para

உரி: சில குறிப்புகள் – 7
Pa Raghavan

நெருப்பை நீரினால்தான் அணைக்க முடியும். இருளை ஒளியினால்தான் நிரப்ப முடியும். தனித்திருப்பதே பெருங்கூட்டத்தை ஆள்வதற்கு வசதி. இந்த எதிர்நிலை ஏற்பாடு, இயற்கையின் சூக்குமங்களுள் முக்கியமானது.

உரியை ஒரு சார்வாகனும் ஒரு சித்தரும் கட்டியிழுத்துச் செல்வார்கள். இருவேறு விதமான சிந்தனைப் பள்ளியின் முழுமைக்குள் வாழ்பவர்கள் அவர்கள். இருவருக்கும் பொதுவானவை என்றால் சாதி மதமின்மை, உருவ வழிபாடின்மை, சடங்குகள் இல்லாமை போன்ற சிலவற்றைச் சொல்லலாம். மற்றபடி ஒன்றோடொன்று இணையவே வாய்ப்பற்ற இரு புள்ளிகள்.

இவ்விரண்டு புள்ளிகளையும் ஒரு நேர்க்கோட்டில் பொருத்துவதற்கு எனக்கொரு மூன்றாம் தரப்பு தேவைப்பட்டது. அது இவ்விரண்டு தரப்புளுக்கும் முற்றிலும் தொடர்பற்ற ஒன்றாக மட்டுமே இருக்க முடியுமென்று தோன்றியது. எனவே வேதாந்தக் கல்வியில் சேர முடிவு செய்தேன்.

சலம் எழுதிய நாள்களில் தேவைக்குச் சில உபநிடதங்களைப் படித்திருக்கிறேன். தேவைக்குத்தானே தவிர, முழுமையாக அல்ல. படித்ததனைத்தும் விளங்கியதென்றும் சொல்ல இயலாது. அவசியமென்று கருதிய சில பகுதிகளை மட்டும் (குறிப்பாக முண்டகம் மற்றும் மாண்டூக்கியம்.) கற்றறிந்தோரிடம் கேட்டுத் தெளிந்து பிறகு எழுத ஆரம்பித்தேன்.

உரிக்கு முந்தைய தயாரிப்புக் காலத்தில்தான் குரு முகமாகவே பயின்றாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தேன். எனவே எனது மீச்சிறு மூளையின் தரத்துக்கும் தகுதிக்கும் அப்பாற்பட்டவற்றையும் உணரத்தக்க வகையில் சிடுக்கின்றிச் செலுத்தி, நிதானமாகவும் நேர்த்தியாகவும் விளக்கம் சொல்லித் தெளிவிக்கவல்ல ஒரு குருவினைத் தேடிக் கண்டடைந்தேன்.

அவர் பெயர் சுவாமி குருபரானந்தர். சுவாமி பரமார்த்தானந்தரின் நேரடிச் சீடரும் தயானந்த சரஸ்வதியிடம் சன்னியாச தீட்சை பெற்றவருமான சுவாமிகள், தூய வேதாந்த மரபின் வழி வந்தவர். தனி மனிதனுக்கும் உலகுக்கும் பரம்பொருளுக்குமான முத்தரப்பு உறவை உபநிடதங்களின் அடியொற்றி இவரளவுக்கு எளிமையாக விளக்கிச் சொல்வோர் நானறிந்து யாருமில்லை. சென்னையை அடுத்த உத்தரமேரூருக்கு அருகே கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் இவரது குருகுலம் அமைந்துள்ளது. அதற்குப் பூர்ணாலயம் என்று பெயர்.

பள்ளி நாள்களில் நான் ஒழுங்காகப் படித்தவனல்லன். கல்லூரிக் காலத்திலும் வீணே அலைந்து திரிந்து இழந்தவை பல. பள்ளிக் கல்வியில் எதனால் என் மனம் குவியவில்லை என்று இன்றைய ஐம்பத்தைந்து வயதில் எண்ணிப் பார்த்துக்கொண்டிருப்பது பயனற்ற செயல். ஆனால் இன்று ஒவ்வொரு நாளும் சுவாமிகளிடம் ஒரு மணிநேரம் முற்றிலுமாக என்னை ஒப்புக் கொடுத்துவிடுகிறேன். எத்தனை பெரிய சிடுக்குள்ள தத்துவத்தையும் வரி வரியாகப் பிரித்து, பிறகு பதம் பதமாகப் பிரித்துப் பொருள் சொல்லி, மீண்டும் கோத்துக் கட்டி, ஒவ்வொரு சுலோகத்தின் உயிர் உறையும் புள்ளியையும் தரிசனமாக்கிவிடுவார்.

எண்ணிப் பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. படிக்கத் தொடங்கியபோது ஓரடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாத அளவுக்கு வலுவாகத் தடுத்து நிறுத்திவிட்ட ப்ருஹத்-ஆரண்யக-உபநிடதத்தை ஓரளவேனும் விளங்கிக்கொள்ள வழி தேடித்தான் சுவாமிகளிடம் சென்றடைந்தேன். கடந்த ஓராண்டில் ப்ருஹதாரண்யகம், முண்டகம், தைத்ரியம் என மூன்றை நிறைவு செய்துவிட்டு இப்போது கைவல்ய உபநிடதப் பாடங்களில் இருக்கிறேன்.

சுவாமிகளின் அனைத்து வகுப்புகளும் அவரது பூர்ணாலயம் இணையத் தளத்திலும் யூட்யூபிலும் பதிவு செய்யப்பட்டுக் கிடைக்கின்றன. ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் என் முதற்பணி அவரது ஒரு மணி நேர வகுப்பு. நடக்கும்போது கேட்டுக்கொண்டே நடப்பேன். முடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் அன்றன்றைய பாடத்தைச் சுருக்கமாக எழுதி வைத்துவிட்டு, எனக்குத் தோன்றும் ஐயங்களையும் குறித்துக்கொள்வேன்.

ஆனால் விளக்கத்தை நான் தேடிச் செல்லவே வேண்டாத வண்ணம் மறுநாள் வகுப்பில் ஐயமென நான் குறித்த அனைத்துக்கும் அவர் விடையளித்துவிடுவார்.

சுவாமி குருபரானந்தரை இதுவரை நான் நேரில் கண்டு வணங்கவில்லை. உரியை முடித்துவிட்டுப் பூர்ணாலயத்துக்குச் செல்ல வேண்டுமென எண்ணியிருக்கிறேன்.

அவரை நான் கண்டடையாமல் இருந்திருந்தால் உரி நிகழ்ந்திருக்காது. எது இல்லாவிடில் இன்னொன்றில்லையோ, அது இறை.

தாள் பணிந்து வணங்குகிறேன்.

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

உரி: சில குறிப்புகள் – 6
Pa Raghavan

சரித்திரம் சில வினாக்களுக்குத் தெளிவான விடை தரும். சிலவற்றுக்கு எவ்வளவு தேடினாலும் அகப்படாது. கவனியுங்கள். அது அகப்படாததுதான். இல்லாததென்றோ, கிடையாதென்றோ ஒன்றில்லை.

