தமிழ் நிருபர்

மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமராம் டோனி பிளேர் புகழாரம்
மன்மோகன் சிங் அபூர்வமான இந்திய பிரதமர் என்று பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் புகழாரம் சூட்டியுள்ளார். எனது பயணம்’ என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதையில், தனது மனம் கவர்ந்த உலகத் தலைவர்கள் சிலரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுள் மன்மோகன் சிங்கும் ஒருவர். 1997 முதல் 2007 வரை பிரிட்டிஷ் பிரதமராக இருந்த டோனி பிளேர், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் பல்வேறு சமயங்களில் நேரிலும், தொலைப்பேசியிலும் பேசியுள்ளார். அய்ரோப்பாவைப் பிரிந்து தனியாகச் செயல்படுவது பிரிட்டனின் நலனுக்கு உகந்தது அல்ல’ என்று பொருளாதார வல்லுநரான மன்மோகன் சிங், டோனி பிளேருக்கு அப்போது ஆலோசனை கூறியுள்ளார்.

அதனைக் குறிப்பிட்டு எழுதியுள்ள டோனி பிளேர், மன்மோகன் சிங் அபூர்வமான இந்திய பிரதமர் என்று வர்ணித்துள்ளார். இந்திய தலைவர்கள் வேறு யாரையும் அவர் தனது சுயசரிதையில் குறிப்பிடவில்லை.

புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் மீட்பு!
தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் சில  எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக விமானப் படையினர்  தெரிவித்தனர்.

கரியமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து செவ்வாய்கிழமை இலங்கை விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினர் இவற்றை மீட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார்.

கொள்கலன் ஒன்றினுள் விமான உதரிரிப்பாகங்கள் இடப்பட்டு எரிக்கப்ப‌ட்டப்பட்ட நிலையிலேயே அவை மீட்கப்பட்டுள்ளன. முன்னாள் புலி உறுப்பினர்கள் வழிகாட்டியதையடுத்தே விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் உதிரிப்பாகங்களை மீட்டுள்ளனர்.

எரிக்கப்ப‌ட்டப்பட்ட நிலையில் 02 சிறிய இயந்திரங்கள் லைட்கள் சக்கரங்கள் உள்ளிட்ட சில விமான உதிரிப்பாகங்களும் பற்றுச்சீட்டுப் புத்தகங்கள் தொலைபேசிகள் பாட்டரி சார்ஜர்கள் ஆகிய பொருட்களும் குறித்த கொள்கலனிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை இலகுரக விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்கள் என‌ தெரிவித்த விமானப்படை பேச்சாளர் படையினருக்கும் புலிகளுக்கும் மோதல் உக்கிரமாக நிலவிய காலத்தில் புலிகள் அவற்றுக்கு தீ வைத்திருக்கலாமென நம்புவதாக அவர் கூறினார்.

தியாகி இம்மானுவேல் சிலை உடைப்பு : பதட்டம்
தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக தேவேந்திரர் மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேவேந்திரர் மக்கள் முன்னேற்ற கழகத்தலைவர் நாஞ்சை ரவி தேவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தியாகி இமானுவேல் சேகரனின் 55-வது நினைவு நாளை கடைப்பிடிக்கிற இந்த நேரத்தில் எங்களது சமூக உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் விதமாக மதுரையில் அவரது சிலையை உடைத்துள்ளனர்.

அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உடனே கைது செய்ய வேண்டும்.

இல்லையென்றால் தென்மாவட்டங்களில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினமான செப்டம்பர் 11-ம் தேதி ஒட்டுமொத்த தேவேந்திர குல மக்கள் சார்பாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’’ என்று கூறியுள்ளார்.

இதனால் தென்மாவட்டங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

டான்சி நிர்வாக இயக்குனராக உமாசங்கர் ஐஏ.எஸ்!
தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளர் எஸ்.மாலதி புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறுசேமிப்புத்துறை ஆணையாளராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.உமாசங்கர், போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததன் காரணமாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

தற்போது, விசாரணை தொடங்கப்பட்டு விட்டதால் அவர் மீதான சஸ்பெண்டு நடவடிக்கை 2.9.2010  முதல் ரத்து செய்யப்படுகிறது.

விசாரணையின் முடிவைப் பொருத்து, அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்த காலம் சரிசெய்யப்படும். சஸ்பெண்டு நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டதை தொடர்ந்து அவர் டான்சி நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்’’கூறப்பட்டுள்ளது.

பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி
சென்னை மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் ராஜா அண்ணாமலை புரத்தில் புதன்கிழமை நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் ஆ.மூர்த்தி கூட்டத்துக்கு  தலைமை தாங்கினார்.பா.ம.க. நிறுவனர்   டாக்டர் ராமதாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழக அரசு இலவசங்கள் கொடுப்பதால் எந்த வளர்ச்சியும் ஏற்படாது.  தொழில் செய்ய முடியாத  நிர்க்கதியாக உள்ள ஏழைகளுக்கு இலவச அரிசி போன்றவற்றை கொடுக்கலாம்.

குடோன்களில்  தேக்கி வைத்து  வீணாகின்ற பொருட்களை இல்லாதவர்களுக்கு வழங்கலாம். தேர்தல் வாக்குகளை மனதில் வைத்து இலவசங்களை   கொடுக்க கூடாது.

ஒருவருக்கு  மீனை இலவசமாக கொடுப்பதற்கு பதில் மீன் பிடிக்கும் தொழிலை கற்றுக்  கொடுக்கலாம் என்று ஒரு  பழமொழி உள்ளது. அதுபோல கல்வி, வேலைவாய்ப்புகளை கொடுத்தால் மற்றவற்றை மக்களே வாங்கிக் கொள்வார்கள்.

தமிழக திட்டக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் மாத குடும்ப வருமானம் ரூ.351 எனவும், ஒருநாள் வருமானம் ரூ.11, ரூ.12 எனவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 கோடி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.  சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இதன் மூலம் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைப்பதாக அரசு தெரிவிக்கிறது.

