அறிவகம் புதிய இணையதளம்

Wednesday, September 17, 2008

காலம் என்பது என்ன? (உலகின் அவசரத்தேவை - 14)

இன்று விஞ்ஞானத்திற்கு சவால விடும் கேள்வி இது தான். இதற்கு விடைகிடைத்து விட்டால் நிச்சயமாக 60 ஆயிரம் கோடி ரூபாயில் தீபாவளி கொண்டாட துணியமாட்டார்கள் ( அதாங்க காசை கரியாக்குறது மன்னிக்கவும் கருந்துளையாக்குகிறார்களாம்). சரி நாம் தேடிப்பார்ப்போம்.

காலம் என்பது என்ன?

போன விநாடி, இந்த விநாடி, அடுத்த விநாடி இப்படி தான் நாம் காலத்தை எதார்த்தமாக சொல்வோம். விஞ்ஞானிகள் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக அணுவுக்குள் அணுதுகள்களின் அலைவீச்சு அளவை வைத்து மீச்சிறு விநாடிகளாக சொல்வார்கள்.

நாம் தனி ஊசலின் அளவை விநாடி என்கிறோம். அணுவியல விஞ்ஞானிகள் அணுதுகள் அலைவீச்சை விநாடி என்கிறார்கள் அளவு தான் வித்தியாசமே தவிர இயக்கம் ஒன்று தான்.

சரி அலைவீச்சு தான் காலமா? இல்லை. அலைவீச்சு என்பது நமக்கு காலத்துக்கான ஒரு அளவீடு. அதாவது காலத்தை அளக்க அல்லது தெரிந்து கொள்ள நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒரு அளவீடு.

காலத்தை விநாடி, மைக்ரோ செக்கென்ட, நேனே செக்கென்ட் என்ற அளவீடுகளை வைத்து கணிக்கிறோம். அல்லது அடையாளப்படுத்திக்கொள்கிறோம்.

காலத்தை அளக்கும் கருவிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட அலைவீச்சை வைத்தே இயங்குகின்றன. அதாவது காலத்தை அளவிடுகின்றன.

அலை வீச்சு என்பது என்ன என பார்ப்போம்

அலைவீச்சு என்பதை முதலில் குவாண்டவியல் தத்துவத்தில் பார்க்கலாம்

ஒளியின் இயக்கத்தை தான் குவாண்டவியலில் அலைவீச்சாக குறிப்பிடுகிறார்கள்.

ஒளியின் என்றால் துகளும் அலையும் மாறிமாறி வரும் ஒரு நிலை. கண்ணொளி, சூரிய ஒளி, மின்காந்த ஒளி இதெல்லாம் ஒளியின் வகைகள் அதாவது துகளும் அலையும் மாறிமாறி வரும் நிலையின் வகைகள்.

துகளும் அலையும் மாறி மாறி வருவது அதாவது ஆன்( on ), ஆஃப்(off ) இது தான் ஒளி. இதின் இயக்க வித்தியாசத்தையும் அறிவையும் பொருத்து ஒளியின் வகைகள் மாறுபடும். அந்த மாறுபாடுகளை தான் நாம் மைக்ரோ ஒளி, லேசர் ஒளி, எஃஸ் கதிர்கள், சூரிய ஒளி, கண்ணுரு ஒளி எனவெல்லாம் பெயரிட்டு அழைக்கிறோம்.

சரி அப்படி ஆன்(on) ஆஃப்(off ) ஆக மாறுவது எது என கேட்டால் இப்போதைக்கு பொருள்- வெளி என எடுத்துக்கொள்ளுங்கள். பொருளாக இருப்பது என்ன என்பது குறித்து அறிவு விளக்கப்பகுதியில் பார்க்கலாம்.

பொருள் இருக்கு(on), இல்லை(off ). இதுதான் ஒளி. இந்த இயக்கம் தான் மின்காந்த அலைகள், அணுக்கரு உட்பட எல்லா அற்றல்களிலும் இருக்கிறது. பொருட்களிலும் இருக்கிறது.

இங்கு ஒளியின் இயக்கம் குறித்து ஒரு எதார்த்த ஐயம் வரலாம்.