உரியின் பொருட்டு இராஜராஜ சோழனின் காலம் குறித்த ஆய்வறிஞர்களின் புத்தகங்கள் அனைத்தையும் வரிசையாகப் படித்துக்கொண்டிருந்த நாள்களில் அத்தகு விடையற்ற வினா ஒன்று அனைத்துக்கும் மேலாக எழுந்து சூழ்ந்து நின்றது. ஆட்சிக்கு வந்த நாள் முதல் இறுதிவரை ஒரு மன்னன் என்னவெல்லாம் செய்தான், எப்படியெல்லாம் நல்லாட்சி தந்தான் என்பதை நடந்த விதமாகவே கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பதிவு செய்வதன் மூலம் ஒரு காலகட்டத்தின் சமூக அரசியல் வரலாற்றை மிகத் தெளிவாகச் சோழர்கள் ஆவணப்படுத்திவிடுகிறார்கள்.

ராஜராஜன் மட்டும்தான் என்றல்ல. அவனது மகனாகட்டும், அவனுக்கும் பிறகு பட்டமேற்றவனாகட்டும், அதற்கப்பாலும் ஆட்சி புரிந்த சாளுக்கிய சோழர்களாகட்டும். நடந்தவற்றை எடுத்துச் சொல்லித் தமது இருப்பின் நியாயத்தைக் காலத்தில் பதிவு செய்யாமல் போகவேயில்லை.

டைரி எழுதும் வழக்கம் உள்ள மனிதனால் எழுதவியலாமல் போகும் பக்கமென்பது ஒன்றுதான். அது அவனது மரணம். அதைப் பிறர்தாம் பதிவு செய்து வைத்தாக வேண்டும். இராஜராஜனின் அறப்பணிகளையும் ஆட்சி முறையையும் அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்திச் சென்ற அவனது மகன் இராஜேந்திரனும் தன் தந்தையைப் போலவே ஏராளமான கல்வெட்டுகளை விட்டுச் சென்றவன்தான். ஆனால் இராஜேந்திரனின் கல்வெட்டுகளிலும் இராஜராஜனின் மரணம் குறித்த விவரங்கள் இல்லை. இராஜேந்திரனின் மகன் காலத்துக் கல்வெட்டுகளில் இராஜேந்திரனின் மரணம் குறித்த விவரங்களும் இல்லை.

மாமன்னர்களின் மரணத்தை விவரித்து எழுதி வைப்பதில் பயனில்லை; வாழ்ந்த காலத்தில் அவர்கள் புரிந்த சாதனைகள் எதிர்காலத்துக்குத் தெரிந்தால் போதுமென்பது சோழர்களின் பொதுவான கருத்தாக இருந்திருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும், அவர்கள் சுட்டிக்காட்டிய பள்ளிப் படைகளைப் பாதுகாப்பதில் பின்னால் வந்த அரசுகளுக்கு என்ன சிக்கல் என்று தெரியவில்லை.

குலோத்துங்கன் கல்வெட்டுச் செய்தி

தஞ்சைக்கும் கும்பகோணத்துக்கும் இடையிலுள்ள சிரிகாங்கேயபுரம் என்கிற உடையாளூரில் இராஜராஜனின் பள்ளிப்படை அமைந்துள்ளது. அங்கு புதைக்கப்பட்டிருந்த ஒரு பாணலிங்கத்தினை அடையாளமாகக் கொண்டு (ஆவுடை இல்லாமல்) அது இராஜராஜன் புதைக்கப்பட்ட இடமாக இருக்கலாம் என்று பண்டைய ஆய்வாளர்கள் கருதினார்கள். அதே இடத்தில் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு ஒன்று கிடைக்க, அதில் இராஜராஜனின் பெயர் இருந்திருக்கிறது. இத்தனைக்குப் பிறகும் அவ்விடம் இன்றும் எப்படி உள்ளதென்பதை நேரில் சென்று யாரும் பார்க்கலாம்.

பெரிய கோயிலுக்கு யுனெஸ்கோ அங்கீகாரமெல்லாம் உண்டு. அதைக் கட்டியவன் துயிலும் இடத்தைக் கண்டுகொள்ள யாருமில்லை. மாமன்னன் என்பர். மும்முடிச் சோழன் என்பர் (சேர சோழ பாண்டிய நிலம் மொத்தத்தையும் சேர்த்து ஆண்டவன் என்ற பொருளில்). திரிபுவனச் சக்கரவர்த்தி என்று பரவசப்படுவர். ஆனால் அவனது சமாதி இருக்குமிடத்தைச் சென்றடைய ஒரு பேருந்துப் பாதைகூட இராது.

இராஜராஜனின் சமாதி என்று சொல்லப்படுகிற இடத்துக்கு ஆய்வாளர்கள் வராமல் இல்லை. இன்று மிகச் சிறிதாக ஒரு கூரை அமைக்கப்பட்டு, லிங்கமொன்று வைக்கப்பட்டு, மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு, ஒரு பழைய தகர அறிவிப்புப் பலகையும் வைக்கப்படாமல் இல்லை. ஆனால் அந்த ஏற்பாடும் அரசினுடையதல்ல. கிராமமென்று சொல்லவும் யோசிக்க வேண்டிய நிலையில் உள்ள – எளிதில் சென்றடைய வழியில்லாத அவ்விடத்தில் ஒரு சிலர் வசிக்கிறார்கள். அவர்களுள் ஒரு முதியவர் இராஜராஜனின் சமாதியைப் பார்த்துக்கொள்கிறார். அவருக்கு முன்னால் அவரது தகப்பனார். அவருக்கும் முன்னால் அவரது தகப்பனார். இவருக்குப் பிறகு இவரது வாரிசுகள் அதைத் தொடர்வார்கள். அது அம்மாமன்னனுக்கு அக்குடும்பம் தலைமுறை தலைமுறையாகச் செய்து வரும் மரியாதை. அது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் உறவாக இருக்கலாம். யார் அறிவர்?

ஆய்வாளர்களாலும் அகழ்வுத் துறை நிபுணர்களாலும் அரசுகளாலும் தொடர்ச்சியாக இவ்விஷயம் புறக்கணிக்க அல்லது ஒத்திப்போடப்பட்டு வருவதில் உள்ளது எழுதப்படாத சரித்திரமா, மறைக்கப்படும் சரித்திரமா என்கிற வினா எழுவது இயல்பு. உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் எத்தனையோ ஆயிரம் பேர் தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சுற்றுலாவாக வருகிறார்கள். மூலைக்கு மூலை நின்று வியந்து படம் எடுத்துக்கொள்கிறார்கள். அப்படியொரு கட்டடக் கலை அதிசயம் மீண்டுமொரு முறை எங்குமே நிகழவில்லை என்று சொல்லிச் சொல்லிச் சிலிர்த்துப் போகிறார்கள். ஆனால் கட்டுவித்தவன் கடைசியாகத் துயில்கொண்ட இடம் கவனிப்பாரற்றுத்தான் கிடக்கிறது. ஏன் இப்படி என்று யார் கேட்டாலும் பதிலளிக்க யாருமில்லை.

தகரத்தால் ஆன அறிவிப்புப் பலகை

ஆட்சியில் இருப்பவர்கள் தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சென்றால் பதவி போய்விடும் என்றொரு மூட நம்பிக்கை தமிழ்நாட்டில் உண்டு. ஆள்வோரும் மக்களும் இதனை நன்கறிவார்கள். இராஜராஜனின் சமாதியில் கைவைத்தாலும் அப்படி ஏதாகிலும் ஆகிவிடுமென்று யாரேனும் சோதிடர் எதையேனும் சொல்லி வைத்திருக்கலாம்.