இதற்காக ஏழை மக்களின் நலன்கள்   பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. சிறப்பு பொருளாதார மண்டலம் மூலமாக தமிழக மக்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பதை விளக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 60 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். தமிழ்நாடு வளர்ச்சி அடைய வில்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வர வேண்டும் என்று தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளாரே?

பதில்:- அவர் பா.ம.க. நலம் விரும்பி. அவர் எப்போதும் நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். அவர் கருத்தை நான் வர வேற்கிறேன்.என்றாலும் இப்போது நாங்கள் எந்த முடிவும் எடுக்க வில்லை.

கே:- மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவின் இலங்கை பயணம் பயன் உள்ளதாக இருக்குமா?

ப:- நிருபமாராவ் பயணமும் அனைத்து கட்சி குழு பயணத்தாலும் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. ஏனென்றால் இலங்கையில் சர்வாதிகாரி ஆட்சி நடக்கிறது.

கே:- கச்சத்தீவை மீட்க முடியாது என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளாரே?

ப:- அது தவறான கருத்து.

கே:- சத்துணவு, டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டத்தை அரசு ஒடுக்கி உள்ளதே?

ப:- இது நல்லதல்ல. அவர்களது நியாயமான கோரிக்கைகளை  அரசு பரிசீலிக்க வேண்டும்.

கே:- மாற்று அணி பற்றி சமீபகாலமாக பேசி வருகிறீர்களே?

ப:- மாற்று அணி மக்கள் நினைத்தால்தான் அமையும்.

கே:- மாற்று அணி அமைந்தால் பா.ம.க. தலைமை ஏற்குமா?

ப:- பா.ம.க. தலைமையில் மாற்று அணி அமைந்தால் தலைமை ஏற்க தயார்.

கே:- விஜயகாந்தும், நீங்களும் கூட்டு சேருவீர்களா?

ப:- அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

கே:- தி.மு.க. அரசை சமீபகாலமாக தீவிரமாக விமர்சிக்கிறீர்களே?

ப:- நான் தி.மு.க.வை விமர்சிக்கவில்லை. ஒரு கட்சி எதிர்க்கட்சியை விமர்சிக்காது. ஆளும் கட்சியைத்தான் விமர்சிக்கும். அந்த வகையில் ஆளும் கட்சி குறைகளை தெரிவிக்கிறோம்.

கே:- சாதிவாரி கணக்கெடுப்புக்கு நீங்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்ட முடியாது என்று முதல்வர் கூறி உள்ளாரே?

ப:-  அதை  நான் சொல்லவில்லை.  சுப்ரீம் கோர்ட்டு சொல்லி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கேட்காவிட்டால் ஏற்கனவே உள்ள 69 சதவீத இடஒதுக்கீடும் பறிபோகும்.

இவ்வாறு  டாக்டர் ராமதாஸ் கூறினார்.

திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்:கார்த்தி சிதம்பரம்
திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்.பாஜகவுடன் கூட்டணி அமைக்காத கட்சி காங்கிரஸ் மட்டுமே என, கார்த்தி சிதம்பரம் பேசினார்.

சென்னையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர்,

உலகம் முழுவதும் இஸ்லாம் குறித்து தவறான எண்ணம் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் இந்த எண்ணம் அதிகமாக உள்ளது. இஸ்லாமியர்கள் குறித்த தவறான கருத்துகள் அகற்றப்பட வேண்டும்.

இங்குள்ள இஸ்லாமியத் தலைவர்கள் தங்களது நிலையைத் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். அதற்கான மேடை கிடைக்க வேண்டுமானால் அவர்கள் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சியில் இணைய வேண்டும்.

முஸ்லிம்களுக்கென்று உள்ள கட்சிகளில் இருந்து செயல்பட்டால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. தேசிய கட்சியில் இணையும்போது மட்டுமே ஆட்சி அதிகாரமும் சாத்தியமாகும். பாஜகவுடன் கூட்டணி அமைக்காத கட்சி காங்கிரஸ் மட்டுமே. திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள். இதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பெரியார் சிலை சேதம்: நெல்லையில் பரபரப்பு
துணை முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் சிலையை, மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளது, கடையநல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் சமத்துவபுரம் உள்ளது. இந்த சமத்துவப்புரத்தில் வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட பெரியார் சிலையை கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு 10 பேர் கொண்ட கும்பல், அந்த சிலையை கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சிலை லேசாக சேதம் அடைந்துள்ளது.

பின்னர் அந்த கும்பல், அவ்வழியாக வந்த பழனி – தென்காசி அரசு விரைவுப் பேருந்தை வழிமறித்தது. பேருந்து மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் பேருந்தின், கண்ணாடிகள் சேதம் அடைந்தன.

இதையடுத்து பேருந்து டிரைவர் மாடசாமி (வயது 49), கடையநல்லூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதைடுத்து போலீசார் வழக்குப்புதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதற்கு, அப்பகுதியில் உள்ள திராவிடர் கழகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதையடுத்து, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீட் அவர்களின் மறுபக்கம் – புன்னியாமீன்
நான்கு தசாப்தங்களாக தொடர்ச்சியாக இலங்கையின் பாராளுமன்ற  உறுப்பினராக இருந்ததுடன் சுமார் 15 வருடங்கள் வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சராகவும் இருந்த, கலாநிதி. ஏ.ஸீ.எஸ் ஹமீட் அவர்களின் 11வது சிரார்த்த  தினம் செப்டம்பர் 3ம் திகதியாகும்.

ஒரு தலை சிறந்த இராஜதந்திரியாகவும்,  இலங்கை அரசுக்கும்  -விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த  காலகட்டத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்ட ஒருவராகவும்  இவர் விளங்குகின்றார்.