ஆன் ஆப் தான் ஒளி என்பது சரி. ஆனால் அது எப்படி நகர்கிறது? ஒளியின் வேகம் என்றெல்லாம் சொல்கிறார்களே அது எப்படி இடம்பெயர்கிறது?

உதாரணத்தில் விளக்கலாம். நிலையாக இருக்கும் ஒரு கடுகை(துகள்) நாம் கண்ணனால் பார்க்கிறோம். அது நிலையாக இருக்கும் போது கடுகு பொருள். அதை சுற்றியுள்ள பகுதி வெளி. இங்கு இனி கடுகு திசைவேகத்தில் இயங்குவதாக எடுத்துக்கொள்வோம். கடுகு நகர்கிறது. அப்போது நாம் மேல் சொன்ன தத்துவப்படி கடுகு மறைந்து அங்கு வெளி வரவேண்டும். வெளி மறைந்து கடுகு வர வேண்டும். கடுகு நகரக்கூடாது. தோன்றி மறைய வேண்டும் அப்படி தானே. ஆம் அது தான் அங்கும் நடக்கிறது.

கடுகு நகருகையில் நமது பார்வையும் நகர்குறது. அப்போது கடுகு வெளியை விலக்கி செல்வதாக நாம் அறிகிறோம். ஆனால் அங்கு நமது பார்வை நகரவில்லை கடுகு மட்டும் நகர்வதாக வைத்துககொள்வோம். நாம் அறிவது என்ன? கடுகு மறைந்து விட்டது அவ்வளவு தான். நமது பார்வையும் நகர்வதால் கடுகு தோன்றி மறையாமல் நகர்வதாக நாம் அறிகிறோம்.

கம்பியூட்டர் மொழி தெரிந்தவர்களுக்கு இது எளிதில் புரியும். கம்பியூட்டர் ஹார்ட் டிஸ்க் அல்லது செல்போன் சிம், மெம்மரி காடுகளில் இந்த இயக்கத்தை நேரடியாகவே புரிந்து கொள்ளலாம். ஒருபுள்ளி அனைந்து மறுபுள்ளி தோன்றுவதில் தான் கம்பியூட்டர் மற்றும் மெம்மரிக்கார்டின் அடிப்படைமொழி(இயக்கம்) இருக்கிறது.

சரி அலைக்கு வருவோம் பொருள்(துகள்) அனைந்து மறைந்து மற்றதுகள் வருகிறது. ஆனால் அது எப்படி நகர்கிறது? அங்கு தான் அலை தத்துவம் புரியக்கிடக்கிறது. அலை என்றால் அதற்கு எல்லை கிடையாது அதே நேரத்தில் பொருளுக்கு எல்லையும் மையமும் இருக்கிறது. ஒரு பொருள் அலையாகும் போது அது தனது மையத்தையும் எல்லையையும் இழந்துவிடுகிறது. மீண்டும் அது பொருளாகும் போது சூழலுக்கு ஏற்ப அதாவது வெளிக்கும் பொருளுக்கும் உள்ள அறிவுக்கு ஏற்ப மைத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக்கொள்கிறது.

உதாரணமாக ஒரு கல்லை கிழக்கு நோக்கி நாம் நகரத்தக்க ஆற்றலை கொடுக்கும் போது, அதன் இயக்கம் (வெளியாகி மீண்டும் பொருளாகுகையில்) கிழக்கு நோக்கி நகரக்கூடிய அறிவை கிரகித்தே கிழக்கில் மீண்டும் தன் மையத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக்கொள்கிறது. இது தான் அடிப்படை நகர்ச்சிக்கான தத்துவம்.

அடுத்து காலம் பற்றிய அடிப்படைக்கு போவோம்.

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. இது அல்லாமல் காலம் என எதுவும் இல்லை. காலம் என ஒன்று தனியே இல்லை. காலம் ஒரு மாயையே அல்லாமல் உண்மை அல்ல.

சரி உதாரணங்களுடன் பார்ப்போம்.