உரியில் ஓரிடத்தில் கருவூர்ச் சித்தர், சார்வாகனிடம் சொல்வார், புலப்படாதவை அனைத்தும் இல்லாதவை என்றாகிவிடாது.

கிடைக்காத கல்வெட்டுகள், நிகழாத ஆய்வுகள், தோண்டப்படாத நிலங்களின் அடியில் சொல்லப்படாத சரித்திரமொன்று எக்காலத்திலேனும் படிக்கப்படக் காத்துக்கொண்டிருக்கிறது.

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

உரி: சில குறிப்புகள் – 5
Pa Raghavan

இதற்குமுன் இப்படிச் செய்ததில்லை. இம்முறை இந்த விதமான எழுத்து முறையைத் தவிர்க்கவும் முடியவில்லை.

உரியின் ஒவ்வோர் அத்தியாயமும் கருக்கொண்டதும் அதை முதலில் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எனக்கு மட்டும் புரியும் வடிவத்தில் சுருக்கமாக எழுதிக்கொண்டுவிடுகிறேன். அநேகமாகப் படித்துப் பார்ப்பதுகூட இல்லை. காகிதத்தில் எழுதிப் பார்க்கத் தோன்றுவதால் எழுதுகிறேன். பிறகு மூடி வைத்துவிட்டுச் சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த அத்தியாயத்தைக் கணினியில் வழக்கம் போல எழுத ஆரம்பிக்கிறேன்.

விசித்திரம் என்னவென்றால், நோட்டுப் புத்தகத்தில் நான் எழுதும் அத்தியாயமும் கணினியில் எழுதும் வடிவமும் பத்திருபது சதம் பொருந்தினால் அதிகம். மீதமுள்ள கதைப் பகுதியை அடுத்த அத்தியாயத்துக்குக் கொண்டு செல்லலாம் என்று ஒவ்வோர் அத்தியாயத்தை முடிக்கும்போதும் தோன்றும். ஆனால் அடுத்ததை எட்டிப் பிடிக்கும்போதும் இதுவேதான் மீண்டும் நிகழும்.

பொதுவாக எனக்குக் கையால் அத்தியாயம் எழுதும் பழக்கம் இல்லை. கடைசியாகக் கையால் எழுதிய நாவல், அலை உறங்கும் கடல். அதுதான் என் முதல் முயற்சியும்கூட. அதன் பிறகு அனைத்தும் கணினிமயமாகிவிட்டது. ஆனால் குறிப்புகளை எப்போதும் கையால்தான் எழுதி வைப்பேன். உரியின்போதுதான் எதனாலோ ஒருமுறை அத்தியாயச் சுருக்கத்தைக் கையாலும் பிறகு அது விரிவு கொள்ளும்போது கணினியிலும் எழுதும் வழக்கம் உண்டானது.

இம்முறையில் எனக்கு வேலை இரு மடங்காகிறது என்றாலும் நல்லதொன்றும் நிகழ்கிறது. முன்பே சொன்னேன் அல்லவா? கையால் எழுதும் வடிவம் கணினிக்கு மாறும்போது அதில் மிகக் குறைந்த அளவே இறுதி வடிவத்துக்குச் சென்று சேர்கிறது. மற்றவை யாவும் அப்படியே தேங்கிவிடுகின்றன. அப்படித் தேங்கிவிடும் பகுதிகளை இன்று காலை சிறிது நேரம் கூர்ந்து படித்துக்கொண்டிருந்தேன்.

இந்த வரியை எழுதும்போது விரல்கள் தடுமாறுகின்றன. நாவலுக்குள் வராத கதைப் பகுதிகளிலிருந்து இன்னொரு முழு நாவல் இன்றெனக்குத் தென்பட்டது.

இது எதிர்பாராதது. திட்டம் என்ற ஒன்றில்லை. முயற்சி என்ற ஒன்றில்லை. உண்மையாகவே இப்படியொரு நாவலை நோக்கி என்றுமே மனம் குவிந்ததில்லை. ஆனபோதிலும் இது நிகழ்ந்திருக்கிறது என்பது என்னால் நம்பவே முடியவில்லை.

கண்ணுக்கும் சிந்தைக்கும் புலப்பட்டு நாம் வாங்கிச் சேர்ப்பனவற்றை திரிஷ்டம் என்று சொல்வார்கள். நல்லதோ கெட்டதோ. தெரிந்து செய்வது. அதனால் கிடைப்பது. அவ்வாறு புலப்படாமலேயே சேர்த்து வைப்பனவும் சில உண்டு. அதை அதிர்ஷ்டம் என்பர். வீடு வேலை வருமானம் உறவுகள் நட்புகள் அனைத்தின் மூலமாகக் கிடைப்பவை திரிஷ்டம். புலப்படாமல், சிந்திக்காமல் நாமே செய்கிற நன்மை தீமைகளினால் கிடைப்பவை அதிர்ஷ்டத்தால் வருபவை.

இன்று தோன்றிய கருப் பொருள் நானறியாமல் செய்த ஏதோ ஒரு நன்மையின் விளைவாகக் கிடைத்திருக்கும் அதிர்ஷ்டம். என்றாவது இந்நாவலையும் எழுதலாம். எழுதாமலும் போகலாம். அதுவல்ல பெரிது. ஒன்றிலிருந்து இன்னொன்று கிளைப்பது என்பதுதான் இயற்கையின் அடிப்படைக் கட்டுமானம். இன்று எனக்கு அது தெள்ளத் தெளிவாகப் புலப்பட்டது.

நாவலினும் இப்பாடம் பெரிதல்லவா.

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

உரி: சில குறிப்புகள் – 4
Pa Raghavan

உருவற்ற பரம்பொருளை நிர்க்குண பிரம்மம் என்றும் மாயை போர்த்திய அதன் வடிவத்தைச் சகுண பிரம்மம் என்றும் சுட்டுவது வழக்கம். மாயையைப் பொதுவாக மதமும் அது நிகர்த்த மற்றவையும் போர்த்தும். ஆனால் இந்த உருவற்ற நிலைக்கும் உருவுள்ள நிலைக்கும் இடையில் இன்னொன்று இருந்தாலென்ன என்று தோன்றியது. உருதானா முக்கியம்? ஒலி இல்லையா? பொருள் இல்லையா?

ஆதியிலே வார்த்தை இருந்தது; அது தேவனிடத்தில் இருந்தது. அதுவே தேவனாகவும் இருந்தது என்று பைபிள் சொல்லும். ஓர் எழுத்தாளனாக, ஆதியில் வார்த்தைதான் இருந்திருக்க வேண்டுமென்றே எனக்கும் தோன்றும். அழிவற்ற அனைத்தும் சொல் வடிவமல்லாத வேறெதனை ஏந்தும்?

