Musings

செவ்வாயில் உயிர்
ஏலியன்களை ஏன் எங்கோ தேடவேண்டும். முதலில் அருகில் தேடிப்பார்க்கலாமே என்று நினைத்தால் தேடவேண்டிய இடங்கள் சில உள்ளன.

முதலில் நம் உலகம். அமேசான் காடு, ஆழ்கடல், இமாலயா, ஈஞ்சம்பாடி என பல இடங்களை, காத்து கருப்பு அடிச்சுருமேன்னு தேடாமல் விட்டுவைத்திருக்கிறோம். அவ்வப்போது பிரடேட்டர் (predator) போன்ற திரைப்படங்கள் எடுத்து இங்கெல்லாம் வேற்றுகிரக ஏலியன்ஸ் உலவலாம் என்று பூச்சாண்டி விடுகிறோம். ஆனாலும் அவகாசமிருக்கையில் ஈஞ்சம்பாடி போன்ற பகுதிகளில், அறிவியலார்த்தமான ஏலியன்ஸ், தொல்பொருள் ஆராய்ச்சி என தேடுதலுக்கு முன்னரே வேலிகட்டி பிளாட்டு போட்டு மனிதர்களை குடியேறிவிடுகிறோம்.

ஆனாலும் உலகில் தேடுவதற்கு வேரொரு முக்கிய காரணமும் இருக்கிறது. மாற்று உயிரினங்கள். இவை பற்றி தனியாக எழுதுவோம்.

நம் உலகை அடுத்து ஏலியன்ஸ்களை தேடவேண்டிய இடம் அருகில் இருக்கும் நிலா, வெள்ளி, செவ்வாய் கிரகங்கள், அப்படியே வெளியேறி பிரபஞ்சத்தில் தெக்கால வியாழனின் சந்திரன்கள் அயோ (அய்யோ இல்லை, Io) கானிமீட் (ganymede), தாண்டிப்போய் சனியின் சந்திரர்களான டைட்டன், என்சிலாடாஸ் (enceladaus) இப்படி ஒரு பட்டியல் இருக்கிறது.

எச்.ஜி.வெல்ஸில் தொடங்கி, ஆர்தர் கிளர்க், ரே பிராட்பரி என்று பலர் நம் சூரியமண்டல கிரகங்களில், அவற்றின் சந்திரன்களில் உயிர் சாத்தியத்தை வைத்து சென்ற நூற்றாண்டில் அருமையான விஞ்ஞான புனைகதைகள் எழுதியிருக்கிறார்கள். இன்றும் ஜூப்பிட்டர் ஃபைவ், மார்ஷியன் குரோனிகிள்ஸ் போன்ற சிறுகதைகள், தொகுப்புகள் பிரசித்தம்.

சூரியமண்டலத்து கிரகங்களில் இன்றைக்கு முதலாய், வசீகரமாய் தேறுவது செவ்வாய். சில வருடங்கள் முன் வீனஸ் எனப்படும் வெள்ளியில் நம்போன்ற உயிர் இருக்கலாமோ என்று எண்ணமிருந்தது. இப்போது இதற்கு சான்ஸே இல்லை என்று செவ்வாய்க்கு கவனத்தை திருப்பியுள்ளோம். செவ்வாய் பற்றி சொல்வதற்கு பல விஷயங்கள் உள்ளது. விட்டு, ஏலியன்ஸ் சார்ந்த ஓரிரு விஷயங்களை பார்ப்போம்.

நாம் செவ்வாய் கிரகம் எனும் மார்ஸ், பரப்பில் மிதமிஞ்சிய இரும்பு ஆக்ஸைடினால் பூமியிலிருந்து பார்க்கும் கண்களுக்கு சிவப்பாய் தெரிகிறது. அதனால்தான் மார்ஸ் - கோபமான, உக்கிரமான, ரோமானிய யுத்தக்கடவுளின் பெயர். ஆனாலும் நம்முலகை போல் செவ்வாயில் பூகம்பங்கள் இன்று நிகழ்வதில்லையாம்.

நம் உலகில் படிகற்களினுள் பொதிந்த புராதான படிமங்களை வைத்து கடந்தகாலத்தில் இருந்த உயிரினங்களை ஓரளவு அறிகிறோம். இவ்வகை ஃபாஸில்களை பூமியில் பாதுகாப்பாக எங்கெங்கு எவ்வகை சூழ்நிலைகளில் கண்டெடுக்கிறோம் என்பதைவைத்து, செவ்வாயிலும் வரண்டுவிட்ட கால்வாய் திட்டுக்கள், வற்றிவிட்ட புராதான ஆறுகளின் வழித்தடம் என்று இடங்களை தேர்ந்தெடுத்து படம்பிடிக்க சாம்பிள் கற்கள் கொண்டுவர வின்கலன்களை அனுப்புகிறோம்.

1965இல் ரோந்து வின்கலன் மாரினர் 4, பெர்சிவால் லொவெல் முதலானோர் இருப்பதாய் வலியுறுத்திய (ஏலியபுராணம் கட்டுரையை பார்க்கவும்) கால்வாய்களை இதன் பரப்பில் காணவில்லை. 1971இல் மாரினர் 9 முதன்முதலில் வேற்று கிரகத்தை சுற்றிய செயற்கைகோளானது. பிறகு 1975இல் நாஸா அனுப்பிய வைக்கிங் 1 மற்றும் 2, 1976இல செவ்வாயில் முதன்முதலில் தரையிறங்கிய வின்கலன்கள். செவ்வாயில் உயிர் இருக்கிறதா என்ற நான்கு பரிசோதனைகளை செய்தவையும் இவ்வின்கலன்களே. பார்க்கப்போனால் இதுவரை வேற்றுகிரகத்தில் உயிர் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அறிய செய்யப்பட்ட வெற்றிகரமான பரிசோதனை இது மட்டுமே. மற்ற மார்ஸ்-மிஷன்களெல்லாம் நேரடியாக இக்கேள்விக்கு பதில்கண்டுபிடிக்காத மீடியா திரிபு. இந்த சோதனைகள், முடிவுகள், சச்சரவுகள், பற்றி பின்னர் (அடுத்த பாகத்தில்) விவரிப்போம்.

1992இல் சற்று தடுமாறி, பிறகு 1996இல் நாஸா மார்ஸ் கிளோபல் சர்வேயர் வெற்றிகரமாக செவ்வாய்க்கு அனுப்பியது. 2001இல் கைவிடப்படும் வரை இந்த சர்வேயர் செவ்வாயின் பரப்பை துல்லியமாக மேப் போட்டது. பிறகு 1997இல் அனுப்பிய பாத்ஃபைண்டர் ஸொயோனர் என்கிற ரொபோவை வெற்றிகரமாக தரையிறக்கி படம்பிடித்தது. சமீபத்தில் செவ்வாயில் தரையிறங்கிய ஃபீனிக்ஸ், ஜூலை 31, 2008 என்று ஐஸ்கட்டியை கண்டது. ஆனாலும், பெர்சிவால் லொவெலின் கால்வாய்களை காணவில்லை.

பூமியிலிருந்து அனுப்பிய மார்ஸ் ஒடிஸி, மார்ஸ் எக்ஸ்பிரஸ், மார்ஸ் ரெகொனெய்ஸென்ஸ் ஆர்பிட்டர் மூன்று செயற்கைகோள்கள் (வின்கலன்கள்) இன்னமும் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி, தகவலனுப்பியபடி. ஸ்பிரிட் மற்றும் ஆப்பர்சுனிட்டி என்ற இரண்டு ரோவர்கள், சக்கரவண்டிகள், செவ்வாய் தரையில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. படிக்கும் இத்தருணத்தில் இவை செவ்வாயில் எங்கு உலவுகிறது என்று அறியவேண்டுமா, நாஸவின் http://marsrovers.jpl.nasa.gov/mission/traverse_maps.html வலைதளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

செவ்வாய் கிரகத்தை பொறுத்தவரை அமேரிக்க வானியல் ஆராய்ச்சி நிறுவனமான நாஸா-வின் குறிக்கோள் நான்கு: 1) இதுவரை உயிர் செவ்வாயில் தோன்றியதற்கான ஆதாரம், சாத்தியம், தட்டுப்படுகிறதா 2) செவ்வாயின் சீதோஷ்ணம் எப்படி, ஏன் தோன்றியுள்ளது 3) செவ்வாயின் நிலப்பரப்பின் தன்மைகலை அறிதல் 4) மனிதனை செவ்வாயில் தரையிரக்குவதற்கான சாத்தியங்கள், ஏற்பாடுகள். இதுவரை, இனி, நாஸா செவ்வாய் கிரகத்தில் என்ன செய்தது என்ற அறிவியல், ஆராய்ச்சி, தகவல்கள் http://mars.jpl.nasa.gov என்ற வலைதளத்தில் போதும் போதும் என்கிற அளவிற்கு இருக்கிறது. புரட்டிப்பாருங்கள்.

இப்படி செவ்வாயை அறிய பலமுறை படையெடுத்துள்ளோம். இன்னமும் எடுப்பதற்கான ஆயத்தங்கள் செய்கிறோம்.

ஆனாலும் ஏலியன்ஸ், உயிரினங்கள், மாற்று உயிர், என்று எதுவும் திட்டவட்டமாய் தெரியவில்லை.

நிற்க.

செவ்வாய் இன்று தொலைநோக்கியிலோ விண்கலன்களில் நேரில் சென்றோ பார்ப்பதற்கு குளிர்ந்த, தரிசலான  பாலைவனமாக இருக்கிறது. ஆனால் சில லட்சம் வருடங்களுக்கு முன்னர் தண்ணீர் ஏரிகளும் ஏன் கடல்களும் இருந்திருக்கவேண்டும். நம் சந்திரனின் பள்ளத்தாக்குகளின் வயதையும், அங்கிருந்து அப்பல்லோ 11 அஸ்ட்ரநாட்டுகள் கொண்டுவந்த கற்களின் மூலப்பொருளின் கதிரியக்க தேதியாக்க முறைக்கு (radioactive dating) உட்படுத்தி சந்திரனின் வயதை நிர்ணயித்துள்ளோம்.

கதிரியக்க தேதியாக்கம் பற்றி ஏற்கனவே தேவையான அளவு விவரித்திருக்கிறோம். சந்தேகத்துக்கு சாம்பாராய் ஒருமுறை கவனத்தில் ஓட்டிக்கொள்ளுங்கள்.

அதே தேதியாக்க முறையில், செவ்வாயின் பள்ளத்தாக்குகளின் வயதையும் நிர்ணயித்துள்ளோம். செவ்வாய் தோன்றியது 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னராம்.

அவ்வாறே கதிரியக்க தேதியாக்க முறைகொண்டு, நம் உலகும் அதன் ஜீவராசிகளும் தோன்றியது முறையே 4.5 பில்லியன், 4 பில்லியன் வருடங்கள் முன்னரே என்றும் அறிகிறோம்.

அதாவது நாம் வாழும் இவ்வுலகும், செவ்வாயும், நம் சந்திரனும் சூரியமண்டலத்தில் சமகாலத்தோற்றம்.

இதை ஒத்துக்கொண்டவுடன் அறிவுசார் பொதுஜனமான நம் அனைவருக்கும் வரவேண்டிய கேள்விகளுள் ஒன்று, பின் ஏன் இவ்வுலகில் மட்டும் நாம் இருக்கிறோம், அந்த இரண்டு உருளைகளிலும் ஒருவரையும் காணோம்?

சரி நிலாவில் காற்று இல்லை. தெரிந்துகொண்டோம். நம்மைப்போல் உயிருமில்லை. ஓகே.

செவ்வாயில் ஏலியன்ஸ் இருக்கிறார்களா? செவ்வாயில் உயிர் இருக்கிறதா?

மர்மக்கதையின் கடைசிபக்கத்தை இப்போதே சொல்லிவிடுகிறேன். செவ்வாயில் தற்போது நம்மைபோன்ற உயிர் இருப்பதற்கான நிரூபணம் இல்லை.

ஆனால் நிச்சயமாக இதுதான் மர்மக்கதையின் நிஜமான கடைசிபக்கமா என்று தெரியாது.

கிட்டத்தட்ட அதே சமயத்தில் தோன்றிய இரண்டு கிரகங்களில் ஒன்றில்மட்டும் உயிர் தழைக்கிறது. மற்றொன்றில் ஒன்றையும் காணோம். ஏன்? ஒருவேளை இரண்டு கிரகங்களிலும் தோன்றி, ஒன்றில்மட்டும் மர்மமானமுறையில் அதன் சீதோஷணம் மாறியதால், உயிர் போய்விட்டதா? இல்லை ஒன்றில் மட்டும் தோன்றிய உயிர் மற்றொன்றிற்கு புலம்பெயர்ந்துவிட்டதா? செவ்வாயிலிருந்து பூமிக்கு. ஏன் ஒருக்கால் தோன்றித்தழைத்த உயிர் செவ்வாயில் தற்போது மறைந்துவிட்டது? ஏன் செவ்வாய் ஒரு விடுபடமுடியாத ஐஸ் ஏஜில் மாட்டிக்கொண்டுள்ளது?

இப்படி பல ஏன்கள். விடைகள் நிரூபணத்துடன் இல்லை. இக்கேள்விகளுக்கு பதில் கண்டறிவது முக்கியம். உதாரணமாய், கடைசி கேள்விக்கான பதில், விளைவுகளை அணுமானிக்கமுடியாத சீதோஷணசிதைவுகளை தோற்றுவித்து வாழும் மனிதர்களடங்கிய, நம் உலகிற்கும் பொருந்தும்.

செவ்வாயில் உயிர் பற்றி சில நம்பத்தகுந்த சித்தாந்தங்கள் உள்ளன. சில புரட்டு சித்தாந்தங்களும் உள்ளன.

ஒரு உதாரணம் பார்ப்போம். செவ்வாயில் பொறிக்கப்படுள்ள மனித முகம்.

இது என்ன என்பதற்கு முன், இவ்வகை புரட்டுகள் உருவாகுவதற்கு ஏலியன்ஸ் பற்றிய நம் எண்ணங்களே காரணமாக அமைந்துவிடுவதை குறிப்பிடுவோம்.

ஏலியபுராணத்தில் மற்றொரு பக்கத்தை பின்னோக்கி சென்று புரட்டினால், சார்பியல், கருந்துளை, ஹப்பிள் விதி, ராக்கெட், நாஸா என்று எதுவும் தோன்றியிருக்காத 1802 வாக்கிலேயே செவ்வாயில் உயிரினங்கள் இருந்தால் அவற்றிற்கு நாம் இவ்வுலகில் இருக்கிறோம் என்று தகவலனுப்புவது பற்றி யோசித்திருக்கிறோம். யோசித்தவர் கார்ல் ஃபிரெடிரிச் கௌஸ். கணிதவியலை மேய்ந்தவர்கள் ஒப்புக்கொள்வர், மேதை என்பதற்கு அத்தாட்சி இவரைப்போன்ற சிலரே என்று. அதேபோல், படைப்பூக்கத்திற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை திட்டவட்டமாய் மெய்ப்பித்தவர். இவர் சொன்ன சமிஞ்சை வழி இது. சைபீரிய காடுகளை நடுவில் பெரிய அளவில் தரைமட்டமாக்கிவிட்டு, அவ்வெற்றிடத்தில் கோதுமை பயிரிடவேண்டியது. வானிலிருந்து (செவ்வாயிலிருந்து) பார்த்தால் செங்கோண முக்கோணவடிவில் தெரியவேண்டும். பித்தாகரஸின் பிரசித்திபெற்ற தேற்றத்தை நினைவுட்டும் வகையில். செட்டிக்கு (SETI) முன்னோடி இவ்வகை சமிஞ்சைகள்.

செவ்வாயில் கால்வாய்களை கண்ட, வரைந்த பெர்சிவால் லொவெல், கௌஸின் ஐடியாவை சார்ந்து, சஹாரா பாலைவனத்தில் செங்கோணமுக்கோண குழி தோண்டச்சொன்னார். இவற்றில் எண்ணை நிரப்பி, இரவில் பற்றவைத்தால், செவ்வாய்வரை தெரியுமாறு தீவட்டி. வடிவியல் சார்ந்து தொலைநோக்கி வடிவமைப்பாளர் ராபர்ட் வுட் உலகில் ஒரு இடத்தில் பெரிய கருப்பு துணிகொண்டு போர்த்திவிடவேண்டும், பிறகு சில நேரங்களில் சுருட்டி வைத்துவிடவேண்டும். செவ்வாயிலிருந்து பார்த்தால் உலகம் கண்ணடிப்பதுபோல் இருக்குமாம். சத்தியமாய் இப்படித்தான் world wink என்று சொல்லியிருக்கிறார்.