பொருளும் வெளியும் பரஸ்பரம் நிலைமாறுவது இயக்கம். இந்த இயக்கத்தின் படிப்படியான நிலைகளின் அளவீடை தான் காலம் என்கிறோம். இந்த அளவீடு எனபது அளக்கும் அல்லது அறியும் பொருளை பொருத்தது. இதற்கு ஐஸ்ஸ்டீனின் சார்பியல் த்ததுவமே மிகச்சிறந்த ஆதாரமாக இருக்கிறது.

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. அது அளக்கும் அல்லது அறியும் கருவியை(பொருளை) பொருத்தது என்பது சரி.

ஆனால் நமக்குள் இங்கு எதார்த்தமாக எழும் ஐயம்

ஒரு விதை செடியாகி மரமாகி பூவாகி காயாகி விதையாகிறது இது ஒரு காலசுற்று. ஆனால் உயிரற்ற பொருட்களில் அப்படி இல்லையே கல் மண்ணாகிறதே தவிர மண் மீண்டும் கல்லாவதில்லையே.

இங்கு தான் அறிவு தேவைப்படுகிறது.

நம்முடைய(மனிதனுடைய உயிரிகளுடைய) அறிவு வளர்ச்சிதைவோடு ஒத்துபோய் விட்டது.

ஒரு திரைப்பட சுருளை பின்னோக்கி சுற்றினால் இயக்கங்கள் பின்னோக்கி வநதவண்ணமே நகர்கிறது. ஆனால் நமது எதார்த்த வாழ்க்கையில் அது சாத்தியப்படுமா? அதாவது குழந்தை குமரனாகி கிழவனாது போல. அதே சீரோடு அச்சு பிழையாமல் கிழவன் குமரனாகி குழந்தையாக முடியுமா?

இது கொஞ்சம் அநாகரீகமான உதாணம் தான் அனால் புரிந்து கொள்வதற்கு எளிதானது. நாம் காலையில் உண்ட உணவு கழிவாகிறது. அதை பின்னோக்கி இயக்கினால் அதே கழிவு சென்ற அதே பயணததில் பாதையில் மீண்டும் உணவாகுமா?

இதற்கு பதில் ஆம் என்பது தான். அதாவது காலசக்கரத்தை பின்னோக்கி சுழற்ற முடியும் என்பது தான் பிரபஞ்ச ரகசியம்.

நம்முடைய அறிவின் பயணம்(இயக்கம்) முன்னோக்கி மட்டும் செல்வதால் நமக்கு காலமும் முன்னோக்கி செல்கிறது. அறிவை நீங்கள் எந்த திசையில் திருப்பினாலும் அதே திசையில் காலமும் இயக்கமும் இந்த பிரபஞ்சமும் திரும்பும்.

இந்த ரகசியத்தை தான் ஆன்மீகஞானிகள் நமக்கு மெய்ஞானமாக போதித்துள்ளார்கள்.

அறிவு என்பது என்ன? அதை எப்படி பின்னோக்கி திருப்புவது? இயக்கமாக இருக்கும் பொருளிலும் வெளியிலும் என்ன இருக்கிறது? அடிப்படை பொருள் என்ன? அது எப்படி வந்தது? இது குறித்த விளக்கங்களை அடுத்தடுத்த பதிப்புகளில் பார்க்கலாம்.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில் ( மாயை என்பது என்ன? அறிவு என்பது என்ன? காலம் எப்படி வந்தது)

உலகளாவிய சிந்தனையாளர்களுக்கு ஓர் அன்பான அழைப்பு: அறிவகம் கட்டுரை தொடர் என்பது பொழுதுபோக்குகாகவும் தனிப்பட்ட ஒருவரின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காகவும் எழுதப்படுவது அல்ல. அறிவுபரிபூரணம் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட காத்திருக்கும் கட்டுரை தான் இங்கு வலைபதிவில் பவனி வருகிறது. இதில் உலகளாவில் மேம்பட்ட ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். எந்த ஒரு சிந்தனையையும் உலகளாவில் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கும் போது தான் முழுமையான உண்மை தன்மை ஒளிரும்.

உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு... arivakam@gmail.com

17 comments:

  1. மற்ற கருத்துக்கள் சரியாக இருக்கிறது, காலச்சக்கரம் பின்னோக்கி செல்லும் என்பதை ஏற்க முடியவில்லை. கடிகாரம் முனோக்கிச் சுற்றினாலும் புறப்பட்ட இடத்திற்கு வந்து பிறகு அதே பாதையில் தானே பயணிக்கும். பருவகாலங்கள் கூட அப்படித்தானே. ஏன் பூமியின் சுழற்ச்சி, சூரியன் கேலக்சியில் பயணம் செய்வது எல்லாம் முன்னோக்கிதானே, சுற்றுகள் திரும்ப வரும் என்பது சரி, பின்னோக்கிய சுற்று சாத்தியம் இல்லை என்றே கருதுகிறேன்.

    ReplyDelete
  2. திரு. கோவிகண்ணன்

    // சுற்றுகள் திரும்ப வரும் என்பது சரி, பின்னோக்கிய சுற்று சாத்தியம் இல்லை என்றே கருதுகிறேன்.//

    நமது அறிவு வளர்ச்சிதை என்ற முன்னோக்கி செல்லும் பயணத்தில் பழக்கப்பட்டு விட்டது.

    காலம் என்பது இயக்கத்தின் படிநிலைகள்( அளவீடுகள்). இயக்கத்தை முன்னோக்கியயும் பின்னோக்கியும் அல்லது எந்த திசையில் வேண்டுமானாலும் திருப்பலாம். இயக்கம் திருப்பப்படும் போது காலம் மட்டும் திருப்ப்படாதா என்ன?

    இங்கு ஒரு ஐயம் வரலாம் இயக்கத்தை பின்னோக்கி திருப்பினாலும் அதில் வரும் காலம் புதியதாக இருக்குமே தவிர பழைய சுற்றாக இருக்காது என தோன்றலாம்.

    இயக்கம் பின்னோக்கி சுற்றப்படும் அதே கணத்தில் கோணத்தில் நமது அறிவும் பின்னோக்கி சுற்றப்பட வேண்டும். அப்போது காலச்சக்கரத்தை பின்னோக்கி சுழற்றுவது சாத்தியம்.

    அறிவின்இயக்கம் குறித்து புரிந்து கொள்ளும் போது இந்த காலசக்கர தத்துவம் இன்னும் எளிமையாகிவிடும்.

    இங்கு ஒரு சின்ன உதாரணம் மட்டும் தருகிறேன்.

    ஒரு திரைப்பட சுருளை பின்னோக்கி சுற்றும்போது அதன் இயக்க கருத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதே பின்னோக்கிய சுற்று நிருத்தப்பட்டு மீண்டும் முன்னோக்கி சுற்றப்படும் போது நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. திரைப்பட சுருள் முன்னோக்கி சுற்றும்போது நமது அறிவு அதன் கணத்துடனும் இயக்ககோணத்துடனும் ஒத்துபோவதால் நம்மால் புறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பின்னோக்கிய சுற்றில் அது சாத்தியப்படுவதில்லை. அதனால் தான் நமக்கு புரிவதும் இல்லை.
    இன்னும் வரிவான விளக்கங்கள் தான் அடுத்த பதிப்பாக வருகிறது.

    அறிவையும் மாயையும் புரிந்து கொள்ளும் போது அத்தனையும் புரிந்து விடும். சில தத்துவங்கள் நாம் தற்போது நிர்ணயித்துவைத்துள்ள அறிவியலின் அடிப்படை விதிகளையே கொஞ்சம் மாற்றி அமைக்கக்கூடியது.

    நன்றி.

    ReplyDelete
  3. ஏற்கனவே மண்டை கழண்டு போச்சுது. அதுக்குள்ள இது வேறவா? கொஞ்சம் எங்கள மாதிரி மரமண்டையளுக்கு புரியுற மாதிரி எழுதக்கூடாதா? இப்பிடி எழுதுனதுகளப் படிச்சுத் தான் படிப்பே வெறுத்துது. இனி இதையும் வெறுக்கப் பண்ணீடாதியுங்கோ.ம்ம்ம்ம்ம்ம்ம்....
    இன்னுமொரு தரம் வாசிச்சிற்று அப்புறமாக் கவனிக்கிறன்.

    ReplyDelete
  4. வருகைக்கு மிக்க நன்றி திரு. ஆட்காட்டி.