உரியின் கதையை ஒரு மனிதன் சொல்லவில்லை. மனிதனல்லாத பிற உயிரினங்கள் எதுவும் சொல்லவில்லை. மாறாக, பிரம்மமெனும் ஆதித் தனிமத்தின் சிந்தையில் கருவிருக்கும் ஒரு சொல் இந்தக் கதையைச் சொல்லிச் செல்வதாக இந்நாவலைக் கட்டமைத்தேன். எழுத்து வேகத்தில் ஓம் எனும் சொல்லுக்கு முன்னால் பிரம்மத்தின் சிந்தையில் கருவிருந்த சொல் அதுவென எழுதிவிட்டேன். ஆனால் ஓம் உலகறிந்த சொல். என்றால், அதற்கும் மூத்ததான இந்தச் சொல் எது? அதன் பொருள் என்ன?

பிறகு தோன்றியது. ஒரு சொல் பிறக்கும்போதல்லவா அதன் ஒலியும் பொருளும் உலகறியும்? இந்தச் சொல் இன்னமும் பிறக்கவில்லை. யுக யுகமாக இன்னும் கருவிலேயே இருந்து வருகிற சொல்லுக்குப் பொருள் தேடி எங்கே போக முடியும்?

இல்லாத அம்மாயச் சொல்லைப் பிரபஞ்சப் பேரழிவின் கருவியாகக் கொள்வது சுலபமாக இருந்தது. வெல்லும் சொல்லும் கொல்லும் சொல்லும் எம்மொழியிலும் உண்டு. பிறந்துவிட்ட சொற்களுக்கே அச்சக்தி உண்டென்றால் காலகாலமாகக் கருவில் இருந்தபடியே வீரியமேற்றிக்கொண்டிருக்கும் பிறவாச் சொல் எத்தகையதாக இருக்கும்? அதனைக் கொண்டே ஆதித் தனிமம் யுக முடிவின்போது அனைத்தையும் அழித்து நிர்மூலமாக்குமென ஓர் ஏற்பாடு இருந்தால் எப்படி இருக்குமெனச் சிந்தித்துப் பார்த்தேன்.

காட்சிகளெனத் தனியே ஒன்றில்லாத, பல்வேறு மனிதர்களின், அதிமனிதர்களின் சிந்தைகளுக்குள்ளேயே பெரும்பாலும் நடக்கும் இப்பெருங்கதையை எழுத அப்படியொரு சொல்லினால் மட்டுமே முடியுமென்ற நிச்சயம் உண்டானது. நாவல் மொத்தத்தையும் அத்தோன்றாச் சொல்லே எழுதியும் சொல்லியும் வருகிறது. உருவற்ற, ஒலியற்ற, பொருளுமற்ற அந்த அழிவுச் சொல்லுக்கு மனிதச் சிந்தையைத் தீண்டாத தருணங்களில் உணர்ச்சியும் இராது. எந்தச் சிந்தையைக் கருதி, அதில் நிறைந்து பரவுகிறதோ, அம்மனிதச் சிந்தையை அகழ்ந்தெடுத்து அது ஒரு பத்திரிகையாளரைப் போல அறிக்கை வடிவில் தந்துவிடும்.

இந்த வடிவில் எழுதுவதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சுமார் இரண்டு லட்சம் சொற்களைக் கொண்ட ஒரு பெருங்கதையை எந்த இடத்திலும் உணர்ச்சியை வெளிக்காட்டாத ஒரு கதை சொல்லியைக் கொண்டு எப்படிச் சொல்லி முடிப்பது? உணர்ச்சியில்லாத மனித வாழ்வில்லை. குறைந்தபட்சமாக ஒவ்வொருவரது வாழ்விலும் ஒரு சொட்டுக் கண்ணீரோ, நொடி நேரப் புன்னகையோ இல்லாதிருக்காதல்லவா? அதையும்கூட அவன் கண்ணீர் சிந்தினான் என்று சொல்ல மனம் வராமல், அழுதான் என்று வெறுமனே தெரிவித்துவிட்டுச் செல்வதினும் குரூரம் இன்னொன்று உண்டா.

ஆனால் அந்தக் குரூரமே இந்நாவலின் அடித்தளத்துக்கு வலு சேர்ப்பதென்று எழுத எழுதப் புரியத் தொடங்கியது. யதியில் இருந்தது போலவோ, சலத்தில் காட்டப்பட்டது போலவோ அபூர்வமான நிலக்காட்சிகள் ஏதும் உரியில் இல்லை. சோழ நாடெனும் எல்லை வகுக்கப்பட்டுவிட்டாலும் நான்கைந்து இடங்களைத் தாண்டி நாவல் போவதில்லை. அதை எண்ணி அமைதி கொள்கிறேன். இல்லாவிட்டால் இப்படியொரு உணர்ச்சியற்ற கதை சொல்லியை வைத்துக்கொண்டு இம்மாயப் பெருங்கதையை வனையவே முடிந்திருக்காது.

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

உரி: சில குறிப்புகள் – 3
Pa Raghavan

மனிதனால் முடியாத ஒன்றில்லை என்று திடமாக நம்புபவன் நான். ஒன்று முடியவில்லை என்றால் முயற்சி போதாது என்பது மட்டுமே பொருள். அறிவுக்குப் புலப்படாதவற்றை அற்புதமென்றும் அதிசயமென்றும் வகைப்படுத்திவிடுகிறோம். திரை விலகும்போது அனைத்தும் சாதாரணமாகிவிடுகின்றன. அப்படி இன்னும் விலகாத திரைகளின் மீதுதான் பெரும் படைப்புகள் எழுதப்படுகின்றன.

உரியை எழுதத் தொடங்கியபோது, இதெல்லாம் நடக்கிற கதையா? என்று ஒவ்வொரு பத்தியிலும் ஒருமுறையேனும் வாசகருக்குத் தோன்றுமென நினைத்தேன். ஏனெனில் இந்நாவலில் சாதாரண மனிதர்களும் அதிமனிதர்களும் மிக எளிதாக ஒருங்கிணைந்து பயணம் செய்வார்கள். அதிமனிதர்கள் ஒரு சாதாரண மனிதனின் சிந்தையை ஆக்கிரமித்து அதில் ஏறி அமர்ந்து அவனைச் செலுத்திச் செல்வார்கள். நினைத்த நேரத்தில் நாயாகவும் பன்றியாகவும் பட்டாம்பூச்சியாகவும் பானையில் வைத்த குடிநீராகவும்கூட உரு மாற்றிக்கொள்பவர்கள் நாவலெங்கும் வருவார்கள். யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவும் தகவல் பரிமாறிக் கொள்ளவும் அவசியமேயில்லை. தேவைப்படும்போது தேவைப்படும் நபரின் மூளையில் ஏறி நிறைந்து அங்குள்ளதைப் படித்துவிட்டு வெளியேறிவிடுவார்கள். அது குறித்துத் திகைப்படையக் கூட யாருக்கும் நேரமிராது. ஆயிரமாயிரம் சாகசங்கள் சாதாரணச் செயல்களாக நடத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.

சிறு வயதில் பொருட்காட்சிகளில் மச்சக்கன்னியையைப் பார்த்துவிட்டு இரவெல்லாம் உறக்கமின்றித் தவித்திருக்கிறேன். ஐயோ இந்தப் பெண்ணுக்குக் கால்களே இல்லையே; பாதி மீன் வடிவிலும் பாதி மனித வடிவிலும் எப்படித்தான் வாழ்கிறாளோ, இப்படிக் கண்ணாடிக் கூண்டுக்குள்ளேயே காலமெல்லாம் படுத்துக் கிடப்பது எத்தனை பெரிய கொடுமை என்று உண்மையிலேயே மனம் வருந்தியிருக்கிறேன். இரு கால்களையும் உள்ளடக்கும் விதமான ஒரு மீன்வடிவக் கீழாடையையே அவள் அணிந்திருக்கிறாள் என்று அப்போது தோன்றியதே இல்லை.