நல்லவேளை, பொய்கையாழ்வார் சொன்னதுபோல் வையம் தகளியாய் வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காய் யோசித்து, செவ்வாய்வாசிகள் உணர, திருமாலுக்கு நேந்துகொண்டு ஒருவரும் உலகையே கொளுத்தவில்லை. இதுவரை.

ஆனால் விபரீதமாக, இவ்வகை அறிவியல் எண்ணங்களின் நீட்சியாய், வேறு புரட்டுகள் உதித்தன.

உதாரணமாய், சென்ற நூற்றாண்டில் நாஸ்கா கோடுகள் (Nazca lines) பிரசித்தம், கேள்விப்பட்டிருக்கலாம். தென் அமேரிக்காவில் பெருவில், நாஸ்கா பாலாவனத்தில் வானிலிருந்து பார்த்தால் உருவங்கள் தெரியுமாறு நிலத்தில் கோடுகள் இருக்கிறது. இவை ஆறாம் நூற்றாண்டில் அப்பகுதியில் வசித்த நாஸ்கா நாகரீகத்தவரின் செயல் என்று நம்பப்படுகிறது. அறிஞர்கள் இவற்றை இந்நாகரீதத்தின் மத, வழிபாட்டு தேவைகளுக்கான சாமக்கிரியைகளாய் பார்க்கிறர்கள். ஆனால் எரிக் வான் டனிக்கன் எழுத்தாளர் தன் சாரியட்ஸ் ஆஃப் தெ காட்ஸ் என்ற புத்தகத்தில் இக்கோடுகள் விமானதளத்தை சுட்டிக்காட்டும் இடம். இங்குதான் அந்நாளில் (ஆறாம் நூற்றாண்டில்) வேற்றுகிரகத்தினர் (ஏலியன்ஸ்) நாஸ்கா இனத்தவரை சந்திக்க தங்கள் வின்கலத்தில் வந்து தரையிறங்கினர் என்கிறார்.

இது பரவாயில்லை, நாஸ்கா கோடுகள் பிரபலமானதும், பறக்கும் தட்டுகள் பற்றி 1960, 70 களில் உலகெங்கும் ஒரு கலந்துரையாடல் நடந்துகொண்டிருக்கையில், அமேரிக்க, இங்கிலாந்து என்று திடீரென்று இரவோடிரவாக பயிர்களை சமன்படுத்தி, வானிலிருந்து பார்த்தால் தெரியுமாறு வயல்களில் கிலோமீட்டர் விட்டத்தில் பெரிதாக வட்டங்கள் தோன்றின. ஏலியன்ஸ்கள்தான் நமக்கு இவ்வாறு சமிஞ்சையாய் செய்கிறர்கள் என்று ஊடக செய்திகள்  அனுமானித்ததை திட்டவட்டமாக மறுக்கமுடியவில்லை. மேலும் சில இடங்களிலும் இவ்வகையில் மர்மமாக வட்டங்களும் வேறு கணித உருவங்களும் தோன்றின. சில வருடங்கள் கழித்து சில காரணகர்த்தாக்கள் டிராக்டரும் கையுமாக இரவில் பிடிபட்டனர். சிலர் அவர்களாகவே பல வருடங்கள் கழித்து போரடித்துபோய் உண்மையை, தாங்கள்தான் அவ்வட்டங்களை வயல்களில் வரைந்ததாக, ஒப்புக்கொண்டனர். இன்னமும் ஓரிரு இடங்களில் யாரும் பொறுப்பேற்காத இவ்வகை வரைபடங்கள் இருக்க்கிறது. ஏற்கனவே விளங்கிய பேத்துமாத்தினால் இவற்றை தற்போது விஞ்ஞான உலகம் சீரியஸாய் எடுத்துக்கொள்வதில்லை.

ஏலியன்ஸுக்கான, ஏலியன்ஸ்களால், என்று பலவருடங்களாய் இவ்வகையில் தோற்றுவித்த, தோன்றிய, சமிஞ்சைகளில் ஒரு எதிர்சாரி கூக்ளிதான் செவ்வாயில் மனித முகம். உலகில் தோன்றாமல், சமிஞ்சை செவ்வாயில் தோன்றியது. கண்டுபிடித்தது 1976இல் செவ்வாயை ரோந்துசுற்ற அனுப்பப்பட்ட நாஸாவின் வைக்கிங் வின்கலன்.

படத்தில் மேலே வலதுபுறமாக மனிதமுகம் போல ஒரு வஸ்து தெரிகிறது பாருங்கள். இதைவைத்து, செவ்வாயின் இந்த இடம் (முகம்) ஏலியன்ஸ் செவ்வாயிலிருந்து நமக்கு அனுப்பியுள்ள செய்தி என்று புரட்டு கிளம்பியது. படம் வாய்மையே. முகம்தான் பொய்மை. என்ன, அதைவைத்து அமேரிக்காவில் காசுபார்த்த கயமையையும் நடந்தது.

ரிச்சர்ட் ஹோக்லாண்ட் (Richard Hoagland) என்பவர் மேலே உள்ள படம் செவ்வாயில் ஏலியன்ஸ்கள் உலகினர்கள் பார்ப்பதற்காக மலைகளை குடைந்து செதுக்கியது என்று பரப்பினார். அமேரிக்காவில் இக்கரையில் இருந்து அக்கரை வரை வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சத்தியம் செய்தார். நாஸா பொய் சொல்கிறது. ஏலியன்ஸ்கள் செவ்வாயில் இருப்பதை அது சுயநலத்திற்காக மறைக்கிறது, ஏலியன்ஸ்களிடம் தொடர்பு செய்து ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த மனித மூஞ்சியைகூட பொய் என்கின்றனர். இப்படி சென்றது அவர் வாதங்கள்.

உண்மையில் படத்தில் புலப்படுவதாக உள்ள மனித முகம், சைடொனியா (cydonia) எனப்பெயரிடப்பட்டு, செவ்வாயில் உள்ள மலைகள், பள்ளத்தாக்குகள். மாரினர் வின்கலன் 1976இல் செவ்வாயில் தரையிறங்குவதற்குள் அனுப்பிய வேறு ஆங்கிள்களில் இதே இடத்தை எடுக்கப்பட்ட படங்கள் இக்கூற்றை நிரூபணம்செய்தது.

மார்ஸ் ரெக்கொனெய்ஸென்ஸ் ஆர்பிட்டர் வின்கலன் சமீபத்தில் 2005இல் எடுத்த படங்கள் விஷயத்தை மீண்டும் தெளிவாக்கிவிட்டது. மனித முகம் வெறும் மலைப்பிரதேசம். சாதாரண பகுத்தலில், ஒரு கோணத்தில், வைக்கிங் புகைப்படங்கள் மனிதமுகம் போல திரித்து காட்டியுள்ளது. படத்தில் பாருங்கள் [இன்னமும் பெரிய படம்].

பொட்டலில் உலவுகையில், சட்டென வானத்தை நோக்குகையில் மேகங்கள் ஒரு மனித அல்லது மிருகத்தின் உருவத்தையோ முகத்தைப்போலவோ தெரியுமே, அதுபோல. சற்று விலகிசென்றோ அல்லது சிறிது நேரம் கழித்து நோக்குகையில் மேகத்தின் பேட்டர்ன் மாறிவிடும். ஹோக்லாண்ட் இப்போது வேறு கன்ஸ்பிரஸி தியரிக்கு தாவிவிட்டதாக கேள்வி.

இதைப்போலத்தான் பெர்சிவால் லொவெல் இங்கிருந்தபடியே நம்பிய செவ்வாயின் நீரோட்ட கால்வாய்கள். ஹப்பிள் தொலைநோக்கி செவ்வாய் பரப்பை பல பாகங்களாய் புகைப்படமெடுத்ததை ஒட்டி சேர்த்துப்பார்த்தால் கால்வாய்கள் தென்படவில்லை.

பெர்சிவால் லொவெல் கால்வாய்கள், ஹோக்லாண்ட் செவ்வாய் மனிதமுகம் இதையெல்லாம் கடந்து, அறிவியல் ரீதியாய் பரிசோதனைகள் செய்து, செவ்வாயில் நிஜமாகவே உயிர் இருக்கலாமோ என்று விஞ்ஞானிகளை உந்திவிட்ட விஷயம் முதலில் நம் பூமியிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

அது ALH84001.

அடுத்த பாகத்தில்.

ரேடியோ கார்பன் டேட்டிங்
ஏலியபுராணத்தின் முடிவில் செவ்வாய் கிரகம் செல்வதாக இருந்தேன். ஆனாலும் இது ஞானமரபை தன்னுள் அமானுடமாக இருத்திப் பொலிவுறும் எழுத்துக்களை மட்டும் வாழும்நேரமனைத்திலும் செம்மையான வாசிப்பதனால் நாபியிலிருந்து கிளர்ந்தெழும் வாசிப்புலன்கள் மட்டுமே உணர்ந்துகொள்ளமுடிந்த நெகிழ்சியூட்டும் மனிதம் வெளிப்படும் கட்டுரைத்தொடர் இல்லையே. வெறும் அறிவுத்துறை அறிவியல்தானே. எதைவேண்டுமானாலும் இக்கட்டுரைகளில் எங்கு வேண்டுமானாலும் விளக்கலாம், விலக்கலாம், இல்லையா.

அதனால், செவ்வாயினுள் செல்வதற்கு முன் ஒரு ரேடியோ கார்பன் டேட்டிங் போய்வருவோம்.

இந்த இடைப்பயணத்தை விரும்பாதவர்கள், அடுத்த கட்டுரைக்கு காத்திருங்கள். உங்கள் ஏலியன்ஸ், செவ்வாய் பற்றிய அறிதல் புரிதலுக்கு எந்த பங்கமும் வராது.

கார்பன் டேட்டிங்.

கார்பனால் செய்யப்பட்ட இருவர், அமேரிக்காவில் ரேடியோ வழியே நிச்சயித்து, காரில் வந்து சந்தித்து, ஒரு பீரியாடிக் டேபிளில் எதிரெதிரே உட்கார்ந்து பன் சாப்பிட்டுக்கொண்டே வம்படிக்க ஒதுக்கும் நேரம்தான் இந்த டேட்டிங்.

பீரியாடிக் டேபிள் இப்படி இருக்கும்.

(டேபிள் அமேரிக்காவில், வடக்கு கரோலினா மாநிலத்தில் வேக் ஃபாரஸ்ட் பல்கலைகழகத்தில் வேதியியல் துறை முகப்பில் இருகிறது)

இதே கார்பன் டேட்டிங் சொற்றொடர் அறிவியலிலும் வேறு சுவாரசியமான விஷயத்தை விளக்குகிறது. செத்தவைகளுக்கான டேட்டிங்.

ஒரே மூலபொருட்களின் (element) அணுக்கள் சற்றே நியூட்ரான்களின் எண்னிக்கையில் மாறுபடுகையில் ஐஸடோப்புகள் (isotope) என்போம். சில ஐஸடோப்புகள் ஸ்திரமானவை. மாறாது. சில கதிரியக்க உந்துதலினால் சிதைந்து தாயிலிருந்து மகளாக காலப்போக்கில் உருமாறிவிடும். அநேகமாக கதிரியக்கத்தன்மைகொண்ட அனைத்து மூலப்பொருட்களும் (ஐஸடோப்புகளும்) தங்கள் ஒரிஜினல் அளவிலிருந்து (கனத்திலிருந்து) காலப்போக்கில் பலவிதமான சிதைவுகளுக்குட்பட்டு முன்னிலும் பாதியாய் குறைந்துகொண்டே வருகிறது.

சிதைவு என்றால் உதாரணம், மூலப்பொருளிலிருந்து எலக்ட்ரான் புரொட்டான்களை தன்னிச்சையான உமிழும் ஆல்பா, பீட்டா சிதைவுகள்.

ஐஸடோப்புகளின் இந்த கால-உரு-சிதைவு ஒரு விதிக்கு உட்பட்டது. அரை-ஆயுள் (half-life) சித்தாந்தம். ஒவ்வொரு மூலப்பொருளுக்கும் அரை ஆயுள் வேறுபடும். கார்பன் ஐஸடோப்புகளுக்கு 5000 முதல் 8000 வருடங்கள். அதாவது 1 கிலோ கார்பன்14 ஐஸடோப் இயற்கையாய் சிதைந்து (நாம் சிதைவை வேதியியலால் உந்தாமல், வெட்டி எடுக்காமல்) அரை கிலோவாவதற்கு 6000 வருடங்கள் ஆகும் (பியூரிஸ்டுகளுக்கு 5730 வருடங்கள், 30 வருடங்கள் அப்படி இப்படி). ஆறு அரை-ஆயுளிற்கு பிறகு அநேக ஒரிஜினல் (தாய்) ஐஸடோப்புகள் காலாவதியாகிவிடும்.

இந்த அரை ஆயுள் சித்தாந்தம், வில்லார்ட் லிபி (Willard Libby) முதலானோர் 1940களில் பரிசோதித்து நிரூபித்துள்ள உண்மை. இதைவைத்து உருவாக்கிய கதிரியக்க-கார்பன் தேதியாக்கமுறைக்காக லிபி வேதியியலில் 1960க்கான நோபல் பரிசை பெற்றார்.

கதிரியக்க கார்பன் தேதியாக்க முறை என்றால் என்ன. விளக்குவோம்.

நம் உலகில் மூன்று வகையான கார்பன் ஐஸடோப்புகள் உலவுகிறது. கார்பன் 12, 13, 14. மொத்தம் 100 சதவிகிதத்தில் கார்பன் 12 தான் அதிகம். கார்பன் 12 98.89%, கார்பன் 13, 1.11%, கார்பன் 14 0.00000000010% (ஒன்றிற்கு முன்னால், புள்ளிக்கு பின்னால், ஒன்பது சைபர்கள்). அதாவது உலகில் ஆயிரம் பில்லியன் (1,000,000,000,000) கார்பன் 12 அணுவிற்கும், ஒரே ஒரு கார்பன் 14 இருக்கும்.

இதில் கார்பன் 12, 13 ஸ்திரமானவை. கார்பன் 14, கதிரியக்கம், ஆக்ஸிடேஷன், அது இது என கழண்ட கேஸ். நம்முலகில் உயரே காற்று மண்டலத்தில் நைட்ரஜன் அணுக்கள் காஸ்மிக் கதிர்களின் ஊடுருவலில் தோன்றும் நியூட்ரான்களுடன் உறவுகொள்வதால், கார்பன் 14 தோன்றுகிறது.

14N + n => 14C + p

இதுதான் ரசாயனமாற்றம். காற்றிலுள்ள நைட்ரஜன் நியூட்ரான்களுடன் வேதியியல் உறவுகொண்டு, ஒரு புரோட்டானை காறி உமிழ்ந்து, கார்பன் 14 ஐஸடொப்புகளாய் மாறுகிறது. நாளொரு நைட்ரஜனும் பொழுதொரு நியூட்ரினோவுமாய் இப்படி கார்பன் 14லாய் மாறியபடி இருப்பதால், நம் காற்று மண்டலத்தில் கார்பன் 14க்கு குறையில்லை.

ஆனால் கார்பன்14 ஸ்திரமாய் தனியாக உலவுவதில்லை. எதனுடனாவது ஒட்டிக்கொள்ளவேண்டும், இல்லை தன் வேதியியலை  மாற்றிக்கொள்ளவேண்டும். உடனே ஆக்ஸிஜனுடன் சேர்ந்து 14CO2 என்ற ஸ்திர ரூபத்தில் உலவுகிறது.

இன்றுவரை பூமியில் காஸ்மிக் கதிர்களின் ஊடுருவலால் கார்பன்14 புதியதாக உற்பத்தியாகியபடியே இருக்கிறது. அதனால் காற்றுமண்டலத்தில் இதன் நிரை உலகம் தோன்றியதிலிருந்து கிட்டத்தட்ட ஒரே மதிப்பு எனக்கொள்ளலாம். அறிமுகத்திற்கு ஒரே மதிப்பு என்று வைத்துக்கொண்டால் போதும். விஷ.மி.கள் (வி-ஷயம் மி-குதியாய் தெரிந்தவர்கள்) வினா விடுக்காதீர்கள்.

