யாழ்ப்பாண சாதி அமைப்பு.

Date June 24, 2008

சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்து சாதி அமைப்பு மற்றும் இனப்போராட்டம் காரணமாக சாதி அமைப்பின் வீழ்ச்சி தொடர்பாக இறக்குவானை நிர்ஷன் ஒரு பதிவிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்த சாதிமுறைமைபற்றி பல்வேறு நூல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லி இருக்கின்றன.

1790 இல் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது காணப்பட்ட சாதிகள் பற்றி யாழ்ப்பாணச்சரித்திரம் (1912) என்கின்ற நூலில் அ. முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிட்டிருக்கின்றார். அதன் பிரகாரம் சாதி அமைப்பு கீழ்வருமாறு தரப்பட்டிருக்கின்றது.

வேளாளர்
பரதேசிகள்
மடைப்பள்ளியர்
மலையகத்தார்
செட்டிகள்
பிராமணர்
சோனகர்
தனக்காரர்
குறவர்
பரம்பர்
சிவியார்
பள்ளிவிலி
செம்படவர்
கடையர்
பரவர்
ஒடாவி
சான்றார்
கன்னார்
தட்டார்
யானைக்காரச்சான்றார்
கயிற்றுச்சான்றார்
கரையார்
முக்கியர்
திமிலர்
கோட்டைவாயில் நளவர்
கோட்டைவாயிற் பள்ளர்
மறவர்
பாணர்
வேட்டைக்காரர்
வலையர்
வர்ணகாரர்
வண்ணார்
தந்தகாரர்
சாயக்காரர்
தச்சர்
சேணியர்
கைக்கோளர்
குயவர்
கடையற்காரர்
குடிப்பள்ளர்
சாயவேர்ப்பள்ளர்
தம்பேறு நளவர்
தம்பேறுப்பள்ளர்
குளிகாரப்பறையர்
பறங்கி அடிமை
கொல்லர்
தவசிகள்
அம்பட்டர்
கோவியர்
தமிழ்வடசிறை
நளவர்
பள்ளர்
பறையர்
துரும்பர்
எண்ணெய்வணிகர்
சாயவேர்ப்பள்ளர்
சாயவேர்ப்பறையர்
அர்ச்கோயில் பறையர்.

ஆனால் இதிலே

மலையகத்தார்
சோனகர்
ஒடாவி
பறங்கி அடிமை

ஆகியன சாதி என்பதை விட அவர்களது இன ரீதியான இடரீதியான பாகுபாடாகத்தான் காணப்படுகின்றது.

இதன்பின்னர் நீண்டகாலப்போக்கில் இந்த சாதி அமைப்பினுள்ளே கிளைச்சாதிகள் மறைந்து ஏனையவை நிலவி வருகின்றன எனலாம்.

ஆனாலும் இன்றைய நாளிலும் சில சாதி மக்களிடையே கிளைச்சாதிகள் (இடசார்பாயோ அல்லது பழக்கம் சார்பாயோ தெரியவில்லை) காணப்படுவது கண்கூடு (செம்படவர் - மேல்கரை, கீழ்க்கரை). ஆனால் நான் நிர்ஷனின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போன்று அதன் தீவிரம் பெருமளவான நிகழ்வுகளில் குறைவடைந்து, திருமணத்தில் மிக்க தீவிரமடைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சாதியை விட்டு திருமணம் செய்வதை நூறுவீதம் தவிர்த்து விடுகின்றார்கள்). அதற்காக யாழ்ப்பாணம் முழுவது அந்த நிலைதான் என்பது அர்த்தமல்ல. நான் பணிபுரிந்த சில இடங்களில் சில சாதிகாரர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பது இன்னமும் நடைமுறையில் இருக்கின்றது. இப்பொழுது அச்சாதியினைச்சேர்ந்த மக்கள் தங்களுக்கென்று கோயில் அமைத்து இருக்கின்றார்கள். அதேபோல் இன்னோரிடத்தில் ஒரே கிராமத்தில் இருக்கும் இரு சாதி மக்கள் தமக்குள் எந்த சம்பந்தமும் அற்று இருக்கிறார்கள். ஒருவர் ஒருவரை பற்றி பேசுவது கூட இல்லை. இவை சில உதாரணங்கள் தான்.