விடுதலைப்புலிகளின் பிரதான ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களின்  பாரியார் அடேல் பாலசிங்கம் எழுதிய The Will to Freedom எனும் நூலில்  இடம்பெற்ற The Role Mr. Hameed  எனும் கட்டுரையில் “இராஜதந்திரத்தில்  அவருக்கிருந்த ஆழ்ந்த அனுபவம் காரணமாகவும், சர்வதேச உறவுகளில்  அவருக்கிருந்த மதிநுட்பம் மற்றும் அக்கறையும் காரணமாகவும் ஜனாப் ஹமீட்  அவர்களுக்கு டில்லியைப் பகைத்துக் கொள்ள விருப்பமிருக்கவில்லை. ஜனாப் ஹமீட்  அவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது பொறுமையுடன் செயல்பட்டதினால் அதிக  நேரம் எடுத்தாலும் அவருடன் பணியாற்றுவதில் நாம் மற்றற்ற  மகிழ்ச்சியடைந்தோம். அவர் முரண்பாடுகளைத் தீர்ப்பதில் பெரும் வல்லுனராகத்  திகழ்ந்தார். இக்கலந்துரையாடல் பணியில் பங்குபற்றாதிருந்தால் இந்தியப்  படையினர் வடகிழக்கில் இன்னும் நிலைகொண்டிருப்பார்கள்” என்று அடேல்  பாலசிங்கம் 2001ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார்.

ஒரு தீர்க்கதரிசனமிக்க அரசியல்வாதியாக எமக்கு நன்கு தெரிந்த ஹமீட்  அவர்களின் மற்றுமொரு பக்கமான கலை இலக்கிய ஆர்வங்கள் பற்றி அனேகருக்குத்  தெரியாது. அதனை எடுத்துக் காட்ட விளைவதே இக்கட்டுரையின் நோக்கம்.

எமது  இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்பு ஆளும்கட்சி,  எதிர்க்கட்சி என  நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட்டனர்,  ஈடுபட்டு  வருகின்றனர். ஆனால்,  எல்லா அரசியல்வாதிகளும் மக்கள் மனதில் இலகுவாக  இடம்பிடித்து விடுவதில்லை. சில அரசியல்வாதிகள் யாரென்ற விபரம் அடுத்த  தலைமுறையினருக்கு தெரியாமலே போய்விடுவதும் உண்டு.

ஆனாலும், விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசில அரசியல்வாதிகள் மாத்திரமே  மக்கள் மனதில் நிலையான இடத்தினைப் பிடித்து விடுகின்றனர். அந்த  அடிப்படையில் இலங்கை அரசியல் வரலாற்றில் அமரத்துவம் அடையாத நாமங்களில்  ஒன்றாகவே கலாநிதி,  அல்ஹாஜ் ஏ.ஸீ.எஸ். அவர்களின் நாமமும் அமைந்துள்ளது.  அவர் நாட்டுக்கும்,  தனது சமூகத்துக்கும் ஆற்றிய அருஞ் சேவைகளே இத்தகைய  மனப்பதிவுகளுக்கு காரணமாகின்றது.

கண்டி மாவட்டத்தில் பிரதான முஸ்லிம் கிராமங்களில் ஒன்றான அக்குறணையைப்  பிரதிநிதித்துவப்படுத்தி 1960 மார்ச் 19ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் காலடி  எடுத்து வைத்த ஹமீத் அவர்கள், 1999.09.03 ஆம் திகதி மரணிக்கும்வரை  தொடர்ச்சியாக நான்கு தசாப்த காலங்களாக பாராளுமன்ற உறுப்பினராக  இருந்துள்ளார். 1977ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட இவர், 1989ஆம் ஆண்டு பெப்ரவரி  14ஆம் திகதி வரை அதே அமைச்சில் பணியாற்றியுள்ளதுடன்,  இலங்கையின்  வெளிநாட்டுக் கொள்கையாக்கத்திலும் பாரிய தாக்கங்களை  ஏற்படுத்தியுள்ளவராவார்.

இலங்கை அரசியலில் வெளிநாட்டு அமைச்சராக சிறுபான்மை இனத்தவர் ஒருவர்  இருக்கமுடியாது என்று காணப்பட்ட நிலைமையை இவரது நியமனம் மாற்றியமைத்தது.  பின்பு ஐக்கிய சோஸலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றத்தில்  1989.02.18ஆம் திகதி முதல் உயர்கல்வி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப  அமைச்சராக நியமனம் பெற்ற இவர், 1990.03.30ஆம் திகதி முதல்  நீதியமைச்சராகவும், 1990.08.30ஆம் திகதி முதல் உயர்கல்வித் திட்ட  அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். மீண்டும் 1993ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 12ஆம் திகதி முதல் 1994 ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை இலங்கையின்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பணியாற்றினார்.

கண்டி மாவட்டத்தில் அக்குறணை தேர்தல் தொகுதியில் குருகொடை எனும்  கிராமத்தில் 1928 ஏப்ரல் 10ஆம் திகதி அப்துல் காதர் தம்பதிகளின் செல்வப்  புதல்வராக சாஹ{ல் ஹமீத் பிறந்தார். கட்டுகஸ்தோட்டை சாந்த அந்தோனியர்  வித்தியாலயம், மாத்தளை விஜய கல்லூரி, மாத்தளை ஸாஹிராக் கல்லூரி என்பவற்றில்  தனது கல்வியினைப் பெற்ற ஹமீத் அவர்கள், தனது கல்லூரிக் காலம் தொட்டே  மும்மொழிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். அரசியலில்  ஈடுபடுவதற்கு முன்பு தனது இளமைப்பராயத்தில் கல்வி நடவடிக்கைகளில் இவர் அதிக  ஆர்வம் காட்டி வந்தார். பிரதேசத்தில் ஒரு சிறந்த ஆங்கில ஆசானாக திகழ்ந்த  இவர்,  1950இல் ஆங்கிலக் கல்விப் போதனைக்கென ஒரு தனியார் கல்லூரியையும்  அமைத்தார். செயல்திறன்மிக்க இவரை அடையாளம் கண்டு கொண்ட மாத்தளை நகர மக்கள்  மாத்தளை நகரசபைத் தேர்தலில் இவரை ஈடுபடச் செய்தனர்.