காற்றை சுவாசிக்கும் தாவிரங்களை உயிர்வாழ்வதற்கு உண்ணும் மனிதன் முதலிய யாவையும் கார்பன் 14ஐ அன்றாடம் உண்டு காறுமண்டலத்தில் இருக்கும் கார்பன்14 விகிதக்கணக்குபடியே உடலிலும் ஒரேயளவு தேக்கிவைத்திருக்கிறோம். ஆனால், இறந்ததும், மண்ணில் புதைந்து, மக்கி, கார்பன் 14ஐ உட்கொள்வதையும் நிறுத்திவிடுகிறோம்.

இறந்த பொருட்களில் உள்ள ஒவ்வொரு கார்பன் 14 அணுவும் தன் கதிரியக்கத்தினால் தன்னிச்சையாக ஒரு பீட்டா துகளை (எலக்ட்ரான்) உமிழ்ந்து மீண்டும் நைட்ரஜனாகிவிடுகிறது.

14C => 14N + b (e-)

இது ரசாயனமாற்றம்.

இதனால் கார்பன் 14 அளவு காலப்போக்கில் தொடர்ந்து குறைந்துவருகிறது.

இறந்தவையும் தேதியாக்கத்திற்கு தயாராகிறது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டியெடுத்த கல் அல்லது பல் அல்லது நெல் (மூன்றிலும் இது முடியும்) எவ்வளவு பழசு என்று தெரியவேண்டுமாயின், அதில் எவ்வளவு கார்பன் 14 ஐஸடோப் உள்ளது என்று எண்ணவேண்டும். எண்ணுவதற்கு மாஸ் ஸ்பெக்ட்ரொஸ்கோப்பி போன்ற தனி டெக்னிக் உள்ளது. கார்பன்14 அரை ஆயுள் ஏற்கனவே தெரியுமாதலால், பொருளில் அதன் கணக்கிட்ட அளவை தற்போது காற்றில் உள்ள அளவோடு சரிபார்த்து எவ்வளவு விகிதம் குறைகிறதோ அதைக்கொண்டு தோண்டியெடுத்த இன்றிலிருந்து பொருள் எத்துணைக்காலம்முன் (அதன் கார்பன் 14 உற்பத்தியை நிறுத்தி) இறந்திருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம். அதாவது, கல், பல், நெல்லின் தற்போதைய வயது தெரியவரும்.

இப்படி வயதை கணக்கிடுவது கதிரியக்க கார்பன் தேதியாக்கம், ரேடியோ கார்பன் டேட்டிங். ஒரு 60000 வருடம் வரை துல்லியமாய் வயதை நிர்ணயிக்கலாம். இதற்குள் அரைஆயுளினால் கார்பன் 14னின் இருப்பு அளக்கமுடியாத மதிப்பிற்கு சுருங்கிவிடும்.

இந்த முறையை வைத்துதான் ஹரப்பா முதல் கடப்பா வரை தொல்பொருட்களின் வயது, ஏன் இயேசு முகம்போல அச்சாகியுள்ள டியூரின் முக்காடு துணி நிசமாலுமே ஏசுவுடைய காலத்தியதா இல்லை இடையில்வந்த வேறு வாசுவுடையதா என்பது வரை கண்டுசொல்கிறர்கள்.

அதற்காக (நெல் உள்ளே இருக்கும் அரிசியால் செய்யப்பட்ட) பழைய சோறு எவ்வளவு நாள் முந்தையது என்பதெற்கெல்லாம் இந்த கார்பன்டேட்டிங் டெக்னிக்கை பயன்படுத்தத்தேவையில்லை. வீட்டில் சமைத்து எது போட்டாலும் சாப்பிடவேண்டிய நிர்பந்தத்தில் நாக்கின்மீது ஒட்டியிருக்கும் செலஃபன் டேப்பை உரித்துவிட்டு சுவைத்தாலே போதும்.

கார்பன் போலவே பிரபஞ்சத்தில் உள்ள வேறு மூலப்பொருட்களின் அரை ஆயுள் வேறுவேறாய் இருக்கலாம். உதாரணமாய் யுரேனியம் (Uranium) மற்றும் சமேரியம் (Samarium) அரை ஆயுள் முறையே மில்லியன் வருடங்கள். கார்பன் 14 போல் பீட்டா சிதைவு வழியாய் எலக்ட்ரானை உமிழ்ந்து சிதையாமல், சமேரியம் ஆல்ஃபா சிதைவினால் தன்னை குறைத்துக்கொள்ளும். இதைப்போல, கதிரியக்க அலுமினியம்-மக்னீஷியம் (Aluminium-Magnesium) அரைஆயுள் 740 ஆயிரம் வருடங்கள். ருபீடியம்-ஸ்ட்ரான்ஷியம் (Rubidium-Strontium) மூலப்பொருட்களின் அரைஆயுள் 49 பில்லியன் வருடங்கள். இவற்றையும் தேதியாக்க முறைக்கு உபயோகிக்கலாம்.

இரட்டையாய் மூலப்பொருட்களை குறிப்பிடுவது அவை எதில் தொடங்கி எதில் முடிகிறது என்பதை குறிக்கிறது. நைட்ரஜன் => கார்பன் 14 => நைட்ரஜன் போல.

சந்திரன், செவ்வாய், சுற்றும் வால் நட்சத்திரம் என சூரியமண்டலத்தின் பல இடங்களிலிருந்து எரிகற்களாய், விண்கலன் ஏறிய கற்களாய் தருவிக்கப்படும் பொருட்களின் வயதை, இவ்வகை அரிதான மூலப்பொருட்களின் கதிரியக்க அரைஆயுள் தேதியாக்க முறைப்படியே நிர்ணயிக்கிறார்கள். எரிகற்களின் தேதியாக்கத்திற்கு இதுதான் என்றில்லாமல் பல தேதியாக்க முறைகள் இருக்கிறது. பெரும்பாலும் ருபீடியம்-ஸ்ட்ரான்ஷியம் மற்றும் கதிரியக்க அலுமினியம் தேதியாக்க முறைகளை உபயோகிக்கிறார்கள்.

ஒரு எரிகல்லில் உள்ள கதிரியக்க ருபீடியம் 87 படிப்படியாக ஸ்ட்ரான்ஷியம் 87 ஆகிவிடும். ஒரு எரிகல்லில் இந்த ருபீடியம் 87இலிருந்து எவ்வளவு ஸ்ட்ரான்ஷியம் 87 வருகிறது, முன்னரே எவ்வளவு ஸ்ட்ரான்ஷியம் 87 இருந்திருக்கிறது, அதைப்போல் முன்னரே கதிரியக்கமாற்றமாகாத ஸ்ட்ரான்ஷியம் 86 எவ்வளவு உள்ளது என்பவைகளை அளக்கமுடியும். இதைவைத்து ஒரு எரிகல்லில் (தற்போது ஸ்ட்ரான்ஷியம் 87, ஸ்டான்ஷியம் 86 விகிதம்), மற்றும் (தற்போது ருபீடியம் 87, ஸ்ட்ரான்ஷியம் 86 விகிதம்) இவற்றை கணக்கிடமுடியும். எரிகல்லின் பல பாகங்களில் இந்த விகிதங்களின் மதிப்புகளை பரிசோதனையில் கணக்கிடுவார்கள். ஒரு வரைபடத்தில் Y அச்சில் Sr87/Sr86 விகித மதிப்புகளையும் X அச்சில் Rb87/Sr86 விகிதத்தின் மதிப்புகளையும் குறித்து, புள்ளிகளை சேர்த்தால், Y = mx + c என்ற எளிமையான கோட்டு விதிக்கு உட்பட்ட ஒரு சாய்கோடு கிடைக்கும். இதில் c என்பது ஒரிஜினலாக எரிகல்லில் இருந்த ஸ்ட்ரான்ஷியம் 87, 86 இவற்றின் விகிதம். இந்த சாய்கோட்டின் சாய்மானம் எரிகல்லின் வயது.

இந்த சாய்கோட்டிற்கு ஐஸொகுரோன் (isochron) என்று பெயர். டீஷிட்ஸ் (Tieschitz) என்ற எரிகல்லின் இவ்வகை ஐஸோகுரோனை, ஒரு மாதிரிப்படமாக கீழே கொடுத்துள்ளேன். இந்த எரிகல்லின் வயது 4.52 பில்லியன் வருடங்களாம். கிட்டத்தட்ட நம் உலகம் தோன்றியதாக அறியப்படும் வயது.

மேலும் துல்லியமாக இந்த ருபீடியம்-ஸ்ட்ரான்ஷியம் தேதியாக்க முறைபற்றி தெரியவேண்டுமென்றால் இங்கு http://www.meteoritestudies.com/protected_dating.htm படித்துப்பாருங்கள்.

முடிவாக கவனத்தில் கொள்ள வேண்டியது, உலகில் தொல்பொருட்களின் வயதை கார்பன் தேதியாக்கமுறைப்படி நிர்ணயிப்பதுபோல், ருபீடியம்-ஸ்ட்ரான்ஷியம் கதிரியக்க தேதியாக்கமுறைப்படி எரிகற்கள், வேறு கிரகப்பொருட்களின், கிரகங்களின், வயதை நேரடியாக ஓரளவு துல்லியமாக நிர்ணயிக்கலாம்.

தேதியாக்கியது போதும். செவ்வாய்க்கு செல்வோம்.

கிளாஸ்ஃபெஸ்ட் 2010
ஆசிரியர் மேர்ப்பார்வையில், மாணவர்கள் ஏற்று நடத்தும் ஆஆடி மெட்ராஸின் மியூசிக் கிளப்பிற்கு இந்த வருடம் 40 வயது. அதையொட்டி இன்றிலிருந்து தொடங்கப்படும் கிளாஸ்ஃபெஸ்ட் 2010 (Clasfest 2010) கர்நாடக இசை கச்சேரி நிகழ்ச்சி நிரல் பின்வறுமாறு.

ஆகஸ்ட் 9: சஞ்சய் சுப்பிரமண்யன் - பாட்டு, எஸ், வரதராஜன் - வயலின், நெய்வேலி வெங்கடேஷ் - மிருதங்கம், திருச்சி முரளி - கஞ்சீரா

ஆகஸ்ட் 10: ஈ.காயத்ரி - வீணை, ஷேர்த்தலை அனந்தகிருஷ்ணன் - மிருதங்கம், பி.எஸ்.புருஷோத்தமன் - கஞ்சீரா

ஆகஸ்ட் 12: ரஞ்சனி காயத்ரி - பாட்டு, மைசூர் ஸ்ரீகாந்த் - வயலின், மனோஜ் சிவா - மிருதங்கம், என்.குருபிரசாத் - கடம்

ஆகஸ்ட் 13: சங்கீத கலாநிதி டி.என்.சேஷகோபாலன் - பாட்டு, வி.வி.ரவி - வயலின், திருச்சூர் நரேந்திரன் - மிருதங்கம்

அனைத்து கச்சேரிகளும் 6:45 PM மணிக்கு தொடங்கும்.

இடம்: Central Lecture Theater (CLT), IIT Madras Campus, Adyar 600036

ரசிகர்கள் அனைவரும் வரலாம். டிக்கெட் உண்டு.

வருவதற்கு வழி:  IIT Madras, ராஜ் பவன், அண்ணா பல்கலைகழகம், காந்தி சமாதி உள்ள சர்தார் பட்டேல் ரோட்டில், கான்சர் இன்ஸ்டிடியூட் அருகில் உள்ளது.

உள்ளே வருவதற்கு In Gate செக்கியூரிட்டி பூத்திற்கு அருகில் இருந்து இலவச பஸ் வசதி உள்ளது. 20 நிமிடங்களுக்கு ஒருமுறையாவது ஒரு பஸ் உள்நோக்கி கிளம்பும். இதில் ஏறி, கஜேந்திரா சர்கிள் என்ற இடத்தில் இறங்கிக்கொள்ளுங்கள். அதற்கு அருகில், ஹாஸ்டல் நோக்கி செல்லும் ரோட்டில் (பஸ் தொடர்ந்து செல்லும் Bonn Avenue வழி) ஒரு 100 அடி தொலைவில் கச்சேரி நடக்கும் CLT உள்ளது. கீழே இதற்கு மட்டும் மேப் கொடுத்துள்ளேன். இங்கும் மேப் உள்ளது.

ஹோம்மேட் இசை வீடியோக்கள் விளக்கங்கள்
ராகம் தானம் பல்லவியை பற்றி ஒரு விமர்சன கட்டுரை எழுதுவதாக தொடங்கி, இழுத்து இழுத்து பல பாகங்களாக சொல்வனம் இணைய இதழில் என் கர்நாடக இசை (பற்றிய) கட்டுரைகள், ஏதோ ஒரு திசையில் போய்கொண்டிருக்கிறது. கட்டுரையின் நான்காவது பாகத்திற்காக, ஆர்வக்கோளாரில் சில விளக்க வீடியோக்கள் வீட்டில் இருப்பவர்களை இரவு தூங்கவிடாமல் படுத்தி, எடுத்துப்பார்த்தேன். சுற்றியுள்ள விளக்கங்களை சுருக்கமாக கொடுத்து, இங்கு அவ்வீடியோக்களை தருகிறேன்.

விரிவாக, சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம்  தானம் பல்லவி –   பாகம் நான்கு கட்டுரையில் படித்துக்கொள்ளுங்கள்.

சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கு

மேலே உள்ள சதுர் ராகமாலிகை பல்லவியை விளக்குகிறேன் பேர்வழி என்றுதான் மிச்சத்தையெல்லாம் எழுதுகிறேன். எப்படியும் பல்லவியை கட்டுரைத்தொடர் முடிவதற்குள் விளக்கிவிடுவேன்.

முதலில் ஆவர்த்தம்; என்றால், சுற்று. ரவுண்ட். ஒரு ஆவர்த்தம் என்றால் ஒரு சுற்று. ஆவர்த்தம் இசைக்கு, பாடலுக்கு, மிக உபயோகமான கால அவகாசம். தாளத்தின் அங்கங்கள், கால இடவெளிக்கேற்றவாறு ஆவர்த்தத்தின் அவகாசம் கூடவோ குறைந்தோ மாறுபடும். பாட்டின் அவகாசத்தை நீட்டவோ குறைக்கவோ, பாட்டின் கட்டுக்கோப்பை, வரிகளில் வார்த்தைகளை நிர்ணயிக்கவோ, ஆவர்த்தங்கள் இன்றியமையாதவை.

அடுத்து ஆதி தாளம்.

ஆதி தாளம் உங்களில் பலருக்கு தொடையில் கைவத்து போடத்தெரிந்திருக்கும். தெரியாவிடின், இப்படி செய்யவேண்டும்.

<object type="application/x-shockwave-flash" data="http://www.youtube.com/v/SkkshFo7aHc&fs=1" width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/SkkshFo7aHc&fs=1" /><param name="FlashVars" value="playerMode=embedded"/><param name="wmode" value="transparent"/></object>

ஆதிதாளம், ஒரு களை சவுக்கத்தில் ஒரு பாட்டு. அதிலேயே ஆவர்த்தம், குறைப்பு, தீர்மாணம் போன்றவற்றை விளக்குகிறேன். எனக்கு பாட வராது, அதனால் டி.எம்.எஸ்ஸை துணைக்கு கூப்பிட்டுக்கொள்கிறேன். தன் பங்கிற்கு அவர் கே.வி.மகாதேவனையும், சிவாஜி கணேசனையும் துணைக்கு கூட்டிக்கொள்வது அவர் இஷ்டம்.

இசை, பாடகர், வாயசைத்து நடித்தவர் என்று ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் அரங்கேற்றிய பாட்டும் நானே பாவமும் நானே என்று கௌரிமனோஹரி ராகத்தில் அபாரமான பாட்டு நமக்கு பரிச்சயம். இப்பாடலின் இறுதியில் கொன்னக்கோல், மற்றும் வாத்தியங்கள் ஆதி தாளத்தில் சில ஆவர்த்தங்கள் எப்படி வாசிக்கின்றனர் என்பதை இசையை ரசித்துக்கொண்டே அனுபவியுங்கள்.

பாட்டும் நானே - குறைப்பு விளக்கம்

<object type="application/x-shockwave-flash" data="http://www.youtube.com/v/v7xUDzIkVu4&fs=1" width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/v7xUDzIkVu4&fs=1" /><param name="FlashVars" value="playerMode=embedded"/><param name="wmode" value="transparent"/></object>

பாட்டும் நானே - தீர்மாணம் விளக்கம்

<object type="application/x-shockwave-flash" data="http://www.youtube.com/v/EEjEdtoRy10&fs=1" width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/EEjEdtoRy10&fs=1" /><param name="FlashVars" value="playerMode=embedded"/><param name="wmode" value="transparent"/></object>

கச்சேரியில், மெயின் பாட்டில் இந்த விஷயங்களை செய்வார்கள். ரா. தா. பல்லவியிலும் தீர்மாணம் போன்றவற்றை செய்வார்கள்.