அதிசய உணர்ச்சிகள் அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கத்தக்க விதத்திலும் உயிர்த்திருந்த அந்த வயதின் மனநிலையை மீட்டெடுத்துத்தான் இந்நாவலை எழுத ஆரம்பித்தேன். அது எப்படி ஒருவன் சிந்தைக்குள் இன்னொருவன் ஏறி அமர முடியும்? அது எப்படி ஒருவன் சிந்தித்தும் சேமித்தும் வைத்திருக்கும் நினைவுகளைத் தூக்கியெறிந்துவிட்டு வேறொருவனாக அவனை மாற்றி அமைக்க முடியும்?

மெட்ராஸ் பேப்பரில் நாவல் வெளியாகத் தொடங்கிய ஆரம்ப நாள்களில் இதனைக் கேட்காதோர் மிகக் குறைவு. அவர்களுக்கு நானளித்த பதில் – கொலாப் என்றொரு வசதி எப்படி இன்று சாத்தியமாகிறது? ஒரு கூகுள் டாக் பக்கத்தைத் திறந்து நாமொன்றை எழுதி வைத்தால், அதை வேறெங்கிருந்தோ, வேறெவரோ மாற்றி எழுதுவதும் திருத்தி வைப்பதும் இல்லையா? மனிதனின் கண்டுபிடிப்பு செய்கிற ஒரு செயலை மனிதனே செய்யக் கூடாதா?

cloud computing, networking, bluetooth நுட்பம், மால்வேர் ப்ரொட்டக்‌ஷன், firewall technology, chip technology தொடங்கிச் செய்யறிவு வரை மனிதச் சிந்தை கண்டறிந்த அனைத்தும் கண்டறியாதவையாக இருந்த காலமொன்றைக் கற்பனையில் உருவாக்கி அவற்றை ஒரு சாரார் மட்டும் தமது தேவைக்கு இரகசியமாகப் பயன்படுத்தினால் எப்படி இருக்குமென்று எண்ணிப் பார்த்தேன். உரிக்கு நான் எதிர்பார்த்த மாயாஜால வடிவம் அங்கே அகப்பட்டது.

இன்றைக்கு ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதேனும் கண்டுபிடிக்கப்படுகிறது. சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை நுட்பங்களே வடிவமைக்கின்றன. மனிதன் கருவிகளின் அடிமையாகவும் கருவிகள் மனிதச் சிந்தையின் கண்டுபிடிப்பாகவும் சிந்தையைக் கல்வி வடிவமைப்பதாகவும் கல்வியைக் காலம் முடிவு செய்வதாகவும் ஆகியிருக்கிறது.

இக்காலமும் மாறும். வேறொரு காலம் வரும். அது மாறி இன்னொரு காலம் பிறக்கும். பலப்பல கால மாற்றங்களுக்குப் பிறகு மீண்டும் மனிதன் அறியாமையின் முழுமைக்குள் ஒடுங்கிப் போவான். அறியா நிலையே அற்புதங்களைத் தக்க வைக்கும். அதிசயப்பட வைக்கும். அன்றைக்கும் யாரோ ஒருவன் மச்சக்கன்னியின் கீழ்ப்பகுதி இப்படியாகிவிட்டதே என்று எண்ணி வருந்துவான். அன்று இன்னொரு உரி வேறொரு வடிவில் யாராலாவது எழுதப்படும்.

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

நாளைய விழா
Pa Raghavan

BukPet இன் WriteRoom எழுத்துப் பயிற்சிக் குழுமத்தின் ஆறாம் ஆண்டு விழா நாளை காந்தி ஜெயந்தித் திருநாளன்று மாலை இந்திய நேரம் ஏழு மணிக்கு Zoom வாயிலாக நடைபெறுகிறது.

விடாப்பிடியாக இந்த விழாவை ஒவ்வோர் ஆண்டும் zoom வாயிலாக மட்டுமே நடத்துவதற்கு ஒரே காரணம்தான். உலகெங்கும் உள்ள WriteRoom மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். வாட்சப் என்ற ஒன்று வந்த பிறகு எல்லோரும் எப்போதும் அருகிலேயேதான் வசிக்கிறோம். ஆனால் நேரில் பார்த்துப் பேசுவதற்காகவேனும் விழா என்ற ஒன்று தேவைப்படுகிறது.

zoom இல் உள்ள சிக்கல் அதில் அதிகபட்சம் 100 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியுமென்பது. எனவே முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிப்பதென முடிவு செய்துள்ளோம். விழா லிங்க், நாளை மாலை என்னுடைய வாட்சப் சேனலிலும் ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியாகும்.

எழுத்துப் பயிற்சி வகுப்பென்பது, கோவிட் காலத்தில் விளையாட்டாகத் தொடங்கியதுதான். இதுவரை சுமார் இருநூறு பேர் இவ்வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் உந்தப்பட்டு எழுதத் தொடங்கிப் பலர் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். புத்தகங்கள் வெளியாகின்றன. விருதுகள் பெறுகிறார்கள். இது தரும் மகிழ்ச்சி மிகப் பெரிது.

கலையைக் கற்றுத்தர இயலாது. என்னால் என்றல்ல; யாராலும் முடியாது. ஆனால் நுட்பங்களைப் பயின்றுதான் தெளிய வேண்டும். என் வகுப்புகளில் நான் அதைத்தான் பகிர்ந்துகொள்கிறேன். எவை எனக்குப் பாடமாயினவோ அவை. இந்த வகுப்புகளில் நான் தீவிரமாக வலியுறுத்துவது ஒன்றனைத்தான். எழுத்தொழுக்கம். இதனைத் தொட்டு என்னை ஒரு சிறந்த பிற்போக்குவாதியாகச் சித்திரிக்கும் பணிகளெல்லாம் ஆங்காங்கே நடந்தன. அனைத்தையும் அமைதியாகக் கவனிக்கிறேன். எதற்கும் பதிலளிப்பதில்லை. மனித வாழ்வின் ஆகப்பெரிய நேரக்கொல்லி, பதிலளித்துக்கொண்டிருப்பது. நேரம் போனாலும் பலன் இருந்தால் நல்லதே என நினைப்போமானால் அதுவும் இராது. நிறைய பார்த்துவிட்ட பிறகே சமூக ஊடகங்களில் பதிலளிப்பதை நிறுத்தினேன். அதன் பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எழுத்து என்றல்ல; எந்தக் கலையுமே மிகத் தீவிரமான, கூர் மழுங்காத, சலிப்புறாத, நேர்மை குன்றாத தொடர் முயற்சிகளினால் மட்டுமே வெல்லும். ஒவ்வொரு துறைக்கும் ஓர் ஒழுக்கம் உண்டென்பது போல எழுதுவதற்கும் உண்டு. பகுதி நேரமாகச் செய்தாலும் அதை முறைப்படிக் கடைபிடித்தால் மட்டுமே இதில் முன்னுக்கு வர முடியும். பத்திருபது புத்தகங்கள் வெளியான பின்பும் நாம் இல்லாத இடங்களில் நான் அவரது வாசகன் / ரசிகன் என்று சொல்வதற்கு ஒரே ஒருவரைக்கூடப் பெறாத யாரும் எழுத்தாளர் அல்லர். அப்படி எழுத்தின் எந்த அம்சம் வாசகர்களோடு எழுதுபவனைப் பிணைக்கிறது என்பதைத்தான் இவ்வகுப்புகளில் சொல்கிறேன். அது கைகூடத் தேவையான ஒழுக்கத்தையே போதிக்கிறேன்.