ஹமீத் அவர்கள் தனது மாணவப்பராயத்தில் தனது ஓய்வுநேரங்களை அதிகமாக  வாசிப்பதிலும், பொதுச் சேவைகளிலுமே செலவழித்துள்ளார். வாசிப்பு ஒரு  மனிதனின் அறிவுத்திறனை துலக்கமடையச் செய்யும். இந்த அடிப்படையில் தேசிய  சர்வதேச சஞ்சிகைகளிலும்,  நூல்களிலும்,  பத்திரிகைகளிலும் பெற்ற அறிவே  பிற்காலத்தில் இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலே இவரைப் புகழடையச்  செய்ய அடிப்படைக் காரணியாக அமைந்தது. இவரின் திறமைகயைக் கருத்தில் கொண்டு  சாஹ{ல் ஹமீத் அவர்களுக்கு கொரிய சனநாயகக் குடியரசு ஹனூக் பல்கலைக்  கழகத்தினால் (Hanuk University, Republic of Korea) 1978ஆண்டில் அரசியல்  விஞ்ஞானத்திற்கான கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் 1990இல்  இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும்  இவருக்கு கலாநிதி கௌரவப் பட்டம்  வழங்கி கௌரவித்தது.

ஒரு புகழ்பெற்ற சிரேஸ்ட அரசியல்வாதியாக இவரை நாம் அறிந்துள்ள  போதிலும்கூட,  அரசியலுக்குப் புறம்பாக இவர் எழுத்துத்துறையிலும்,   ஊடகத்துறையிலும் அதீத ஆர்வமிக்கவராக இருந்தார் என்பது அநேகருக்குத் தெரியாத  ஒரு விடயமே. தனது 15 வயதிலிருந்தே எழுத ஆரம்பித்த இவரின் கன்னியாக்கம்  “சண்டே ஒப்சேவர்” பத்திரிகையின் சிறுவர் பகுதியில் 1943ம் ஆண்டில்  பிரசுரமானது. இதைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான ஆக்கங்களை ஆங்கிலப்  பத்திரிகைகளில் எழுதியுள்ளார்.    பாடசாலையில் வகுப்பு 7 இல் கல்வி கற்றுக்  கொண்டிருந்த போது மாத்தளைப் பிரதேசப் பாடசாலைகளுக்காக “New Broom” என்ற  பெயரில் ஒரு சஞ்சிகையொன்றை ஆரம்பித்தார். இச்சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து  பல்வேறு பணிகளைப் புரிந்தார். தனது கல்லூரிக் காலம் முதல் தான் மரணிக்கும்  வரை ஆயிரக்கணக்கான ஆக்கங்களை தேசிய, சர்வதேச இதழ்களிலும், பருவ  வெளியீடுகளிலும்,  பத்திரிகைகளிலும் இவர் எழுதியுள்ளார். அதேபோல இதுவரை  இவர் நான்கு பெறுமதிமிக்க நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றின்  சுருக்க விபரங்கள் வருமாறு.

1. Foreign Policy Perspectives Of Sri Lanka

Selected speeches 1977 – 1987

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கு.

தெரிவு செய்யப்பட்ட உரைகள். 1977- 1987

2. In Pursuit of Peace

On Non-Alignment and Regional Coopertion

சமாதானத்தை நோக்கி

3. The Owl and the Lotus (ஆங்கிலம்)

Lotus Och Ugglan (பிரான்ஸ்)

தாமரையும் ஆந்தையும்

இது ஒரு சிறுவர்களுக்கான நீதிக் கதை நூலாகும். ஆங்கிலத்தில் இவர் எழுதிய நூல் பின்பு பிரான்ஸிய மொழியிலும் வெளிவந்தது.

4. The Spring Of Love and Mercy

அன்பின் ஊற்று

அல்குர்ஆன் ஆயத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீட்  அவர்களினால் இயற்றப்பட்ட கவிதை நூல் The Spring Of  Love and Mercy    (அன்பின் ஊற்று) என்பதாகும். இந்நூலில் காணப்படக்கூடிய கவிதைகளை  நோக்குமிடத்து கலாநிதி ஹமீட் அவர்களின் ஆங்கில மொழி அறிவும்,  வர்ணனைத்  திறனும்,  மார்க்க உணர்வும் நன்கு புலப்படுகிறது. மேலும் சாதாரண மக்களின்  ஆத்மீக உணர்வைத் தூண்டக் கூடிய வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.

ஹமீத் அவர்களும் கார்ட்டூன் சித்திரங்களும்.

பெரும்பாலான அரசியல்வாதிகள் விரும்பாத ஒரு பக்கத்தை இவர் நேசித்த  பண்பானது,  இவரின் கலைத்துறை இரசனையையும்,  ஆர்வத்தையும் எடுத்துக்  காட்டுகின்றது. அதாவது,  ஒரு அரசியல்வாதியின் ‘சித்திரவதைக் களம்| என  வர்ணிக்கப்படும் கார்ட்டூன் துறையில் அவருக்கிருந்த ஆர்வமும் அதை அவர்  இரசித்த முறைகளும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொரு விடயமாகும்.

இலங்கையின் பிரபல கார்ட்டூன் ஓவியர்களான விஜயசோமா,  யூனுஸ்,  ஜெரயின்,   அபேசேகரா போன்றோர் ஹமீத் அவர்கள் இலங்கையில் வெளிவிவகார அமைச்சராக இருந்த  காலத்தில் வெளிநாடுகளுக்கு அவர் அடிக்கடி சென்ற சந்தர்ப்பத்தை அவர்களின்  கார்ட்டூன் சித்திரங்கள் மூலம் கருப்பொருளாக்கி கேலி செய்வதில் அலாதி  பிரியம் காட்டியிருந்தார்கள்.