இப்போது நடை பற்றி இன்னொரு விளக்க வீடியோ. ஆதி தாளத்தை சதுஸ்ர நடைக்கும், கண்ட நடைக்கும் வித்தியாசப்படுத்தி ஒரு சிறு விளக்கம் கொடுப்போம்.

<object type="application/x-shockwave-flash" data="http://www.youtube.com/v/2vAokb919Ts&fs=1" width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/2vAokb919Ts&fs=1" /><param name="FlashVars" value="playerMode=embedded"/><param name="wmode" value="transparent"/></object>

[மேலே விடியோவில் நூறு வருஷம் பாடல் ஆதி தாளத்தில், திஸ்ர நடையில் உள்ளது. சதுஸ்ர நடை என்று சொல்லிவிட்டேன். மூன்று நடைகளையும் காட்டுவதற்காக எடுத்து, குறிப்பிடாமல் சொதப்பிவிட்டேன். மற்றதெல்லாம் ஓகே.]

பல்லவியின் சாஹித்தியமும் (பாட்டும்) தாளமும் அதே நேரத்தில் தொடங்கினால் பல்லவி சமத்தில் ஆரம்பிக்கிறது என்று பொருள். பாட்டு தாளம் தொடங்கிய பின், அதைத் தாண்டித்தான் தொடங்குகிறது என்றால் அனாகத எடுப்பு. அதீத எடுப்பு என்றால் பாட்டு தாளம் தொடங்குவதற்கு முன்னரே தொடங்குகிறது என்று பொருள்.

இதைப்பற்றியும், இன்னபிற பல்லவி விஷயங்களையும் அடுத்த பாகத்தில் விளக்குவோம். லைட்டாய் ஒரு திரையிசை சர்ப்ரைஸ் உதாரணம் கொடுத்து இப்பாகத்தை முடிப்போம்.

ஜெண்டில்மேன் படத்தில், ரஹ்மானின் சிக்குபுக்கு ரயிலே பாட்டு பிரபலம், நமக்கு பரிச்சயம். மேலே படிக்கும்முன் சட்டென்று சொல்லுங்கள், பாட்டு எப்படி தொடங்கும்? அதாவது, சுரேஷ் பீட்டர்ஸ் பாடுகையில், பாட்டு எப்படி தொடங்கும்? சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்றுதானே?

தொடக்கத்தில் கொயந்தை பாடிமுடித்ததும் வரும் இசைக்கு ஆதிதாளம் போடுங்கள். நான்கு ஆவர்த்தத்தில் முடிந்துவிடும். ஆனால் முடிகையில் இரண்டு அக்‌ஷரம் அமைதி. பிறகு சமத்தில் சுரேஷ் பீட்டர்ஸ் பாட, பாடல் தொடங்கும். ஆனால் பாட்டு சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்று தொடங்காது. புகு சிகு புகு சிகு புகு ரயிலே என்று தொடங்கும்.

அடுத்த சுற்றில், இரண்டாவது முறை பல்லவியை சொல்கையில், சமத்தில் டிரம்ஸ் அடி விழுந்ததும், சற்று காலம் தள்ளியே, சிகு புகு சிகு புகு ரயிலே என தொடங்கும். இதை சரிகட்டதான் சுரேஷ் பீட்டர்ஸ் முதல் சுற்று தொடக்கத்தில், சமத்தில், ஒரு புகு சேர்த்து தொடங்குவார்; சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா என்றெல்லாம் கேட்டுவிட்டு மீண்டும் பல்லவியை தொடங்குகையில் புகு சிகு புகு சிகு என்று கோரஸாய் தொடங்கும்.

இந்தாருங்கள் என் விளக்க வீடியோ.

<object type="application/x-shockwave-flash" data="http://www.youtube.com/v/iMC8x9NWb08&fs=1" width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/iMC8x9NWb08&fs=1" /><param name="FlashVars" value="playerMode=embedded"/><param name="wmode" value="transparent"/></object>

ஒரு களை சவுக்கத்தில் ஆதி தாளத்தில் இப்பாடல் அரை இடம் தள்ளி தொடங்குகிறது. அதாவது கையை தொடையில் சமத்தில் தட்டிய முதல் அக்‌ஷரத்திற்கும் அடுத்து சுண்டுவிரலை விடும் இரண்டாம் அக்‌ஷரத்திற்கும் நடுவில் சிகு வருகிறது.

ஸோ (ஆகையால்), சிகு புகு சிகு புகு ரயிலே என்று பாட்டை சொன்னால், இப்பாடல் ஆதி தாளத்தில் அனாகத எடுப்பு பாடல். மேலும் பல உதாரணங்கள் அடுத்த பாகத்தில்.

கட்டுரை தொடக்கத்தில் சொன்ன சதுர் ராக மாலிகை பல்லவி இரண்டு ஆவர்த்தம், இரண்டு களை சவுக்கம் (இரண்டு அக்‌ஷரங்களுக்குள் ஒரு களையை விட இரு மடங்கு நேர அவகாசம்). இப்பல்லவியும் அனாகத எடுப்பே. தாளத்தின் சமத்தில் இருந்து முக்கால் இடம் தள்ளி.

கர்நாடக இசையா கொக்கா.

வீடியோவே இருக்கிறது, எதற்கு இதையெல்லாம் எழுதவேண்டும் என்றால் வீடியோ பார்க்கமுடியாதவற்காகவும் (பிரிண்ட் போட்டு படிப்பவர்களுக்காகவும்) எழுத்திலும் விளக்கியுள்ளேன். அதேபோல் நான் வீடியோ வல்லுனரில்லை. சும்மா சொல்வனம் கட்டுரைத்தொடருக்காக ஆர்வக்கோளராய் ஒத்தகையில் கேமிராவை பிடித்தபடி ஷேக் வெல் வைல் இன் யூஸ் என்று எடுத்துள்ளேன். இதெற்கெல்லாம் டொஸ்க்சொல்லி விமர்சனம் இடது கையால் எழுதிப்பழகுங்கள்.

மிச்சத்தை விரிவாக, சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம்  தானம் பல்லவி –   பாகம் நான்கு கட்டுரையில் படித்துக்கொள்ளுங்கள்.

ஞாபகம் வருதே 2.0
சமீபத்தில் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாட்டு போட்டு அலுமினி(ய) பாத்திரங்களை அழைத்து நான் என்றோ (ஓரளவு) படித்த பொறியியல் கல்லூரி தன் பவள விழாவை ஒரு வாரம் கொண்டாடியது. அநேகமாக வயதுவந்தவர், பெண்கள் என்று அனைவருக்கும் ஈமெயிலித்து, அதில் பலர் வருவதாய் பதில் மின்னஞ்சல் சத்தியம் செய்து, சாண்டா கிளாராவில் சரியான கணக்டிங் ஃப்ளைட் கிடைக்காததால் மெயிலிடப்படாத சிலர் மட்டும் ஓசி கார் மொஃபஸல் பஸ் ஏறிவந்திருந்தோம்.

பெண்கள் அனைவரும் வயதாகி பொறுப்பான நாரீமணிகளாய் கைகுட்டை வைத்திருக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் படிப்பு பற்றி கவலையுடன் பேசுகிறார்கள் (டீ, உனக்கு இவ்வளவு பெரிய பையனா? படிக்கரச்செயே லௌஸ் தெரியும். அதுக்குனு...). சிலர் படிக்கையில் ஒண்டியிருந்த மரங்களை தொட்டுப்பார்த்துவிட்டு வந்தார்கள்.

மேலே சொன்ன நாரீமணிகளை தோழிகளாய் பெற்ற ஆண்கள் அனைவரும் வயதானதை மறந்து, படிக்கையில் இருந்ததைப்போலவே எதையும் சாதித்துவிடுவோம் ஆனாலும் உலக நலன் கருதி பொறுப்பற்று திரிகிறோம் என்று பந்தா காட்டிக்கொண்டோம். மனைவிகளை கூட்டிவரவில்லை என்ற உதாரில்.

சிலர், மகள் பள்ளிசேர்கையில், அடுத்த வருடம் அமேரிக்காவில் இருந்து திரும்பிவருவதாய் இருக்கிறோம்.

படிக்கையில் இருந்த ஆசிரியர்கள் சிலர் கல்லூரியில் இன்னமும் இருந்தனர். அவர்களில் சிலருக்கு எங்களில் பலரை ஞாபகம் இருந்தது.

சுத்தி சுவரேயில்லாமல், கேம்பஸே இல்ல. அப்புறம் எப்படி கேம்பஸ் இண்டெர்வியுவுக்கெல்லாம் கம்பெனி வரும் என்று படிக்கிற காலத்தில் கிண்டல் செய்ததை நல்லவேளை யாரும் சீரியஸாய் எடுத்துக்கொள்ளவில்லை. கல்லூரி வளாகத்தில் இன்னமும் சுற்றுச்சுவர் என்று ஒன்றும் இல்லை. ஆனால் எதிர் டீக்கடை (ஹைவேஸ்), புளியமரம், மரத்தடி பஸ்டாப், பக்கத்து பாலிடெக்னிக், சுடுகாடு(?), பொட்டல், ரெயில்வே கிராஸிங், முகப்பில் வழிநெடுக கலர் கொடிகள், காலேஜ் பஸ்கள் (பெயிண்ட், டிரைவர், பஸ் தவிர்த்து) எதுவும் மாறாவில்லை.

லைப்ரரியை தனி கட்டிடத்திற்கு மாற்றியுள்ளார்கள். (பூட்டியிருந்ததோ? உள்ளே இருப்பவர்களை வெளியேறிவிடாமலிருக்கவோ?) கூட வந்த தோழி நாங்கள் (பெண்கள்) படிக்கையில் இருந்த ரெஸ்ட்ரூம் இப்போ அதே இடத்துல இருக்கிறதா வா பார்ப்போம் என்றார். அமேரிக்கா போய் மொழிகெட்டு, யோசித்து, சுதாரித்து, ஓ, இளைபாறும் அறையா என்று நான் கேட்க, இல்லடா, ரெஸ்ட்ரூம். இதோ பார், இதுதான். Labனு போட்டிருக்கே... இருபது வருடங்கள் முன்னர் இருந்த அதே வெகுளித்தனத்தை இடைப்பட்ட வாழ்க்கையில் தொலைத்துவிடாமால் இன்னமும் தேக்கி வைத்திருக்கிறார்.

இன்றைய பாஷனான ப்ளீட் இல்லாத பிளெயின் முன்பக்கம் பாண்ட்டில் பட்டை பெல்ட் அனிந்து, சூர்யா அணியும் ஜிகினா சட்டையை மடித்து முன்பக்கம் டக்-இன் செய்து, பிருஷ்டத்தை போர்த்தியபடி வெளியேவிட்டு, பாத்ரூம் ஸ்லிப்பர் அணிந்து, தலையை கவனமாய் கலைத்துக்கொண்டு, பெண்களை ஓரக்கண்ணால் பார்த்தபடி, எதையும் நேரிடையாக பேசாமல், தோளில் கைபோட்டபடி செல்லும் மாணவர்களை பார்க்கையில், இருபது வருடம் முன்னால் இவர்களைப்போலிருந்த எங்களை நம்பி பொறுத்துக்கொண்ட ஆசிரியர்களும், பெற்றோர்களும், இயலாதவார்கள் இல்லை. ஆச்சர்யமானவர்கள்.

பவளவிழா விழாத்தலைவர் இன்று திரைத்துறையில் ஓரளவு பிரபலமாயிருக்கும் ஒருவர். என்னைப்போல் கல்லூரியின் அலுமினிய பாத்திரங்களில் ஒருவர்.

இப்போதே சொல்லிவிடுகிறேன். திரைத்துறை பிரபலத்தின் மீது எனக்கு தனிப்பட்ட காழ்ப்பு எதுவும் இல்லை. அவர் பணியாற்றிய திரைப்படங்களையும் பார்த்துள்ளேன். அவரும் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதராகவே திகழ்கிறார். அவர் மேலும் அத்துறையில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

தலைமைதாங்க வந்தவர், மேடையில் அமர்ந்து, மினரல் வாட்டர் குடித்துவிட்டு, தலைமை தாங்கிவிட்டு, தலைமையை வாழ்த்திவிட்டு, கார் ஏறி சென்றிருக்கலாம். தான் படித்தபோது இருந்த வகுப்பினுள் சென்று அமரவேண்டும் என்று ஆசைபட்டார். செயலாக்கினார். படிக்கிறபோதுதான் செய்யவில்லை, இப்போதாவது செய்வோமே என்றாம். மேடையில் பேசுகையிலும், இக்கல்லூரியில் நான் படித்த காலத்தில் சரியாக படித்ததேயில்லை. இங்குமங்கும் சுற்றிக்கொண்டிருந்தேன். சினிமாத்தான் நாட்டம். பல நாள் நோ கிளாஸ். என்னை வாழ்க்கையில் நம்பிக்கை கொடுத்து, சினிமாவில் வெற்றிகொள்ளச்செய்தது இக்கல்லூரி நாட்களே. அதை நினைவுகூறுகிறேன். இந்த ரீதியில்...

இப்போதைய மாணவரிடையே கரகோஷம்.

பொறியியல் கல்லூரியின் பவளவிழாவிற்கு வெற்றிபெற்ற பழையமாணவர் என்ற தகுதியில் இவரை தலைமைத்தாங்க அழைத்ததில் எனக்கு ஒப்புமையில்லை. பவளவிழாவில் பொறியியல் கல்லூரி எதற்காக இருக்கிறது என்ன சாதித்துள்ளது என்பதற்கு அடையாளமாக காட்டவேண்டிய உதாரண பழைய மாணவர் இவர் இல்லை. இவர் நல்ல சினிமாக்காரராக இருக்கலாம். நல்ல பொறியியலாளர் இல்லவே இல்லை. இவரை பொறியியல் கல்லூரி உருவாக்கவேண்டியதில்லை.

கல்லூரியின் ஸ்தாபகர் விவரமானவர். யாரை தலைமை தாங்க அழைக்கலாம் என்று என்னை கேட்கவில்லை. ஆனால் மருமத்தினெறிவேல் பாய்ந்த புண்ணிலாம் பெரும்புழையில் கனல்நுழைந்தாலென நான் அன்று படித்த ஆசிரியர் (இன்று கல்லூரி இயக்குனர்) என்னிடம், என்னப்பா செய்யறது, எனக்கு இஷ்டமில்லை, ஆனாலும் பசங்கதான் இப்படி ஏற்பாடு செய்யறாங்க; ஒரு அறிவியல் கருத்தரங்கு நடத்தனும்னுதான் எனக்கு ஆசை; பார்ப்போம் வேற எப்பவாச்சும் நிச்சயம் நடத்திரலாம். இப்படி பேசிக்கொண்டே போகிறார்.

வெட்கக்கேடு.

அப்ப, பொறியியல் கல்லூரியில், பொறியியல் படிப்பதற்காகவே சேர்ந்து, அதைமட்டுமே சிரத்தையாக படித்து, வெளிவந்து, ஒரு பொறியியல்துறை வேலையில் பணியாற்றிவரும் ஓஜோசிகள் எல்லாம் வாழ்க்கையில் வெற்றிபெறவில்லையா? பல்கலைக்கழகத்திலேயே முதலாவதாகவும், கல்லூரியில் முதலாவதாகவும் பொறியியலில் தேர்ச்சிபெற்ற இன்றைய குடும்பத்தலைவிகள்?

கல்வி நிறுவனங்களில் கடலை கமழும் கலாச்சார நிகழ்ச்சிகள், ரகளை கிளம்பும் விவாத அரங்குகள், வினாடிவினா போன்ற படிப்ஸ் நிகழ்ச்சிகள், அறிவியல் தொழில்நுட்ப பருப்பு கோஷ்டி கருத்தரங்குகள், பாரம்பர்யமான பட்டமளிப்புவிழா, பவள விழா கொண்டாட்டம் இப்படி பல நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கெல்லாம் யார் யாரை தலைமை தாங்க அழைக்கலாம் அவர்கள் மாணாக்ககூட்டத்தினரிடம் என்ன பேசலாம் என்று தராதரம், புரோட்டோகால் எதுவும் இருக்கிறதா என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரவையில் கேட்கவேண்டும்.