முன்பாவது பத்திரிகை, புத்தகம் என்ற இரண்டு வாய்ப்புகள்தாம் இருந்தன. இன்று எழுதுவோருக்கான உலகம் மிகப் பரந்து விரிந்துள்ளது. content writing என்பது ஒரு தொழிலாகவே உருவெடுத்துள்ளது. திரையுலகம், சீரியல் உலகம், வெப் சீரிஸ்கள், குறும்பட உலகம், யூட்யூப், தனியார் வானொலிகள், ஒலிநூல் உலகம், மல்டி மீடியா, பத்திரிகைகள், நாளிதழ்கள், செய்தி ஊடகங்கள் என எங்கெங்கும் நுட்பம் அறிந்து எழுதுவோருக்கான தேவைகள் உள்ளன. எழுத்தென்பது சிறுகதையில் தொடங்கி நாவலில் முடிவதல்ல. அதன் எல்லைகள் பறந்து விரிந்தவை. நானறிந்தவற்றை மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறேன், அவ்வளவுதான்.

ஆண்டுக்கொரு முறை என் மாணவர்களை இவ்விழாவில் மொத்தமாக நேரில் பார்க்கிறேன். விழா என்பதெல்லாம் பொதுவில் பயன்படுத்த உதவும் வெறும் சொல்தான். உண்மையில் இந்நிகழ்ச்சி ஒரு கலந்துரையாடலாகத்தான் நடக்கும். முதல் அரை மணி நேரம் சிறப்பு விருந்தினர் ஒருவரின் உரை இருக்கும். பிறகு உரையாடல், கேள்வி-பதில், தமது அனுபவம் சார்ந்து மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் சிலரது சிற்றுரைகள் இருக்கும். அவ்வளவே.

இந்த ஆண்டு எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பரிசல் கிருஷ்ணா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரை நிகழ்த்தவிருக்கிறார். வகுப்பில் கலந்துகொண்டு, பயின்று தேறி மெட்ராஸ் பேப்பரில் எழுதத் தொடங்கி இன்று பிரபல எழுத்தாளர்களாகத் திகழும் பிரபு பாலா, வினுலா, மதுசூதனன், பாலாஜி, ரிஷி ரமணா ஆகியோர் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். கலந்துரையாடல் நிகழ்ச்சியில் BukPet-WriteRoom மாணவர்களும் நானும் இருப்போம். மாணவர்களின் எழுத்து சார்ந்த அனைத்து வினாக்களுக்கும் விடையளிப்பேன்.

எழுத்தார்வம் உள்ள வாசக நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

உரி: சில குறிப்புகள் – 2
Pa Raghavan

நீங்கள் ஒரு சரித்திரக் கதை எழுதுவீர்களா என்னும் வினாவை இதுவரை குறைந்தது பத்து முறையேனும் பேட்டிகளில் எதிர்கொண்டிருப்பேன். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வாசகர்கள் கேட்டதைச் சேர்த்தால் குறைந்தது நூறு முறை. ஆனால் ஒவ்வொரு முறையும் மாட்டேன் என்பதற்கு அப்பால் இன்னொரு பதிலைச் சொன்ன நினைவில்லை.

என்னால் ஒரு சரித்திரக் கதையை எழுத முடியும் என்று இன்றுவரை நான் நம்பவில்லை. புழக்கத்தில் உள்ள பல சரித்திர நாவல்களைப் படித்திருக்கிறேன். பெரும்பாலும் அவை சரித்திரமும் அல்லாத, நாவலும் அல்லாத நீள் கதைகளாக இருக்கும். காரணம் அத்தகைய கதைகள் மன்னர்களைச் சுற்றிப் பின்னப்பட்டவையாக இருக்கும். உருப் பெருக்கிக் காட்டும் தன்மையே முதன்மையாக விளங்கும். ஆனால் சரித்திரம் என்பது மக்களுடையதல்லவா. அவர்களுடைய வாழ்க்கை அல்லவா. அவர்கள் பட்ட பாடுகளின் கதையல்லவா.

உரி ஓர் எண்ணமாக மட்டும் தோன்றிய நாள்களில் இது ஒரு சரித்திரக் கதையாக வரக்கூடுமோ என்கிற ஐயம் எனக்கிருந்தது. ஏனெனில் கதை நடக்கும் காலமென்பது பெரிய கோயில் கட்டப்படத் தொடங்கும் ராஜராஜனின் பத்தொன்பதாவது ஆட்சியாண்டில் ஆரம்பித்து, கோயில் குடமுழுக்கு நடக்கும் அவனது இருபத்தைந்தாவது ஆட்சியாண்டில் நிறையும். மிக நிச்சயமாகக் கதைக்குள் ராஜராஜன் வருவான், அவனது அமைச்சர் பெருமக்களும் சேனாதிபதிகளும் சிற்பக்கலை விற்பன்னர்களும் வருவார்கள் என்று அப்போது நினைத்தேன்.

நான் எழுத எண்ணியிருந்த நாவல் கோயிலைப் பற்றியதோ, மன்னனைப் பற்றியதோ அல்ல எனினும் இந்தக் கூறுகள் உள்ளே நுழைந்துவிடுமானால் தன்னியல்பாக அது சரித்திர நாவலின் தோற்றம் கொண்டுவிடுமென்று தோன்றியது. நீலகண்ட சாஸ்திரி தொடங்கி மன்னர் மன்னன் வரை சோழர் கால ஆராய்ச்சியாளர்களின் அத்தனை ஆய்வு நூல்களையும், பொன்னியின் செல்வன் தொடங்கி உடையார் வரை எழுதப்பட்ட சரித்திர நாவல்களையும் ஒன்று விடாமல் படித்து முடித்த பிறகுதான் நான் எழுத நினைத்திருப்பதற்கும் இவற்றுக்கும் சிறு தொடர்பும் இல்லை என்பது புலப்பட்டது. எனவே, அவற்றுடன் தொடர்பற்ற ஒன்று சரித்திர நாவலாக உருப்பெற இயலாது என்கிற தெளிவும் ஏற்பட்டது.

சோழர் காலத்தில் நடக்கும் கதை ஆயினும் இது சோழர்களின் கதையல்ல. பெரியார் என்கிற ஒரு மனிதரின் வரவுக்குப் பிறகு நாத்திகம் என்னும் கருத்தாக்கம் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளின் ஓரங்கமாக உருப்பெற்றதும் ஏற்கப்பட்டதும் தொடங்கி, நாத்திகர்களே நீடித்து ஆண்ட மாநிலமாகத் தமிழ்நாடு எவ்வாறு விளங்கியது என்று எப்போதும் எண்ணிப் பார்ப்பேன். பெரியார் வழி வந்தோரும் பெருகி, பக்தி இயக்கங்களின் வழி வந்தோரும் பெருகி ஒன்றிணைந்து எவ்வாறு வாழ முடிந்திருக்கும்? தேர்தல்களில் நின்றவர்கள் நாத்திகர்களே ஆனாலும் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தோர் ஆத்திகர்கள் அல்லவா? கடவுளை நம்புவோரை எது நாத்திகர்களையும் நம்பத் தூண்டியிருக்கும்? ஆண்டவன் மீது பக்தியையும் ஆள்பவர் மீது நம்பிக்கையையும் வைக்கச் செய்த காரணி எது?