இக்காலகட்டத்தில் ஈழத்து தேசிய பத்திரிகைகளில் கார்ட்டூன்  சித்திரங்களில் அமைச்சர்களான பந்துல குணவர்தன,  கெஹலிய ரம்புக்வெல்ல  மற்றும் விமல்வீரவங்ச,  மர்வின்சில்வா இடம்பெறுவதைப் போல, 1980களில்  இலங்கைத் தேசிய பத்திரிகைகளில் முக்கிய கருப்பொருளாக விளங்கியவர் கலாநிதி  ஹமீத் அவர்களே. ஆனால்,  அந்த கேலிச் சித்திர ஓவியங்களைக் கண்டு ஹமீத்  அவர்கள் கோபம் கொள்ளவோ அவர்கள் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது முகம்  சுழிக்கவோ இல்லை. மாறாக,  தனது உலகம் சுற்றுதலை இலக்காக்கிக் கொண்டு தன்னை  ஓவியங்கள் ஊடாக சித்திரவதைப்படுத்திய அவ்வோவியங்களைத் தொகுத்து ஒரு  புத்தமாக வெளிவருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பத்திரிகைகளில் வந்த கேலிச்சித்திரங்கள் அழிந்துவிடக் கூடாதென்றும், அவை  பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் அப்போதைய  வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் சேகரித்து வெளியிடப்பட்ட இந்த  கேலிச்சித்திர தொகுப்பு நூல் சிங்களம்,  தமிழ்,  ஆங்கிலம் ஆகிய மொழிகளில்  வெளிவந்தது. “வெளிநாட்டமைச்சர் ஹமீத் பற்றிய கார்ட்டூன் சித்திரங்கள்”  எனும் இந்நூலுக்கு கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீத் எழுதிய முன்னுரையின் தலைப்பு  “கல்லெறிக்கு பிரதியுபகாரமாக மலர்ச் செண்டு” என்பதாகும்.

அம்முன்னுரையில் வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ். ஹமீத் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“…நானே இலக்காகிச் சித்திரவதை செய்யப்பட்டிருக்கும் இந்தக் கார்ட்டூன்  தொகுப்பிற்கு ஒரு முன்னுரையோ,  ஓர் அணிந்துரையோ (விரும்பியபடி வைத்துக்  கொள்ளுங்கள்) வழங்குமாறு இதன் வெளியீட்டாளர்கள் என்னைக் கேட்டுக்கொண்டனர்.  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்று சொல்வார்களே. அதனைத் தான் இந்த  வேண்டுகோள் ஞாபகப்படுத்துகிறது. இத்தொகுப்பைப் பார்க்கக் கையில் எடுக்கும்  வாசக நேயர்,  பக்கங்களைப் புரட்டிச் செல்லும்போது நூல் முழுவதும்  கல்லெறியும் சொல்லெறியும் விரவிக் கிடப்பதையே காண்பர். என்மீது  தொடுக்கப்பட்ட கல்லெறிக்குப் பிரதியுபகாரமாக மலர்ச்செண்டு தரும்படி  வேண்டுகிறார்கள். நான் அதனை மனமுவந்து வழங்குகின்றேன்…

‘முன்னைய காலத்தில் சித்திரவதை செய்வதற்கு ‘ரெக்’ என்ற கருவியை  உபயோகித்தனர். இப்போதுதான் இருக்கவே இருக்கிறது பத்திரிகை’ என்று ஒஸ்கார்  வைல்ட் ஒருமுறை குறிப்பிட்டார். இந்த இருவகை வேதனையூட்டும் சாதனங்களுள் எதை  விரும்புகிறாய் என்று அரசியல்வாதியைக் கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக அவர்  அப்புராதன சாதனத்தைத் தான் தேர்ந்தெடுப்பார். காட்டூன் சித்திரக்காரனை  சகிக்கவொண்ணா கொடிய பிரதிநிதியாக காட்டும் பத்திரிகையைவிட பழைய கால ‘ரெக்’  காருண்யமானது….

…..இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள விஜேசோமா,  யூனுஸ்,  ஜெரய்ன்,  அபயசேகரா  ஆகிய கார்ட்டூன் கலைஞர்களுக்கு ஓர் அந்தரங்கத்தை வெளிப்படுத்த  விரும்புகின்றேன். மீண்டும் ஒஸ்கார் வைல்ட் கூறியவாறு “பிறர் பேச்சுக்கு  ஆளாவது மோசம்: ஆனால்,  பேச்சுக்கு ஆளாகாமல்  இருப்பது அதனிலும் மோசம்”.  அரசியல்வாதியைப் பொறுத்தமட்டில் பேச்சுக்கு ஆளாக்கப்படுவது மங்கிப்போகாது.  பேரோடிருக்கவும், பெருவெற்றியீட்டவும் கார்ட்டூன்கள் துணiயாக நிற்கின்றன.  ஆகவே,  கார்ட்டூன்காரர்கள் அரசியல்வாதிக்கு பக்க பலமானவர்களே…

….இக்கார்ட்டூன் சித்திரங்களைப் பார்த்தேன்: சுவைத்தேன் என்று சொல்லி  வைக்க விரும்புகிறேன். எனது உவகையின் இரகசியத்தைத் தெரிந்து கொண்ட பின்,  என்னைப்போல் ‘இரை|யாக அகப்படுவோரை எள்ளி நகையாடுவதை இவர்கள்  நிறுத்தமாட்டார்கள் என்று நினைக்கின்றேன்…

….வேடிக்கை ஒரு புறம் இருக்க, தன்னையே நோக்கி ஒருவன் சிரிக்கப் பழகிக்  கொள்வதானது ஜனநாயக முறைக்குத் தன்னைப் பயிற்றிக் கொள்வதாக அமையும். இது  அரசியல்வாதிக்கு அத்தியாவசியம் தேவைப்படும் பண்பாகும். இம்முயற்சியில்  அரசியல்வாதிக்கு துணைவனாய் விளங்குபவர் கார்ட்டூன் சித்திரக்காரர் என்பது  மிகையாகாது….”