விழா முடிந்து சில வாரங்களாகிறது. பழைய செட் நண்-பர்கள் -பிகள் என்று பலரை சந்தித்ததில் விழா பற்றி நல்ல நினைவுகளே அதிகம் என்று மனம் சமாதானமாகிறது.

(டேய், அருண்தானடா, மாறிப்போய்டியேடா, முடியெல்லாம் படிச்சே கொட்டிப்போச்சாடா? இல்லடா, திசை மாறி வளர்ரது. இப்ப உள்பக்கமா. இன்னர் குரோத்ம்பாங்க; அது சரி, அதே பேச்சுடா இன்னமும், மாறவேயில்லடா நீ...)

தோஸ்த்களை உஸ்தாதுகளை சந்தித்து, ஸ்தம்பித்து, சிந்தித்து, நிந்தித்து, வம்பித்து, அவசியம் போன் செய்வதாக கூறி மொபைல்களில் பரஸ்பரம் மிஸ்டு கால் விட்டுக்கொண்டு, கலைந்தோம்.

பிரிந்தோம் என்று எழுதலாமோ?

[திரைத்துறையைச்சேர்ந்தவர் யார் என்று கண்டுபிடிக்கும் பின்னூட்டங்களை அனுமதிக்கமாட்டேன்.]

ஏலியபுராணம்
கிறித்துவர்கள், யூதர்கள், முஸ்லீம்கள் என்று அனைவரும் குறிப்பிடும் எழக்கியல் துறவியின் மனதில் பழைய ஏற்பாட்டின் சில பகுதிகள் இன்னமும் தோன்றியிருக்கவில்லை. யூஃப்ரடெஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகள் வளப்புறச்செய்த பாபிலோனிய பிரதேசமான கால்டியா தேசம் (இன்றைய தென் இராக், குவைத் பகுதி). கி.மு. ஆறாம் நூற்றாண்டு உலகம்.

இலக்கியத்திலிருந்து வேறுபட்டு, ஆள், தேசம் காலம் என்ற தலைகீழ் தொடக்கத்தை  தொடருமுன், கி.மு. என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன். இது கரீட்டா எப்போத்திலிருந்து என்பதில் சில குளறுபடிகள் இருக்கிறது. என்றோ இருந்த  ஒருவருக்கு முன்பிருந்த காலம் என்று ஏன் சொல்லவேண்டும் என்று அறிவியல் கட்டுரை  தொடக்கத்திலேயே சந்தேகம் வந்து இலக்கியம் படிக்க போய்விடாதீர்கள் (இதை படித்துவிட்டு அங்கு செல்லவும்).

உங்களுக்காக எழக்கியல் உலகில் இருந்த காலத்தை  இப்போதைக்கு நாம் ஸ்ரீ.மு. 2500 என்று திருத்தி எழுதிக்கொள்வோம். ஸ்ரீ.மு, என்றால் ஸ்ரீதேவி பிறப்பதற்கு முன் (அவருக்கு 40 வயதிற்குமேல் சொன்னால் மனசு கேட்கமாட்டேன்கிறது,  அதான் 2500 - கூட்டிகழித்து பார்த்தால் எழக்கியல் இருந்த  காலம் சரியாகவே வரும்).

சரி, தொடங்கியதை தொடருவோம்.  எழக்கியல் துறவி யூஃப்ரடெஸின் பிரதான துணைநதியான காபுர்  நதிக்கரையோரம் உலாத்திக்கொண்டிருக்கிறார். அப்போது வானில் வடக்கிலிருந்து ஒளி உமிழ்ந்தபடி பெரும் சூறாவளி தோன்றியது. அதில் இறக்கைகள் போல் அணிந்த நான்கு மனிதர்  போல் உருவங்கள் பறந்து வருவதை கண்டார். கூடவே நான்கு மிகப்பெரிய சக்கரங்கள் சுழன்றுகொண்டே பூமியில் இருந்து  வானத்திற்கு புறப்பட்டது. சக்கரங்களின்  நடுவே மனித கண்களைப்போல் பெரிதாக ஏதோ. சற்றுநேரத்தில் அனைத்தும் வானத்தில் பறந்து மறைந்தது.

இக்காட்சி  எழக்கியல் கூறியதாக பைபிளில் (பழைய  ஏற்பாட்டில், எழக்கியல் புத்தகம்) உள்ளது.

இதுவே  இரண்டாயிரத்து ஐநூறு வருடம் முன் மனிதன் ஏலியன்ஸையும் அவர்களின்  பறக்கும்தட்டையும் பார்த்ததற்கான முதல் பதிப்பிக்கப்பட்ட சான்றேடு என்கிறார்  பால் டேவிஸ், தன் சமீபத்திய ஈரீ ஸைலன்ஸ் (The Eerie Silence,  2010) புத்தகத்தில்.

டேவிஸே  எழக்கியலின் பைபிள் காட்சி வருணனையை சீரியசாய் எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார். ஏதோ தன் கற்பனைத்திறனுக்கேற்ப எழக்கியல்  அன்றைய சமுதாயத்தினருக்கு ஏற்றவாறு ஒரு பொருளமைகிறவிதம் ஏற்படுத்திய காட்சி இது. பண்டைய மனிதர்களின் எண்ணங்களை வரலாற்று  குவியாடி மூலம் இன்றைய மனிதர்கள் பார்ப்பதற்கு இக்காட்சிகள், வருணனைகள் உதவலாம். அதற்கு மேல் இதில் உண்மையை தேடுவது சரியல்ல.

அதனால்தான்  தலைப்பு வரலாறோ சரித்திரமோ அல்லை. ஏலியன்ஸ்  புராணம். கதைகளும் புராணத்தில்  அடங்கும்.

சரி, ஆனாலும், நம்ம ஊரை இந்த ஆட்டத்துக்கெல்லாம் இவர்கள் சேர்த்துக்கொள்வதே இல்லை. ஒரே ஓரவஞ்சனை. தோராயமாய் பார்த்தா கூட, ராவணனும்  அவன் ஏறி வந்த புஷ்பகவிமானமுமே ஏலியன்ஸ் மற்றும் அவர்களின் பறக்கும்தட்டாய்  நம்மவர்களுக்கு தெரிந்திருக்குமே. மேலே  எழக்கியல் பைபிளில் கதைதான் சொல்கிறார் என்று பால் டேவிஸ் கூறுகிறார். அப்படியென்றால் நம்ம ராமாயண இதிகாச கதையும்  பைபிளுக்கும் முற்பட்டதுதானே? கலியுகம், த்வாபர யுகம் தாண்டி பின் சென்று, திரேதாயுகத்திலேயே ஏலியன்ஸை முதலில் கண்டவர்  நம்மவர்.

நம்மவர்  கண்டவர். ஆஸ்திரேலியர் கண்டுகாதவர்.

மேலே  வாக்கியத்தில் நம்மவர் என்றால் எப்படி கமல்ஹாஸன் இல்லையோ அதுபோல ஆஸ்திரேலியர்  என்றால் பால் டேவிஸ்.

முதலில்  மனிதன் ஏலியன்ஸை பற்றி எப்போது சிந்தித்தான்? எது மனிதன் நிஜமாகவே இருப்பதாக நம்பிய முதல் ஏலியன்? யாரெல்லாம் ஏலியன்ஸ்?

இவ்வுலக  மனிதர்கள் கார்பன் அடிப்படையுடன் தோன்றிய உயிரினம். மேலும் ஹட்ரஜன், நைட்ரஜன்  என்று கூட்டி, ஆக்ஸிஜன் உட்கொண்டு  உயிருடன் திகழும் வேதியியல் பொருட்கள். ஒரு வாதத்திற்கு கார்பன் மற்றும் கால்களுடைய 'கரி-காலர்'களிலிருந்து, அதாவது உலக ஜீவராசிகளிலிருந்து வேறான, அந்நியர் அனைவரும் ஏலியன்ஸ் என்று வைத்துக்கொள்ளுவோம். அப்படியெனின் நம் புராணங்களில் இல்லாத  ஏலியப்பயபுள்ளைகளா? ராக்‌ஷஸர், தேவர், கின்னர கிம்புருடர் என்று தொடங்கி பாதாள, தேவ, கந்தர்வ என்று ஈரேழு  பதினான்கு (மைனஸ் ஒன்று) லோகங்களிலும் நாம் ஏலியன்ஸ் கண்டுள்ளோம். அடுத்த ஏலியன்ஸ் புத்தகம் எழுதுமுன் பால்  டேவிஸை நம்ம வேளுகுடி கிருஷ்ணனாண்ட அளவளாவச்சொல்லவேண்டும்.

இந்த  ரீதியில் யோசித்தால் முடிவு சரியாக வராது. எப்படியும் இப்போது உலகிலுள்ளோர் ஏலியன்ஸ் என்று கூறுவது மேலே இதிகாச  புராணங்களிலுள்ளோரை இல்லை. தர்க்க  ரீதியாக யாராவது முன்னரே ஏலியன்ஸை கணித்துள்ளாரா? செய்துள்ளார். கிரேக்க  டெமாக்ரிட்டஸ். கி.மு. 460லிருந்து 370 வருடம் வரை  வாழ்ந்தவர்.

அதாவது  இரண்டாயிரத்து ஐநூறு வருடங்கள் முன்னர். எழக்கியலுக்கு சிலபல வருடங்கள் கழித்து. எழக்கியல் வானில் ஏலியன்ஸ்ஸைப் பார்த்தாரென்றால்,  டெமாக்ரட்டிஸ் நிதர்சனமாய் 'அணு'மானித்தார்.

அதாவது, அணுமானித்தார் எழுத்துப்பிழையில்லை. அணு வழியே ஏலியன்ஸ்களை அனுமானித்தார்  என்கிறேன்.

(இப்படி ஒரு ஜோக் இல்லை வார்த்தை விளையாட்டு செய்துவிட்டு அதை ’அதாவது, அதாவது’ என்று அருகிலேயே விளக்குவது தேவை  என்கிறார் நண்பர் நல்லெண்ணத்துடன். அப்பதாம்மா படிக்கர சிறுவயசு பசங்களுக்கும் புரியும். அதான் மேலே பலமுறை அதாவது செய்துவிட்டேன். ஆனாலும் எனக்கென்னவோ காதலிக்க நேரமில்லை  காஞ்சனா "We don't see Tamil pictures. We see only  English pictures. அதாவது, ஆங்கிலப்படங்களை மட்டுந்தான் பார்ப்போம்" என்று வசனம் பேசுவதுபோல் இருக்கிறது.)

டெமாக்ரட்டிஸ்தான்  (Democritus) ஆதிகாலத்திலேயே  அணுவைப்பற்றி முதலில் கூறியவர். ஒரளவு  துல்லியமாகவும் சொன்னார். உலகிலுள்ள  அனைத்து மேட்டரும் அணுக்களால் ஆனது, அணுவின் பலவகை சேர்க்கையில்தான் மனிதனையும் சேர்த்து, பல பொருட்கள் தோன்றியுள்ளன என்றார்.

இப்படி  இவ்வுலகம் இயற்கையில் அணுக்களின் கூட்டு மூலம் ஏற்பட்டுள்ளதென்றால் பிரபஞ்சத்தில்  வேறு இடங்களிலும் வேறு உலகங்கள் சாத்தியமே. அவைகளும் அணுக்களாலானது. அவற்றில்  சில உலகங்களில் சூரிய சந்திரன்கள் உள்ளது. சிலவற்றில் கிடையாது. சிலதில்  நம் சூரிய சந்திரர்களைவிட பெரிதான சூரியசந்திரன்கள். இவ்வுலகங்களுக்கிடையே வெவ்வேறு தூரங்கள். சில உலகங்கள் தேய்ந்து வருகிறன, சில வளர்கிறது. சிலது  உயிரில் சிறக்கிறது. சில  செத்துமடிகிறது. சில தங்களுக்குள்  மோதிக்கொள்கின்றன. சிலவற்றில் ஒரு  வெங்காயமும் கிடையாது. சிலவற்றில்  நம்மைப்போல் மனிதர்கள் இருக்கலாம். இப்படி அடித்தார் ஒரு லாங் ஷாட் ஊகம்.

அது  யூகமா ஊகமா என்று சண்டைபோடுவதற்குமுன் டெமாக்ரடிஸின் தர்க்கத்தை  யோசித்துப்பாருங்கள்.

இத்தர்க்கத்தை  மேலும் பாலிஷ் போட்டவர் டிட்டஸ் லுக்ரேஷியஸ் காரஸ் (Titus  Lucretius Carus). கி.மு. 99 முதல் 54 வரை வாழ்ந்த ரோமானிய சாமானியர். புதுக்கவிஞர். அன்றைய அறிவியலை அப்படியே டி ரேரும் நேச்சுரா என்று பெயரிட்டு  நெடுங்கவிதையாய் எழுதியவர். டெமாக்ரடிஸின்  அணுவைப்பற்றிய கருத்துகளை இக்கவிதையிலும் வலியுறுத்தி, பின்னர் ஏலியன்ஸ் பற்றியும் தொட்டுப்போகிறார். இப்படி:

அணுக்களின்  தொகை எண்ணற்றவையெனின்

உயிர்கள்  எண்ணமுடிவதைக்காட்டிலும் அதிகமாயின்

இயற்கையின்  படைப்பூக்கம் இருந்திடுமாயின்

அணுக்களை  சேர்த்தடிக்க - இங்கு  சேர்ந்திடுவதைப்போல

பிறகு நீ  ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்

வேறு  வானிடங்களில் வேறு உலகங்கள் இருப்பதை

வேறு  மனிதகுலங்கள், விலங்கினங்கள்  இருப்பதை

லுக்ரேஷியஸ்  ரோமானியில் கவிஞதை, ஆங்கிலத்தில்  போயமாக்கியதை (கீழே குறிப்பில்  கொடுத்துள்ளேன்), மேலே  உள்ளதைப்போல் தமிழாக்கலாம். இரண்டு  மொழியாக்க மாறுவேடங்களில் எவ்வளவு கற்பனை நட்டமானாலும், ஓரளவு அவர் தர்க்கம் புரியும்.

மேலே  ஏலியபுராணத்தை சொல்வோம்.

1640களில் கலிலியோ டெலஸ்கோப்,  தொலைநோக்கி, கண்டுபிடித்ததும், ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் விட்டு, வியாழனின் நான்கு கோள்களை தொலைநோக்கிவழியே கண்டார். அவற்றில் அயோ (அய்யோ இல்லை Io) கோள்  வியாழனை இங்கிட்டிலிருந்து சுற்றி பின்புறம் ஒளிந்து அங்கிட்டாய் வெளிப்படும்  காலத்தை ஆறுமாத இடைவெளியில் பலமுறை அளந்து அதைவைத்து ஒளியின் வேகத்தின் மதிப்பை  ஓலாஸ் ரோமரும் (Olaus Romer)  கிறிஸ்டியன் ஹைஜன்ஸும் (Christian Huygens) கண்டறிந்தனர் (இன்றைய  மதிப்பிலிருந்து 20 சதவிகிதம்  வேறுபாடு). இப்படியாக வானியல்  அறிவியல்துறையாய் ஏற்பட்ட சூழலிலும், ஏலியன்ஸ் பற்றிய கருத்துகளும் அனுமானங்களும் அதிகரிக்கவே செய்தது.

கலிலியோவை  அடுத்து அவதரித்த யொஹானெஸ் கெப்லர் தன் கிரகங்களின் சுற்றுப்பாதைகளை  நிர்ணயிக்கும் விதிகளை வகுத்துவிட்டு இலவச இணைப்பாய் ஸோம்னியம், கனவு, என்று ஒரு புத்தகம் எழுதினார். அதில் சந்திரனில் மிதமான அறிவுடன் ஊர்வன பல இருக்கிறது என்றார். சூரியனை பார்த்திருக்கும் சந்திர  பிரதேசங்களில் வசிப்பவர்களை சன்வோல்வன்ஸ் என்றும் எதிர்புறம் வசிப்பவர்களை  ப்ரைவோல்வன்ஸ் என்றும் பெயரிட்டார். சூரியர்கள், அசூரியர்கள். தன் கனவை அத்துடன நிறுத்தவில்லை.

பூமிக்கு  சந்திரன் இருக்கிறது. பூமியில்  நாம் (உயிர்) இருக்கிறோம். வியாழனுக்கும் சந்திரன் இருக்கிறது (கலிலியோ சற்றுமுன் தன் தொலைநோக்கியில் கண்டறிந்தது). அதனால் அநேகமாக வியாழனிலும் உயிர்  இருக்கவேண்டும் என்றார்.