    கதையை படிக்கும் போது நமது அறிவு கதையோடு ஒன்றிப்போய் விடுகிறது. நாம் படிக்கும் முன்பே நமது மனது அடுத்து இது தான் நடக்கும் என யூகித்துக்கொள்கிறது.

    உதாரணமாக சுவரை நோக்கி கதாநாயகன் ஒடினான் என நாம் படிப்பதற்குள் சுவர்மீது ஏறிகுதிப்பான் என நமது மனது அடுத்ததை யூகித்துக்கொள்கிறது. அதனால் கதைகள் நமக்கு எளிதில் புரிந்து விடுகிறது.

    ஆனால் அறிவியல் அப்படியல்ல. திரும்ப திரும்ப படிக்க வேண்டும். படிக்கும் போதே ஒவ்வொரு கருத்தையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். சுருக்குமாக நீங்கள் ஒரு அறிவியலாளராக மாறவேண்டும்.

    கடினப்பட்டு அறிவகம் கட்டுரை தொடரை படித்து வாருங்கள். கூடிய விரைவில் நீங்களும் ஒரு அறிவியலாளர் ஆகிவிடலாம். 100 % உத்திரவாதம்.
    நன்றி.

    ReplyDelete
  5. மிகவும் நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள். ஆனால், காலம் பின்னோக்கி நகர்தல் என்பது பற்றி கோவி. கண்ணன் அவர்களது கருத்தே எனக்குச் சரியாகப் படுகிறது. தாத்தா முரண்பாடு (Grandfather paradox) இதற்கு ஒரு உதாரணம். ஒரு மனிதன் முற்காலத்திற்குச் சென்று அவனது தாத்தாவைக் கொலைசெய்து விட்டான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அந்த மனிதன் பிறந்தே இருக்கமாட்டான் அல்லவா ? அம்மனிதனின் நிகழ்காலம் என்னவாகும் ? காலப்பயணம் இதுபோல பல முரண்பாடுகளை உருவாக்கும். ஆகவேதான் நோபல் பரிசு பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங் "காலவரிசை பாதுகாப்பு ஊகம் (Chronology Protection Conjecture)" என்பது சாத்தியம் என்கிறார். இதன்படி காலப் பயணத்தை தடுக்க இயற்பியல் விதிகள் பெரிய அளவில் சூழ்ச்சி செய்யும் என்கிறார். அவரது இணையப் பக்கத்தில் இது எழுதப்பட்டுள்ளது.
    http://www.hawking.org.uk/lectures/warps3.html

    ReplyDelete
  6. இன்னும் ஒன்று..நீங்கள் சொல்லும் காலச்சக்கர பின்னோக்கி செல்லலில் ஒரு மனிதன் என்ற குறியீட்டச்சு (frame of reference) இல்லாமல் பேரண்டம் முழுமையும் பின்னோக்கிச் செல்வதாக கருதிக்கொண்டால், அது பெரும் சுருக்கம்(Big Crunch) என்ற கொள்கையை ஒத்துள்ளது. பெருவெடிப்புக் கொள்கையின்படி (Big Bang), பேரண்டத்தின் முடிவு எவ்வாறு இருக்கும் என்ற சாத்தியக்கூறுகளில் பெரும் சுருக்கமும் ஒன்று. பேரண்டத்தின் பொருள் அடர்த்தி(matter density), மாறுநிலை அடர்த்தியைவிட (critical density) அதிகமாக இருக்கும் பட்சத்தில், பெரும் சுருக்கம் துவங்கி எல்லாப் பொருட்களும் காலமும் பின்னோகிச்சென்று, பெருவெடிப்பு எந்த வழுப்புள்ளியிலிருந்து (singularity) உருவானதோ அதுபோன்றாகும். ஆனால் பெரும் சுருக்கத்திற்கு அதிக வாய்ப்பு இல்லை என்கிறார்கள். தற்போது இருள் ஆற்றல் (dark energy) எல்லாவற்றையும் விட அதிக சக்தி வாய்ந்ததாகையால், பேரண்டம் பெரும் பிளவை (big rip) நோக்கிச் செல்லுவதாகத்தான் பெரும்பான்மையோர் கரு்துகின்றனர்.