மேற்படி முன்னுரையானது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய பல உட்கருத்துக்களை  வெளிப்படுத்தி நிற்கின்றது. ஜனநாயக விழுமியங்களுக்கு புகழ்ச்சி மட்டுமல்ல.   இகழ்ச்சியும் அவசியம் என்பதையும்,  அத்தகைய இகழ்ச்சிகளை தாங்கிக்  கொள்ளக்கூடிய வகையில் எதிர்கால அரசியல்வாதிகள் தன்னைத் தயார்படுத்திக்  கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் இவர் மிகவும் நாசுக்காக  வெளிப்படுத்துகின்றார். மாறாக,  எவ்விடத்திலேனும் இந்த கேலிச்சித்திர  ஓவியர்களை அவர் நிந்திக்கவோ, அவமதிக்கவோ இல்லை. இன்றைய  அரசியல்வாதிகளுக்கும் ஹமீத் அவர்களின் இந்தப் பண்பு நல்லதொரு எடுத்துக்  காட்டாகும். ஆனால் அண்மைக் காலத்தில் சில அரசியல் வாதிகள் கேலிச்  சித்திரக்காரர்களை விமர்சிப்பதையும்;,  சில நேரங்களில் அவர்களைத்  துன்புறுத்துவதையும்,  அச்சுறுத்தல்கள் விடுப்பதையும் ஊடகங்களில்  காணக்கூடியதாக உள்ளது. இந்நிகழ்வுகள் குறித்த அரசியல் வாதிகளின்  ஆற்றாமையையே வெளிப்படுத்துகின்றது.

இந்நூல் வெளிவந்த பின்பு கேலிச்சித்திர ஓவியர் யூனுஸ் அவர்களை நான்   கொழும்பில் ஒரு திருமண வீட்டில் சந்தித்து,  அவருடன் கதைத்துக் கொண்டிருந்த  நேரத்தில் என்னிடம் கூறினார். “ஹமீத் ஒரு வித்தியாசமான மனிதர். நாங்கள்  எவ்வளவுதான் கேலிச்சித்திரங்கள் மூலமாக அவரைக் கேலி பண்ணினாலும்கூட அவர்  அதைப் பொருட்படுத்தவே மாட்டார். நாட்டிலிருந்தால் நேரடியாக தொலைபேசியில்  தொடர்புகொண்டு நன்றி தெரிவிப்பார். அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான  போக்கினைக் கொண்ட மனிதர் அவர்” என்றார்.

சில அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மைப் பற்றி ஒரு  கேலிச்சித்திரம் வெளிவந்தால் அதைப் பெரிதுபடுத்திக் கொண்டு கேலிச்சித்திர  ஓவியர்களை கண்டிக்கும் இக்காலத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு ஹமீத்  அவர்களின் இந்த பண்பு ஒரு முன்னுதாரணமாகும்.

ஹமீத் அவர்கள் கலையை நேசித்ததாலேயே அவரால் கலையுணர்வினை நயக்க  முடிந்தது. இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் காணப்படக்கூடிய தேசிய  ஊடகங்களும் சரி,  தனியார் ஊடகங்களும் சரி  மறைமுகமாகவோ நேரடியாகவோ ஒவ்வொரு  அரசியல்வாதிகளினதும் சாதகமான கருத்துக்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து  வருகின்றன. ஒரு அரசியல்வாதியால் நிகழ்த்தப்படும் பேச்சிக்களையோ அல்லது  அறிக்கைகளையோ கூட தமக்குச் சார்பான வகையில் உள்ளவற்றையே வெளியிட்டு  வருகின்றன. இத்தகைய நிலையில் இன்று இலங்கையில் காணக்கூடிய ஊடகங்களில் பல  இருப்பதை அவதானிக்கலாம். கட்டுரைகளில் மாத்திரமல்லாமல் கேலிச்  சித்திரங்களில் கூட இத்தகைய போக்கினையே அவதானிக்கமுடியும்.

1970,  1980களில் கேலிச் சித்திரத் துறையில் இடதுசாரிப் போக்குமிக்க சில  பத்திரிகைகளில் கட்டுரைகளிலும் சரி,  கேலிச்சித்திரங்களிலும் சரி பாரிய  தாக்கங்களை ஏற்படுத்தின. இக்காலப் பகுதியில் ‘அத்த’ பத்திரிகையில் யூனூஸ்  அவர்களின் கேலிச் சித்திரங்கள் வாசகர்களிடையே பெரிதும் வரவேற்பினைப்  பெற்றதொன்றாகவே விளங்கியது. “வெளிநாட்டமைச்சர் ஹமீத் பற்றிய கார்ட்டூன்  சித்திரங்கள்” எனும் நூலில் யூனூஸ் அவர்களின் கேலிச் சித்திரங்கள் முக்கிய  இடத்தினைப் பிடித்திருந்தன.

யூனூஸ் அவர்களினால் அமைச்சர் ஹமீட் அவர்களைப் பற்றி வரையப்பட்ட கேலிச்  சித்திரங்களுள்,  வாசகர்களிடையே பெரிதும் விமர்சனத்துக்குள்ளான  சித்திரமும், அமைச்சர் அவர்களை வெகுவாகக் கவர்ந்ததுமான சித்திரம்,   அமைச்சர் அவர்கள் தமது அமைச்சின் வேலைப்பளு நிமித்தமாக அடிக்கடி  வெளிநாடுகளுக்குச் செல்லும் போது  அவர் அதிகமான சந்தர்ப்பங்களில் தனது  தொகுதியில் இருப்பதில்லை. இதனைக் கேலி செய்யும் வகையில் அமைச்சரவர்கள்  விமானத்தில் இருந்து இறங்கி ஒரு பொதுமகனிடம் “ஹாரிஸ்பத்துவைக்குப் போகும்  வழிஎன்ன?” என்று அமைச்சர் வினவுவதைப் போல அமைந்த கேலிச் சித்திரமாகும்.

இலங்கையில் கேலிச் சித்திரத் துறையில் புகழ் பெற்ற மற்றுமொரு ஓவியரான  டபிள்யு. ஆர். விஜேயசோமா ‘ஐலண்ட்’ பத்திரிகை நிறுவனத்தின்  கேலிச்சித்திர  ஓவியராவார்.  இவர் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் புகழ்பெற்றவர்.   இவரின் கேலிச் சித்திரங்கள் பல கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியதாக  அமைந்திருக்கும். “வெளிநாட்டமைச்சர் ஹமீத் பற்றிய கார்ட்டூன் சித்திரங்கள்”  எனும் நூலில் இடம்பெற்றுள்ள  கேலிச்சித்திரங்களை வரைந்த ஓவியர்களுள்  ஒருவரான டபிள்யு.ஆர். விஜயசோமா அவர்கள் தன் கருத்தினைப் பின்வரும்  அடிப்படையில் வெளியிட்டிருந்தார்.

“…..நியுயோர்க்கில் ஜனாப் ஹமீத் அவர்களை நான் சந்தித்தபோது  கேலிச்சித்திர நூலொன்றைத் தாம் வெளியிட உத்தேசித்திருப்பதாக அவர் கூறினார்.  நான் ஒரு விநாடி சிந்தித்துக் கொண்டிருந்தபோது,  அவரே தொடர்ந்து “என்னைக்  கிண்டல் செய்யும் சித்திரங்களையே வெளியிட உள்ளேன்” என்றார்.

உண்மையில் தான் மறைக்க விரும்பும் விடயங்களை ஓர் அரசியல்வாதி தானே  வெளியிடத் துணிந்துள்ளமை இதுவே முதல் முறை போலும். கேலிச்சித்திரக்காரர்கள்  அரசியல்வாதியின் பார்வையில் ‘உண்ணி’ போன்றவர்கள். ஓயாது எரிச்சல்  ஊட்டுபவர்கள். பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்த சுய  கேலிச்சித்திரக்காரர்களை சிறையில் போட வேண்டுமென்றே அந்தரங்கத்தில்  விரும்புவர். ஆனால்,  ஹமீத் அவர்கள் இவர்களை எதிர்காலச்  சந்ததியினர்களுக்காக புத்தகத்தில் போற்றி வைக்க முடிவு செய்துள்ளார்கள்.  தன்னையே கேலிப்பொருளாகக் கொண்டு சிரிக்கும் திறன் கிடைத்தற்கரிய பேறுகளுள்  ஒன்று என்பது அறிஞர் கருத்து. இதனையே செய்ய முற்பட்டுள்ளார் ஜனாப் ஹமீத்  அவர்கள். இது அவரின் வெற்றிச் சிரிப்பு என்றே கூற வேண்டும். என்றிருந்தார்

‘மார்க் ஜெரெயின்’ சன்,  வீக்கென்ட்,  தவச ஆகிய பத்திரிகைகளில்  பிரபல்யம் பெற்ற கேலிச் சித்திர ஓவியராவார். இவரால் வரையப்பட்ட  சித்திரங்கள் தேசிய ரீதியில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் பிரபல்யம்  பெற்றிருந்தன. வெளிநாட்டு அமைச்சர் அவர்களைப் பற்றி நூற்றுக்கணக்கான கேலிச்  சித்திரங்களை இவர் வரைந்துள்ளார். இவரால் வரையப்பட்ட பல சித்திரங்கள்  வெளிநாட்டு ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளன. சர்வதேச புகழ்பெற்ற ‘மார்க்  ஜெரெயின்’ ஹமீத் அவர்களை பற்றியும் அவரது கேலிச்சித்திர தொகுப்பு நூல்  பற்றியும் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“ஹாஸ்யத்தைப் புரிந்து கொள்பவர்களுக்கு விளக்கம் தேவையில்லை,

புரிந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் சாத்தியமில்லை”.

இந்த வார்த்தையில் பொதிந்துள்ள அர்த்தங்கள் ஆயிரம்.

அமித அபயசேகரா தவச,  ரிவிரச,  சன்,  வீக்கென்ட் ஆகிய பத்திரிகைகளில்  பிரபல்யம் பெற்ற கேலிச் சித்திர ஓவியராவார். இவரால் வரையப்பட்ட  சித்திரங்கள் பிரபல்யம் பெற்றிருந்தன. தனக்கென ஒரு தனி வாசகர் வட்டத்தை  வைத்திருந்தவர் இவர். இவரின் கேலிச்சித்திரங்கள் பாராளுமன்றத்தில் கூட  விமர்சிக்கப்பட்டவை. வெளிநாட்டு அமைச்சர் அவர்களைப் பற்றி நூற்றுக்கணக்கான  கேலிச் சித்திரங்களை இவர் வரைந்துள்ளார். அமித அபயசேகரா “வெளிநாட்டமைச்சர்  ஹமீத் பற்றிய கார்ட்டூன் சித்திரங்கள்” எனும் நூலில் பின்வருமாறு  குறிப்பிட்டிருந்தார்.

“…பிறரைப் பார்த்துச் சிரிப்பவர் பலபேர். தம்மையே எள்ளிநகையாடுபவர் வேறு  சிலர். அவ்வாறு செய்யக்கூடிய அரசியல்வாதிகள் சிலரிலும் சிலரே.  இதற்காதாரமாகப் பத்திரிகையாளர்கள்,  அரசியல் விமர்சகர்கள்,   நகைச்சுவையெழுத்தார்கள்,  கேலிச் சித்திரக்காரர்கள் ஆகியவர்களுக் கெதிராக அ.சி.ம. (அதி சிரேஸ்ட மனிதர்கள்) என்போரும், அ.சி.ம. (அதி சிறிய மக்கள்) என்போரும் நாள்தோறும் விடுக்கும் மிரட்டல்களை நோக்குக.

ஆகவே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் போன்றவொரு முன்னணி அரசியல்வாதி,   தன்னைத்தானே எள்ளிநகையாடும் அரிய திறன் பொருந்தியிருப்பதையும் இதற்கு  மேலாக அவர் பற்றியும்,  அவருக்கெதிராகவும் வரையப்பட்ட கேலிச்சித்திரங்கள்  அடங்கிய நூலொன்றை வெளியிட முற்பட்டதன் மூலம்,  தன் நகைப்புத் திறனைப் புதிய  பாணியில் புலப்படுத்தியிருப்பதையும் எண்ணிப் பார்க்குமிடத்து புதிய  உற்சாகமும் உள்ளக்கிளர்ச்சியும் ஏற்படுகின்றது. “ஹமீதும்,  வழக்கமும்,   பிறவும்” என இதனைக் குறிப்பிடலாம். (இவ்வாறு வெளியிடப்படுவதனால்  இத்துறையில் முதன்மை ஒன்றினை மாண்புமிகு ஹமீத் அவர்கள் தட்டிக் கொண்டார்கள்  என்றே கூற வேண்டும். நான் அறிந்த வேறு எந்த அரசியல்வாதியும் இவ்வாறு  செய்ததில்லை)