இவ்வகை  தர்க்கத்திற்கு ஸில்லோஜிஸ்ஸம் (Syllogism) என்று பெயர். தமிழாக்கம்  தமிழில் மட்டுமே எழுதுபவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஸில்லோஜிஸ்ஸம்  என்றால் இரண்டு உண்மை கூற்றுக்களை ஒரு வகையில் இணைத்து, அக்கூற்றுக்களை சார்ந்து அதுவரை மறைந்திருந்த மூன்றாவதாய் தோன்றும் ஒரு  புது கருத்தை முன்வைப்பது. அதாவது  நாய் குறைக்கும். பூனைக்கு வால்  உள்ளது. இவை இரண்டும் இரு உண்மை  கூற்றுகள். ஒரு வகையில் சேர்த்து  நாய் குறைக்கும், பூனைக்கு வால்  இருக்கிறது. நாய்க்கும் வால்  இருக்கிறது அதனால், பூனையும்  குறைக்கும் என்று மூன்றாவதாய் ஒரு கருத்தை முன்வைப்பது ஸில்லோஜிஸம்.

அநேகமாக  சரியாக வரும். கெப்லர்தான்  சொதப்பிவிட்டார்.

கெப்லர்  மட்டுமல்ல. மேலே ஒளிவேகஅளத்தலில்  குறிப்பிட்ட டச்சு விஞ்ஞானி கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் தன் பங்கிற்கு 1698இல் பதிப்பிக்கப்பட்ட தன் காஸ்மோதெரியோஸ்  புத்தகத்தில் பக்கத்து கிரகங்களில் வாசிகள் இருக்கிறார்கள் என்று வாசகர்களை  வசியம்செய்தார்.

இப்படியே  ஏலியன்ஸ் பற்றி சரியாக நிர்ணயிக்க நிரூபிக்க முடியாமல் முன்னூறு வருடம் கழித்து  இன்றைக்கு நூறு வருடங்கள் முன்பிலிருந்து மீண்டும் பக்கத்து கிரகங்களில்  ஏலியன்ஸ்களை முனைப்பாய் தேடுகிறோம். முக்கியமாக செவ்வாய் கிரகத்தில். இத்தேடலுக்கும் பல கதைகள் காரணம். நிறைய புருடா. சிலதே  ட்ருடா.

1858இல் கிறித்துவ துறவி ஏன்ஜெலோ ஸெக்சி (கவனிக்கவும், செக்ஸி இல்லை; ஸெக்-சி. எதுக்கு வம்பு, அவர் பெயர் Angelo  Secchi) செவ்வாயில் தெரியும் தாறுமாறான கோடுகளை கனாலி (கால்வாய்கள் போல) என்று கருதினார். இருவது  வருடங்கள் கழித்து வானியலாளர் கியோவானி ஷியாபரெல்லி (Giovanni  Schiaparelli) செவ்வாய் மேப் போட்டார். கால்வாய்கள் போல கோடுகளுடன் (மேலே படத்தில்). அப்படியே தத்தி தத்தி கால்வாய்கள் போல கோடுகள்  ஆங்கிலத்தில் மறுவி, கோடுகள்  அழிந்து, போல அழிந்து, கால்வாய்கள் மட்டும் மிஞ்சியது. செவ்வாயில் கால்வாய்கள்.

செவ்வாயில்  கால்வாய்கள் அமேரிக்கர் பெர்சிவால் லொவெல் (Percival Lowell) கற்பனையை பாதித்தது. ஒரு வானியல் மையத்தை ஃபிளக்ஸ்டாஃப் ஊரில்  நிறுவினார். செவ்வாயின்  கால்வாய்களை ஆராய்வதற்கு. 1900 வாக்கில்  லொவெல் செவ்வாயில் உயிர்களை கண்டார். செவ்வாயின் பல பகுதிகளை பல பெரிய படங்களாக வரைந்துதள்ளினார். நீர் நிறைந்த கால்வாய்களுடன். இக்கால்வாய்கள் செவ்வாயின் துருவ  பிரதேசங்களிலிருந்து மத்திய பிரதேசங்களுக்கு செவ்வாய்வாசிகள் உபயோகிக்க நீரை  கொண்டுவருகிறது என்றார். ஒருவராலும்  இல்லை என்று நிரூபிக்க முடியவில்லை. படத்தில் லொவெலின் செவ்வாயில் கால்வாய்கள்.

அச்சமயத்தில்  எச்.ஜீ.வெல்ஸ் என்ற இலக்கியவாதி, சாரி, எழுத்தாளர், தன் வார் ஆஃப் தெ வேர்ல்ட்ஸ் (The War of the  Worlds) புத்தகத்தை எழுதினார். செவ்வாய்வாசிகள் பறக்கும்தட்டுக்களில் வந்து பூமியை தாக்குவதாக கதை  கருவுடன். இக்கதை படித்த  மக்களிடையே ஏலியன்ஸ்கள் பற்றி பரபரப்பும், ஆவலூட்டும் தர்க்கங்களையும் ஏற்படுத்தியது. பாதித்தது. எப்படி? 1950களில் ஆர்ஸன் வெல்ஸ் குரலில் இக்கதை  ரேடியோ அமேரிக்காவில் வண்ணச்சுடராய் படிக்கப்படுகையில், பயத்தில் பல நகரங்களில் மக்கள் தெருவில் இறங்கி ஓட்டமெடுத்தார்களாம் (நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி  வந்துவிட்டனராம்).

இருக்கட்டும், ஏலியபுராணத்தில் செவ்வாயின் இன்றைய நிலை என்ன? அடுத்த கட்டுரையில். ஆனால், பின்கதை  சுருக்கமாய் இப்போதே ஓரிரண்டு சொல்கிறேன். லொவெல் சொன்னதெல்லாம் கற்பனை. செவ்வாயில் நீர் கால்வாய்கள் இல்லை. தண்ணீர் இருக்கிறது. ஆனால்  நாம் குடிக்கும் பதத்தில் இல்லை. ஐஸ்  இருக்கிறது. செவ்வாயில்  நம்மைப்போல் கரி-காலர்கள் (மனித உயிர்கள்) உஜ்ஜீவிப்பதற்கு ஏற்ற சூழல், காற்று மண்டலம் கிடையாது. ஆனால்  உயிரே இல்லையா என்றால்...

பார்ப்போம், அடுத்து செவ்வாயில் உயிர்.

குறிப்புகள்

1. முஸ்லீம்களுக்கு எழக்கியல் துல்-கிஃபுல் துறவி என்று கருதப்படுகிறார்.

2. Titus Lucretiius Carus (99 - 55 BCE) in his De Rerum Natura writes

If atom stocks are inexhaustible,

Greater than power of living things to count,

If Nature's same creative power were present too

To throw the atom into unions - exactly as united now,

Why then confess you must

That other worlds exist in other regions of the sky,

And different tribes of men, kinds of wild beasts.

இதுவே அவர் எழுதியதின் ஆங்கிலமொழியாக்கம். The Roman Poet of Science, lucretius: (translated by Alban Dewes Winspear), Harbor Press, NY 1955 புத்தகத்தில் உள்ளது. கட்டுரையில் தமிழாக்கியுள்ளேன்.

பல்லவி பட்டறை
[சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம்  தானம் பல்லவி –   பாகம் மூன்று கட்டுரையின் ஒரு பகுதி]

பல்லவி என்பது நிச்சயம் வெறும் மெலடி மட்டுமல்ல. பல்லவி கலையும் அறிவியலும் கலந்துசெய்த கலவை. இந்த கருத்துக்கு எனக்கு டாக்டர். எம். வேதவல்லி சப்போர்ட். முதலில் ராகத்தை மெலடியாய் ஆலாபனை செய்துவிட்டு, தானமாய் லயம்சேர்த்து, பிறகு முத்தாய்ப்பாய் ராக, மெலடி லய கணக்கு மிளிர பல்லவி சாஹித்யம் அமைத்து பாடுவதே முறை. சாஹித்ய சாதுர்யங்களும், ராக பிடிகளும், லய கணக்குகளும் மெலடி ரிதம் என போட்டிபோட்டு கலக்கிவருவதுதான் பல்லவி.

சிலருக்கு இந்த ஜிகிர்தண்டா கலவை கடவுள் (மெலடி) பாதி, மிருகம் (லயம்) பாதி போல. பல்லவியில் ஆதிதாளம் தாண்டி, மிஸ்ர ஜம்பை என்றொ, இல்லை இரண்டு களையில் முக்கால் இடம் தள்ளி தொடங்கி த்ரிகாலத்தில் அனுலோமம் செய்தல் என்று லயம் சற்று தூக்கினாலே, ரொம்ப கணக்குவழக்கு சௌக்யமே போச்சு என்று அங்கலாய்ப்பர். இக்கட்சியில் பல இசைவிமர்சகர்களும் உண்டு. உண்மை இவர்களுக்கு பெரும்பாலும் தாளம் போட வராது. இல்லை சில ஆவர்தங்களுக்கு மேல் நிற்காது.

பல்லவியை எப்படி அமைக்க வேண்டும் என்று நியதிகள் நிறைய இருக்கிறது. பொதுவாக பல்லவிக்கு மூன்று அங்கங்கள் இருக்கும். பூர்வாங்கம் (அல்லது ப்ரதமாங்கம்), உத்தராங்கம் (த்துவித்தீயாங்கம்), பதகர்பம் (தமிழில் அறுதி). பூர்வாங்கம் பல்லவியின் முதல் பாகம் (முதல் வரி போல), உத்தராங்கம் இறுதி பாகம். இணைப்பது அல்லது பிரித்துக்காட்டுவது அறுதி. ஒரு தாளத்தில் பல்லவி அமைகிறது என்றால், அறுதி தாளத்தின் ஒரு சுற்றில் நடுசெண்டரில் விழும்.

உதாரணமாய்

ராக தான பல்லவியே | கொண்டு வா பல்வலியே ||

என்று ஆதி தாளத்தில் (8 அக்‌ஷரம்) இரண்டு களையில் சம எடுப்பில் தொடங்கி ஒரு பல்லவி அமைத்தால், அறுதி, நான்கு அக்‌ஷரத்தில் தாளத்தின் நடுவில், கொண்டுவில் விழும் (பியூரிஸ்டுகளுக்கு: “கொண்டு வா” அக்‌ஷர கணக்கு இழுவை என்றால், “ஞான கான” என்று மாற்றிக்கொள்ளுங்கள்).

ஆனால் இது கட்டாயமில்லை. நடுசெண்டருக்கு முன்னரும் பின்னரும் அறுதி இருக்கலாம். இப்படி இருந்தால் பல்லவியின் முதல் பாகமோ இறுதி பாகமோ அடுத்ததைக்காட்டிலும் நீட்டம். அறுதியே வைக்காமல் பல்லவி பாடுவேன் என்றும் சிலர் செய்துள்ளனர். அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதுடன் விட்டுவிடுவோம் (இது என் சப்ஜெக்டிவ் ஒப்பீனியன், அகவயமான கருத்து).

ஏகப்பட்ட விதிகள் உள்ளது போலிருக்கே. என்னப்பா இது கேட்பதற்குமுன்னே இவ்வளவு மண்டைக்குள் ஏற்றவேண்டுமா என்றால், பல்லவி சுலப செய்முறையும் உள்ளது. பார்ப்போமா.

ஒரு மூடி போட்ட காலி பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக குலுக்கி, திறவுங்கள். என்ன வரும்? நிறைய நாய்கள். ஏனென்றால், எம்ப்டி வெஸல்ஸ் கிரியேட் மோர் நாய்ஸ்.

சரி, நாய்கள் வெளியேறியதும், மால்ட்டொவாவில் இருக்கும் மால், பக்கத்தில் (அருகில்) பக்கத்தில் இருக்கும் தாள், தீக்‌ஷதர் முத்திரையான குருகுஹா, தமிழுக்காக முருகா அல்லது மால்மருகா, பழந்தமிழுக்காக ஷண்முகா (புதுத்தமிழில் டண்முகா?), பெண்களை கவர வள்ளிமணாளா என்று சொற்களை பாட்டி(லி)ல் அடைத்து, துணிமேலிட்ட மூடி போட்டு குலுக்கினால் கால்மணியில் பல்லவி திரண்டுவிடும்.

முருகா, மால் மருகா, குருகுஹா, ஷண்முகா

வள்ளிமணாளா, வேல வா,

இப்படி. கடைசி வேலவா வை வேல வா என்று பிரிப்பது முக்கியம். ஏன் என்று படிக்கையில் விளங்கும்.

இது பிடிக்கவில்லை என்றால், பாட்டிலி(லி)ருப்பதை பாத்திரத்தில் கொட்டி, முத்து, குமரா, கந்தா, செந்தில், நாதா, வடி, வாடி, ஆடி, ஓடி, சரவணபவா, மயில், மா, வா, தா, ஆ, அன், என்று வேறு பதார்த்தங்களை சேர்த்து, இம்முறை மிக்ஸியிலிட்டு கலக்குங்கள். இப்போது

முருகன், முத்துக்குமரன், செந்தில்வேலவன்

சரவணன், குஹன், சரவணபவ வடிவழகன்

என்று வரலாம். கச்சேரியில் பாடும்முன் ஏவிஎம் ஸ்டூடியோவில் காப்பிரைட் பிரச்சனை வராதே என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

இப்படியாக உதிக்கும் பல்லவிகளை பிறகு, ஆதி, கண்ட ஜாதி திரிபுடை என்று ஏதோ ஒரு தாளத்தில் பொருத்தி, ஒரு ராகத்தில் மெட்டமைத்து பாடவேண்டும். இதற்கு முன்னர் கூறியபடி, தானம் தெரிந்திருந்தால் கைகொடுக்கும். இல்லை பல் வலிக்கும்.

மேலும், வார்த்தைகளை போட்டு தாள நேரம் மொத்தத்திற்கும் அடைத்து அந்தண்டை இந்தண்டை இசைவைத்து இழுத்தாலும் இசைந்துகொடுக்காமல் பல்லவி அமைத்தால் அதற்கு யதி பல்லவி என்று பெயர். பெரிதாக நிரவல் செய்யமுடியாது. பல்லவி வாக்யத்தை பாடிவிட்டு முடித்துகொள்ளவேண்டியதுதான். கணக்கு காட்ட முடியாது. பல்லவி பாடிவிட்டேன் என்று வேண்டுமானால் கணக்கு காட்டலாம்.

குறையாய் தெரியவேண்டிய இது இன்று சில மேடையஸ்தர்களுக்கு நிரை. சுருக்க பல்லவி பாடிமுடித்துவிடுவார்கள்.

சரி, கம்போஸிங்கில் அவ்வப்போது தானம்-ஞானம் மிக்ஸி ஓவராய் கிடைந்து

மாதவன் மருகா, மாமயில் முருகா, எனையாளவா

வடிவேலவா, ஓடிவா, விரைந்தோடிவா

என்றும் வந்தால், நீர் கொடுத்துவைத்தவர். விரைந்தோடிவாவில் பொடி வைத்து, தோடி ராகத்தில் அமைத்து சங்கீர்ன திரிபுடை (9+2+2=13 அக்‌ஷரம்) தாளத்தில் பாடலாம் (நிஜந்தான்).

ஆனால் ஒன்று. பல்லவியில் ஆக்‌ஷன் வெர்ப், வினைச்சொல் இருக்கவேண்டும் என்று ஒரு நியதி. அதுபடி வரிசையாய் பெயர்ச்சொற்களாய் மேலே மிக்ஸியில் ஆட்டி வெறுமனே கூட்டிச்சொன்னதெல்லாம் பல்லவியாகாது. அதற்காகத்தான் இப்படி வேல வா, ஆடிவா, ஓடிவா, விரைந்தோடிவா, என்றும், முடியவில்லை என்றால் வெறுமனே வா என்றும் ஜல்லியடிப்பது.

அப்படியே போய் சைக்கிள் ஏறிவா, ஸ்கூட்டர் ஓட்டிவா, 12பி பஸ் பிடித்துவா என்றெல்லாம் பாடலாம். எல்லாம் ஆக்‌ஷன் வெர்ப்தானே.