ஆனால் அதற்காக கைபட்டால் அடிப்பது போன்ற அளவுக்கு பிரச்சனைகள் இல்லை. பெரும்பாலான இளைஞர்கள் முற்போக்குள்ளவர்களாக இருப்பதால் இது சாத்தியமாகி இருக்கின்றது.

ஆனால் இதனை விட வித்தியாசமான சாதி அமைப்பொன்று யாழப்பாணத்தரசர் காலத்தில் இருந்ததென்று பண்டைய நூல்கள் சொல்கின்றன. அவற்றை தொகுத்து இன்னும் ஒரு பதிவில் தர முயற்சிக்கின்றேன்.

இதுவரைக்கும் 10 பின்னூட்டங்கள் »

  1. 1

    JEYANTHAN சொல்லுறார்,

    June 24, 2008 @ 9:23 am

    DEAR WRITER,
    YOU HAVE CONVEYED A GOOD INFORMATION FOR ALL. IN MY POINT OF VIEW, CAST IS NOT A MAJOR PROBLEM FOR ALL HUMAN BEINGS. BUT I DON’T KNOW ABOUT JAFFNA PEOPLE.
    SO NICE. THANK YOU FOR YOUR CONCLUSION.

  2. 2

    பகீ சொல்லுறார்,

    June 24, 2008 @ 10:11 am

    ஜெயந்தன் வாங்க,

    அதனால் தான் நானும்

    ///பெரும்பாலான இளைஞர்கள் முற்போக்குள்ளவர்களாக இருப்பதால் இது சாத்தியமாகி இருக்கின்றது.///

    என்று சொல்லியிருக்கின்றேன். நானும் இன்னமும் இளைஞன்தான் என்பதும் என் எண்ணம்.

    அப்ப நீங்கள் எங்க இருக்கிறனீங்கள்.

  3. 3

    நிர்ஷன் சொல்லுறார்,

    June 25, 2008 @ 6:18 am

    பகீ,
    உண்மையில் நல்லதொரு பதிவு.
    இன்னும்கூட யாழ்ப்பாணத்தில் கீழ்சாதிக்காரர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. கீழ்சாதிமாணவர்கள் எனக் கூறப்படுவோர் பள்ளியில் பின்வரிசையில் தான் கற்கிறார்கள் என்ற துன்பமான செய்தியை கேட்கும்போது வருத்தமாயிருக்கிறது பகீ.

    மட்டக்களப்பில் (மட்டக்களப்பை உதாரணமாகக் கொண்டுள்ளேன்) யாரோ ஒருவர் காலால் மிதித்து உழுது விளைந்த நெல்லை உயர்சாதிக்காரரால் எப்படி உண்ண முடிகிறது?

    வேற்று சாதிக்காரர் ஒருவர் நெய்த ஆடையை எப்படி அணிய முடிகிறது?

    வேற்று சாதிக்காரர் வெட்டிய தலைமயிரைக்கொண்டு எப்படி உயிர்வாழ முடிகிறது?

    இறந்த பின்னர் வேற்று சாதிக்காரரின் உடலோடு உயர்சாதிக்காரரின் உடலும் மண்ணோடு மண்ணாவதை அவரால் தடுக்கமுடியுமா?

    எல்லாம் இறுமாப்புதான் பகீ, உண்மையில் நீங்கள் சொல்வதைப் போல கொங்கொங் ஈழவன் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளது போல இளைஞர் சமுதாயம் இதை மாற்றியமைக்கும்.