இந்நாட்டின் அதிசிறந்த கேலிச்சித்திரக்காரர்களுள் ஒருவரான கோலெற்  அவர்கள் லண்டன் மாநகரைச் சேர்ந்த டேவிட்லோ அவர்கள் போன்ற அரசியல்  அபிப்பிராயத்தை உருவாக்கும் வன்மை படைத்தவர் என்று சொல்லப்படுகின்றது.  (கோலெற் அவர்கள்,  அவுஸ்திரேலியாவுக்கு மூட்டை முடிச்சோடு சென்ற பின்னரே  அமைச்சர் ஹமீத் அவர்கள்,  அரசியல் வானில் சுடர்விடத் தொடங்கினார்கள்)  கோலெற் அவர்களிடம் இலவசக் கல்வியின் தந்தையாகிய கலாநிதி சி.டபிள்யு.  கன்னங்கரா அவர்கள், கொண்டிருந்த தீராத விரோத உணர்வினால் (அக்காலத்தில்  ரோயல் கல்லூரியின் ஆசிரியராக இருந்த) கோலெற் அவர்கள் தூரிகையைக் கீழே வைக்க  வேண்டும். அல்லது அரசாங்க சேவையிலிருந்த விலகிக் கொள்ள வேண்டும் என்று  நிர்ப்பந்திக்கப்பட்டபோது கோலெற் அவர்கள் ஆசிரியத் தொழிலைத் துறந்து,   முழுநேரக் கேலிச்சித்திரக்காரராக உழைக்கத் தீர்மானித்தார், இலங்கையின்  செய்தித்தாள் வாசக நேயர்களுக்கு திறமைவாய்நத கேலிச்சித்திரக் கலைஞர்  ஒருவரை,  கன்னங்கரா அவர்கள் தன்னையறியாமலே வழங்குவதற்குக் காரணமானார்.  கோலெற் அவர்களை வெளியேற்ற கன்னங்கரா அவர்கள் காரணமாக இருந்தது போன்று,   கோலெற் அவர்களும் கலாநிதி கன்னங்கராவை அரசியலிலிருந்து வெளியேற்றுவதற்குக்  காரணமாக விளங்கினார்கள். (இதில் படிப்பினை ஒன்று எங்கோ புதைந்து  கிடக்கிறது)

“ஊதியத்துக்குத் தக்க உழைப்பாளியான கேலிச்சித்திரக் கலைஞர் ஒருவர்,   குரல் எழுப்பவியலாத பலரின் பிரதிநிதியான சாதாரண மனிதனுக்காகக் குரல்  கொடுக்கும் பாங்கிலேயே செயற்படுகிறார். அவர்,  தான் உழைக்கும் தாபனத்தை  உயர்த்தும் நோக்கில் சாதாரண மனிதனுக்குச் சேவையாற்றுவதில்லை. அமைச்சர்  ஹமீத் அவர்கள் தாபனத்தின் ஓர் அங்கமானவர்,  அதில் அவர் போன்று இன்னும்  பலரும் அங்கம் வகிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று அமித  அபயசேகரா தெரிவித்த கருத்தையும் இவ்விடத்தில் சிந்திப்பது பயனள்ளதாக  இருக்கும்.

இந்து வாழ்வுரிமை இயக்கத் தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
நாகர்கோவிலில் உள்ள தமிழ்நாடு இந்துக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் எஸ்.பி. குட்டி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனி, வெங்கடசாமி தெருவைச் சேர்ந்தவர் எஸ்.பி. குட்டி. முன்னாள் ராணுவ வீரர்.  தமிழ்நாடு இந்துக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.

செவ்வாய்க்கிழமை எஸ்.பி. குட்டி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவுக்குப்பின் வீட்டுக்குள் வெடிசப்தம் கேட்டதாம்.

எழுந்துவந்து பார்த்தபோது வீட்டுக்கு வெளியே ஏதோ எரிந்து கொண்டிருந்தது. தீயை அணைத்தபின் பெட்ரோல், மண்ணெண்ணெய் மணம் வீசியதுடன், பாட்டில் ஒன்றும் உடைந்து கிடந்தது. இது குறித்து போலீஸôருக்கு, குட்டி புகார் தெரிவித்தார்.

மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடிவிட்டதாக போலீஸôரிடம் அளித்த புகாரில் எஸ்.பி. குட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர். எஸ்.பி. குட்டி எழுதியுள்ள “அறிவுக்கு எட்டிய கடவுள்’ என்ற புத்தகம் நாகர்கோவிலில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

ராமர் பாலம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகள் அதில் இடம்பெற்றுள்ளதாகவும், இதை முன்கூட்டியே தெரிந்தவர்கள் சிலர் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

திருச்சியில் தந்தை பெரியார் சிலை உடைப்பு,பதற்றம்!
திருச்சியில் இரவோடு இரவாக தந்தை பெரியார் சிலைகளைச் சேதப்படுத்தி ஓடி ஒளிந்துள்ளனர்.

திருச்சி அண்ணாநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தம் அருகில் 1994 இல் திராவிடர் கழகத்தின் சார்பில் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையினை சிலர் சேதப்படுத்திவிட்டு ஓடியுள்ளனர்.

அதேபோல அதே பகுதியில் காவல் குடியிருப்புப் பகுதியையடுத்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தமிழ்நாடு அரசால் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையினையும் சேதப்படுத்தியுள்ளனர்.

திருச்சி அண்ணாநகர் 3 ஆவது பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் படிப்பகத்தின் – வாசிப்பவர்கள் உட்காருவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேடையையும் காலிகள் உடைத்துவிட்டு ஓடியிருக்கின்றனர்.

இது தொடர்பாக திருச்சி 26 – நவல்பட்டு காவல் நிலையத்தில், கழகத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று விசாரணை நடத்திக் கொண்டுள்ளனர்.

செய்தி காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், அந்தப் பகுதியே பதற்றமாகக் காணப்படுகிறது.