ஏனெனில், "கத்தரிக்காய் வாங்க வாயேண்டி தோழி", "உப்புமா கிண்டடி பெண்ணே, நன்றாக" என்றெல்லாம் ஒம்மாச்சி அற்ற பெயர்சொற்களுடன், சரியான வினைச்சொல்லுடன், டைகர் வரதாச்சாரியார் 1920களிலேயே பல்லவி அமைத்துப்பாடியுள்ளதாக தெரிகிறது. அவருக்கு (ம், பெரும்பாலான அவர் தலைமுறையினருக்கும்) சங்கீதமே பிரதானம். சாஹித்யம் சாதாரணம். கேட்டவர் சொல்லிக் கேட்டவர் சொல்வதை கேட்டுச் சொல்கிறேன்.

அதேபோல் ஒம்மாச்சி, மனித பெயர்சொல்தான் பல்லவியில் வரவேனும் என்றில்லை,

குத்தாலத்து குரங்கே | மரத்தை விட்டிறங்கே ||

என்றும் வினைச்சொல்லுடன் பல்லவி அமைக்கலாம். அமைத்திருக்கிறார்கள், பைரவி ராகத்தில், ஆதி தாளத்தில் (ஆதாரம்: பக்கம் 49, சவுத் இண்டியன் மியுசிக், பாகம் 4, சாம்பமுர்த்தி)

மேலுள்ள பல்லவியை யாரராவது கச்சேரியில் பாடினார்களா தெரியவில்லை. ஆனால், அதற்கு முன் மிக்ஸி வைத்து கிடைந்த நம் பல்லவிகள் பலதை பலர் அவரவர் திறனுக்கேற்ப தற்கால கச்சேரிமேடைகளில் பாடியுள்ளனர்.

மிச்சத்தை சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம்  தானம் பல்லவி –   பாகம் மூன்று கட்டுரையில் படித்துக்கொள்ளுங்கள்.  பல்லவி பற்றி வரலாறும், சில உதாரண ஒலிக்கோப்புகளும் விளக்கங்களும் உள்ளது.

ஏலியன்சோலை
செம்மொழிப்பிரதேசங்களான குறிஞ்சி, முல்லை, கோவை, திருமாலிருஞ்சோலை அடுத்து ஏலியன்ஸ் மற்றும் ஏலியன்ஸ் சார்ந்த அறிவுப்பரப்பிற்கு  ஏலியன்சோலை என்று பெயர். பின்இணையத்துவ நவீனத்தமிழ் சொல்லாக்கம் என்றால் இலக்கிய நெடி கமழலாம். ஆனால் இது ஒரு இலக்கிய கற்பனை வரண்ட பிரதேசம். கேளிக்கை விஞ்ஞானப்புனைவுகள் கட்டட்ற காளானாய் தோன்றிச்செழிக்கும் வெறும் அறிவுத்துறை. இப்பரப்பை பற்றிய கதைகள் கட்டுரைகளில் படைப்பூக்கம் கம்மி. எழுதுபவர்களும் வெறும் மனிதர்களே. ஏலியன்ஸ்கள் இல்லை.

வாசிப்பவர்களை பற்றி இன்னமும் முடிவாகவில்லை.

ஈதிப்படியிருந்தாலும், அன்றாட பயன்பாட்டிற்கு, மனிதர்களாய் நாம் ஏலியன்ஸ் - அந்நியர்கள் - பற்றி ஒரு அறிவார்த்தமான கருத்துகொள்வதற்கு பல விஷயங்களை பலவருடங்களாக இத்துறை அறிவியல் செட்டியார்கள் (SETI-யார்கள் ) திறம்பட கற்பனைசெய்திருக்கிறார்கள். அநேகமாக சாமன்யர்க்கும் புரியும் எளிமையான அறிவியல் சிந்தைகளே.

குன்சாய் தெரிந்துகொண்டு அதைவிட குறைவாய் தெரிந்துள்ளவர்களிடம் அறிவார்த்தமாய் கதைவிடவும், நம்மைவிட அதிகம் தெரிந்தவர்கள் பேசுகையில் புரிவது போல தலையாட்டவும் இணைய விஷயங்கள் போதும். வல்லுனராகும் அளவிற்கு விவரமாக தெரிந்துகொள்ள வேண்டுமெனில் இணையம் மட்டும் பத்தாது.  சில அச்சிட்ட புத்தகங்களையும் கட்டாயம் படிக்கவேண்டும். என்ன, விஷயம் மொத்தமாக ஆங்கிலத்தில் இருக்கும். படித்து, தமிழில் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு தொடக்கத்திற்கு இங்கே குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை சார்ந்து இணையத்திலும் புத்தகங்களிலும் தேடிப் படிக்கலாம். உங்கள் விரயநேரத்தைப் பொறுத்து உங்கள் ஏலியன்ஸ்-துறையறிவு நிர்ணயமாகும்.

இப்படி ஏலியன்சோலை புரிதலை வளர்த்துக்கொண்டால் மனித அறிவுத்துறை மேம்பாட்டையொட்டி சில நிச்சய சம்பவங்கள் நிகழலாம். (சம்பவங்களே சிலருக்கு நிகழ்வாகலாம்).

உதாரணமாய் செவ்வாய் சனி நவக்கிரகங்களே; நம்மை (பூமியை) அவை சுற்றவில்லை, நாம்தான் அவைகளை (கோவில்களில்) சுற்றுகிறோம் என்று திடமாய் நம்பும் பா(ர்)ட்டிகளிடம், இவ்வார்த்தைகளை புரிதல்களை வைத்து ஜல்லியடிக்கலாம்.  சிலர் கேட்டுவிட்டு காசுபோடலாம். பலர் போடா போக்கத்த பயலே என்று இலக்கியம் படிக்க எழுந்துசெல்வர்.

ஏலியன்சோலையின் எதிர்விளைவாய், இலக்கியம் வாசிக்க ஆள் சேர்த்த புண்ணியம் உங்களைவந்தடையும்.

ஏலியன்சோலை பற்றிய முதல் சுற்றிற்கு தேறும் ஒரு இருபது முப்பது வார்த்தைகள் கீழே கொடுத்துள்ளேன். இவைகளில் சிலவற்றை ஏற்கனவே எழுதிய கட்டுரைகளில் விளக்கியுள்ளேன். [ இங்கு பாருங்கள் - ஏலியன்ஸ் இருக்கிறர்களா: ஒன்று இரண்டு மூன்று ]

மற்றவைகளை வரும் பதிவுகளில் விளக்கமாக எழுதப்போகிறேன்.

ஏலியன்சோலைபற்றி ஆங்கிலத்திலிருந்து இணையத்திலும் புத்தகங்களிலும் தேடிப்பிடித்து படித்து முடிந்தவரை எளிமையாய், தமிழில், இல்லை வேண்டாம், எதுக்கு ரிஸ்க், தமிழ்சார்ந்த ஒரு புரிகிற பேச்சில், சொல்வது என் வேலை.

துரதிருஷ்டவசமாய், வாசிப்பது இணையத்தில் இதுவரை வந்துவிட்ட உம் விதி.

அதனால் இப்போது ஒரு வேண்டுகோள்: படித்த கொதிப்பை மறக்க, மறக்காமல் விளக்கங்களில் எழும் சந்தேகங்களை தவறுகளை, தவறாமல் பின்னூட்டங்களில் குறிப்பிடுங்கள்.  ஒரு Tit for tat என்று இருக்கட்டுமே (எதற்கும் பின்னூட்ட விதிகளையும் பார்த்துக்கொள்ளுங்கள்).

இனி, ஏலியன்சோலையிலே…

1.  மனிதர்கள்: டிடஸ் லுக்ரேஷியஸ் காரஸ் (கி.மூ. ஆள்), ரெவரெண்ட் தாமஸ் டிக் (1600களில்), யொஹனெஸ் கெப்லர் (கிரகங்களின் சுற்றுப்பாதையை நிர்ணயித்தவர், ஏலியன்ஸ் பற்றியும் பேசியுள்ளார்), பெர்சிவால் லொவெல் (செவ்வாயில் கால்வாய் (கதை) ஓட்டியவர்), குக்லியல்மோ மார்கோனி (ஜெகதீஸ் சந்திரபோஸின் புகழை தற்செயலாய் அபகரித்த ரேடியோ அறிவியலாளர்), எச்.ஜீ.வெல்ஸ் (எழுத்தாளர், கதைவிடுபவர், இலக்கியவாதியன்று), கார்ல் சாகன், பிரான்சிஸ் டிரேக், பால் டேவிஸ், ஸ்டீபன் ஹாக்கிங், டேவிட் பிரின் (இவர்களையெல்லாம் ஏற்கனவே ஏலியன்ஸ் கட்டுரைகளில் அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளோம் - சுட்டி கீழே), ஆர்தர் க்ளர்க் மற்றும், பல விஞ்ஞானபுனைக்கதையர்கள், சிந்தனையாளர்கள், நீங்கள், நான், விக்ரம் (அந்நியன், ஏலியன்), ஏலியன்ஸ் (அந்நியர்கள், அதாங்க நமக்கு தெரியாத மனிதர்கள்)…

2.  ஏலியன்ஸ்கள்: ஆண்டிரோமிடான்கள், டிரோப்பா, ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன், நைட் ஷியாமளன் போன்றோரின் ஏலியன்ஸ்கள், ஊர்பவர்கள் (ஊர் மேய்பவர்களன்று, பாம்பு பல்லி என ஊர்வன போல் உடல் உள்ளவர்கள்), சிரியன்கள் (சிரியஸ் நட்சத்திரத்துடன் சம்பந்தம். சிரிப்பார்களா என்று இதுவரை தெரியாது), குள்ள கேசரி (hairy dwarfs), டக்ளஸ் ஆடம்சின் அறிவுள்ள நீலக்கறை, டெர்ரி பிராட்செட்டின் வட்டுலக வாசிகள், மற்றும் நியூயார்க்கர்கள் (தெருவில் எதிர்படுகையில் சட்டென்று பார்த்தால் பெரும்பாலானவர்கள் ஏலியன்ஸ் போலவே இருப்பார்கள்)

3.  துறைகள்: அஸ்ட்ரோபயாலஜி, எக்ஸோதியாலஜி, எக்ஸோஜெனிஸிஸ் இப்படி உலகிலுள்ள துறையை முன்னாடி எக்ஸோ சேர்த்து ஏலியன்ஸ் பற்றிய துறையாக்கி படிப்பது, ரேடியோ வானவியல், வின்வெளிப்பயணம், வசிக்கத்தக்க கிரகங்கள்

4.  கொள்கைகள்/சித்தாந்தங்கள்: டிரேக் சமன்பாடு, ஃபெர்மி முரண்மெய் (இவற்றை ஏற்கனவே தொட்டிருக்கிறோம்), மத்தியமர் கொள்கை, கர்டஷாவ் அளவை (சமுதாயத்தின் அறிவுமுதிர்ச்சியை அளப்பது), டைசன் உருளை (நட்சத்திரத்தின் ஆற்றலை உறிஞ்சும் ஐடியா), ஏலியன்ஸ் தொடர்பு, ரேடியோ தொடர்பு, நிழல் உயிருருளை (shadow biosphere), சிந்தெட்டிக்கா (செயற்கை உயிர்?), பான்ஸ்பெர்மியா, ஆரீலியா மற்றும் நீல நிலா

5.  நிகழ்வுகள்/பொருள்கள்: ALH84001 (எரிகல்லின் பெயர்), யூ.ஃப்.ஓ.க்கள், பறக்கும் தட்டு, வாவ் சிக்னல் (ஆ! சமிஞ்சை), அரசிபோ (ரேடியோ வானியல் ஆராய்ச்சி மையம்), அரசிபோ சமிஞ்சை செய்தி, ஆலன் டெலஸ்கோப் அணிவகுப்பு, பயொநீர் பட்டயம், வாயேஜர் வட்டு, ஹப்பிள் டெலஸ்கோப், செவ்வாயில் உயிர், செவ்வாயில் நீர், டைட்டனில் நீர், க்ளைஸி 581 c மற்றும் d (கிரகங்கள்), ஏரியா 51 (அமேரிக்காவில் ரகசியமாய் வைக்கப்பட்டுள்ளதாய் நம்பப்படும் ஏலியன்ஸ் ஆராய்ச்சிதளம்)

6.  துறைவார்த்தைகள்/இயக்கங்கள்: எக்ஸோ-கிரகங்கள், பல்சார், மகா வடிகட்டல், ஹைப்பர்ஸ்பேஸ், காலப்பயணம், விண்வெளிக்கப்பல், ஃபோட்டான் டிரைவ், ஹைபர்னேஷன், ஒளிவேகப்பயணம், டாக்கியான்கள், நாஸா, SETI என்று எழுதப்படும் செட்டி, CETI என்று எழுதப்படும் செட்டி, SETI @ home எனப்படும் வீட்டில் செட்டி, மெட்டி (METI) மற்றும் வெட்டி (இது தமிழ் வார்த்தை)

ராகம் தானம் பல்லவி – சில பதில்கள்
[சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம்  தானம் பல்லவி –  பாகம் இரண்டு கட்டுரையின் ஒரு பகுதி]

ராகம் தானம் பல்லவி பற்றிய என் சொல்வனம் கட்டுரை முதல் பாகத்தில் எனக்கு தெரிந்தமட்டில் மூன்று  பிழைகள் இருந்தன. எம்.எஸ்.ஷீலா கர்நாடகா. வாக்கியத்தில் ஆந்திரப்பாடகர்களுடன் சேர்த்துவிட்டேன். ஆனாலும்  அவரும் அநேக கச்சேரிகளில் ரா.தா.ப. பாடுவார். 1965 கலாநிதி ஆலத்தூர் வெங்கடேச ஐயர்  என்று குறிப்பிட்டுவிட்டேன். சரியானது ஆலத்தூர் சகோதரர்களே. அதைப்போல அரியக்குடி ஐம்பதுகளில் (1950)  கொண்டுவந்த கச்சேரி பாணி என்று எழுதியிருந்தேன். 1930 40 களிலே அவர்  அதைசெய்துவிட்டாராம். முன்னூறு வயது மதிக்கத்தக்க என் இசைநண்பர் குட்டுகிறார். மகிழ்ச்சி.

ஆனால் பல்லவி பட்டமாள் என்று பலராலும் அழைக்கப்பட்ட டி.கே.பட்டமாள் பற்றி பெண்களும் பல்லவியை லயப் பிடிப்புடன் பாடி  ப்ராபல்யப்படுத்தமுடியும் என்று காட்டினார் என்ற என் கருத்து அவ்வளவு தவறானது இல்லை. நான் கூறுவது  பல்லவி மட்டும். கர்நாடக இசையை மேடையில் பாடிய முதல் பெண்மணி என்பதுபோல் இல்லை (ஆனாலும்  அவரே கர்நாடக இசையை மேடையில் பாடிய பிராமண குலத்தை சேர்ந்த முதல் பெண்மணி). மேலும்,  தானம் வீனை தனம்மாள் கூட நன்றாக செய்திருக்கிறார். பிறகு கீர்த்தனை வாசித்துவிடுவார்.  பட்டமாளுக்கு சமகாலத்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியும் ரா.தா.ப.. செய்திருக்கிறார். ஆனால் பட்டமாளுக்கு  இருந்த லய  ஞானத்திற்காகவே அவருக்கு மிருதங்கம் வாசிக்க விழைந்தவர் பால்காட் மணி (உறவினராக இல்லை). இதை பட்டமாளும் பேட்டியில்  கூறியிருக்கிறார் (ஆதாரம் பக்கம் 255, The Shaping of an Ideal Carnatic Musician, by  Pantula Rama,Gyan Publishing House).

முன்கட்டுரை ராகம் தானம் பல்லவியை ஏற்கனவே இசை தெரிந்தவர்களுக்காகத்தான் அறிமுகம் செய்கிறது. அதில் சந்தேகம் வேண்டாம். எவ்வளவு தெரியவேண்டும் என்பதில்தான் அபிப்பிராயபேதம். சில சங்கேதவார்த்தைகள் புரிதலுக்கு இடையூறு போல் தோன்றும். உதாரணமாய், நான் எழுதியிருப்பதை மேற்கோளிட்டு இப்படி ஒரு கேள்வி வருகிறது.

நான் எழுதியிருந்தது: பொதுவில் சௌககாலத்தில் ராகத்தை மெதுவாய் விஸ்தரித்து ஆலாபனை செய்திருக்கையில், மத்தியமகாலத்தில், அதாவது மிதவேகத்தில் தானம் செய்வது ஸொஸ்தமானது.

கேள்வி: இதை நீங்களே படித்துப் பாருங்கள். எனக்கு செளககாலம் என்றால் என்னவென்று தெரியாது. ஸொஸ்தமானது என்றால்? சுகமானதா? இந்த வரியில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை.