இவ்வினாவின் மீதுதான் உரியைக் கட்டத் தொடங்கினேன். அவ்வகையில் இது சரித்திர காலத்தில் காலூன்றிய சமூக-ஆன்மிக நாவலாகவே உருக்கொண்டது. மருந்துக்கும் சரித்திர நாவலின் வாசனை வந்துவிடவில்லை என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த ஆசுவாசம் அளித்தது. அதைவிடப் பெரிய நிம்மதி, இம்மாபெரும் நாவலை முற்றிலும் ஒரு மாயாஜால காமிக்ஸ் கதை வடிவத்தில் சொல்ல முடிந்தது. புனைவெழுத்து வழங்கும் சுதந்தரம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. பறவைகளுக்குக் கூடச் சிறகுகள் இரண்டுதான். புனைவெழுதத் தொடங்கும்போதெல்லாம் ஆயிரம் பல்லாயிரம் சிறகுகள் முளைத்துவிடுகின்றன. நிலம் தொடங்கி வான்வரை உள்ள வெளியனைத்தும் நம் வசமாகிவிடுகின்றன. புலப்படாத அதலங்களிலும் கால் பதித்து நிற்க முடிகிறது. என்ன சொல்கிறோம் என்பதினும் எப்படிச் சொல்கிறோம் என்பதில் உண்டாகும் நிறைவும் பரவசமும் நிகரே சொல்ல முடியாத பெரும் போதை.

உரியை ஒரு சாதாரண மனிதனும் சர்வ வல்லமை பொருந்திய சித்தர் ஒருவரும் சாகா வரம் பெற்ற ஓர் அதிமானுடனும் கட்டியிழுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இதில் கோயில் எங்கே, குடமுழுக்கெங்கே, ராஜராஜன் எங்கே, அவனது பரிவாரங்கள் எங்கே?

ஆயிரம் பல்லாயிரம் சிறகுகளுடன் பறந்துகொண்டிருப்பதாகச் சொன்னேன். சுற்றிச் சுற்றித் தஞ்சப்புரியைத்தான் வலம் வந்துகொண்டிருக்கிறேன். இதுவரை அவர்கள் யாரும் கண்ணுக்குத் தென்படவில்லை.

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

உரி: சில குறிப்புகள் – 1
Pa Raghavan

யதி எழுதிய நாள்களில் சிறிது பித்தேறிக் கிடந்தேன். கண்ணெதிரே நிகழ்வனவும் காதருகே வந்து சொல்லிவிட்டுச் செல்வனவும்கூடச் சிந்தையில் ஏற மறுத்த நாள்கள் நினைவிருக்கின்றன. தொடங்கும்போதோ முடிக்கும்போதோ அல்ல. இடையில் சில மாதங்கள் அவ்வாறு இருந்தன. பிறகு சுதாரித்துக்கொண்டேன்.

சலம் முற்றிலுமே என்னைப் புரட்டியெடுத்துவிடுமென்று நினைத்தேன். அதன் காலமும் (கிமு 1000-1200) களமும் மொழியும் எனக்கு அந்நியமானவை. நீண்ட – மிக நீண்ட பயிற்சிகளுக்குப் பிறகே எழுதத் தொடங்கினேன். நிறைய தடுமாற நேரிடும், தடங்கல்கள் உண்டாகும், முட்டிக்கொண்டு நிற்க நேரிடும் என்றெல்லாம் கணித்து, அனைத்துக்கும் முன்னேற்பாடுகள் செய்துகொண்ட பிறகே தொடங்கினேன். ஆனால் சற்றும் நம்ப முடியாதவிதமாக அந்நாவல் என்னை எளிதாக இயக்கிச் சென்றுவிட்டது. எண்ணிய விதமான இடர்கள் எதுவுமே எழுதும்போது ஏற்படவில்லை.

இவ்விரண்டினைப் போல அல்லாமல் உரியை அது எங்கே சென்று நிறையும் என்கிற புலப்படாத ஒளியினை மட்டுமே வைத்துக்கொண்டு தொடங்கினேன். ஏனெனில் அது முடியும் இடம் யதியின் தொடக்கத்துடன் எவ்விதமாகவேனும் தொடர்பு கொண்டாக வேண்டும். சொற்களாக அல்லாமல் சூக்குமமான உணர்வாக எனக்குள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் திரண்டு நிற்பது அது.

இம்மூன்றும் வேறு வேறு களம், வேறு வேறு கதாபாத்திரங்கள், வேறு வேறு காலத்தில் நடப்பவைதாம். சுமார் மூவாயிரம் வருட இடைவெளி. மூன்று நாவல்களின் கதைக்கும் ஒன்றோடொன்று நேரடித் தொடர்பில்லை. ஆயினும் இவை ஒன்றுடன் ஒன்று கலந்து நிற்பவை. அது கண்ணுக்குப் புலப்படாத கலப்பு. கங்கை, யமுனையுடன் சரஸ்வதி கலப்பது போல.

எப்போதும் போல நான் எண்ணியது ஒன்றாகவும் எழுதுவது வேறொன்றாகவும்தான் உரியிலும் வருகிறது. அதில் எனக்கு வியப்போ அதிர்ச்சியோ ஏமாற்றமோ இல்லை. பழகிவிட்டது. ஆனால் பெரும்பகுதிக் கதையைக் கடந்த பின்பும் இதன் நிறைவுப் புள்ளி இன்னும் புலப்பட்டபாடில்லை.

இந்தியத் துணைக்கண்டத்தின் பிற பகுதிகளில் இல்லாத விதமாகத் தமிழ்நாட்டில் மட்டும்தான் வாழும் சித்தாந்தமாக ஆத்திகமும் ஆளும் சித்தாந்தமாக நாத்திகமும் பன்னெடுங்காலமாகத் தழைத்து வந்திருக்கின்றன. முற்றிலும் நேரெதிரான இவ்விரண்டும் மோதலின்றிப் புழங்கும் இன்னொரு நிலம் அரிது. இங்கு இது எப்படிச் சாத்தியமாகியிருக்கலாம் என்கிற எளிய வினாவே உரியின் ஒரு வரியானது.

சலத்தின் உச்சமென நீயும் உன் வழி வந்த வேதமும் அறவே இல்லாது போவீர்களென்று மரணமற்ற அதர்வனுக்குக் குத்சன் இடும் சாபம் ஒன்று வரும். சதுர்வேதி மங்கலங்கள் தழைத்த தென் தமிழ்நாட்டில் இன்று அதர்வம் பயில்வோர் யாருமில்லை. கேரளத்திலும் வட கிழக்கு மாநிலங்களிலும் மிகச் சிலர் உண்டெனினும் குத்சனின் சாபம் முற்றிலும் பலித்த இடமெனத் தமிழ்நாட்டைத்தான் சொல்ல வேண்டும். சோழர்களின் காலத்தில் அதர்வ வேத பண்டிதர்களும் கணிசமாக வாழ்ந்த நிலம் இது. எனவே சலத்தில் வரும் குத்சனின் சாபம் பலித்த நிலமும் காலமுமென உரியில் அதையே கொண்டேன்.

