Internet Explorer 6 இனை விட்டுத்தொலைக்க ஏழு காரணங்கள்.

Internet Explorer 6 ஆனது பொதுவாக பாவனையை விட்டு அகன்று கொண்டிருக்கும் ஒரு இணைய உலாவியாகும். இருந்தாலும் பல்வேறு காரணங்களுக்காக பலர் இன்னமும் அதனை பயன்படுத்தி வருகின்றார்கள். எனது வலைப்பதிவுக்கு வருகின்றவர்களில் 45 வீதமானோர் இன்னமும் இதனை பயன்படுத்துகின்றனர்.

safari

இது பாவனையாளர்களுக்கு மட்டுமன்றி இணைய வடிவமைப்பாளர்களுக்கும் ஏராளமான தொல்லைகளை கொடுத்து வருகின்றது.

இதனை விட்டுத்தொலைக்க ஏழு காரணங்கள் கீழே தரப்பட்டுள்ளது. பார்த்துவிட்டு தயவு செய்து உங்கள் இணைய உலாவியை மேம்படுத்தி கொள்ளுங்கள் அல்லது வேறு இணைய உலாவிக்கு மாறிக்கொள்ளுங்கள்.

1. PC World சஞ்சிகை Internet Explorer 6 இனை உலகின் மிகமோசமான தொழிநுட்பம் சார்ந்த தயாரிப்புகளில் 8 வது இடத்தில் வரிசைப்படுத்தி இருக்கின்றது.

2. இந்த மென்பொருள் ஏழு வருடங்கள் பழமை வாய்ந்தது. இணைய உலகின் அளவுத்திட்டங்கள் மற்றும் கால அளவிடைகளுடன் இதனை ஒப்பிடுவதாயின், இது கற்காலத்தை சேர்ந்த ஒரு மென்பொருள்.

3. IE6 வழுக்களின் சொர்க்கபுரி. இதனை தயாரித்தவர்களே (Micorsoft) இதுபற்றி கவனம் செலுத்தாதபோது நாங்கள் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?

4. Internet Explorer இன் புதிய பதிப்புகள் (பதிப்பு 8 வரை) இப்போது கிடைக்கின்றது.

5. IE 6 இணைய பக்கங்களை render செய்ய தனது சொந்த முறையினை பயன்படுத்துகின்றது. இது இணைய வடிவமைப்பாளர்களுக்கு பெரும் தலையிடியை கொடுக்கின்றது.

6. IE6 இலுள்ள CSS rendering மிக மோசமானது. (உண்மையை சொல்வதானால் IE 6 CSS என்ற மொழியை txt கோப்பாகவே render செய்கிறது)

7. வேறு ஒரு இணைய உலாவிக்கு மாற அல்லது IE 6 இனை மேம்படுத்த உங்களுக்கு இரண்டு நிமிடமளவிலேயே நேரம் செலவாகும்.

குறிச்சொற்கள்: , , , ,

13 பின்னூட்டங்கள்

  1. பாபு சொல்லுகின்றார்: - reply

    நீங்கள் சொல்வதை 100% ஆமோதிக்கிறேன். நானும் என் வலைப்பூவில் அவ்வபோது ஐ.ஈ யின் மோசமான செக்ரிட்டி தவறுகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். இருப்பினும், சிலர் அதை விட்டு வர மறுகிறார்கள். ஏனென்று தெரியவில்லை.

    எனது இடுகைகள், இதற்கு சம்பந்தமானது!

    http://tamil-software.blogspot.com/2008/12/blog-post_5704.html – நெருப்பு நரி இருப்ப ஐ.ஈ கவர்ந்தற்று!

    http://tamil-software.blogspot.com/2008/08/blog-post_07.html – இண்டர்நெட் எக்ஸ்பளோரர் உபயோகித்தால் கணினிக்கு ஆபத்து

  2. Karai Jeya சொல்லுகின்றார்: - reply

    ஓகோ, அப்படியா விசயம். நன்றி. தொடர்க உங்கள் பணி.
    அன்புடன்,
    ஜெயந்தன்.

  3. மணியன் சொல்லுகின்றார்: - reply

    நான் ஐ.ஈ 6 இலிருந்து 7க்கு மாறியபின் அடிக்கடி அது crash ஆகிக் கொண்டிருந்ததால் மீண்டும் 6க்கே திரும்பினேன் :((
    XPக்கும் ஐ.ஈ 7க்கும் ஒத்துக்காதாமே !
    இப்போது பயர்ஃபாக்ஸும் கூகிள் க்ரோமும் பயன்படுத்துகிறேன். இருந்தாலும் சில வணிக தளங்களை சரியாக பயன்படுத்த ஐ.ஈ வேண்டியிருக்கிறதே 🙁

  4. பாபு சொல்லுகின்றார்: - reply

    மணியன் அவர்களே, கீழே கொடுத்துள்ள தளத்தில் உள்ள ஃப்யர்பாகஸ் நீட்சியை நிறுவி விட்டால், ஐ.ஈ.யில் மட்டுமே திறக்கும் தளங்களையும் பார்வையிடலாம்.

    http://tamil-software.blogspot.com/2008/12/blog-post_5704.html

  5. vijayan சொல்லுகின்றார்: - reply

    சார்,
    firebox மூலம் தளங்களைப் பார்க்கும் போது click here to download plugin என்ற அறிவிப்புடன் java சம்மந்தப்பட்ட pages open ஆகாமல் உள்ளது.என்ன செய்வது என கூறவும்.
    நன்றி…

  6. பகீ சொல்லுகின்றார்: - reply

    விஜயன் உங்கள் கணினியில் JRE (Java Runtime Environment) நிறுவப்படாமல் இருக்கின்றது. SUN இணையத்தளத்திற்கு சென்று Firefox உலாவிக்கான JRE இனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

    உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

  7. vijayan சொல்லுகின்றார்: - reply

    நன்றி,நண்பரே…..
    தொடரட்டும் தங்கள் சேவை….

  8. பகீ சொல்லுகின்றார்: - reply

    பாபு வாங்க, உங்கள் பின்னூட்டத்திற்கும் தொடுப்புக்களுக்கும் நன்றி.

    காரை ஜெயா, வாங்க உங்கள் பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி.

  9. பகீ சொல்லுகின்றார்: - reply

    மணியன் வாங்க,

    பாபுவின் இடுகை உங்களுக்கு நிச்சயமாக உதவும். ஒரு முறை அந்த நீட்சியை நிறுவிப்பாருங்கள்.

    பாபு தொடுப்புக்கு நன்றி.

  10. mathavan சொல்லுகின்றார்: - reply

    hi unkal vthavikku nanri melum valarattum

    forme srilanka

    trincomalee

  11. mathavan சொல்லுகின்றார்: - reply

    hi unkal uthavikku nanri melum valarattum

    forme srilanka

    trincomalee

    tahnkas thankas

  12. anand சொல்லுகின்றார்: - reply

    i tried fire fox,but unicode tamil email not read, so again i used ie8.

  13. பகீ சொல்லுகின்றார்: - reply

    ஆனந்த வாங்க,

    நீங்கள் windos xp பயன்படுத்துபவராக இருந்தால் language settings இல் east asian மொழிகளை நிறுவிவிட்டால் இது சரியாகிவிடும். இதற்கு உங்களுக்கு இறுவட்டு தேவைப்படும்.