    தேவையான பதிவு பகீ. எனது நண்பர்கள் பலர் சாதி வெறியினால் எத்தனை கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

  4. 4

    பகீ சொல்லுறார்,

    June 25, 2008 @ 7:41 am

    நிர்ஷன் வாங்க,

    ////உண்மையில் நல்லதொரு பதிவு.
    இன்னும்கூட யாழ்ப்பாணத்தில் கீழ்சாதிக்காரர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. கீழ்சாதிமாணவர்கள் எனக் கூறப்படுவோர் பள்ளியில் பின்வரிசையில் தான் கற்கிறார்கள் என்ற துன்பமான செய்தியை கேட்கும்போது வருத்தமாயிருக்கிறது பகீ.////

    நான் பொதுவாக அவ்வாறு கூறவில்லை நிர்ஷன். அவ்வாறு நடக்கும் ஓரிரு இடங்கள் இருப்பதாக மட்டும்தான் கூறி இருக்கின்றேன். அனேக இடங்களில் இன்னிலை மாறிவிட்டது.

    ஆனால் திருமணம் என்றால் பிரச்சனைதான்.

  5. 5

    கடகம் சொல்லுறார்,

    June 25, 2008 @ 12:33 pm

    யாழ்ப்பாணத்தில் சாதிப்பிரச்சினையை தூண்டுவதற்கு ஊரோடி மூலம் வழிவகுக்குகிறீர்களா????????????????

  6. 6

    பகீ சொல்லுறார்,

    June 25, 2008 @ 4:00 pm

    ஐயா கடகம்,

    உங்களுக்கும் எனக்கும் தனிப்பட ஏதும் பகையிருக்கா என்ன?? எதை வச்சு இப்பிடி சொல்லூறீங்கள்.

  7. 7

    Shuthan சொல்லுறார்,

    June 26, 2008 @ 4:14 am

    Dear Pakee

    Actually I don’t know the lot of cast were in Jaffna as you mention. By your website, I have known lot of information. I think this article leads to awareness the public.
    thank you

  8. 8

    பகீ சொல்லுறார்,

    June 26, 2008 @ 9:40 am

    சுதன் வாங்க,

    உங்கள் ஊக்கமூட்டும் பின்னூட்டத்திற்கு நன்றி.

  9. 9

    HK Arun சொல்லுறார்,

    June 27, 2008 @ 1:50 am

    யாழ்ப்பாணத்தில் சாதிய வேறுப்பாடுகள் தற்போதும் இருக்கிறது தான்.

    நிலைமைப் பார்த்தீர்களா? எத்தனை சாதிகள் இருந்தன என்பதை அறிவதற்கு “(1912) யாழ்ப்பாணச்சரித்திரம் என்கின்ற நூலில் அ. முத்துத்தம்பிப்பிள்ளை” யின் பழைய ஏடுகளைப் பிரட்ட வேண்டியிருக்கிறது.

    இனி வரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் சாதிகள் இருந்ததற்கான சான்றுகளறிய எதிர்காலச் சந்ததியினர் எமது காலப் புத்தகங்களைத் தான் பிரட்ட வேண்டியேற்படும்.

    நன்றி!
    அன்புடன் அருண்

  10. 10

    பகீ சொல்லுறார்,

    June 27, 2008 @ 4:46 am

    அருண் வாங்க,

    அந்த நாளில இருந்த சாதி அமைப்ப பாக்க அந்தநாளய புத்தகத்தை தானே பாக்கவேணும். அதுக்காக சாதி இல்லை எண்டு சொல்லீரேலாது.

    பெருஞ்சாதிகள் மட்டும் இருக்கேக்கயே இவ்வளவு பிரச்சனையா இருக்கு இவ்வளவு கிழைச்சாதிகளும் இருக்கக்க என்னெல்லாம் நடந்திருக்கும்..

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

Comment RSS · TrackBack URI

உங்கள் கருத்தை சொல்லுங்கள்