    ReplyDelete
  7. புதிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு. சகாயராசன்.

    காலச்சக்கரத்தை பின்னோக்கி சுழற்றுவது என்பது அறிவின்இயக்க ஆற்றலை பொருத்தது. ஒரு மனிதன் முற்காலத்துக்கு சென்று தன் தாத்தாவை கொன்றுவிட்டு நிகழ்காலத்துக்கு வரமுடியாது என்ற உதாணம் நமது தற்போதைய எதார்த்த பார்வையில் சரியானதே.
    ஆனால் நமது எதார்த்தம் ஒரு மாயையானது.

    உண்மையில் இந்த பிரபஞ்சம் ஒன்று என அறிவியலாலர்கள் கணித்து இருப்பது கூட தவறானது.

    அதேபோல பெரும்வெடிப்பு, பெரும் சுருக்கம் போன்ற பிரபஞ்ச தோற்ற இயக்க கோட்பாடுகளும் தவறானதாகவே படுகிறது. இதெல்லாம் ஒரு குறுகிய கண்ணோட்டமாகவே தெரிகிறது.

    அடுத்த பதிப்பில் அறிவையும், மாயையையும் விளக்கி விட்டு, இந்த பிரபஞ்ச தோற்றம், இயக்கம் குறித்து படிப்படியாக நிரூபணங்களுடன் விளக்குகிறேன்.

    தொடர்ந்து ஆலோசனைகளை பகிருங்கள். நன்றி

    ReplyDelete
  8. //அறிவை நீங்கள் எந்த திசையில் திருப்பினாலும் அதே திசையில் காலமும் இயக்கமும் இந்த பிரபஞ்சமும் திரும்பும்//

    சூரிய குடும்பம் எல்லையற்ற இப் பிரபஞ்ச்த்தில் எங்கு உள்ளது என சிந்தித்தாலே, (முன்,பின்,மேலே,
    கீழே,இடதா,வலதா,என்பது எல்லாம் கேள்விக்குறியாகிவிடும்)
    அறிவினால் பொருள்நிலையில் நிலையானது என்று
    எதை கூற முடியும்?.

    ReplyDelete
  9. வருகைக்கும் ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி திரு. சிவசுப்பிரமணியம்.

    நமது எதார்த்த அறிவும், விஞ்ஞான அறிவும் பொருள் அறிவு என்ற ஒரு கட்டுப்பாட்டில் இயங்குவது. மையமும் எல்லையம் உள்ள நிலைகளை(பொருள்) தான் நம்மால் அறிநது கொள்ளமுடிகிறது. ஆனால் பொருள் மட்டுமே பிரபஞ்சம் அல்ல. பொருளுக்கு நேர் எதிரான பொருள் (antimater) இருப்பதாக இன்றைய நவீன விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.

    உண்மையில் இன்று நாம் பொருளறிவால் இந்த பிரபஞ்சத்தின் 0.01 பொருள் இயக்க நிலைகளை தான் தெரிந்துள்ளோம். அதனால் தான் நாசா விஞ்ஞானக்கூடத்தின் முகப்பே கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்ற நமது தமிழ் தத்துவம் மூலம் முன்கூட்டியே எச்சரித்து விடுகிறது.

    சரி தங்களது ஐயத்திற்கான சிறிய விளக்கம்:

    இந்த பிரபஞ்சம், பால்விதி, சூரியன்குடும்பம் இதெல்லாம் பொருள் அறிவு என்ற நமது குறுகிய அறிவில் அறியப்பட்ட விடயங்கள். இது பொருள் அறிவுக்கு நேர் எதிரான அறிவையும் அதன் தன்மைகளையும் அறியாமல் அறியப்பட்ட அரைஅறிவு.

    இந்த அரை அறிவை வைத்து நாம் போடும் கணக்குகள் நமது அரை அறிவுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் முழுமையான உண்மைக்கு பொருந்தாது. இந்த பிரபஞ்சம் ஒன்று அல்ல. இது தான் ஆன்மீகத்தின் அசைக்க முடியாத வாதம். இந்த தத்துவத்தின் கீழ் நாம் கணித்துவைத்துள்ள பொருளறிவு பிரபஞ்சத்தை நிரூபணத்திற்கு உட்படுத்தும் போதும் எல்லாம் மாயை தத்துவத்தில் அடிபட்டு விடும்.

    எல்லை திசை இதெல்லாம் நமது அறிவின் மாயைகள் அப்படி இருக்கும் போது தாங்கள் சொல்வது போல எந்த பொருளின் நிலையையும் நிலையானது என சொல்ல முடியாது. நன்றி.

    ReplyDelete
  10. காலத்தை பின்னோக்கி சுழற்றலாம் என்று எங்கேயோ படித்த ஞாபகம், அப்படி முடிந்தால், நாம் குழந்தையாகலாம், இன்னும் நமக்கு முன் வாழ்ந்த பெரியோர்களை மீண்டும், இயங்க வைக்கலாம்,.. என்ன ரொம்ப பின்னோக்கி சென்று பூமியை தொலைத்திட வேண்டாம்.. நல்லது தொடந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. திரு. ஞானசேகரன வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நனறி.

    காலசக்கரத்தை பின்னாக்கி திருப்புவது என்பது அறிவின் துணை கொண்டு மட்டுமே சாத்தியப்படுவது.

    அறிவு துணையிருக்கும் வரை பூமி, சூரியன் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. அறிவு துணைசெய்யாத பட்சத்தில் தாங்கள் குறிப்பிடுவது போல தொலைத்தால் தொலைத்தது தான்.

    நன்றி.

    ReplyDelete
  12. //காலசக்கரத்தை பின்னாக்கி திருப்புவது என்பது அறிவின் துணை கொண்டு மட்டுமே சாத்தியப்படுவது//
    நல்லது, தொடர்ந்து எழுதுங்கள்.. நடைமுறை அறிவியலையும், வாழ்வியல் அறிவியலையும் கவனதிற்கொண்டு எழுதினால் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  13. //இன்று விஞ்ஞானத்திற்கு சவால விடும் கேள்வி இது தான். இதற்கு விடைகிடைத்து விட்டால் நிச்சயமாக 60 ஆயிரம் கோடி ரூபாயில் தீபாவளி கொண்டாட துணியமாட்டார்கள் ( அதாங்க காசை கரியாக்குறது மன்னிக்கவும் கருந்துளையாக்குகிறார்களாம்//

    உங்கள் கண்டுபிடிப்புகளை இன்னுமா CERN-ல் கண்டுகொள்ளவில்லை?!!!
    அட்டா...! உலகில் உள்ள எல்லா அறிவாளி Scientist-களும் சேர்ந்து இப்படி காச கரியாக்குறாங்களே!!!

    பாடிகாட் முனீஸ்வரா இவங்ககிட்டேரந்து 5, 6 கட்டுரையை எடுத்துட்டு போயி CERN-ல கொடுத்துட்டு வாயேன்.

    ReplyDelete
  14. காலச்சக்கரம் இது உண்மையிலும் நடக்கும் . இது பற்றி நான் 20 வருடமாக ஆராய்ந்து பல தகவல், மற்றும் தியரி வைத்துள்ளேன்.
    காலத்தை முன்னோக்கியும் பின்னோக்கியும் அல்லது எந்த திசையில் வேண்டுமானாலும் திருப்பலாம்.

    ReplyDelete
  15. காலச்சக்கரம் இது உண்மையிலும் நடக்கும் . இது பற்றி நான் 20 வருடமாக ஆராய்ந்து பல தகவல், மற்றும் தியரி வைத்துள்ளேன்.
    காலத்தை முன்னோக்கியும் பின்னோக்கியும் அல்லது எந்த திசையில் வேண்டுமானாலும் திருப்பலாம். இது சாத்தியம்.

    ReplyDelete
  16. எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு,காலம் என்ன என்று முழுமையா தெரிஞ்சிக்க ஆசை படுறேன்,என் வாழ்க்கை யா அர்த்தம் உள்ளதாகுறதுக்கு.

    ReplyDelete
  17. நல்ல முயற்சி ஆனால் தெளிவு இன்னமும் தேவை

    ReplyDelete