என் பதில்: சௌககாலம் புரியவில்லை என்றால் அவ்வார்த்தையை விடுத்து படித்தாலும் மேலுள்ள வாக்கியம் ஒரளவு புரியும். சௌககாலத்தில் வார்த்தைக்கு இரண்டு வார்த்தைகள் தாண்டி மெதுவாய் விஸ்தரித்து என்று குறிப்பிட்டபின்னும், சந்தேகம் வருவதெல்லாம் சற்று மிகை. சௌககாலம் என்றால் மெதுவாக. எவ்வளவு மெதுவாக என்று இப்போது சந்தேகம் வரும். அதேபோல மத்தியமகாலத்தில் என்றால் அடுத்து வரும் மிதவேகத்தில் என்பதுதான் பொருள். இது உறுத்தாமல் துறைவார்த்தைகளை கேட்பவர்களுக்கு, வாசகர்களுக்கு, தரும் உத்தி.

போன கட்டுரையில் ஷட்காலம் த்ரிகாலம் என்பது புரியவில்லை என்றால் சரி. இன்னமும் இவற்றை விளக்கவில்லை. ஆர்வமூட்டவே தூவியிருந்தேன். வரும் பாகங்களில் நிச்சயம் விளக்குவேன். ஸொஸ்தமானது என்றால் சுகமானதா என்றால் ஆமாம் சுகமானதுதான். ஏன் சுகமாய் இருக்கவேண்டும் என்றால் கச்சேரி போய் கேட்கையில்தான் தெரியும்.

இசையை படித்தே புரிந்துகொள்ளமுயல்வது, நீச்சலையோ சைக்கிளோட்டுவதையோ புத்தகத்தில் மட்டுமே படித்துவிட்டு கற்க எத்தனிப்பதைப்போன்றது. சைக்கிளோட்டுவது எப்படி என்ற புத்தகத்தில் சைக்கிளைபற்றி ஹாண்டில்பார், பால்ரஸ், பெடல் என்று அன்றாடம் அதுவரை பேசும் மொழியில் இல்லாத சில சைக்கிள் ஓட்டும் துறை சார்ந்த வார்த்தை பிரயோகங்கள் இருந்தே தீரும். ஹாண்டில்பார் என்றால் என்ன என்று சந்தேகம் வரலாம். சைக்கிள் பற்றி தெரிந்தவரிடம் கேட்டுதெரிந்துகொள்ளலாம்.ஆனால் விளக்குபவர் சைக்கிள் முன்னாடி வளைந்து கையால் பிடித்துகொள்வதுபோல் இருக்குமே என்று விளக்குகையில் அவர் கேள்விகேட்பவர் சைக்கிளை ஏற்கனவே பார்த்திருப்பார் என்றே விளக்குகிறார். இல்லையெனின் இவ்வகை விளக்கம் வீண். அதுபோல்தான் என் ரா.தா.ப.. கட்டுரை அறிமுகமும். கர்நாடக இசை சற்றேனும் கேட்டிருக்கவேண்டும். ராகம், ஆலாபனை ஸ்வரங்கள், தாளம் போன்ற வார்த்தைகளின் இசை அர்த்தங்களுடன் பரிச்சியம் இருக்கவேண்டும். ரா.தா.ப.. என்பதை மட்டுமே விளக்குகிறேன். கர்நாடக இசையையே அல்ல.அதையும் செய்யலாம், ஆனால் தனிக்கட்டுரைகளில்.

அதனால், சிலவார்த்தைகள் புரியவில்லை என்றால், கவலையின்றி, அவ்வார்த்தைகளை விட்டுவிட்டு நம்பிக்கைவைத்து சைக்கிளை குரங்குபெடல் அடித்தாவது ஓட்டிப்பாருங்கள். முடிந்தவரையில் கட்டுரையை அப்படித்தான் அமைக்கமுயல்கிறேன். ஆனால் கூடவே உங்கள் பங்கிற்கு ரா.தா.ப. வருகிற சில கச்சேரிகளுக்கு நேரடியாக செல்லுங்கள் (சேஷகோபாலன், சஞ்சய், ரவிகிரண், காயத்ரி, டி.எம்.கிருஷ்ணா போன்றோர் அநேக கச்சேரிகளில் செய்வர்). வயதான தாத்தா பாட்டிக்கள் அருகில் அமருங்கள். இதுதான் ரா.தா.ப. வா என்று தயங்காமல் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள். இல்லை ஒத்தவயதுடைய இசைநண்பர் அழைக்கையில் ஒரு கச்சேரிக்காவது உடன் செல்லுங்கள். அவரை கேட்கவிடாமல் சன்னமாய் கேள்வி கேட்டுதுளையுங்கள். கை தட்டுகையில், ஆஹா பேஷ், உச் உச் என்கையில், ஏன் எதற்கு எந்த விஷயத்தை பாரட்டுகிறாய் என்று கேட்டு (அவர் மேடையில் இசையை ரசித்திருக்கும் பட்சத்தில்) தெரிந்துகொள்ளுங்கள். சைக்கிளோட்டுவதுபோல சில சிராய்புகளுக்குப்பின் கர்நாடக இசை கேட்பது நிச்சயம் பிடிக்கும். ஒரே முக்கிய தேவை பொறுமை. மீண்டும் இக்கட்டுரைகளை படிக்கையில் ரா.தா.ப. அறிமுகம் புரிதலை மேம்படுத்த உபயோகமாகலாம்.

சிலவற்றை விளக்காமல் விடுவதற்கு அடுத்த காரணம், நான் இங்கு எழுதுவது அனைத்தையும் பாடமாக விளக்கி நூற்றாண்டுகளாக ஏற்கனவே பல  இசைப்புத்தகங்கள் உள்ளன. மொத்தத்தையும் ஒரே (அல்லது மூன்று நான்கு) கட்டுரையில் இங்கு என்றால், என்றால் என்று விளக்குவதன் மூலம் நாம் புரிந்துகொள்ள முற்படுவது சரியல்ல. கூடவே இசையை கச்சேரியில் சென்று நிறைய கேட்கவேண்டும். மேலும் அப்படி விளக்க முற்பட்டால் நீ பெரிய குடுமியா, கர்நாடக இசையை காலை காப்பியில் கலக்கி அடித்த இவனாட்டம் ஜெர்க்விட்டு போரடிக்கிறாப்போல பாடம் நடத்தரே என்று அயர்ச்சியில் எண்ணவைக்கும்.

இப்போது, போன வரி சுஜாதா எழுதுவதைபோல் உள்ளது, சுஜாதா போல வாக்கிய விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதை விட்டு, விஷயத்தில் கவனம் செலுத்தினால் என்னைப் போன்ற தற்குறிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று ஒருவர் எழுதுகிறார். அடுத்தவர், இசையை பற்றி எழுதினாலும் உங்கள் நடையும் பிய்து ஒதறுகிறது சார், படித்துவிட்டு எனக்கு இப்போது இசையை எழுதவே தயக்கமாய் உள்ளது என்கிறார்.

இ ருவகை கருத்துள்ளவர்களும் என் கட்டுரையை வாசிப்பதற்கு வந்தனம். தமிழர்களின் கலைப்பொக்கிஷமான கர்நாடக இசை, கட்டுரை வார்த்தைகளின் பாதிப்பை தாண்டியது. என் குறை எழுத்து ஏற்படுத்தும் சாதக பாதக மனக்கிளர்ச்சியை விடுத்து, ஊடுருவி, இசையை மட்டும் அணுகுங்கள். அதுதான் நிஜப்பயன்.

மிச்சத்தை சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் ராகம்  தானம் பல்லவி –  பாகம் இரண்டு கட்டுரையில் படித்துக்கொள்ளுங்கள் (தானம் பற்றி விளக்கியிருக்கிறேன்).

எங்கே ராகம் தானம் பல்லவி
[சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம்  தானம் பல்லவி – பாகம் ஒன்று கட்டுரையின் ஒரு பகுதி]

ஆழ்வாரின் கிளரொளி இளமையொத்த தற்கால கச்சேரி மூட்டைகளில் வழக்கொழிந்துபோய்கொண்டிருக்கும், கர்நாடக சங்கீதத்திற்கு இன்றியமையாத அங்கங்களில் ஒன்று, ராகம் தானம் பல்லவி. சுருக்கமாக RTP.

ஒரு நூற்றாண்டிற்கு முன் ராகம் தானம் பல்லவி தான் கச்சேரியை தொடங்கியதாம். பல  வேளைகளில் ஒரே RTPயே மொத்த கச்சேரியாகவும் வியாபித்து பரிமளிக்கும். ஆனால் இக்கால - முக்கியமாக, சென்னை டிசெம்பர் சீசன் – கச்சேரிகளை கவனித்தால், பெரும்பாலும் இப்படி அமைந்திருக்கும். 1 வர்ணம், 1 சப் மெயின், 1 மெயின் உருப்படி், 1 சொதப்பல் முயற்சி (புது ராகம், இல்லை கீர்த்தனை), 1 அபார முயற்சி (அந்த சீசனிற்கு கலைஞரின் உழைப்பு), 3 துக்கடா, 2 பஜன், 1 மங்களம் (ரசிகர்கள் எழுந்து செல்வதற்கான பின்னனி இசை) ஆகிய பத்துப்பாட்டு. இவ்வகை கச்சேரிகள் அனைத்து தர கர்நாடக ரசிகர்களையும் திருப்தி செய்யும், இரண்டரை மணி நேர, தலை கலையாத, நேர்வகிடு சமாச்சாரங்கள்.

நகர வாழ்கையின் அவசர கதி சிலுவையில் அறையப்பட்டுள்ள இக்கச்சேரிகளில் விஸ்தாரமான இரண்டு மணிநேர ராகம் தானம் பல்லவியை எதிர்பார்ப்பது அறிவியல் துறைகளில் இந்தியாவிலிருந்தபடியே இந்தியர் நோபல் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு ஒப்பானது. என்றாவதே நடக்கலாம்.

இத்தேய்மானம் ஒன்றும் புதிதல்ல. ஒருவிதத்தில் தற்கால சங்கீதகச்சேரி என்ற அமைப்பே அரியக்குடியார் ஐம்பதுகளில் (1950) கொண்டுவந்த கர்நாடக சங்கீத தேய்மானம்தான். இதனால் விஸ்தாரமாய் நுணுக்களை கவனித்து கேட்டு புரிந்துகொள்ளுமாறு மணிக்கண க்கில் ஒருசில கீர்த்தனைகளையும் ராகங்களை மட்டுமே பாடிவந்த முறை க்ஷீனித்தது என்பர்.

நாள் முழுக்க சில பாட்டுக்களே விஸ்தரித்து பாடி, நுணுக்கங்களை அனுபவிப்பதற்கான உல்லாச நேர அவகாசங்களும், சங்கீதக்கலையைத்தான் பொழுதுபோக அனுபவிக்கவேண்டும் என்ற தேவைகளும் தொழில்நுட்ப விழிப்புற்ற மக்களிடையே குறைந்து வருகிறது. சில பாட்டுக்களை மட்டும் பாடி, கர்நாடகசங்கீதத்தை கேட்கும் மக்கள் எண்ணிக்கையை போரடித்தே குறைக்கக்கூடாது என்றுதான், விஸ்தாரமான யானைக்கட்டி போரடித்தால் ரசிகர்க்கு மாளாது என்று துரித குதிரைகட்டி போரடிக்கப்பார்த்து, மூன்று நான்கு மணிநேர பலசரக்கு உருப்படிகள் அடங்கிய கச்சேரி என்று அரியக்குடியார் கொண்டுவந்தார்.

மேலும் சில மணி நேரங்களே பிடிக்கும் கச்சேரி முறையில் கலைஞர்கள் சங்கீதத்தை ஊர் ஊராய் சென்று வயிற்றுப்பொழைப்பாக செய்ய முடியும். மாதத்தில் பல கச்சேரிகள் செய்யலாம்.அதேபோல் இசை கேட்கும் ரசிகர்களும், குவித்து, பாத்திகட்டி சாம்பார்சாதத்தை மட்டுமே வெட்டி நாக்கு செத்துபோய் சாப்பிடுவதையே குறைத்துக்கொள்ளாமல், இலையில் பல பதார்த்தங்களை பார்க்கையில் பசி வள ரும்.சில புரியாத பதார்த்தங்கள் இருந்தாலும், புரிபவையும் இருப்பதால், விரும்பி பலமுறை சாப்பிடுவார்கள்.

இக்கச்சேரி அட்டவணையை எழுபது என்பதுவரையில் டெஸ்ட் மாட்சுகளாக விஸ்தரித்து ஆடிவந்தவர்கள், சமீபகாலங்களில் ஐந்து நாள் டெஸ்ட் மாட்ச் பாணி கச்சேரியை வழக்கொழித்து, ஒருநாள் ஆட்டமாக்கி, இப்போது டுவெண்டி டுவெண்டியில்தான் காசு புரள்கிறது, என்று சுருக்கியுள்ளனர்.

கச்சேரிகளை மட்டும் நம்பி பொழப்பை நடத்தும் வித்வான் பாப்புலராக இருக்கவேண்டுமெனில் சில அநாவசியங்களை, அனுசரித்தல்களை இன்று செய்யத்தான் வேண்டும் என்பது ஒரு கூற்று. கூடவே சில அவசியங்களை தேவைக்கதிகமாய் செய்யாமல் போகிறார்கள். ராகம் தானம் பல்லவியை பாடாதது போல.

(RTPஐ) அவாளே வேண்டாம்னுட்டா சார், அதுக்கு பதிலா துக்கடா செட் பாடிட சொல்லிட்டா என்று வித்வான்கள் கூறும் சால்ஜாப்பில் ஓரளவு உண்மையுமிருக்கிறது. சீசன் சமயத்தில் பல சபாக்களில், ராகம் தானம் பல்லவியை வித்வான் கச்சேரியின் அங்கமாய் விஸ்தாரமாய் பாடுவதற்கு, காரியதரிசிகள் முகம் சுளிக்கிறார்கள். வியாபார நேர விரயம் என்று.

ஆந்திராவில் பொதுவில் இப்படி இல்லையாம். இங்கு கச்சேரிகளில் நிச்சயம் பல்லவி பாடுகிறார்கள். ஒருவேளை டிசம்பர் சீசன் எனும் கமர்ஷியல் அளவுகோல் இல்லை என்பதாலா? இன்னொரு கூற்று ஆந்திராவில் கர்நாடக இசை கேட்கும் மக்கள் தமிழ்நாட்டைவிட கம்மி, ஆனால் சுத்தம்; சாஸ்திர இசை நீர்க்கடிக்கப்படுவதை விரும்புவதில்லையாம். பல்லவிகளும் இன்னமும் பிழைக்கிறது. சமீபகாலமாக நான் கேட்டுவரும் ஆந்திர பாடகர்கள் பந்துலராமா, எம்.எஸ்.ஷீலா, மண்டா சுதாராணி என்று அனைவரும், மேலேயுள்ள கூற்றை மெய்பிக்குமாறு, தங்கள் அனைத்து கச்சேரிகளிலும் பல்லவி பாடியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பல கச்சேரிகளில், கூட்டம் சேர (இல்லை அடுத்தமுறை வர) அநேகரை திருப்திபடுத்தவேண்டும். இதற்காக கடினமான விஷயங்களை சற்று ஒதுக்கி, இசையையே நீர்க்கச்செய்கிறோம். இதில் முதலில் அடிபடுவது RTPயே. ஒன்று மொத்தமாய் தூக்கிவிடுகிறோம். இல்லை இடக்கு ராகத்தில் சிறு பல்லவியாய் திஸ்ர தாளத்தில் 20 நிமிடத்திற்குள் சுருக்க முடித்துவிடுகிறோம். வேண்டாவெறுப்புடன் தீபாவளி மருந்து சாப்பிடுவது போல.

மேட்டிமைவாதம் என்று ஆந்திராவை சாடுவதா, எளியோர்க்கு எளியோனாய் RTPஐயே பெரும்பாலான கச்சேரிகளில் தூக்கிவிடும் தமிழ்நாட்டை பாடுவதா.

கலைஞன் தேய்ந்தால், ”சிந்து பைரவி” உட்பட, சில காரணங்களே. கலை தேய்ந்தால் சமுதாயம் மொத்தமும் பொறுப்பே.

மிச்சத்தை சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம்  தானம் பல்லவி – பாகம் ஒன்று கட்டுரையில் படித்துக்கொள்ளுங்கள்.