ராஜராஜ சோழனின் காலத்தில் நடக்கிற கதைதான். ஆனால் நாவலின் ஒரு காட்சியிலும் இதுவரை அவன் நேரில் தோன்றவில்லை. அவனது அந்தப்புரமல்ல; அரண்மனை வாசலுக்கும் செல்ல நேரவில்லை. மன்னர்களினும், மக்களும் மண்ணுமே சரித்திரத்தை நெய்பவை என்று நம்புபவன் நான். இந்நாவலொரு புனைவுதான். ஆனால் ஒரு சரித்திரத்தின் மீது திடமாகக் காலூன்றி நிற்கும் புனைவு. (சலம், ஒரு பெரும் புனைவின் மீது கட்டியெழுப்பப்பட்ட மாய சரித்திரம்.)

சலம் – உரி – யதி என்பது வரிசை. எழுதத் தொடங்கியபோது யதி முதலில் வந்துவிட்டது. பிறகு சலம். இப்போது உரி.

இதையும் எழுதி நிறைவு செய்யும்போது என்னவாக இருப்பேனென்று தெரியவில்லை. கோழி உதிர்த்துச் சென்ற சிறகொன்று காற்றில் உருண்டு புரண்டோடுவது போல எடையற்றுப் போய்விடுவேனென்று நினைக்கிறேன்.

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

செப்டெம்பர் மாத எழுத்து வகுப்புகள் – அறிவிப்பு
Pa Raghavan

செப்டெம்பர் மாத எழுத்துப் பயிற்சி வகுப்புகள், ஐந்தாம் தேதி தொடங்குகின்றன.

வழக்கம் போல நான்கு பாடங்கள் (Fiction, Non Fiction, Social Media, Style), நான்கு வார இறுதிகள், எட்டு வகுப்புகள், பதினாறு மணி நேரம். ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் இந்திய நேரம் மாலை ஏழு மணி முதல் ஒன்பது வரை வகுப்புகள் நடைபெறும்.

வகுப்புக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் 8610284208 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்து பெறலாம்.

ஆர்வமுள்ளோர் வரலாம்.

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

பொருளடக்கமில்லாத புத்தகம்
Pa Raghavan

குறுங்கதை என்றொரு வகைமை உள்ளதைப் போலக் குறுங்கட்டுரை என்ற ஒன்று உள்ளதாவெனத் தெரியவில்லை. இருக்குமானால், கடந்த சில ஆண்டுகளாக நான் எழுதுவதில் பெரும்பாலானவை இந்த வகைமையைச் சாரும்.

நாவல்கள், திட்டமிட்டு எழுதும் நூல்கள் தவிர அன்றாடம் இத்தகைய குறுங்கட்டுரைகளை எழுதுகிறேன். சுமார் ஐம்பது முதல் ஐந்நூறு சொற்களுக்குள் இவை அடங்கிவிடுகின்றன.

இந்தக் கட்டுரைகளின் பொதுவான அம்சம் என்று எது ஒன்றையும் குறிப்பிட இயலாதென்பதே இதன் அடையாளமாக இருக்குமென்று தோன்றுகிறது. அப்படி ஒன்றைச் சொல்லித்தான் தீரவேண்டுமென்றால், சற்றே ஒழுங்கு செய்யப்பட்ட டைரிக் குறிப்புகள் எனலாம். ஆரம்ப வாசகர்களுக்கு அவர்கள் விரும்பும் எழுத்தாளர்களைக் குறித்த ரகசியத் தகவல்களைத் தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். ஒரு நேர்மையான எழுத்தாளன் தனது புனைவுகளிலும் பொய் உரைப்பதில்லை. தனக்கு நிகழாத, தன்னைத் தொட்டுக் கடக்காத ஒன்றனைக் குறித்து எழுதுவதில்லை. இத்தொகுப்பில் உள்ள குறுங்கட்டுரைகள் என்னைத் தொட்டுக் கடந்தவற்றின் தொகுப்பன்றி இன்னொன்றில்லை.

நான் நண்பர்களற்றவன். எனவே என் வாழ்வில் அரட்டை இல்லை. ஊர் சுற்றுவதை நிறுத்திவிட்டவன். எனவே என் எழுத்தில் பெரும்பாலும் பயணக் குறிப்புகள் இராது. சினிமா பார்ப்பதில்லை. எனவே திரை விமரிசனங்கள் செய்வதில்லை. தேர்ந்தெடுத்த மிகச் சில எழுத்தாளர்களை மட்டுமே படிக்கிறேன். புத்தக மதிப்புரைகள் எழுதுவதில்லை. தத்துவங்களின்மீது நம்பிக்கையற்றவன். அவற்றை விசாரிப்பதில்லை. எனது ஆன்மிகத்தில் கடவுள்களுக்கு இடமில்லை. எனவே திருத்தல யாத்திரைகள் இராது. இவை எதுவுமற்ற கடலோரத்தில், தனித்துக் கிடக்கும் சிறியதொரு கிளிஞ்சலுக்குள் வந்து நிறைந்து மீளும் பெருங்கடலின் சில துளிகளைச் சேமித்து வைக்கிறேன். அவ்வளவுதான்.

வரையறுக்கப்பட்ட வாழ்வனுபவங்களுக்கு வண்ணமில்லை என்று யார் சொல்ல முடியும்? வண்ணமயமான வாழ்க்கை எல்லோருக்கும் அமைவதில்லை என்றாலும் வண்ணமற்ற வாழ்வும் யாருக்குமில்லை. கறுப்பும் வெண்மையும்கூட வண்ணங்களன்றி வேறில்லை.

தோற்றத்தில் நான் நல்ல கறுப்பு. எனக்கு அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் எனக்குத் திருமணமான புதிதில் என் அம்மாவுக்கு அது குறித்த சிறிய பதற்றம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் என் மனைவி வெள்ளையாக இருப்பாள். அவளுக்குமே தனது தோலின் நிறம் குறித்த பெருமிதமோ கர்வமோ கிடையாது. அதை நானறிவேன். ஆயினும் அம்மா ஒருநாள் அவளிடம் சொன்னாள்:

அவன் கறுப்பும் இல்லை, நீ வெள்ளையும் இல்லை.

கறுப்புக்கும் வெண்மைக்கும் அப்பால் இக்கட்டுரைகளுக்குள் பெயரற்ற ஒரு ரகசிய நிறம் தன்னைத்தானே தீட்டிக்கொண்டிருப்பதை மொத்தமாகப் படித்துப் பார்க்கும்போது கண்டுகொண்டேன். ஒரு நொடி சிரிப்பு வந்துவிட்டது.

சந்தேகமில்லை. அதுதான் என் இருப்புக்கும் செயல்பாட்டுக்கும் உள்ள ரகசிய அடையாளம்.

( பொருளடக்கமில்லாத புத்தகம் – எழுத்து பிரசுரம் வெளியீடாக வரவுள்ள கட்டுரைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை)

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .