துவாரங்கள் வழியே நுரையீரல் உடல்மரத்தினுள் சுவாசத்தோடு புகுந்து முதல் பல கிளைகளையும் கடந்து எங்கு ரத்தத்துடன் ஆக்சிஜன் பரிமாற்றம் நிகழ்கிறதோ அந்த ‘அல்வியொலை’ காற்று ஓட்டைகளைச் சல்லடைக்கண்களில் உமித்துகள்களென அடைத்துக்கொள்கின்றன. நுரையீரல் காலப்போக்கில் செயலியக்கம் குன்றி ரத்தம் முழுவதுமாகத் தூய்மை பெறாமல் வெளியேறும்.
புழுதிக்காற்றின் தூசித் துகள்கள் எளிதில் நூரையீரல் வரை உட்புகாமல் தடுப்பதற்கே மூக்கினுள் மயிர்கற்றைகளும் இன்னபிற ‘போரஸ்’ சல்லடைகளும் உள்ளன. தும்மலை வரவழைத்து ஓரளவு பாதுகாக்கவும் செய்கின்றன. குறைந்த பட்சம் அருகிலிருப்போர் ‘தீர்க்காயுசு’ என்று வாழ்த்துவதினாலும் ஆயுள் கெட்டியாகலாம். ஆனால் காற்றில் மாசுத்துகள்கள் மைக்ரோ- அளவில். மூக்கின் முடிக்கற்றை சல்லடைக்கண்கள் சுமாராக 50 - 100 மைக்ரான்கள் என்றால் PM2.5 PM10 போன்று தரம் பிரிக்கப்படும் இந்த மாசுத் துகள்கள் பத்து மைக்ரான்களுக்கும் குறைவான அளவுடையவை. மணற்புழுதித் துகள்களைவிட அளவில் சிறுத்திருப்பதால் நாளடைவில் இவை சுவாசத்தோடு உள்சென்று ஓரளவேனும் நுரையீரல் ‘அல்வியொலை’ சுவாசப் பொத்தல்களைப் பதம் பார்த்துவிடுகின்றன.
இந்தியத் தலைநகரம் டில்லி மாசுச்சூழலினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநகரம். டில்லியில் காற்றில் நாள்தோறும் போக்குவரத்து உண்டாக்கும் மாசு சுவாசச் சுகாதாரத்தின் அபாயகட்டதிற்கு அருகிலேயே. இதைக் குறைப்பதற்கென மாநகராட்சி திட்டங்கள் சில வகுத்திருக்கிறார்களாம். அதில் ஒன்று ஒற்றைப் படையில் இரட்டைப் படையில் முடியும் எண்கள் கொண்ட வாகனங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாளே சாலையில் இயங்க அனுமதி. திட்டத் தாளின் எதிர்பார்ப்பு அன்றாடம் சாலையில் புழங்கும் வாகனங்கள் பாதியாகக் குறைந்துவிடும் என்பதே. சில ஆண்டுகள் முன்னர் அமலாக்கினார்கள் என்று அறிகிறேன். முதலாண்டு அமர்க்களமான வெற்றி. திட்டத்தின் நோக்கம் நிறைவேறி ஓரளவு காற்றில் மாசு குறைந்துள்ளதாகவே அளவீடுகள் சொல்லியதாம். அடுத்த ஆண்டிற்குள் கார்களில் ஊர்மேயும் தலைநகர மேல்நடுத்தர வர்க்கம் சுதாரித்துக்கொண்டது. கிட்டத்தட்ட அனைவருமே தங்களிடம் ஏற்கெனவே இல்லாத இலக்கத்தில் (ஒற்றைப் படையில் வைத்திருப்பவர் இரட்டைப் படையில் என்று) பழைய வாகனம் ஒன்றையும் வாங்கிக்கொண்டார்கள். தீர்ந்தது அவர்கள் பிரச்சினை. அனுமதிக்கப்பட்ட படையில் முடியும் எண் கொண்ட காரிலேயே அலுவலகம் அலுப்பகம் அனுதினமும் செல்லலாம். இந்த ஆண்டு அங்கு சாலைகளில் வழக்கத்தைவிட அதிக கார்கள்.
டில்லி காற்றில் மாசு ஏற்கெனவே இருந்ததைக் காட்டிலும் இந்த ஆண்டு மோசம். சென்னை மாநகரின் மையத்தில் சுவாசக் காற்று மோசம் என்றால் மும்பையில் படுமோசம். டில்லி அதையும் தாண்டி… தெருவில் நடப்பதற்கே இன்று மூச்சுவாங்குகிறார்களாம். கருத்தரங்கிற்காகத் தொட்டுவிட்டு வந்த சீனாவின் டாலியன் நகரம் மட்டுமே நான் பார்த்தவரையில் டில்லியைவிட மோசம். மாநகரங்களின் சுவாசக் காற்றை மாசுபடுத்துவதிலுமே சீனர்களை நம்மால் விஞ்ச முடியவில்லை என்று ஆறுதலடைந்துகொள்ளலாமோ. ஏற்கெனவே சீனாவின் ‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’ திட்டத்தின் வெற்றியால் அடுத்த பத்தாண்டிற்குள் இந்தியாவே உலகின் அதிக மக்கள்தொகைகொண்ட நாடாகப்போகிறது. சீனாவின் மீதான நம்முடைய இந்தப் பெருவெற்றியைக் கொண்டாட அதற்குள் தலைநகர டில்லிவாசிகளும் சீன இறக்குமதியான கொரோனா தொற்று இல்லாமலேயே சுவாசிப்பதற்குச் சுகாதார முகக்கவசங்களை மாநகராட்சி பரிந்துரைக்காமலேயே அணிந்திருப்பார்கள்.
இதுதான் நம்ம இந்தியா. இந்தச் சுவரில் எழுதாதே என்று அறிவிப்பு இருக்கட்டும் அதற்கடியில் ‘சரி’ னு எழுதிவைக்கும் அறிவுஜீவி இங்கு ஏராளம். சட்டம் போட்டு இங்கு எதையும் திருத்திவிட முடியாது.
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று கண்ணதாசன் திரையிசைப் பாடல் ஒன்றில் எழுதிவைத்தார். இன்று நானும் அத்திருடர்களில் ஒருவனே என்றாகையில் அறச்சீற்றமெல்லாம் நமுத்த பட்டாசாகிவிடுகிறது.
இளமையில் இடதுசாரி ஆட்சிமுறையே இந்நாட்டிற்குத் தேவை என்று கருதியிருக்கிறேன். இன்று மென்சர்வாதிகாரமே செல்லுபடியாகலாம் என்று தோன்றுகிறது. கட்டற்றப் பேராசைப் பெருவளர்ச்சி என்றில்லாமல் மக்கள்தொகையில் தொடங்கி உணவு குடிநீர் மின்சாரம் இவற்றின் தன்னிறைவு எனப் பலமுனைகளிலும் திட்டமிட்ட வரையறைகள் நடைமுறையில் அமலாக்கப்படும் கட்டுப்பாடான வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல.
வயதாகிவிட்டது. வழிநடத்து அல்லது பின்தொடர் இல்லை குறுக்கிடாமல் ஒதுங்கு என்று லீ இயகோகா சொன்னது நினைவிற்கு வருகிறது. அடிக்கடி தும்மினாலும் சொச்ச ஆயுளில் உலக மாநகரங்களைத் துறந்து தூய காற்றைச் சுவாசித்திருக்க எங்கு ஒதுங்குவது என்று முடிவெடுப்பதிலேயே திணறல். மூச்சுத் திணறல் இல்லை.
தளத்தில் வாசிக்க →
நூலறிவு
மொழியின் அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்களை — உயிர் மெய் உயிர்மெய் என — வைத்துக்கொண்டு அம்மொழியின் சொற்களை உருவாக்கலாம். அதே பழைய அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்களால் திடீரென ஒருநாள் அன்றுவரை அம்மொழியில் இல்லாத புதிய சொற்களையுமே உருவாக்கலாம். உச்சரிப்பிற்குத் தேவை எனக் கருதி இன்னொரு நாள் சொல்லாகவே கண்டெடுத்த ஓசைத்துண்டைப் பிரித்து மேய்ந்து புதிய அடிப்படை ஒலிக்குறி ஒன்றை அதுவரையில் அம்மொழியில் இல்லை என்றாலும் கண்டுகொண்டு சேர்த்துக் கொள்ளல்லாம். மொழியின் அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்களையே விருத்தி செய்கிறோம் என்றாகலாம். அம்மொழி ஆதரவாளர்களின் எதிர்ப்பும் அதற்கான சமாளிப்புகளும் தனி.
மொழி வளர்ச்சியில் மேற்படி முறைமை ஒருவாறு இயங்குவதால் கூடுதலாக ஒன்றையும் சொல்லலாம்: முயன்றால் அடிப்படை எழுத்துக்களை வைத்துக்கொண்டு ஒரு மொழியின் அனைத்துச் சொற்களையும் — அம்மொழி அகராதியை — உருவாக்கிவிடலாம். ஆனால் எதிர்போக்கில் ஒரு மொழியின் சொற்களில் சிலவற்றை மட்டும் வைத்துக்கொண்டு அம்மொழியின் அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்கள் அனைத்தையும் கண்டுகொள்ள இயலாது. அதாவது சொல்லகராதி எனும் புத்தகத்தைத் தவிர்த்துவிட்டு ஒரு மொழியில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை வாசித்த பின்னரும் அம்மொழியின் அனைத்துச் சொற்களையும் தெரிந்துகொண்டுவிட இயலாது.
மேற்படி வியர்த்தமான முயற்சியே அறிவியலில் — குறிப்பாக இயற்பியலில் — இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
மனிதனின் ஐம்புலன்களின் வழியே காண்பவை கற்பவை அனைத்தையும் புரிந்துகொள்வதற்காக அதே புலன்நிலைப் படிமத்தில் பல விதிகளை உருவாக்கிக்கொள்ளலாம். சரிவருகிறதா எனப் பரிசோதித்து ஏற்கலாம். ஆனால் அவையே அடிப்படைகளா என உறுதிபடுத்த அப்புலன்நிலை படிமத்திலேயே இருந்துகொண்டு அருதியிட இயலாது. இயலவில்லை.
நாம் காணும் உலகம் நிரையிலானது என்கிறோம். அந்நிரையினுள் என்ன. மூலக்கூறுகளின் கூட்டணியாம். அம்மூலக்கூறுகளினுள்… அவை அணுக்களினால் ஆனவை. அணுக்களினுள்… எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் போன்ற உட்துகள்களினாலானவை. மனிதப் புலன்களினால் நேரடியாகக் கண்டுகொள்ள முடியவில்லையே. கவலையில்லை. நுன்புலன் கருவிகள் கண்டுபிடித்துள்ளோம். அவற்றைக் கொண்டு பரிசோதித்து மேற்படி கூற்றைச் சரிபார்த்தும் விட்டோம். ஓகே. அணுக்கரு துகள்களினுள்… அதனினுஞ் சிறிய அடிப்படைத் துகள்களான குவார்க்குகள். குவார்க்குகளினுள்… பல்பரிமாண நூல்களினாலானவை குவார்க்குகள் என்று கருத்தாக்கம் முன்வைத்துள்ளோம். அண்டத்தின் அடிப்படை காரணி அந்நூல்களே என்கிறோம்.
இடைச்சிந்தை: மொழியினால் நூல்களா நூல்களால் மொழியா. நூல் எனும் சொல்லிற்கு இழை என்றும் புத்தகம் என்றும் பொருளுண்டே. இரண்டையும் வைத்து உதாரணங்களில் நான் தாவிப் பேசுவது குழப்பமாகிறது என்றால் அதுவும் இக்கட்டுரையின் உட்பொருளே. தொடர்ந்து வாசியுங்கள்.
இயற்பியல் நூலைத் தொடர்வோம். பரிசோதனையில் இவ்வண்டத்தில் மேற்படி நூல்களின் இருப்பு பற்றி ருசு… இல்லை இந்நூல்கள் நிஜத்தில் உள்ளதா என்றறியோம். இவை கணிதப் பொருள்கள் கணித மாதிரிகள். செங்கற்களாக இவற்றை வைத்துக் கட்டி எழுப்புகையில் கட்டடம் உருவாகும் என்பது உத்திரவாதம். அக்கட்டடமே அண்டம் எனலாம். மனிதன் உருவாக்கி வைத்துள்ள புலன்கருவிகளால் அக்கட்டடத்தையே ஓரளவு கண்டுகொள்ள முடியும். செங்கற்களை அல்ல. அதாவது மனிதனால் அவனது நுன்புலன் கருவிகளினாலும் சொற்களாகவே அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. மொழியின் அடிப்படை ஒலிக்குறிகளை அல்ல. இயற்பியல்படி மொழி உதாரணத்தில் பெரும் நூல்களையே ஓரளவேனும் வாசிக்கிறவனால் அம்மொழியின் அடிப்படையான ஒலிக்குறிகளை முழுவதுமாகப் பிரித்துப் புரிந்துகொள்ள இயலவில்லை.
குவார்க்குகள் வரை தேர்வான நுன்புலன் கருவிகள் வைத்துப் பரிசோதனைகள் வழியே நேரடியாகவோ சிவத்தைக் காண்கையில் சற்றே விலகி இரும் பிள்ளையாய் என்றவாறு மறைமுகமாகவோ கண்டுகொண்டிருக்கிறோம். கண்ணை மறைக்கும் நந்தியானதால் மூலக்கூறுகள் போன்றவற்றை மனிதப் புலன்களின் வழியாகவே நேரடியாக அறிந்துகொள்ள முடிகிறது. அணுக்களையும் அவற்றினுள்ளே எலக்ட்ரான் போன்றவற்றையும் நம்முடைய புலன்களைக் காட்டிலும் மேம்பட்ட நுண்ணோக்கிகள் போன்றவற்றினால் பார்க்க அறிய முடிகிறது.
வகைக்கொன்றாய் இரண்டு மூன்று குவார்க்குகளின் விதிக் கூட்டணிகளால் கட்டமைக்கப்பட்ட — பெர்மியான் போஸான் எனப் பிரித்து வகுக்கப்பட்டிருக்கும் — அணுக்கரு துகள்கள் அனைத்தையுமே நுண்-புலப் பரிசோதனைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இன்று நம்மால் அறிய முடிகிறது. ஸ்டாண்டர்ட் மாடல் எனப்படும் கட்டமைப்பிற்குள் சுமார் இருபத்தியந்து அணுக்கரு துகள்கள் உள்ளன. அனைத்தையுமே பரிசோதனைகளின் வழியே இனம் குணம் மனம் கண்டுகொண்டு அறிய முடியும். சமீபத்தில் — சில ஆண்டுகள் முன்னர் — கண்டது கடவுள் துகள் எனப்பட்ட கன்றாவித் துகளான ஹிக்ஸ் போஸான். பத்து பில்லியன் டாலர் செலவில் ‘வெற்றிகரமாக’ இயக்கப்பட்ட பெரிய ஹேட்ரான் மோதி-யைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகளின் வழியே கண்டுகொண்டோம்.
நிரையின் அடிப்படை கட்டமைப்பு அடிநாதம் என்று கருதப்படும் ‘நூல்களை’ இன்றளவும் எந்தப் பரிசோதனையிலும் கண்டுகொள்ள முடியவில்லை. சொல்லப்போனால் இவற்றை கண்டுகொள்ள அறிய எந்தவகைப் பரிசோதனை நிகழ்த்துவதென்றெ புரியவில்லை. பெ.ஹே.மோ. வின் பரிசோதனைகளில் ஏதாவது புரிபடும் என்று கருதினார்கள் பலனில்லை. பெ.ஹே.மோ. வின் பரிசோதனைகளில் எந்தப் புதிய துகள்களும் தென்படவில்லை. புதிய துகள்கள் பல இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றன. மேலும் புதிய கணித மாதிரிகள். நுண்துகள்களின் ‘மிருகக்காட்சிச்சாலை’யைச் சமாளிப்பதற்கென ‘சூப்பர் சிமெட்ரி’ எனும் கருதுகோளை முன்வைத்திருக்கிறார்கள். தென்பட்ட கண்டறியப்பட்ட ஒவ்வொரு அணுக்கரு துகளுக்கும் ஒரு எதிர்மறை துகள் இருக்கவேண்டும் என்பதே ஊகம். துகள் சட்டைக்கும் மேல் ‘டை’ கட்டிக்கொண்டால் எதிர்மறை துகள் ‘ஆண்டை’ கட்டிக்கொள்ளுமாம்.
அங்கங்களைத் தொட்டுத் தடவிப்பார்த்து எண்ணிக்கையில் கண்டபடி அதிகரித்துவிட்ட உதிரிப் பாகங்களை வைத்துக்கொண்டு அறையில் கண்ணெதிரே கடந்து போகும் யானையைக் கட்டமைக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். இன்னொரு வேடிக்கையும் உண்டு. அதே யானை ஒரு அறிவியலாளர் குழுவிற்கு இன்று பட்டை போட்டுச் சிவன் கோயிலில் உலாத்திவிட்டு நாளை இன்னொரு குழுவிற்கு நாமமிட்டுப் பெருமாள் கோயில் தூணில் கட்டுண்டு காலாட்டுகிறது. இன்றளவில் ஒரு புலன்நிலையில் துகள்-அலை இருண்மை கருத்தாக்கமே குவாண்டம் மெக்கானிக்சின் அடிப்படை புரிதல் என்றாகிவிட்டுள்ளது.
மொழி உதாரணத்தை ஒப்புமைக்கு மீண்டும் வம்பிற்கிழுத்தால் ‘சூப்பர் சிமெட்ரி’ என்பது மொழியின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரே எதிர்மறையான சொல் உண்டு என்பதா. இல்லை. அதைவிட மோசம். மொழியின் சொற்களை உருவாக்கவல்ல அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்கள் உள்ளதே அவ்வொலிக்குறி எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் எதிர்மறையான ஒலிக்குறி எழுத்து ஒன்று உண்டு என்கிறோம். (என் புரிதலில் கோளாறிருக்கலாம் தேவையெனில் இயற்பியலாளர்களிடம் பேசிச் சரிசெய்து சொல்கிறேன்) இது சரி என்றால் மேற்படி எதிர்மறை ஒலிக்குறிகள் அதாவது இயற்பியலின் எதிர்நிரைத் துகள்கள்… அவையும் நிரைதானே ஒலிக்குறிகள் தானே… இருக்கலாம். ஆனால் மொழி உதாரண விதிப்படி அவ்வொலிக்குறிகளால் உருவாகும் சொற்களை மனிதனால் பேச முடியாது. புரிகிறதா பாருங்கள்.
ஏற்கெனவே இன்றிருக்கும் மனித மொழியின் சிலபல சொற்களை வைத்துக்கொண்டு நான் பேசுகையிலேயே — இக்கட்டுரை போல — அடுத்தவருக்குப் பெரும்பாலும் புரியாமல் போய்விடுகிறது.
இருந்தாலென்ன. இதுவும் ஒருவகைத் தேர்ச்சியே.
தளத்தில் வாசிக்க →
மெக்கானிக்கல் பொறியியல் துறையின் வருங்காலம்
அடுத்த பத்து வருடங்களில் நம் நாட்டில் ‘மெக்கானிக்கல் இஞ்சினியரிங்’ துறையின் வருங்காலத்தை அலசுவதற்கென ஒரு வருடம் முன்னால் அகில இந்திய தொழிற் கல்வி குழு (AICTE) இணையம் வழி கருத்தரங்கு ஒன்றை நடத்தினர். அக்கருத்தரங்கைத் தொடக்கிவைத்துச் சிற்றுரை வழங்கச் சொன்னார்கள்.
2021 AICTE FutureME Workshop at IISc கருத்தரங்கு சுட்டி: [https://mecheng.iisc.ac.in/mecheng75/workshop.html<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg>]
ஆங்கிலத்தில் சுமார் ஐந்து நிமிடங்கள் வரவேற்புரையைக் கானொளியாகச் செய்து அனுப்பியிருந்தேன். வரவேற்புரை வரவேற்பைப் பெற்றதாக அறிந்தேன். அக்கானொளியை கீழே கொடுத்துள்ளேன்.
▶ Video (VideoPress 0gG4UVIo)<svg aria-hidden="true" class="external-icon" style="max-width:0.8em;max-height:0.8em;" viewBox="0 0 512 512"><path d="M320 0H288V64h32 82.7L201.4 265.4 178.7 288 224 333.3l22.6-22.6L448 109.3V192v32h64V192 32 0H480 320zM32 32H0V64 480v32H32 456h32V480 352 320H424v32 96H64V96h96 32V32H160 32z"></path></svg>
தமிழில் சாரம் பின்வருமாறு. (வாசிக்க ஐந்து நிமிடத்திற்கு மேலாகலாம்)
அனைவருக்கும் வணக்கம். கருத்தரங்கின் மூன்று உட்பிரிவுகளில் விவாதங்களை வழிநடத்தும் நோக்கில் சுருக்கமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.
கணினி நிரல்கள் எழுத முடிந்தவர்களுக்குக் கல்லூரிப் பட்டப்படிப்பு தேவையில்லை. இதுவே இன்றைய சிலிக்கன் பள்ளத்தாக்கின் வாதம். கணினி ஐடி துறையைப் பொறுத்தவரை சரியே — முன்னோடிகள் என்று அறியப்படும் அத்துறையின் தலைவர்கள் இவ்வகையினரே. கல்லூரிப் படிப்பை முடிக்காமல் கைவிட்டவர்கள். ஆனால் மிகக் கடுமையான உழைப்பாளிகள். இந்த விஷயம் கேலிப்பேச்சின் முனைப்பில் மறந்துவிடும். இது கேலிப்பேச்சல்லவே.
சார்ந்த கொழிக்கும் தொழில்துறை ஒன்று பட்டப்படிப்பு இல்லாமலேயே செல்வச் செழிப்பிற்கு உறுதியளிக்கையில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் என்ன செய்யலாம்? அத்துறையும் இதே போல விளம்பரம் செய்து கொள்வதா செய்யத்தான் முடியுமா. அல்லது மாற்று வழியாக இதுநாள் வரை பட்டப்படிப்பு என்று எவற்றை போதித்தோம் என்பதை மறுபரிசீலனை செய்துகொள்வதா.
இதுவே இந்தக் கருத்தரங்கின் குறிக்கோள். இரண்டு பிரிவின் கீழ். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் உணர்வு என்று எதை மாணவர்களிடம் கடத்துவது. எவ்வாறு அந்தக் கல்விமுறை அடுத்த பத்தாண்டுகளில் வழங்கப்பட வேண்டும்.
இன்றைய பள்ளி மாணவர் இன்றைய சமுதாயம் இரண்டையும் கருதுகையில் இரு விஷயங்கள் புலனாகின்றது. எனது வாழ்கையிலிருந்தே விளக்குகிறேன்.
பொறியியலாளன் எனும் பேர்வழி மெத்தப் படித்தவன் இல்லை அறிவியலாளன் ஆவதற்கு கைத்திறன் மிக வாய்த்தவனில்லை செயல்திறனாளி ஆவதற்கு சாமர்த்தியசாலியுமல்ல மேலாளர் என்றாவதற்கு. ஆனால் அறிவியல் வழிமுறைகளின் பற்றாக்குறைகளுக்கும் தொல்பழக்கச் செயல்பாடுகளின் போதாமைகளுக்கும் உடன் வேலை செய்பவர்களின் ஏனோதானோ போக்கிற்கும் பழிசுமப்பதற்கு ஒவ்வொரு நிறுவனத்திலும் அப்பேர்வழி அவசியம் தேவை. அப்பேர்வழி அனைவரையும் இறைவன் இரட்சிக்கட்டும். இது ஆர். எப். டூஸ்கி சொன்னது.
டூஸ்கி ஒரு செக்கஸ்லோவாக்கியப் பொறியியலாளர். பொறியியல் துறை நிறுவனங்களின் செயல் நேர மேலான்மை கருத்தாக்கங்கள் சிலவற்றை உருவாக்கியவர். அவருடைய மேற்படி கருத்து என் தந்தையின் கையெழுத்து நோட்டுப்புத்தகத்தில் இருந்து எடுத்தது. அந்தக் கருத்தே எனக்கு நான் எவ்வாறான பொறியியளாலன் என்பதை உணர வைத்தது. பொறியியலை போதிப்பதையும் தெளிவு படுத்தியது.
என் தந்தை திருச்சியில் பாரத மிகுமின் நிறுவனத்தின் கிளை — செக்கஸ்லோவாக்கியா பொறியியல் துறை உதவியோடு — தொடங்கப்பட்ட தினத்திலிருந்து அங்கு வேலை செய்தவர். அதனாலேயே மெக்கானிக்கல் எஞ்சினியரும் ஆனார். இந்தியாவின் முதன்மையான மிகுமின் பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக அது வளர்கையிலேயே என் தந்தையும் பொறியியலாளராக வளர்ந்தார். ஆனால் வருமானப் பணியின் இறுதிப் பத்தாண்டுகளில் அவர் கணினித் துறைக்கு மாறிக்கொண்டார்.
நானோ அப்போதே அவருடைய நோட்டுப்புத்தகத்தை வாசித்து மெக்கானிக்கல் எஞ்சினியரானேன்.
இன்று என் தந்தை இல்லை. இறந்தகாலத்தவர். பள்ளிப் படிப்பை முடித்துவிட்ட என் குழந்தையை என்னால் மெக்கானிக்கல் என்ன பொறியியல் துறைக்கே இட்டுச் செல்ல இயலவில்லை.
மிகவும் அழுத்தினால் அவள் கணினித் துறைய வேண்டுமானால் எடுத்துக்கொள்கிறேன் என்கிறாள். ஏன் என்றால் அத்துறையே வருமானப்பணியில் வெற்றிபெறுவதற்கு ஒரு பட்டப்படிப்பை முடிக்கவேண்டிய கட்டாயத்தைக் கோரவில்லை என்கிறாள்.
அதைவிட முக்கியமாக கணினி (ஐடி) துறையே அவளுக்கு அவள் கைப்பட எதையாவது செய்வதற்கான வழிவகுக்கிறதாம். பள்ளி நாட்களிலேயே கணினியில் நேரடியாக நிரல்களை எழுதிவருகிறாளே. அதன் கல்லூரிக் கல்வியிலும் அவளால் திறம்படச் செயல்பட முடியும் என்று நம்புகிறாள். நேரடியாக அவளின் பங்கும் அதன் முக்கியத்துவமும் அவளுக்குப் புரிபடுகிறது என்கிறாள். மற்ற பொறியியல் துறைகள் போல அவளுக்குத் தெரியாத ஏதோ பெரிய பல விஷயங்களோ அடுத்தவர் யாரோ சொல்லிக்கொடுத்தாலே புரியலாம் என்றோ கணினித்துறையில் அடிப்படைகள் இல்லையே என்கிறாள். ஒரு ‘பைதான்’ கணினி மொழியில் இன்றே பள்ளிப் படிப்பிலேயே நிரல்களை எழுதுகிறேன் அதன் பயன்களை உடனடியாகப் பார்க்கிறேன் மேலும் என்ன செய்ய முடியும் என்றும் இணையம் வழியே தெரிகிறது புரிகிறது. என்னுடைய திறமையினால் அதை வளர்த்துக்கொண்டால் நான் கல்லூரிக்குப் பின்னர் வருமானப் பணியில் என்னென்ன செய்ய முடியும் என்பது இன்றே எனக்குத் தெரிகிறது தனித்து இயங்கலாம் ஒரு பெரிய பல்சக்கரத்தின் ஒற்றைப் பல்லாக மட்டுமே இயங்க வேண்டிய அவசியமில்லையே… அவளின் வாதங்கள்.
மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கிலும் கைப்பட செய்துபார்க்க கற்க (லேத்து) பட்டறை உண்டு. ஆனால் நம்மில் பலருக்கும் அது பெரும்பாலும் அதிகபட்சமாக சகிப்பையும் ஒழுங்கையுமே கொடுத்தது (பெரும்பாலும் அப்பாடத்தில் சொதப்பியதால்).
இதனால் போதனையாளனாக ஒரு கேள்வி: மெக்கானிக்கல் சிவில் எலக்ட்ரிக்கல் என்றெல்லாம் பாகுபடுத்தி ஒரு பொறியியல் கல்வித் திட்டத்தை உருவாக்கி வைத்துள்ளோமே இன்றளவிலும் இந்தத் திட்டமே மாணவர்களுக்குப் பயன்பொருளுடையதா?
மாற்றாக ஒரு கல்வித் திட்டம் அதில் பொதுவான ஒரே பொறியியல் பட்டப்படிப்பு மட்டுமே. பேச்சிலர் இன் ஜெனரல் எஞ்சினியரிங். அனைத்து அடிப்படைகளும் தெரிவிக்கப்படும் பயில்விக்கப்படும். தேறி வெளிவருபவர்களை எந்த (வகைப் பொறியியல்) நிறுவனமும் பணிக்கென வரவேற்கலாம். அந்நிறுவனம் சார்ந்த பொறியியல் உபதுறையில் அங்கு மேலும் பயிற்சி பெற்று தொடர்ந்து பணி செய்திருக்கட்டும்.
இந்த வடிவம் வழக்கத்திற்கு மிகவும் புறம்பானது ஒத்துவராது என்றால் அடுத்த கட்டச் சமரசமாக இன்றிருக்கும் ஒவ்வொரு பொறியியல் துறையும் நெகிழ்வான எல்லைகளை உருவாக்கிக்கொண்டு அடுத்த சார்ந்த துறைகளோடு இணைவதற்கும் அதனால் வேலை வாய்ப்புகளை வளர்த்துக்கொள்ளவும் வழிசெய்து கொள்ளலாம். தேறி வெளிவருபவர் பெயரளவில் மெக்கானிக்கல் இஞ்சினியர் என்றாகட்டும் ஆனால் நிறுவனத்தில் அவரது பணியோ பல இஞ்சினியரிங் துறைகளில் இருக்கலாம். சொல்லப் போனால் மெக்கானிக்கல் சார்ந்த நிறுவனமே இல்லை என்றாலும் அங்கு இவரால் வெற்றிகரமான பொறியியலாளராக இயங்க முடிய வேண்டும். கல்வி வகை செய்ய வேண்டும்.
பல்கலைக்கழகம் என்று யோசித்தால் அனைத்து அறிசார் கருத்துகளையும் சார்ந்த துறைகளையும் ஒருங்கிணைப்பதையே செயல்படுத்தத் தோன்றும். உதாரணமாக பல்கலைக்கழகத்தில் மூன்றே பிரிவுகள் — நியூட்டன் பிரிவு மேக்ஸ்வெல் பிரிவு டார்வின் பிரிவு. கிட்டத்தட்ட அனைத்து அறிவியல்சார் பயன்கல்விகளும் இவற்றுள் அடக்கிவிடலாம். ஆனால் இன்றைய மாணாக்கர்களிடையே இன்றைய சமூகச் சூழலில் மேற்படி ஒருங்கிணைந்த பிரிவுகளைப் புரியவைப்பதே பெரும்பாடாகிவிடலாம். பிறகே அவற்றின் வழியே ஒரு வருமானவழிப் பாதை.
இதனால் புரியும் கேள்வி: மெக்கானிக்கல் எஞ்சினியரிங் துறை இன்றளவில் எவ்வளவு நெகிழவேண்டும்.
அவ்வாறான நெகிழ்வான பொறியியல் துறையை இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு பயில்விப்பது போதிப்பது. கோவிட் தொற்று வந்துபோன இந்த இரண்டு ஆண்டில் இதை மண்டியிட்டுக் கற்றுக்கொண்டுள்ளோம் அல்லவா. கல்விச்சாலை என்றுமே பலரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசிப் பழகிப் பகிர்ந்து… இவ்வாறுதானே இயங்கி வந்துள்ளது. பிளாட்டோவும் அவர் சீடர் அரிஸ்டாடிலும் அகெடமஸ் என்பரின் தோட்டத்தில் காலார நடந்தவாறு பலவற்றைப் பேசிப் போனதினால் அன்றோ அகெடெமியா எனும் சொல்லே கல்விச்சாலைகளைக் குறிப்பிட உருவாகி வந்துள்ளது. பேண்டமிக் எனும் தொற்று வந்துபோனதில் நேரில் சந்திக்காமலே எவ்வாறு கல்வியை வழங்கலாம் என்று சிந்திக்க வேண்டிய நிர்பந்தமாகிவிட்டது.
இதனால் அடுத்ததாக முழுவதுமாகவே இணையம் வழியே — நேரில் கைப்பட என்றில்லாமல் — மெக்கானிக்கல் எஞ்சினியரிங் துறையை போதித்தால் அதன் விளைவுகள் என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும். இணையம் வழியே பட்டப் படிப்பு என்பது இன்றைய காலகட்டத்தின் அவசியமாகி இருக்கலாம் ஆனால் கல்வி போதனை இவற்றிற்குப் பொருள்படுமா சரிவருமா. பல வருடங்கள் தொடர்ந்து இவ்வாறே இயங்க முடியுமா.
நிறுத்திக்கொள்கிறேன். சிந்தனைக்குச் சூல் புள்ளிகள் சிலவற்றை வழங்கியிருக்கிறேன். ஏற்கலாம் மறுக்கலாம் நிராகரிக்கலாம். விவாதத்திற்கு வழிவகுக்கும் என்றே கருதுகிறேன்.
மெக்கானிக்கல் எஞ்சினியரிங் துறையின் எதிர்காலத்தை விவாதிக்க தத்தமது கருத்துக்களோடு இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். வணக்கம். நன்றி.
தளத்தில் வாசிக்க →